If you are a venpA buff (in tamil script)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

சங்கீதம் போற்றும் ரஸிகாஸாம் எம்குழுமம்
பொங்கும் இசையே எமக்கின்பம் - இங்கே
அசைசீர் தளையும் அழகுதமிழ்ப் பாவும்
இசையைப்பின் தள்ளியதெம் மாயம்?

arasi
Posts: 16799
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff

Post by arasi »

pATTum nAmadE, pADalum nAmadE ??
Last edited by arasi on 21 Jan 2012, 23:52, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

சங்கடமான சங்கீதம் விட்டு
கவிதையை இசைக்கப் போறேன்
கவிதையை இசைக்கப் போறேன்
கட்டுரையும் எழுதப் போறேன்...

(after the very popular movie 'sabhapathi' (starring TR Ramachandran) in the early 40's) :D

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

cml, your wish for aingaran here as a kali viruttam

நாகமு கத்தனோர் பானை வயிற்றனோர்
காகஉ ருக்கொடு காவிரி ஈந்தனன்
நாகம் தரித்தவன் ஞானக் களிப்பவன்
வேகம் கெடுத்து விவேகம் அளிப்பான்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Great! So many Vinayaka stories are in there... and nice rhymes..
நாகம் = elephant/snake
What is the definition of kali viruttam?

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

msm wrote: not sure if another combination with the previous சீர் taken as கூவிளங்காய் , that is, as பண்ணுமவ, and the final siir as னே, will be acceptable. Only strong யாப்பிலக்கணம் experts can help us on this. Some may say பண்ணுமவ cannot be taken as கூவிளங்காய் but only as a கனிச்சீர் (தேமாங்கனி) which is absolutely not allowed in a venba.
msm - as I understand, the asai matching is greedy (a la regex). The longest possible pattern should be matched. So பண்ணுமவ would indeed be பண் ணும வ which would be கூவிளங்காய்.

cml - to my knowledge kali viruttam is made of alavadis (4 seers in each adi) and each seer being mainly of iyar (2 asai in a seer) or ven (3 asai ending with kai) or vanji (3 asai ending with kani) seers. No thalai rules that I know of.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: If you are a venpA buff

Post by Ponbhairavi »

வானம் ஒரு வள்ளல் வேண்டியது பொழிகிறது
தான மாய் வளம் தரும் தண்நிலமும் அவ்வாறே
ஆதவன் ஒளியின்றி உயிர் ஏது இவ்வுலகில் ?
அதே வரிசையில் லக்ஷ்மன்ஜி ரக்டேயும்
கீதம் தேடித்தவிப்போற்கு ஆஞ்சநேயர் சஞ்சீவி
கைமாறோ நன்றியோ கருதிடா வள்ளலினம் !!



என்னைவிட சிறந்த கவிஞர்களின் பா மலர்களை தொடுத்த பின் உரிய நூலுக்கு (proper thread ) அனைத்தையும் மாலையாய் மாற்றிடலாம்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

கவிதைமழை பொழிகிறதே
இதயமெலாம் நனைகிறதே
விழாக்கோலம் பூண்டிக்
கணினிதாளம் போட
ரசிகர் உளம்
அலைபாயுதே...
(After that immortal tune by Ilaya Raja...)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

sridhar_rang wrote:சங்கீதம் போற்றும் ரஸிகாஸாம் எம்குழுமம்
பொங்கும் இசையே எமக்கின்பம் - இங்கே
அசைசீர் தளையும் அழகுதமிழ்ப் பாவும்
இசையைப்பின் தள்ளியதெம் மாயம்?
அசையா(து) இருக்குமொளி ஆன்மா அசைந்தால்
இசைமொழியென் றீரின்பம் ஈர்க்கும்.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

sankark wrote: msm - as I understand, the asai matching is greedy (a la regex). The longest possible pattern should be matched. So பண்ணுமவ would indeed be பண் ணும வ which would be கூவிளங்காய்.

cml - to my knowledge kali viruttam is made of alavadis (4 seers in each adi) and each seer being mainly of iyar (2 asai in a seer) or ven (3 asai ending with kai) or vanji (3 asai ending with kani) seers. No thalai rules that I know of.
அன்பு சங்கர் அவர்களே: தளை பிரிப்பது பற்றி தங்கள் விளக்கத்திற்கு நன்றி.
கலி விருத்தத்தில் ஒரு கேள்வி: நாலு அடிகளிலும் (across lines) ஒரே விதமான சீரமைப்பு வேண்டாமா ?

