If you are a venpA buff (in tamil script)

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: If you are a venpA buff ( in tamil script )

Post by Ponbhairavi »

Simply superb!Sridhar_rang Your kavidhai is wonderful . full of tongue twisting ழ பிரயோகம் ,I am imagining how our T.V announcers would get perplexed. It reminds me of Arunagirinathar"s சந்தம் in
கண்ட நடை தக தகிட தக தகிட . The indefatigable cml is holding the fort with appropriate repartees whereas I have given up because I am totally benumbed and paralysed in the face of top class tamil poetry dished out by brilliant people like you cml,msm,erode and others. The level is too high for me though I keep reading and enjoying.
பழகு தமிழ் எழில் கவிதை வருண்னைகள் கண்டேன்
அகமகிழ்ந்து உளம நெகிழ்ந்து எனை இழந்து நின்றேன்
கார் மேகம சூழ்ந்த ஒரு மழை வானம் கண்டு
நளினமிகு அழகு மயில் களிநடனம் கண்டேன் !!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff ( in tamil script )

Post by cmlover »

Ponbhairavi
I am just a spectator enjoying the beauty of our language like you in awe..
I agree
ழகர உரிமை தமிழ்க்கே அதை ஈந்த
அழகன் முதற்றே உலகு

அழகு = முருகு --> அழகன் = முருகன்

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by arasi »

Having a good time looking up this thread every morning! What talents you all have, veNbA naNbAs ;)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

excellent poems everyone.

மட்டைப்பந் தாட்டம் மறந்ததோ, ஒன்றின்பின்
முட்டை பலவந்த தோ?

பொன்.ஆஸ்தி யில்தானோ போதை வரும்படி
பண்.ஆஸ்தி ரேலியா பேண்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by cmlover »

மட்டயடி ஆட்டம் வேண்டாம் நமக்கு
கிட்டிபுல் ஆட்ட கில்லாடி நாம்

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

>> In honour of Madurai Smt. Ponnuthayi -
>> http://www.rasikas.org/forums/viewtopic.php?f=2&t=18495

பொன்னுத்தாய் பண்ணரசி போக்கற்றுப் போனாளே
கண்ணீரில் நாகஸ் வரம்.

அமுதிசைஆ ராதித்தும் ஆக்குபவர் அந்தோ
சமுதாயச் சாக்கடைக் குள்.

Thanks for the thread and posting Sridhar. Very moving.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by Ponbhairavi »

நாடெங்கும் ஆலயங்கள் !
நெடிதுயர்ந்த மண்டபங்கள் !!
கலை நயமிகு கல்தூண்கள் !
பல நூற்றாண்டு காலமாய் பண் இசையை
பொன்னுதாயி போன்ற கலைஞர்களின்
நிஜ நாகஸ்வர நல்லிசையும் தவிலும்
கேட்டுத் திளைத்த உயிர் சிற்பங்கள்
இன்று கல்லாய்ச் சமைந்து
கண்ணீரும் வடிக்கின்றன
கரண்டில் இயங்கி ஓயும் நாராச தம்பட்ட
ஓசைக் கலவை ஓயாதோ என்று ஏங்கி
கனியிருப்பக் காய் கவர்ந்த
கயவர்கள் செயல் எண்ணி.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

Ponbhairavi wrote:நாடெங்கும் ஆலயங்கள் !
நெடிதுயர்ந்த மண்டபங்கள் !!
கலை நயமிகு கல்தூண்கள் !
பல நூற்றாண்டு காலமாய் பண் இசையை
பொன்னுதாயி போன்ற கலைஞர்களின்
நிஜ நாகஸ்வர நல்லிசையும் தவிலும்
கேட்டுத் திளைத்த உயிர் சிற்பங்கள்
இன்று கல்லாய்ச் சமைந்து
கண்ணீரும் வடிக்கின்றன
கரண்டில் இயங்கி ஓயும் நாராச தம்பட்ட
ஓசைக் கலவை ஓயாதோ என்று ஏங்கி
கனியிருப்பக் காய் கவர்ந்த
கயவர்கள் செயல் எண்ணி.
Great verse Ponbhairavi! I thought you said you are not capable of versifying your thoughts in Thamizh, you are doing a splendid job!
Here is kuRaL for your verse:

