mangalathai kelungal

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

mangalathai kelungal

Post by venkatakailasam »

Image

வம்பளக்கும் மங்கையரே
கோடி வீட்டு மங்களத்தை கேளுங்கள்
நடப்பு நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள் ..
இதோ அவளே வராள்..

வாடி மங்களா..கத்திரி வெயில் எப்படி இருக்கு...
ஒ அதுவா ..மத்த ஊர்களை விட இங்கே கம்மி மாமி நுறு தாண்டலை...

ஏண்டி தேர் விபத்து நடந்ததாமே ..
ஆமாம் மாமி..ஐந்து ஊரில் நடந்ததாம் இந்த வருஷம் ..
நெறைய பேர் இறந்து போனா..
ஏண்டி தெய்வ குற்றமா ..
இருக்கும் மாமி...கெட்டவா பெருகி விட்டா..

மங்களா காய் கரி விலை ஜாஸ்தியாய் விட்டதா
வேலை செய்பவள் சொன்னாள்..
ஆமாம்..பீன்ஸ் எழுபது காரட் முப்பது ..அப்பா சொன்னார் ..

நீ கிரிகெட் பாக்கறயா..நம் ஊரு நிலைமை ..
ஆமாம் போங்கோ இப்படி விளையாடினா எப்படி..சேர்ந்தாபோலே
ஐந்து ஆட்டம் தோத்தா...

இன்னி செய்தி தெரியுமா ..ஐஷு இனிமேல் நடிக்க போவது இல்லையாம் ..
ஏண்டி...கொஞ்சம் உடம்பு பெருதுடதாம் ..

மாமி ..சுப்ரமணியபுரம் படம் பார்தேளோ..
அதுலே கண்கள் இருந்தால் பாட்ட கேட்டேளா..
மாமி அது என்ன ராகம் தெரியுமா ..ரீதிகௌலா..

நேத்து தஞ்சாவூர் கல்யாணராமன் பாட்டை கேட்டேன் மாமி...
தோடி ராகம் தானம் பல்லவி ..கனக சபாபதி திருநடனம்...
உடம்பே பூரிச்சு போச்சு ..

நானும் போன வாரம் மதுரை சேஷ கோபாலன் பாடிய
சத்ய நாராயணம் உபாஸ்மாஹே ..சிவ பந்துவரளி ..
ஒரு மணி நேர கச்சேரி கேட்டேன்..

ஏண்டி ..
மாமி கொஞ்சம் வேலை இருக்கு..நான் வரேன் ..



.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

என்ன மங்களம் இன்னிக்கு சீகிரமாவே வந்துட்டே ..
ஆமாம்...

கொலவெறி டி பாட்டு கேட்டு இருக்கேளா..உலகம் பூராவும் ப்ரிசிதி ஆச்சே ...
அது நாயகன் படத்திலே இளையராஜா மெட்டு போட்டதாம்..அதை காபி அடிச்சான்னு பேசிக்கிறா ..
சேரி அது எப்படியோ போகட்டும் ..

பார்த்தசாரதி பெருமாள் ஏல பாட்டு நு கேட்டு இருக்கேளா ..
அதை யார் கட்டினான்னு தெரியலை..
தி எஸ் ராமானுஜ அயன்கார் பழைய காலத்துலே பதிபச்சி இருக்கார் ...
அதுலே ரொம்ப சுவாரஸ்யமான செய்திகள் எல்லாம் இருக்காம்..
வித விதமான அரிசி வகைகள் பருப்பு வகைகள் எல்லாம் வருதாம்..கேளுங்கோ ..
பால் வடியும் சம்பா
கோடி சம்பா
கும்கும சம்பா..
கொத்து முத்து சம்பா ,
குட மல்லி சம்பா
அனுமத்த சம்பா
கொடுகு சம்பா
மிளகு கற்பூர சம்பா
கன்னி அரிசி
கருப்பு நல் அரிசி
சடை சம்பா...
போருமா...

பார்த்தசாரதி சுவாமிக்கும் பாரியாள் வேதவல்லி தாயாருக்கும்
காணிக்கையாக கப்பலில் வந்து இறங்கிய வித விதமான மஞ்சள் வகைகள்
மருந்து வகைகள் துணி வகைகள் என்று பலவும் விவரமாக இருக்காம்...
அதில் வரும் சித்தர்கள் பாட்டு போல ஒரு பாட்டு...
நமசிவாயம் கொண்டு நந்கூரம் பாய்ச்சி
நாலு விதத்தில் பீரங்கி ஏற்றி அஷ்ட்ட்ராஷறதிலே காற்றுகள் எல்லாம் பாய
கப்பல்
வந்து சேர்ந்தது அம்மா !
அந்த புத்தகம் கிடைத்தால் வாங்கி படிக்கணும் ..


ஒரு துயர சம்பவம் ..தழைய தழைய நைடியுடன் குழந்தயையும்
எடுத்துக்கொண்டு வரும் பொழுது தடிக்கி விட்டு விழுந்து குழந்தயை சாக
கொடுத்தாள்....பாவம்!!

கம்ப ராமாயண பாட்டு....அண்ணலும் நோக்கினான்...
மதுரை சேஷ கோபாலன் பாடியது சமீபத்துலே கேட்டேன் ..என்ன இனிமை !!!

ரொம்ப நாளா லக்ஷ்மி கல்யாணத்தில் வரும் ராமன் எத்தனை ராமனடி என்னராகம்
என்று தெரியாமல் இருந்தேன் ..அதில் சுபபந்துவராளி சாயல் நன்றாகவே தெரிந்தது ..

நேற்று கிளீவ்லாந்து ஓஹியோ திருவையாறு போட்டோ பார்த்தேன்...நிறைய தெரிந்தமுகம்..
ஆனா பலமுகங்கள் நம்ம திருவையாற்றிலே தெரியவில்லை ..

மங்களா கோவிலுக்கு வரையா..
இல்லே நான் அப்புறமா போறேன் ....

in English..
enna mangalam..innikku seekiramave vanthute..
aamam…
Kolaveridi pattu kettuirkkeloliyo..ulagam puravum prsisidhi ache.. athu nayakan padathil illaraja than tune seitharam..atha kapi attichirukkanu pesikkira..adhu epadio pogattum..

Parthasarathi perumal ela pattu nu kttu irukkelo..
adhai yar kattina nu teriyalai..
ts ramanuja iyengar pazaya kalathule padhupichi irukkar pola irrukku..adhula rombha swarasyamana seithigal ellam irukkam..
vidha vidamana arisi vagaigal paruppu vagaigal ellam varutham….
Kelunko..
palvadium sambha,
kodi samba,
kukuma samba,
kothu muthu samba,
kudamalli samba,
anumantha samba,
kaduku samba,
milagu karpura samba,
kanniarisi,
karuppu nallarisi,
sadai sambha…poruma..
Partha sarathiswamikkum pariyal vedavalli thayarukkum kannikaiyaga kappalil vandu irangiya vividamana manjal vagaigal,marunthu vagaigal,thuni vagaigal, endru palavum vivarikka pattu irukkiratham..
Adhil varum sidharkal pattu pola oru pattu..
‘ namasivayam kondu nanguram paichi
Nalu vedatil birangi atrie ashtrashrathile katrugalum paya kappal vandu sernththiya….
Antha puthagam kidaithal vangi padikkanumm..

Oru thuyara sambhavam innikku.. thalaya nity udan kulathayai thukkindu vandha oruthi nitti thadikki kele vilunthu kazuntai madu ponatham..pavam..

Kabha Ramayana padal ondru annalum nokinan Madurai seshagopalan padiyadhu ..sameebathule ketten..avar padinal ..appadi oru inimai..mudithal neengalum kelungo..
Ovaru ragathileyum irrukkum sila sila cinimapattu vivaram chandrakantha.com thalathile parungo…
Rumba nala laksmi kalyanam cinimavil varum raman ethanai ramanadi pattu enna ragam nu thriyavillai.. .nethu marupadiyum ketten.. suba panthuvarali sayal rombave thrinthathu..
Endi mangal..suba panthuvaralikkum siva panthuvaralikkum enna vithiyasam…
Subha panthuvarali 45 vathu melakartha.. idhaye muthuswami dikshadar siva panthuvarali nu sollara..
Rombha naizhi ayututhu ….nan varen…
Last edited by venkatakailasam on 11 May 2012, 20:08, edited 1 time in total.

arasi
Posts: 16794
Joined: 22 Jun 2006, 09:30

Re: mangalathai kelungal

Post by arasi »

Very entertaining--like old tiNNaip pEchu!
I missed it because it was hiding from me!
More will read it--I mean, the regulars, if it's posted in the 'Multi-faceted Rasikas' thread. What do others think?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

arasiji..

I would like it to be as it is..those who are interested will always read ..irrespective of the place..

thanks for your interest..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

மங்களா நேத்து நீ சொன்னது மனசுக்குள்ளே நினைவாகவே இருந்தது
நம்ம திருவையருலே பல முகங்களை பார்க்கவில்லை என்று நீ சொல்லியது ...
என்ன தான் எத்தனை ஊர்களில் உற்சவம் நடந்தாலும் ..
சங்கீத முமூர்திகள் பிறந்த ஊரில் காவேரி நதிகரயில்..
தியாகராஜர் சமாதியில் உட்கார்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை படுவது போல் அமையுமா ?
அது அவளோட சௌகரியம் என்று விட்டு விட வேண்டியது தான் ..
என்ன நான் சொல்லறது ..
ஆமாம் ... ஆனா ஒன்று..பக்தி ஒன்று தவிர வேறு ஒரு சிந்தனையும் கூடாது..
சரியாய் சொன்னாய்..

வீணை காயத்ரி வெளி நாட்டுக்கு எல்லாம் போவது இல்லையா ..
எனக்கும் தெரியலை ..
காயத்ரி வீணையில் விஷ்ணு சஹஸ்ர நாமம் வாசிச்சு இருக்காளே
கேட்டு இருக்கேளா?
அது எப்படி கேட்காமே ...சாத்வீகமான காயத்ரியின் தெய்வீக மணம் நிறைந்த வாசிப்பை..
பெரியவளிடம் வாசித்து சந்தன கிரீடம் பெற்றவளாசே..
அவளோட சரசிருகா ..கேட்க சலிக்காத வாசிப்பு..
வறட்டு கௌரவம் பார்க்கும் உலகில் இவ்வளவு சாத்விகமான காயத்ரி..

வீணாஜி யோட கச்சேரி பதிமூன்றாம் தேதி காலை ஒன்பது மணிக்கு கேளுங்கோ ..
இதை எழுதி கொள்ளுங்கோ ... http://www.mudhra.org/டிவி...

நீங்க வீணா பாலசந்தர் பற்றி விக்ரம் சம்பத் எழுதிய புத்தகத்தை படியிங்கோ ..
அவரை பற்றி நிறைய செய்திகள் சொல்லி இருக்கார்..

இன்னிக்கு குருவாரம் .. சாய் பஜன் கேட்டேன்..
உஷா சேதுராமன் ,கல்யாணி சுந்தர்ராஜன் பாடியது...
என்ன ஒரு குரல் வளம்...

சின்ன குழந்தைகள் இப்போ தெய்வ பிரபந்த பாடல்களில் பாட நெறைய
உற்சாகம் காட்டு கிரர்களாம்....
கொஞ்ச நாளைக்கு முன்னால் ஆழ்வார்களும் தமிழ் இசையும் என்று பொதிகை டிவி யில்
காயத்ரி கிரிஷ் நிறைய பாசுரங்கள் பாடி இருக்காள்..நான் சிடி தரேன் ...கேளுங்கோ..
இனிமையான குரலில் காலை வேளையில் பாசுரங்கள் கேட்பது தெய்வீமாகஇருக்கு ...
என்ன ரொம்ப நேரமாச்சா....சரி..

in english..
Mangala..nethu nee sonnathu en manasule ninaiva irundhathu.. aamam
nama thiruvaiyarule pala mugangal therivillai endru….
Enna than ethanai uril urchavam kodadinalum..sangeetha mumoorthigal pirantha uril ..kaveri nadhikarayil…thyagarajar samadhiyil utkandhu pancha ratna keerthanaigal padrapolla varuma..
atho avaloda sougariyamnu vidavendiathu than..enna nan solarathu…
Sarithan mami..aana onnu..bakthi ondra thavira veru entha sinthanaium koodathu..
Sariyai sonnai..

Veena gayathri veli nattukku ellam povathu illaiya….avaa pere varuvadhu illaye…
Ennakkum thria villai….
gayathri veenayil Vishnu sahasranamam vasichu irukkale kettu iirukkla..
eppadi ketkamal irrukka mudium satveekamana gayathri theiveega manatthudan vasichi irupathai..
periavalidam vasichu santhana kreedam vanginaval aache..
avaaloda sarasiruka..ketka salikkatha vasippu….
Varttu gouravam parkkum perkalukku naduvil ivalavu satvegamana gayathri.!!!

veenaji yoda katcheri padimunam thethi kathale onbathu manikku
kelungo..idhi elithikongo.. www.mudhra.org/tv

neenga veena balachandrai pattri vikram sampat ezuthiya buthakathi
padiyungo..avarai pattri neriya seithigal thanthu irrukkirar….nan vena tharen

innikku guruvaram aache.. sai bhajan ketten..
Usha sethuramanum kalyani sounderrajanum padiyathu..enna oru inimayana kural valam iruvarukkum…

Divya prapandam chinnakulanthi kitte ippo prabalam adanjindu varatham neriya per athle kalanth kondu varalam…
Konjanalaikku munnal azwargalum appadinnu gayathri girish neraia pasurangal padi irukkal avaloda inmiyaya kuralil pasuram ketpathe
Thivegamaga irukku..
Ungalukku venumanal nan tharen cdyil pottu..
innimayana kuralil kalai velayil pasurangal ketpathu manthirku mihavum ithama irrukkirathu.....
Last edited by venkatakailasam on 11 May 2012, 20:13, edited 1 time in total.

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: mangalathai kelungal

Post by PUNARVASU »

Mangalam is very informative.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

என்ன மாமி..சாப்பிட்டாச்சா ..
ஆச்சு மங்களா ..வா..இன்னிக்கு சீகிரமாவே ஆச்சு..
மாமா செயின் வாங்க கடைக்கு போலாம்னு சொன்னா..
வெளியில் போனவவா இன்னும் வரலை..நேரம் ஆகும்னு போன் பண்ணினா..

நீங்க சமீபத்துலே நடந்த தனிஷ்க் ஸ்வர்ண சங்கீதம் நிகழ்ச்சியை பார்த்தேளா ..
பார்த்தேனே..
நல்ல பாடரவா நிறைய பேர் இருக்கா மாமி ..ஆச்சரியமாய் இருக்கு ..
சௌம்யாவும் அசோக் ரமணியும் நடத்தினா ..பிரபலங்கள் வந்து போனா ...
முதலாவதா வந்த அஸ்வத் நாராயணன் பாடின கீரவாணி ராகம் தனம் பல்லவி நன்றாகவே
இருந்தது ..பத்மா நாராயணசுவாமி கிட்ட கத்துகிராளம் ..
இரண்டாவது வந்த அபூர்வா,நளின காந்தி பாடினாள்...அனாஹிதாவோட தங்கை...
குரு...கிரண்ஜி..

இந்த வருஷம் ராம்ஜியோட பாலபிரம்மம் நிகழ்ச்சி நாளைக்கு வாணி மகாலில் நடக்குமாம் ..
எப்படி இருந்தாலும் ஜூன் மாசம் ஜெயா டிவியில் வரும்....


நீங்க கேட்டேளா..ஏப்ரல் மூணாம் தேதி கணேஷ் ..அவரோட சாஹித்யம்..ஒரே வரி பாட்டு
தியாகராஜ மனோஹரி குருகுஹ ஜனனி ஷ்யாம கிருஷ்ண சஹோதரி ...அந்த பாட்டிலே
பஞ்சரத்ன கீர்தனைகளோட ஐந்து ராக ஸ்வர மாறுதல்களையும் அவர் கையாண்ட விதம்
ரொம்பவும் நன்றாக இருந்தது என்று என் அத்தை சொன்னாள்..
உன் அத்தை திருவான்மியூர் தானே இருக்கிறாள் ..
ஆமாம் மாமி அங்கே அம்ருதபாரதிலே தான் கச்சேரி நடந்தது ..
கேக்கவே நன்நா இருக்கு.. இந்த பாட்டெல்லாம் எங்கே கிடைக்க போருது ...

அதே மாதிரி உன்னி கிருஷ்ணன் ஹம்சத் த்வனியில் பாடிய
சராமதி ராகம் தானம் பல்லவியும் சூப்பராக இருந்ததாம் ..

கோவிந்த ராவும் அவரோட குரு முசிறி அவர்களை பற்றியும் நிறைய குறிப்புகள் ..
படிங்கோ ..இதோ எழுதி வைச்சுகொங்கோ..
http://www.thehindu.com/arts/music/article3404322.ece
மாமி..ஒரு சேதி தெரியுமா ..பதினொன்று ஏப்ரல் தொளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் வருஷம் தான்
சென்னயில் ட்ராம் தனது ஒட்டத்தை நிறுத்தியது..

முதன் முதலில் இந்தியாவில் தயாரித்த படம் ஹரிச்சந்திரா
வருஷம் ஆயிரத்து தொளாயிரத்து மூன்று ..நுறு வருஷ கோலாகலம் இந்த வருஷம் தொடங்கும் ..
மாமி ..மாமா வர்றார். அப்புறம் வரேன்..

in english..

Enna mami sapittacha..
AAchu mangala..innikku seekirame ayduthu …chain vanga kadaikku pogalamnu mama sonna..veliyil ponava innum varalai neeram agum nu phone pannina..
Neenga sameebathule nadantha tanishq swrna sangeetham parthelo…raj tvle vandhathu…
Parthene..
Nalla padarava neraiya per irukka mami..aachariyama irukku..
Soumyavum asokramanium nadathina..prabalangal ellam vandu pona…
Nallaa nadathina..
Muthalathuva vandha asswat narayanan…padmanarayanaswami idam pattu kathukaralam..aswath padina keeravani ragam thanam pallavi nana irundathu..
Irandavathu vandha apoorva nalinakanthi padina..ava anakitha oda thangai..
Guru kiranji …
Indha varusham ramji in balabrhmam selection vani mahal lil nalaikku nadakka pokirthu..mudinchal pogalam..eppadiyum jayatvil adutha masam varum..

Neenga kettala thiruvanmaurle april moondram thethi ganesh ..avare kattiya oru vari pattu.. Tyagaraja Manohari, Guruguha Janani, Shyamakrishna Sahodhari…antha pattile pancharatna keerthanaikaludaya eyindhu raga swara maruthalgalai avar kaiyanda vidham rombhavum nandraga irunthathu endru solara
Athe madari unnikrishnan hamstdwani le padia saramathi rtpyum nanna irantham..
TK govindrau vum oaroda guruvum ..Musiri..avalaium pattri inge padiyengo
http://www.thehindu.com/arts/music/article3404322.ece
Oru seithi teriumaa …pathinondru april 1953 m varusham than tram vandigal chennaiyil thangal otathi niruthina…erpadum nashtathai samalikka mudiyamal…
Mudan mudalil indiyavil tharitha padam harischandra..varusham-pesadha padam –nooravathu varusha kolakalam intha vausham arambham..

Mami ..mama varrar.. appuram varen..
Last edited by venkatakailasam on 11 May 2012, 20:15, edited 1 time in total.

yadugiri_nivasa
Posts: 28
Joined: 29 May 2008, 03:41

Re: mangalathai kelungal

Post by yadugiri_nivasa »

What is this all about? Can somebody translate/explain for non-Tamilians or those who cannot read Tamil?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

I tried to give transliteration in English...
Actually, it is best suited to the language in which it is spoken.....

shobhavaradhan
Posts: 1
Joined: 11 May 2012, 20:36

Re: mangalathai kelungal

Post by shobhavaradhan »

A very innovative way of passing on music-related info. which otherwise people may not care to read about...Great!!!

arasi
Posts: 16794
Joined: 22 Jun 2006, 09:30

Re: mangalathai kelungal

Post by arasi »

You are right. As I mentioned before, this reminds us old timers of ThiNNaip pEchu, a similar causerie among neighbors gathering on a thiNNai in front of a house. We looked forward to reading it every week in Ananda VigaDan! It kept us abreast of current events in politics and in the arts.
MangaLam's monologue tinged with humor is entertaining and informative, bringing back thiNNaip pEchu to the Rasikas.org community where discussions take place on matters we can't keep count of ;)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

மாமி.. நேத்து நாய்டு வகுப்பை சேர்ந்த சிநேகாவிற்கும் பிராமண வகுப்பை
சேர்ந்த பிரசாந்திற்கும் கல்யாணம் நடந்து முடிந்தது ...அப்பா அம்மா சம்மதத்துடன் ...
அப்படியா..

இன்னிக்கு மதியம் ஒரு மணிக்கு எம் டி ராமநாதன் பாட்டை கேட்டேளா..ரேடியோவில் ..
அவர் பேரை சொன்னதும் அவர் பாடிய பாவயாமி ...ஞாபகம் வரது..எத்தனயோ பேர் பாடிஇருந்தாலும் அவரது ஒரு தனி அழுத்தம் ..சீடீ தரேன் மாமி கேளுங்கோ .....