காட்டு:
கந்தர் அனுபூதி செய்யுட்கள்; உதாரணத்திற்கு: ”உருவாய் அருவாய்” என்று தொடங்கும் கடைசி செய்யுள்.

அப்புறம், கனிச்சீருக்கு அனுமதி இல்லை என்று எண்ணுகிறேன்,

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

msm
This is the source for me for tamil prosody - http://www.persee.fr/web/revues/home/pr ... _77_1_1744
கலி விருத்தத்தில் ஒரு கேள்வி: நாலு அடிகளிலும் (across lines) ஒரே விதமான சீரமைப்பு வேண்டாமா ?
The kaliviruttam grammar that I gave earlier is per this doc. I will have to check other sources for any other descriptions or restrictions.

Since Pillayaar, Murgan, Sivan, Thirumal & Ambal are already covered, here you go with a verse for the the 6th of the shanmadha.

காரிருள்நீக் கிகும்நற்கா லையம்போ தாய்செய்யும்
மாரிதனக் கானமூல காரணாகீழ் - வாரிதியில்
தோன்றுகிறாய் ஏழ்குதிரைத் தேருடைத்தாய் நீயிலாது
தோன்றிடுமோ வானவில் லே

கூவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் - கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்
Last edited by sankark on 24 Jan 2012, 06:16, edited 1 time in total.

kaumaaram
Posts: 380
Joined: 14 Oct 2005, 17:38

Re: If you are a venpA buff

Post by kaumaaram »

sankark wrote:msm, that nerisai venpA is great. Inspired me to write a nErisai for kaumaaram's wish..

முக்கண் முதல்வன் விழித்தீயில் தோன்றிய
செக்கச் சிவந்த அறுமுகத்தான் - சிக்கலிலே
தக்கன்சேய் கையால்கூர் வேல்பெற்றே சூரனை
திக்கெட்டும் ஆர்ப்பவென் றான்
Thanks from the bottom of my heart. But I want many more from you on my Lord. Why don't you try an Andhadi? [Recall Sadagopar Andhadi].

Kaumaaram

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

..or even Kandar anthaathi..

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

Very good verses by Sridhar, Sankark & Ponbhairavi.
Yes, like Kaumaaram wishes, more verses on Thamizh-k-Kadavul will bring more inspiration.
Thanks.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

Here is a verse, by and large like a venbA, on Kumaran - he being a beloved god of all of us south Indians, not just a tahmizh-k-kaDavuL, this one is in manipravala naDai, using Tamil and Telugu languages. Do you think this is a crazy idea, fitting Telugu words to Tamil venbA structure? But then thanigai (tiruttani) being a bi-lingual town where both languages are spoken, may be no one will object to this over there :)

வேலா வடிவேலா வள்ளிமணா ளாஉமை
பாலா தணிகை வளர்சீலா - ஏலா?
தயசேய இந்நாள்ளா? நாமொரலு சாலா?
பயமுலேக நன்னுரக்ஷி(ஸு) ஸ்ரீவல்லி லோலா!

The last line has 4 'seers' instead of the prescribed three for a venbA. Perhaps it may fit some other type of 'pA' ?

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

அசையா(து) இருக்குமொளி ஆன்மா, அசைந்தால்
இசைமொழியென்(று) ஈரின்பம் ஈர்க்கும் - விசையைப்போல்
பொன்பைர விசங்கர் பூநனைப்பர் பாமழையால்
சிந்தனைபூச் சிந்திடுவார் ஸ்ரீதர்!