உகந்த.பொன் பைரவி! ஊன்கலங்க வைத்தீர்
அகலுமோ ஆங்கிலச் சொற்கள்?

in your own words (தமிழ்க்) கனி இருக்க (ஆங்கிலக்) காய் கவர்வானேன் ? :-)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

The smallest Thamizh verse is a two line verse called veNsenthuRai (வெண்செந்துறை). Easy to write, the grammatical rules are pretty flexible and not complex for this metre. These are also called kuRaL veNsenthuRai (குறள் வெண்செந்துறை).

Only two lines in a verse, these generally have edhugai & monai, can have 4 or 6 or 8 words (siir's) in each line (adi).

A popular example of this type of verse is:
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

another example is the famous pallANdu:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள்மணி வண்ணாஉன் செவ்வடி செவ்வி திருக்காப்பு

Here is a sample of verses beautifully written by Prof. Pasupathy; hope you see & enjoy the creativity of the poet, he conveys a complete incidence in veNsenthuRai couplets:

சொல்லின் செல்வன்

பசுபதி

அன்றொருநாள் ராமபிரான் அனுமனிடம் கேட்டார்;
"என்னைப் பற்றியென்ன எண்ணுகிறாய் எப்போதும்?"

தாழ்மையுடன் மாருதியும் தயங்கிப்பின் பதிலிறுத்தான்:
"ஆழ்ஞானம் தேடுமுன் அரசன்நீ; அடிமைநான். "

ஞானம் மலர்நிலையில் ஞாலம்நீ ; துகள்நான்;
ஞானம் கனிந்தபின்னர் நானேநீர்; நீரேநான். "

சிரித்தணைத்தார் ஸ்ரீராமர் சொல்லின் செல்வனை;
திருமாலாய்க் காட்சிதந்தார்; செஞ்சொற்கள் ஒலித்ததங்கே.

" 'திருமால் மாருதி!' திருப்பியிதைப் படித்தாலும்
'திருமால் மாருதி'தான் ! தெளிந்தவர் களித்திடுக!"

இருநாமம் இணைந்துநிற்கும் இணையற்ற மந்த்ரமிது!
இருபோதும் ஓதுங்கள் ! இறையோடு இணையுங்கள் !

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by cmlover »

What is the 'Grammar' for the one liners like the
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ?

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by Ponbhairavi »

தனித்தமிழுக்கு களங்கம் தான் . தவற்றை உணர்கிறேன் .
இது வேறு :
கடையில் கனி இருந்தும் காய் கவர்ந்து வந்தேன் என்
வீட்டில் மனைவி செய்யும் வாழைக்காய் பஜ்ஜிக்கு .

ஹைக்கூ கவிதை பற்றி கொஞ்சம் விளக்கவும்
அதுவாவது சரிப்படுமா பார்க்கலாம்.

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by arasi »

viLakkAmal viLanga vaippadu kavidaiyanRO, naNbarE,
idanai nangaRindavarum nIrthAnE ;)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

தனியைத் தவிர்த்திட்டு கச்சேரி கேட்டல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

கணினி சுருதிகொண்டு தம்புரா நீக்கல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

இனியதொரு நாயனம் இல்லாதோர் ஸீஸன்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

பணிவைத் துணைக்கொள்ளா பாடகர்தம் சேர்க்கை
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

சனியாம் ஒலிபெருக்கி சப்தத்தைக் கூட்டி
இனிதாம் மிருதங்க நாதம் சிதைத்தல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

மெனுவைப்பார் கேண்டீன் மெதுவடையே ஜோராம்
இனியெதற்கு பாட்டுஇது வேபோ துமெனல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று!! :)

இனிமா* கொடுத்தாலும் சகிப்பேன் அபங்பாடி
இன்னா செய்வாரை நான்சகியேன் என்று
தனியாய்ப்போ ராடும் ஹரிமாவின் செய்கை
கனியிருப்பக் காய்கவர்ந் தற்றோ? ]:)

[* இனிமா as in 'enema' :)]

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by cmlover »

கலக்கிட்டீங்க!

