Kanchi Maha Periyava

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

அநாதை பிரேத ஸம்ஸ்காரம் என்ற சமூக செவை,பெரியவாளின் சேவாகாரியங்களில் மிக முக்கியமானது.

கும்பகோணத்திலிருந்து ஆயுர்வேத வைத்தியர் ஸ்ரீ லக்ஷ்மி காந்த சர்மாவந்தார். பெரியவர்களிடம் அத்யந்த பக்தி உடையவர். ... அவரிடம், "என்ன.....அசுவமேத யக்ஞம் சரியா நடந்துண்டு வரதா?" என்று பெரியவாகேட்டார்கள். அங்கே இருந்தவர்களுக்கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது.

"என்னது" லக்ஷ்மிகாந்த சர்மா குதிரைப் பந்தயம் போகிறாரா" அக்ரமம்" என்றுதிகைத்துப் போனார்கள்.

"ஆனால் ஸ்ரீ சர்மா,கொஞ்சமும் கூச்சப்படாமல் மிகவும் இயல்பாக, "பெரியவாஅனுக்ரஹத்திலே நன்னா நடந்துண்டு இருக்கு" என்று பதில் சொன்னார்.விஷயம் வேறுன்றுமில்லை.

பெரியவாள் உத்தரவுப்படி "அநாதைப் பிரேத ஸம்ஸ்கார சமிதி" என்றபெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தி,அநாதையாக இறந்து விட்டவர்களுக்குஉள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, உரிய முறையில் ஸம்ஸ்காரம்செய்வது என்ற மிக உயர்ந்த பணியை ஸ்ரீ சர்மா செய்து வந்தார்.

அநாதை பிரேத ஸம்ஸ்காரம் செய்தால் அசுவமேத யாகம் செய்த புண்ணியம்கிடைக்கும்" என்பது சாஸ்திர வாக்கியம்.

இந்த சமூக சேவையைப் பற்றிதான் பெரியவாள் சூசகமாக "அசுவமேதயக்ஞம் நடக்கிறதா" என்று ஆழ்ந்த பொருளுடன் கேட்டிருக்கிறார்கள் என்பதுதெரிய வந்தது.

அநாதை பிரேத ஸம்ஸ்காரம் என்ற சமூக செவை,பெரியவாளின் சேவாகாரியங்களில் மிக முக்கியமானது.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது திரு நடராஜ சாஸ்த்ரிகள் குடும்பம். \அவர் தஞ்சாவூர் பங்காரு
காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில் முகாம்.
பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜா மாலையை அணிவிக்க வேண்டும் என்று கொள்ளை
ஆசை! பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்து ரொம்ப அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களை
பொறுக்கி எடுத்து கட்டச் சொல்லி, பெரியவாளை தர்சனம் பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு
போனார்.

ஆனால், இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார். நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப
வருத்தம்! மாலையோடு வீடு திரும்பினார். அவருடைய மனைவி "எல்லாமே பெரியவாதானே? இந்த
மாலையை அம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும் வேறவேறயா என்ன?" என்றாள். "இல்லே, இல்லே,
அம்பாளும், பெரியவாளும் வேற வேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற
பெரியவாளுக்குத்தான்! ஆமா. இது அவருக்கு மட்டுந்தான்!" என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு,
அதை பூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார்.
மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும், பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம் வந்து, நடராஜ
சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் தர்சனம் பண்ண வருவதாக
தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும் ஒரே பரபரப்பு! "பெரியவா வரா! பெரியவா வரா! தர்சனம்
பண்ணிக்கோங்கோ!" மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில் சொல்லிக் கொண்டே போனார். உடனே வீடுகளுக்குள்
இருந்தவர்கள் நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசர அவசரமாக பூர்ணகும்பம்,
குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்! பெரியவாளுடைய வேகம் அப்படி
இருக்கும்! குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோ சாதாரணமாக நடப்பது போல்
இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால் பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்த
வேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்!

பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு, சற்றும் எதிர்பாராமல், "டக்"கென்று சாஸ்த்ரிகள்
வீட்டுக்குள் நுழைந்து, ரொம்ப ஸ்வாதீனமாக பூஜை ரூமுக்குள் போய், முன்தினம் "பெரியவாளுக்குத்தான்!" என்று
முத்ரை குத்தப்பட்டு, ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையை அப்படி
லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவது போல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன்
தலையில் சூடிக் கொண்டார்! சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரை தாரையாக நீர் வழிய, விக்கித்து
நின்றனர்! ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்! இப்படி ஒரு பரமகருணையா? என்று சொல்லமுடியாத
ஆனந்தம்! திக்கு முக்காடினார்கள். எல்லாரும் நமஸ்கரித்ததும், விடுவிடென்று வாசல்பக்கம் நடந்தார். சற்று நின்று
திரும்பி, "எங்கே வெள்ளிக்கிண்ணம்?" என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார். அவ்வளவுதான்! ஆடிப்
போய்விட்டார் சாஸ்த்ரிகள்! நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக்கிண்ணம் குடுக்கணும்
என்று சொல்லி, ஒரு புது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார். இதோ! அவர்கள் நேற்று பேசியதை ஏதோ
பக்கத்திலிருந்து கேட்டதுபோல் அல்லவா' வெள்ளிக்கிண்ணம் எங்கே?' என்று கேட்கிறார்! ஓடிப் போய்
பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டு வந்து சமர்ப்பித்தார். பகவான்
ஸர்வவ்யாபி! என்பதை அன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

கேட்காமலேயே – மகா பெரியவாளின் பாதுகை கிடைத்தது
==============================================
அது 1988ஆம் வருடம். தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கியில் இருந்து கடன் கேட்டிருந்தோம். கொஞ்சம் உதாசீனமாகப் பதில் கிடைத்தது. இதை தந்தையிடம் சொல்லவேயில்லை.
திடீரென்று அப்பா, அம்மா இருவரும் காஞ்சிபுரம் போகலாம் என்று அழைத்த உடன் கிளம்பினேன். பெரியவாளைத் தரிசனம் செய்ய, 300க்கும் அதிகமானோர் நின்றிருக்க, நாங்கள் கடைசியில் நின்றிருந்தோம்.
திடீரெனப் பெரியவா வழிவிடச் சொல்லி கூட்டத்தை சைகை செய்தார். வழி கிடைத்தவுடன் கடைசியில் நின்றிருந்த எங்களை அருகில் வரும்படி அழைத்தார். மெய் பதற அவர் முன் சென்று நின்றோம்.
"என்ன வேண்டும்?" என்று இரண்டு முறை கேட்டார்.
நாங்கள், "எதுவும் வேண்டாம்" என்று, பவ்யமாகத் தலை அசைத்தோம்.
மூன்றாவது முறை கோபமாகக் கேட்டார்.
உடனே "பிரசாதம் வேண்டும்" எனக் கூறினோம்.
உடனே, தனது திருவடிகளில் அணிந்திருந்த பாதுகைகளை எடுத்து, தாமரை மலரை அதன் மேல் வைத்து எங்களிடம் கொடுத்தார்.
பரதாழ்வார், ஸ்ரீராமரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றார். அது மகா புண்ணியம். கேட்காமலேயே – மகா பெரியவாளின் பாதுகை கிடைத்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.
அந்த நொடியில் என் சர்வ நாடியும் அடங்கின. சர்வாங்கமும் ஒடுங்கின. மேனி புல்லரித்து, எத்தனை நேரம் உறைந்து போனேன் என்று தெரியாமல் செய்த அபார கருணை அது. பரவசமான நேரம்!உயிர் உள்ளவரை இறைவனது எல்லையில்லாக் கருணை என்னை ஆள வேண்டும் என்ற இறைஞ்சுதலுடன், அந்தப் பாதுகைகளைச் சுமந்து வந்தேன்.
தேரில் தெய்வம் உலா வந்து கொண்டிருக்கும்போது, தெருவில் இறங்கி, நாம் அந்தத் தெய்வத்தை தரிசனம் செய்யப் போகும் சமயத்தில், அந்தத் தெய்வம் தேரிலிருந்து இறங்கி வந்து நம் கைகளைப் பிடித்துக்கொண்டு கருணை செய்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான ஒரு புளகாங்கிதம் அது.
காஞ்சியில் இருந்து திரும்பி வந்த உடன், வங்கியில் இருந்து அழைப்பு வந்தது. 'ஏதோ ஒரு டென்ஷனில் சொல்லிவிட்டோம். எத்தனை லட்சம் வேண்டுமானாலும் கடன் தருகிறோம். வேண்டுமானால், செக்கை அனுப்பி வைக்கிறோம்' என்றனர்.
இப்படி ஒன்றிரண்டு அல்ல; 20 வருடங்களுக்கும் அதிகமாக வாடாமல் அதே மலர்களுடன், சந்தனப் பேழையில் இருந்துகொண்டு, நிறையத் திருப்பங்களை, நானே எதிர்பார்க்காத அளவுக்கு நடத்தி வருகின்றன, அந்தப் பாதுகைகள்."
சொல்லும்போதே அவர் குரலில் பரவசம் தெறிக்கிறது. அந்தப் பரவசம் நமக்குள்ளும் ததும்பத்தான் செய்கிறது.
~ கோவை கிருஷ்ணா ஸ்வீட் அதிபர் கிருஷ்ணன்.
நன்றி: "தீபம்" (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

கிழவரின் ஆவேசம்

மிகவும் வயோதிகத்தை அடைந்து விட்ட தம்பதி ஸ்ரீ மடத்துக்கு வந்தார்கள். அதுவும், பெரியவாள் ஜெயந்தி கொண்டாட்ட நாளில்.

தொண்டு கிழம்.

பெரியவாள் அவரை பார்த்து விட்டார்கள். இந்த கூட்டத்தில், அவரால் தன் அருகில் வந்து தரிசனம் செய்ய முடியாது என்பதும் புரிந்தது.

தானே, அவர் இருந்த இடத்துக்கு போனார்கள். அவர் அருகில் அமர்ந்து கொண்டார்கள். ஒளி குறைவான இடம். வயோதிகர் தன்னுடைய மூக்கு கண்ணாடியை சரிபடுத்தி கொண்டு பார்த்தார், பெரியவாளின் முக தரிசனம் கிடைக்கவில்லை போலிருக்கிறது.

பெரியவாள், டார்ச் அடித்து தன் முகத்தில் ஒளி விழ செய்தார்கள், 'இப்ப தெரியறதா?'.

'தெரியறது....தெரியறது....' என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார் கிழவர்.

'இன்னிக்கு கூட்டம் இருக்கும் ன்னு தெரியுமோன்னோ? அப்போ வருவானேன்? சாதாரண நாள்லே வரலாமோன்னோ?'.

அந்த முதியவருக்கு ஆவேசமே வந்துவிட்டாற்போல் ஆயிற்று.

'ஒண்ணு.... பெரியவாளை கூட்டதிலேதான் தரிசனம் பண்ணனும். காட்டில் பெரிய யானைகள் கூட்டத்தில் ஒரு சிம்மத்தை பார்க்கற மாதிரி....தேவர் சபையில் இந்திரன் பிரகாசிக்கிற மாதிரி - அந்த மாதிரி, பக்தர்கள் கூட்டத்தில், பெரிய சிகரம் மாதிரி இருக்கற பெரியவாளை பார்க்கற ஆசை...'

'ரெண்டு....இன்னிக்கு பெரியவா ஜெயந்தி. இன்று தரிசிப்பது ரொம்ப பாக்கியம்...'

'மூணு....ஆயிரம் பக்தர்கள் தலையை பார்த்தாலே ரொம்ப புண்ணியம். அதனாலே வந்தேன்' என்றார் உணர்ச்சி பெருக்குடன்.

பெரியவாள் ஒரு சால்வையை கொண்டு வர சொல்லி அந்த முதியவருக்கு போர்த்தும் படி உத்தரவிட்டார்கள்.

நன்றி: ஸ்ரீ மடம் பாலு மாமா அவர்கள், கச்சிமூதூர் கருணாமூர்த்தி புத்தகத்தில்...

இன்று காலை ஸ்ரீ கணேச சர்மா மாமா அவர்கள் தன் மஹா பெரியவா மஹிமை உரையில், ஸ்ரீ சங்கரா தொலைக் காட்சியில் இதனைத் தான் பேசினார்கள்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்.
-------------------------------------------------------------------------------------

கார்த்திகை மாதம்,நல்ல குளிர்,விடியற்காலை,கோட்டை அடுப்பை அடுப்பைமூட்டி, பெரியவாள் ஸ்நானத்துக்கு வெந்நீர் போட வேண்டும்.
அந்தப் பணியைச் செய்யும் ராமமூர்த்தி அய்யர் கோட்டை அடுப்பை...நோக்கிப் போனார்.ஒரு சொடுக்கில் அவரை அழைத்தார்கள்பெரியவாள்.அவர் அருகில் வந்து நின்றார்.அரைகுறைவெளிச்சம்."இன்னிக்கு அடுப்பு மூட்ட வேண்டாம்..வெந்நீர்வேண்டாம்.....".வெந்நீர் வேண்டாம் என்பதை ஒப்புக்கொள்ளலாம்.ஆனால்,அடுப்பை மூட்டாமல் நைவேத்யம் தயார் செய்யமுடியாதே?பெரியவாள், திருவாரூர் வெங்கட்டராமய்யர் என்ற மற்றொருசமையல்காரரைக் கூப்பிட்டார்கள்.

"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ.....அதைப் பற்ற வை. சுவாமிநைவேத்யம் அதில் பண்ணு...."என்றார்கள் மேல் முறையீட்டுக்குஇடமில்லாத உத்தரவுகள். காலை சுமார் ஏழு மணிக்கு 'மியாவ்' என்றுமெல்லிய குரல் கேட்டது. கடவுளே! நைவேத்யத்தில் வாய் வைத்து விடப்போகிறதே!

சூ.......சூ.......ஒரு சலசலப்பும் இல்லை.
பூனை எங்கிருந்து குரல் கொடுத்தது?
ராமமூர்த்தி அய்யர் கோட்டை அடுப்பு அருகே சென்று பார்த்தார்.ஒருதாய்,நாலு குட்டிகள்..மெய் மறந்து உறங்கிக் கொண்டிருந்தன,கோட்டைஅடுப்பின் கதகதப்பை அனுபவித்துக் கொண்டு."உச்ச மன்ற"த்தின்ஆணைக்குக் காரணம் இப்போது தெளிவாகத் தெரிந்தது.
"குளிர் தாங்காமல், பூனையும் குட்டிகளும் அங்கே வந்து படுத்துக்கொண்டிருந்தன.அடுப்பு மூட்டினால் அவை தூக்கம் கலைந்து வேறுஎங்கே போகும்? குளிரில் நடுங்குமே? எனக்கு வெந்நீர்வேண்டாம்.பூனைகள் நன்றாகத் தூங்கட்டும்!."

ஏகம் ஸத்.வெறும் சொற்கள் அல்ல:உயிர்த் தத்துவம்.
— with Subramaniam Navaneetham.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
கடவுளே நமக்கு துணை!
* நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற கர்வம் சிறிதும் கூடாது. கடவுளின் துணையால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்த்தவே தடுமாற்றம், குறை போன்றவை குறுக்கிடுகின்றன.
* எந்தப் பணியையும் கடவுளை வேண்டிக் கொண்டு செய்ய வேண்டும். அது, அந்தப்பணியில் ஏற்படும் தவறுகளைக் களைந்து விடும்.
காஞ்சிப்பெரியவர்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

சதாசிவமும், எம்.எஸ்.ஸும் இந்தத் தாமரையும் தண்ணீரும் போல் ..........

எம்.எஸ்.அம்மா ஒரு போதும் தமது தர்ம காரியங்கள் பற்றிப் பேசியதில்லை; தப்பித் தவறிக் கூட பேசியதில்லை. அவ்வளவு ஏன்… தர்மம் பண்ணினேன் என்று அவர் நினைத்தது கூட இல்லை. அந்த எண்ணமே இல்லாமல் வாழ்ந்தார்.

“தாமரை நன்றாக வளர வேண்டுமானால் தண்ணீர் தெளிவாக, பரிசுத்தமாக இருக்க வேண்டும்; தண்ணீர் தெளிவாக இருக்க வேண்டுமானால், தாமரை அதிலே வளர வேண்டும்” என்கிறது யோக வாசிஷ்டம் (ஸ்ரீராமருக்கு வசிஷ்டர் செய்த உபதேசம் யோக வாசிஷ்டம்).

சதாசிவமும், எம்.எஸ்.ஸும் இந்தத் தாமரையும் தண்ணீரும் போல் திகழ்ந்தார்கள்.

‘காளிதாஸ் ஸம்மான்‘ என்று மத்தியப் பிரதேச அரசு வழங்கிய விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டது. அதைப் பெற்று வந்த அன்றே சதாசிவம் எனக்குப் ஃபோன் செய்து அவருக்கே உரிய முறையில் அழைத்தார்.

“வீழி! கார்த்தால இங்கே காஃபி சாப்பிட வந்துடேன்.”

போனேன். ஒரு லட்ச ரூபாய் பணத்தை அப்படியேமஹாபெரியவர்களிடம் தர வேண்டும் என்று சொன்னார்.

பெரியவர் காதில் விஷயத்தைப்-போட்டபோது,

“பணத்தை வைச்சுண்டு என்ன பண்றது ? எட்வர்ட் அரசன் முத்திரை போட்ட பவுனாக வாங்கிக் கொடுத்துவிடச் சொல்லு” என்று ஆணை பிறந்தது.

அதற்கு இணங்கி அன்றைய விலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்குப் பவுன் காசுகள் வாங்கிச் சமர்ப்பிக்கப்பட்டது. (அந்தக் காணிக்கையைப்பெரியவர் உரிய தர்ம காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்.)

எம்.எஸ். சதாசிவத்தின் காணிக்கையைப் பெற்றுக் கொண்டவர், ஒரு தட்டு நிறைய குங்குமப் பிரசாத்தைப் போட்டுக்கொடுத்தார்.குங்குமத்துக்கு அடியில் ஒரு அழகான பவுன் காசு மாலை.

அவர்கள் சென்ற பின்பு பெரியவர்-சொன்னார்கள். “அவர்களிடம் பவுன் பெற்றுக் கொண்டேன். அவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளேன். நான் கொடுத்ததினால் ‘இனிமே இதை இன்னொருத்தருக்கு தானமாகக்கொடு ’ என்று சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் சொல்ல முடியாது இல்லையா !”

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: New series on Maha Periva

Post by venkatakailasam »

He is the guiding spirit’..

Here is an article in The Hindu..

http://www.thehindu.com/todays-paper/tp ... 722494.ece

Please contribute to the noble cause..

vgovindan
Posts: 1866
Joined: 07 Nov 2010, 20:01

Kanchi Maha Periyava

Post by vgovindan »

I do not know whether these two episodes have already been posted here or not. If it is a repetition, kindly pardon me - moderators may even delete.

பெரியவர் பெரியவர்தான்!
.
September 27, 2011 at 9:22pm

சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு. ரவி பிரகாஷ் கூறுகிறார்…..

இங்கே, காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிச் சமீபத்தில் எனக்குத் தெரிய வந்த சிலிர்ப்பூட்டும் தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே பெரியவர் பெரியவர்தான்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.

பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி இருக்கே?” என்று விசாரித்தார் பெரியவர்.

அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு?” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” என்றார்.

பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்… திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்?” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.

தொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர். அதற்கு அவர், “நான் அயோக்கியன்… அயோக்கியன்..!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு அவர் சொன்னார்…

“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா?’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.

இன்னொரு சம்பவம்…

ஒருமுறை ‘திருவாடனை’ என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒருமுறை, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவர் தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

அன்றைக்குத் திருவாடனை ஊரிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.

மடத்துச் சிப்பந்தி ஒருவர், வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவர் மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார்.

சங்கரன் முறை வந்தபோது, அவரையும் பெரியவருக்கு அறிமுகம் செய்தார் மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவருக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப் பார்த்ததும் பெரியவர் உரத்த குரலில், “என்ன சங்கரா? எப்படி இருக்கே? சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூட உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?” என்று கேட்டு, ஆசீர்வதித்தார்.