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

haha, great job Sridhar-ji.
//he being a beloved god of all of us south Indians, not just a tahmizh-k-kaDavuL, // - I meant God of Thamizh language (or creator of Thamizh), I think he is worshipped even in N.India as Lord Karthikeya, isn't He?

//this one is in manipravala naDai// - wonderful creativity , though I don't understand Telugu.

Here is an attempt of a kuRaL veNpa in english on Lord Kandan:

When*I--------surrender--------Whither*am*I--------for*singing
Kandan*my--------ego*kill--------er.


வென்*ஐ--------சரண்டர்--------விதர்*அம்*ஐ--------ஃபார்*சிங்கிங்
கந்தன்*மை--------ஈகோ*கில்--------லர்.

தேமா--------புளிமா--------புளிமாங்காய்--------தேமாங்காய்
தேமாங்காய்--------தேமாங்காய்--------நாள்.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

sridhar_rang wrote: வேலா வடிவேலா வள்ளிமணா ளாஉமை
பாலா தணிகை வளர்சீலா - ஏலா?
தயசேய இந்நாள்ளா? நாமொரலு சாலா?
பயமுலேக நன்னுரக்ஷி(ஸு) ஸ்ரீவல்லி லோலா!

The last line has 4 'seers' instead of the prescribed three for a venbA. Perhaps it may fit some other type of 'pA' ?
actually, if you remove "ஸ்ரீவல்லி லோலா", which is kind of redundant anyway (because the first line already has "வள்ளிமணாளா"), it becomes a perfect veNpa.

great going.....! :-)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

sankark wrote: காரிருள்நீக் கிநற்கா லையம்போ தாய்செய்யும்
மாரிதனக் கானமூல காரணாகீழ் - வாரிதியில்
தோன்றுகிறாய் ஏழ்குதிரைத் தேருடைத்தாய் நீயிலாது
தோன்றிடுமோ வானவில் லே

கூவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமாங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் - கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
கூவிளங்காய் கூவிளம் நாள்
Sankar-ji: suuriyan-paa is very good.
Not sure if the 2nd சீர் is தேமாங்காய் or புளிமா...
I have found reading the lines loud after they are written (so one can hear the தளை & rhythm flowing smoothly) helps in keeping to the தளை rules...

another option for this line is to reduce the number of word-breaks:
காரிருள் நீக்கிநற்க் காலைப்போ தாய்ச்செயும்

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

msm - thanks for catching that. Fixed, it was to have been a kum, not a ki. Your correction also works from thalai perspective.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

Thanks for the suggestions msm. A very nice English kuRaL from you too!

Kaumaram, here is one more on your favourite Lord:

சுக்கையும் மிஞ்சும் மருந்துண்டோ சுப்ரமண்யன்
சொக்கும் வடிவழகுக் கீடுண்டோ - திக்குண்டோ
தேவானை காதலன்தாள் அல்லால் அமரரையும்
காவானே நம்கதியென்(று) ஓர்

A slight variation, referring to Kaumaram's devotion to the Lord:

சுக்கையும் மிஞ்சும் மருந்துண்டோ சுப்ரமண்யன்
சொக்கும் வடிவழகுக் கீடுண்டோ - திக்குண்டோ
தெய்வானை காதலன்தாள் அல்லால் அதுபற்றி
உய்வானே நம்கௌமா ரம்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

அஞ்செழுத்தான் ஈன்றதோர் ஆறெழுத்தான்
வஞ்சியவள் பெற்ற வரமானான் - நெஞ்சத்து
நினைத்துருகும் அன்பர்க்கு வேண்டுபவை
அனைத்தும் அளிப்பான் அவன்.

வஞ்சி can refer to Parvati or Valli..