கல்யாணராமன் பாடிய பஞ்ச மாதங்க முக என்ற மலஹரி ராக கிருதி ..தீக்க்ஷதர் எழுதியது ...
சஞ்சய் பாடிய கோவிந்தராஜன என்ற மகபௌலி ராக கிருதியும் நேத்து கேட்டேன் ..
இந்த எழுதிகோங்கோ..
http://www.youtube.com/watch?v=7c67NTvS ... lyanaraman padiyathu…
http://www.youtube.com/watch?v=lPn_46HMPPA sanjay padiathu..


மாமி.. ராக நிரோஷிட்டா பற்றி கேள்வி பட்டு இர்ககேளா..
இல்லையே மங்களம் ..
இந்த ராகத்திலே ம ப -இரண்டு ஸ்வரங்களும் இல்லை ..
இது இரண்டும் சொல்லும்போது உதடை தொடும் ..
'நிரோஷிட்டா'னா அது இல்லாமல் உதட்டை தொடாமல் பாடும் ராகம் ..
ராஜா ராஜ ராதிதே என்ற பாட்டை முத்திய பாஹவதர் கட்டி இருக்கார் ..சாமுண்டீஸ்வரி பேரிலே ...
மைசூர் மகாராஜாவுக்கு உதடு வீங்கி இருந்ததாம்... அப்போ ஆஸ்தான விதவனாக இருந்த பாஹவதர் சாமுண்டி சன்னதியில்
இந்த பாட்டை பாடியதும் அவருக்கு குணமாய் விட்டதாம்..
மதுரை டிஎன்ஸ் கட்டிய இந்த ராக தில்லான என் எஸ் ஜி பாடி இருக்கார்...
காயத்ரி கிரிஷ் ராஜா ராஜ ராதிதே பாட்டை பாடி இருக்கா...இதையும் கேளுங்கோ மாமி..
http://www.youtube.com/watch?v=E7XNTngpxmI


மாமி இன்னமும் ஒரு சூப்பர் பாட்டு..கே வீ என் பாடியது தூரன் எழுதிய ராம் சுரத் குமார் பாதம ..சாரங்கா ராகத்தில் .
http://www.youtube.com/watch?feature=pl ... gN9rie8_xU



பெண் குழந்தைகளை கர்பத்திலேயே கொல்லுவது சம்பந்தமாக
அமீர் கான் டிவி களுக்கு அளித்த பேட்டி இப்பொழுது பரவாலாக பேசபடுகிறது ..
ராஜஸ்தானில் இந்த கொடுமை அதிகமாக நடக்கிறதாம்..
வரதஷனை பெண் பிறந்தால் கொடுக்க வேண்டும்
ஆணாக இருந்தால் வருவாய் .
இந்த நிலைமை என்று மாறுமோ..??

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

என் மங்களா காத்தாலை வரலை..
ஏண்டி...கண் எல்லாம் சிவந்து இருக்கு ..
அழுதியா..என்ன ஆச்சு..
மாமி நீங்க தாரே சமீன் பர் பார்த்தேளா ..
ரெண்டு வருஷங்களுக்கு முன் வந்தது ..அமீர் கான் படம் ..
ஒ பார்த்து இருக்கேனே..என்ன மாதிரி படம்..கண் எல்லாம் ஜலம்..
ஆமாம் மாமி ..யார் கண்ணில் தான் ஜலம் வராது..
அந்த பையன் இஷான் என்னமாய் நடிக்கிறான் ...
அவன், அவன் அப்பா அம்மா அண்ணன் அமீர் எல்லாருமே நன்றாக செய்திருக்காள்..
அந்த பாட்டு இஷான் போர்டிங்க்லே பாடறது..
மேரி மா ..
மாமி அதை இன்னுரு தடவை கேளுங்கோ...
http://www.youtube.com/watch?v=anonHtYQ ... ure=fvwrel


மாமி நேத்து சொன்னேனே பெண்சிசுவை துன்புறுத்துவது பற்றி அமீர் கான்

சொல்வது பற்றி ..

சத்யமேவேஜய்தே..அப்படின்னு ஞாயறு காத்தாலேபதினொரு மணிக்கு

starplus டிவி இல் இதை பற்றி அவரோட நிகழ்ச்சி பார்க்கலாம் ..ஆன்லைனிலும்

இது வறது.. http://satyamevjayate.in/



மஹா பெரிவாகிட்டே ஒரு பண்டிதர் ஆடம்பரமா வந்தார் ..

அவரை வரவேற்ற பெரிவா என்ன என்பதை போல அவரை பார்த்தார் ..

சுவாமி.. கீதையில் ஒரு சந்தேகம் ...நிமிர்ந்து உட்கார்ந்த பெரிவா

தான் சீடர்களை கூப்பிட்டு பண்டிதருக்கு மூன்று முறை பிரதஷினம் செய்ய சொன்னார்..

ஏதும் புரியாத பண்டிதர் என்ன சுவாமி ..இதெல்லாம்...

கீதையை நான் படிக்கும் பொழுது பத்திக்கு பத்தி ஆயிரம் சந்தேகங்கள் வறது ...

உங்களுக்கு கீதையில் ஒரு சந்தேகம் தான்.. எவ்வளவு பெரிய பண்டிதர் நீங்கள்...அதான்..

பண்டிதருக்கு கூனி குறுகி போனார் ..தலை குனிவு ..

பெரியவா காலில் விழுந்து நமஸ்கரித்தார்..

மாமி பெரிவா பற்றி பேசும் பொழுது ..இன்னும் ஒரு செய்தி..

காணமல் போன சந்தானத்தை பற்றியது ..

யாரு மங்களா..

பெரிவா சதாரா என்ற ஊரில் இருந்தார் ..

நெய்வேலி மகாலிங்கம் பெரிவாளின் பரம பக்தர் ..

அவரும் அவருடைய நண்பரும் காணாமற் போன நண்பரின் மகனை

பற்றி முறையிட பெரியவாளை பார்க்க அங்கே வந்தார்கள்...நிறைய கூட்டம்..

தரிசனத்திற்கு.. உள்ளே இருந்த பெரிவா மகாலிங்கத்தை அருகில் வர அழைத்தார்..

கண்ணீர் சொரிய நண்பர் பெரிவா விடம் மகனை பற்றி கூறினார். பெரியவா தான்

மகன் கிடைக்க அருள் புரிய பிரார்த்தித்தார் ..மகனுடைய போட்டோவை பெரிவா பார்த்து ஆசிவதிதார்.

பிறகு நம்பிக்கையுடன் இருவரும் திரும்பினார்கள் ..

பல ஊர்களுக்கு சென்ற மகன் துங்கா நதியில் குளித்துக்கொண்டு இருக்கும் பொழுது அவனுள் ஊருக்கு

உடனே திரும்படி ஒரு குரல் கேட்டது ..மகனும் திரும்பி விட்டான்..

அந்த மகன் தான் நெய்வேலி சந்தான கோபாலன் ..

யாருடி சொன்னா மங்களா

பெரிவா பற்றி செய்திகள் நெறைய நெட்டில் இருக்கு மாமி..

ஒரு பாட்டு நினைவுக்கு வறது மாமி..

கணேஷ் அவர்கள் பாடியது..

கருணை பொழியும் கண்கள் ..

இதுவும் தூரனுடைய பாட்டு..

http://www.youtube.com/watch?v=IngQ6VeOy5E



மாமி.. ரேவதி ராகத்தில் தஞ்சாயூர்சங்கர ஐயர்கட்டியது ..

டி கே ஜெயராமன் பாடிய..

மகாதேவ சிவ சம்போ ..

http://www.youtube.com/watch?v=WERTGZR7 ... e=ப்ழ்ச்ப்

மங்களா உன்னேட பேசினால் நேரம் போவதே தெரிவது இல்லை ....

maduraimini
Posts: 477
Joined: 22 Sep 2009, 02:55

Re: mangalathai kelungal

Post by maduraimini »

Very interesting. Just as Arasi said it is like 'Tinnai Pecchu', bringing news, entertainment etc. Keep it up. We like to read this witty but newsy thing. Thanks.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

என்ன மாமி ரெண்டு நாளா காணல..
என் மச்சினர் பையன் நிச்சயதாரத்திற்கு
காஞ்சிபுரம் போனேன் ..
பெருமள சேவிச்சேன்..

மாமி.. சகானா சுருதி அப்படின்னு ரெட்டைர்களோட
அரங்கேற்ற கச்சேரி சமீபத்லே நடந்ததாம் ..
சுதா, ஜெயஸ்ரீ ,எ எஸ் முரளி ...இவகிட்டே பாட்டு கத்துண்டா..
ரொம்ப நன்னா பாடறாநு சொல்லரா..

ஆனா எங்கே அரங்கேற்றம் நடந்தது
எப்போ நடந்ததுன்னு தெரியல்லை..
பி எஸ் என் தலைமியல நடந்ததாம் ..வயோலின் சுப்ரமணியம் ஜானகி ராமன் ..
எல்லாம் வந்தார்களாம்...


மாமி..ஒரு பழைய செய்தி சொல்லபோறேன் ..
என்னடி..மங்களா..

கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் காதலித்தது தான் தெரியுமே எல்லாருக்கும் ..
ஆமாம் ....

ஒரு அல்ப விஷயத்துக்காக அவர்கள் பிரிந்தார்களாம்..
கிருஷ்ண லீலா நாடகம் நடந்து கொண்டு இருந்ததாம்
அதை பார்க்க போக வேண்டாம் என்று கிட்டப்பா கூற
பிடிவாதமாய் சுந்தராம்பா சென்றளாம்..
அதனால் கோபித்து கொண்டு பிரிந்து போன கிட்டப்பா
எவ்ளவோ எடுத்து சொல்லியும் திரும்பி
வரவே இல்லையாம்
கண்ணும் காதும் வைத்து செய்திகள் வர
அவர்களிடையே …இடைவெளி அதிகமானதாம் ...

ஆனால் பாவம் ..வயற்று வலியால் அவரது இருபத்து ஏழாம்
வயதில் கிட்டப்பா இறந்து விட்டார் ..
அப்போது சுந்தராம்பாளுக்கு வயது இருபத்து ஐந்து...

அன்று மாட்டிகொண்டது தான் வெண்ணீறும் வெள்ளை உடையும் துளசிமாலையும் ..

நடிக்கவே மாட்டேன் என்று இருந்த அவர்களை
தீரர் சத்யமூர்த்தி தான் நந்தனார் சரித்திரத்தில் நடிக்க வைத்தாராம்...

மறுபதற்காக அதிகமாக கூறிய ஒரு லக்ஷம் ரூபாயும் கொடுத்து நடிக்க வைத்தராம் ஆசன் தாஸ் என்ற தயாரிப்பாளர் ..

நந்தனாராக அவர்களும் அந்தணராக மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரும்
நடித்தார்களாம் ....

மாமி ..
கண்ணன்னிடம் எடுத்து சொல்லடி என்ற அம்புஜம் கிருஷ்ணா பாட்டை
எம் எஸ் பாடி இருக்கார்கள் ..
இங்கே கேளுங்கோ ..
http://www.youtube.com/watch?v=3czKNDh5Q8k

அதே மாதரி ..வந்தேஹம் சாரதம் அப்படின்னு ஒரு பாட்டு
சுவாமி தயானந்த சரஸ்வதி செய்தது ...
யமுனா கல்யாணி ராகத்தில் மகாராஜபுரம் சந்தானம் பாடியது .இங்கே ...
http://www.youtube.com/watch?v=guvFZ6oASTM

மாமி .. உங்களுக்கு டைம் இருந்தா இதும் கேளுங்கோ ..
.வாலாசி வாசி ..நவ ராக வர்ணம் ..
இதை செய்தது பட்னம் சுப்ரமணிய ஐயர் ..அப்படின்னு சொல்லரா
மத்தவா கோட்டவாசல் வெங்கட்ராம ஐயர்நு சொல்லரா ..தெரியல்லை .
கல்யாணராமன் பாடி இருக்கார் ...இங்கே ..
http://www.youtube.com/watch?v=b1K6IHg8auo

ஆமாம் ..நான் பாட்டு சொல்லிக்கும் போது..மோகன்திலே வர வீணா ..அப்புறம் ..
சங்கராபரண வர்ணம் சாமி நின்னு கோரி .. இது எல்லாம் வரிசையா கத்துண்டேன் ..
எங்காத்து மாமாவுக்கு பாட்டெலாம் அவளவாக பரிச்சியமில்லை ..
அதனால பாடரதியே விட்டுட்டேன் ....
நீ சொன்ன பாட்டெலாம் அவர் இல்லாத சமயம் தான் கேட்பேன்
..
நான் பாட்டு கேட்டால் அவர் உடனே டிவியை பெரிசா வச்சுடுவார் …

என்னடி சிரிக்கிறே ...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

மாமி ..
வாடி மங்களா..அம்மாவுக்கு உடம்பு தேவலையா
....பரவாஇல்லை மாமி ..ஜுரம் இல்லை …வெயில் தாக்கம்ம்
சமயபுரம் அம்மனை குள்ர்விக்க அம்மனை சுற்றி
அகழி போல் வெட்டி குளிர்ந்த நீர் நிரப்பி வைத்திருக்கார்கள்..
வெயில் தாக்கம் குறையணும்...

மாமி இன்னிக்கு சனி கிழமை இல்லையா …
காத்தாலே தீக்ஷதரின் ..திவாகரதனுஜம் பாட்டை கேட்டேன்
எப்பவும் செமென்குடி பாடியதை கேட்டு பழகிய என்னக்கு ..
ஒரு மாறுதலுக்காக எஸ் ராஜம் பாடியது கிடைத்தது
இங்கே கேளுங்கள் ….
http://www.youtube.com/watch?v=Fix12ooRXMc
எதுகுல காம்போதி ராகம்
எந்த ராஜம் …
அவர் நடிப்பு ,பாட்டு , பெயிண்ட்ங் போல எல்லா வற்றிலும்
சிறந்து இருந்தார் ...
வீணை பாலச்சந்தருக்கு மூத்தவர்...
பாபநாசம் சிவன் கிட்ட பாட்டு கத்துண்டார் ..
முக்கியமாக...மேளகர்த்தா ராக
சக்கரங்களை பெயிண்ட்ங் செய்து பிரபலமானார் ..
மாமி அவரோட இந்த பெயிண்ட்ங் இங்கே பாருங்கள் ...
http://www.carnaticindia.com/images/dow ... et_new.pdf

மாமி நாளைக்கு எம் டி ராமநாதனுடைய பிறந்த நாள் ...
அவரோட நினைவாக நாளைக்கு ஹம்சத்வனியில்
ஆறு மணிக்கு டி வீ ஜி பாடராரம் …

அவரோட இந்த பட்ட கேளுங்கோ மாமி இன்னிக்கி ..மாருதி பற்றி ..சனிகிழமை ஸ்பெஷல்ஆக..
பாஹி ராம துதா -வசந்தா
-வராளி -ராகத்தில் …
http://www.youtube.com/watch?v=wrzeKQ9YuxA


கத்ரிகோபாலும் கன்னியாகுமரியும் பார்த்தசுவாமி கோவிலிலே

சமீபத்திலே கச்சேரி செய்தாளாம் ..ரொம்ப நன்னா நடந்தது நு சொல்லரா ..

கல்யாண வசந்தம் பாட்டு நடலோலுடை ரொம்பவும் சிறப்பாக அமைத்ததாம் ..




தம்புரா வித்வான் எஸ் வெங்கட்ராமனுக்கு ஹம்சத்வனி அவார்ட் கொடுத்து கௌரவிததராம் போன வாரம் ..


கோலாகலம் ராகத்திலே என்க்கு தெரிந்த ஒரே பாட்டு தியாகராஜரின் மடிலோனா ...

வைகல் -ஞானஸ்கந்தன் பாடி இருக்கார் ...செம்மனகுடி இடம் பாட்டு கத்துண்டாரம்..

இவரிடம் பாட்டு கத்துண்டவா வீ சங்கர நாராயணன் , காயத்ரி கிரிஷ், சிக்கில் குருசரண் ...
எல்லாமே பிரபலமானவர்கள் தான்...
..அபிஷேக் கிருஷ்ணா ..குழந்தை ஆர்டிஸ்ட்
இவர் கிட்ட தான் மூன்று வையசிலேர்ந்து கத்துண்டானம்..
இந்த பாட்டை கேளுங்கோ ...…
http://www.youtube.com/watch?v=5tl5HKdXgsU
மாமா தான் ஊரில் இல்லையே ..எல்லாதயும் கேளுங்கோ ..

மங்களா.. கிண்டலாடி

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

மாமி ..நாலு நாளா நான் ஸ்ரீரங்கம் போயிருந்தேன் ...

ரங்கன் தரிசனம் நன்றாக இருந்தது ...

மாமி …. இது தெரியுமா உங்களுக்கு

திருவையாறில் இருப்பது போல இங்கும் ஒரு கோவில் இருக்கு ..தியாகராஜருக்கு ...
அங்கே தியாகராஜர் கருவரைலேயே ராமர் சீதா லக்ஷ்மணருடன் இருக்கார் ..
கைகளை கூப்பிய நிலையில் மாருதி …கூடவே பக்தர் கொடுத்த பஞ்சலோக ராமர்சிலையும் …ரொம்பவும்
அழகாக இருக்கு .. பகுள பஞ்சமி ஆராதனை ..திருவையாறு போலவே நடக்கிறது ...

கிருஷ்னனுரும் ஆஞ்சிநேயரும் …ஒற்றுமைகள் …தெர்யுமா மாமி …இருவரும் மலையை தூக்கினார்கள் ...
இருவரும் தூது சென்றார்கள் ...
மாருதிக்கு பிடித்தது ராம நாம சங்கீர்தினம் ..கிருஷ்ணனுக்கு பிடித்தது
கோவிந்த நாம சங்கீர்த்தனம் …..

மகாராஜபுரம் சந்தானம் பாடிய ,தியாகராஜரின் நா ஜீவாதார என்ற -பிலஹரி ராக பாட்டை கேட்டேன் மாமி ..
ஆமாம் மங்களா..ரொம்பநாளா கேட்கணும் என்று ஆசை ...
இங்கே கேளுங்கோ மாமி ….
http://www.youtube.com/watch?v=YPZEDeEVauk
இதே பாட்டை லால்குடியும் நிறைய சங்கதிகளுடன் செய்திருக்காராம் ..கேட்கணும் ...

தியாகராஜர் இந்த பாட்டை பாடியதும் இறந்தவர் ஒருவருக்கு உயிர் திரும்பி வந்ததாம் …
இதற்கு காரணம் பிலஹரி ராகத்திற்கு உயிர் கொடுக்கும் திறன் உள்ளதாம் …நீளமாய் ஒலிக்கும்
‘நா ' ‘ஜி ’ ‘வா ’ என்ற வார்த்தைகளுக்கும் இந்த மாதிரியே உய்விக்கும் திறன் உள்ளதாம் ........
எங்கே படித்தேன் என்று நினைவே இல்லை …


மாமி ..தீக்ஷதரின் கமலாம்பா நவ வாரணத்தை போல அவருடைய ‘அபயாம்பிகா விபுக்தி யும் ...
அம்பாளை பற்றி பாடிய பாடல்கள் …
அதில் ஒரு பாட்டு ‘ஆர்யம் அபாயம்பம் ‘-பைரவி ராகத்தில் …கல்பகம் சுவாமிநாதன் செய்து இருக்கிறார்கள் ...
http://www.youtube.com/watch?v=canPnL_sSTA..
மற்ற பாடல்கள் இங்கே ..
ஸ்ரீ அபாயம்ப விபுக்தி கீர்த்தனை
Website link: http://www.mediafire.com/folder/8o20h7u7ov3te (group of files)



வாட்டி வதக்கிய கத்திரி இன்றுடன் முடிகிறது ….ஆனால் தாக்கம் குறையுமா ..



மாமி …லலிதா தேவியின் புதல்வி ..அவளை விட்டு ப்ரியாதிருபவள் ...
கேட்ட வரங்களை தருபவள் ...பாலாம்பிகை ..அவளை பற்றி தீக்ஷதர் செய்த பாடல் களை
அம்புஜம் வேதாந்தம் பாடி இருக்கிறார்கள் …
பாலம்பிகே -பாஹி--மனோரஞ்சனி ராகத்தில் .. இங்கே கேளுங்கள் …
http://www.youtube.com/watch?v=nTDIIgREs1g


மாமி.. நாளைக்கு எங்காவது போறேளா ..
இல்லை ..மங்களா ..
சரி மாமி ..

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

Image

Birth day to Muruga..to day...vaikasi visagam...