சங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். அதே நேரம், மடத்து சிப்பந்திகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம்… முப்பது வருஷமாகக் கடைப்பிடித்து வரும் மௌன விரதத்தை முறித்து விட்டாரே பெரியவர் என்று!

எல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்ற பின்பு, சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று, “பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறிச்சுட்டீங்க? எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே? இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று கேட்டனர்.

பெரியவர் புன்னகைத்தபடியே, “எல்லாரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது. இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால் என்னைப் பார்க்க முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசீர்வாதம் பண்ணினேனான்னு அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப்படுவான். இந்தத் தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன். அவனுக்காக நான் என் ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது. அதனால எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே இல்லே!” என்றார் நிதானமாக.

பெரியவர் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் வறட்டுப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல; அதற்கும் மேலாக மனிதாபிமானத்தை, மனித நேயத்தையே விரும்பியவர்; இந்த விஷயத்தில் மற்றவர்களுக்குத் தாமே ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் – டாக்டர்.ஆர்.வீழிநாதன்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சம்ஸ்க்ருதப் பண்டிதர் ஒருவர் எனது நெருங்கிய நண்பர். சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் எழுதும் வல்லமை பெற்றவர். அவர் சொன்ன ஒரு நிகழ்ச்சி:
வெகு நாட்களுக்கு முன், தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமத்தில் பெரியவாள் முகாமிட்டிருந்த சமயம். சந்த்ரமௌலீஸ்வரர் சன்னதியில் தீப நமஸ்காரங்கள் முடிந்ததும் அங்கு குழுமியிருந்த மாணவர்களை ராம நாமத்தையும், சிவ நாமத்தையும் சொல்லச் சொன்னார் பெரியவர். குறிப்பாக அவர் ஒரு மாணவனை அழைத்து ‘ராம ராமா’ ‘சிவ சிவா’ என்று சொல்லச் சொன்னபோது, சுற்றி இருந்தவர்கள் அப்பையனை பிறவி ஊமை என்றனர். ‘ அதனாலென்ன? பையன் சொல்லட்டும்’ என்று பெரியவாள் சொல்ல, பையன் ராம நாமத்தை சொல்ல ஆரம்பித்துவிட்டான் .
இதைக் கண்ட என் ஆந்திர நண்பர். “எந்த மகானை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாதோ, எந்த மகானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ அந்த சந்திரிகா மௌலீ ஆன என் குருநாதனை நமஸ்கரிக்கிறேன்” என்று சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் எழுதினார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், அதுவரை அவர் சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகமே எழுதியதில்லையாம்.
- டாக்டர்.ஆர்.வீழிநாதன் (மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள் – ஆறாம் தொகுதியிலிருந்து )
மாருதி மஹிமை
clip_image002
”குரங்கு புத்தி’ என்றே சொல்வது வழக்கம். எது ஒன்றிலும் சித்தம் க்ஷணகாலங்கூட நிற்காமல் ஸதாஸர்வதா ஒன்று மாற்றியொன்றாகப் பாய்ந்துகொண்டே இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூட கட்டுப்பாடே இல்லாமலிருப்பதற்கு உதாரணம் அதுதான். இதனால்தான் மனுஷ்யர்களான நம் சித்தமும் எதிலும் கட்டுப்பட்டு நிற்காமல் சாஞ்சல்யமயமாக இருக்கிறபோது ‘குரங்கு புத்தி’ என்கிறோம்.
ஹ்ருதய – கபிம் அத்யந்த சபலம்
என்று ஆசார்யாளே சொல்கிறார் (சிவனந்தலஹரி – 20). ‘பரமேச்வரா! ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக் கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துப் போ ! வெறுமனே கபாலத்தை வைத்துக் கொண்டு பிச்சை கேட்பதைவிட இப்படி ஒரு வித்தை, கித்தை செய்து காட்டினாயானால், உனக்கும் நல்ல வரும்படி வருகிற பிழைப்புக் கிடைக்கும்; நானும் பிழைத்துப் போவேன்’ என்று பரமேச்வரனிடம் அவர் வேடிக்கையாக ப்ரார்த்திக்கும் போது, ‘ஹ்ருதய கபி’ அதாவது ‘மனக்குரங்கு’, என்கிற வர்த்தையைப் போட்டிருக்கிறார்.
வெள்ளைக்காரர்களும் ‘மன்கி மைண்ட்’ என்கிறார்கள்.
கட்டுப்பாடேயில்லாமல் ஸதா ஸர்வகாலமும் சரீரத்தாலோ, மனஸாலோ, அல்லது இரண்டினாலுமோ அலையாக அலைந்து கொண்டேயிருப்பதற்குக் குரங்குதான் ரூபகம்.
ஒரு பசு இருக்கிறது, யானை இருக்கிறது – இவை மாம்ஸம் சாப்பிடுவதேயில்லை, சாக உணவுதான் தின்கின்றன என்றால் அதிலே ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ‘பசித்தாலும் புல் தின்னாது’ என்கிற ஒரு புலி சாக பக்ஷிணியாக மாறினால் அதுதான் ஆச்சர்யம் !
ஆஞ்ஜநேய ஸ்வாமியின் ஆச்சர்யமான பெருமை இதில்தான் இருக்கிறது. சாஞ்சல்யத்துக்கே (சஞ்சலத் தன்னைக்கே) பேர்போன கபியாக அவர் இருந்தபோதிலும், அதோடு மஹாபலிஷ்டராக இருந்த போதிலும், மனஸைக் கொஞ்சங்கூடச் சஞ்சலம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி, சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை.
இதிலே இன்னொரு ஆச்சர்யம், அவர் மனஸை அடக்கினார், பூர்ணமான இந்த்ரியக் கட்டுப்பாட்டோடு இருந்தாரென்றால், எல்லாக் கார்யத்தையும் விட்டுவிட்டு எங்கேயோ குஹையிலே மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிடவில்லை. ஜன ஸமூஹ ஸம்பந்தமில்லாமல், கார்ய ப்ரபஞ்சத்தில் பட்டுக் கொள்ளாமல் எங்கேயோ ஒதுங்கி மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்காருபவர்கள் இந்த்ரியம், சித்தம் ஆகியவற்றை ஓடாமல் அடக்கிப் போட்டு விடலாம். ஆஞ்ஜநேயர் அப்படி இல்லை. ‘அஸாத்ய ஸாதகர்’ என்கிற அளவுக்குக் கார்ய ப்ரபஞ்சத்திலே செய்திருக்கிறார். ஸமுத்ரத்தையே தாண்டுவது, ஒரு மலையையே (ஸஞ்சிவி பர்வதம்) தூக்கிக் கொண்டு வருவது, ஒரு பெரிய வனத்தை (அசோகவனம்) அப்படியே நிர்மூலம் பண்ணுவது, ஒரு பெரிய பட்டணத்தையே (லங்காபுரி) தஹனம் பண்ணுவது-என்றிப்படிச் செய்தவர் அவர்.
மனஸ் கொஞ்சங்கூடச் சலிக்காதவர்; ஸ்ரீராமனின் பாதாரவிந்தத்தை விட்டு இந்தண்டை, அந்தண்டை துளிக்கூட ஆடாமல் மனஸை நிறுத்தியிருந்தவர். ஆனால் உடம்பால் அவரைப்போல ஓடி ஆடித் தொண்டு செய்த இன்னொருத்தர் இல்லை. ராம த்யானத்திலே அசையாத மனஸு; ராம கார்யத்திலே ‘இதைவிட வேகமில்லை’ என்னும்படியாக ஓடியாடுகிற உடம்பு !
ரொம்ப வேகமாக ஓடுவது எது?
‘வாயுவேகம், மனோவேகம்’ என்பார்கள்.
காற்றுதான் ஸ்தூலத்திலே பஹுவேகமாகச் செல்வது, ஸூக்ஷ்மத்திலே மனஸின் ஓட்டத்துக்கு மிஞ்சி எதுவுமில்லை.
‘காற்று மாதரி இந்த மனஸு கிடந்து பறக்கிறதே ! காற்றைப் பிடித்து வைத்து அடக்க முடியாத மாதரியே அல்லவா இந்த மனஸையும் கட்டுப்படுத்தி வைக்க முடியவில்லை?’ என்று அர்ஜுனன் முறையிடுகிறான்.
சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண…….வாயோரிவ ஸுதுஷ்கரம் (கீதை 6-34)
பகவானும் ஆடாமல் அசையாமல் நிறுத்தப்பட்ட யோகியின் மனஸைக் கொஞ்சங்கூடக் காற்றேயில்லாத இடத்தில் ‘ஸ்டெடி’யாக ஜ்வலிக்கிற தீபத்தோடு உவமித்துத்தான் சொல்லியிருக்கிறார்:
யதா தீபோ நிவாதஸதோ நேங்கதே ஸேபமா….. (கீதை 6-19)
‘நிவாதம்’ என்றால் ‘காற்று இல்லாமல்’ என்று அர்த்தம். வாதம் என்றால் காற்று. வாதம்,வாயு இரண்டும் ஒன்றுதான். ‘வாயுபிடிப்பு’ என்றும் ‘வாத ரேகம்’ என்றும் ஒன்றையேதான் சொல்கிறோம்?
ஆஞ்ஜநேய ஸ்வாமி யார்?
சஞ்சலத்துக்கே பேர்போன கபி இனத்தில் பிறந்த அவர் ஸதாகாலமும் சஞ்சலித்துக் கொண்டேயிருக்கும் வாயுவுக்குப் புத்ரர் ! வாயு குமாரர். ‘வாதாத்மஜர்’ என்றும் சொல்வார்கள். ‘வாத’ என்றாலும் வாயுதானே? ‘ஆத்மஜன்’ என்றால் புத்ரன். வாத – ஆத்மஜன் என்றால் வாயு புத்ரன்.
வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
‘யூதம்’ என்றால் கூட்டம். ஸேனை. வானரப்படையில் முக்யஸ்தர் இவரே. ஆனபடியால் ‘வாநர-யூத-முக்யர்’.
இது ச்லோகத்தின் பின் பாதி. முன் பாதி என்ன? அதிலே என்ன சொல்லியிருக்கிறது?
வாயுவேகம், மனோவேகம் என்று இரண்டு சொன்னேனே, அந்த இரண்டு வேகமும் படைத்தவர் இவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மனஸ், இந்த்ரியங்கள் ஆகியவற்றின் சலனத்தில் அல்ல. சரீரத்தாலே செய்கிற கார்யத்தில்தான் வாயுவேக, மனோவேகக்காரராக இருக்கிறவர்.
மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்
‘மனோ-ஜவம்’ – மனஸைப் போன்ற வேகம் கொண்டவர். ‘ஜவம்’ என்றால் வேகம்.
‘மாருத – துல்ய – வேகம்’ – காற்றுக்கு ஸமமான வேகமுடையவர். ‘மாருதம்’ என்றாலும் காற்றுதான். ‘மந்த மாருதம்’ என்கிறோமல்லவா? மாருதத்தின் புத்ரர் என்பதால்தான் அவருக்கு ‘மாருதி’ என்று பெயர். ‘வீர மாருதி கம்பீர மாருதி’ என்று (பஜனையில்) பாடுவார்கள்.
ஓயாமல் சலிக்கிற மனஸைப் போல ‘மனோஜவர்’ : அப்படியே, ஓயாமல் சலித்துக் கொண்டிருக்கிற வாயுவைப் போல ‘மாருத-துல்ய-வேகர்’; அவரே வாயுவின் பிள்ளைதான்- ‘வாதாத்மஜர்’; சஞ்சல ஸ்வபாவத்துக்கே பேர் போன கபிகுல முக்யஸ்தராக இருப்பவர் வேற- ‘வாநர-யூத-முக்யர்!’.
இப்படியெல்லாம் இருக்கிறவருடைய ஆச்சர்யமான மஹிமை என்ன என்றால், இவரையே ச்லோகம்,
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
என்று ஸ்தோத்ரிக்கும்படியாவும் இருக்கிறார் !
புலன்களை வென்றவர் இவர்: ‘ஜிதேந்த்ரியர்’- ஜித இந்த்ரியர்: ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர். மனஸ்தான் அத்தனை இந்த்ரிய கார்யத்துக்கும் மூலம். ஆகையால் அதை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர். மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர்.
அதனாலேதான் புத்திமான்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள ‘புத்திமதாம் வரிஷ்ட’ராகி யிருக்கிறார். மனஸை நல்லதிலேயே ‘ஸ்டெடி’யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி ‘புத்திமதாம் வரிஷ்ட’ராயிருக்கிறார்.
‘புத்திமான்’ என்று சொன்னாலே உசத்திதான். அதைவிட உசத்தி ‘புத்திமதாம் வர’ என்று சொல்லியிருந்தால். அப்படிச் சொல்லியிருந்தால் ‘புத்திமான்களில் சிறந்தவர்’ என்று அர்த்தம் கொடுக்கும். அதையும்விட உசத்தி, ‘புத்தி மதாம் வரீய’ என்று சொல்லியிருந்தால். சிறப்புப் பொருந்தியவர்களிலேயே ஒருத்தரை மற்றவரோடு ஒப்பிட்டு, ‘கம்பேரடிவ்’ – ஆக அவர் மற்றவர்களை விட உயர்வு சொருந்தியவரக இருக்கும் போது ‘வரீய’ என்பர்கள். ஆனால், ஆஞ்ஜநேயரை இப்படுச் சொன்னல்கூடப் போதாது ! இதையும்விட உசத்துயாக, ‘இதற்கு மேலே உசத்தியில்லை ; இவரோடுகூட ‘கம்பேரிஸ’னுக்கும் இடமில்லை; இவர்தான் புத்திக்கு ‘ஸூபர்லேடிவ்’; புத்திமான்கள் அத்தனை பேருக்கும் உச்சத்தில் இவரைத்தான் வைக்கணும்’ என்றே (ச்லோகத்தில்) ‘புத்திமதாம் வரிஷ்ட’ என்று சொல்லியிருக்கிளது. ‘வரிஷ்ட’தான் சிறப்பின் உச்சஸ்தானம். அதற்கு மேலேயும் இல்லை, ஸமதையும் இல்லை, அதற்கு அடுத்தபடியாக ‘கம்பேர்’ பண்ணக்கூட இன்னொன்று இல்லை.
ஞானிகளில்கூட இப்படி ப்ரஹ்மவித், ப்ரஹ்மவித்வரன், ப்ரஹ்மவித்வரீயன், ப்ரஹ்மவித்வரிஷ்டன் என்று உயர்த்திக் கொண்டே போவதுண்டு. மாருதி புத்திமதாம் வரிஷ்டர்.
ஆனால் இந்த இந்த்ரிய ஜயம், புத்திச் சிறப்பு எல்லாவற்றையும்விடப் பெரிய அவருடைய பெருமை என்ன என்றால் அவர் ராமதாஸனாக இருந்து, ‘பகவானுக்கு இவரைப் போலப் பணி புரிந்தவரில்லை’ என்று இக்ர ஸ்தானம் (முதலிடம்) பக்திமான்களுக்கும் வரிஷ்டராயிக்கிறாரே, அதுதான். தேஹ சக்தியோடு, புத்தி நுட்பத்தையும் ரொம்பவும் காட்டிச் செய்ய வேண்டிய பணி தூது போவது. அந்தத் தூதுப் பணியை ரொம்பவும் சிறப்பாகச் செய்து, ஸாக்ஷாத் ஸீதா-ராமர்களுக்கே துக்கத்தைப் போக்கிப் பெரிய நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் ஊட்டினாரே, அதற்காகத்தான் முக்யமாக அவரைத் தலைவணங்கிப் பணிய வேண்டும். ‘ஸ்ரீ ராமதூதாம் சிரஸா நமாமி’ என்று பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ண வேண்டும்.
மனோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி ||
ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.
ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

சிறு வயதிலிருந்தே அவரை தரிசித்திருக்கிறேன். தொல்லியலாளரான பின்னர் அவரைப் பார்க்கப் போனபோது, “நீ என்ன வேலை பார்க்கிறாய்?” என்று கேட்டார்.
அப்போது கோவில்கள் திட்டப்பணியில் தொல்லியல் துறையில் செய்யும் பணிபற்றிச் சொன்னேன். “நீ மகாபலிபுரம் போயிருக்கிறாயா? அங்கு என்ன பார்த்தாய்?” என்று கேட்டார். நான் பஞ்சபாண்டவர் ரதம், மகிஷாசுரமர்த்தினி என்றெல்லாம் சொன்னேன். “அங்கு பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார். ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்து, “பல்லவா காலத்தில் ஏது பெரியவா கடிகாரம்?” என்று கேட்டேன். “இருக்கு. இருக்கு. நீ அடுத்தவாட்டி போறப்போ நல்லா பார்த்துட்டு வா!” என்றார். மறுமுறை போனபோது, “கடிகாரம் பார்த்தாயா?” என்று கேட்டார். “இல்லை பெரியவா, எனக்குத் தெரியவில்லை” என்றேன். “அர்ஜுனன் தவம் பார்த்தியா?” என்று கேட்டார். “பார்த்தேன்” என்றேன். “அந்த அர்ஜுனன் தபஸ் சிற்பத்திற்குக் கீழே நதி ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். சின்ன விஷ்ணு கோயில் ஒன்று இருக்கும். பக்கத்தில் ரிஷி ஒருவர் உட்காந்து கொண்டிருப்பார். கீழே அமர்ந்து சிலர் வேதம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் ஆற்றில் நனைத்த துணியைப் பிழிந்து கொண்டிருப்பார். மற்றொருவர் நின்று கொண்டு மாத்யான்னிஹ வந்தனை செய்து கொண்டிருப்பார். (அதில் ஒருவர் இரண்டு கைகளையும் கோர்த்து விரலிடுக்கால் உச்சியிலிருக்கும் சூரியனைப் பார்க்கிறார்) பனிரெண்டு மணிக்கு இந்த விஷயம் நடந்தது என்பதைச் சிற்பி தெரிவிக்கிறார். அதைத்தான் ‘பல்லவ கடிகாரம்‘ என்று சொன்னேன்” என்று பெரியவர் சொன்னார். பெரியவரின் நுணுக்கமான பார்வையைக் கண்டு எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. இப்படிப் பல அனுபவங்கள்.

டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி, தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒருவர். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தானம் என இந்தியாவின் பல பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தியவர். இந்தியத் தொல்பொருள் கள ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மூலம் இவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கன. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், மகாபலிபுரம் போன்ற இடங்களில் இவர் செய்த ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆய்வு, பயிற்றல், கருத்தரங்கு எனப் பல வேலைகளில் இடையின்றி ஈடுபட்டிருப்பவரைத் தென்றலுக்காக அரவிந்த் சுவாமிநாதன் சந்தித்தார். அந்தச் சந்திப்பிலிருந்து…

–நன்றி தென்றல் மாத இதழ்No. of views:230

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

From: Mohan Ramiah
Today I had an experience which I thought would share with Mahaa Periyavaa devotees. Originally my plan is to reach Nochiyam, Tiruchi today to have darshan of Goddess Lalithambhaa as Nochiyam Maami invited me to come there once when I spoke to Maami about a fortnight ago. Incidentally I have my in-laws residing at Valavanur near Villupuram, from where Tiruchi is at about 3 hours journey by bus.


Reached Valavanur yesterday afternoon but late in the evening I had a second thought, to reach Nochiyam tomorrow instead of today. Other reason being, it will be more fiiting to have Ambaal darshan on a Friday. So today I decided to go to Mahaa Periyavaa's avathaara sthalam at Villupuram (I go there whenever I come to my in-laws' place). For the past one week I have included Mahaa Periyavaa's Guru Paadhukaa Stotram in my nithya paaraayanam ever since I happen to see it in this forum about 10 days ago but I have recorded it only in my diary. As I have not carried the diary with me to my in-laws' place I was bit upset not able to chant the slokaa today. On my way to Periyavaa's avathaara sthalam I prayed to Mahaa Periyavaa that some how HE should help me to chant the slokaa in front of him.