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

sridhar_rang wrote: சுக்கையும் மிஞ்சும் மருந்துண்டோ சுப்ரமண்யன்
சொக்கும் வடிவழகுக் கீடுண்டோ - திக்குண்டோ
தெய்வானை காதலன்தாள் அல்லால் அதுபற்றி
உய்வானே நம்கௌமா ரம்
ஆஹா! வெண்பா மழையாகப் பொழிகிறதே! உவமை A-class.
சுக்குக்கு ஈடாகவாவது மருந்து ஒன்று இருக்கலாம் ஆனால் அதை மிஞ்சுவதற்கு மருந்து ஒன்றும் இல்லை.
ஆனால் வடிவழகில் எங்கள் முருகனுக்கு ஈடென்று ஒருவரும் இல்லை. ஆஹாஹா!
தமிழுக்கு அழகுசேர்க்கும் பலவகை ‘அணி’களுள் ஒன்றை சிறப்பாக கையாண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

cmlover wrote:அஞ்செழுத்தான் ஈன்றதோர் ஆறெழுத்தான்
வஞ்சியவள் பெற்ற வரமானான் - நெஞ்சத்து
நினைத்துருகும் அன்பர்க்கு வேண்டுபவை
அனைத்தும் அளிப்பான் அவன்.

வஞ்சி can refer to Parvati or Valli..
பிரமாதம் சிஎம்எல்-சார். கலக்கிட்டீங்க. கொஞ்சம் லேசா தட்டிச் சேர்த்ததும், பக்கா வெண்பா-வாச்சு (hope you don't mind):

அஞ்செழுத்தான் ஈன்றதோர் ஆறெழுத்தான் அன்புருவாய்
வஞ்சியவள் பெற்ற வரமானான் - நெஞ்சத்து நெஞ்சில்
நினைத்துருகும் அன்பர்(க்கு) அனவரதம் வேண்டுபவை வேண்டும்
அனைத்தும் அளிப்பான் அவன்.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

ஊழலில் மூழ்கிடுமிவ் வூரைக்கா ஓம்முருகா
சூழலைச் சிதைத்தாலும் சொந்தம்கா ஓம்முருகா
ஊழியம் இல்லாதோர் உயிரைக்கா ஓம்முருகா
ஏழையர் எங்குளரோ என்றுங்கா ஓம்முருகா

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Lovely...
Thanks
பண்பாக என்பாவை வெண்பா ஆக்கினதற்கு...

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

Excellent MSM.

Given the times we live in, I am tempted to add: "tangleeshAl SeerazhiyAt tamizhaikkA Om-murugA" :)

My grandpa on my mom's side, otherwise a proper vaishnavaite, was a staunch muruga bhakta and I have heard him say "Sukkukku minjina marundum illai, subramanyanai minjina saamiyum illai" - so I have his memory to thank for the uvamai.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

சுக்கிற்க்கு மிஞ்சின மருந்தில்லை
சுகருக்கு மிஞ்சின இனிப்பில்லை
கந்தனுக்கு மிஞ்சின கடவுளில்லை
காப்பதற்க்கு அவனன்றி வழியுமில்லை

1. சுக்கிற்க்கு மிஞ்சின மருந்தில்லை = There is no medicine transcending ginger
or
சுக்கிற்க்கு மிஞ்சின மருந்(து)தில்லை =The only medicine if ginger fails is தில்லை (Lord Siva)
2. சுகர் = Sugar or சுகப்ரம்மம், the author of Bhagavatam
I was trying to compliment (அவன் =Siva/Vishnu/Skanda)
...

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

Here is an 'aRuSeerk kazhineDil Asiriya viruttam' on ARupaDai veeDamarnda ARumugan:

சென்றுநீ பழனி நின்றாய்
-- செந்திலுக் கதிபா தென்பரங்
குன்றினுக் கிறைவா குறமகள்
-- கூடிடும் தணிகை வேலா
குன்று தோரா டுங்கும
-- ராகுளிர் பழமுதிர்ச் சோலை
நின்றெனக் கருளும் நிமலா
-- நீள்விசும் பினைத்தா ராயோ

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Very nicely you have woven together ஆறுபடைவீடு...

