மணியாய்ப் பொறுக்கியிருக்கிறீர்களே? அதுவும் முதல் மணி! அந்த மணியாம் எழுத்தாளரின் முதலில் அச்சேறிய எழுத்து, அதிலும் தொகுக்கப் படாதது. இது வரை படித்ததில்லை.
திரு பசுபதி அவர்களே நான் சிறு மாணவனாக இருந்த காலத்தில் எனது தாயார் தன் சேமிப்பிலிருந்து இரண்டு அணா கொடுத்து அனுப்பி விகடன் வாங்கி வர சொல்லுவார்கள். வீட்டிற்குள் நுழையும் போதே அதற்கு போட்டி ஆரம்பமாகிவிடும். எனக்கு இது புரிந்த காரணத்தினால் வீட்டினுள் நுழையும் முன்பே வேகமாக புரட்டி சாமா, மாலி மற்றும் கோபுலு இவர்களின் சித்திரங்களையும் படிக்க தெரிந்த அளவுக்கு சிறு துணுக்குகளையும் ரசித்த அந்த காலத்திற்கே என்னை அழைத்து சென்ற உங்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன் !
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
11 03 2015
பாரதியின் கவிதை அல்லது கட்டுரை எதாவது விகடனில் பிரசுரமாகி உள்ளதா ?
ஈ .வே . ரா பற்றி ஆனந்த விகடனில் எப்போதாவது குறிப்பிட பட்டு /விமரிசக்கப்ட்டு இருக்கிறதா .
நன்றி
நன்றி, தஞ்சாவூரான். அவ்வப்போது இப்படி உங்கள் அனுபவங்கள், நினைவுகளை எழுதுங்கள் இங்கே.
பொன்பைரவி, கேள்விகளுக்கு நன்றி.
பாரதியின் (1921) மறைவுக்குப் பின்னரே விகடன் துவக்கம்(26) . கல்கி ஆசிரியராய் ஆனபிறகு பாரதி கவிதைகள் 38- விகடன் தீபாவளி மலரில் , படங்களுடன் வந்துள்ளன. ஒருநாள் என் வலைப்பூவில் போடுகிறேன். அதற்கு முன் வந்திருக்கலாம்; ஆனால் என்னிடம் ஆதாரங்கள் இல்லை. ( 38-க்கு முந்தைய விகடன் தீபாவளி மலர்களில் நிச்சயம் வந்திருக்கும் என்பது என் யூகம்)
ஈ.வே.ரா வைப் பற்றி கல்கி 1931-இலேயே விகடனில் எழுதி உள்ளார். ”அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.இராமசாமி நாயக்கருக்குத் தமிழ் நாட்டுப் பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் ஒரு கணமும் தயங்காமல் அளித்துவிடுவேன். “ என்று. அப்புறம் விகடனில் நிறைய வந்திருக்கும் என்று நம்புகிறேன். 56-இல் “இவர்கள் சந்தித்தால்” என்ற தொடர் துவங்கியது. ( நான் அத்தொடரிலிருந்து ஒரு கட்டுரையாவது இடுவேன்.... ) அதன் முதல் கட்டுரையே ஈ.வே.ரா -வினோபா சந்தித்தால்.... என்ற பொருள்தான்!
மேலும் ஐயம் இருப்பின், கேளுங்கள். தெரிந்தால் சொல்கிறேன்.
விகடனில் நான் சிறுவயதனில் மிகவும் ரசித்த கேலி சித்திரங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன்
திண்ணையில் வெற்றிலைப்பாக்கு, கூஜாவுடன் வெட்டி பேச்சினில் பொழுதை வீணடிக்கும் தந்தையிடம் ஒரு பாவாடை கட்டிய சிறுமி, கரும் பலகையை அவர் மட்டுமே காணும் படியாக நீட்டி "அப்பா இந்த கணக்கு சரியா? " என கேட்கிறாள். அனால் அதனில் எழுதி இருக்கும் வரிகளோ இப்படி 'அம்மா உன்னை காப்பி சாப்பிட கூப்பிடறா'. இது கண்டிப்பாக கோபுலுவின் கை வண்ணமாக தான் இருக்க வேண்டும்.
கச்சேரி முடிந்து வித்வான்களுக்கு மரியாதை செய்யும் பொழுது தாம்பாள தட்டினில் இருக்கும் வெற்றிலைப்பாக்கு, பழ சீப்பு சிறிது சிறிதாக குறைந்து தம்புரா கலைஞரிடம் வரும் பொழுது ஒரு வாழைப்பழம் மட்டுமே அவரிடம் வேண்டா வெறுப்பாக நீட்டப்படுவது . இது சாமாவின் கைவண்ணமா அல்லது கோபுலுவா என்று நினைவில்லை.
பயனுள்ள தொகுப்புகளை வாரி வாரி வழங்கி கொண்டிருக்கும் திரு பசுபதி அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி.
பணி தொடர வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
17 04 2015