All my efforts in finding it in Facebook (vide my mobile) proved futile as it got vanished in the ocean of posts in my timelines. As I reached the Mutt I asked one of the Vidhyaarthis if that slokaa is available there. He just pointed out a wall and asked me to verify if that was the one. But it was not precisely matching with the one I recorded from FB, however consoling myself I chanted that slokaa. I understood from the notice board that Periyavaa's Paadhukaa pooja is also happening in the mutt since 16th Dec, till the end of Dhanur Maasam. Hence Periyavaa's two sets of Paadhukaa's are already kept there on pooja embellished with garlands. Some immediate consolation for me on having Paadhukaa darshan. It did not stop there. As I was doing my pradakshina, the Vidhyaarthi after performing neivedhyam and karpoora aarathi showed it to me and he was taking out the two sets of Paadhukaa's from the sanctorum to keep them in the safe vault. My heart started beating high to have close darshan of Periyavaa's paadhukaas.


The boy suddenly opened the bag in which they are kept and showed it to me. I asked him if he could take them out from the bag, he acceded to my request. Not to be rest content, I asked him if he could permit me touch. He looked at me, then said thottukkongo. As if waiting for that moment I grabbed hold Mahaa Periyavaa's paadhukaas on my two hands, prostrated and kept them on forehead for about 3 l..o..n..g minutes. I felt like melting on Periyavaa's grace on a very tiny person like me and I freely allowed my tears to roll down. On a Guruvaaram, where I just asked Periyavaa only to let me lay my hands on the Guru Paadhukaa Stotram, what he gave me in return was to keep HIS Paadhukaas itself on my head.


This is what our scriptures say I suppose - Iraivanai Nokki Nee Oru Adi Vaithaal, Iraivan Unakku Avaradhu Iru Paadhangalaiyum Thandhu Viduvaar (pun intended!) — feeling excited.

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
ஒரு பக்தர் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்தபோது கண்களில் கண்ணீர் மல்கியது.

"என்னாச்சு?...." சிஸுவின் வேதனைக்கு வடிகாலாக, தாயின் குரல் கேட்டதும், அப்படியே கொட்டித் தீர்த்துவிட்டார்.

"பெரியவாதான் எங்களைக் காப்பாத்தணும்! ஆத்துல நிம்மதியா இருக்க முடியலே...பீரோவுல வெக்கற பணம், நகை எல்லாம் எப்டியோ காணாமப் போய்டறது..யாரும் வந்து திருடிண்டும் போகலே; உள்ள இருக்கற வேஷ்டி, பொடவை, காயப் போட்ட துணிமணில்லாம் கண்டபடி கிழிஞ்சு போறது! எல்லாம் ஏதோ துர்சக்தி பண்ற வேலையாத்தான் தெரியறது....மாந்த்ரீகன் ஒர்த்தன்ட்ட போனோம். என்னமோ பரிஹாரம் சொன்னான்...பண்ணியும் ப்ரயோஜனமில்லே ! நாளுக்கு நாள் இன்னும் ஜாஸ்தியாத்தான் ஆறது....காப்பாத்துங்கோ!..." என்று அழுதார்.

மெளனமாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார் பெரியவா. சற்று தொலைவில் ஒரு பாரிஷதர் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தார். பெரியவாளுக்கே உரித்தான கைச்சொடுக்கு, அவரை மேற்கொண்டு பாராயணம் பண்ண விடாமல் நிறுத்தியது. அழுது கொண்டு நின்ற பக்தரிடம்,

"போ! போயி அவன் என்ன ஸ்லோகம் படிக்கறான்..ன்னு கேளு. நீயும் அந்த ஸ்லோகத்தை ஆயிரந்தடவை ஜபம் பண்ணு!..."

ஓடிப்போய் அந்த பாரிஷதரிடம் "நீங்க பாராயணம் பண்றது என்ன ஸ்லோகம்?..."

"லலிதா ஸஹஸ்ரநாமம்"..

வீட்டுக்குப் போன கையோடு கணவனும் மனைவியுமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றி வைத்து விட்டு, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை தொடர்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்தார்கள். அதி ஆச்சர்யமாக, பீரோவில் காணாமல் போகும் பணம், நகை, கிழிந்து போகும் துணிமணி போன்ற துர் உபாதைகள் சுத்தமாக நின்றே போனது!

"லலிதா ஸஹஸ்ரநாமத்தோட ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் அபாரமான மஹிமை உண்டு." என்று பெரியவா சொன்னார். எந்த மந்த்ரமோ, ஸ்லோகமா, பாராயணமோ "உரு ஏறத் திரு ஏறும்" என்பதால், பண்ணப் பண்ண அதன் பலன் கைகூடும். "fast track" பலன் உண்டாக, "இதை ஜபம் பண்ணு!" என்று லலிதாம்பிகையே [பெரியவா] சொன்னால், அது உடனே பலனைக் குடுக்கும்.

ஒருமுறை ஒரு குதர்க்கி பெரியவாளிடம் ரொம்ப புத்திசாலித்தனமாக, பெரியவாளையே மடக்குவதாக நினைத்துக் கொண்டு ஒரு கேள்வி கேட்டார்.

"லலிதா ஸஹஸ்ரநாமத்ல, "ஆப்ரஹ்ம கீட ஜனனி" [ப்ரஹ்மா முதற்கொண்டு புழு பூச்சி வரை, எல்லாருக்கும் தாயானவள்] ன்னு வருதே, அப்டீன்னா, மனுஷாள்ள ஏன் அவன் ஒசந்தவன், இவன் தாழ்ந்தவன்..ன்னு பாகுபாடு?" என்று கேட்டார்.

பெரியவா நிதானமாக அவருக்கு ஒரே வரியில் பதில் சொன்னார்.......

"அடுத்தாப்ல, "வர்ணாஸ்ரம விதாயினி" [வர்ணாஸ்ரம தர்மங்களை வகுத்தவள்] ன்னு சொல்லியிருக்கே!.."

குதர்க்கியின் முகம் மறைந்து கொள்ள இடமில்லாமல் தவித்தது.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Thanjavooran...Mohan Ramiah happens to be my friend also in FB..

சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் ..................... இப்படித்தான்!

மெட்ராஸ் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம். பெரியவாளுக்கு நெஞ்சு வலி. ரொம்ப தவித்தார். ஆயுர்வேத மருந்து சாப்பிட்டும், வலி குறையவில்லை.
மானேஜருக்கு ரொம்ப கவலையாகிவிட்டது. ரொம்ப தயங்கி தயங்கி பெரியவாளிடம் சொன்னார் " ஆழ்வார்பேட்டைல டாக்டர் வைத்யநாதனுக்கு சொல்லி அனுப்பறேன்.
பெரியவா உத்தரவு குடுத்தா.......... ”நேக்கு என்னமோ அவர் வந்து பாத்தா தேவலைன்னு படறது........" அதிசயம்! உத்தரவாயிற்று!

டாக்டர் வைத்யனாதையர் வந்து பட்டுத் துணி போட்டு, நாடித்துடிப்பு பார்த்தார். சரியா இருந்தது. ரத்த அழுத்தம் பார்த்தார். ஏகமா ஏறி இருந்தது. " B P எக்கச்சக்கமா எகிறியிருக்கு. ஒடனே மருந்து சாப்பிடணும் பெரியவா"

"ஆட்டும்...ஆட்டும். ஒரு அரைமணி கழிச்சு வந்து மறுபடி டெஸ்ட் பண்ணு"
அரைமணி கழித்து டெஸ்ட் பண்ணினால், ஒரேயடியா கீழே போயிருந்தது. நமுட்டாக சிரித்துக் கொண்டே....... " அப்போ டெஸ்ட் பண்ணிட்டு B P ஜாஸ்தின்னு சொன்னே, இப்போ என்னடான்னா..... ரொம்ப கம்மி..ங்கறே. B P ஜாஸ்தியானா என்னாகும்? கம்மியானா என்னாகும்?"

"B P ஜாஸ்தியானா ஹெமரேஜ் ஆகி உசிருக்கே ஆபத்து! கொறைஞ்சு போனா, மயக்கம் போட்டு கீழே விழுந்துடுவா. அதுவும் ஆபத்து."

பெரியவாளான குழந்தை கேட்டது " ஆனா, நேக்கு அப்பிடி ஒண்ணும் ஆகலியே? ஹெமரேஜும் வரல்லே..... மயக்கமும் வரலியே?"

டாக்டர், மண்டையை குடைந்தார் " அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு! ரத்த அழுத்தம் மேல போறதும், கீழ இறங்கறதும் சாதாரணமா நடக்க கூடிய காரியமில்லை. பெரியவா சரீரம், பெரியவாளோட ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு நடக்கறதுன்னு தோணறது......."
சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் ..................... இப்படித்தான்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Honestly, I could not control tears rolling down...

ஒன்னோட அடுத்த ப்ரோக்ராம் என்ன?..." பெரியவாளின் திருவாக்கிலிருந்து 'டமால்' என்று வந்து விழுந்தது!
=====================================
தினமும் சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்படும் ஒரு பரம ஏழை. பெரியவாளுடைய மஹா மஹா மஹத்துவமோ, அந்த எளிய உருவத்தின் கருணையோ எதுவுமே அவருக்குத் தெரியாது. ஆனால் பெரியவா இருந்த முகாமுக்கு தினமும் இரண்டு வேளையும் வந்துவிடுவார். காரணம்? அன்னபூரணி இருக்கும் இடத்தில், அன்னத்துக்குக் குறைவேது?

வயிறார சாப்பிட்டுவிட்டுப் போவார். பெரியவா அந்த கிராமத்தை விட்டுக் கிளம்பியதும், பழையபடி பசி, பசி, பசி! குடும்பத்தில் நான்கைந்து உருப்படிகள்! என்ன செய்வது? பேசாமல் தற்கொலை பண்ணிக் கொண்டுவிடலாம் என்று முடிவு பண்ணினார். ஒரு கஷ்டத்திலிருந்து தப்பிக்க அதைவிடப் பெரிய கஷ்டத்தில் மாட்டிக் கொள்ளப்போவதை இம்மாதிரி தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் அறிவதில்லை.

சந்திரமௌலீஸ்வரர் ப்ரஸாதத்தை கொஞ்ச நாள் சாப்பிட்டிருக்கிறார் இல்லையா? எனவே, சாவதற்கு முன் பெரியவாளை சென்று ஒரு முறை தர்சனம் பண்ணிவிட்டு, அப்புறம் சாகலாம் என்று எண்ணி காஞ்சிபுரம் வந்தார். பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு, எதுவும் பேசாமல் நின்றார்.

"ஒன்னோட அடுத்த ப்ரோக்ராம் என்ன?..." பெரியவாளின் திருவாக்கிலிருந்து 'டமால்' என்று வந்து விழுந்தது!

ப்ரோக்ராமா? வாழ்க்கையோட விளிம்பில் நின்று கொண்டிருக்கும் அந்த ஏழை என்ன பதில் சொல்லுவார்? 'தற்கொலை பண்ணிக் கொள்ளப் போகிறேன்' என்று அந்த தெய்வத்திடம் சொல்ல முடியுமா?

மனஸ் முழுக்க துக்கம்; அது தொண்டையை வேறு அடைத்துக் கொண்டது. கண்களிலிருந்து கண்ணீர் நதியாக பெருக்கெடுத்து, இதோ கருணைக்கடல்! போய்ச் சேருவோம்!...என்று வெளியே வழிந்தோடியது.

"என்ன செய்யறதுன்னே தெரியலே ஸாமி...எங்க ஊருக்குத்தான் போகணும்" கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

அது நின்றால்தானே!

"நான் ஒனக்கு பஸ் சார்ஜ் தரேன்...இப்டியே ஒன்னோட ஊருக்குப் போகாதே! என்ன பண்ணு...நேரா இங்கேர்ந்து மெட்ராஸ் போயி.....பாரீஸ் கார்னர்ல எறங்கி, அங்கேர்ந்து மறுபடியும் பஸ் பிடிச்சு, ஒன்னோட ஊருக்குப் போ!..." என்று அந்த மனிதர் சுத்தமாகப் புரிந்து கொள்ளவே முடியாத ஒரு உத்தரவைப் போட்டுவிட்டு, கையில் ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார்.

மடத்திலிருந்து மெட்ராஸுக்குப் போக பஸ் சார்ஜ் தரப்பட்டது. அங்கிருந்தவர்களிடம் குழம்பிய முகத்தோடு, "வேலூர் பக்கம் எங்க கிராமம்... இங்கேருந்து நேராப் போனா, செலவும் கம்மி. ஸாமி ஏன் மெட்ராஸ் போயி அப்புறம் எங்கூருக்கு போகச் சொல்லறாருன்னு புரியலே!" என்று புலம்பிக் கொண்டே சென்றார்.

பெரியவா சொன்னபடி பாரீஸ் கார்னரில் இறங்கிக் கொண்டு, தன்னுடைய கிராமத்துக்கான பஸ்ஸை தேடிக் கொண்டிருந்தார்......

"என்னப்பா இவ்வளவு தூரம்? எங்க வந்தே? பாத்து எத்தனை வருஷமாச்சு!...." என்று வாஞ்சையும், நட்பும் ஒருசேர ஒரு குரல் அவருக்குப் பின்னாலிருந்து கேட்டது; தோளைச் சுற்றி அணைப்பாக ஒரு கரமும் விழுந்தது. திரும்பிப் பார்த்தால்.....பெரியவா அனுப்பிய தூதர் போல் இவருடைய பால்ய நண்பர் நின்று கொண்டிருந்தார்!

இவருடைய வாடிய முகத்தைப் பார்த்ததும் "வாப்பா! மொதல்ல சாப்பிடலாம். எனக்கும் பசிக்குது" என்று ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போய் வயிறார வேண்டியதை வாங்கிக் கொடுத்து பசியாற்றினார்.

"இப்போ சொல்லு. எங்க இருக்கே? என்ன பண்ணிட்டு இருக்கே? எத்தனை கொழந்தைங்க?..." கேட்டதுதான் தாமதம்! பெரியவாளின் இந்த மஹா கருணையை எண்ணி எண்ணி உள்ளே பொங்கிக் கொண்டு வந்த அழுகை, தன் பால்ய நண்பன் அன்போடு வரிசையாகக் கேட்ட கேள்வியால், வெடித்துச் சிதறியது! தன்னுடைய அவல நிலையைக் கொட்டித் தீர்த்துவிட்டார்! தற்கொலை எண்ணம் உட்பட.

"இதுக்கெல்லாம் மனசு ஒடிஞ்சு போகலாமா? கவலையை விடு. ஒனக்கு வேண்டிய ஒதவிய நான் பண்ணறேன்! சின்னச்சிறு புள்ளைங்களைத் தவிக்க விட்டுட்டு, தற்கொலை அது இதுன்னெல்லாம் நெனைச்சுக் கூடப் பாக்காதே! ஒன்னோட எல்லாக் கடனையும் நான் அடைக்கறேன்! எங்கூடவே வேலை செய்யி...என்ன? புரியுதா?..." தன்னை மறுபடி அணைத்துக் கொண்ட நண்பனில் "காஞ்சி சாமி"யைத்தான் கண்டார்.

25 வருஷத்துக்குப்பின் தன் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார். அப்போது வாசலில் ரதயாத்திரையாக வந்த பெரியவா விக்ரஹத்துக்குத் தன் கண்ணீரைக் காணிக்கையாக செலுத்தினார்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: New series on Maha Periva

Post by venkatakailasam »

SRI MAHA PERIYAVA – MAHESWARA AVATAR !

Smt.Rajalakshmi Vittal is an ardent devotee of Maha Periyava of Kanchi. She believes that everything in life happens by the will and grace of Sri Periyava. She is presently building a temple of Lalitha Parameswari, at Shanthi Ashram, Madhava Perumal temple, known these days as Nochiyam, on the northern banks of river Kollidam. In fact, it is much like Srirangam (which is situated between rivers Kaveri and Kollidam) as Ayyan Vaaikkal runs on the southern side. The temple, which is in its final stages, is to include sannidhis for Ganapathy, Subramanya, Vedha Vyasa, Adhi Sankara and Maha Periyava. In addition to the ‘go shala’ and ‘vedha paadashala’ which she is currently running, she has plans to build a place to perform the final rites of the souls (of orphaned dead)and also for everyone to do the yearly ‘srartham’. She has undertaken another project to construct 20 houses for people who would stay in the ashram and take care of the temple and all other associated activities of the place. She has further ambitions to provide for the education of the poor, open a library for them and also do ‘anna dhaanam’ for the needy. You may wonder what is so great about such services, after all, are not many charity organizations engage themselves in these kind of activities? Well, you would be surprised to know that her age is eighty and she has no back up of a corporate or sponsors. In fact, she shuns it and the trust that she has created with her husband and well-wishers’ support gets all their funds from the public. That sets us thinking as to what could be the force which is driving her to do all these at this ripe age – well, it’s a mantra which is on her lips all the time – MAHA PERIYAVA! Now our curiosity is aroused – how did she come to be so devoted to Him? We ask her and as she begins to narrate we are all ears.

‘Maha Periyava is none other than Lord Maha Dev. Later, I will tell you how He revealed Himself thus, not once but twice. And, He has come here by His own will, to lead the world in the path of dharma once again, like Lord Ram did during the Thretha Yug. When He was alive everyone, save a few, thought of Sri Periyava as a divine sage and pontiff of a mada and just a handful realized that He was a Lord Shiva avatar. He too did not reveal who He really was and confined Himself to the prescribed duties of a mada chief. But, now that He has shed His mortal coils, He is no longer bound by anything, is omnipresent and revered as God. He is Sadha Sivam – in eternal bliss, yet mingled with us mere mortals and a Savagnyan – He knows our past, the present and the future. It was in 1986 that I surrendered to Him completely and vowed that I will remain His slave till I breathe my last. There is a real story associated with it which I shall tell you as we go by.

'Dharmo rakshathi rakshithaha' Maha Periyava has always said thus. Up keep the dharma and it will take care of and protect you. But, it is not as easy as it sounds. I have faced quite a few hurdles while upholding dharma. I have never been discouraged by them because I had always felt that Sri Periyava was guiding me and that He was the doer and not me. If we observe dharma, the whole world stands to get benefited. But, in doing so, we should not relax the rules laid down in the scriptures or question them. In fact, we have no right to. We must simply adhere to what is said in the Vedhas.

Maha Swami used to tell a story to illustrate this. A person who collects firewood in the forest ties all the pieces together very tightly and carries the bundle on the head. If the tying were loose the sticks would fall out one after another. The same is the case with dharma. If we start making adjustments in dharma to suit our convenience, in the end, there will be no dharma left. So, we should tie them up with a strong rope – vairaagyaa and never comprise on the values of dharma.
Maha Periyava not only advised us, but, He Himself lived a life of dharma. He stuck to its principles in every act He did. He is an incarnation of Divinity who came to the world with the sole aim of establishing the dharma raajya. He has founded Lalitha Parameswari’s kingdom here, where the Jagat Maatha will reside in Her Sri Chakra and would guide us all on the path of Sanaadhana dharma and shower on us peace, prosperity and happiness.

Do you know why He has established Ambaal raajya here and not His own. It is because He is a sage of the highest order and does not want any asset to be associated with Him. He was like that even when He was alive. It is my wish that such a great sanyasin should be celebrated all over the world and it is coming true now. He is drawing His devotees from far and near to this hamlet and ashram. And, He is creating everything that you see here by Himself. Do you know that I originally had only the paadashala in my mind? Well, I asked a girl from Bangalore to draw a plan for an ashram with a garden around and you will be surprised to know that she sketched a Sri Chakra form and brought it to me. I concluded that Sri Periyava wanted me to put Lalitha Parameswari in the forefront and that is how this temple came about.

Another surprise is that, Sri Raman Ganapadigal (S/o. Ariyur Sri Subramanya Ganapadigal, Hanuman Ghat, Kaashi) wanted to perform a yagna here and chose the place where we had planned for the dining hall. But, sometime later, the builder and the sthapathis had a discussion and made a few changes in the plan and now the temple is coming up in the very place where the Ganapadigal performed the yagna.

That’s proof enough as to who is in charge here. He is getting everything done through devotees like you and now His family has become very large. His responsibility has increased multi-fold as He has to take care of all you. I am really blessed to be here in the midst Periyava devotees, the temple, the paadashala, the go shaala and so on, which are close to His heart. Sri Periyava will bless you all immensely. Rest assured of that. Just surrender to Him and take a vow to walk on the path of dharma. He will guide you all your life.