வா மங்களா ..இன்னிக்கு ..வைகாசி விசாகம் ..முருகன் பிறந்த நாள் ..
ஆமாம் மாமி .. இந்த வருஷம் வரும் வைகாசி விசாகம் மிகவும் சிறப்பானதாம் ..விசாக
நக்ஷ்ரதுக்கான விர்ச்சுக ராசியை ரிஷபதிலிருக்கும் சூரியனும் குருவும் பார்ப்பது மிகவும்
விசேஷமாம்..விரதம் இருப்பவர்களுக்கு நல்லதாம்..
ஸ்ரீ பாலசுப்ரமணிய -பிலஹரி ராகத்தில் ...மணக்கால் ரங்கராஜன் ..பாடிய சுவாமிமலை முருகனை பற்றி ..
தீக்ஷதர்.பாட்டை இங்கே கேளுங்கோ ..
http://www.youtube.com/watch?v=59kBDIZC-WA
இதையும் கேளுங்கோ மாமி ..
திருப்புகழ் முருகன் ....வைகாசி விசாகம் ஸ்பெஷல் ....
http://www.youtube.com/watch?v=N1E7I_CxNkI
மாமி .. அருணகிரி நாதர் திருபுகழ் பாடல் ..சுவாமி மலை …..
நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
.... நாலாறு நாலு பற்று வகையான
.. நாலாரும் ஆக மத்தின் நூலாய ஞான முத்தி
.... நாடோறு[ம்] நானு ரைத்த நெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
.... நேராக வாழ்வ தற்குன் அருள்கூர
.. நீடார் ஷடாத ரத்தின் மீதேப ராப ரத்தை
.... நீகாணெ னாவ னைச்சொல் அருள்வாயே
சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போத புத்தி
.... சீராக வேயு ரைத்த குருநாதா
.. தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
.... தீராகு காகு றத்தி மணவாளா
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
.... காவார்சு வாமி வெற்பின் முருகோனே
.. கார்போலு[ம்] மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
.... காமாரி வாமி பெற்ற பெருமாளே…

இந்த பாட்டை இங்கு …திருத்தணி சுவாமிநாதன் பாடியது
http://www.kaumaram.com/audio_k/tstp0223.html

வேலுமயிலும் என்பது மந்திரம் ..வேலை துதித்தால் தீவினை நீங்கும் ..மயிலை நினைத்தால்..பயம் நீங்கும் ..
...
மாமி ஆறுபடை வீடு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று ..ஆனால் ஏழாம் படை வீடு எது தெரியுமா ??

மருத மலை ..இங்கு வைகாசி விசாகத்தன்று நுதெட்டு குட பால் அபிஷேகம் நடக்கும் ..முருகனுக்கு ..

முருகனின் பெருமை ...

கங்கை கரயில் ஒரு முனிவரும் அவரது மகனும் இருந்தார்கள் ..

மகன் தந்தை இடம் சிறந்த கடவுள் யார் என்று கேட்க , முனிவர் முருகன் தான் சிறந்த கடவுள்

என்று கூறினார் ..அன்று முதல் சிறுவனும் முருகனிடம் அபார பக்தி கொண்டவனாய் இருந்தான் ..

ஒரு நாள் முனிவர் ஒரு யாகத்திற்கு பக்கத்துக்கு ஊருக்கு சென்றிந்தார் ...

அப்போது அந்த தேச அரசன் முனிவரை பார்க்க வந்து இருந்தான் ..வந்த காரணத்தை கூறும் படி

சிறுவன் வற்புறுத்தி கேட்க ..அரசன் தான் ஒரு மிருகத்தை வேட்டை யாடும் போது தவறுதலாக

ஒரு மனிதனையும் கொன்று விட்டதாகவும் ..அதனால் ப்ரமஹதி தோஷம் உண்டாய் இருபதாகவும்


அதை நீக்குவதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார் ..

முனிவரின் மகன் அது மிகவும் சுலபம் என்று கூறினான் ..

கங்கை கரையில் சூரியனை நோக்கி நின்று கொண்டு மூன்று முறை முருகா என்று கூறி நீரை தெளித்தால் தோஷம் நீங்கும் என்று கூறினான் ..

மன்னனும் அவ்வாறே செய்ய தோஷமும் நீங்கியது ..

திரும்பி வந்த முனிவரிடம் நடந்ததை கூறியதும் ..அவருக்கு மகன் மேல் மிகுந்த கோபம்
உண்டாயிற்று ..அவர் சிறுவனிடம் ..உனக்கு முருக மந்திரத்தின் பெருமை தெரியவில்லை ..முருகன் நாமத்தை
ஒரு முறை கூறினாலே ஆயிரம் தோஷம் நீங்கும் ..நீ ஏன் மூன்று முறை முருகன் நாமத்தை கூறும்படி கூறினாய் என்று கூறி .....அடுத்த பிறவியில் நீ ஒரு வேடனாய் பிறப்பாய் ..முருகனின் பேராகிய
குஹன் என்னும் பேரை கொண்டு ஒரு படகோட்டியாய் இருப்பாய் ..ஸ்ரீ ராமர் உனக்கு அருள் பாலிக்கும்

போது …உனக்கு முக்தி கிடைக்கும் என்று சாபமிட்டார் ...
இது தான் முருகனின் பெருமை .....
மாமி ..கே பி எஸ் பாடிய முருகன் பாடல்கள் ரொம்பவும் ப்ரிசிதி ஆனவை ..
..ஸ்லோகா ஸ்ரீ சுப்ரமண்யம் .. http://www.youtube.com/watch?v=dvDInrKPn60
அனயம்பட்டி ஆதிசேஷஐயர்- செய்த தனித்திருந்து வாழும் தவ மணியே

http://www.youtube.com/watch?v=X4tyBaGDt5w

ஒரு ஐயப்பா பாட்டு…...
http://www.youtube.com/watch?v=6x8vOThonWQ

ஆடிகொண்டார் ….

http://www.youtube.com/watch?v=bs9SjoVaRHI

முருகன் உடைய அருள் உனக்கு பூராவும் உண்டு மங்களா ...
நமக்கு என்று சொல்லுங்கோ மாமி .....

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

Image Image

வா மங்களா...
மாமி..இன்னிக்கு சங்கடஹர சதுர்த்தி..
எம் எஸ் பாடிய விநாயகர் கவசம்..கேளுங்கோ..
இன்னிக்கு கணபதிக்கு பூஜை பண்ணினா சங்கடங்கள்
எல்லாம் தீருமாம்..நமக்கு தான் தலைக்கு மேல இருக்கே..தீரணும்..
ஏன் மாமி சலிச்சுகிரேள்..
ஆமாம்..எல்லாத்லெயும் கொஞ்சம் சருக்கலாக இருக்கு..
கொஞ்சம் மேலேயும் கீழெயும் தான் இருக்கும்..அது தான் வாழ்க்கை..
நான் உங்களுக்கு சொல்லணுமா..எல்லாம் சரியாய் போகும்..சாயிங்காலம்
விநாயகர் கோவிலுக்கு போகலாம்...

மாமி..பாம்பன் ஸ்வாமிகளை பற்றி கேள்வி பட்டு இருக்கேளா...
திருவான்மயூரில் அவர் சமாதி இருக்கு...
ஷண்முக கவசம்..பகை கடிதல்..என பல பாடல்களை செய்து இருக்கார்..
அவருக்கு திருவான்மியருரில் குருபூஜை நடக்கிறது..அவர் ஸமாதியில்.
இன்னைக்கு குரு வாரம்..கோவிலுக்கு போய்விட்டு அப்படியே அங்கேயும்
சாய்காலம் போகலாம்..
அவரை பற்றி நிறைய செய்திகள்..
http://murugan.org/bhaktas/pamban_swami.htm

அவர் செய்த பாடல்களை இங்கே கேட்கலாம்..
http://pambanswamigal.net/kan-ket-thirupugal.html

மாமி..பார்தசாரதி சபா ஆதரவில் பார்தசாரதி கோவிலில்
போன வாரம் மூன்று கச்சேரிகள் வஸந்த உற்சவத்தை முன்னிட்டு நடந்தது ..
சிக்கில் குருசரண்,மாம்பலம் சகோதரிகள்,மும்பாய் சகோதரிகள்..
மூன்றுமே ரொம்பவும் நன்றாக இருந்ததாம்..
சிக்கில், நாட்டகுறிஞ்சி வர்ணம், சுத்ததன்யாசியில் கானமூர்தே, யமுந்கல்யாணியில்
நந்தகோபாலா...எல்லாமே நன்றாக இருந்ததாம்..பாமாமாமி சொன்னா...
சித்ரா-விஜயலஷ்மி சகோதரிகளும்..கானமூர்தேயுடன் ஆரம்பித்து காம்போதியில்
ஏலரா கிருஷ்ணா..விஸ்தாரமாக பாடினார்களாம்..
அப்புறம் பாடிய மும்பாய் சகோதரிகளின் பாட்டும் மிகவும் நன்றாக இருந்ததாம்..
பாமா மாமி எப்பொதும் போய்விட்டு வந்து தான் சொல்லுவா..
அந்த மாமிக்கு அதிலெ ஒரு திருப்தி..
பரவாயில்லை விடு மங்களா..
சாயங்காலம் சீக்கிரமா வந்துடு..
சரி..

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: mangalathai kelungal

Post by thanjavooran »

மங்களம் மாமி எல்லாமே சரிதான். இப்படி கோவில், கச்சேரி ன்னு தினப்படிக்கு
போயிண்டே இருந்தா குடும்பத்தை யார் பாத்துக்குவான்னு எங்க ஆத்துக்காரர் கேட்கிறாரே என்னபதில் சொல்லறது ? அதுக்கும் எதாவது சமாளிக்கறதுக்கு சொல்லி
கொடுங்கோ. புண்ணியமா போகும்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

ஏங்க..நீங்க சந்தோஷ படாமல் கோபபடரேளே..
நாங்க என்ன ஒத்தர் ஒத்தர் மாதிரி க்ளப்புன்னும்
சினிமானுமா..இல்ல பணத்தை செலெவழிசிண்டு
ஷாப்பிங் பண்ணரோமா..ராமா கிருஷ்ணா பாட்டையும்
கதையும் கேட்டுண்டு இருக்கோம்..
உங்க மாதரி வெட்டியா டிவி சீரயல் பாக்காம.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

வாடி மங்களா..உன்னை பார்காமல் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது..
எப்பொ வந்தாய் சிதம்பரத்திலே இருந்து...காத்தாலே தான் மாமி...
அப்பாவோட தங்கை பிள்ளை வீடு வாங்கி கிரகபிரவேசம் நடந்தது..
அப்படியே நடராஜர் தரிசனமும் செய்து வந்தேன்...
மாமி கோபாலகிருஷ்ண பாரதி ...தியாகராஜர் காலத்தில் இருந்தார்..
நிறைய நடராஜரை பற்றி பாட்டுகள் செய்து இருக்கார்..
அது தெரியும்..சமீபத்துலே ஏதாவது அவரோட பாட்டைகேட்டையா...
ஆமாம்..வேதவல்லியோட பாட்டு…. ஆடிய பாதத்தை காண் என்ற ஆரபி ராக பாட்டு….

http://www.youtube.com/watch?v=Kodg9plLb94

அர்ஜுனனுக்கு கண்ணன் கீதயை உபதேசித்தார் என்று தெரியும்..
அந்த சமயத்தில் அபிமன்யு இறக்க அர்ஜுனன் கண்ணீர் விட்டு அழுதான்..
அர்ஜுனன் தோளில் இரண்டு சொட்டு கண்ணீர் விழுந்தது..
நிமிர்ந்து பார்த்த பார்த்திபன் ஏன் கண்ணா நீ அழுகிறாய்..இறந்தது என் மகன்...
ஆமாம்...வாழ்வின் நிலயாமை பற்றி இத்தனை நேரம்
உனக்கு உபதேசித்தேனே அதை நினைத்து அழுகிறேன்...

மங்களா..சித்தர்களில்..தேரையர் என்று ஒருவர்..அகத்தியருடைய சீடர்..
கேள்வி பட்டு இருக்கையா....
சொல்லுங்கோ மாமி...
காசிவரர்மன் என்ற அரசன் தீராத தலைவலியுடன் அகத்தியரிடம்
வந்தான்..தலைக்குள் தேரை ஒன்று இருப்பதை கண்டறிந்தார்..
அகத்தியர்..கபால சிகிச்சை மூலமாக அதை
எடுத்து விடுவதாக அகத்தியர் கூறினார்..தன்னிடம் தலையை பிளக்கவும்
மூடவும் மூலிகைகள் இருப்பதாகவும் கவலை பட தேவைஇல்லை என்றும்
கூறினார்..அரசனும் சரி என்றான்.
தலையை உடைத்ததும் உள்ளேஒரு தேரை இருந்தது..அது உட்பக்கம்
சென்று விடாமல் எப்படி வெளியே கொண்டு வருவது என்று யோசித்தார்..
அதற்குள் அவரது சீடர் ஒரு கிண்ணத்தில் நீரை வைத்து நீரை சப்தம் செய்தார்..
நீரின் சப்தத்தை கேட்ட தேரை தண்ணீரில் குதித்தது...
அன்று முதல் அகத்தியர் தன் சீடரை தேரையர் என்று கூப்பிட துவங்கினார்..
அவரை பற்றி மற்ற கதைகள் கூட இருக்கு...அது அப்புறம்..
என்னடி ரொம்ப போரா..
அதெல்லாம் இல்ல..
துத்துகுடி பக்கத்தல தென்திருபேரை என்ற ஊரில்
உள்ள கைலாசநாதர் கோவில் பிரசத்தி பெற்றதாம்..
அந்த கோவிலில் உள்ள புத்த பகவானை சேவித்தால்
குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக வருமாம்..
மங்களா..உஷா பேரனை கூட்டிகொண்டு போக சொல்லலாம்..
அவன் படிக்காமல் எப்பவும் டிவியிலையும் செல் போன்லையும்
கேம்ஸ் விளையாடி கொண்டே இருக்கானாம்..உஷா வருத்த பட்டாள்..
அவன் மட்டும் இல்ல..எல்லா குழந்தைகளும் அப்படிதான்..இருக்கா..
என்ன செய்யறது...

Image

maduraimini
Posts: 477
Joined: 22 Sep 2009, 02:55

Re: mangalathai kelungal

Post by maduraimini »

I have heard this from my mother-in-law about Therayar's diddy- 'Kani vagayil Vazhai anri pusiyom, kizshangu vagayil Karunai anri unnom'-(In the vegetable variety we will eat nothing but Plantain and in the root family we will not eat anything other than Karunai ( Kind of Yam- Don't know the Botanical word for that)). She used to say he has made many health related hints for the every day man/woman. I always wondered about his name and now I know! Thanks, Mangalam!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

மங்களா..வா..பேசிகொண்டே கோவிலுக்கு போகலாம்..
சரி..
இன்னிக்கு சாரதாபீட சங்கராசாரியார் சென்னை வந்து இருக்கிறார்..
வெங்கட்நாராயணா ரோட்லே தரிசனமாம்..கூட்டத்தை நினைத்தாலே
பயமாய் இருக்கு..எங்கே போக...


மங்களா..இதோ காமாட்சி மாமி வரா..
என்ன மாமி..நானே இன்னிக்கு வர நினைத்தேன்..
உன் நாட்டு பெண்ணுக்கு என்ன உடம்பு..ஜொஸ்ய மாமா சொன்னார்..
அத ஏன் கேக்கற..காத்தால எழும்போதே சிடுசிடுப்பு
சோந்து சோந்து படுத்துக்கரா..கேட்டா தலவலிங்கரா..இத்தனைக்கும்
நான் தான் எல்லா வேலையும் செய்யறேன்..
பிள்ளை கூட்டி போக வீடு கிடைக்கிலேங்கிறான்...
மாமியார் என்று கூட பார்காமல் இன்னிக்கு மத்தியானம்
சிடுசிடுக்கிறாள்...அதான் இப்படயே இங்கே வந்தேன்..
மங்களா நீ அவகிட்ட பேசி பாரேன்..
டாக்டர் கிட்டே பார்த்தேளா..
கீதா மேடம் கிட்டே கேட்டேன்..
எந்த கோளாரும் இல்லை என்கிறாள்..
மாமி..எனக்கு ஒண்ணு தோணறது..
உங்களுக்கும் மாமாவுக்கும் தான் காத்தாலெ காபி குடிக்கும்
பழக்கம் இல்லையே.,,அவ என்ன குடிக்கரா..
எதுவும் இல்லே..
வாங்கோ உங்காத்துக்கு போகலாம்..போகும் போது
அப்படியே ஒரு பாக்கட் காபி பொடியும் வாங்கிண்டு
போகலாம்..
எங்களுக்கு தரும் போது அவளுக்கும் காபி சேர்த்து
கொடுங்கள்..
இதோ..அவளும் வாசலில் நிக்கறா..
உட்காருங்கோ மாமி..மங்களா..
சுமதி இவாள தெரியுமோனோ..
பேசிண்டுஇரு..நான் காபி போட்டு எடுத்துண்டு
வரேன்..
என்னது காபியா..நாம தான் சிலவுன்னு வாங்றதே இல்லையே..
இதோபோட்டு கொண்டு வரேன்..
என்ன சுமி எப்படி இருக்கே..உனக்கு காபி பிடிக்குமா..
ரொம்ப பிடிக்கும் மங்களா...
எங்காதத்லெ நாலஞ்சு தடவை சாப்பிடுவேன்
கண்லே பாத்தே ரொம்ப நாளாச்சு..உடம்பே
என்னவோ பண்றது காபி இல்லாமல்..
என்ன சுமி ..இத சொல்ல வேண்டயது தானே..
சுமதி என்ன சொல்லரா மங்களா..
இந்தாங்கோ..எல்லாரும் எடுத்துகோங்கோ..
என்ன சுமி மூஞ்சியே பிரகாசிக்கறது..
மாமி இனி மேல் உங்காத்திலே காபி பவுடர்
வாங்கி சுமிக்கு காபி கொடுக்கிறேள்...
இனிமேல் டாக்டரும் வேண்டாம்..ஜோஸ்யரும் வேண்டாம்..
என்ன சுமி..
ரொம்ப தாங்ஸ் மங்களா..
போயிட்டுவரோம்...காமாட்சி மாமி..

Image

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

மாமி....
வா..மங்களா..

பெரிவா சொன்ன கதை ஒன்று ..
அவர் சொன்னதை அவர்சொன்ன மாதிரியே சொல்லரேன்..
நோக்கு தெரியுமோ? அப்பர் சித்திரை மாசம் சதய நக்ஷத்ரத்லதான் முக்தி அடைஞ்சார்....அப்டி முக்தி அடைஞ்ச ஸ்தலம்....திருப்புகலூர். அவர் எப்டி முக்தி அடைஞ்சார் தெரியுமோ?.....ஸ்வாமியோட கர்பக்ருஹத்துக்குள்ள போனவர்தான்! திரும்பி வெளில வரலை!...இது எல்லார்க்கும் தெரிஞ்ச சமாச்சாரம். ஆனா...தெரியாத சமாச்சாரம் ஒண்ணு இருக்கே! சொல்றேன் கேட்டுக்கோ....ஸ்வாமி சிங்கமா வந்து, அப்டி....யே அவரைக் கடிச்சு ஸாப்டுட்டார்!
அப்பர் சொன்னார்...."அப்பனே! எனக்கு வலிக்கறதே!..ன்னார். ஸ்வாமி சொன்னார் "அப்பனே! நீ எனக்கு தித்திப்பா இனிக்கிறாயே!...ன்னாராம்...


மங்களா..இன்னைக்கு சனி பிரதோஷம்..
ஆமாம்..சிவன் நஞ்சை உண்ட சனிக்கிழமை வரும்
பிரதோஷம் ரொம்பவும் மகிமைஆனது..
இன்னைக்கு இந்த ஸோலகத்தை சொன்னால் விசேஷமாம்..
நம: சோமாய ச, ருத்ராய ச, நம: தாம்ராய ச, அருணாய ச
நம: சங்காய ச, பசுபதயௌ ச, நம உக்ராய ச, பீமாய ச,
நமோ அக்ரேவதாய ச, தூரேவதாய ச, நமோ ஹந்த்ரே ச,
ஹனீயசே ச, நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஷேப்யோ,
நம ஸ்தாராய, நம: சம்பவே ச, மயோ பவே ச, நம: சங்கராய ச,
மயஸ்கராய ச, நம: சிவாய ச சிவதராய ச..


பாரத போர் நடந்து முடிந்து ஒரு நாள் கண்ணனும் தருமரும்
பேசிக்கொண்டு இருந்தார்கள்..கண்ணா..என்ன இருந்தாலும் துரியோதனன் படு முட்டாள். அவனது முட்டாள்தனத்தாலும் அகம்பாவத்தாலும்தான் இப்படி எல்லாம் நடந்துவிட்டது. அவன் மட்டும் நல்லவனாக இருந்திருந்தால் இன்று எல்லோரும் நலமுடன் வாழ்ந்திருப்போம்..
ஒரு கணமும் யோசிக்காமல் கண்ணன் உடனே சொன்னான்...
"" தருமா... நீ சொன்ன முட்டாள்தனமும் அகம்பாவமும் துரியோதனனிடம் இல்லை... உன்னிடம்தான் இருக்கிறது''.
தருமனுக்கு அதிர்ச்சி. கலங்கிய மனத்துடன் கண்ணனிடம் கேட்டான்...
எப்படிச் சொல்கிறாய் கண்ணா?
கண்ணன் சொன்னான்...
துரியோதனன் எவ்வளவு புத்திசாலியாக இருந்திருந்தால், எனக்கு பதில் என் மாமா சகுனி சூதாட்டத்தில் ஆடுவார் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டான். ஆனால் நீ... என்ன செய்தாய்? அதுபோல் எனக்கு பதில் என் கண்ணன் சூதாட்டம் ஆடுவான் என்று சொல்லியிருக்க வேண்டாமோ? நீ என்னை மனதில் நினைத்து அழைத்திருந்தால் நான் வந்திருப்பேனே... உனக்கு இருந்த அகம்பாவத்தால் அன்றோ நீயே சூதாடும்படி ஆனது. அது மட்டும் நடக்காதிருந்தால் குருúக்ஷத்ர யுத்தமே நடந்திருக்காதே....
இதைக் கேட்ட தருமனுக்கு சவுக்கடி பட்டது போல் இருந்தது. தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்...