இனிய தமிழிருக்க தெலுங்கில் மட்டும் பாடல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று!

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

cmlover wrote:What is the 'Grammar' for the one liners like the
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ?
I don't know sir; searched the net and found one-liners are called நூற்பா - nuurpa or suuthira'p pa (சூத்திரப் பா); looks like these are also very flexible in thaLai rules as long as they sound good (osai nayam/ஓசை நயம்). Most of the Tholkappiyam instructions and other instructional works carry a lot of such one-liners.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

Ponbhairavi wrote:தனித்தமிழுக்கு களங்கம் தான் . தவற்றை உணர்கிறேன் .
இது வேறு :
கடையில் கனி இருந்தும் காய் கவர்ந்து வந்தேன் என்
வீட்டில் மனைவி செய்யும் வாழைக்காய் பஜ்ஜிக்கு .

ஹைக்கூ கவிதை பற்றி கொஞ்சம் விளக்கவும்
அதுவாவது சரிப்படுமா பார்க்கலாம்.
கிளப்பிட்டீங்க பொன்பைரவி அவர்களே! I think we should just write what comes naturally and if some minor adjustments can be done without too much studying of grammar, should be open enough to learn and accommodate those.... hykoo or pudhuk-kavidhai or naveenap-pa all are fun!

பஜ்ஜி verse தூள்!

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

//கனியிருப்பக் காய்கவர்ந் தற்று// verses by everyone - all sound great. Very good imagination. Thanks for posting these.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by cmlover »

In sanskrit we do have one line 'sutra' like the Panini Grammar rules or the Patanjai yoga sutras etc...

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

முன்(?)னேற்றம்

பிணிவரினும் பெற்றோம் பிறநாட்டுப் பண்டம்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

பணியாரம் பாகையாம் பாய்ந்திடு.மக் டானல்ட்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

கினியக் கவர்ந்திடுமே கேஎஃப்சி கோழி
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

கனிச்சாறும் நீர்மோரும் ’கோக்’காகிப் போச்சு
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

துணிவாய்த் துகிலுரித்தார் தொல்பொருளாம் சேலை
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

பணிக்காய் படுங்குளிரில் பாரதத்தை விட்டோம்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

நணியன் சிவனிருக்க நாடிடுவோம் ஞாலம்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

Wonderful ones, msm! Need some help with the last one though (naNiyan?)

கனியிருப்பக் காய்கவர்ந் தற்றாம் உவமை
நனிசிறக்கப் பாசெய்தார் காணீர் எமெஸெம்
கனிச்சாறும் நீர்மோரும் தந்தார் ரஸிகர்க்
கினிப்பாம் அவர்பா நயம்
Last edited by sridhar_ranga on 02 Feb 2012, 10:33, edited 1 time in total.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

SankarK is missing for a while. Augurs well I think - a monumental kandar nooRRanthaadi must be in the making! Look forward to it soon.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by Ponbhairavi »

Arasi, Sridhar-rang, Cml. Msm,
அளித்த ஊக்கதிற்கு மிக்க நன்றி

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by cmlover »

தேங்காய் இருக்க தேங்கனி நாடுவரோ?
சொக்காய் இடுபவர் சொக்கனி இடுவரோ?
பலகாய் தேடுவோர் பலகனி ஏற்பரோ?
காய் இருப்ப கனி கவர்வாருளரோ?
:D

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

sridhar_rang wrote:Need some help with the last one though (naNiyan?)
naNiyan / நணியன் - One who is near; சமீபத்திலிருப்பவன்.
from:
<
http://dsal.uchicago.edu/cgi-bin/philol ... splay=utf8
>

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sankark »

sridhar_rang - just hanging around & enjoying all the creative stuff going here. work has caught up and so fully occupied :(

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

சங்கடம் வேலைச் சலிப்பால், தமிழ்ப்பாவோ
சங்கருக் காறுதல் ஆகும்.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by Ponbhairavi »

புடலங்காய் பூசணிக்காய்
பரங்கிக்காய் பாகற்காய்
வெண்டைக்காய் சுண்டைக்காய்
மண் மேல் கொடிபடரும் பீர்கங்காய்
இல்லற இன்பத்துக்கு இள நங்காய்
இவற்றுள்
இனாமாய் கிடைப் பினும் கனி கொளாய்
Last edited by Ponbhairavi on 03 Feb 2012, 12:58, edited 2 times in total.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

Good one Ponbhairavi sir.