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

sridhar_rang wrote:Here is an 'aRuSeerk kazhineDil Asiriya viruttam' on ARupaDai veeDamarnda ARumugan:

சென்றுநீ பழனி நின்றாய்
-- செந்திலுக் கதிபா தென்பரங்
குன்றினுக் கிறைவா குறமகள்
-- கூடிடும் தணிகை வேலா
குன்று தோரா டுங்கும
-- ராகுளிர் பழமுதிர்ச் சோலை
நின்றெனக் கருளும் நிமலா
-- நீள்விசும் பினைத்தா ராயோ
ஸ்ரீதர் அய்யா - நல்ல முயற்சி. சுவாமிமலையைக் காணலையே. வேற ஏதாவது பேர்ல கொடுத்திருக்கீங்களா ?

அப்புறம் அறுசீர் விருத்தத்துல எல்லா அடியும் சீரமைப்பில் ஒத்து இருக்கணும் இல்லையா? அதாவது, முதல் அடிய எடுத்துக்கிட்டோம்னா
‘விளம்’ + ’மா’ + ‘மா’
-- ’விளம்’ + ‘மா’ + ‘விளம்’ - ன்னு அமைஞ்சிருக்கு.
கடைசி சீர் ‘மா’ ஆக வரணும் இல்லையா ? இதே போல் எல்லா அடியும் இதே சீரமைப்பில் வரணும் இல்லையா ?

அறுசீர் விருத்தம் -ன்ன உடனேயே கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல் ஞாபகம் வருது:

வெய்யிற் கேற்ற நிழலுண்டு
...வீசும் தென்றல் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு
...கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
...தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வனமன்றி
...வாழும் சொர்க்கம் வேறுண்டா?

இது திரைப்படப் பாடலாகக் கூட வந்த ஞாபகம்...

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

Swami malai = kunRu tOrADal

msm, my knowledge of aRu sIr viruttam is still WIP. I just tried that for fun. You have given a great example. I tried to use Asiriyat taLai which is agreeing in nEr or agreeing in niRai (opposite of venbA's case - iyaRcIr ventaLai) but it was impossible not to mix up both these taLais. About the line- ending cIr I have to learn the rules still. Thanks a bunch for your feedback and look fwd to it always.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

sridhar_rang wrote: msm, my knowledge of aRu sIr viruttam is still WIP. I just tried that for fun.
same here; this is a recent interest. Like CM, Thamizh prosody is such an ocean with so much variety and so much depth & asthetics that it is not possible for most to easily go past WIP. However, as you say, it is so much fun.

கட்டுக்கோப்பான வாழ்வைப்போல் கட்டுக்கோப்பான மரபுப்பா is both engrossing and healthy (so can be sustained for a long time without side-effects). செய்யுட்களில் மலினப்படுத்தாத (ஆனாலும் எளிதில் விளங்கக்கூடிய) தமிழை உபயோகப்படுத்த உபயோகப்படுத்த, தமிழின் சொற்செறிவு, சொற்சுவை, பொருட்சுவை, நயச்சுவை, சந்தச்சுவை, அணிச்சுவை என்று பல வகையான ஆனந்த அனுபவங்கள் காத்திருக்கின்றன.

See the intro given by Prof. Pasupathy:
கவிதை இயற்ற யாரும் கற்றுக் கொடுக்க முடியாது! உணர்ச்சியும், கற்பனையும்
ஒருங்கிணைந்து மனத்தில் எழும்பும் எண்ணமே நல்ல கவிதைக்குக் கருப்பொருள்.
ஆனால், கவியுள்ளம் படைத்தவருக்கு, ஓசை நயம் மிளிர, ஒரு நல்ல வடிவில்
கவிதையை அமைக்கக் கற்றுக்கொடுக்கலாம். அதுவே யாப்பிலக்கணத்தின் பணி.
பழமிலக்கியங்களை ரசிக்கவும் யாப்பிலக்கண அறிவு தேவை. தற்காலத் திரை இசைப்
பாடல்களிலும், பல புதுக் கவிதைகளிலும் யாப்பின் மரபணுக்கள் இருப்பதைப்
பார்க்கலாம். ஓசை, இசை அடிப்படையில் அமைந்த யாப்பிலக்கணம் தமிழ் முன்னோர்
கண்டுபிடித்த ஒரு அறிவியல் பொக்கிடம். பாரி மகளிர் முதல் பாரதி வரை
யாவருக்கும் உதவிய அந்தச் செய்யுள் இலக்கணம் நமக்கும் உதவும்.