மாமி..பெரிவா பாதாள லோகத்தை பற்றி சொன்னதை கேளுங்கோ...
பாதாளலோகம்.. மெக்ஸிகோ...ங்கறது நம்ம புராணங்கள்ள சொல்லற நாகலோகம்தான்

இதயம் பேசுகிறது" மணியன் ஒருமுறை மெக்ஸிகோ செல்ல ஏற்பாடு பண்ணிக் கொண்டிருக்கும்போது, பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். எப்போதுமே வெளிநாட்டுப் பயணம் போகும்முன் பெரியவாளை தர்சனம் பண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

"மெக்ஸிகோ போறதுக்கான வேலை இருக்கு... பெரியவா அனுக்ரகம் பண்ணனும்" வினயமாக மணியன் நமஸ்கரித்தார்.

"க்ஷேமமா போயிட்டு வா! இந்த.....பூகோள உருண்டையை எடுத்து பாத்திருக்கியோ? இல்லேன்னா எடுத்துப் பாரு! இந்தியாவுக்கு நேர் கீழ நீ போகப்போற நாடு இருக்கும்!" மணியனுக்கோ ஒரே வியப்பு! இதுவரை அவர் அப்படி ஒரு கண்ணோட்டத்தில் க்ளோபைப் பார்த்ததில்லை.

"நம்ம புராண இதிஹாசங்கள், ராஜா கதைகள்ள எல்லாம் பாதாளலோகம்...ன்னு சொல்றோமே! அப்டி வெச்சுக்கோ! பாதாள லோகத்லதான் நாகலோகம் இருக்கு. நாகர் வழிபாடு உண்டு, நரபலி உண்டு...நம்மளையெல்லாம் விட ரொம்ப பழமையான நாகரீக ஆட்சி முறை, இதுமாதிரி எல்லாமே உண்டு..." மணியன் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டார்!
நமக்கு உலோகங்களைப் பத்தின நாகரீகம் தெரியறதுக்கு முன்னாலேயே அவாளுக்கு தெரிஞ்சிருக்கு! சுமார் ரெண்டாயிரம் வர்ஷத்துக்கு முன்னாலேயே ரொம்ப நாகரீகத்தோட இருந்திருக்கா...."
அந்த நாட்டில் மணியன் பார்த்தது எழுதியது...
மெக்ஸிகோ நாட்டின் தேசீயச் சின்னமே பாம்பை அடக்கும் கருடன்தான்! அங்கே இன்றும் நாகங்களை வழிபடுவார்கள். பிரமிட் கோபுரங்களில் இறக்கைகள் கொண்ட பாம்பு வடிவங்களும், கண் உள்ள இடத்தில் கிளிஞ்சல்களை வைத்து தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள். மழையை உண்டாக்கும் தேவனுக்கும் இங்கே உருவங்கள் உண்டு. ஹிந்துக்களைப் போல், இவர்களும் இயற்கையை வழிபடுகிறார்கள். 9000 வர்ஷங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் வில் அம்பு, மண், உலோக பாத்திரங்களை உபயோகித்து இருக்கிறார்கள். 3000 வர்ஷங்களுக்கு முன்பே "காலண்டரி" என்ற அட்டவணையை உபயோகித்து இருக்கிறார்கள். மெக்ஸிகோவின் ஆதிகுடிமக்கள் [ரெட் இண்டியன்ஸ்] சூரியனை அடிப்படையாக வைத்து 20 நாளுக்கு ஒன்றாக 18 மாசங்களை உருவாக்கினார்கள். ஹிந்துக்களைப் போலவே சூரியன், பூமி, ஜலம், வாயு,அக்னியை வழிபடுகிறார்கள். இதற்கான பண்டிகைகளும் மாசாமாசம் உண்டு. கலைகளுக்காக ஒரு பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். 20 லக்ஷம் மக்கள் 1000 வர்ஷங்களுக்கு முன்னால் நிர்மாணித்த "மாயன் " புதைவுகளில் எங்கு பார்த்தாலும் நாகர் சிலைகள்தான்!
மாயன் நாகரீகத்தில் உள்ள கலை, கலாச்சாரம் எல்லாமே மத அடிப்படையில் உண்டானதுதான். பிறப்புக்கு முன்னும் பின்னும் ஆத்மாவின் நிலை என்று ஒன்று உண்டு என்று அவர்களும் நம்பினார்கள். உலகில் வாழும்போது உண்டாகும் வெற்றி, தோல்வி, வாழ்கை முறை எல்லாமே க்ரஹங்களின்
நிலையைப் பொருத்தது என்று நம்பினார்கள்...
இந்த மஹானுக்கு எப்படி காஞ்சி இருந்து கொண்டே
எல்லாம் தெரிந்தது..ஆச்சரியமாய் இருக்கு மாமி..
அவர் நம்ம காலத்தில் வாழ்ந்தது நமக்கு பெருமை...இல்லையா மங்களா..

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: mangalathai kelungal

Post by sridhar_ranga »

maduraimini wrote: kizshangu vagayil Karunai anri unnom'-(In the vegetable variety we will eat nothing but Plantain and in the root family we will not eat anything other than Karunai ( Kind of Yam- Don't know the Botanical word for that)).
My Google search first led me to 'Amorphophallus campanulatus' which had a Tamil name listed as Karunai kizhangu but seeing that it was also named as elephant yam / Suran (Hindi), most probably it is Senai kizhangu.

The real McCoy karuNai (or piDi karuNai as it is called around Chennai) could be 'Typhonium trilobatum', but I am not sure. The mention of karunai kizhangu did bring back memories of my grandpa buying the stuff from the weekly market (santhai) in Madurai and spreading the tubers on a bed of bran (thaviDu) which is said to help take the sting/irritation out of it - not to mention the delicious masiyal which used to be made with it.

arasi
Posts: 16794
Joined: 22 Jun 2006, 09:30

Re: mangalathai kelungal

Post by arasi »

Sridhar,
So good to hear from you. Thought you were very busy with work and that's why you were not bringing your uyar kavidai to us these days.
Another botanical name buff you are! Maduraimini will be pleased ;) Of course, her name proclaims her proud roots (roots of the 'karuNai' kind (not the irritating variety!). Madurai sandhai is close to her heart and mine. You may not know the thanga rEkku seppugaL which we loved, and the mini saris for children that they sold there. Bangles and more! CML will have fond memories too, and others...

maduraimini
Posts: 477
Joined: 22 Sep 2009, 02:55

Re: mangalathai kelungal

Post by maduraimini »

Hi, Sridhar,

Thanks for your fast response. You were right. I googled and found the Botanical name for Karunai or Pidi karunai as Typhonium Trilobatum. It is also called Bengal Arum in English ( I guess the Indian English of yore). Like you say Senai is Elephant Yam or Suran in Hindi/ Gujarathi.
It is nice to hear about the Madurai Santhai and brought back memories. Like Arasi says cannot forget the gold colored choppu set , bangles and the Madurai siru kizhangu. I did not like Senai or Karunai kizhangu, but loved siru kizhangu. Madurai is always green in my mind and the santhai is special. Thanks.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

Image


வா மங்களா..இப்போதான் உன்ன நினச்சேன்..
பெரியவாளை பற்றி ஒரு செய்தி படிச்சேன்..நேரம் ஆச்சு..
அது என்ன..
அப்படியே சொல்லறேன்,,கேளுங்கோ..
சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார் பெரியவா. முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும்.பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் அபோது இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர்.

பெரியவா வழக்கம் போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார்.வந்திருந ்த பொது மக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள்.

வித்வான் வாசிக்க ஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார்.கேட்டவர ்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர்.வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச்சொனார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அப்புறம் நான் அதை வாசிக்கலாமா என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?

வீணையில் ஸ்ருதி கூட்டி பின் மீண்டும் வித்வானிடம் காட்டினார்.இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான் அது மறந்து போய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்.) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.

சரியா இருக்கு!

பின் பெரியவா வீணை வாசிக்க ஆரம்பித்தார். சில நிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்றூ போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும் என்றூ கதறினார்.அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது. " தப்பு பண்ணிட்டேன் க்ஷமிக்கனும்" என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார்.

வாசித்து முடித்த பின் பெரியவா வீணையை திருப்பிக்கொடுத்தர்.வித்யா கர்வம் ஏற்படக்கூடாது கவனமாக இரு என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு திரையை போட்டுக்கொண்டார்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வித்வான் அழுதுக்கொண்டே வெளியேறினார்.கூட வந்த குலபதிக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழறே? ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரி விழுந்து விழுந்து நமஸ்காரம் செஞ்சியே? என்ன ஆச்சு?
ராவணனின் ஸாம கானம் வந்த போது அவருக்கு அந்த வரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யாருக்கு இது தெரியப்போகிறது என்று நினைத்து வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார்.

பெரியவா வீணையை வாங்கி வாசித்தது அதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின் இடத்தில் எவை வர வேண்டுமோ அவற்றையே சரியாக வாசித்துக்காட்டினர். இதை புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்?

யாருக்குத்தெரிய போறது? ன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன் என்று நண்பரிடம் சொல்லி அழுதாராம் வித்வான்…

கிருஷ்ண மந்திரம் பிறந்த கதை தெரியுமா மாமி...
மந்திரம் தான் தெரியும் ..கதை தெரியாது..மங்களா..
கேளுங்கோ..
கண்ணன் சகாதேவனிடம் சொன்னான்...
ஸஹதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். அதற்காக எல்லா உபாயங்களையும் கையாளப் போகிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்... அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ண பிரான். ஸஹதேவன் சிரித்தான். ''போர் வராமல் தடுக்கத்தானே உபாயம் தேடுகிறாய்! நல்லதொரு உபாயம் உண்டு. சொல்கிறேன். செய்ய முடியுமா, பார்?'' என்று ஆரம்பித்தான் ஸஹதேவன்.

தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.
''கண்ணா, கேள்... பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்'' என்றான் ஸஹதேவன்.
கண்ணன் உரக்கச் சிரித்தான்.
''என்னைக் கட்டுவதா? எப்படி முடியும் ஸஹதேவா?'' என்றான்.
''ஏன் முடியாது?'' என்று எதிர் சவால் விட்டான் ஸஹதேவன். அந்தக் கணமே, பல்லாயிரம் கண்ணனாக வடிவெடுத்து மண்டபம் எங்கும் வியாபித்தான் ஸ்ரீகிருஷ்ணன். பார்த்த பரவெளியெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. இத்தனைப் பரிமாணங்களையும் எப்படிக் கட்டுவது?
ஸஹதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான். பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாகத் தியானித்தான். பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது. அப்போது பிறந்தது ஸஹதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்.

'ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே
விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே
கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!’

என்பதே அந்த மந்திரம்.
ஸஹதேவன் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, கண்ணன் எடுத்த வடிவங்கள் ஒவ்வொன்றாய்க் கலந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரே கண்ணனாகி, அவனும் ஸஹதேவனின் இதயத்துக்குள்ளே கட்டுண்டான்.
''ஸஹதேவா, நீ வென்றுவிட்டாய்! என் தாய் என்னை உரலில் கட்டினாள்.
பிருந்தாவன கோபியர், கட்டுத்தறியில் கட்டினார்கள்.
நீயோ இதயத்தில் கட்டிவிட்டாய்.
பக்தியினால் கடவுளையும் கட்ட முடியும் என்று காட்டிவிட்டாய். போதும்!
என் கட்டுக்களை அவிழ்த்து, என்னைப் போக விடு!'' என்று கூறினான் கண்ணன்.

இதெல்லாம் எப்போ படிச்சே..
அப்பப்போ படிக்க வேண்டியது தான்..

மாமி..அன்னிக்கு சொன்னேன் இல்லையா..
தீட்ஷதரின் குரு குஹ விபுக்தி பாட்டை பற்றி..
நாலு பாட்டு கிடைத்தது..

srI-nAthAdi-guruguho-jayati...Raga..mAyAmALavagauLa
DK Pattammal
http://www.youtube.com/watch?v=5IK8jjFl4PQ
mAnasa-guruguha-Anandabhairavi...Rendered by
Shri KV Narayanaswamy
http://www.youtube.com/watch?v=kidOYZruNlA
Sri Guruna Palithosmi-padi..
smt. Kalpagam Swaminathan on Veena
http://www.youtube.com/watch?v=4Pd9_DxNEDQ
Guruguhaya- Raga Sama... Shri. DK Jayaraman...
http://www.youtube.com/watch?v=N_H9ZV_i3MQ

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

Image

மாமி...இத கேட்டா கண்கள் கலங்கும்..
அதென்ன அப்படி...
கேளுங்கோ…. பரணீதரன் ஆநந்தவிகடனில் எழுதியது..மாமி
மதுரை ஸ்ரீ. மணி ஐயர் அவர்கள் மஹா பெரியவாளின் மிக சிறந்த பக்தர். பெரியவாள், மணி ஐயரை தன் குழந்தையாய் நடத்தி வந்தார்கள். ஐயருக்கோ பெரியவாள், அந்த கபலீஸ்வரரே, அந்த பரமேஸ்வரனே.

ஒரு முறை, மணி ஐயர் தன் கண் பார்வை இழந்த பின், பெரியவாள் முன், பாடிக்கொண்டு இருந்தார். பாடிக்கொண்டு இருக்கும் போது யாரோ மிக அற்புதமாக தாளத்தில் தன்னை தொடர்வதை ஐயர் அவர்கள் உணர்ந்தார். பாட்டு முடிந்தவுடன், வேம்பு ஐயர் அவர்களிடம் தன்னை அற்புத தாளத்தில் தொடர்ந்தது யார் என்று வினவினார். ஸ்ரீ மஹா பெரியவா குறுக்கிட்டு தான் தான் கையில் ஒரு ஆரஞ்சு தோலை கஞ்சிர போல் வைத்து கொண்டு தாளம் போட்டதாக கூறினார். 'நான் தானப்பா தாளம் போட்டது'. திடீரென்று மணி ஐயர் அழ ஆரம்பித்து விட்டார். கண்ணீருடன் 'அப்பனே, கபாலீஸ்வரா, பரமேஸ்வரா, என் பெரியவாளா தாளம் போட்டது? என் பெரியவாளை பார்க்க முடியலியே, எங்கே இருக்கா?'. பெரியவா தன் காருண்யம் நிரம்பிய குரலில் 'இதோ, உன் பக்கத்திலேயே இருக்கேன் அப்பா'. மணி ஐயர் திரும்ப திரும்ப 'அப்பனே, கபாலீஸ்வரா' என்று சொல்லிக்கொண்டு விழுந்து வணங்கினார். பெரியவாள் தன் முத்திரை முறுவலுடன் ஒரு தாய் குழந்தைக்கு ஆசீர்வதிப்பது போல, ஐயர் அவர்களுக்கு ஆசிகள் வழங்கினார்.