காய்தல் உவத்தல் தவிர்ப்போம் கனிஎனினும்
வாய்வழிஉட் சென்றால் நலமே !

:)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

Here is something different that came up, and kept me busy today (weekend for me). It was taxing and still requires some work. I guess I will give the brain some rest and try it again tomorrow, so it is a WIP version for your feedback:

An ezhukURRirukkai has the structure like this: (tirujnAna sambandar and tirumangai AzhwAr have written such verses, but I am not very familiar with those.)

------ 1
----- 121
---- 12321
-- 1234321
- 123454321
-12345654321
1234567654321

If you add the same sequence once again in reverse, it is supposed to look like a thEr / ratham. Not sure if ratha bandham of Sanskrit literature is same or any different.

Anyway here goes what I came up with today. This is again a Kaumaram special, on Lord Muruga:


கந்தன் எழுகூற்றிருக்கை

(வெண்பா இலக்கணத்திற்குட்பட்டது)


----------------------------- 1 -----------------------------
ஒன்றே பரம்பொருள் என்றே உணர்ந்திடு
குன்றேர் குமரன் அது

----------------------------- 1 2 1 -----------------------------
ஓரரக்கன் மாய்ந்தான் இருபறவை யானானுன்
வீரக்க ழல்பற்றி சேவற் கொடியாய்
மயிலாயுன் னோடேயொன் றானான்சூ ரன்றன்
உயிர்கொண்டும் உய்வித்த வேல்

----------------------------- 1 2 3 2 1 -----------------------------
ஒருமுறை உன்சரணம் வந்தடைந் தோர்க்கு
இருவினையும் மும்மலமும் நீக்கித் தருவாய்
இருபதத் தைஒரு வீட்டை யருள்வாய்
குருகுகனே என்குமர மூர்த்தி

----------------------------- 1 2 3 4 3 2 1 -----------------------------
(to be completed)

----------------------------- 1 2 3 4 5 4 3 2 1 -----------------------------
(to be completed)


----------------------------- 1 2 3 4 5 6 5 4 3 2 1 -----------------------------

உலகொன்று சுற்றுமிரு வர்முக் கனிக்காய்
கலகத்தில் ஆழ துறவிக்கோ லம்பூண்டாய்
நான்முக னைதண்டித் தாய்ஐந் தெழுத்தோன்
ஆன்விடை யூர்சிவனுக் கேபோதித் தாய்பின்னர்
ஆறுபடை வீடமர்ந்து ஐந்தொழிலை செய்வித்தாய்
நீறணிந்த மாந்தர்க்கே *நாற்பொருள்தந் துய்வித்தாய்
மூவாசை கொண்டதிரு மாலுமிரு தேவியரும்
நாவாரக் கொஞ்சிடும் ஓர்மருகா வேல்முருகா
காவாவா நானுன் சரண்

( * நாற்பொருள் = அறம், பொருள், இன்பம், வீடு )

----------------------------- 1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 -----------------------------
ஓர்குறத்திக் கிறைவ இருமகளிர் கைபிடித்து
சீர்மதுரைச் சங்கத்தில் மூன்றுதமிழ் காத்தாய்
நால்மறைக் கோர்பொருள் தந்தாய் ஐந்திணையின்
பால்குறிஞ்சி ஆட்கொண் டவறுமு கத்தாய்!
உறுபாரே ழைக்காத் திடுங்குமர! உன்னை
அறுபருவம் நான்தொழுவேன் ஐம்பூதத் தலைவ!
நாற்கவியும் நீதந்து முப்போதுன் முன்நின்
றிருதாள் பணியுமெனை ஓர்வேலாற் காப்பாய்
அருமருந்தே நீஅமரர் தேவே

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

sridhar_rang wrote: கந்தன் எழுகூற்றிருக்கை

(வெண்பா இலக்கணத்திற்குட்பட்டது)
Great attempt/effort.
Some more attention to Thalai rules, inclusion of MOnai't thodai, better breaking of words (சீர்’s) could improve the quality of verses (soRsuvai, poRutsuvai & nayacchuvai) tremendously.
I understand normally ezhukU(t)RRirukkai has been done in the past only in agavaRpA (or AsiriyappA) metre, but I guess other metres can also be tried.....
Your passion for Thamizh & Lord Muruga shows very well Sridhar_rang, all the very best, way to go..