kaumaaram
Posts: 380
Joined: 14 Oct 2005, 17:38

Re: If you are a venpA buff

Post by kaumaaram »

I bow to all those who had composed with full devotion, these lines on my Lord Shanmukha.
Thanks.... and I would as a small man expect only more from you... for my greed seems to be insatiable.

erode14
Posts: 726
Joined: 21 Jan 2007, 21:43

Re: If you are a venpA buff

Post by erode14 »

msm wrote:@erode14

ஈரோட்டார் ஈயும் இறைப்பா, இளங்கவிதை
தாராயென் பார்ரசி கர்.
எண்ணங்கள் இணங்’க விதை’யூன்றும்
வண்ணங்கள் இள’க வி’ழி நிறையும்
கிண்ணங்களல்ல, தட்டுமல்ல
தேம்’பா’ முகமலரும் - தேனனைய
தேவரீர் ரசிகாஸ் முகம் நோக்க.

(கிண்ணங்களல்ல கிண்ணத்தில் நிறைத்த கள்ளல்ல,
தட்டுமல்ல - தமிழுக்கோ அன்புக்கோ தட்டுப்பாடுமல்ல
தேம்பா - தேம்பியழுது வடியாது, முகமலரும்

தேனனை’ய தே’வரீர் - தேனனை எனும்போதே, அதே அதே என அசரீரி கூறல்)

:)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Just for fun :D
தளைகள் பல கூட்டி தமிழ்ப் பாவை சிறை வைப்பார்
கிளைகள் பல இருந்தால் கட்டுதற்க்காமோ மரம்?
வெண்பாவிற்க்கோர் விதி கலிப்பாவிற்க்கோர் விதி
நண்பா தமிழிற்க்கு சிறைப்படவோ தலைவிதி?
உள்ளத்தில் உவகையில் பொங்கிவரும் கவிதை
வெள்ளத்தை அணையிட்டு தடுத்தலும் முறையோ!
:D

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

விடுதலை விடுதலை விடுதலை

தளையினின்றும் சீரினின்றும் தமிழ்க்கவிக்கு விடுதலை
கிளைவிரித்து இலைதழைத்து கனிகொடுக்கத் தடையிலை
விடுதலை விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை

அளபெடைக்கும் விடுதலை அணி-தொடைக்கும் விடுதலை
வளம்படைத்த கற்பனைக்கு வழிவிடுவோம் தடையிலை
விடுதலை விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை

சிந்தடிக்கும் அளவடிக்கும் நெடிலடிக்கும் விடுதலை
சந்தமொன்றில் சத்திருந்தால் எந்தவிதியும் தடையிலை
விடுதலை விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Bravo!
Let us celebrate the Independence on the Republic Day!
நம் பாரதத் தாய்க்கு ஒரு பாமாலை சூட்டுவீராக

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

sridhar_rang wrote:Here is an 'aRuSeerk kazhineDil Asiriya viruttam' on ARupaDai veeDamarnda ARumugan:

சென்றுநீ பழனி நின்றாய்
-- செந்திலுக் கதிபா தென்பரங்
குன்றினுக் கிறைவா குறமகள்
-- கூடிடும் தணிகை வேலா
குன்று தோரா டுங்கும
-- ராகுளிர் பழமுதிர்ச் சோலை
நின்றெனக் கருளும் நிமலா
-- நீள்விசும் பினைத்தா ராயோ
உங்கள் அனுமதியுடன் சிறிதாய்த் தட்டியதும் அறுசீர் விருத்தம் இப்படியானது:

அரையடி: “விளம் + மா + மா” - என்ற வாய்பாட்டில்

சென்றுநீ பழனி நின்றாய்
-- தென்பரங் குன்றின் இறைவா
செந்திலுக் கதிபா வள்ளி
-- சேர்ந்திடுந் தணிகை வேலா
குன்றுசு வாமி மலைமேல்
-- குளிர்பழ முதிருஞ் சோலை
நின்றெனக் கருளும் நிமலா
-- நீள்விசும் பினைத்தா ராயோ