உள்ளிருக்கும் இறைவனுக்கு சமர்பித்து எதையும் செய்ய வேண்டுமாம்
இத கேளுங்கோ..
யமுனைக் கரையில் கண்ணனும் ராதையுமாக அமர்ந்திருந்தார்கள். சிலுசிலுவென்று சுகமான காற்று வீசிக் கொண்டிருந்தது. கண்ணன் தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ராதை ரசித்தவாறிருந்தாள்.
ஆனால், கண்ணன் அக்கரையையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
""என்மேல் ஒருசிறிதும் அக்கறையில்லாமல் அக்கரையில் என்ன பார்வை?'' கேட்டாள் ராதை.
""எனக்குப் பசிக்கிறது!''
ராதை பதறினாள்.
""அடடா! இதோ உடனடியாக நானே சமைத்து உங்களுக்கு உணவு எடுத்து வருகிறேன். அதற்கு அக்கரையைப் பார்ப்பானேன்?''
"" அக்கரையிலும் ஒருவருக்குப் பசிக்கிறது!''
""யார் அவர்?'' ராதை கூர்மையாகத் தானும் அக்கரையைப் பார்த்தாள். அங்கே ஆலமரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பது தெரிந்தது.
""துர்வாச மகரிஷி!'' என்றான் கண்ணன்.
""அறிவேன்! கோபத்திற்கும் அதனால் தாம் கொடுக்கும் சாபத்திற்கும் பெயர்பெற்றவர்!''
""ராதா! என் மனத்தில் நீ இருக்கிறாய். அவர் மனத்தில் நான் இருக்கிறேன்! அவர் என் பக்தர்!''
சரி...சரி... அவருக்கும் சேர்த்தே உணவு சமைத்து எடுத்துவருகிறேன்! அதிருக்கட்டும், உங்கள் மனத்தில் நான் இருப்பது பற்றி மகிழ்ச்சி. ஆனால் அங்கே நான் மட்டும் தான் இருக்க வேண்டும். என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது, ஞாபகமிருக்கட்டும்! கண்ணன் நகைத்தான். ராதை தொடர்ந்தாள்.
""இப்படிச் சொன்னால் எப்படி ராதா? நான் நேசிக்கும் எல்லாப் பெண்களிடமும் உன்னைத் தானே காண்கிறேன்!
"நல்ல நியாயம் இது! உங்கள் தாயார் யசோதையிடம் சொல்லித்தான் உங்களைத் திருத்த முயலவேண்டும்!''
""தாயார் யசோதைக்கும் உனக்கும் ஒரே ஒரு வேற்றுமை தான் ராதா. என் தாய் என்னை உரலில் கட்டிப் போட்டாள். நீ உன் குரலில் கட்டிப் போடுகிறாய். என் புல்லாங்குழலை இனிமை என்பவர்கள் உன் குரலைக் கேட்காத முட்டாள்கள்''.
""போதுமே உங்கள் புகழ்ச்சி. ஆண்களுக்குப் பசிவந்தால் கூடவே கவிதையும் வரும்போல் இருக்கிறது. என்னை அதிகம்
புகழவேண்டாம். எப்படியும் சாப்பாடு உறுதி!''
ராதை நகைத்தவாறே மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தாள்.
""ஒரு தட்டில் உணவு கொண்டுவா, போதும். துர்வாசர் பசியாறட்டும்!''
ராதை தலையாட்டியபடி, சாப்பாடு செய்து எடுத்து வரப் புறப்பட்டாள்.
ராதை உணவுத் தட்டோடு வந்தபோது யமுனை நதியில் கணுக்காலளவு நீர்தான் இருந்தது. தானே அக்கரைக்குப் போய் முனிவருக்கு உணவு பரிமாறிவிட்டு வருவதாகச் சொல்லி நதியில் இறங்கி நடந்தாள். அவளது நடையழகைப் பார்த்து ரசித்தவாறே இக்கரையில் அமர்ந்திருந்தான் கண்ணன்.
துர்வாச மகரிஷி ஞானதிருஷ்டியால் வந்திருப்பது யார் என்று உணர்ந்துகொண்டார்.
""கண்ணக் கடவுள் மேல் அழியாப் பிரேமை கொண்ட என் தாய் ராதா மாதாவா? என்னைத் தேடித் தாங்களே வந்தீர்களா தாயே?''
""உங்களுக்குப் பசிக்கிறதென்று அவர் சொன்னார். என்னைத் தாய் என்கிறீர்கள் நீங்கள்! பசிக்கும் குழந்தைக்கு உணவு தரவேண்டியது தாயின் பொறுப்பல்லவா?''
""எனக்குப் பசிப்பதைப் பற்றி மட்டும்தானா சொன்னார்? கண்ணனுக்கும் பசிக்குமே? அதைப் பற்றிச் சொல்லவில்லையா?''
""அதையும் தான் சொன்னார். ஆனால், நீங்கள்தான் முதலில் பசியாற வேண்டும். கணவர் காத்திருக்கலாம். குழந்தை காத்திருக்கக் கூடாது!''
ராதை இலைவிரித்து வெகுபிரியமாக உணவு பரிமாறினாள். பசியின் வேகமோ உணவின் சுவையோ எது காரணமோ தெரியவில்லை. பார்க்க ஒல்லியாக இருந்த அந்த மகரிஷி, ஒரு பயில்வான் சாப்பிடுவதுபோல் வயிறாரச் சாப்பிட்டார். இந்தச் சாப்பாட்டு வேளையில் நடந்த இன்னொரு விஷயத்தை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை. யமுனையில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்திருந்தது. வெள்ளத்தைப் பார்த்த ராதை திகைத்தாள்.
""தாயே! எப்படித் திரும்பிச் செல்வீர்கள்?'' - முனிவர் கவலையோடு வினவினார்.
""அதுதான் எனக்கும் புரியவில்லை. நான் கண்ணனாக இருந்தால் நந்தகோபர் என்னைக் கூடையில் எடுத்துச் செல்லக் கூடும். ஆதிசேஷனே வந்து மழை, மேலே படாமல் குடைபோல படம் விரித்துக் காக்கக் கூடும். ஆனால், நான் கண்ணனல்லவே? ராதை தானே? எனக்கு இந்த நதி வழிவிடுமா என்ன?''
""ஏன் விடாது? இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால், யமுனை வழிவிடட்டும் என்று சொல்லிப் பாருங்கள். வழி கிடைக்கும். நதியைக் கடந்து கண்ணனிடம் சென்றுவிடுங்கள்!''
ராதை கலகலவென சிரித்தாள்.
""என் கண்ணெதிரே நீங்கள் வயிறார உணவு உண்டிருக்கிறீர்கள். நான் தான் இலைபோட்டுப் பரிமாறியிருக்கிறேன். அப்படியிருக்க இப்படியொரு பொய்யைச் சொல்லச் சொல்கிறீர்களே?''
""தாயே! அது பொய்யா நிஜமா என்பதை முடிவு செய்ய வேண்டியது யமுனை நதியின் பாடு. நீங்கள் ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்? சொல்லித்தான் பாருங்களேன்!''
ராதை வியப்போடு யமுனை நதியின் கரையில் நின்று, "இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனையே வழிவிடுவாயாக!'' என்று கூறினாள்.
மறுகணம் யமுனை இரண்டாகப் பிளந்து ராதை நடந்துசெல்லும் வகையில் வழிவிட்டது. ஆச்சரியத்தோடு விறுவிறுவென்று நடந்து கண்ணன் இருக்கும் கரைக்கு வந்து சேர்ந்தாள் ராதை. மறுகணம் நதி மீண்டும் இணைந்து வழிமறைத்து மூடிக்கொண்டது! ராதையின் முகம் கோபத்தால் சிவந்தது.
""என்ன ராதா? நீ அனைத்தையும் கரைகண்டவள் என்பது உண்மைதான் போலிருக்கிறது? இன்று இக்கரை அக்கரை இரண்டையும் கண்டுவிட்டாயே?''
""நான் கரைகண்ட லட்சணம் இருக்கட்டும். யமுனை இப்படி துர்வாசருக்குப் பயப்பட வேண்டாம். அவர் சபித்துவிடுவாரோ என்பதற்காக அவர் சொன்ன பொய்க்கெல்லாம் இந்த நதி துணைபோகிறது''.
கண்ணன் நகைத்தவாறே கேட்டான்:
""அப்படி என்ன பொய்க்குத் துணைநின்றது இந்த நதி?''
""இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனை வழிவிடட்டும் என்று சொல்லச் சொன்னார், என் சாப்பாட்டை வயிறாரச் சாப்பிட்ட உங்கள் பக்தர். அவர் சொன்னதைச் சொன்னேன். இந்தப் பாழும் நதி அந்தப் பொய்க்கு உடன்பட்டு வழிவிட்டிருக்கிறது. இந்த நதியை என்ன செய்தால் தகும்?''
""வா! உண்மையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த நதியை மலர்தூவி வழிபடுவோம்!''
""நீங்களுமா அதை உண்மை என்கிறீர்கள்? அப்படியானால் என் கண்ணால் பார்த்தது பொய்யா?''
""கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாக இருக்கலாம். தீர விசாரிப்பதுதான் மெய். துர்வாசர் உபவாசமிருந்தார் என்பது சத்தியம் தான்! நதிகள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்கும்''.
""அது எப்படிச் சத்தியமாகும்?'' ராதை வியப்போடுவிசாரித்தாள்.
கண்ணன் சொல்லலானான்:
""அன்பே ராதா! எனக்குப் பசிக்கிறது என்றேன். ஆனால், ஒரு தட்டு உணவே போதும் என்றேன். நீ துர்வாசருக்கு உணவு படைத்தாய். அந்த முனிவர், தன் இதயத்தின் உள்ளிருக்கும் எனக்கு நைவேத்தியம் செய்வதான பாவனையுடன் உணவு
முழுவதையும் உண்டார். அதனால் தான் நான் உண்ணும் அளவு அதிக உணவை அந்த ஒல்லியான முனிவரால் உண்ண முடிந்தது. அவர் உண்ட உணவின் பலம் என் உடலில் கூடிவிட்டது. என் பக்தர்களின் பக்தியால் தான் எப்போதும் எனக்கு பலம் கூடுகிறது. இனி நீ வற்புறுத்தினாலும் கூட என்னால் சாப்பிட முடியாது. வயிறு நிறைந்திருக்கிறது. இந்த ரகசியத்தை என் ராதை
அறியவில்லை. ஆனால் யமுனை அறிவாள். அதனால் தான் அவள் விலகி வழிவிட்டாள்!''
கண்ணன் சொன்னதை, ராதை வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள்.
""கண்ணே ராதா! எந்த மனிதன் தான் செய்யும் எந்தச் செயலையும் தன் உள்ளிருக்கும் இறைவனுக்கு சமர்ப்பணம் என நினைத்துச் செய்கிறானோ அவனை எந்தத் துன்பமும் பாதிப்பதில்லை. ஏனெனில் அவனுக்கு நேரும் துன்பத்தையெல்லாம் அவன் இதயத்தின் உள்ளிருக்கும் இறைவன் தாங்கிக் கொண்டு விடுகிறான்!''
ராதை ஒரு பேருண்மையைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் மலர்ந்து சிரித்தாள்.
""ஆனால் ராதா! நான் எப்போதும் சூடாக எதையும் சாப்பிடுவதில்லை!''என்றான் கண்ணன்.
""ஏன்?'' என்று கேட்டாள் ராதை.
""நீ என் உள்ளத்தில் இருக்கிறாய். உனக்குச் சூடு பொறுக்காது!'' என்றான் கண்ணன். ராதை கலகலவென மலர்ந்து சிரித்ததைக் கேட்டு அக்கரையில் இருந்த துர்வாசரின் மனம் மகிழ்ந்தது….


ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான " " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கிறதாம்! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கிறதாம் !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் " மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது ..இது நெல்லையப்பர் கோவிலில் உள்ள அதிசயமாம்….
போகணும் மாமி..
ஆமாம் மங்களா..

மாமி..தீட்ஷதரின் வேணுகோபாலா ருக்மணி லோலா என்ற
குறிஞ்சி ராக பாட்டை எமெல்வி பாடியிருக்கா..
இங்கே கேளுங்கோ.....
http://www.youtube.com/watch?v=XyUmHhRmPok

சித்ரவீணா ரவிகிரன் கீளீவ்லேண்ட் ஆராதனாவில்
வாசித்து இருப்பதை கேளுங்கள் மாமி..
என்ன மாதிரி வாசிப்பு...மகாவித்வான் தான் அவர்...
http://www.youtube.com/user/bagyamananthu41

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

என்ன மாமி கொஞ்ச நாளா காணல..வந்து வந்து போனேன்..
ஆமா மங்களா...மச்சினருக்கு திடீரென நெஞ்சு வலி.....ராமசந்திராவுக்கு
தினமும் போகவேண்டியாச்சு....ரெண்டு மாசத்து குள்ள ஆஞ்சியோ பண்ணனுமாம்..
மாமி ஆஞ்சியோ பண்ணாமலே ப்ளாக்கை கரைக்கருத்துக்கு ஒரு மருந்து...
எழுதிக்கோங்கோ....
எலுமிச்சை சாரு.......1கப்
இஞ்சி சாரு..............1கப்
பூண்டு சாரு..............1கப்
ஆப்பிள் வனிகர்........1கப்
இந்த நாலையும் கலந்து மிதமான சூட்டில்
மூன்று ஆக காய்ச்சி ஆறவைக்கவும்...
ஆறினதும், அதனுடன் மூன்று கப் நல்ல தேனை
கலந்து வைத்து கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன்-5 மில்லி
சாப்பிட்டு வந்தால் ப்ளாக் கரைந்து போகுமாம்..
அப்பாக்கு தெரிந்தவர் இதை சாப்பிட்டு நல்ல குணம் தெரிந்ததாம்...
சாப்பிட சொல்லுங்கள்...
சரி..மங்களா..ஆனா அவர் சாப்பிட படுத்துவார்..பூண்டு வாசனை
பிடிக்காது...பாக்கலாம்....


அண்ணாமலைபுரத்திலே சிருங்கேரி பெரியவா
சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்...
நானே போயிட்டு வந்தேன்...
மீனாட்சி காலேஜ்லே அவரோட உபன்யாசத்துக்கும் போனேன்...


மாமி...மனதை உருக்கும் பெரியவாளை பற்றிய செய்தியை கேளுங்கோ...
விழுப்புரத்தில் பெரியவர் இருந்த காலந்தொட்டு அவருடன் கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். தனது ஆறு வயது முதலே பெரியவாளுடன் நெருக்கமாகப் பழகி, அவருக்குச் சேவை புரிந்தவர். தற்போது 76 வயதாகும் இவர், பெரியவாளின் நினைவுகளை இப்போதும் நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கிறார். அந்தச் சிலிர்ப்பான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்...

முன்னுரை : மாங்காடு ஸ்தல புராணம்

சிவபெருமானும், தேவியும் கைலாயத்தில் ஒரு நாள் விளையாடும் பொழுதில், தேவியானவர் விளையாட்டாக சிவபெருமானின் கண்ணை மூடி விளையாட, உலகம் முழுதும் இருண்டுவிட்டது!

தாயார் தன் தவறுக்கவருந்தி சிவனின் மன்னிப்பை கோர!, சிவபெருமான் தேவியை பூலோகம் சென்று கடும் தவம் செய்ய பணித்தார்! தேவியாரும் பூலோகம் வந்து, இடது கால் பஞ்சாக்னியில் வைத்து, வலது காலை மடக்கி, இடது கையில் ஜபமாலையுடன் தலை மேல் தூக்கி, கடும் தவம் புரிய தொடங்கினார்.

தவம் முடிந்தபின், தாயார் கைலாயம் செல்லும் பொழுது, அக்னியை அணைக்காமல்

செல்ல, அந்த இடமே அக்னியின் சூட்டில் தவிக்க தொடங்கியது.. பின் அங்கு ஆதி சங்கரர் அங்கு வந்த பொழுது, அக்னியை அணைத்து, அங்கு ஒரு ஸ்ரீ ச்சக்கரம் நிறுவினார்...

மாங்காடு அம்மன் கோவில் புதுப்பணி மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் புதுப்பிக்கப்படுவதற்கும், அருகேயே இவர் ஒரு வேத பாடசாலை ஆரம்பிப்பதற்கும் காஞ்சிப் பெரியவர் காரணமாக இருந்ததை விவரிக்கிறார் லக்ஷ்மிநாராயணன்.

அது 1952-ஆம் வருஷம்.ஒவ்வொரு வியாழக்கிழமையும், பெரியவாளைப் பார்க்கக் காஞ்சிபுரம் வருவோம். அப்படி ஒரு வியாழக்கிழமையன்னிக்கு வந்தப்போ,

”நேத்திக்கு எனக்கு ஒரு சொப்பனம். ‘பஞ்சாக்னி ஜுவாலையால எனக்கு ஒடம்பெல்லாம் எரியறது. இங்கே புனருத்தாரணம் பண்ணணும்’னு அம்பாள் சொப்பனத்துல பேசினா. எங்கேயோ அம்பாள் கோயில் ஒண்ணு பாழடைஞ்சு கெடக்கு. கண்டுபிடிச்சு சொல்றியா?”ன்னு எங்கிட்ட கேட்டார்.

”ஒரு வாரம் டயம் கொடுங்கோ”ன்னேன். அடுத்த வாரம் அவரைப் பார்த்தப்போ, முதல் நாள் ராத்திரி மறுபடியும் அம்பாள் சொப்பனத்துல வந்ததா சொன்னார்.

அன்னிக்கு ஒரு யானை வந்து தும்பிக்கையால அவரைக் கைப்பிடிச்சு அழைச்சுண்டு போச்சு. பெரியவா அந்த யானையோடு கிளம்பிட்டா. அவருக்கு மட்டும் அது யானையா தெரி யலே. அம்பாளாத்தான் தெரிஞ்சிருக்கு. ரொம்ப நேரம், ரொம்ப தூரம் யானை பெரியவாளை அழைச்சுண்டு போச்சு. பெரியவாளும் அது பின்னாடியே நடந்து போயிண்டே இருந்தா. பல மணி நேரத்துக்கப்புறம் ஒரு மண் ரோட்டுல யானை திரும்பித்து. அங்கே கொஞ்ச தூரம் போனதும், யானை மறைஞ்சுடுத்து. அப்படின்னா, அந்தப் பாழடைஞ்ச அம்பாள் கோவில் இங்கேதான் எங்கேயோ இருக்கணும்னு பெரியவாளுக்குத் தெரிஞ்சுடுத்து. ராத்திரி பெரியவா அங்கேயே தங்கறதா தீர்மானம் பண்ணிட்டா. அங்கே ஒரு மாட்டுக் கொட்டகை மாத்திரம்தான் இருந்துது. பெரியவா அதனுள்ளே போய்ப் படுத்துண்டுட்டா.

அந்த ஏரியாவுக்கு அப்போ மணலி ராமகிருஷ்ண முதலியார்தான் நாட்டாமை. பெரியவா வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சு முதலியார் வந்து பார்த்தார். ”என்ன செய்யணுமோ, நான் செய்யறேன். பெரியவா கவலைப்படாதீங்கோ”ன் னார்.

”24 மணி நேரத்துல சம்ப்ரோக்ஷணம் பண்ணணும்”னு சொன்னா பெரியவா. மளமளன்னு காரியங்கள் ஆரம்பிச்சுது.

ஆளுக்கு ஆயிரம் ரூபாபோல போட்டா. புதரும், பாம்புப் புத்துகளுமா இருந்த அந்த இடத்தைச் சுத்தம் பண்ணினா. சின்ன கோபுரம் தெரிஞ்சுது.

”ஆதிசங்கரர் கர்ப்ப வாசம் இருந்த இடம் இதுதான்”னா பெரியவா.

கர்ப்ப வாசம்னா பத்து மாசம் ஓரிடத்திலே தங்கியிருக்கறது. ”அர்த்த மேரு இங்க பிரதிஷ்டை பண்ணியிருக்கு. அம்பாள் இங்கே உக்ரமா இருக்கா; அவளுடைய உக்ரத்தைத் தணிக்கணும்”னு சொன்னா. இதையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டுப் பெரியவா மறுபடியும் காஞ்சிபுரம் போயிட்டா.

இடத்தை எல்லாம் சரி பண்ணி, கும்பாபி ஷேகம் நடத்தினோம். அப்போதைக்கு ஏகாம்பர குருக்கள்னு ஒருத் தரை பூஜை பண்ண நியமனம் பண்ணினோம். மாங்காடு கோயில் பத்தி அப்பல்லாம் யாருக்கும் தெரியாது.

பக்கத்துலயே பெரியவா தனக்கொரு இடம் வேணும்னு கேட் டிருந்தா. ”ஆகட்டும். முடிச்சுத் தரேன்”னேன். ஆனா, ஏதேதோ வேலையில் அது அப்படியே தள்ளிப் போயிடுத்து. 1965-லே மறுபடியும் ஒரு தரம், ”மாங்காட்டுல இடம் வாங்கித் தரணும்னு கேட்டேனே, மறந்துட்டியா?”ன்னு ஞாபகப்படுத்தினா பெரியவா. கூடவே, ”ஒருத் தர்கிட்டேயும் கடன் கிடன் வாங்கப்படாது. உன் கைக்காசைப் போட்டு வாங்கித் தரணும்”னு நிபந்தனை போட்டா. அதனால, அது முடியாமலே இருந்தது. பெரியவா அப்பப்போ ஞாபகப்படுத்திண்டே இருப்பா. ஒருவழியா 1976-ல இந்த இடத்தை வாங்கினேன். மூணரை கிரவுண்டு நிலம். அஞ்சு லட்சம் இருந்தாத்தான் கட்ட முடியும். என்னோட வீட்டை வித்து, மனைவியின் நகைகளை வித்து எப்படியோ புரட்டிப்போட்டு வாங்கிட்டேன்.
”இங்கே ஒரு அம்பாள் கோவில் கட்டணும். முதல்ல ஆதிசங்கரர் பாதுகையை வைக்கணும். அப்புறம் மேல கட்டலாம். 16 அடி அஸ்திவாரம் தோண்டி, உள்ளே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதிப் போடணும். அஞ்சு ஜட்ஜ் வந்துதான் ஃபவுண்டேஷன் போடணும்”னார். சுத்துப்பட்டு இருக்கிற பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள்கிட்டே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதி வாங்கினோம்.

ஜட்ஜ் பாலசுப்பிரமணிய அய்யர்கிட்ட ஃபவுண்டேஷனுக்குப் பெரியவாளே சொல்லிட்டா. அவர் ஆக்ஞை பண்ணினா, உடனே எடுத்துச் செய்யறதுக்குப் பெரிய மனுஷாள்ளாம் காத்திருந்தா.

1982-ஆம் வருஷம்… குரோம்பேட்டைல ஒரு சின்ன இடம் வாங்கி வீடு கட்டிண்டு போயிட்டேன். அப்போ நான் சிம்ஸன்லே அக்கவுன்ட்ஸ் செக்ஷன்லே வேலை பார்த் துண்டு இருந்தேன். வேலை முடிஞ்சதும், நேரே இங்கே வந்து கட்டட வேலைகளைக் கவனிச்சுட்டு, ராத்திரி குரோம்பேட்டை போயிடுவேன்.

வேலை இழுத்துண்டே போய், 1992-லதான் முடிஞ்சுது. இந்தக் கோவிலுக்குப் பெரியவா கையாலதான் கும்பாபிஷேகம் பண்ணணும்னு எனக்கு ஆசை. ”நான்தானே எல்லாம் பண்ணி வெச்சேன். இதுக்கும் ஏன் என்னையே கூப்பிடறே? ஜெயேந்திரரைக் கூப்பிட்டுக்கோ. கும்பாபிஷேகம் பண்ற காலம், குரு வாரமும் பஞ்சமியும் சேர்ந்து இருக்கணும்”னா. பெரியவாளோட நட்சத்திரம் அனுஷம்கிறதால, அனுஷமும் சேர்ந்திருந்தா நன்னாருக்கும்னார் ஜெயேந்திரர்.

1994 ஜனவரி 8-ஆம் தேதி… 12 மணிக்கு எனக்குத் திடீர்னு கடுமையான ஜுரம்! என் குடும்பத்தார் என்னை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டாங்க. ”உங்களுக்குக் கடுமையான ஹார்ட் அட்டாக் வந்திருக்கு”ன்னார் டாக்டர். மூணு நாள் ஐசியு-ல இருந்தேன். நாலாம் நாள், டாக்டர்களே ஆச்சரியப்படும்படியா நான் குணமாகிட்டேன். ”உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடறோம். இருந்தாலும், 45 நாளைக்கு எங்கேயும் டிராவல் பண்ணவேண்டாம்”ன்னார ் டாக்டர். பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்துது… எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த அன்னிக்குதான் பெரியவா முக்தி அடைஞ்சுட்டாங்கிற விஷயம்.

அப்புறம், விஜயேந்திரர்தான் வந்து இங்கே கும்பாபிஷேகம் பண்ணி வெச்சார்.”இந்த இடத்திலே யஜுர் வேத பாடசாலை ஆரம்பிச்சு நடத்து”ன்னு சொல்லியிருந்தா பெரியவா. அதன் படி ஆரம்பிச்சு நடத்தினேன். முதல்லே ஆறு பேர் வெளியூர்ல இருந்து வந்தா. அப்புறம் பத்தாச்சு; பன்னிரண்டாச்சு. அப்புறம் வேதம் கத்துக்க வரவாளோட எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சுடுத்து.ஒண் ணரை வருஷமா யாரும் வரதில்லே. எனக்கு இது பெரிய குறை. பெரியவா ஆசைப்படி கட்டின கோயில் இது. வேத பாடசாலையும் அவர் உத்தரவின் பேரில் ஆரம்பிச்சதுதான். இது தொடர்ந்து நன்னா நடக்கணும் கிறதுதான் என் ஆசை!”- சொல்லும்போதே லக்ஷ்மிநாரா யணனின் குரலில் ஒரு தழுதழுப்பு!...


3ம்தேதி எம்மல்வி யோட பிறந்த நாள் வந்தது..
அவர் பாடிய தோடி ராக 'தாமதமேனோ ஸ்வாமி'
என்ற பாபநாசம் சிவன் பாட்டை கேளுங்கோ....

http://www.youtube.com/watch?v=d7lU2PiYO38

அதை ராகம் தானம் பல்லவி யாக குரு ஜிஎன்பி பாடி இருக்கார்..
அதையும் இங்கே கேளுங்கோ...

http://www.youtube.com/watch?v=dS4TAZBA00E

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

மாமி..வாங்கோ..இவ்வளவு தூரம்..

நானே இன்னைக்கு வர நினைத்தேன்..

ஆமாம் நாலு நாளா உன்னை காணல..பார்த்து

போலாமுன்னு வந்தேன்..

இல்ல மாமி...ஊரிலேந்து அக்கா குழந்தையும் வந்தா..