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

Yes msm there is a lot of scope to improve here. The need to get the number sequence right and weave an appropriate story around each digit (1,2,3,...) connected with Murugan legend pushed back all other aNi / Suvai considerations. It ain't easy this poetry thingy is it? :)

One's respect for the huge body of such works from the past masters grows tremendously after such attempts.

Please check if this version 2 of the first three verses have better esthetics:

----------------------------- 1 -----------------------------
ஒன்றே பரம்பொருள் உண்மை உணர்ந்திடு
குன்றேர் குமரன் அது
----------------------------- 1 2 1 -----------------------------
அரக்கன் ஒருவன் அழிந்தே இரண்டாய்ச்
சிறக்கக் கொடிதனில் சேவல் மயிலென்
றிருக்கும் பரகதி ஈந்தாய் உனக்குள்
ஒருங்கும் ஒருநிலைதந் தாய்
----------------------------- 1 2 3 2 1 -----------------------------
ஒருவேல் உலகினை ஓம்பும் அடியார்
இருவினை மும்மலம் இன்றியே போகும்
இருபதம் பெற்று இலங்கும் ஒருநாள்
முருகன் அருளால் மலரும்

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sankark »

sridhar_rang - ascending and descending - that is great. If we go like this, rasikas.org should have a new topic - Tamil Verses.

Started something new here @ http://www.rasikas.org/forums/viewtopic.php?f=2&t=18600

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

sridhar_rang wrote: இருவினை மும்மலம் இன்றியே போகும்
இருபதம் பெற்று இலங்கும் ஒருநாள்
முருகன் அருளால் மலரும்
Great job Sridhar ayyA.

Sridhar ayyA and Sankar ayyA both are altogether in a different league in Thamizh prosody. Both in terms of knowledge and their adventurous spirit.

Let me relax and enjoy what is coming in future posts/updates.

Sridhar ayyA: Was the last siir in the 2nd line meant to be போக்கும் ?
Last edited by msm on 07 Feb 2012, 00:16, edited 1 time in total.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

sankark wrote: Started something new here @ http://www.rasikas.org/forums/viewtopic.php?f=2&t=18600
Looks like Sankar-ayyA is into something serious and deep.. Pray, may Lord Kannan's blessings be with him.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

msm wrote: Was the last siir in the 2nd line meant to be போக்கும் ?
msm, I meant போகும் only but போக்கும் makes a lot more sense!

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

sridhar_rang wrote:
கந்தன் எழுகூற்றிருக்கை

(வெண்பா இலக்கணத்திற்குட்பட்டது)

----------------------------- 1 2 3 4 3 2 1 -----------------------------
(to be completed)
ஒன்றிரண்டாய் தோன்றும் உயிராகி முக்குணத்தின்
உந்துதலில் நாநா வுருவாகித் - துன்புறவே
முக்கண்ணன் மைந்தன் முருகனீர் பாதமே
மக்கட்கோர் மீளும் வழி.
Last edited by msm on 07 Feb 2012, 21:51, edited 1 time in total.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

That's super, msm - so much packed into so few words! I am reminded of "kaDugaittuLaittEzh kaDalaippugaTTik kuRugattaRitta kuRaL"

Please take a shot at the next sequence as well (1 up to 5 down to 1).