The Maha Kumbhaabhishekam is proposed to be conducted in May 2014 to coincide with Maha Periyava Jayanthi. I wish that all His devotees from all over world take part in it and get blessed. Ram, Ram.

Sri Maha Periyava Thiruvadigal Saranam. Hara Hara Sankara, Jaya Jaya Sankara.

Sri.P.V.Sankaranarayanan & K.Krishnamurthy.

(I had promised the english version of Periyava Paaththuppa a few months ago. Well, i am happy that i am making a start now. I wish that everyone should read and also share so that the articles reach out to all His devotees and they get blessed reading about and meditating on Him. You may call maami in 94433 70605 and take her ashirvaadhams. To me, she is goddess Akilaandeswari Herself)

***********************************************************

Rajalakshmi Mami's Ashramam is located at:

4/305, Aiyan Canal South Bank, Kollidam North Bank, Madhava Perumal temple, Nochiam, Tiruchi 621216. She may be contacted at these numbers 9443370605, 9842441091.

a) Demand drafts or cheques made in favour of Sri Jagadguru Kanchimamunivar Charitable Trust may be sent to the above address.

b) Money may be transferred online to either of these below three banks. Account Holder's Name is 'Sri Jagadguru Kanchimamunivar Charitable Trust'. You may also put in Mami's name Smt Rajalakshmi Vittal in brackets:

1) Lakshmi Vilas Bank

A/C number 078430100001690

IFSC Code: LAVB0000784

Bank Address: 64/3C,Chennai Main Road,Opp.Punjab National Bank,N.S.Complex,No.1, Tollgate, Bikchandar Kovil Panchayat,Uthamarkoil, Mannachanallur (TK) , Trichy
State : Tamil nadu
City : Uthamarkoil
Pin No. : 621216

2) Indian Bank

A/C Number: 886244176

Bank Address: 51, Sannadhi Street, Tiruvanai Koil Trichy 620005
Tamil Nadu

IFSC Code: IDIB000S110

3) CITY UNION BANK LTD

A/c Number: 115001001829205

Address: KAMAKOTI NO. 29, 1ST FLOOR E.V.S CHARI ROAD
State: TAMIL NADU
Branch: SRIRANGAM (TRICHY)

IFSC Code: CIUB0000115


SRI MAHA PERIYAVA - MAHESWARA AVATAR - Part 2 !

Smt.Rajalakshmi Vittal maami's experiences !

I will start with my first darshan of Maha Periyava in 1961. I came to know that He was camping at a place on Poonamallee High Road, Chennai. I was staying with my brother at Airport colony and asked my father to take me to where He was camping. When we arrived, Maha Periyava was sitting under a ‘pandal’ (thatched roof) and there were a few children playing around Him. There were any number of holes in that roof. I thought perhaps the Soorya Chandral would peep thorugh them to have darshan of Sarveswaran. I stood by one of the poles which were supporting the pandal and kept looking at Him, pouring out my heart and praying to Him. Then, someone bent down and, closing his mouth, whispered something in Periyava’s ears. He stood up abruptly and started walking swiftly. Just as He was going past me, He said ‘you are going to have a great future’. I did not realize that the words were spoken to me. I stood motionless for a few minutes and then it slowly began to sink in. Though i thought about what He said, I really did not understand the significance of His words then. Perhaps, He meant this – the ashram, temple, go shaala, vedha pada shaala...., and He has been preparing me the past 50 years for this noble cause. I say so because, He first made me to discharge my duties as a wife, mother, daughter-in-law, then allowed me to do service to Him by the mid 70s till His Siddhi in 1994, conduct His jayanthi for nearly twenty years, before taking on this mammoth task, which again is entirely due to His grace. He is the doer and i am just a tool. I am most happy to humbly submit myself at His Lotus feet and to carry out His ordres. Ram, Ram.

Sri Maha Periyava Thiruvadigal Saranam, Hara Hara Sankara, Jaya Jaya Sankara.

Sri.P.V.Sankaranarayanan & K.Krishnamurthy.

Maami can be reached in 94433 70605. You may call and take her blessings. for further details see the first part. please do share and reach out to all His devotees all over India and rest of the world.

Sri Maha Periyava - Maheswara Avatar - Part 3 !

Smt.Rajalakshmi Vittal maami's experiences !

My sister-in-law‘s (husband’s sister) family was, and still is, devoted to Sri Maha Swami. They would do bikshavandan regularly and moved closely with Him. I too had a desire to do bikshai to Sri Periyava and mentioned it to her. She said, you are so devoted to Him, your wish will certainly be fulfilled. As I told you earlier, this was during the time when I was immersed in the family responsibilities and had little time to visit Him, and could not even think of doing bhikshai to Him. Then, one day, I had a dream. A sage accompanied by a middle aged woman clad in white sari in Telugu style walked into the room. I immediately identified the sage as Sri Maha Periyava, but, took a little longer, as they came closer, to recognize the woman. It was Aryaambaa, mother of Sri Adhi Sankara ! In the dream, I told Him of my wish to do bhikshai to Him. He then said, why are you so anxious about it, a bowl of rice with butter milk would do. I woke up abruptly. It took a few minutes to shake off the hang over and then I thought about the dream. It became clear to me that Maha Periyava is none other than Sri Adhi Sankara, who is Lord Mahadev Himself. This was the first instance when He revealed to me that He was Maheswara avatar. I started doing bhikshai to Him only after we moved to Bangalore in the mid 70s and it continued till Maha Swami attained siddhi in Jan 1994.

Then, I asked Sri Mathur Swamigal who incidentally is the son of my sister-in-law in Poorvaashrama, what should I do. He instructed me to start doing Maha Periyava Jayanthi. We performed the first jayanthi in 1995 in Chennai and it continues to this day. May He bless you all. Ram Ram.

Sri Maha Periyava Thiruvadigal Saranam. Jaya Jaya Sankara, Hara Hara Sankara.

Sri.P.V.Sankaranarayanan & K.Krishnamurthy.


Sri Maha Periyava - Maheswara Avatar - part 4 1

Smt.Rajalakshmi Vittal maami's experiences !

We were in Trichy during late 60s. One of the years there was a severe drought. All creatures suffered due to shortage of water. The humans received rationed quantity of potable water which was supplied by lorry. People could not bathe regularly, leave alone the cattle. And the paddy fields dried up. Drought and famine dealt a huge blow to the delta regions. It was then I thought I should conduct a ‘Ramaayana’ discourse. I wrote to my guru and asked for his permission and guidance. He suggested that I get in touch with Ariyur Subramanya Ganabaadigal, who was then living in Hanuman ghat, Kaasi. He readily agreed, came to Trichy and stayed in our house.

He wanted to instruct me on Vedhic scriptures, but I was always busy attending to my husband, children and the cattle. He would remark to my mother, who was then with us, ‘how did you manage to retain her in your womb during pregnancy, she is so restless all the time?. My mother would laugh. Whenever I had free time, I would read Ramaayana. I would narrate what I read that day to my son or discuss with the elderly woman who resided behind our house. I was never interested in watching movies, saris, jewelry or gossip. I would always be chanting ‘Ram, Ram’ whatever work I was doing.

Getting back to ‘Ramaayan’ pravachan, there was no hint of rain even by the ninth day. It was then Sri.Subramanya Ganabaadigal (he would do moola manthra japam in the morning) took a vow that if it does not rain before he left Trichy, it would mean that his devotion and faith in Lord Ram and Ram Himself are all false and he would no longer do Ramaayana discourses. The next day, just as he finished the final ceremonies and was about to take leave, dark clouds gathered suddenly. Initially, it started as a drizzle, but, in a few minutes there was a heavy downpour. And it rained for hours. Lord Ram proved that neither His baktha nor He was untrue. I sat before a picture of Rama in the pooja room and cried.

So, in the end what it proved was that we should always uphold dharma and then it would take care of and protect us. We should always be good in our heart, thought, words and deeds. We should eschew ego, anger, hatred, treachery, jealousy and all things that are not good. Bhagwan would then see us through our difficult times and in fact, save us from our miseries. Ram, Ram.

Sri Maha Periyava Thiruvadigal Saranam. Hara Hara Sankara, Jaya Jaya Sankara.

Sri.P.V.Sankaranarayanan & K.Krishnamurthy.

* A few months ago, when I was busy with the Tamizh version of maami's experiences 'Periyava Paaththuppaa' and 'Azhagiya Manavaalam', I gave a copy of the tamizh version to my uncle Sri.P.V.Sankaranarayan, 82yrs, and requested him to translate to English as he himself is an ardent devotee of Sri Maha Periyavaa (i will be writing about his experiences with Maha Periyava later) and has composed Ramana mani maalai and Ramanar Thirupalliezhuchi. I have received a part of the translated material which i will be modifying (as maami has given some more inputs) and refering to when i put up further posts. Giving respect to his age and untiring efforts to painstakingly read and translate, his name will appear as the first author.

* Please read and share. Maami blesses those who call her by phone or visit in person. But, she herself needs our support to complete the project (pending works of the temple) so that the Kumbhabhishekam can be held in May 2014 which is a significant year by tamizh calendar as this was the year Maha Periyava was born 120 years (2 cycles of 60) ago.

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
மஹாபெரியவா தரிசன அனுபவங்கள்.

Source-----மஹாபெரியவா தரிசன அனுபவங்கள்.

Narrator-----ஸ்ரீமடம் பாலு மாமா

Compiler----டி.எஸ்.கோதண்டராம சர்மா.

Publisher---வானதி பதிப்பகம்.

"பரீட்சையில் நிறைய மார்க் வாங்கினால்தான் மேலே மேலே படிக்க முடியும். இல்லையென்றால் வெறும் போஸ்ட்--கிராஜுவேட் படிப்புடன் நின்றுவிட வேண்டியதுதான்.

நான் எவ்வளவு முயன்றும் எண்பதுக்கு மேல் வாங்க முடியவில்லை. தொண்ணூறாவது வேணும். நியுமராலஜி பிரகாரம் பெயரை மாற்றி வைத்துக்கொண்டால் மார்க் நிறைய கிடைக்கும் என்றார்கள். எண்கணித ஜோதிடர் ஒருவரிடம் போனேன். நாராயணஸ்வாமி ( Narayanaswami ) என்ற பெயரை Narain என்று வைத்துக்கொள்ளச்சொல்கிறார். பெரியவா உத்தரவு கொடுத்தால் 'நாரெய்ன்' என்று வைத்துக்கொள்வேன்."

பெரியவா ஸந்நிதியில், பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்தபோது தன் விண்ணப்பத்தைச் சொல்லிமுடித்தான், கல்லூரி மாணவன் ஒருவன்..

இதைச் சாக்காக வைத்துக்கொண்டு பெரியவா ஒரு சொற்பொழிவையே நிகழ்த்திவிட்டார்கள்.

" நாற்பது சம்ஸ்காரங்களில் ஒன்று, நாமகரணம். பலபேர்கள் முன்னிலையில், வேதமந்திரங்களைக் கூறி நிகழ்த்தப்படும் சடங்கு. நாமகரணம் செய்வதற்குத் ( பெயர் வைப்பதற்குத்)
தான் வேத மந்திரங்கள் இருக்கின்றன. நாமவிகரணத்திற்கு (பெயரை சிதைத்து மாற்றுவதற்கு) இல்லவே இல்லை.

சுவாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு. 'நம்பி பிம்பி என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; கண்ணன் பெயரை வையுங்கள்' என்று ஒரு ஆழ்வார் பாடியிருக்கிறார்.

நாராயணசுவாமியை, அவ்வளவு நீளமாகக் கூப்பிடா விட்டாலும், நாராயணா, நாராயணா என்று அழைப்பார்கள். சுலபமா புண்ணியம் கிடைத்துவிடும்.

நியூமராலஜி என்று சமீப காலத்தில் பிரசித்தமாக இருக்கு. ஒவ்வொரு இங்க்லிஷ் எழுத்துக்கும் நம்பர் கொடுத்து, அதைக்கூட்டி, 'நல்லது, கெட்டது' என்கிறார்கள். இது சுதேசி சரக்கு இல்லை என்பது தெரிகிறது. எண்கணிதப்படி பெயர் மாற்றம் செய்து கொண்டவர்களில் பலர், நல்ல பலன் கிடைத்தது என்கிறார்கள். அது போகட்டும், நியூமராலஜியைப் பற்றி இப்போ தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.

பையனுக்கு நிறைய மார்க்கு வாங்கணும்னு கவலை; அதனால் பெயரைக் கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டால், ஆதாயம் கிடைக்காதா என்று பார்க்கிறான். அந்த ஆசை சரிதான்; வழி அவ்வளவு சரியில்லையே? என்று சிந்திக்க வைக்கிறது.

கல்வி அறிவை சரஸ்வதி கடாக்ஷம் என்பார்கள். சரஸ்வதியின் அருள் இருந்தால் படிப்பு வரும்; மார்க் வரும். அதற்கு என்ன செய்யணும்?

சரஸ்வதி ஸ்தோத்ரம் இருக்கு;ஸௌந்தர்யலஹரியிலே மூணு ஸ்லோகம், சரஸ்வத பிரயோகம்; மேதாஸூக்தம் என்று வேதமந்திரமே இருக்கு; குமரகுருபரரின் சகலகலாவல்லிமாலை, கம்பநாட்டாழ்வாரின் சரஸ்வதி ஸ்தோத்ரம்-----எல்லாம் பாராயணம் செய்யலாம்.

ஹயக்ரீவர் என்று விஷ்ணு அவதாரம். அவர்தான் சகல கலைகளுக்கும் 'ட்ரெஷர்ஹௌஸ்' என்பார்கள். ஹயக்ரீவ ஸ்தோத்ரம், மந்திரம் இருக்கு. மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இருக்கு.

இவைகளையெல்லாம் லக்ஷியம் செய்யாமல், இங்க்லீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்து கொள்வது, சாஸ்திர சம்மதமாகப் படவில்லை."

இத்தனை விஷயங்களையும் பொதுவாகச் சொல்லிவிட்டு, பின்னர் மாணவனைப் பார்த்தார்கள் பெரியவா.

அவன் கண்கள் கெஞ்சிக்கொண்டிருந்தன.

தொண்டர் மூலமாகப் பிரசாதம் கொடுக்கச் சொன்னபோது மாணவர் பெயரைக் கேட்கச் சொன்னார்கள் பெரியவா.

"நாராயணஸ்வாமி" என்று கம்பீரமாகப் பதில் வந்தது!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஒரு ஞாயிற்றுக்கிழமை. காஞ்சிபுரம் ஸ்ரீ மடத்துக்கு எதிரிலுள்ள கங்கை கொண்டான் மண்டபம் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய் உட்கார்ந்து விட்டார்கள், பெரியவா.

ஏராளமான பக்தர்கள் விச்ராந்தியாக தரிசனம் செய்தார்கள்.

சாயங்கலம் நாலு மணி ஆகியும், பெரியவா, கங்கை கொண்டான் மண்டபத்திலிருந்து புறப்படுவதாக இல்லை. ஞாயிற்றுக்கிழமை சூரிய அஸ்தமனம் ஆகி விட்டால் பெரீயவா தீர்த்தம் கூட அருந்த மாட்டார்கள் என்பதால், சிஷ்யர்களுக்குக் கவலை வந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு உபவாசம் இருக்க வேண்டும் என்பது அறநெறி. ஒரு சிஷயர் தைரியமாக சென்று, “அனுஷ்டானம், பிக்‌ஷை செய்யனும். இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, அஸ்தமனமாகி விட்டால் பிக்‌ஷையும் கிடையாது. பெரியவா மடத்துக்கு வரணும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

பெரியவா சொன்னார்கள், “சேஷாத்ரி ஸ்வாமிகள் சர்வதீர்த்த ஸ்நானம், ஸ்ம்சான ஜபம் செய்துவிட்டு, கங்கை கொண்டான் மண்டபம் வந்து, பல நாட்கள் தங்குவாரம். நானும் ஒரு நாளாவந்து இங்கே இருக்கனும்னு வந்தேன். என்னை விரட்டுகிறீர்களே” (பெரியவாளுக்கு, சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண மகரிஷிகள் போன்ற மகாஙளிடம் ரொம்ப மதிப்பு).

பின்னர், ஒரு வழியாக, மண்டபத்திலிருந்து புறப்பட்டார்கள். அங்கே பக்தர்கள் சமர்ப்பித்த பழங்கள் கல்கண்டு தேங்காய் எல்லாம் ஏராளமாக சேர்த்திருந்தார்கள்.

“எல்லாம் இங்கேயே இருகட்டும். அனுமார் பூஜகர், குடைக்காரர்கள் எடுத்துக் கொள்ளட்டும்’ என்றார்கள்.

(இன்றைக்கும் அங்கே குடை-பாவட்டா தயாரிக்கும் தொழிலாளர்கள் பலர் இருக்கிறார்கள்)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஜட்ஜுமென்ட் வந்துடுத்து.

தஞ்சாவூர் மாவட்டம் பதினெட்டு கிராம வாத்திமர் குடும்பம். செல்வசெழிப்பு, ஈஸ்வர ஆராதனை, பெரியவாளிடம் பக்தி.

ஜாதகம் பார்த்து, பெண் பார்த்து, விமரிசையாக விவாஹம் நடந்தேறியது. மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கை.

எந்த கிரகம் இடம் பெயர்ந்ததோ?

சாதாரணமாக தோன்றிய கசப்பு, விவாக ரத்து வரை வந்து விட்டது.

விசாரணைகள், ஆலோசனைகள், மறு ஆய்வுகள்.

ஊஹூம்.

நாளைக்கு தீர்ப்பு.

பெண்ணும், பெற்றோரும், பெரியவா தரிசனத்துக்கு வந்தார்கள். 'காமாக்ஷி' தரிசனம் பண்ணிட்டு வாங்கோ'...

சிறிது நேரத்துக்கு பின்னர் பையனும் பெற்றோரும் வந்தார்கள். பெரியவருக்கு தொண்டையை அடைத்து கொண்டது. 'நாளைக்கு ஜட்ஜுமென்ட்'.

'காமாக்ஷி' தரிசனம் பண்ணிண்டு வாங்கோ'...

கோவிலில் ஏராளமான கூட்டம் . அத்துடன், பக்தி பூர்வமாக தரிசனம் செய்யும் நிலையில் யாரும் இல்லை. 'பெரியவா சொல்லிட்டா, அதனாலே வந்தேன்'.

ஸ்தானீகர் அர்ச்சனை செய்துவிட்டு, பிரசாத தட்டை கொண்டு வந்தார்.

'சேர்ந்து வாங்கிக்கோங்கோ'.

சேர்ந்து?

'நான்... தனியாத்தான் வந்தேன்..'

சற்றென்று தலை நிமிர்ந்தபோது, அவர்....அவள்...

'சேர்ந்து வாங்கிக்கோங்கோ...', மறுபடியும்!

காமாக்ஷியின் ஆணையா?

கோவிலில் இருந்து வெளியே வந்தபோது, இரண்டு குடும்பத்து பெரியவர்களும் நேருக்கு நேர் பார்த்து கொண்டார்கள், பேசிக்கொண்டார்கள்.

விவாகரத்து, ரத்து ஆகி விட்டது.

காமாக்ஷி அல்லவா, ஜட்ஜுமென்ட் கொடுத்திருக்கிறாள்.

பெரியவா திருவடிகளில் விழுந்து எழுந்தார்கள்.

'ஜட்ஜுமென்ட் வந்துடுத்து போல இருக்கே?'

எவ்வளவு அர்த்த புஷ்டியான வார்த்தைகள்.

'எழுதினது, பெரியவா தானே' என்று அந்த தம்பதிகள் நினைத்து கொண்டு இருக்க மாட்டார்களா?

குறிப்பு: கச்சிமூதூர் கருணாமூர்த்தி புத்தகத்தில் ஸ்ரீமடம் ஸ்ரீ. பாலு மாமா அவர்கள்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!

உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பது. அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடும்.

மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம் குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது.

அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு.

காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய புருஷனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் என்று எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள்தான்! என்ற ஒரு பேதைமை உண்டு.