இங்கேயே சரியா போச்சு..

அம்மா இல்லையா...

இதோ வரா..

வாங்கோ..ஸஹானாவும் குழந்தையும் வந்து நாலு
நாளாச்சு..

குழந்தைக்கு என்ன பேர் ...

ராகா..ரெண்டு வயசாச்சு...

ஓ! ஸஹானா ராகமா...

மாமி..இவளுக்கு மட்டும் ஏன் மங்களம்...

இவ கடகுட்டி...இவளோட போரும் என்று தான்...

பாட்டி..பால் தா..

இதோ கலந்து தரேன்..

மாமிக்கு நமஸ்தே சொல்லு..

நமஸ்தே...

இந்தா பாலை குடி..

பாட்டி பால் ஏன் திதிகரது..

சக்கரைபோட்டு இருக்கேன்..அதான்..

பாட்டி..எங்கே காட்டு..

எதை..

சக்கரை காட்டு பாட்டி..

அதான் கலந்து போச்சே..

அப்படினா என்ன பாட்டி...எனக்கு பாக்கணும்..

ஒண்ணோட ஒண்ணு சேத்தினா..அதான் கலக்கறது..

பாட்டி இந்த பென்சிலை பாலில் போட்டா..கலந்து போகுமா?

அப்பறம் எனக்கு பென்சிலே இருக்காதா...

என்ன ராகா..பாட்டியை திணற அடிக்கிறே..

ரொம்ப சுட்டி....
ஆமாம்..

ஆமாம்..நேத்து அவள் கேட்டதை ஆச்சரிய பட்டு
போவேள்..

அவளுக்கு மருதாணி அரச்சு போட்டேன்..

அவ..ஏன் சித்தி மருதாணி இல பச்சயாய்

தானே இருந்தது..அது எப்படி சிவப்பா ஆனது...

எனக்கு..பதில் சொல்லவே தெரியல்லை...

இந்த காலத்து குழைந்தகளுக்கு ஏழாம் அறிவையும்

கடவுள் கொடுத்து விடறார் ...நமக்கு புரியரதே இல்லை...

நமக்குள் இருக்கும் பரமனை பார்க முடிந்தா விடை காணமுடியும்



மாமி..இந்த வாரம் மூணு சூப்பர் பாட்டு கேட்டேன்…

இதோ..இந்த பேப்பரில் இருக்கு….

Sankaree Sankuru Saveri composed by Shyama Sastri...
Rendered by Shri MD Ramanathan..

http://www.youtube.com/watch?v=4xOTGRNuq5w

Muruganai ninaindhu-Ragamalika...
rendered by Madurai Shri Somasundaram.....

http://www.youtube.com/watch?v=Nrbv5-cHVSU

Chandrasekara Raga thodi...
Rendered by Madurai Shri Soma Sundaram...A 56mts. Concert …

http://www.youtube.com/watch?v=mBugAQBffNs

இந்த சுதர்சன மந்திரத்தை ஜபித்தால் நல்லதாம்…
மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

வா மங்களா என்ன அக்கா கூட போனவஅங்கேயே தங்கி விட்டாய்...
இருந்து விட்டு போக வற்புருத்தினா..குழந்தை ராகாவும்
சித்தி சித்தி என்று காலை கட்டினா போக விடாமல்.....

ராகா எப்படீருக்கா..

ஓ! நல்லா இருக்கா...

மாமி...அவளைபற்றி பேசும்போது சமீபத்தில் வார மலரில்
ஒரு டீச்சர் எழுதிய செய்தி நினைவற்கு வரது...

யு.கே.ஜி.குழந்தைகளுக்கு படத்தை பார்த்து கதை சொல்லும்
வகுப்பு..

ஆலமரத்தில் கூடுகட்டிய காக்காயின் முட்டைகளை
அதே மர பொந்துக்குள் இருந்த பாம்பு தின்று விடுவதை கண்ட
காக்கா, எல்லோருக்கும் தெரியும் படி ராணியின் முத்து மாலையை
தூக்கி கொண்டு வந்து பொந்தில் போட,காவலரகள் பாம்பை அடித்து
கொன்று மாலையை மீட்டு சென்ற கதை....

எல்லா குழந்தைகளும் ஆர்வமுடன் கேட்டார்கள்..

ஒரு குழந்தை இது என்ன கதை டீச்சர் என்று கேட்டது...

இது ஒரு நீதி கதை..புத்தியினால் பலசாலிகளை வெல்லலாம்...

சரி..டீச்சர்..அதுக்காக காகம் என்ன செய்தது..

ராணியோட மாலையை கொண்டு வந்தது..

ஏன் டீச்சர் ..அது தப்பு இல்லையா..

ஆமாம்..

பாம்பை கொல்லுவதும் பாபம் தானே..

இரண்டு தப்பு நடந்தது..இல்லையா?...

சரி..காக்காவால் வேற என்ன செய்ய முடியும்...

ஏன்..டீச்சர் துஷ்டரை கண்டால் தூரவிலக வேண்டியது
தானே அந்த காக்கா..

இதுக்கு என்ன பதில் சொல்லுவது...

இந்த கதையை நாமும் கேட்டிருந்தாலும்
இந்த பதில் நமக்கு தோன்றவில்லையே!



பதித பாவனன்…. மகா பெரிவா சொல்லும்
அர்தத்தை கேளுங்கோ...

கவலையுடன் அண்டியவர்க்கு ஆறுதலை கொடுப்பவன் சாது - ஸ்ரீ சிவன் சார் (ஐயனின் பூர்வாசிரம சகோதரர்).

பரம பதிதனான தனக்கு உய்வே இருக்க முடியாது.

தான் பெரியவாள் போன்றதொரு புனித மூர்த்தியிடம் வந்ததே பிழை என்று அவரிடம் புலம்பினார் ஒருவர். அவர் புரிந்திருக்கும் மா பாதகங்களை நினைத்தால், எவரும் அவரிடம் அனுதாபம் காட்ட முடியாது தான்.


ஆயின் இங்கும் பாய்ந்தது ஸ்ரீ சரணரின் இதம் செய்யும் இதயம்.

சொன்னார் -

'பகவானின் உச்ச பெருமை பக்த சிரோன்மணிகள் மூலம் தெரிவதில்லை. பரம பதிதர்களால் தான் அது தெரிகிறது. அவனுடைய கல்யாண குணங்களில் உச்சியாக எதை சொல்லி ஸ்தோத்திரிகிறோம்? பதித பாவனன், பதித பாவனன் என்றுதானே? பரம பதிதராக சில பேர் இல்லாவிட்டால் அவர்களை பாவனப்படுத்தும் பெருமை, 'பதித பாவனன்' என்ற உச்சமான டைட்டில் அவனுக்கு எப்படி கிடைக்கும்? அதற்காகத்தான் அவனே ஸ்ருஷ்டி லீலையில் அப்படி சிலர் இருக்க பண்ணுகிறான் என்று வைத்துக்கொள். நீ எப்போது பச்சாதாப பட்டு அவன் பக்கம் திரும்பி பார்க்கிறாய் இல்லயோ? இனிமேல் தன் டைட்டிலை ரட்சித்து கொள்வதற்கு ஆகவேண்டியதை அவன் பார்த்துக்கொள்வான். பதித அத்தியாயம் முடிந்தாயிற்று. இனிமேல் பாவனம் ஆகிற அத்யாயந்தான் என்று மனசை சமாதானம் ஆக வைத்துக்கொள்ளு.

'என்கிட்டே வருகிறதுக்கு கூசவே கூசாதே. எல்லோருக்கும் நல்லது சொல்லி ஆறுதல் பண்ணத்தான் எங்களை ஆசாரியாள் வைத்திருக்கிறார். தாங்களாகவே சரியான வழியில் போகிறவர்களுக்கு நாங்கள் சொல்லிக்கொடுக்க என்ன இருக்கிறது? ஆகையினால், பகவானுக்கு பெருமை சேர்த்து கொடுக்கிற மாதிரியேதான், எங்களுக்கு எங்கள் காரியத்தை நாங்கள் முழு மூச்சோடு ஜெயித்து காட்டிய பெருமை ஏற்படணுமானால் அதற்கும் வழி தப்பினவர்கள் தான் சகாயம் பண்ணுகிறார்கள். நீ எனக்கு உபகாரிதான், அபகாரியில்லை. கூச்சப்படாமல் வந்துகொண்டிரு.'

அன்பின் அமுதம் அந்த நபரை மாற்றியது, ஆற்றியது. “


நிறைய கச்சேரி நடக்றது மங்களா..
போகத்தான் முடியலை..
கவலை வேண்டாம்...
நாளைக்கு பாக்கலாம்.

arasi
Posts: 16794
Joined: 22 Jun 2006, 09:30

Re: mangalathai kelungal

Post by arasi »

I am just passing by. Not much time to stop at Rasikas at the moment. Still, when I saw you Mangala, I had to look in!
Good to hear from you again after a spell. Even went back a few pages and read some of your old chats ;)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

Thank you ji..for your interest...

மாமி...புதுசா ரெண்டு சுலோகங்கள் கத்துண்டேன்..
அது என்ன மங்களா...
கேளுங்கோ...
சுந்தர காண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன் சொன்ன ஸ்லோகத்திற்கு ஜெய பஞ்சகம் என்று பெயர். இதைச் சொல்லி அனுமனை வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

""ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஸ்ச மஹாபல:
ராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலித:
தாஸோஹம் கோஸலேந்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மன:
ஹனுமான் சத்ரு வைத்யாநாம் நிஹந்த்ர மாருதாத்மஜ:
ராவண ஸஹஸ்ரம்மே யுத்தே ப்ரதி பலம் பவேத்
ஸலாபிஸ்து ப்ரஹரத; பாத வைச்ச ஸஹஸ்ரஸ:

அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.

""நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!


இந்த மாசம் 19ம்தேதி விநாயகர் சதுர்த்தி...
சக்தி விகடனில் வந்தது…….நீங்களும் படியுங்கோ..


குணநிதி... கணபதி!

கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணநிதி சரணம் சரணம்

- எனப் போற்றி மகிழ்கிறார் ராமலிங்க அடிகள்! சகல கலைகளும் ஒருவரிடம் சங்கமமாகி இருந்தாலும் குணம் இல்லையேல் அவரால் சமுதாயத்துக்கு என்ன பயன்?

ஸ்ரீகணபதியோ குணநிதியாக விளங்குகிறார். மகா தேவனும், மகாசக்தியும் பெற்றெடுத்த மகா கணபதி எவ்வளவு எளிமையாக இறங்கிவருகிறார், பாருங்கள்!

தங்கத்தில்தான் தன் வடிவம் வேண்டும் என்கிறாரா? களிமண் போதும் என்கிறார்!

வெண்கொற்றக் குடையா வேண்டும் என்கிறார்? காகிதக் குடை போதும் என்கிறார்!

ரோஜாப்பூ மாலை எல்லாம் வேண்டாம் அவருக்கு; எருகம்பூ மாலை போதும் என ஏற்றுக்கொள்கிறார்!

பூஜை செய்யவாவது மலர் வேண்டுமா என்றால்... 'புல் போதும்’ என அருகம்புல்லில் அர்ச்சனை ஏற்கிறார்!

அதுமட்டுமா? 'பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று பெருமையுடன் பேசுகின்றன புராணங்கள். முருகனின் திரு உருவம், அம்பிகை திரு உருவம், ஸ்ரீராமன், கிருஷ்ணர்

முதலிய திருவடிவங்களில் அனைத்து அங்கங்களும் சாஸ்திர முறைப்படி அமைய வேண்டும். பூஜை செய்யும் விக்கிரங்கள் சற்று உடைந்தோ, பங்கப்பட்டு போயிருந்தாலோ செய்யும் பூஜை பலன் அளிக்காது.

ஆனால் 'விநாயகர்’ என மனதார எண்ணி,

களிமண்ணில், மஞ்சள் தூளில், சந்தனத்தில் விரல்களால் அழுத்தி வைத்தால் போதும்; விநாயகர் வந்துவிடுவார். சாணத்தில் கூட சாந்நித்யம் அருளும் சாமான்யராக விளங்குகிறார் முதல்மூர்த்தி.

'வா’ என்றால் வருவதற்கும், 'போ’ என்றால்

போவதற்கும் நான் என்ன உங்கள் வேலைக்காரனா என பலர் கோபிக்கிறார்கள். ஆனால் பிள்ளையாரைப் பிடித்துவைத்து 'ஆவாஹயாமி’ என்றால் வந்துவிடுவார்; 'யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி’ என்றால் போய் விடுகிறார்.

ஆக... தன்னையே உதாரணமாக்கி, எளிமையே ஏற்றம் தரும் என நமக்குக் கற்பித்து, அந்த எளிமையால் பண்பும் பணிவும் மிகுந்து நாமும் நல்ல குணவானாக மாற அருள்கிறார்!

கல்விக்கு அதிபதி

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ

- என ஆனைமுகனைப் புகழ்கிறார் அருணகிரியார்.

நம்பியாண்டர் நம்பிக்கு, திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் எல்லா கலைகளையும் அருளியதை நாம் அறிவோம்!

அழகான தனது தந்தம் பாதி ஒடிந்தாலும் பரவாயில்லை; மகாபாரத கிரந்தமானது கற்றிடும் அடியவர்க்குக் கட்டாயம் வேண்டும் என எண்ணி,

அழகைப் பின் தள்ளி அறிவுக்கு முக்கியத்துவம் தந்து,

பிள்ளையார் சுழி போட்டு பிள்ளையாரே எழுதியதுதானே வியாச மகாபாரதம். அவரை வழிபட, நமக்கும் ஞானம் அருள்வார்!

உணவும் உயர்வும்...

முப்பழம் நுகரும் மூஷிக வாகன

- என ஒளவையின் விநாயகர் அகவல் பிள்ளையாரைப் போற்றுகிறது!

சாப்பிடுவதில் பெரிய சமர்த்தராக விளங்குவது பெருமையா எனக் கேட்கலாம்.

அருணகிரியார்கூட, 'கைத்தல நிறைகனி, அப்பமொடு அவல் பொரி கப்பிய கரிமுகன்’ என்றே போற்றுகிறார்.

ஏனெனில், பிள்ளையார் நிவேதனங்கள் அனைத்தும் சத்வ குண ஆகாரங்கள்.

உணவே நல் உணர்வைத் தருகிறது என்கிறது பகவத்கீதை.

தமோ குணம், ரஜோ குணம் தருகின்ற காய்கறி, உணவு வகைகளைத் தவிர்த்து சத்வ குண உணவாலேயே பிள்ளையார் பெருமை பெறுகிறார்.

மிகப்பெரிய விலங்காகவும், அமைதியாகவும் சொன்னதைக் கேட்பதாகவும் 'யானை’ விளங்குவது தாவர உணவு உட்கொள்வதால்தான்!

மனம்- வாக்கு- காயம்...

'வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்... மேனி நுடங்காது’

எனும் பாடலில் மனம், வாக்கு, காயம் மூன்றையும் புனிதப்படுத்துகிறது பிள்ளையார் வழிபாடு என ஒளவை புகழ்கிறாள்!

எல்லா தெய்வ சந்நிதானங்களுக்கு முன்பும் நாம் கும்பிடு மட்டுமே போடுகிறோம்.

முதல் தெய்வமான கணேசருக்குத்தான்... குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் போடுவது என கூடுதலாக இரண்டு வழிபாடுகள்.

கண் புருவ முடிவும், நெற்றியும் சேரும் இடத்தில் 'டெம்பரல் லோப்ஸ்’ சுரப்பிகள் உள்ளன.

இடப்புறம் உள்ள சுரப்பி தெளிவான பேச்சுக்கும், வலச் சுரப்பி குழப்பமற்ற மனதுக்கும் காரணமாக அமைகின்றன.

காதுகளை பிடித்தபடி உட்கார்ந்து எழுந்திருப்பது வாழ்நாளை நீட்டிக்கிறது. அவரை தரிசிப்பதே மனதைப் பரவசப்படுத்துகிறது.

ஆக... மனம், வாக்கு, காயம் மூன்றையும் மேன்மையுறச் செய் யும் முதல்வனுக்கு கும்பிடு, குட்டு, தோப்புக்கரணம் என மூன்றையும் சமர்ப்பித்து முதல் நிலை பெற வேண்டும்.

அனைத்தும் ஒன்றானவர்....

தேசியகவி பாரதியார் பாடிய தெய்விகப் பதிகம் விநாயகர் நான்மணி மாலை! புதுவை மணக்குள விநாயகரைப் போற்றும் அந்தப் பதிகத்தில், 'மண் மீதுள்ள மக்கள், விலங்குகள், பூச்சிகள் யாவும் இடும்பை தீர்ந்து இன்பமாய் வாழ’ என்று பாடுகிறார்.
gaNapati tALai ( Neyveli Shri Santhana gopalan..)

http://www.youtube.com/watch?v=T2Q8CYxQ2oU


அனைத்து வகை ஜீவராசிகளும் நலமுற விநாயகரே அருள்புரிவார். எப்படி என்கிறீர்களா?

அவருடைய திருவடிவத்தை ஊன்றிக் கவனித்தால் உண்மை புரியும்.

விநாயகரின் தலை- யானைத் தலை. அது, மிருகக் கூறு.

ஏக தந்தம் உடைய பக்கம் ஆண்; தந்தம் இல்லாத பக்கம் பெண் (பெண் யானைக்கு தந்தம் கிடையாது).

ஐந்து திருக்கரங்கள் - தெய்வ லட்சணம். குறுகிய கால்களும், பெருத்த வயிறும்- பூத அம்சம்.

எனவே எல்லாமுமாகி கலந்து நிறைந்தவர் பிள்ளையார். பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் தோற்றம் அருள்பவர் விநாயகர்.

நூதன நிவேதனம்

ஆதிசங்கரர் அருளியது 'ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம்’.

அதில், 'முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்’ என ஆரம்பம் செய்கிறார் ஆதிசங்கரர்.

மோதகம் படைத்தால் முக்தி அருள்வார் விநாயகர்.

'போதகம்’ என்றால் தமிழில் 'யானை’ என்று பொருள்.

போதகம் முன்பு மோதகம் எனும் கொழுக்கட்டையை நிவேதித்தால், பாதகம் அனைத்தும் நீங்கி சாதகம் ஆகும் என்கிறது சாஸ்திரம்.

கொழுக்கட்டையிலேயே அந்தக் குறிப்பு இருக்கிறது. அரிசி மாவில் சொப்புபோல செய்கிறோமே, அது உடம்பைக் குறிக்கிறது.

உள்ளே வெல்லத்தில் பூரணம் வைக்கிறோமே, அது ஆத்மாவை குறிக்கிறது. இப்படிச் செய்த மோதகத்தைப் படைத்து அவரைச் சரண் அடைவது பரிபூரணமாக நம்மை அவரிடம் ஒப்படைக் கிறோம் என்பதைக் காட்டுகிறது.

பரிபூரண சரணாகதியே மோட்சம் அடையும் வழி இல்லையா?

புலவர்கள் போற்றும் நாயகன்!

'வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுத்து வரும்’

என்பது புலவர்களின் பொன்னுரை.

ஒளவைப் பாட்டி விநாயகரை பூஜை செய்ய தொடங்கும் நேரத்தில் சுந்தரர், சேரமான்பெருமாள் நாயனார் இருவரும் வந்தனர். 'மூதாட்டியே! நாங்கள் கயிலாயம் செல்கிறோம். தாங்களும் வாருங்கள்’ என அழைத்தனர். ஒளவையோ 'எனக்கு கணபதி பூஜையே முதல்; தாங்கள் செல்லுங்கள்’ என்றாள்.

ஒளவைக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றபடி இருவரும் கிளம்பிச் சென்றனர். ஆனால் ஒருமைப்பட்ட மனதுடன் விநாயகருக்கு பூஜை செய்து முடித்ததால், கணபதியே பிரசன்னமாகி கணநேரத்தில் கயிலாயத்தில் ஒளவையைச் சேர்த்தார். நாமும் 'வாழ்விக்கும் முகமே வேழ முகம்’ எனத் தெளிவோம்......


மாமி...இதுவும் சக்தி விகடனில் வந்தது தான்...

இதையும் படிங்கோ...

“உலகையே மயக்கும் வல்லமை நம்மிடம் மட்டுமே உள்ளது என்று சப்த ஸ்வர தேவதைகள் ஒருமுறை கர்வம் கொண்டன. இதனால் கோபமுற்ற ஸ்ரீசரஸ்வதி தேவி, அவர்களுக்குச் சாபமிட்டாள். இதில் நொந்துபோன தேவதைகள் தங்களை மன்னித்து அருளும்படி தேவியிடம் வேண்டினர்.

( Thiruchi) 'உச்சியில் உள்ள விநாயகரையும், மலையைச் சுற்றியுள்ள 12 விநாயகர்களில் ஏழாவது விநாயகரையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், சாப விமோசனம் பெறுவீர்கள்’ என அருளினாள் கலைவாணி. “

அதன்படியே, சப்த ஸ்வர தேவதைகளும் வணங்கித் தொழுது வரம் பெற்ற தலம் இது. எனவே, ஏழாவது பிள்ளையார் எனப்படும் ஏழைப் பிள்ளையாரை வணங்கித் தொழுதால், சங்கீத ஞானம் கிடைக்கப் பெறலாம் என்பது உறுதி! ஏழு ஸ்வரங்கள் வணங்கியதன் அடையாளமாக இங்கு ஏழு மணிகள் அமைக்கப்பட்டுள்ளன.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

மத்யமாவதி ராகம்...