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by cmlover »

Thanks. Just beautiful...
Reminds me of the melodious song by KBS (Auvvayaar) on the numerals one to ten sung at the behest of Lord Muruga...
ஒன்றை பலவாக்கி பலவை ஒன்றாக்கி
குன்றம் செறிந்தோன் புகழ் பாடி இம்
மன்றம் சிறப்பிக்கும் கவிக்குவியை
என்றும் மறப்பிலோம் யாம்.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

Thai pUsam in Batu (பத்து) Caves, Malaysia
http://thestar.com.my/news/story.asp?fi ... sec=nation

------------------- 1234321 -------------------
தைப்பூசம் எனும் ஒரு நாளாம் - தமிழர்
மெய்ப் பொருளைப் பெறும் திரு நாளாம்
பார்புகழும் பத்துக் குகையாம் - கடாரத்
தார்பரவும் கந்தன் மலையாம் - அங்கே
திரண்டு வரும் பக்தர் அலையாம் - அவர்க்
கிரண்டு வினை இனியும் இலையாம் - குகை
மூன்று தரும் முக்திப் பதமாம் - எஞ்
ஞான்றும் அதை நாடும் சனமாம் - என்றோ
நான்கு கடல் தாண்டி வந்தாலும் - அவர்
மூன்று தமிழ் தன்னை மறவாராம் - அங்கு
ரெண்டு குடப் பால் காவடியாம் - எடுத்துக்
கொண்டு வந்தவர் எண்ணிறந் தவராம் - முருகா
அரோகரா எனத் தொழு வாராம் - துன்பம்
வராமலே அவன் அருள் வானாம் - இன்றோ
தைப்பூசம் எனும் ஒரு நாளாம் - தமிழர்
மெய்ப் பொருளைப் பெறும் திரு நாளாம்

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

sridhar_rang wrote:
கந்தன் எழுகூற்றிருக்கை

(வெண்பா இலக்கணத்திற்குட்பட்டது)

----------------------------- 1 2 3 4 5 4 3 2 1 -----------------------------
(to be completed)
தந்தான் ஒருதுகிலான் தன்னழிவிற்க் கீருபாய
முன்னூல் மறைநான்கின் முத்தாய்ப்பாய் ~ ஐந்தெழுத்தை
நாற்சா தனத்தினால் நாடமூ வீர்முகனின்
ஆற்றலாம் ஓர்ரம ணன்.

ஒருதுகிலான் - one who wore only one piece of cloth - loincloth
தன்னழிவிற்க்(கு) - for the destruction of 'thaan' or 'aganthai' (or ego sense)
ஈருபாய - இரு-உபாயங்களை உடைய - இருவழிகள் உள்ள : ’ஆன்ம விசாரம்’ & ’ஆன்ம அர்ப்பணம்’ என்னும் ‘சரணாகதி’ ஆகிய இரு வழிகளை உள்ள
முன்னூல் - three works namely, உபதேச உந்தியார், உள்ளது நாற்பது, குருவாசகக்கோவை
மறைநான்கின் முத்தாய்ப்பாய் - auspicious end of four Vedas (Vedanta)
நாற்சாதனம் - நாலு சாதனைக் கிரமங்கள் (or the four means of prescribed spiritual practice / sadhana chatushtaya) namely, viveka, vairagya, shat sampat (or six virtues) & intense longing (mumukshutva)
மூவீர்முகன் - மூவிருமுகன் - அறுமுகன்
ஓர் - can be taken as ஒரு or ஞாபகம் வைத்துக் கொள் or அறிந்து கொள்.

short meaning: ஒரு கோவணத்தை மட்டும் உடுத்தும் ரமணபிரான், (நம்) அகந்தை நாசமுற இரு உபாயங்கள் கொண்ட மூன்று நூல்களை நான்கு வேதங்களின் மங்கள முடிவாக தந்தான். ”அருணாசலா” என்கிற ஐந்தெழுத்தை நாலு சாதனைக் கிரமங்களினால் அடைவதற்கு (வேண்டிய) மூவிரண்டு முகன் முருகனின் ஆற்றலே (சக்தியே) இந்த ஒரு ரமணபிரானாக (உருவானது என) அறிந்து கொள்வோமாக.
Last edited by msm on 08 Feb 2012, 06:25, edited 3 times in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by cmlover »