ஒருமுறை அந்த அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் பெரியவாளை தரிசனம் பண்ண ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் போட்ட நிபந்தனை "நா அங்க வருவேன். pant shirt தான் போட்டுப்பேன். பஞ்சகச்சம் விபூதி எதுவும் கெடையாது. அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்".

பாவம் அந்த அம்மா ஒத்துக் கொண்டாள். போனார்கள். அவர் காலில் போட்டிருந்த ஷூவைக் கூட கழற்றவில்லை.

அந்த அம்மா மானசீகமா பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணினாள் கணவருக்கு நல்ல புத்தி வேண்டி.

நம்ம பெரியவா சாக்ஷாத் காமாக்ஷித் தாயாரில்லையா? "நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்" என்று சொல்லுவதுபோல், மேனாவுக்குள் இருந்து லேசாக எட்டி அந்த மனுஷனைப் பார்த்தார்.

அவ்வளவுதான்! கொஞ்ச நாள் கழித்து கணவர் "வாயேன்...போய் மடத்ல ஸ்வாமியை பார்த்துட்டு வருவோம்". சாதாரண வேஷ்டி, ஷர்ட், லேசான விபூதி கீற்று! கொஞ்சநாள் கழித்து, பஞ்சகச்சம், குடுமி வைத்துக் கொள்ள ஆரம்பித்து, நாட்கள் செல்ல செல்ல, அந்த அம்மாவை விட பெரியவா மேல் பித்தாகிப் போனார்.

வேலையை விட்டார். பெரியவா படத்தை வைத்துக் கொண்டு சதா பஜனை, தியானம் என்று பரம பக்தராக மாறிவிட்டார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்.......

பெரியவா அன்று ஒரே ஒரு தடவை அவரை கடாக்ஷித்ததுதான்! அப்புறம் ஒரு வார்த்தை பேசக் கூட இல்லை!

மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

காபி ராகம். ரா கணபதி எழுதியது. சொல்லின் செல்வர்
சாத்துர் ஶ்ரீசுப்ரமணியம் இசையுலகில் கொடி கட்டிப் பறந்தவர். பெரியவாளிடம் பக்தி கொண்டவர். அவரிடம் பெரியவா ஒரு தினம் ‘நான் எத்தனை சொன்னாலும் கேக்காம எல்லாரும் ஆசை ஆசையா ஒண்ணு குடிக்கிறாளே அந்த ராகத்திலே தாஸர் பதம் பாடேன் ‘ என்றார்.

உடனே சாத்தூரார் காபி ராகத்திலுள்ள புரந்தர தாஸரின் பாடலாகிய ‘ஜகதோத்தாரணா ‘ பாடி ஶ்ரீசரணரின் மனம் குளிர்வித்தார்.
“எல்லாரும் வாயால குடிச்சு சந்தோஷப்பட்டறதை நான் காதால குடிச்சு சந்தோஷப்படும்படி பண்ணிட்டே” எனச்சொல்லின் செல்வர் கூறி அவ்வித்வானை உச்சி குளிரச் செய்தார். .

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
குங்குமம்
திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியம். வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர். ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப் பார்த்ததும், அந்தக் குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்றுகொண்டிருந்த வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார். ஓடோடி வந்து பவ்யமாக குனிந்தபடி நின்றார் அவர். உனக்கொரு வேலை கொடுக்கப் போறேன். செய்வியா?" என்றார். உத்தரவு" என்றார் வேங்கட சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் பல கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே, பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க வேண்டும்" என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.

மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் சும்மா இருக்க முடியுமா? வேதங்கள், உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை விளக்கும் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றில் குங்குமத்தின் பெருமைகளைக் குறித்த தகவல்களைச் சேகரித்தார். குங்குமம் தயாரிப்பு தொடர்பான புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்தார். பின் தயாரிப்பைத் துவக்கினார். நல்ல தரமான குண்டு மஞ்சள், எலுமிச்சை, படிகாரம், வெண்காரம், நல்லெண்ணெய் ஆகியவைதான் குங்குமத் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள். பழந்தயாரிப்புப்படி கைகளாலேயே தயாரிக்கப்பட்ட குங்குமத்தைச் செய்து முடித்ததும் வேங்கட சுப்பிரமணியத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தயாரித்த குங்குமத்தை ஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு மகாபெரியவரைப் பார்க்க கும்பகோணம் விரைந்தார். குங்குமத்தை உள்ளங்கையில் இட்டுப் பார்த்தவுடன் மகாபெரியவரின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. இந்தப் பணியை நீ தொடர வேண்டும்" என்று சைகையிலேயே ஆணையிட்டார். வேங்கட சுப்பிர மணியம் ஸ்ரீவித்யா உபாசகர். அம்பாள் குங்குமப் பிரியை ஆயிற்றே! ஒரு அர்ப்பணிப்போடு குங்குமத் தயாரிப்பில் இறங்கிவிட்டார் வேங்கட சுப்பிரமணியம்.

ஸ குங்கும விலேபனாம் அளிக சும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸ ஸரஸாப பாசாங்குசாம்
அசேஷஜ நமோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸூம பாசுராம் ஜப விதௌ ஸ்மரேத் அம்பிகாம்என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது குங்குமப் பூவின் விழுதைப் பூசிக் கொண்டிருப்பவளும், நெற்றியை அலங்கரிக்கும் கஸ்தூரி திலகம் இட்டவளும், புன்னகைக்கும் கண்கள் உள்ளவளும், வில், அம்பு, பாசம், அங்குசம் ஏந்தியவளும், எல்லா மக்களையும் தன்பால் ஈர்ப்பவளும், செந்நிற மாலை, ஆடைகள் அணிந்து, செம்பருத்திப் பூ போல ஒளிமயமாக இருப்பவளுமான அம்பிகையை ஜபகாலத்தில் நினைவு கொள்கிறேன் என்பதுதான் இதன் பொருள். அம்பாள் உமைக்கு பல அம்சங்கள். திரிபுரசுந்தரி, காமாட்சி, அபிராமி, பார்வதி, லலிதா என்று பல திருநாமங்கள். ஒவ்வொரு அம்சத்திலும், பல பாக்கியங்களை பக்தர்களுக்கு அள்ளித் தருகிறாள் அம்பாள். எப்போதும் சுமங்கலியாகவே இருப்பவள் லலிதா" என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுமங்கலியான பெண்ணை பளிச்சென்று வெளிப்படுத்துவது, அவளது நெற்றியில் அலங்கரிக்கும் குங்குமம்தான். ஒரு பெண் தன் திருமணத்தின் போதுதான் குங்குமம் வைத்துக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறாள். நெற்றியிலுள்ள குங்குமம், ஒரு பெண்ணின் சுமங்கலித் தன்மையை மட்டும் சொல்வதல்ல. அவளுக்குள் பொதிந்திருக்கும் ஞானத்தையும், ஆற்றலையும் குறியீடாக உணர்த்தும் தன்மையும் கொண்டது. சௌந்தர்ய லஹரியும் லலிதா சகஸ்ரநாமமும் குங்குமத்தின் பெருமைகளை எடுத்து வைக்கின்றன.

சுமார் 5,000 வருடங்களாக, குங்குமம் வைத்துக் கொள்வது என்பது நமது சம்பிரதாயமாக இருந்து வருகிறது என்கிறது ஒரு புராணத் தகவல். இரண்டு இமைகளுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. நமது உடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏழு சக்கரங்கள் உள்ளன. நமது செயல்கள், சாதனைகள், சாகசங்கள் என்று அனைத்துக்குமே காரணமாக அமைந்தவை இந்தச் சக்கரங்கள். இந்தச் சக்கரங்களின் செயல்பாட்டைத் தூண்டி விடுவதில், முதுகுத் தண்டுக்கு அடிப்பகுதியில் பொக்கிஷமாக இருக்கும் குண்டலினி சக்திக்கு பெரும்பங்கு உண்டு. யோகம், தியானம் போன்றவற்றின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்த ஏழு சக்கரங்களைத் தூண்டி விடலாம். இந்த ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை, நெற்றிப்பொட்டில், புருவங்களின் மத்தியில்தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்பட காரணமாக அமைவது இந்த ஆக்ஞா சக்கரம் தான். அதைக் குறித்துத்தான் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைக்கிறோம்.


venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்'' எனும் பீடிகையுடன், உருக்கமானதொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன்.
''ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால், பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.
அந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை, அவரது முகம் காட்டிக் கொடுத்தது. இதை மகா பெரியவாளும் கவனித்திருக்கவேண்டும். தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி அழைத்தார். அருகில், காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்துவந்த பாலு என்பவரும் இருந்தார்.
பெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர், ''எனக்குத் தீராத வயித்து வலி சுவாமி! உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத வைத்தியம் இல்லே! கொஞ்சமும் குணம் தெரியலே. பரிகாரம்கூட பண்ணியாச்சு. ஒரு பலனும் கிடைக்கலே. எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி, அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன். 'காஞ்சிப் பெரியவரை உடனே போய்த் தரிசனம் பண்ணு; உன் கஷ்டத்தைச் சொல்லு. அவர் தீர்த்துவைப்பார்’னு சொன்னார். அதான், இங்கே வந்தோம்'' என்றார் குரல் தழுதழுக்க.
''ஓஹோ... அப்படியா சொன்னார்..?'' என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார் பெரியவா.
அவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே, நெல்லை அன்பருக்கு நம்பிக்கை பிறந்ததுபோலும்! தொடர்ந்து... ''எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை விட்டுப் போகணும், பெரியவா! நீங்களே கதின்னு வந்திருக்கேன். உங்க அனுக்கிரகம் கிடைக்கலேன்னா... இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறதுதான் விதின்னா... தினம் தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட, இங்கேயே இப்பவே என் உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன். பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும்'' என்று கதறினார்.
பெரியவா, சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருக்க... நெல்லை அன்பர் தனது வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார். சிறிது நேரத்தில், ''இப்ப என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா!'' என்று வியப்பும் கண்ணீருமாகச் சிலிர்த்துச் சொன்னவர், பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவருடைய பெற்றோரும் நமஸ்கரித்தனர். பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக் கொண்டு, திருநெல் வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், அன்றிலிருந்து பெரியவா என்னவோபோல் சோர்ந்து காணப்பட்டார். கருணையே உருவான காஞ்சி மகான், தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படு கிறார் எனத் தெரிந்தது. பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும், புரண்டு தவிப்பதையும் கண்ட மடத்து பாலு, செய்வ தறியாது கலங்கினார்.
பெரியவாளுக்கு பி¬க்ஷ தயார் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவர் பாலுதான். பெரியவா படும் பாட்டைப் பார்த்து, தான்தான் பி¬க்ஷயில் ஏதேனும் தவறு இழைத்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார். தன் குலதெய்வமான ஸ்ரீவைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது.
மறுநாள் ஏகாதசி என்பதால், சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு. அன்றைய தினம், பெரி யவாளுக்கு பி¬க்ஷ செய்து வைக்க வேண்டாம். ஆகவே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது எனத் திட்டமிட்டார். எனவே, பெரியவாளிடம் சென்று, ''எனக்கு என்னவோ, எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது. பெரியவா உத்தரவு தரணும்!'' என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினார் பாலு.
உடனே, '''என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு அடிக்கடி சொல்வியே பாலு... இப்ப ஏன் போகணும்கறே?'' என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார் பெரியவா.
எப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு. ''இல்லே பெரியவா... சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது. அப்புறம், குலதெய்வத்தை தரிசனம் பண்ணப் போகவே இல்லை. அதான்...'' என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பாலு. பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க, பாலு கிளம்பிச் சென்றார்.
வைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்ப வர்கள், நோய் தீருவதற்காக கை, கால் என வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி, ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு, வெள்ளியில் 'வயிறு’ வாங்கக் கடை கடையாக அலைந்தார். 'வயிறு’ கிடைக்கவே இல்லை.
உடலும் மனமும் சோர்ந்துபோனவ ராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின் அருகில், கிழவி ஒருத்தி வந்து நின்றாள்.
''என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா? அது கடைகள்ல கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க. நீ கேட்டுப் பாரு, சாமி! உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க!'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.
பாலுவுக்கு ஒரே குழப்பம். 'யார் இந்தக் கிழவி? நான் வெள்ளியில் 'வயிறு’ வாங்க அலைவது இவளுக்கு எப்படித் தெரியும்? வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே!’ என வியந்தவர், கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.
'பெரியவாளுக்கு வயிற்று வலி’ என்று சொல்லமுடியுமா? ஆகவே, சாதாரண பக்தரைப் போல, கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு. பேச்சின் ஊடே... பாலு சிறு வயதில் படித்த மன்னார்குடி பள்ளியில்தான் அந்த அதிகாரியும் படித்தார் என்பது தெரிய வந்தது. சக பள்ளி மாணவர்கள் என்கிற இந்த சிநேகிதத்தால், கஜானாவில் பத்திரமாக வைத்திருந்த வெள்ளி வயிற்றை, 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார் அந்த அதிகாரி.
பிறகென்ன... சந்நிதிக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார் பாலு.
மடத்தை அடைந்தவர், ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்தார். பெரியவாளின் வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவரது முகத்தில் பழைய மலர்ச்சி குடிகொண்டு இருந்தது.
''பெரியவா அனுக்கிரகத்தால், குல தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்துட்டேன்'' எனச் சொல்லி நெகிழ்ந்த பாலுவை ஏறிட்ட மகா பெரியவா, ''சரிதான்... என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!'' என்றார் புன்னகைத்தபடி!
சிலிர்த்துப்போனார் பாலு. நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு, பாலுவின் 'வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும் தெரியாமல் போய்விடுமா, என்ன?!

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
"ஹார்ட்... W-H-O-L-E ஆக (முழுமையாக,
பூரணமா) இல்லை, H-O-L-E இருக்கு என்கிறே?"


சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி; வானதி பதிப்பகம்.


"என் பெண்ணுக்கு இருதயத்திலே ஓட்டை
இருக்கிறதாம். டாக்டர்கள் சொல்வதைக்
கேட்டாலே குலை நடுங்கிறது" என்று
முறையிட்டார்,பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர்.

"அதாவது, ஹார்ட், ஹோலா' இல்லே;
அதில் ஹோல் இருக்கு என்கிறே?"

ஆசிரியருக்குப் புரியவில்லை. கேள்வி
கேட்டுப் பழக்கம்;கேள்வி கேட்கப்பட்டுப்
பழக்கம் இல்லை.

"ஹார்ட்... W-H-O-L-E ஆக (முழுமையாக,
பூரணமா) இல்லை, H-O-L-E இருக்கு என்கிறே?"

ஆசிரியர் பெருமூச்சு விட்டார்.(அவரை பெஞ்சு
மேல் நிற்கச் சொல்லவில்லை பெரியவா!)

"வேறு என்ன வேலை பண்றே?"

ஆசிரியர் விழித்தார்."நான் ஆசிரியத் தொழிலைத்
தவிர வேறு வேலையும் செய்கிறேன்" என்பது
பெரியவாளுக்கு எப்படித் தெரியும்?

'வேறு வேலை எதுவும் இல்லை' என்று பொய்
சொல்லிவிட்டால் போகிறது! பெரியவாள்
குடைந்துகொண்டா இருக்கப் போகிறார்கள்?

அந்த தெய்வச் சந்நிதியில் பொய்ச்சொல் வெளியே
வர அஞ்சியது போலும்!

"தங்கம்,வைரம்...வியாபாரம்..." என்று மென்று
விழுங்கினார்.

பெரியவாள் கனிவுடன் சொன்னார்கள்.

"பெரிய பெரிய வியாதியெல்லாம் கூட
தான-தர்மங்கள் செய்தால் போய்விடும்
என்று சொல்லியிருக்கு. இங்கு ஏழைகள்
வந்து, கல்யாணத்துக்குத் திருமாங்கல்யம்
கேட்கிறார்கள். நூற்றெட்டுத் திருமாங்கல்யம்
செய்துகொண்டு வந்து கொடு. கேட்பவர்களுக்குக்
கொடுக்கலாம்..."

அடுத்த மாதமே நூற்றெட்டுத் திருமாங்கல்யம்
கொண்டு வந்து சமர்ப்பித்தார்,ஆசிரியப் பணி
செய்யும் தங்க வியாபாரி.

"Good-hearted-ன்னு இங்கிலீஷிலே சொல்லுவா.
நீயும் உன் புத்திரியும் good-hearted!" என்றார்கள்
பெரியவாள்.

அப்புறம் பெரியவாள் வாக்குக்கு மேலே என்ன
மருந்து வேண்டும்?.

தேவாமிர்தம் பருகியவனுக்கு பாயசம் எதற்கு?

ஆசிரியரின் பெண் சௌபாக்கியவதியாக
இருக்கிறாள்-Whole-hearted ஆக.

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

ஒரு கல்யாண வீடு. நாதஸ்வரம் தடபுடலாக மேளதாளத்துடன் வாசிக்கும் சப்தம், குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு விளையாடும் சப்தம்; காரண,கார்யமே இல்லாமல் சும்மாவாவது வேகவேகமாக நடந்து கொண்டிருக்கும் உறவும் நட்பும் என்று களைகட்டிக் கொண்டிருந்தது.


இதோ பையன் காஸி யாத்ரை கிளம்பினான், பெண்ணைப் பெற்றவர் அவன் காதில் ஏதோ குசுகுசுவென்று சொன்னார், திரும்பி வந்தான்; பெண்ணும் பையனும் ஊஞ்சல் ஆனது, த்ருஷ்டி என்று நாலாபக்கமும் பொத்து பொத்தென்று கலர்சாத உருண்டைகள் வீசப்பட்டன; பையனும் பெண்ணும் கையைக் கோர்த்துக் கொண்டு மணமேடையில் வந்து உட்கார்ந்தார்கள்.

திடீரென்று அத்தனை சந்தோஷமும் ஏக காலத்தில் நின்றது! ஒரே பரபரப்பு! ஏன் ?

உட்கார்ந்திருந்த கல்யாணப்பெண் அப்படியே மயங்கிச் சாய்ந்தாள்! கூடவே fits வந்து, கையும் காலும் இழுத்துக் கொள்ள, வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது! பாவம்! பெற்றவர்களுக்கு உயிரே போய்விட்டது! இரண்டு குடும்பமும் தவித்தன. யாரோ சொந்தக்கார டாக்டர் உடனே வந்து உள்ளே தூக்கிக்கொண்டு போய் முதலுதவி பண்ணினார்.

இனி என்ன செய்வது? கல்யாணம் நடக்குமா? ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

பகவானே! என்ன சோதனை? இப்போதுதான் முதல் முறையாக பெண்ணுக்கு fits வந்திருக்கிறது. அவளுக்கு எதிர்காலமே இனி இல்லாமல் போய்விடுமோ?

இரண்டு குடும்பமுமே பெரியவாளிடம் பக்தி பூண்ட குடும்பம். பத்திரிகை அடித்ததும் முதலில் பெரியவாளிடம் சமர்ப்பித்து அவருடைய அனுக்ரஹத்தோடுதான் நடக்கிறது. பின் ஏன் இப்படி?

கல்யாணம் பண்ணி வைத்துக் கொண்டிருந்த "ஆத்து வாத்யார்" [வைதீகர்] அம்ருத தாரை மாதிரி ஒரு யோஜனை சொல்லி, எல்லார் வயிற்றிலும் பாலை வார்த்தார்!

" இங்க பாருங்கோ! யாரும் அச்சான்யப்படவேண்டாம்! லக்னத்துக்கு இன்னும் நெறைய டைம் இருக்கு. நேக்கு என்ன தோண்றதுன்னா... நம்ம மாதிரி திக்கத்தவாளுக்கெல்லாம் கண்கண்ட தெய்வம் பெரியவாதான்! பேசாம, பெரியவாகிட்ட விஷயத்தை சொல்லச் சொல்லி, என்ன பண்ணலாம்ன்னு கேளுங்கோ!..அவர் என்ன சொல்றாரோ, அந்த உத்தரவுப்படி நடப்போம்.." என்றதும், உடனே மடத்தின் மானேஜருக்கு விஷயத்தைச் சொல்லி, அவரும் உடனேயே பெரியவாளிடம் சொன்னார்.