மாமி...உங்களுக்கு படிச்சு காண்பிக்க தான்
இந்த லாப் டாப்பையே கொண்டு வந்தேனாக்கும்..
ஸ்ரீ ரா. கணபதி அவர்கள் எழுதியதிலிருந்து....மாமி..
படியுங்கோ...
"அந்த பொன்னடிகள்தாம் பெயர் தெரியாத எத்தனை குக்க்ராமங்களில் பட்டு, பல காலம் கூட தங்கி, அவற்றை புனித ஸ்தலங்களாக புகழ் பெறவைத்திருக்கின்றன!
ஸ்ரீ பெரியவா, காட்டுப்பள்ளியில் 1965 ம் வருஷத்துக்கு முன், சந்தவேளூர் என்ற ஊரை, சிவலோகமாக்கினார். அவ்வருஷ சிவராத்ரியை அங்கே நடத்தினார்.

பிற்பகல் நாலு மணி இருக்கலாம். பொக்கையும் போரயுமான படிக்கட்டுகளும், பாசியும் பசலையுமான தண்ணீரும் கொண்ட குளக்கரையில் இந்த நூற்றாண்டு கண்ட அந்த உண்மையானவேதகால சந்நியாசி அமர்ந்திருந்தார். விந்தையாக கழுத்தில் மலர் மாலை அணிந்திருந்தார். சன்யாசிகள் மாலை அணியலாமா அன்று ஒரு வாதமே எழுந்ததுண்டு. அனால் பெரியவா மாலை அணியும் முறையை புரிந்து கொண்டு பார்த்தால் அதை தனக்கு அலங்காரமாக அவர் தரிக்கவேயில்லை என்று தெரியும். மாலையை அவர் கழுத்தில் போட்டுக்கொள்ளாமல் சிரசிலேயே வைத்து கொள்வது வழக்கம். சிரசில் குருமூர்த்தியான அம்பிகையின் பாதம் இருப்பதாக
சாஸ்திரம். பெரியவாளுக்கோ அந்த சாஸ்த்ர அனுபவமே! அதனால் குரு அஞ்சலியாக அம்பாள் சரணத்திற்கு அலங்காரமாகத்தான் அவர் "அலங்கல் அணிந்தருள்வது" அப்புறம் அது நழுவி கழுத்தில் விழும்போது அவளது பிரசாதமேயன்றி சுய அலங்காரமல்ல. அப்படி கழுத்தில் சரிந்ததை உடனே களைந்து விடுவதேஅவரது பொது வழக்கம்.
இன்று வழக்கத்திற்கு மாறாக மாலையும் கழுத்துமாகவே மனோஹர தரிசனம் அளித்தார். இளைஞரொருவர் அவரது
திருமுன்பாடிக்கொண்டிருந்தார். நான் செய்த பாக்கியம் பெரியவாளை தரிசித்தது மட்டுமல்ல; நான் போகும்போது பாடகர் பாட்டின் முடிவு பகுதிக்குவந்திருந்ததுதான்! அவர் சரணத்தின் பின்னிரு வரிகளுக்கு வந்து ஓரிரு நிமிஷத்திலேயே அதை முடித்தது என் பாக்கியமே! அப்பேர்ப்பட்ட"தேவ கானம்" !
"கராஜுனி ஹ்ருதய சரோஜவாசினி முராரி சோதரி பராசக்தி ந்னு" என்று அவர் திருப்பியபோது, நல்ல வேளை, என் கோபம் சிரிப்பாக மாறியது!

முந்தைய பாத இறுதியில் வரும் "த்யா" என்பதோடு இணைத்து "த்யாகராஜுனி ஹ்ருதய சரோஜ" என்று பாட வேண்டியதைத்தான் அந்த புண்ணியவான் "கராஜுனி" என்று அமர்க்களமாக தாளம் தட்டி சிதைத்து பாடினார்.

பெரியவாளின் பெருமைகள் அனந்தம் என்றால் உபசார வாக்கல்ல. சத்தியமாகவே அனந்தம்தான்! அந்த பெருமைக்கு இரு கண்மணிகள்அல்லது இரு சுவாச கோசங்கள் போல பொறுமையும், எளிமையும். மற்ற விஷயங்களை பொறுத்து கொண்டாலும் பொறுத்து கொள்ளலாம்; ஒரு தேர்ந்த ரசிகனால், ரசக்குறைவானதை பொறுத்து கொள்வது மாத்திரம் ரொம்ப ரொம்ப ஸ்ரமமானது! அந்த ஸ்ரமசாத்தியத்தைதான் நம்பெரியவா அனாயாசமாக சாதித்திருக்கிறார்! ஏனென்றால், இன்று 'பாட்டு பாடுதல்"
என்ற அந்த பாடு படுதலுக்கு ராகம் மட்டுமின்றி,சாஹித்யமும் ஆளாயிற்று. இசை கொலை பிளஸ் மொழி கொலை!

"வினாயகுநிவெல்லன்னு ப்ரோவவேனினு வினா வேல்புலேவரம்மா"

என்ற பல்லவியை எடுத்து, அதில் எத்தனை அக்ஷர பிழை, ஸ்வர பிழை செய்யலாமோ அவ்வளவும் செய்து, ஒரு வழியாக தலைகட்டினார்.பொறுமையின் அவதாரமான பெரியவா இனித்த முகமாகவே பாட்டை கேட்டு கொண்டிருந்தார். பாடி முடித்தவர் , "பாட்டு சரியா இருந்துதா?" என்று கேட்டார்.

"என்ன தைரியம்?" என்று ஆச்சரியப்பட்டேன். பெரியவா என்ன சொல்ல போகிறார் என்று ஆர்வமாக கேட்டேன். அவர் சொன்ன பதில் மேலும்ஆச்சரியமாக இருந்தது.
"எனக்கு சரியா இருந்தது. ஒனக்கு வேண்டியது அதானே?" என்றார்.

"ஆமாம் பெரிவா, எனக்கு வேற ஒண்ணும் வேணாம்" என்று பாட்டுக்காரர் தண்டமாக விழுந்து கும்பிட்டார்.
அவரிடம் வேடிக்கையாக பேச ஆரம்பித்தார் பெரியவா.

"இது என்ன ராகம்?"

"மத்யமாவதி"

"மத்யமாவதியா? அபூர்வ ராகம்னே சிலதை சொல்றதுண்டோன்னோ, அப்படி அபூர்வம பாடினே"

"பெரிவா அனுக்ரகம்"

பாட்டுக்காரரிடம் என் கோபமும் சிரிப்பும் போய் பரிவு உண்டாயிற்று.

நன்குபரிச்சயமான ராகத்தையே உருமாற்றி ஏதோ அபூர்வ ராகம் போல
அவர் பாடினார், என்பதையே அந்த பொல்லாத கிழவனார் குறும்பில் குத்தவதை புரிந்துகொள்ளாத அப்பாவியாக இருக்கிறாரே என்ற பரிவு.
இம்மாதிரி அப்பாவிகளிடம் பெரியவாளின் கருணை இரு மடங்காக பெருகும். பின் ஏன் குறும்பிலே குத்தினார் என்றால், அவர்கள் பெரும்கருணையில் பாதியளவே பெறுகின்ற "புத்திசாலி"களான நம்முடைய புத்திக்கும் வேடிக்கை வினோதம் காட்டத்தான்! குத்தல் நமக்குத்தான் தெரியுமே தவிர, குத்தப்படுபவர்களுக்கு தெரியாது. அதுதான் அவர்கள் அப்பாவிகளாச்சே! குழந்தையிடம் நாம்,அம்மா குத்து, திம்மா குத்து"விளையாடும்போது, பிறருக்குத்தான் மிகவும் பலமாக குத்துவது போல தெரியுமேயொழிய குழந்தையின் கையில் குத்து மெத்தாகத்தானேவிழும்! பரிஹசிப்பதாக நமக்கு காட்டும்போதே, "இவரை விட அழகாக உரையாட நவகண்டத்தில் ஒருவர் உண்டா"

எனத்தக்க நாயகர்.

"மத்யமாவதின்னா என்ன?" அப்பாவியை விடவும் அப்பாவி போல் கேட்டார்.

"ராகத்தின் பேரு" பாட்டுகாரரிடமிருந்து அப்பாவி பதில் வந்தது.

"அதுதான், நான் என்ன ராகம்னு கேட்டப்பவே மத்யமாவதின்னுட்டியே!

அதையேதான மறுபடியும் சொல்றே? மத்யமாவதின்ன என்னஅர்த்தம்?"

"மத்யமம்னா "நடு" இல்லியா? நடு பாகம் அவதியா இருந்த மத்யமாவதியா?" "பெரிவா எப்படி சொல்றேளோ அப்படி"

"புத்திசாலி"களான நாம், அந்த அப்பாவி போல அப்படி பெரியவா சொல்வதை வேதவாக்காக கொள்வோமா?

"எழுத்தாளன்"ன்னு என்னை கூப்பிட்டு,"மத்யமாவதிக்கு நான் குடுத்த
defenition கேட்டியோ?"

"பாட தெரியாதவா பாடினா........

மத்யமாவதி மத்யமத்துலே மட்டுமில்லாம
ஆரம்பம் - மத்யமம் அந்தம்
எல்லாமே அவதியாத்தான்இருக்கும்" என்றேன்.

சட்டென ஏதோ நினைத்து கொண்டார்ப்போல், பாட்டுக்காரரை பார்த்து, "நீ இந்த பாட்டு பாடினதுக்கு என்ன காரணம்?"

"அனாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி -ன்னு வரதுதான்"

"அதனால..." அடேயப்பா! அப்பாவியினும் அப்பாவியாக என்ன நடிப்பு!!

"பெரிவாளுக்கு காமக்ஷிதான் எல்லாம்; பெரிவாளே காமக்ஷிதான்-கிறதால" ஆஹா!! அப்பாவி என்ன போடு போட்டு விட்டார்? "புத்திசாலி"களால் இயலாத எத்தகைய சகஜ பாவத்துடன் சத்தியத்தை சொல்லி விட்டார்!
சற்றேனும் இது போல அந்த புத்திசாலிகள் சொன்னாலும், உடனே பேச்சை 'அபௌட்டர்ன்" திருப்பி விடும் பெரியவா, அன்று அதை தாமும் சகஜமாக ஏற்று கொண்டு "காமக்ஷிதான் எனக்கு எல்லாம், நானே காமக்ஷிதான் [ இப்படி அவர் இயல்பாக கூற கேட்டபோது உள்ளங்கால் முதல்உச்சந்தலை வரை ஜிவ்வென்று சிலிர்த்ததுகாமாக்ஷி ங்ரியே!!!!நீ என்ன கண்டு பிடிச்சியோ? எதை வெச்சு கண்டுபிடிச்சே?"

"பெரிவா" அப்பாவி தேம்ப ஆரம்பித்தார்,"கண்டு பிடிக்கல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது, பெரிவா! ரொம்ப பேர் அப்படித்தான் சொல்லியிருக்கா. எனக்கும் பெரிவாளை பாத்தா அப்பிடித்தான் தோணித்து" என்று தேம்பலுக்கிடையே குழறி முடித்தார். அப்பாவி! உன்பாக்யமே பாக்கியம்!!

பூலோகம் காணாத புஷ்ப்பமா பெரியவா உட்க்கார்ந்திருந்தார். தேம்பல் தேய்ந்தது. குறும்பு குத்தலில் மீண்டும் இறங்கினார் குருநாதர். "சரி......அனுபல்லவிலே "காமாக்ஷி"ன்னுனா இருக்கு? ஒரு வேளை பாட்டு பிள்ளையார் பேர்ல இருக்குமோ என்னமோ! நீ பாட்டுக்கு காமாக்ஷிபாட்டுன்னு பாடிட்டியே?"
"என்ன தப்பா இருந்தாலும் பெரிவா மன்னிச்சுக்கணும்" என்று அழ இருந்த பாட்டுக்காரரை, "அழாதேப்பா! அழாதேப்பா! என்று சந்தனமாகஆற்றி கொடுத்தார். "தப்பு ஒண்ணும் சொல்லலேப்பா! "விநாயக"ன்னு ஆரம்பிச்சுட்டு "காமாக்ஷி"ன்னு போறதேன்னு கேட்டேன்.அவ்வளவுதான். போகட்டும், பாட்டு என்ன பாஷை?" குறும்பு குத்தல்தான்! "தெலுங்கு" என்றார் பாட்டுக்காரர். "அப்படியா!" என்ற பெரியவா ஒரு "திம்திமா" குத்தே விட்டார்! அபூர்வ ராகம்பாடினாப்ல, அபூர்வ பாஷையும் பாடரயோன்னுனா ஆச்சர்ரியப்பட்டேன்!"

"பெரிவா அனுக்ரகம்!" திம்திமாவையும் மெத்திலும் மெத்தாக ஏற்ற பதில்.பாட்டுக்காரர் குறித்து முதலில் கோபமுற்றவன், அப்புறம் சிரித்தவன்,
பின்னர் பரிவு கொண்டவன், இப்போது அழுதுவிடுவேன் போலாயிற்று! "பாக்யசாலி !" உன் அப்பாவித்தனம் எனக்கு வாய்க்குமா?"

"புரிஞ்சாலும் சரி, புரியாவிட்டாலும் போகட்டும் [குறும்பு குத்தல்] பெரியவா பேசறா, கேட்டுண்டயிருப்போம்னு ஒக்காந்திருக்கியே...... பஸ்போய்ட போறதுப்பா! என்ன டைம்?" என்று பறந்தார். பாட்டுக்காரரை பற்றி சொன்னார். வலக்கை, இடக்கை தெரியாத ஆயர்களிடம் கீதையை தனக்குள் அடக்கி கொண்டிருந்த ஞானச்சாரியனுக்கு இருந்த அதே பரிவு.
பாட்டுக்காரருக்கு வேலூர் தாண்டி ஏதோ கிராமமாம். "ஸ்வல்ல்ப்ப பூஸ்திதி. அதுதான் ஜீவனோபாயம். படிப்பு பண்ற க்ருத்ரிமம் தெரியாம இருந்துண்டிருக்கான் [படிப்பு ஏறாததை இத்தனை அழகாக ஏற்றம் கொடுத்து சொல்ல அந்த எளிமை தெய்வத்தால்தான் முடியும். இங்கே நம் அத்தனை பேருக்கும் குறும்பு குத்தல்]
விதந்து தாயாரும் ஒரே பிள்ளையான இவனுமா இருந்துண்டிருக்கா.

கல்யாணத்தை பத்தி யோஜனை போகலையாம். அவா பாட்டுக்கு ஒரு கஞ்சியை, கூழை குடிச்சுண்டு ஒருத்தருக்கு ஒரு ஹானி செய்யாம நிம்மதியா இருந்திண்டுருக்கா.
பாட்டுன்னா இவனுக்கு கொழந்தை நாள்லேர்ந்து ஒரு ஆசையாம். சிக்ஷை சொல்லிக்க வசதி கெடயாது. யார் ஆத்திலயாவது,ஹோட்டல்லயாவது ரேடியோ, ரெகார்ட் வெச்சா ஓடி ஓடி போய் கேக்கறதாம். தனக்கு இருக்கற க்ராஹ்ய சக்தியிலே எவ்வளவு பிடிச்சுக்கமுடியறதோ பிடிச்சுக்கறதாம். லட்சியமும், மனோபாவமும்தான் முக்யமே தவிர, கார்யத்ல என்ன சாதிக்க முடியுங்கறதா முக்கியம்! அப்படி,அங்க இங்க ஓடி தன்னால முடிஞ்ச மட்டும் பாட்டு கத்துண்டு இருக்கான். என்ன பத்தி கேள்விபட்டதிலேந்து...[பாட்டுக்காரரை பார்த்து]எப்போப்பா கேள்விப்பட்டே?"

"கனகாபிஷேகம் நடந்துதே அப்போ"

"அதாவது, ஏழெட்டு வருஷமா, அம்பாள், கிம்பாள்" ன்னு என்னை பத்தி யாரோ சொல்லி கேட்டதுலேர்ந்து என்கிட்டே ஒரே பக்தி வந்துடுத்தாம்.எனக்கு பாடி காட்டணும் காட்டணும்..ன்னு ஆசையாம். "அதெல்லாம் நம்மை அல்லௌ பண்ணுவாளான்னும் பயமாம். அதோட, காஞ்சிவரம் வந்துட்டு போறதுன்னா ரெண்டு, மூணு ஆகுமே, அதுக்குகூட வசதி இல்லாத ஸ்ரமமாம்"....
பாட்டுக்காரரின் தேம்பல் பெரியவாளை இழுத்தது. அருள்மயமாக அவர் பக்கம் திரும்பி, "அழாதேப்பா! பணம் காசு வரும் போகும். நீ அதுக்காக பறக்காம இருக்கியே, இந்த மனசு யாருக்கும் வல்லே; வரது துர்லபம். ஐநூறு ஆயிரம் சம்பாதிக்கற இளம் பசங்ககூட [சொன்னது 40வருஷங்கள் முன்னால்] அமெரிக்காவுக்கு ஓடலாமான்னு பாக்கற நாள்ல, பசங்களை சொல்வானேன்? ஆயிரம், ரெண்டாயிரம் சம்பாதிச்சு ரிடையர் ஆனவாகூட extension க்காக இல்லாத தில்லு முல்லு பண்ற இந்த நாள்ல, போறும்கிற எண்ணம் வரதே இல்லே...ஏதோ வர மாதிரிக்ஷணம் வந்தாலும் ஓடி போய்டறது. ஒனக்கு அது தன்னால வந்திருக்கு. அது போகவும் படாது. என்னை பாக்கறதுக்காக கூட பணம் காசுவந்தா தேவலையேன்னு நெனைக்காதே. நா... ஒன் கூடவேதான் இருக்கேன்னு வெச்சுக்கோ......."
யாருக்கு கிடைக்கும் அந்த சர்வகால சஹவாச வாக்குறுதி!

பாக்கிய அப்பாவி நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தார். "என்னை பத்தி கேட்டதுலேர்ந்து பாக்கணும், பாடணும்னு தவிக்கஆரம்பிச்சுட்டான்........ஏழெட்டு வருஷமா எனக்காக தவிச்சிருக்கான். தபஸ் இருக்காப்ப்லேயே........இப்பத்தான் வாழ்நாள்ல மொதல் தரமா savings ன்னு ஒரு பத்து பதினஞ்சு கையிலே சேந்துதாம்.....அது அப்படியே பெரியவாளுக்குன்னு [பெரியவா அடக்கிகொண்ட போதிலும் அவரதுஉள்ளுருக்கம் அந்த வார்த்தைகளில் ஜாடை காட்டியது] பஸ் சார்ஜ் போக, மீதிக்கு எனக்கு புஷ்பம், பழம், இதோ மாலைபோட்டுண்டிருக்கேனே, இது எல்லாம் வாங்கிண்டு ஓடி வந்துட்டான் [ஓஹோ! மாமுனிவர் கழற்றாமல் அணிந்திருந்த மாலையின் ரகசியம்இதுதான?] திரும்பி போறதுக்கு சரியா என்ன பஸ் சார்ஜோ அவ்வளவுதான் கையிலே வச்சுண்டிருக்கான்"

அடாடா! அப்பாவி! உன் பக்தி மட்டுமில்லை, அபரிக்ரஹமும், த்யாகமும்கூட எங்களுக்கு கனவிலும் வராது!
அந்த பாகியசாலிக்கு ஏதேனும் பணிபுரிய வேண்டுமென எனக்கு உந்துதல் ஏற்ப்பட்டதால், "ராத்திரி பூஜை பாத்துட்டு போறமாதிரிதான்வந்திருக்கேன். அதனால, அவரை எங்க வண்டியிலே கிராமத்துக்கு கொண்டு விட்டுட்டு வ
வரச் சொல்லவா? உடனே பெரியவா பளிச்சென்று சொன்னார் "அந்த சவுகர்யத்துக்கேல்லாம் அவனை காட்டி கொடுக்காதே! [காட்டிகொடுக்காதே....என்ன அர்த்தபுஷ்ட்டியான பதப்ரயோகம்!]

"பாத்தியா.......பெரிய எழுத்தாளர் ஒன்கிட்ட எவ்வளவு பிரியமா இருக்கார்? அதுக்காக அவர் எழுதறது, எதையாவது படிச்சுட்டு திண்டாடாதே! அவர் பணம், காசு கொடுத்தா தொடாதே! கார் சவாரி பண்ணி வெக்கறேன்னாலும் ஒத்துக்காதே !"
பையன் சொன்னார் "நான் படிக்க மாட்டேன் பெரிவா! எனக்கு அதெல்லாம் புரியாது; காசும் யார்கிட்டேயும் வாங்கறதில்லே, பெரிவா; கார் சவாரிக்கேல்லாம் ஆசைப்படலை பெரிவா! பெரிவா ஆசிர்வாதந்தான் வேணும்"

"வேண்டியமட்டும் தரேன் " என்று வாரிவிட்ட வள்ளல் பாகியசாலியிடம் "ஒனக்கு நாழியாச்சு.....சட்னு போய் சந்திர மௌலீஸ்வரருக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வா, பிரசாதம் தரேன்"

"சந்திர மௌலீஸ்வரர்னா எந்த சுவாமி? எங்கே கோவில் இருக்கு?" என்று பெரியவாளையே கேட்டார், தன அறியாமையாலேயே கண்களை மல்க செய்த பாக்கியசாலி.