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

cmlover wrote:Just for fun :D
தளைகள் பல கூட்டி தமிழ்ப் பாவை சிறை வைப்பார்
கிளைகள் பல இருந்தால் கட்டுதற்க்காமோ மரம்?
வெண்பாவிற்க்கோர் விதி கலிப்பாவிற்க்கோர் விதி
நண்பா தமிழிற்க்கு சிறைப்படவோ தலைவிதி?
உள்ளத்தில் உவகையில் பொங்கிவரும் கவிதை
வெள்ளத்தை அணையிட்டு தடுத்தலும் முறையோ!
:D
ஆஹா! CML செம poetic mood-la இருக்கார் போலிருக்கு! அப்படியே வந்து கொட்டுது... :-)
தெரிந்தோ, தெரியாமலோ, நீங்க இங்கே பாடியதே மரபுப்பா தான்.
ராகம் பெயர் தெரியாதவரும் ராகத்தில் பாடலாம். ராகத்தின் பெயர், ஜன்யம் etc. தெரிந்தவரும் ராகத்தில் பாடலாம்.
கேட்கும்போதும் (பாடும்போதும்) பாட்டிற்கும், உரைநடைக்கும், வெறும் ஓசைக்கும் உள்ள வித்தியாசம் அறிந்திருந்தால் போதும். இல்லையா ?

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

erode14 wrote: எண்ணங்கள் இணங்’க விதை’யூன்றும்
வண்ணங்கள் இள’க வி’ழி நிறையும்
கிண்ணங்களல்ல, தட்டுமல்ல
தேம்’பா’ முகமலரும் - தேனனைய
தேவரீர் ரசிகாஸ் முகம் நோக்க.
:)
பிரமாதம். இதுவும் முச்சீர் (three feet) அடிகள் (lines) கொண்ட "வஞ்சி விருத்தம்" எனும் பாவகை போலத்தான்..

இதுபோல எவ்வளவோ பா-வகைகள் தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன. அதில் நம் முன்னோர்கள் பலர் அருமையான கவிதைகளும் படைத்துள்ளனர். காட்டுக்கு:

திண்ணம் காணீர்! பச்சை
வண்ணன் பாதத் தாணை
எண்ணம் கெடுதல் வேண்டா
திண்ணம் விடுதலை திண்ணம். ( பாரதி )

அந்நிய வாழ்க்கையின் ஆசையினால்
அன்னையை மறந்தோம் நேசர்களே!
முன்னைய பெருமைகள் முற்றிலுமே
முயன்றால் தமிழகம் பெற்றிடுமே. (நாமக்கல் கவிஞர்)

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

kaumaaram wrote:.........
and I would as a small man expect only more from you... for my greed seems to be insatiable.
Touched and moved to see your thirst for Lord Muruga.

You may get satisfied by a Muruga Bhaktha called Sri. மீ ராஜகோபாலன்'s outpouring here in a work called "Arumukar Anthathi":
http://meenalaya.org/gb/arumukar-anthathi-tamil

Incidentally, one of the verses (extracted from this page linked above) in the Benediction portion of this work also alludes to the same topic being discussed here:
--------------
வார்த்தை வரிசை வனப்பல்ல கவிதைமனங்
கோர்த்த பரிசை குறிப்புள்ள புதிரையருள்
வார்த்த வரத்தை வாழ்வித்தை வளத்தையிறை
நூர்த்த கரத்தை நுணுக்கத்தை நுகர்வாரே (4)