Fantastic!
முன்னூல் மறைநான்கின் முத்தாய்ப்பு can also be interpreted as
முப்பிரிநூல் அணிந்த வேத நான்முகனின் ஒப்புதல்
and
ஐந்தெழுத்தை
நாற்சா தனத்தினால் நாடமூ வீர்முகனின்
ஆற்றலாம் = ஐந்தெழுத்தை மூவீர்முகனின் ஆற்றலாம்
நாற்சா தனத்தினால் நாட
(சரவணபவ overtaking நமசிவய)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

cmlover wrote:Fantastic!
முன்னூல் மறைநான்கின் முத்தாய்ப்பு can also be interpreted as
முப்பிரிநூல் அணிந்த வேத நான்முகனின் ஒப்புதல்
and
ஐந்தெழுத்தை
நாற்சா தனத்தினால் நாடமூ வீர்முகனின்
ஆற்றலாம் = ஐந்தெழுத்தை மூவீர்முகனின் ஆற்றலாம்
நாற்சா தனத்தினால் நாட
(சரவணபவ overtaking நமசிவய)
excellent sir; quite possible...

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

cmlover wrote:Thanks. Just beautiful...
Reminds me of the melodious song by KBS (Auvvayaar) on the numerals one to ten sung at the behest of Lord Muruga...
ஒன்றை பலவாக்கி பலவை ஒன்றாக்கி
குன்றம் செறிந்தோன் புகழ் பாடி இம்
மன்றம் சிறப்பிக்கும் கவிக்குவியை
என்றும் மறப்பிலோம் யாம்.
Yes, I remember the KBS song in Thiruvilaiyadal. Fantastic song and very meaningful too. I thought it was requested by Lord Siva, or was it Lord Muruga?

is this your verse sir or does this come in Avvayar ?

Either way, needs a few adjustments to fit into venba metre. For ex.: பலவை can be பலவற்றை; புகழ் பாடி இம் can be புகழினைப் பாடியிம்; not sure what to do with கவிக்குவியை since I don't get it...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by cmlover »

கவிக்குவி = collection of verses

பாடறியேன் கவியறியேன்
(தமிழ்) பள்ளிக்கூடம் தானறியேன்
ஆங்கிலத்தில் படித்தபோதும்
அழகு தமிழ் காதலித்தேன்
இலக்கணமும் படித்ததில்லை
தலக்கனமும் எனக்கு இல்லை
உள்ளத்தில் தோணுவதை
உளறி கொட்டுகிறேன்
கள்ளத்தனம் ஏதுமில்லை
எள்ளாது பொறுத்திடுவீர்!
தள்ளாத வயதினிலும்
தமிழ் மோகம் விடுவதில்லை!
:D

Now I am forced to take a break for personal reasons.
Pl continue and keep going. I will rejoin after my problem is solved!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

All the best and do return soon CML! Your participation has helped keep all the Tamil Kavithai threads lively.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

short meaning: ஒரு கோவணத்தை மட்டும் உடுத்தும் ரமணபிரான், (நம்) அகந்தை நாசமுற இரு உபாயங்கள் கொண்ட மூன்று நூல்களை நான்கு வேதங்களின் மங்கள முடிவாக தந்தான். ”அருணாசலா” என்கிற ஐந்தெழுத்தை நாலு சாதனைக் கிரமங்களினால் அடைவதற்கு (வேண்டிய) மூவிரண்டு முகன் முருகனின் ஆற்றலே (சக்தியே) இந்த ஒரு ரமணபிரானாக (உருவானது என) அறிந்து கொள்வோமாக.
Wow!

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by msm »

cmlover wrote:கவிக்குவி = collection of verses

பாடறியேன் கவியறியேன்
(தமிழ்) பள்ளிக்கூடம் தானறியேன்
ஆங்கிலத்தில் படித்தபோதும்
அழகு தமிழ் காதலித்தேன்
இலக்கணமும் படித்ததில்லை
தலக்கனமும் எனக்கு இல்லை
உள்ளத்தில் தோணுவதை
உளறி கொட்டுகிறேன்
கள்ளத்தனம் ஏதுமில்லை
எள்ளாது பொறுத்திடுவீர்!
தள்ளாத வயதினிலும்
தமிழ் மோகம் விடுவதில்லை!
:D

Now I am forced to take a break for personal reasons.
Pl continue and keep going. I will rejoin after my problem is solved!
CML Sir:

பகவான் அருளில் பலவகைப் பாக்கள்
அகந்தொட்டு அன்பைத் தரும்!