"சந்திர மௌலீஸ்வரர்தான் இந்த மடத்துக்கு சுவாமி. அதோ அங்கேதான் நாங்க அவரை வெச்சுண்டு தங்கி இருக்கோம். போய் நமஸ்காரம்பண்ணிட்டு ஓடி வா"
"மடத்து சுவாமி காமாக்ஷி அம்மன் இல்லியா?"
"அவளுந்தான். அவ மடத்துக்கு மட்டும் இல்லாம ஊர் உலகத்துக்கெல்லாம் பொதுவா காஞ்சிபுரத்ல பொது கோவில்லஇருக்கா........அவளேதான் இந்த மடத்தை பாத்துக்கறதுக்காக, இந்த மடத்து சாமியார்கள் மட்டும் பூஜை பண்ணறதுக்காக - ஆனா மடத்துக்காக மட்டும் இல்லாம, லோகம் பூராவுக்குமாக பூஜை பண்றதுக்காக - சந்திர மௌலீஸ்வரர்ன்னு அவளோட ஆத்துக்காரர்

[ எளியவர்க்கேற்ற எளியபத பிரயோகம்] அவரை ஸ்படிக லிங்க ரூபத்திலே இங்கே அனுப்பிச்சு வெச்சு, அவர் பக்கத்திலே தானும் வேறே ஒரு மாதிரி ரூபத்திலே [ ஸ்ரீசக்ரம், மேரு என்றெல்லாம் சொல்லி அவரை திண்டாட வைக்காத அருமை பாருங்கள்] இருக்கா. கவசமும் அலங்காரமும், புஷ்ப்பமுமாபோட்டிருக்கரதாலே ஒனக்கு லிங்கம், அம்பாள்ன்னு எல்லாம் ஒண்ணும் ஸ்பஷ்ட்டமா தெரியாது. அதுக்காக தேடிண்டு இருக்காதே! "இங்கேசுவாமி இருக்கார் ன்னு " நெனச்சுண்டு ஒரு நமஸ்காரத்தை பண்ணிட்டு ஓடி வா" அவர் போனதும் என்னிடம் "நீ அவனை கார்ல அனுப்பி வெச்சு கார், மோர் ன்னு போய் கிராமத்தல எறங்கரான்னு வெச்சுக்கோ, அப்பா ஒருமெதப்பு எண்ணம் வந்தாலும் வந்துடலாம். அவனுக்கு எதுக்கு அதெல்லாம்? அவனுக்கு வசதி வேண்டாம், சவுகர்யம் வேண்டாம்,
status,தோரணை ஒண்ணும் வேண்டாம். அறிவு, வித்வத்கூட வேண்டாம். ஆமாம், வேண்டாந்தான்! சொல்றேன் கேளு"

"சமீப காலமா வேலூர்லேர்ந்து ஒரு பாட்டு வாத்யார் என்கிட்டே வந்துண்டு இருக்கார். ஓரளவு விஷயம் தெரிஞ்சவர்; அதைவிட [குறும்பானசிரிப்புடன்] பொறுமைசாலின்னும் தெரியறது.........நான் சொன்னேன்னா.....இவனுக்கு ப்ரீயாவே கத்துக்கொடுப்பார். அப்படி பண்ண அவருக்குஅபிப்ராயமில்லேன்னு தெரிஞ்சாலும், நான் யார் தலையிலாவது கை வெச்சு அவனுக்காக சம்பளம் கட்டறதுக்கு ஈஸியா ஏற்பாடுபண்ணிடலாம்.......ஆனா அந்த மாதிரி எதுக்கும் அவனை நான் காட்டி கொடுக்க நெனைக்கலே .....சரியா பாடறதுங்கர சாமர்த்தியம் கூடஅவனுக்கு வேண்டாம். அவன் பாட்டுக்கு இருக்கறபடி இருக்கட்டும். இப்ப பாடறபடியே பாடிண்டு போகட்டும். தற்கால புத்திசாலி உலகத்திலேயும் தப்பி தவறி, இந்த மாதிரி அசடா இருக்கறவா, நித்திய அசடாவே இருக்கட்டும். அவாளை கெடுக்க வேண்டாம்னே எனக்கு இருக்கு"

சந்திர மௌலீஸ்வரர் யாரென்று தெரியாமலே, நடமாடும் சந்திர மௌலீஸ்வரியால் இன்றைய புத்திசாலி உலகுக்கு மாற்று மருந்தாக போற்றப்பட்ட பாக்கியசாலி, அவர் சொன்னபடியே நமஸ்கரித்து விட்டு வந்தார்.
"நமஸ்காரம் பண்ணிக்கோ நாழியாச்சு!"

பிரிய மனமின்றி, கண்ணீரும் கம்பலையுமாக பாக்கியசாலி நமஸ்கரித்தார்...........நீ பாடினியே, அந்தவிநாயகனை ரக்ஷிக்கராப்ல ஒன்ன அம்பாள் எப்பவும் ரக்ஷிசுண்டு இருக்கட்டும்" என்று ஆசிர்வதிக்கவே ஏற்ப்பட்டதிருக்கரத்தை தூக்கினார்…"

(shared from Varagooran Narayanan at FB…http://www.facebook.com/varagooran.nara ... 0720603765
)


இந்த ஆச்சரியத்தை பாருங்கோ...

கும்போணத்திற்கு அருகில் வளம் கொழிக்கும் வயல்களுக்கிடையே உள்ள சின்னஞ்சிறு கோயில்தான் ஊத்துக்காடு காளிங்க நர்த்தனக் கண்ணன் கோயில்.
இந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகிருஷ்ணர், காளிங்கன் எனும் நாகத்தின் படத்தின் மீது தன் ஒரு காலை வைத்தும், ஒரு காலைத் தூக்கியும் நர்த்தனமாடுவதுடன், ஒரு கையால் நாகத்தின் வாலை லாகவமாகப் பிடித்துக் கொண்டுள்ள காட்சி நெஞ்சை விட்டகலாது.
இதிலென்ன சிறப்பு என்றால் நாகத்தின் படத்தின் மீது கிருஷ்ணன் தன் காலை வைத்துள்ளது போலத் தோன்றினாலும், படத்திற்கும் கிருஷ்ணன் பாதத்திற்கும் இடையே மிக நுண்ணிய இடைவெளி உள்ளதை, கோயில் பட்டாச்சாரியர் ஒரு காகிதத்தை அந்த இடைவெளியில் விட்டுக் காண்பிக்கிறார்!
அதிசயமாகத்தான் உள்ளது. ஆனால் உண்மை! சிற்ப சாஸ்திரத்தில் நன்கு தேர்ந்த சிற்பியின் கை வண்ணம் மெய் சிலிர்க்க வைத்தது!

( http://dinamani.com/edition/story.aspx? ... &SEO&Title )

arasi
Posts: 16794
Joined: 22 Jun 2006, 09:30

Re: mangalathai kelungal

Post by arasi »

VKailasam,

ini
madhyamAvathi
kETkaiyilellAm
indak kadai manadil thOnRi
nAn asaDAi irukkum tharuNangaLin
mahimai pugalum--mahAnai
en manam niRuthum...

'ezhuthALar'--uNmaiyilEyE
ezhuthai ALbavardAn!--avar
kadhai sollum vidamum
idil sErndu, inRen
nALE nalla nALAgiyadu!

nanRi...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

arasiji..

From the time I first read it, I would have repeated the reading more than a dozen times..each time I had tears flooding my eyes..

I am not able to tell whether it was due to the karunam of periva or due to the innocence of the singer or due to the literature excellence of
Ra Ganapathi......

arasi
Posts: 16794
Joined: 22 Jun 2006, 09:30

Re: mangalathai kelungal

Post by arasi »

And the very keen sense of humor in mahA Periavar.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: mangalathai kelungal

Post by Pratyaksham Bala »

Mods:
You may consider shifting this thread to 'Languages & Literature - Tamil'.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

வா..மங்களா...என்ன ஊரிலித்தனை நாள்..
ஆமாம் மாமி அக்காவுக்கு உடம்பு முடியவில்லை..
உதவிக்கு வர சொன்னாள்...அதான்..
இப்போ பரவால்லை...

பாமா மாமியின் பேரன் நன்றாக படிப்பதில்லை
என்று அந்த மாமி கூத்தனூருக்கு போய்விட்டு தரிசனம்
பண்ணிவிட்டு வந்தாள்....
இப்ப எல்லாம் பிள்ளையாருக்கு தோப்புகரணம்
போடுவதில்லை..
.
ஆமாம் மாமி...அதை பற்றி ஒரு செய்தி படித்தேன்...
இதை படியுங்கோ...

பாதங்களை ஒருங்கு குவித்தபடி நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும்.

மேலைத்தேய மருத்தவ ஆராய்ச்சிகளும் சிபார்சுகளும்
லொஸ் ஏஞ்சலைச் சேர்ந்த உடற்கூற்று வைத்தியர் எரிக் றொபின்ஸ் (Dr.Eric Robins) தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறுவதாக கூறுகிறார். பரீட்சையில் குறைந்த புள்ளிகளை எடுத்த மாணவன் தோப்புக்கரணப் பயிற்சியின் பின் நல்ல புள்ளிகளைப் பெற்றதாகக் காட்டுகிறார்.
யேல் பல்கலைக்கழக (University of Yale) நரம்பியல் நிபுணர் யூஜினியஸ் ( Dr.Eugenius Aug) அங் இடது கையால் வலத காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளைக்கலங்களும் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்.
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விடயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
பிள்ளையாருக்கு 'தோப்புக்கரணம்' போடுவதின் விஞ்ஞான விளக்கம்.
http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs
Read it at http://www.superbrainyoga.org/


சிவ மந்திரத்தை பற்றி ஒரு சேதி..
"பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்." (பெரியவா சொன்னது)


முயற்சி செய்தால் தான் இறைவன் அதை வெற்றியடைய வைப்பார் ...
மாமி...அதற்கான ஒரு கதை
ஓர் ஊரில் ஒரு சிவ பக்தன் இருந்தான் ... நாள்தோறும் கோவிலுக்கு சென்று எனக்கு லாட்டரி சீட்டில் 1 கோடி ரூபாய் விழ வேண்டும் என்று
பிராத்தனை செய்தான் ... 6 வருடம் ஓடி விட்டது ...
அவனும் அவன் கோரிக்கையை தினமும் சிவ ஆலயத்துக்கு சென்று மனதார வேண்டி கொண்டே
வந்தான் ..
பார்வதி சிவனை பார்த்து ஏன் உங்கள் பக்தனை சோதனை செய்கீர்கள் ... 6 வருடங்களாக ஒரே ஒரு வரம் தானே கேட்கிறான் ..
கொடுக்க வேண்டிய தானே என்று கேட்கிறாள் ...
அதற்கு சிவன் நீ சொல்வது சரி தான் .. என் பக்தன் என்னிடம் வேண்டிய அன்றைய
தினமே நான் அவன் வாங்கும் லாட்டரி சீட்டிற்கு 1 கோடி ரூபாய் விழும் என்று ஆசிர்வதித்து விட்டேன் .. ஆனால் அவனோ
இன்னும் லாட்டரி சீட்டே வாங்க வில்லை .. நான் என்ன செய்வது .... என்று கூறினார் ...

நீதி : கடவுளிடம் உங்கள் விருப்பத்தை கேட்கலாம் ...ஆனால் முயற்சி செய்தால் தான் இறைவன் அதை வெற்றியடைய வைப்பார் ...



மாமி...காந்தி ஜயந்தி...அக்டோபர் இரண்டாம் தேதி...
மதுரை மணி அய்யர் பாட்டு இங்கே கேளுங்கள்....
E' SWARA 020 Madurai mani Iyer RTP Mahatma Mani Mozhi Vazhi Nadappom..( 36.12 Mts.,)

http://www.youtube.com/watch?v=p2rR0nMx7mA

arasi
Posts: 16794
Joined: 22 Jun 2006, 09:30

Re: mangalathai kelungal

Post by arasi »

VKailasam,
Thanks to you, my morning starts with 'MaNi'yAna pATTu and with words which inspire (maNi mozhi).
enna pATTu!
vAzhiya emmAn ivvaiyathu nATTilellAm....

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

arasiji...

Have you not seen the link to super brain yoga at the beginning of the above posting...

how our forefathers have invented this exercise( தோப்புக்கரணம்) which is expected to activate the brain function...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: mangalathai kelungal

Post by venkatakailasam »

மங்களா..கையில் என்ன..பெரிய கவர்..
ஓ! இதுவா...கொலு போட்டோ மாமி..
அக்காவுக்கு அனுப்ப..
பாருங்கோ...

Image Image

நல்லா இருக்கு...
சாயிங்காலம் வந்து பழம் பாக்கு வாங்க வாருங்கோ..
என்ன மங்களா...வெத்தலை இல்லையா..
ஐயோ மாமி அதை ஏன் கேக்கரேள்..
ஒரு வெத்தலை 2 ரூபா...

கொலு பாட்டு …
பாரதியார் எழுதியது
மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே…


வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே…


பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள், ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே…


மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள்
நிலையில் உயர்த்திடுவாள், நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே…


இந்த பாட்டை கேட்ட ஞாபகம் இல்லையே..
ஆமாம் நானும் இப்ப தான் கேட்கிறேன்….


வள்ளலாரின் அருள் உரைகள்....

சிறு பறவை ஒன்று சிறிய கிளையில் அமரும்போது பறவையின் சுமையால்
கிளை ஆடலாம். ஆனால் அந்த கிளை அசைவதால் பறவை நிலைகுலைந்து
போவதில்லை. காரணம் என்ன?
கிளை மீது உட்காரும் பறவை தன்
பாதுகாப்புக்கு கிளையை நம்பியிருக்கவில்லை.
அது தன் சிறகைத்தான் நம்பி உள்ளது.
அது பறந்துவிடும். அது கவலைப்படுவதில்லை.

கிளையில் அமர்ந்துள்ள சின்னஞ்சிறிய பறவைகூட தன் சிறகில் அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது. எனவே அது பயமற்று இருக்கிறது.
அத்தகைய நம்பிக்கை நமக்கும் வேண்டும்.


திருமூலர்..
நிலையானது எது?

மகிழ்கின்ற செல்வமும்
மாடும் உடனே
கவிழ்கின்ற நீர் மிசைச்
செல்லும் கலம் போல்
அவிழ்கின்ற ஆக்கைகும்
ஒரு வீடு பேரு ஆகச்
சிமிழ் ஒன்று வைத்தமை
தேர்ந்து அறியாறே...திருமூலர்..
நிலையானது எது?
ஆற்றில் வரும் வெள்ளமே செல்வம்.! அது நிலைக்காது.! அதிக வெள்ளம் அழிவு.! அதிக செல்வமும் அழிவைத் தான் தரும்.!
மனைவியும், பிள்ளைகளும், சுற்றமும் உங்கள் பொருள் செல்வத்தையே பங்கு போடுவர். அருள் செல்வத்தை நீங்கள்தான் தேடிக் கொள்ள வேண்டும்.
செல்வம் ஆற்றில் செல்லும் படகு போல, சிலநேரம் கவிழ்ந்து போகும். உடலை விட்டு உயிர் போகும் முன் அதற்குத் தேவையான அருள் செல்வத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்கிறார் திருமூலர்...


புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞராக இருந்து நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற ஜட்ஜ் கிமன் லால்!...அவரை பற்றி ஒரு செய்தி


நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது.
அப்போது, வழக்காளி ஒருவர் நீதிபதியிடம் சொன்னார், ""ஐயா... வழக்கின் தீர்ப்பு எனக்கு சாதகமாக இருக்க வேண்டும். ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்...''

நீதிபதி மறுத்துவிட்டார்.

உடனே வழக்காளி சொன்னார், ""ஐயா, நன்றாக யோசியுங்கள். உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் தரும் ஆள் கிடைக்க மாட்டான்!''

நீதிபதி சிரித்துக் கொண்டே சொன்னார் -
""இல்லை சகோதரா, இதுபோல சன்மானம் கொடுப்பதற்கு நிறையப் பேர் கிடைப்பார்கள்.

ஆனால், இவ்வளவு பெரிய தொகையை வேண்டாம் என்று மறுத்துக்கூற உனக்குத்தான் வேறு ஆள் கிடைக்க மாட்டார்!''

அந்த நீதிபதி வேறு யாருமல்ல... புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞராக இருந்து நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற ஜட்ஜ் கிமன் லால்!

சில நீதிபதிகள் லஞ்ச புகாரில் சிக்கி
பதவி இறக்கம்....செய்திகள்...

எப்படி இதெல்லாம் தெரிந்தது என்று பாக்கறேளா..
அப்பப்ப பேப்பரில் வார மலரில் படிப்பதுதான்...


மாமி..அக்டோபர் 2 ம் தேதி காந்தி ஜயந்தி...அன்னிக்கு
கொத்தமங்கலம் சுப்புவுடைய வல்லுபாட்டு 'காந்தி மகான்கதை'க்கு
பத்மா சுப்ரமணியம் குழுவினர் டான்ஸ் செய்தார்களாம்...




ராகம் ஸல்லாபம்...இரண்டு பாட்டு கேளுங்கோ..

ISAI ARASI ENNALUM NAANE ...

http://www.youtube.com/watch?v=VID9pG_vliI

Iyal isaiyil - KJ Yesudas - Arupadai Thirupugazh

http://www.youtube.com/watch?v=Ka4RZAn2rhQ

thanjavooran
Posts: 2992
Joined: 03 Feb 2010, 04:44

Re: mangalathai kelungal

Post by thanjavooran »

மங்களம் மாமியை கேட்டிருந்தால் இது சரியா என்று சொல்லி இருப்பர்களோ என்னவோ?

நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியின் கதை உங்களுக்கு தெரியுமா ...???

பேரரசர் அக்பர் ஒரு உணவு பிரியர் ... அவருக்கு எப்பொழுதும் உணவு சுவையாக இருக்க வேண்டும்

உணவு சுவையாக இல்லையெனில் சமையல் காரர்களை ரொம்பவும் கடிந்து கொள்வார் ....!!!

அக்பருடைய தொந்தரவு தாங்க முடியாமல் அரண்மனை சமையல் காரன், ஒருநாள் அக்பர் வேட்டைக்கு சென்று இருந்த நேரம் பார்த்து அரண்மனையை விட்டு ஓடிவிட முடிவு செய்தான்

அரண்மனையை விட்டு கிளம்பும் நேரத்தில், அக்பர் மீது இருந்த கோபத்தில் ... அரண்மனை சமையல் கூடத்தில் இருந்த அரிசி, நெய், முந்திரி பருப்பு ஏலக்காய், இலவங்கம், மற்றும் எல்லா காய் கறிகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணியையும் ஊத்தி அடுப்பை மூட்டி விட்டு கிளம்ப தயாரானான்

அப்பொழுதும் அவன் கோபம் தீரவில்லை அதனால்
ஒரு பெரிய தட்டை வைத்து அந்த பாத்திரத்தை மூடி அதன்மேல் நெருப்பு சாம்பலை அள்ளி கொட்டி வைத்து விட்டு அரண்மனையை விட்டே ஓடி போய் விட்டான் ...

வேட்டைக்கு சென்ற அக்பர் திரும்பி வந்து பார்க்கையில் சமையல் காரன் ஓடிப் போனது தெரியவந்தது ....

வேட்டைக்கு சென்று திரும்பி வந்த பசியில் ஏதாவது சாப்பிட வேண்டுமே என்ற நினைப்பில் சமையலறையை சுற்றிவந்த அக்பருக்கு, ஓடிப் போன சமையல்காரன் செய்து வைத்து விட்டுப் போன நெருப்பு சாம்பலுடன் கூடிய பெரிய பாத்திரம் தெரிந்தது.

நல்ல பசியில் இருந்த அக்பர் பாத்திரத்தின் மேல் இருந்த நெருப்பு சாம்பலை நீக்கிவிட்டு தட்டை திறந்து பார்க்கையில் நல்ல கம கமக்கும் வாசனை யுடன் கூடிய அரிசி உணவு நன்கு வெந்து தம் கட்டப் பட்ட நிலையில் உண்ணுவதற்கு சரியான பக்குவத்தில் இருந்தது.

அக்பர் அந்த உணவை உண்டு விட்டு, அதன் சுவை யில் மெய் மறந்து போனார்.

சமையல் காரனை....இன்னுமா திரும்பி வரவில்லை ? இன்னுமா திரும்பி வரவில்லை ? என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டார் உருதில் "பிர் ஆயா னி"...... "பிர் ஆயா னி" என்பதாக.... அதுவே மருவி அந்த உணவின் பெயர் பிரியாணி ஆகி விட்டது.

Post Reply