கொஞ்ச நேரம் மெளனமாக இருந்த பெரியவா, "பொண்ணாத்துக்காராளுக்கு குலதெய்வம்.. ஒரு மஹமாயி! அவளுக்கு ப்ரார்த்தனை பண்ணிண்டு, ஒரு வேப்பிலைக் கொத்தை எடுத்துப் பொண்ணோட தலேல சொருகணும்...அனேகமா செரியாப் போய்டும்.."

உடனே மானேஜர் போனில் விஷயத்தை சொன்னதும், பெண்ணின் அம்மா, குலதெய்வமான மகமாயியை வேண்டிக்கொண்டு, வேப்பிலைக் கொத்தை பெண்ணின் தலையில் சொருகினாள். ஆச்சர்யமாக மயங்கிக் கிடந்த பெண்,உடனேயே பளிச்சென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள்!

பையன் குடும்பத்தார், பெரியவாளுடைய உண்மையான பக்தர்கள் என்பதால், எந்தவித ஆக்ஷேபணையோ, முகச்சுளிப்போயில்லாமல் உடனேயே பெண்ணையும், மாப்பிள்ளையையும் மணமேடையில் உட்கார வைத்து, குறித்த நேரத்தில் நல்லபடியாக கல்யாணம் முடிந்தது. சேஷ ஹோமம் ஆனதும், காஞ்சிபுரம் நோக்கி இருவீட்டாரும் ஓடினார்கள்.

"பெரியவா அனுக்ரஹத்தால கல்யாணம் நன்னா நடந்தது..." நன்றிக் கண்ணீரோடு பெற்றவர்கள் கூறினார்கள்.

"மஹமாயி அனுக்ரஹத்தால...ன்னு சொல்லு!..." புன்னகைத்தார் பெரியவா.

"வந்து.....பொண்ணுக்கு இப்டி fits வந்துடுத்தே பெரியவா! ..." அப்பா இழுத்தார்.

"FIT ...ன்னு சொல்லு!.." சமத்காரமாக பெரியவா சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, "க்ஷேமமா இருப்பா!" என்று திருக்கரங்களைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணினார். இது போறுமே !

Fits வந்தது, தெய்வ குத்தம்; FIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்!

thanjavooran
Posts: 2986
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

பெரியவா அப்படி ஹாங், ஹாங் ன்னு பொருமி நான் வேறெப்போதும் பார்த்ததில்லை' என்று கூறி காஞ்சி மட மேனேஜர் விஸ்வநாத ஐயர் ஒரு சம்பவம் நினைவு கூர்வார். பாரதி ஸ்வாமிகள் அவதூதராக, ஆடிப்பாடி, அழுது, சிரித்துக்கொண்டு அதீத நிலைகளில் இருந்த சமயங்களில் ஒன்றாம்.
அதை பற்றி ஓர் அடியார் மஹா பெரியவாளிடம், 'அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதாம்' என்றாராம். அவ்வளவுதான், பெரியவாள் காதில் நாராசம் பாய்ந்தாற்போல, 'சிவ சிவா, சிவ சிவா, சிவ சிவா' என்று ஏறக்குறைய அலறியே விட்டு, முன்பின் எப்போதும் இல்லாத படி, பொருமி தீர்த்து விட்டாராம்.
'ஏண்டா, பைத்தியம் என்ன, சரியாயிருக்கிறது என்னன்னு நீதான் சகலமும் கண்டுட்டியோ? என்னமாடா சொல்லுவே அந்த வார்த்தை?' என்று வெகு நேரம் பொரிந்து தள்ளிவிட்டு, 'சந்நிதிக்கு போய் சந்திரமௌலீஸ்வரர் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கோ' என்று முடித்தாராம்.
மஹா பெரியவாள் 1935 இல் கல்கத்தாவுக்கு எழுந்தருளி நவராத்திரி வழிபாடு நடத்தினார். அவ்வழிபாட்டுக்கான நிர்வாக குழு உறுப்பினர்களில் சிருங்கேரி பீடத்து பரம பக்தரான மந்திரேஸ்வர சர்மா ஒருவர்.
நவராத்திரி முதல் நான்கு நாள் - சதுர்த்தி வரை - பூஜைகளில் தொண்டு செய்த அவருக்கு அதற்கு மேல் பொருந்தவில்லை. 'என்ன இருந்தாலும், நம் சிருங்கேரி பத்ததியில் நம் சிருங்கேரி ஆச்சாரியாள் செய்யும் பூஜை போல் ஆகுமா?' என்று தோன்றி, இருப்பு கொள்ளாமல், ஆயிரம் காவதம் கடந்து சிருங்கேரி அந்து சேர்ந்தார்.
ஆனால் பாரதி ஸ்வாமிகளோ தம் இயல்புக்கு மாறாக அசாத்திய கடுமையுடன் அவரை நோக்கினார்.
'நாங்க ரெண்டு பேரும் வேறேன்னு நீர் வித்யாசம் பாராட்டிண்டு அங்கே பாதி பூஜையிலே விட்டுட்டு வந்தது மஹா தப்பு. க்ஷணம் கூட இங்கே நிற்காதேயும். போம் அங்கேயே' என்று நிர்தாட்சிண்யமாக சொல்லி விட்டார்.
சர்மா பக்குவியாதலால் பாடம் பெற்றார். பாவனா சுத்தி பெற்றார்.
இன்று போல், பிரயாண வசதிகள் இல்லாத அந்நாளில் எப்பாடோ பட்டு சரியாக விஜய தசமி அன்று கல்கத்தா சேர்ந்து மஹா பெரியவாளின் காலில் விழுந்தார்.
பாரதி ஸ்வாமிகள் கூறியதை சொல்லி, தமது பேத எண்ணம் பேதிக்கப்பட்டதை தெரிவித்து கொண்டார்.
மஹா பெரியவாள் ஆனந்தமாக சிரித்துக்கொண்டு அவருக்கு தாராளமாக நவராத்திரி பிரசாதங்கள் அளித்தார்.
நன்றி: அண்ணா ஸ்ரீ ரா. கணபதி அவர்கள்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

பெண்கள் வேலைக்குப் போவது

By Mahesh Krishnamoorthy on February 11, 2014 •....( This is a sensitive topic. I want ALL of you to remember that these are Periyava’s words. If you do not agree to Him, that is fine – read it and leave it. I don’t want you to show your emotions here in the comments.)

வீட்டையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் போகிறோம் என்றால் இரண்டிலுமே ‘டெடிகேஷன்’ குறைந்து போகும். இந்த மாதிரி இரட்டைப் பொறுப்பு எடுத்துக் கொண்டால் தாக்குப் பிடிக்க முடியாத ஸ்ட்ரெயின் ஆகி, ரொம்பவும் திணறி ச்ரமப்படும் படியாகும். டெடிகேஷன் குறைவாதால் அந்த இரண்டு வேலைகளுமே த்ருப்திகரமாக அமையாமல் கெட்டுப் போகும். ஆஃபீஸ் போவதற்காக அகத்துக் கார்யத்தை அரக்கப் பரக்க அரைகுறையாகச் செய்வது, அதே மாதிரி அகத்துக்குத் திரும்பவேண்டும் என்பதற்காக் ஆபீஸில் அவஸரக் கோலமாகப் பண்ணுவது என்றாகி இரண்டுக்கும் பழுது ஏற்படும். வேலைகளில் பழுது ஏற்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். தப்பான ஆசையினால் இப்படிப்பட்ட பழுதை ஏற்படுத்துகிற ஸ்த்ரீக்கு அதனால் பாபமும் ஸம்பவிக்கும். பாபத்துக்குக் கூலியாகப் பல விதங்களில் கஷ்டம் வந்து சேரத்தானே செய்யும்?

வீட்டுப் பணிக்குக் குந்தகம் என்கிறதால் மட்டும்தான் பெண்களுக்கு உத்யோகம் வேண்டாம் என்று சொல்லவில்லை. வீட்டையும் நன்றாகக் கவனித்துக் கொண்டு , உத்யோகம் முறைப்படி பார்ப்பதற்கு முடிந்தாலும்கூட அது வேண்டாம்தான்.

ஏனென்றால் உத்யோகம் என்று ஏற்படுகிறபோது லோக வியவஹாரம் பலவற்றுக்கு ஈடு கொடுத்துத்தானாக வேண்டியிருக்கும். பல பேரிடை புழங்கிக் கொண்டு, பலவித forces -ஐ சமாளித்தாகத்தான் வேண்டியிருக்கும். இதை வெளியில் நன்றாகவே செய்ய முடிந்தாலுங்கூட, இதனால் உள்ளூர ஸ்த்ரீத்வம், பெண்மை என்கிறதற்கே ஆணிவேரான மென்மை அரிபட்டுப் போகத்தான் செய்யும். அந்த மென்மையின் பெருமை இன்றைய ஸ்த்ரீகளுக்குத் தெரியாவிட்டாலும், வாஸ்தவத்தில் அப்படி ஸ்த்ரீத்வத்தைத் காப்பாற்றிக் கொண்டிருக்கும்போது அடைகிற நிறைவான சாந்தியையும் ஆனந்தத்தையும் ஒருத்திக்கு எந்தப் பதவியும் ஸ்ம்பாத்யமும் தரவே தராது. தான் தானாக இருக்கிற இயற்கை நிலையின் பரிபூர்ண நிறைவு, தான் வேறே ஒன்று மாதிரி – ஸ்த்ரீயானவள் புருஷன் மாதிரி – இருக்கிற செயற்கை நிலையில் எப்படிக் கிடைக்க முடியும்?

உத்யோகத்துக்குப் போகாத பெண்களிலும் இந்த சாந்தியும் ஆனந்தமும் தெரியாதவர்கள்தான் நிறைய இருப்பார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அவர்களும் ஏதோ ஒரு தினுஸில் அந்த மென்மை நிறைவைப் பறிகொடுத்தவர்களாகவே இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக, அந்த நிறைவுக்கு நிச்சயமாக ஹானி செய்யும் என்று தெரிந்த ஒன்றில் இறங்குவதை எப்படி அநுமதிக்க முடியும்?

சுக ஜீவனத்துக்குப் பதில் ஆரோக்யக் குறைவு

பொருளாதாரத்தைக் காரணம் காட்டி ஸ்த்ரீகளும் வேலைக்குப் போவதாகச் சொல்வதையும் ஏற்க முடியாமல்தான் இருக்கிறது. ஸ்த்ரீ ஸ்ம்பாதிப்பதில் முக்கால்வாசிக்கு மேலே அந்த ஸ்ம்பாத்தியத்துக்காக அவள் ‘ஸம்பாதித்து’க் கொள்கிற அநேக அநாவச்யச் செலவுகளுக்குத்தான் போகிறது. ஸுக ஜீவனத்துக்கு வழி என்ற பெயரில் ஒரு ஜீவனுக்கு அவச்யமான உடலுழைப்பும் சுறுசுறுப்பும் இல்லாமல் சோம்பேறியாய் ஆவதற்கு உதவி பண்ணுகிற ஸாதனங்கள் – நூதன நூதனமான உபகரணங்கள் – தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. உற்பத்தி பண்ணுபவர்கள், எவையெல்லாம் இல்லாமலே நாம் வாழ்க்கை நடத்த முடியுமோ அவற்றை யெல்லாம் ரொம்பவும் அவச்யமானவைபோல் ஏகமாக விளம்பரப்படுத்தி, கடைகளில் புதுப் புதுப் பண்டங்களைக் குவித்துக் கொண்டே போகிறார்கள். ஸ்த்ரீகள் உத்யோகம் பார்த்துக் கையில் பணம் துள்ளுகிறதுபோது என்ன ஆகிறதென்றால் இந்த அநாவச்யப் பண்டங்களை யெல்லாம் வாங்கி வைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

பத்ரிகையிலே வேடிக்கையாகப் போட்டிருந்து – அரைக்கிறது, கரைக்கிறது முதலான கார்யங்கள் உடம்பால் உழைத்துப் பண்ணினால் அதுவே ஒரு ஸ்த்ரீக்கு யோகாஸனம் பண்ணுகிறதற்கு மேலே தேஹரோக்கயத்தைக் கொடுத்து விடும். அப்படிப் பண்ணாமல் இதற்கெல்லாம் இப்போது புதிசாக மிக்ஸி, க்ரைண்டர் மாதிரி உபகரணங்கள் வந்திருக்கிறவற்றை ஒரு ஸ்த்ரீவாங்குகிறாள். கையை, உடம்பை அசைத்து, தான் ஒன்றுமே பண்ணாமல் மெஷின்கள் மூலமே பண்ணிக் கொள்கிறாள். அதனால் ஸரிவர உடம்புக்கான எக்ஸர்ஸைஸ் இல்லாமல் போய், கோளாறுகள் வருகின்றன. ஆபீஸ் வேலையில் தேஹாப்யாஸம் இல்லையோன்னோ? இன்னம் சொல்லப் போனால், தேஹாரோக்யத்துக்கு ஹானியாகவே கூட அதில் அநேகம் வந்து சேரும். அப்படித்தான் இந்தப் பொம்மனாட்டிக்கும் ஆகிறது. டாக்டரிடம் போகிறாள். டாக்டர், ‘ஃபிஸியோதெரபி’ பண்ணுகிறார். அதில் அவளை என்ன பண்ணச் சொல்கிறாரென்றால்: அம்மியில் ஓட்டி ஓட்டி அரைக்கிற மாதிரி, கல்லுரலில் சுழற்றிச் சுழற்றிச் அரைக்கிற மாதிரியெல்லாந்தான். ஏதோ பந்து, கிந்தைக் கொடுத்து எக்ஸர்ஸைஸ் பண்ணவைக்கிறார்!

ஒழுங்காக அகத்துக் கார்யம் செய்யாததால் ஆரோக்ய ஹானி, மெஷின்கள் வாங்குகிற செலவு, அதைவிடப் பெரிசாக டாக்டர் செலவு, வீடு – ஆபீஸுக்கு நடுவே வைத்யத்துக்குப் போவதற்கு அவகாசம் ஏற்படுத்திக் கொள்வதன் டென்ஷன், அதனால் நரம்புக் கோளாறு, மனஸின் பாதிப்பு – இப்படி ஒரு அனர்த்த பரம்பரை!

பழைய காலத்துப் பொம்மனாட்டிகள் அகத்துக் கார்யங்களுக்கே அஞ்ச மாட்டார்கள். இழுத்துப் போட்டுக் கொண்டு எதையாவது செய்துகொண்டேயிருப்பார்கள். இடிப்பது, புடைப்பது, வடாம், அப்பளம் இடுவது என்று பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். குனிந்து, நிமிர்ந்து, கையைக் காலை ஆட்டி அவர்கள் அப்படிப் பண்ணியதுதான் அவர்களுக்கு நல்ல பசியை உண்டாக்கி, அதற்கேற்கச் சாப்பிட்டு உடம்பை நல்லாரோக்யத்தில் வைத்திருந்தது. இப்போது ஸ்த்ரீகள் மாத்திரையும் கையுமாக இருப்பதுபோல் அப்போது இல்லாமல் காப்பாற்றியது. பெண்கள் குனிந்து நிமிர்ந்து கோலம் போட்டு, எச்சில் இட்டு வந்ததே அவர்களை அன்றைக்கு CESAREANனிலிருந்து காப்பாற்றி ஸுக ப்ரஸவமாகப் பெறச் செய்தது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். இப்போது குனிந்து தரையில் எச்சில் இடுவதற்கு இல்லாமல் டேபிள் சாப்பாடு வந்துவிட்டது. அதோடு ஏகப்பட்ட அநாசாரம், அநாரோக்யம் வந்திருக்கிறது! சாப்பிடுகிற இடம், சமைக்கிற இடம், வாசலில் கோலம் போடுகிற இடம் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் இந்த ஃபாஷன் யுகத்தில் கோமயம் (சாணம்) ஓடியே போய்விட்டது. அதோடு மடியும் போய்விட்டது. Antipollution -க்கு ஈடில்லாத அருமருந்தும் போய்விட்டது. கோமயம் எப்பேர்ப்பட்ட கிருமி நாசினி என்று ரஷ்ய தேசத்து ஸயன்டிஸ்ட் கூடச் சொல்கிறான். நம்முடைய ஃபாஷன் யுகத்து ஸ்த்ரீகளுக்கு அது ஸரிப்பட்டு வரவில்லை.

டேபிள் சாப்பாடு கூட நம்முடைய தேசத்து ஆஹாரத்துக்கு எடுத்ததில்லை என்று வெள்ளைக்கார ‘டயடீஷியன்’ ஒருத்தனே சொல்லியிருக்கிறான்! ‘நாற்காலியில் உட்காரிந்து கொண்டு, காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு இந்தியர்கள் தங்கள் சாப்பாட்டை – குறிப்பாக, தக்ஷிண தேசத்துப் சாப்பாட்டை – சாப்பிடுவது ஜீர்ணத்துக்கு அவ்வளவு உகந்ததில்லை. அடி வயிற்றிலிருந்து மேலே சற்று ப்ரெஷர் கொடுக்கிற மாதிரி, காலை மடித்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட்டாலே அந்த தினுஸு ஆஹாரம் ஜெரிப்பதற்கு உதவியாயிருக்கும்’ என்று சொல்லியிருக்கிறான். புருஷர்கள் சப்பளாம் கொட்டிக் கொண்டு (சப்பணம் கூட்டிக்கொண்டு) உட்காருவதும், ஸ்த்ரீகள் ஒரு காலைத் தரை சேர மடித்து, இன்னொன்றைக் குத்திட்டு வைத்துக்கொள்வதுந்தான் நம் தேச ஆசாரம். குத்திட்ட காலைக் கையால் கட்டக் கூடாது. அது மூதேவி, கையைக் காலுக்கு உட்பக்கமாகவே வைத்திருக்க வேண்டும், அதுவே ஸ்ரீ..

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

.
ஓர் அதீத பற்றாளரின் ஆக்கினை

"சகதர்மிணியே !

"கடல் கடந்த பிள்ளைகளைக் கைகழுவ வேண்டும் - என்
உடல் வீழ்ந்த உடன் நீ முடியிழக்க வேண்டும் - தினம்
பூசையிலே ஒருபோதும் தமிழோசை கூடாது - சங்கேத
நேசமுனி கூறியுள்ளார். நாமதை மீறலாமா ?"


19.9.2013

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Image

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

.
Ref: Post #197.

சொன்னது:-
மிக்ஸியைத் தொலைத்து அம்மியில் ஓட்டு.
கிரைண்டரை விலக்கு; கல்லுரல் கொள்.
கோமயம் அள்ளித் தரையெங்கும் பூசு.
கோமூத்ரம் எடுத்து வீடெங்கும் தெளி.
வேலைக்குப் போகாதே; வீட்டிலே அடங்கு.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

அருள் பொங்கும் அன்னை இல்லம்!!!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்ப கோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை ஒன்று உண்டு. நடமாடும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் பிறந்த புண்ணிய பூமி இது!

ஈச்சங்குடி நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் மகாலக்ஷ்மி. வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 7 வயது மகாலக்ஷ்மிக் கும், 18 வயதான சுப்ரமணியத்துக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. இவர்களின் இரண்டாவது புதல்வனுக்கு, சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை மனதுள் நினைத்து, சுவாமிநாதன் என நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுவாமிநாத ஸ்வாமியைப் போல், தன் மகன் இந்த உலகுக்கே ஞான உபதேசம் செய்யப் போகிறான் என அவர்கள் அறியவில்லை!
ஒருநாள்… காஞ்சி சங்கர மடத்தின் ஆச்சார்யராகப் பொறுப்பேற்கிற பாக்கியம் கிடைத்தபோது, பெற்ற வயிறு குளிர்ந்துபோனது மகாலக்ஷ்மி அம்மாளுக்கு!
காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார்; தேசமெங்கும் யாத்திரை மேற் கொண்டார்; அனைவருக்கும் ஆசி வழங்கி, அருளினார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா எனப் பெருமையுடன் சொல்லிப் பூரித்தனர்.