I hope and pray you clear your problem quickly; once you are back after resolving your issue, please do come back here with your valuable verses and posts;

Since this is a venba (marabu'p paa) thread, I keep telling what I notice so that everyone can get a feel for venbas. I hope this is not hurting or offending anyone. Also, this, by no means, implies I am very well versed with Thamizh prosody. I know very clearly it is otherwise.

As you know, like CM, Thamizh is also an ocean and only after learning a bit (even a very infinitesimally small bit like I did), one realizes one's inadequacy completely. This is exactly where I am.

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sankark »

ஒருநாளும் உன்னை மறவா தநிலை
தருவாய் ஒருசூ ரனைஇரண் டாக்கின
முக்கண் முதல்வன் இளமக னே எனக்கு
இக்கண மேஅருள் வாய்நான் முகனை
சிறைசெய் தஐம்பூத நாதா குறைதீர்க்கும்
நான்மறை மெய்ப்பொருளே யாவர்க்கும் உன்கதை
நான்சொல்வேன் முக்கனி போலினிக்கும் உன்பெயரே
ஈரிடத்தும் நன்மை பயக்குமெ னச்சொல்லும்
சீரிலங்கும் ஓர்பாட்டே கேள்

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

Talking of ascending/ descending or any other number sequence, found these verses by tirumazhisai Azhwar exceedingly appealing. Thai Magham being the tirunakshatram of this Azhwar, I had the good fortune of reciting tiruchchanda viruttam today along with a set of devotees. I am unable to decode the meaning of these verses fully but found the words so beautiful.

The metre of this is given as "chandak kali viruttam" - msm, any idea what the rules are for this?

திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம்


சந்தக் கலி விருத்தம்

752:
பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்,
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்,
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்,
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே? (2) (1)

753:
ஆறுமாறு மாறுமாயொ ரைந்துமைந்து மைந்துமாய்,
ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய்,
வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்,
ஊறொடோ சை யாயவைந்து மாய ஆய மாயனே. (2)

753:
ஐந்துமைந்து மைந்துமாகி யல்லவற்று ளாயுமாய்,
ஐந்துமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனே,
ஐந்துமைந்து மைந்துமாகி யந்தரத்த ணைந்துநின்று,
ஐந்துமைந்து மாயநின்னை யாவர்காண வல்லரே? (3)

755:
மூன்றுமுப்ப தாறினோடொ ரைந்துமைந்து மைந்துமாய்,
மூன்றுமூர்த்தி யாகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய,
தோன்றுசோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்,
ஏன்றெனாவி யுள்புகுந்த தென்கொலோவெம் மீசனே. (4)

758:
ஒன்றிரண்டு மூர்த்தியா யுறக்கமோடு ணர்ச்சியாய்,
ஒன்றிரண்டு காலமாகி வேலைஞால மாயினாய்,
ஒன்றிரண்டு தீயுமாகி யாயனாய மாயனே
ஒன்றிரண்டு கண்ணினுனு முன்னையேத்த வல்லனே? (7)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script only )

Post by sridhar_ranga »

Here is an ARupaDaic chanda viruttam inspired by the above: [update]edited to have uniform seer structure on all lines[/update]

அந்திவண்ண னைச்சினந்து அன்றுபழ னிசென்றவா
தென்திசையைக் காக்கவந்த தென்பரங்குன் றிறையவா
இந்திரர்க்கும் எட்டிடாது ஏரகத்தில் இருந்தவா
தந்திரத்தால் வள்ளியைச்சேர் தண்தணிகை அடைந்தவா

மந்திபாயும் பழமுதிரும் மாமலையின் மயிலவா
செந்திலாய சீரலைவாய்ச் சேர்ந்தவெந்தை சரவணா
நந்திதொழும் நாதனுக்கே நான்மறைகள் நவின்றவா
புந்தியிற்பு குந்தெனக்குன் பொற்பதங்கள் பணித்திடாய்

கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளம்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளம்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளம்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளம்

கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் கருவிளம்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளம்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளம்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளம்
Last edited by sridhar_ranga on 10 Feb 2012, 16:43, edited 3 times in total.

Post Reply