சொற்களைச் செதுக்கி, வார்த்தைகளை வரிசையாக அமைத்திருக்கும் அழகல்ல உண்மைக் கவிதைகள். மனதில் உணர்ச்சியால், இறையருளால் வெகுமதியாக எழுந்த எண்ணங்களின் சீரான கோர்வையாக, குறிப்பாயும், அறியமுடியாத புதிரானதாகவும் இருக்கின்ற கடவுளை, அவரது அருளால் கிடைத்த வாக்காகிய வரத்தால் அமைத்து, வாழ்க்கைக்கு விதையாயும் வளர்க்கின்ற செழிப்பாயும் அவரை வருணித்துக் காட்டுவதே (கவிதை). அதனை எழுத வைத்த இறைவனது கைகளை, அதனால் விளைந்த அருள் அர்த்த நுணுக்கங்களை (உணர்ந்து படிப்போர்கள் மட்டுமே) உணருவார்கள்.
--------------

so, all poets here, keep coming with your fantastic works....

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

Belated Republic Day wishes to everyone.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

msm wrote:
அறுசீர் விருத்தம் -ன்ன உடனேயே கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல் ஞாபகம் வருது:

வெய்யிற் கேற்ற நிழலுண்டு
...வீசும் தென்றல் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு
...கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
...தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வனமன்றி
...வாழும் சொர்க்கம் வேறுண்டா?

இது திரைப்படப் பாடலாகக் கூட வந்த ஞாபகம்...
Here it is for your listening pleasure:
http://thiraipaadal.com/tpplayer.asp?sn ... 27&lang=ta
movie: Kalvanin Kadhali
Year: 1955
Singers: Gantasala, P.Banumathi

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Thanks for that lovely melody...

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

OK, time for some down to earth themes such as love and the pain of separation...usually in classical 'akattinai' poetry, it is the heroine/ talaivi who pines for her lover who has gone away. Here it is the opposite: a lovelorn talaivan who is not shy to give vent to his sadness in verse, after his lady-love walks away from him.

பிரிவாற்றாமை

பழகுமுந்தன் மொழியழகுன் விழியெழுது கவியழகு
தழுவுமுந்தன் இதமழகுன் இதழ்பொழியும் சுவையழகு
வழுவிநீயுன் வழிசெல்ல ஒழிவின்றி விழியிரண்டும்
பொழியுநீரது முழுதும் வடியும்பொழு தெப்பொழுதோ?

அகமகிழ உனைச்சேர்ந்து முகமதனில் முழுமதியம்
திகழுமென உனைவியந்து தினம்தினமுன் தரிசனமும்
நிகழவொரு வழிசெய்து பழகினவும் பலபொழுது
பகல்க(ண)னவு தனைப்போலும் பறந்தனவே இனிவருமோ?

எனதுயிரும் உனதுடைமை எனக்கேது இனிதனிமை
அனவரதம் துணையுண்டு அவளுக்கினி நானுண்டு
நினைவிருக்கும் பொழுதெல்லாம் இணைந்திருக்கும் கரமிரண்டு
எனவிருந்த எனைநீங்கி என்னவளும் சென்றனளே
Last edited by sridhar_ranga on 29 Jan 2012, 17:21, edited 3 times in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff ( in tamil script )

Post by cmlover »

Nice..
must be
பகல்கனவு
Try to compose Megha dUtam inTamil...

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script )

Post by sridhar_ranga »

Thanks CML fixed that கனவு

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff ( in tamil script )

Post by sridhar_ranga »

Indian Cricket Team

சிட்டினியில் மெல்போர்னில் பேர்த்தில் அடிலெயிடில்
சட்டினியும் சாம்பாரும் சாப்பிட்டு -- வெட்டியர்கள்
மட்டையால் ஆடாமல் மானங்கெட் டிந்தியர்க்குப்
பட்டைநா மம்போட்ட னர்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff ( in tamil script )

Post by cmlover »

பலே பலே

இட்டிலியும் சட்டினியும் இனிதாக உண்போர்க்கு
மட்டயடி ஏதுக்கடி - குதம்பாய்
மானம்தான் போகுமடி

ஆட்டுக்கறி மாட்டுக்கறி அடிக்கடி உண்போர்க்கு
அதுவேதான் சொந்தமடி - குதம்பாய்
ஆசையை விடுவோமடி

Post Reply