ஒருமுறை (14.6.1932), ஆந்திர மாநிலத்தின் நகரியில் முகாமிட்டிருந்தார், காஞ்சி மகான். அப்போது, கும்பகோணத்தில் உள்ள அவருடைய தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆச்சார்யக் கடமையை நிறைவேற்றும் வகையில், நீராடிய சுவாமிகள், அந்தணர்களுக்குத் தானம் அளித்து, தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார்.

Share from - Krupalakshmi Ganesh

பெரியவாளின் மனதுள் மெல்லியதான அந்த எண்ணம் ஒருநாள் உதித்தது. ‘ஈச்சங்குடியில் உள்ள, தாம் பிறந்த இல்லத்தை வேத பாடசாலையாக்க வேண்டும்; அந்த இடத்தில், எப்போதும் வேத கோஷம் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்’ என விரும்பினார் பெரியவாள்.
காலங்கள் ஓடின. 93-ஆம் வருடம். காஞ்சி மகாபெரியவாளின் பக்தரான ஹரி, பெங்களூருவில் இருந்து, அவரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார்.
அவரிடம் பெரியவா, ”ஈச்சங்குடி கச்ச புரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு விரும்பறே! நல்லது, பண்ணு!” எனச் சொன்னதும், நெகிழ்ந்துவிட்டார் அவர்.

அந்தக் கோயில் குறித்தும், ஸ்ரீகச்சபுரீஸ்வரர் குறித்தும், ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை குறித்தும் விரிவாக எடுத்துரைத்த பெரியவா, சிறு வயதில் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும், அங்கே அமர்ந்து வேதங்கள் கற்றதையும் விவரித்தார்.
என்ன நினைத்தாரோ… சட்டென்று அன்பரிடம்”ஒரு உபகாரம் பண்ண முடியுமோ?” என்றவர், ஈச்சங்குடியில் உள்ள தாயாரின் இல்லம் குறித்தும், அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க

வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி, ”இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்” என்றார் காஞ்சி மகான். உடனே ஹரி, ”இது என் பாக்கியம்! என் பாக்கியம்!’ என்று சொல்லி, ஆனந்தத்தில் அழுதேவிட்டார்.
‘எத்தனையோ கோயில்களைப் புனரமைத்தவர் மகாபெரியவா! பூமிக்குள் மறைந்து கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டி, அந்தக் கோயிலை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான். தான் சம்பந்தப்பட்ட எண்ணம், தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால் இத்தனை வருடங்களாக எவரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாரே!’ என, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும் வியந்துபோய்ப் பெரியவாளைப் பார்த்தனர்.

பிறகென்ன… அந்த வீடு, விலைக்கு வாங்கப்பட்டது. அன்பர்களின் கூட்டு முயற்சியில், வேத பாடசாலைப் பணிகள் துவங்கின. புதிதாகத் துவங்கும் வேத பாடசாலையில், குரு பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி. அன்றைய தினம், 8.1.94. அதாவது, தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம், அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யாருக்குத்தான் தெரியும்?!
பெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவா ளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல், ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்’ என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகை களை அணிந்துகொண்டார். அன்பரை ஆசீர்வதித்தார்.
வேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப் பெரியவாளிடம் காட்டினர். அதை வாங்கிப் படித்தவர், அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை அன்பரிடம் தந்தார். ”இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.
ஈச்சங்குடி வேத பாடசாலை, அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால், வேத பாடசாலையில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழ்த் தளத்தில் வேத பாடசாலை, மேல் தளத்தில் பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Ragunathan Chandrasekaran
Mahaperiyava’s sayings..

Every living thing on earth will be proud of something or some part of its body.

For example, the feathers of a peacock are its highlight and it takes good care of it. Same way there is a type of deer called “kavarimaan” for which the tail is very unique.

For an elephant the tusks are the most important and mark its pride. So it keeps them white and sharp.

But what does this God Vinaayaka, who is an Elephant, do with it? He breaks one of the tusks and with that he writes the Mahabhaaratam.

This elephant showcased to everyone that it is more important to give shape to a text that is full of Dharma and dharmic ways, than having something which is a symbol of his pride, beauty and honour.

It is because of this clear distinction that this elephant broke one of his beautiful tusks, and paved the way for writing of Mahabhaaratam.

This is the lesson shown by the Lord to all of us. For the sake of truthfulness, dharma and learning or knowledge, one should be ready to lose anything in his life.

We also see that this is an example implying - God does not require any thing separate as a tool .This whole universe is His creation. But if Lord decides He can use anything as a tool or means to do what He desires.

Once, his tusk had been used as a weapon to kill a demon while another time, it had been used to write the great epic Mahabhaarata.

On both the instances it was for dharma rakshanam. The Lord has set His actions as an example for us to follow – by being the ultimate role model.

Let us pray to Vinaayaka, the elephant God, to bless us with adequate control of the senses and of the mind, so that we can develop “Vairaagya” and ultimately enter the path of “Moksha Saadhana”.

From :Narayanan Dharmaraj......
KANCHI PERIYAVAR SAYINGS…
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
KANCHI PERIYAVAR SAYINGS…
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
எல்லாம் நமக்காகவே!
* தர்மம் செய்ய எண்ணம் வந்து விட்டால், நினைத்தவுடன் செய்து விட வேண்டும். இல்லாவிட்டால், மனம் மாறி விடும்.
* பணத்தை தேடுவது மட்டுமே வாழ்க்கைஅல்ல. தினமும் கொஞ்சம் நேரமாவது கடவுளைப் பற்றி சிந்திக்கவும் வேண்டும்.
* நமக்கு இரண்டு கைகள் இருக்கின்றன. இதில், ஒரு கையால் கடவுளின் திருவடியையும், மற்றொரு கையால் உலக விஷயத்தையும் பிடியுங்கள்.
* கடவுள் மீது பக்தி செலுத்துவதால் கடவுளுக்கு எந்த வித ஆதாயமும் இல்லை. எல்லாம் நமக்காகத் தான் என்பதை உணர்ந்து வழிபாடு செய்யுங்கள்.
- காஞ்சிப்பெரியவர்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

நன்மை தரும் மவுனம்

* தினமும் அரை மணி நேரமாவது மவுனமாக தியானம் செய்யுங்கள்.

* மவுனத்தை அனுஷ்டித்தால் அந்த நேரத்திலாவது சண்டை, சச்சரவு இராது. இதுவும் ஒரு வகையான சமூக சேவைதான்.

* நல்லதை உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மவுனத்துக்கு உண்டு. நன்மைகளை பெற்றுத்தர மவுனமே உபாயமாக இருக்கிறது என்பதை "மவுனம் ஸர்வார்த்த ஸாதகம்' என்று சொல்வார்கள்.

* ஒன்றைச் சுருக்கமாக சொன்னால் அது மனதில் பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக சொன்னால் நன்றாக மனதில் பதியும்.

* வரவு, செலவு என்பது பணம் ஒன்றில் மட்டும் இல்லை. நாம் வார்த்தையை அதிகம் விட்டால் அது செலவு. எதிராளியிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது வரவு.
- காஞ்சிப்பெரியவர்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

கண்ணாடி மனசு வேணும்!

* எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்துகொண்டோ அழுதுகொண்டோ இல்லாமல் "ஆஹா!' என்று எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

* நாம் ஒரு இடத்திற்கு போனால், அங்கே இருப்பவர்கள் "குற்றம் கண்டுபிடிக்க வந்து விட்டான்' என்று முகத்தை சுளிக்கும்படியாக இருக்கக்கூடாது. எங்கே நாம் போனாலும், அங்கே நல்ல தினுசான சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும்.

* தனக்கு என்று எதுவுமே இல்லாவிட்டால் மனதின் அழுக்குகள் நீங்கி, அது கண்ணாடி மாதிரி சுத்தமாக இருக்கும். அப்போது நிறைந்த ஆனந்தமாக இருக்கலாம்.

* மேலும் மேலும் பணம் தருகிற தொழில், மேலும் மேலும் வியாதி தருகின்ற காரியங்கள் இவற்றை விட்டுவிட்டு நிம்மதியாக, நிறைவோடு அடங்கி வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
-காஞ்சிப்பெரியவர்
கண்ணாடி மனசு வேணும்! * எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்துகொண்டோ அழுதுகொண்டோ இல்லாமல் "ஆஹா!' என்று எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். * நாம் ஒரு இடத்திற்கு போனால், அங்கே இருப்பவர்கள் "குற்றம் கண்டுபிடிக்க வந்து விட்டான்' என்று முகத்தை சுளிக்கும்படியாக இருக்கக்கூடாது. எங்கே நாம் போனாலும், அங்கே நல்ல தினுசான சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும். * தனக்கு என்று எதுவுமே இல்லாவிட்டால் மனதின் அழுக்குகள் நீங்கி, அது கண்ணாடி மாதிரி சுத்தமாக இருக்கும். அப்போது நிறைந்த ஆனந்தமாக இருக்கலாம். * மேலும் மேலும் பணம் தருகிற தொழில், மேலும் மேலும் வியாதி தருகின்ற காரியங்கள் இவற்றை விட்டுவிட்டு நிம்மதியாக, நிறைவோடு அடங்கி வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். -காஞ்சிப்பெரியவர்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறைகி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!” என்கிறார்.

கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு, குழந்தை,கழல்,நிழல்,பழம்,
யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார். உடனே கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும் ”யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக
எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள்.

அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,

முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து
எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,
முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….
என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில்,
“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!”

என்று மிக அழகாக விளக்குகிறார்.

மேலும் “என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

ஆந்த்ராவில் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தபோது, பெரியவாளுடன் கூட போகும் சிஷ்யர்கள் ரொம்ப குறைவு. எந்தவிதமான படாடோபமோ, ப்ருதாவளியும் கிடையாது. உள்ளடங்கிய பகுதிகளில், பெரியவா வந்திருப்பதை கூட தெரிந்து கொள்ள முடியாது. முன்னாடியே போய் பெரியவா தங்க வசதியான இடங்களை பார்த்து வைப்பதெல்லாம் கிடையாது. காடோ, மேடோ, பொந்தோ, பாழடைந்த மண்டபமோ, மரத்தடியோ………பெரியவா “இங்க தங்கிக்கலாம்” என்று உத்தரவு போட்டு விட்டால், அதுதான் க்ஷேத்ரம்!
வழியில் ஒரு கிராமத்தில் ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. பெரியவா அங்கே தங்கி கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டார். கிராமத்து ஜனங்கள் வந்து தர்சனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாக “பெத்தச்ச தேவுடு” வந்திருக்கும் செய்தி பரவியது. உச்சிக்கால பூஜை முடிந்தது. பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டனர்.
கோவில் அர்ச்சகர் வீட்டுக்கு போவதிலேயே குறியாக இருந்தார் போல ! உச்சிக்கால பூஜை முடிந்ததும், பெரியவா உள்ளே தங்கி இருப்பதைக் கூட நினைவில் கொள்ளாமல், கோவிலை பூட்டிக் கொண்டு போயே போய் விட்டார்! பக்கத்து கிராமங்களிருந்து பக்தர்கள் பெரியவாளை தர்சிக்க வேகாத வெய்யிலில் நண்டு,சிண்டு, குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் தூக்கிக்கொண்டு, போறாததற்கு கையில் தங்களால் இயன்ற காணிக்கைகளை தூக்கிக் கொண்டு வந்து பார்த்தால்……………கோவில் வாசலில் பெரிய பூட்டு தொங்கியது!
இந்த பட்டைபடைக்கிற வெய்யிலில் “பெத்தச்ச தேவுடு” எங்க போயிருப்பார்? தெய்வமே! நம்ம கிராமத்துப் பக்கம் அவர் வந்தும், நம்மால தர்சனம் பண்ண முடியாமல் போயிடுத்தே! …………இப்படியாக பாவம் பலவிதமாக எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். உள்ளே கர்ப்பக்ரஹத்துள் இருக்கும் முக்கண்ணன், மண்டபத்தில் கண்களை மூடி ஓய்வெடுப்பது போல் படுத்திருந்தாலும், தன்னை ஆசையோடு பார்க்க வந்த பக்தர்கள் அதுவும், எந்த சுக சௌகர்யங்கள் இல்லாமல், வெய்யிலில் குழந்தை குட்டிகளோடு வந்திருக்கும் உண்மையான பக்தர்களை பரிதவிக்க விடுவானா?
சிட்டிகை போட்டு சிஷ்யர்களை எழுப்பினார்……..” ஏண்டா! வெளில பாவம் எல்லாரும் காத்துண்டிருக்காளா, என்ன?”
சிஷ்யர் பார்த்துவிட்டு “ஆமா…ஆனா, வெளில கோவில் கதவு சாத்தி பூட்டியிருக்கு பெரியவா”
“அடடா……….ஜனங்கள் வந்து பாத்துட்டு ஏமாந்து போய்டுவாளேடா!………சரி இந்தா! குமரேசா! நீ “டக்”குனு அந்த கல்லுல ஏறி அங்க தொங்கற மணியை பலமா அடி!”
மணி ஓசை கேட்டது ! திரும்பி போக யத்தனித்த ஜனங்கள் மணி ஓசை கேட்டதும், சந்தோஷமாக கோவிலுக்கு ஓடி வந்தனர். காவல்காரரும் ஓடி வந்தார்! பூட்டு தொங்குவதைப் பார்த்து திகைத்தார்! தன்னிடமிருந்த மாற்று சாவியால் கதவை திறந்து விட்டார். படிப்பறியாத பாமர ஜனங்கள் தங்களுடைய அன்பான “பெத்தச்ச தேவுடு” வைப் பார்த்து பரவசம் அடைந்தனர் ! எப்படிப் பட்ட பிரத்யேகமான தர்சனம்! தங்களை திரும்ப அழைக்க பெரியவா கையாண்ட யுக்தியைக் கேட்டு, “எதுவுமே தெரியாத எங்களையும் கூட ஒரு பொருட்டா நெனச்சு, கூப்பிட்டு தர்சனம் குடுத்திருக்காரே !” என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனார்கள்.
பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்றுதானே!

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

அழுகை, அழுக்கு, இழவு, இழுக்கு, பழுது, பாழ், விழல், வீழ், வீழ்ச்சி, சூழ்ச்சி ...
இவையும் உண்டு எனில் குழப்பமே மிஞ்சும்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

This News Article was published in the Quarterly Journal 'Hinduism Today' in March 1994. We are posting this for the benefit of the younger generation to know about the great Saint who lived in our midst and who still lives in His Adhistanam at Kanchi, blessing all His devotees.
http://periva.proboards.com/thread/6087 ... hi-article

His Holiness, Sri Chandrasekharendra Saraswathi, the Sankaracharya of Kanchi Kamakoti Peetam in South India, passed away in Kanchipuram, Tamil Nadu, on Saturday, January 8th, 1994, just four months before he was due to complete his centenary. The end of the 68th pontiff of the Kanchi Mutt came suddenly at 2:58pm as he was relaxing in his room within the mutt. All of India rushed to pay respect-Hindus, Muslims, Christians, rich, poor, low caste and high caste alike. Prime Minister P.V. Narasimha Rao canceled his programs to attend the internment.

The pontiff, slightly indisposed due to a phlegm formation, had stopped giving darshan to the public since the first of this year. But he recovered fully and was talking to devotees. He listened that final morning to a continuous recitation of the 1,000 names of Vishnu by 100 devotees. The two junior pontiffs, His Holiness Jayendra Saraswathi and his disciple Sri Vijayendra Saraswathi, met the pontiff around 2:30pm before leaving for Tambaram, a suburb of Madras. Informed in transit that the pontiff's condition was serious, they rushed back to Kanchi mutt at 4:30pm, but he had already attained mahasamadhi. When informed of the end of his guru on his arrival at the mutt, Sri Jayendra was too shaken for some time to leave the van. After he collected himself, he ran in followed by Vijayendra. Three doctors-Bhaskaran, Ranganathan and Sambamoorthy-attended on the sage till he breathed his last.

The saint's body was brought out of his room for public homage at 7:05 pm. A never-ending stream of people filed past the same dais where they had been having his darshan all these years. Roads were jammed as thousands descended on Kanchi, 45 miles west of Madras. The saint's transcendence of caste, creed and religion was eloquently attested by numerous Muslims in traditional headgear and several Christian nuns being part of the 3-mile long queue. Brahmin ladies distinguished by their 18-yard saris stood cheek by jowl with persons of other castes.

The pontiff, one of the most venerated Hindu leaders of this century, was head of Kanchi Peetham and responsible for the many temples and Vedic schools under its stewardship. He was an exemplary sannyasin, a renunciate monk, who owed nothing and for the past few decades ate but one meal each day of simple grain with fruit juice or milk. By tradition, he traveled on foot to bring the power of Sankara's teachings deep into India's countryside. He would walk 10 or 20 miles a day, followed by crowds chanting "Jaya, jaya Sankara. Hara, hara Sankara" and a caravan of a dozen or more jeeps. Each day he would camp at a village to perform the mandatory puja which the pontiff alone can do. Villagers would come, prostrate, listen to his upadesha and make simple offerings (placed on a small table in front of him, for he cannot touch others or things they may give him, especially money). The next morning he would continue, marching another 20 miles in the hot sun, worshipped by passers-by or wives from their roadside homes. Months thus passed until finally he returned to the monastery, there not to rest but to guide the many souls under his loving care. None who met him could possibly miss the purity, the clear-eyed presence, the spiritual awakening he obviously abided in day and night.

Saint's Final Burial

The Paramacharya is the first pontiff of the Kanchi Peetam to be interred in the mutt premises. The decision, according to the news agency United News of India, "was taken as per the wish of Sri Jayendra Saraswathi." An elaborate abhishekam lasting more than an hour preceded the interment. Five elephants carried sacred prasadam from five famous temples to the Sankara mutt and placed them besides the pontiff. At 12:15pm on Sunday, January 9, the mahabishekam began. A vast assembly of devotees witnessed the mortal remains of a spiritual colossus being successively bathed with honey and milk, curd and sugarcane juice, crushed fruits and coconut juice, panchagavyam and sandalwood paste to the continuous chanting of Vedic mantrams. Unlike ordinary Hindus who are cremated, great saints are buried in salt and other substances, their bodies continuing to radiate spiritual power. Hundreds of odhuvars, specially trained temple singers who had come there for a function to honor them slated for the same day, poured forth the hymns which the saint is known to rejoice in. This was followed by offerings of both real and solid-gold flowers. After worship with various ghee lamps as done before deities in temples, the final offering of burning camphor was performed around 1:20pm. The final interment was delayed an hour to await Prime Minister Rao's arrival.

A sudden hush gripped the mutt as the body of the Paramacharya, dressed in deep saffron, was hoisted and carried to the recently begun Birla Hall, originally intended as a place for public gatherings. It has been decided to pull down the construction so far achieved and instead build a shrine. The saint was lowered with the chair in which his body was kept into a specially woven bamboo basket and ensconced in a ten-foot pit filled with salt, sandal powder, flowers and medicinal herbs. The exalted danda [staff], which the sage so gloriously held aloft for the best part of a century, was snapped into three pieces; one was placed on the head and two alongside the sacred frame. The spot where the body of the 68th Sankaracharya of the Kanchi mutt was buried was thrown open for public worship on January 11th. The saint's few possessions-a cot, woolen blanket, flashlight, spectacles, an alarm time piece and wall clock are kept in a glass case by the samadhi for public viewing.

India Pays Tribute

Mr. Shankar Dayal Sharma, the President of India, said in his tribute, "He symbolized humankind's quest for truth, peace and harmony." Former President, Mr. R. Venkataraman, who was seen in tears, described Periyaval as "a lamp unto humanity who led them on the path of dharma and offered solace to millions." The Tamil Nadu Chief Minister, Mrs. Jayalalitha, said, "The liberation of His Holiness marks the end of a great epoch in the spiritual history of India. He was a great sage in every sense of the term." The most perceptive observation came from the illustrious jurist Nani Palkhivala, one-time Indian Ambassador to USA. A distinguished member of the Parsi community, Mr. Palkhivala extolled, "The pontiff saw with the eyes of his soul and exemplified the towering tenets of Indian culture. No man ever asked of life so little for himself." Former Madras Chief Justice Mohammed Mohammed Ismail was one of the first VIPs to reach the mutt. He offered, "The pontiff is simply beyond praise. We were all supremely privileged to be his contemporaries."

Sri Chandrasekharendra

Born May 20, 1894, in Villuppuram town, 100 miles to the South of Madras in Tamil Nadu, Swaminathan, as the pontiff was known in childhood, was seen to be precociously spiritual. He was only 13 when initiated into sannyas to become the 68th pontiff of Kanchi Mutt on February 13, 1907, following the unexpected demise of the 67th pontiff at the age of 18. Sri Chandrasekharendra Saraswathi's year of ascension coincided with the first satyagraha protests by a young Mahatma Gandhi in South Africa, and the slow buildup to World War I in Europe. He was intensively educated by the mutt's pandits in both religious and secular knowledge. He could converse in English, French, Swedish and a dozen Indian languages.

Like the Shankaracharyas before him, he traveled the entirety of India on foot. "Lending ear to the prayers and petitions of all kinds of people, round the clock, year upon year," he remarked, "I have come to know, as none other perhaps, the endless afflictions of humanity." The pontiff endeavored to carry on the traditions of Kanchi Mutt, specifically the preservation of its Smarta Vedic tradition. "It is my ardent wish," he told devotees after a kanapalishekam -offering of gold coins, "that every locality, every street should have a center for teaching the Vedas. The boys, from their eighth year onwards, must be put through the discipline of recitation for an hour a day for ten years. Preserving the pristine tradition of the exalted Vedic chants enshrined in the lineage dedicated to the Vedas, for the sake of the well-being of not only Hindus of all castes and denominations, not only Indians of all faiths, but for the sake of ensuring the weal of all mankind is the bounden duty of the present generation. When there is no Vedas, where is the need for this mutt? Where is the need for a pontiff?" He said, "While I lay down the shastric rules so strictly, people have given up a lot of them. If I were myself to relax them, how much more lax will the people become?"

Never a day passed without his reading the newspaper. Until a few years back he would be seen scanning a newspaper even under a torch light. When he became too weak, he made someone read the newspaper thoroughly everyday and give him the news summary. So too would letters be read aloud to him. S. Ramaswami relates that once some disciples asked the pontiff to persuade the Muslim community in Kanchipuram to shift the mosque that is quite close to the mutt. The saint merely replied, "That is a temple too."

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

Read more: http://periva.proboards.com/thread/6087 ... z2tO3pdr6a

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Balaji Swaminathan‎....Sage of Kanchi
எனது தந்தையின் பேரனுபவம்...அவரின் வாயிலாக....

1977'ஆம் ஆண்டு. எனது அத்தைக்கு கண் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய சூழ்நிலை. ஒரு விழிக்கு முதலில் நடத்திவிட்டு பிறகு மற்றொன்றுக்கு செய்யலாம் என முடிவு செய்யபட்டது. ஆனால் மருத்துவரின் கவனக்குறைபாடால் முதல் சிகிச்சை பலனளிக்காமல் போய்விட்டது. இன்னொரு விழியில் புரையின் வீரியம் அதிகமாகி கொண்டு வந்தது. அனைவரும் தவித்த தவிப்பு சொல்லி மாளாது. சிகிச்சை செய்யாமல் போனாலும் அபாயம். என்ன செய்யவதென்று தெரியாத ஒரு நிலை. அப்போதுதான் பெரியவாளை பார்த்து ஆசி வாங்கிக்கொண்டு வந்து சிகிச்சையை துணிந்து நிறைவேற்றிடலாம் என்று என் தந்தைக்கு தோன்றியது. எல்லோர் பாரத்தையும் வாங்குவதற்க்கென்றே வேறு வந்திருக்கிறார் அல்லவா அவர்...?

தந்தைக்கு அப்போது வேலை இல்லாத மற்றொரு துயர நிலை. எதிர்பாராத விதமாக அவர் வேலை செய்துகொண்டிருந்த இடத்தில் ஆட்குறைப்பு நடந்தது. சிறிய தந்தை கனிவுடன் குடும்பத்திற்கு பண உதவி செய்து கொண்டிருந்தார். காஞ்சி வந்தாயிற்று....பெரியவா தேனம்பாக்கத்தில் இருப்பதாக தெரிந்து அங்கே சென்றார். "தங்கைக்கு கண்ணு ஆபரேஷன் இருக்கு. பெரியவாளை பாக்கணும்" என்று அங்கே இருந்த கைங்கர்யத்திடம் தந்தை சொன்னார். சற்று தொலைவில் அமர்திருந்தார் பெரியவா. கைங்கர்யம் அவரிடம் சென்று இதை சொல்ல, அங்கிருந்தே "இரு இரு" என்று என் தந்தையை பார்த்து கை அசைத்தார். அன்றைக்கு அவர் மௌன விரதம் என்று பிற்பாடு விளங்கியது. எனவே தந்தை அன்றைக்கு அங்கேயே தங்கிகொண்டு கைங்கரியத்தில் ஈடுபடலானார். இருந்தும் மனம் "பெரியவா எப்போ கூப்டுவா...?"ன்னே இருந்துது. ஸ்லோகங்கள் பல அறிந்தும் "சங்கரா சங்கரா" என்றே அன்று முழுவதும் சொல்லிக்கொண்டு இருந்தார். இதனிடையில் மறுநாள் காலை பெரியவா வரதரை தரிசிக்க அதிகாலை கிளம்புவார் என்று தெரிந்தது.

நாலு மணிக்கெல்லாம் தயாராகி நின்று கொண்டிருந்தார். பெரியவா வருகிறார்....பின்னால் அந்த கைங்கர்யம். தந்தையை கை காட்டி பெரியவாளிடம் ஏதோ கூற எத்தனிப்பதற்குள் "தங்கைக்கு ஆபரேஷன்'னு வந்திருக்கேல..?". "ஆமாம் பெரியவா.." என்றார். முதல் ஆபரேஷன் பற்றி என் தந்தை சொல்வதற்குள் "இந்த வாட்டி செரியாயிடும். கவலை படாம போய்ட்டு வா" என்றார். கேட்டதும் அப்படியே அவர் திருவடிகளில் விழுந்து விட்டார் தந்தை. சிறிது கல்கண்டையும், விபூதியையும் அளித்து "அழக்கூடாது.....தங்கைக்கு இதை இட்டுவுட்டு, இதை வாய்ல போட்டுக்க சொல்லு" என்று சொல்லி ஆசிர்வதித்து வரதரை பார்க்க நடையை கட்டினார். அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அனைவரும் பின்னால் ஓடினார்.

பின் ஆபரேஷன் என்னவாயிற்று என்பதை நான் சொல்லவும் வேண்டுமா....? ஆனால், திரும்பி வந்த சிறிது நாளிலேயே தந்தைக்கு வேலை கிடைத்து விட்டது என்பதை சொல்லியே ஆக வேண்டும். சம்பளம் குடுத்து போனஸும் குடுத்துட்டா உமாச்சி தாத்தா..

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

ஆபரேஷன் செய்த மருத்துவர் வாழ்க!
வேலை கொடுத்த முதலாளி வாழ்க!
Last edited by Pratyaksham Bala on 17 Feb 2014, 15:59, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

Where is the adhiSTHAnam of Sri Adi Sankaracharya?
(अधिष्ठानं - adhiSTHAnam, final sitting place, समाधि shrine, sepulchral.)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

பல வர்ஷங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒருநாள் மடத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண "கியூ"வில் நின்றிருந்தனர் ஒரு வயஸான தம்பதி. அவர்கள் முறை வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர். "பெரியவா...........நான் ஸர்வீஸ்லேர்ந்து ரிடையர் ஆய்ட்டேன்.........கொழந்தைகள்...ன்னு யாரும் கெடையாது. அதுனால, மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அனுக்ரகம் பண்ணணும்." பேச்சில் உருக்கம், பணிவு. பக்கத்தில் வயஸான மனைவி. "வாழ்றதுக்கு ஒனக்கு பிடிப்பு எதுவும் இல்லேன்னுதானே கவலைப்படறே?" "ஆமா........." "எதாவுது கார்யம் குடுத்தா பண்ணுவியா?" "உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்." அவரை அப்படியே விட்டுவிட்டு அடுத்து வந்த மற்றொரு தம்பதியிடம் குசலப்ரஸ்னம் பண்ண ஆரம்பித்தார்.
அவர்களும் வயசானவர்கள்தான். கூட அவர்களுடைய பெண்ணும் வந்திருந்தாள். "இவ எங்களோட ஒரே பொண்ணு. இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்..........." கையை உயர்த்தி ஆசி கூறினார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த "பிடிப்பு" மாமா இதை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பி, "பிடிப்பு வேணும்...னியே! இதோ........இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் சொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும்." "செஞ்சுடறேன் செஞ்சுடறேன்." பிடிப்பு கீழே விழுந்து வணங்கினார். பெரியவா அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டி, அவர் மனைவியை பார்த்தார். அவருக்கு புரிந்தது........."ஆமா, இவ என் ரெண்டாவது சம்ஸாரம். மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவளை கல்யாணம் பண்ணிண்டேன்". பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவ்ரமான மாறுதல்! "சரி..........ஒனக்கு மூத்த தாரத்தோட பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?............." "இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு". பெரியவாளுக்கு எப்டி தெரியும்? ரொம்ப கூனிக்குறுகி, "இவ சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தையை படாதபாடு படுத்தினதால, அந்தக் குழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா......நானும் தேடாத எடமில்லே! போனவ போனவதான்.............." துக்கத்தால் குரல் அடைத்தது. "ம்ம்ம்ம் பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ? இதோ.......ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........." அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், இன்பமான அதிர்ச்சி! என்னது? இது சத்யம் சத்யம்! பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்! உண்மைதான்! பல வர்ஷங்களுக்கு முன் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டே ஷனில் இந்தக் குழந்தை அழுது கொண்டு நின்றதாகவும், விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால் அவளை தாங்களே வளர்த்து வருவதாக கூறினார்கள். பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.
இப்போது அதிகமாக எல்லார் வாயிலும் அனுபவம் இல்லாமலே வரும் வாக்யம் "எல்லாமே pre planned " என்பது. மஹான்களின் சந்நிதியில் அது சஹஜமாக, அனுபவத்திலும் வரும். நம் வீடுகளில் கண்ணாடியை எங்கேயோ வைத்துவிட்டு, வீடு முழுக்க தேடியதும்,வீட்டார் யாராவது "இதோ இருக்கு" என்று எங்கிருந்தோ கண்ணாடியை எடுத்துக் குடுப்பது போல், சர்வ சாதாரணமாக "cosmic level " ல் விளையாடக்கூடியவா பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

“ ஓம் தேஜோஸி தேஜோ மயி தேஹி / வீர்யமஸி வீர்யம் மயி தேஹி / பலமஸி பலம் மயி தேஹி / ஓஜோமஸி ஓஜோ மயி தேஹி / மன்யுரஸி மன்யும் மயி தேஹி / ஸஹோஸி ஸஹோ மயி தேஹி //ஓம் “

இறைவா ! நீ ஆன்ம சக்தியாக இருக்கிறாய் . எனக்கு ஆன்ம சக்தியை தருவாய். நீ ஒழுக்க சக்தியாய் இருக்கிறாய். எனக்கு ஒழுக்க சக்தியை தருவாய் . நீ உடல் சக்தியாய் இருக்கிறாய் . எனக்கு உடல் சக்தியை தருவாய் . நீ தெய்வீக சக்தியாய் இருக்கிறாய் . எனக்கு தெய்வீக சக்தியை தருவாய் .நீ தைரியமாக இருக்கிறாய் .எனக்கு தைரியத்தை தருவாய் . நீ பொறுமையாக இருக்கிறாய் .எனக்கு பொறுமையைத் தருவாய் !

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

இது யஜுர் வேதத்தில் உள்ள ஒரு பாடல்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Karthi Nagaratnam
ஆனை அளவு அன்பு கொண்டவரே என்ற தலைப்பின் கீழ் சில மாதங்கள் முன் ஸ்ரீ ரா க அண்ணா அவர்களின் பொற் களஞ்சியத்தில் இருந்து பகிர்ந்ததில்...ஒரு பொன் பொறுக்கு மணி...

1930 வடார்க்காடு மாவட்டம், அந்நாளில் ஜாகீர், இன்று ஆரணி சேர்ந்த பூசிமலைக்குப்பம் என்ற இடத்தில் சாதுர்மாஸ்யம்.

அப்போது ஆனை மட்டும் தனித்து இருந்த ஓர் இரவு அதற்கான கீற்று கொட்டகையில் தீ பிடித்து கொண்டது. ஆனை சங்கிலியை அறுத்துக்கொண்டு எங்கோ ஓடி விட்டது.

கொட்டகை தீக்கு இரை ஆனது பிற்பாடு தான் தெரிந்தது - சாம்பல் முட்டு இத்யாதிகளால். நல்ல வேளையாக ஆனை பொசுங்கவில்லை தீயில் என்று உறுதி படுத்த பட்டது. ஆனால் அதை காணாததால் மிக்க கவலை ஏற்பட்டது. இரண்டு தினம் சுற்றுபுறம் எல்லாம் தேடியும் தடயம் ஏற்படவில்லை.

அப்புறம் எட்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள ஒரு காட்டிலிருந்த நீர் நிலையின் பக்கமாக சென்ற எவரோ சிலர் ஜலாசயத்தில் கஜராஜன் படுத்திருப்பது கண்டு மடத்துக்கு தெரிவித்தனர்.

பாகன் முதலானோர் அங்கு சென்றனர். ஆனை அசைந்து கொடுக்கவில்லை. என்னவெல்லாமோ தாஜா செய்து பார்த்தனர். பலிக்கவில்லை. பயந்துகொண்டு சன்னிதானம் திரும்பி விஷயத்தை கூறினர்.

மஹா சன்னிதானமே அங்கு சென்றது.

கஜேந்திர வரதனை எட்டத்தில் கண்டவுடனேயே ஆனை குளத்தில் இருந்து எழுந்திருந்து அவரை வரவேற்க வந்த விட்டது.

தன் மலையான சரீரத்தை திருப்பி திருப்பி காட்டி, தாயிடம் சேய் போல தனக்கு ஏற்பட்ட தீ புண்களை அவருக்கு அறிவித்தது.

உயிரினம் எதையும் தீண்டும் வழக்கமற்ற அருளாளர் அமுத விரல்களால் அப்புண்களை தொட்டு கொடுத்தார். ஆனை ஆறியது. புண்களும் ஆறின.

ஆனை ஒன்றின் பின் செல்லும் சாது ஆட்டுக்குட்டி போல், சிறிய பூஞ்சை மேனியரான ஸ்ரீ சரணரின் பின்னே அந்த கஜராஜன் அடக்கமாக ஸ்ரீ மடத்துக்கு திரும்பினான்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

கோபம் கொள்ளத் தகுதி ஏது?

நம்மை ஒருத்தர் துவேஷிக்கிறார் என்று கோபம் கொள்ள வேண்டியதில்லை. நாம் எத்தனை தூஷணைக்குத்தக்கவர் என்பது நம் உள்மனசுக்குத் தெரியும். ஒருகால் நம்மை தூஷிக்கிறவர் நாம் செய்யாத தவற்றுக்காக நம்மைத் திட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் செய்த தவறுகள் அதைவிடப் பெரியவை என்றும் நம் அந்தரங்கத்துக்குத் தெரியும். நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் பச்சாதாபத்துடன் அழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இந்த நிலையில் உள்ள நாம், பிறரைத் தப்புத் கண்டுபிடித்து கோபிக்க நியாயம் ஏது?

'நாம் தப்பே செய்யவில்லை என்றால், அப்போது பிறரைக் கோபிக்கலாமா?' என்றால் இப்படித் தப்போ பண்ணாத நிலையில் நாம் அன்பு மயமாகிவிடுவோம். அப்போது நமக்குப் பாவியிடமும் கருணை தவிர, எந்தப் பாவனையும் இராது. கோபமே உண்டாகாது. நாம் தப்புச் செய்தவர்கள் என்றாலோ, நமக்குப் பிறரைக் கோபிக்க யோக்கியதை இல்லை. தப்பே பண்ணாத நிலையிலே எல்லாம் அம்பாளின் லீலைதான் என்று தெரிகிறது. லீலையில் யாரை பூஷிப்பது, யாரைத் தூஷிப்பது?. எப்படிப் பார்த்தாலும் கோபம் கூடாதுதான்.

மநுஷ்யரைப் பாபத்தில் அழுத்துகிற இரண்டு பெரும் சக்திகள் காமமும் குரோதமும் என்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அதாவது நம் கோபத்தினால் நமக்கேதான் தீங்கு செய்து கொள்கிறோம். பெரும்பாலும் நம்முடைய கோபத்தை எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது. ஆத்திரப்படுவதால் நாமே நம் சரீரம், மனசு இரண்டையும் கெடுத்துக் கொள்வதோடு சரி. அன்பாக இருப்பதுதான் மனிதன் ஸ்வபாவமாக தர்மம். அதுதான் ஆனந்தமும். அன்பு நமக்கும் ஆனந்தம், எதிராளிக்கும் ஆனந்தம். அன்பே சிவம் என்பார்கள். நாம் எல்லோரும் அன்பே சிவமாக அமர்ந்திருக்கப் பிரயாசைப்பட வேண்டும்.

- ஐயன், தெய்வத்தின் குரல் முதல் தொகுதியில்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

கடம் வாசிக்கும் விநாயகராம் வெளிநாட்டில் சம்பாதித்த ஐந்து லட்சம் ரூபாயை அப்படியே ஸ்ரீ மடத்திற்கு அனுபிசுட்டான் அவனை போல நீயும் இருக்கணும் =-மஹா பெரியவர்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Sage of Kanchi
நடு வயது தம்பதிகள். நான்கு குழந்தைகள். எல்லாம் நவீன ஆடை - அலங்காரம்; நவீனத் தோற்றம். பெண் குழந்தைகளுக்கு கழுத்து வரை மட்டும் கூந்தல் - எல்லையோர செடிகளை, இடுப்பளவு உயரத்துக்கு மேல் வளராதபடி கத்திரிகோலால் வெட்டி விட்ட மாதிரி; நுனி நாக்கில் ஆங்கிலம் விளையாடியது. கான்வென்ட் படிப்பு.

பெரியவா, அந்த குழந்தைகளை தன் அருகில் வரச்சொன்னார்கள். வந்தன. "பேரென்ன? எங்கே படிக்கிறே? என்று விசாரணையாய் உரையாடல்.

குழந்தைகள் ரொம்ப சகஜமாகி விட்டன; உற்சாகமாக, தயக்கமில்லாமல் பதில் சொல்லி கொண்டிருந்தன.

அருகில் இருந்த பழத்தட்டை காட்டி, 'யாருக்கு என்ன பழம் வேணுமோ எடுத்துக்கலாம்' என்று சொன்னர்கள்.

குழந்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம்.

Thanks - என்று சொல்லிவிட்டு பழங்களை எடுத்துகொண்டன.

பெரியவா சொன்னார்கள்" "ஒரு request நான் சொன்ன கேட்பேளா?"

ஒரே குரலில், "Oh yes! certainly we will do" என்று குழந்தைகள் கூறின.

'வெளி இடத்திலே, பள்ளிகூடத்திலே அல்லது வேறு மனுஷ்யாளிடத்தில் பேசறபோது இங்கிலீஷ்லே பேசு. உங்க வீட்டிலே, அப்பா - அம்மா, சுவாமிகளா இருக்கிற நான்; அப்புறம், பகவான் இவாளிடம் தயவு பண்ணி தமிழிலே தான் பேசணும். தமிழ் தாய்மொழி. தாய் தான் முதல் கடவுள். தமிழ் பேச்சை மறக்க கூடாது."

குழந்தைகள். 'இனிமே அப்பா - அம்மா , குரு, தெய்வத்துகிட்டே தமிழிலேயே பேசறோம். Promise!' என்றன.

பெரியவா முகத்தில் கோடி சூர்ய பிரகாசம். மகா பண்டிதர்களுடன் அத்வைத விசாரம் பண்ணும்போது பளீரிடும் ஒளியை காட்டிலும் நூறு மடங்கு பிரகாசம்!

Post Reply