Vintage Vignettes...
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Vintage Vignettes...
இவர் ஒரு விதம்
........................
ஸ்ரீமான் சாமா
முன்னுரை:
என்ன சார், சௌக்யமா? உங்களை ஒரு யுகமாய்த் தேடுகிறேன், எங்கே போய் ஒளிந்துகொண்டிருந்தீர்? இரண்டு தரம் காரைப் போட்டுக் கொண்டு கூட வீட்டுப் பக்கம் வந்திருந்தேன். ஆளையே காணுகிறதில்லை. எனக்கும் டயம் எங்கே இருக்கு? நேற்றுத்தான் கொடைக்கானலிலிருந்து இறங்கி வந்தேன். என்ன சீசன் போங்கோ! இந்த தரம் கலெக்டர் சாரோடெ போயிருந்தேன். அவர்தான் ரொம்ப நிர்ப்பந்திச்சார், 'டேய் சாமா, நீயில்லாத ஒண்ணும் ரசிக்காதேடா!' என்று.
இல்லையானால் போயே இருந்திருக்க மாட்டேன்.
எனக்கு ரொம்ப அர்ஜென்டா டெல்லி போக வேண்டி வந்தது. நம்ம பராங்குசம் மில்ஸ் செட்டியார் இருக்கார் பாருங்கோ, என் காலைப் பிடிக்காத குறைதான். 'சாமா ஐயரே, நீஙதான் போகணும், ப்ளேன் டிக்கெட் கூட புக் பண்ணிட்டேன். உங்களால்தான் முடியும் அந்தக் காரியம். மினிஸ்டர் வரை போக வேண்டியிருக்கிறது', என்று என்னென்னமோ சொன்னார். 'அதுக்கென்ன செட்டியார்வாள், நம்ம வேதாசலம்தான் இருக்கிறானே, அங்கே ஒரு வார்த்தை போட்டு வைக்கிறேன்', என்று சொல்லி வைத்தேன். போக முடியாவிட்டாலும் நம்மாலான உபகாரம் செய்து கொடுக்கணுமோல்லியோ?
பார்த்தேளா? மறந்தே போய்ட்டேன் நான்! அன்றைக்கு சோக நட்சத்திரம் 'கைம்பெண்ணானாலும் கணவனே தெய்வம்' புகழ் கண்ணகி தேவி வீட்டு விருந்துக்குப் போயிருந்தேன். அங்கே ஸர். திருவேங்கடத்தைப் பார்த்தேன். உங்களைக் கூட விசாரித்தார், 'என்ன சாமா, உன்னோடு திரிவாரே உன் ஃப்ரெண்டு', என்று. அப்புறம் வேடிக்கையைக் கேளுங்கோ. அங்கே காமெடியன் கண்ணாயிரம் என் கையைப் பிடித்துக் கொண்டு, ' நீங்க என்ன சொன்னாலும் சரி சார். உங்க'ளை விடப் போவதில்லை', என்று காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு போனார். ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் சீட்டுக் கச்சேரி, போங்கோ! நாயனம் நாச்சியப்ப பிள்ளை அப்படியே அசந்துட்டார். 'இனிமே சாமா ஐயர் போல ஒருத்தர் வெளயாடிப் பார்க்கணும்னு. அன்னிலெருந்து ரொம்ப நெருங்கிப் பழகறார் சார்! அன்னிக்கு ஸம்ரக்ஷண சபாலெ ஒரு தோடி வாசிச்சிருக்கார் பாருங்கோ! அப்படியே ஓரோருத்தனும் மயங்கி ஒக்காந்துட்டான். ப்ரமாதம், போங்கோன்னேன்.
'ஏதோ, சாமா ஐயர் ஒத்துக்கிட்டா சரிதான்' என்கிறார்! ரொம்ப நல்ல மனுஷன், சார்...
அப்படித்தான், தாண்டிக்குடி ஐயாவு ஐயர் கூட, 'சாமா வந்து மொதல் வரிசைல ஒக்காந்தாதான் பல்லவி பாடுவேன்' அப்படிம்பார்'. அவர் பாட்டிலே எனக்கு எத்தனை மோகமோ, அதைப் போல டபுள் பங்கு அவருக்கு என் மேலே ப்ராணன்.
'களிமண் மொத்தையை மாதிரி மண்டையை வெச்சுண்டு பெரிசா க்ரிடிக்னு மொதல் வரிசைலெ வந்து ஒக்காரறானே! நம்ம சாமா ரசிக்கறா மாதிரி ஒருத்தனெ ரசிக்கச் சொல்லேன் பார்ப்போம்!' என்பார். வர வாரம் கூட மயிலாப்பூர்லே பாடறார் சார். உங்களுக்கு வேணும்னா ஒரு காம்ப்ளிமென்ட்ரி அனுப்புகிறேன்...
முத்தாய்ப்பு:
எங்கேயாவது அவசரமாப் போறேளா? நானும்தான் நாலு மணிக்கு ஜஸ்டிஸ் நாகநாதன் வீட்டிலேயிருக்கணும். வர மாசம் எட்டாம் தேதி அவர் பெண்ணுக்குக் கல்யாணம். சமையல் டிபார்ட்மென்டே நம்ம கையில்தான். மிளகாய் வற்றல் வாங்கிறதிலே இருந்து மெனு போடுகிற வரை எல்லாம் நான்தான்.
என்ன சார், புறப்பட்டுட்டேளா? ஒரே ஒரு நிமிஷம் சார்! அதோ பஸ் வ ந்துடுத்து. இப்போதான் சட்டைப் பையைப் பார்க்கிறேன். அவசரத்திலே சில்லறை எடுத்துக்காம வந்துட்டேன். ஒரு எட்டணா கொடுத்தேள்னா நாளைக்கே...

- Posts: 3033
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Vintage Vignettes...
அருமையான தொகுப்பு. கலைமணியின் ஸ்ரீமான் வைத்தியின் ஞாபகம் வருகின்றது.
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
18 06 2014
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
18 06 2014
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
Thank you, Thanjavooran!
This is from 1961
This is from 1961

-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
இவர் ஒரு விதம்...
திரு. நாவுக்கடியார்
.......................................
ஓடும் இரயிலிலே...
அதோ பாருங்கோ சார், அந்த மலைக்கு அந்தண்டே தெரிகிறதே, அதுதான் சிக்க நரசைய்ய மலை. அதற்கு மேலே இருக்கற கோவிலைப் பார்த்தேளா? ஃபர்ஸ்ட் க்ளாஸ் கோவில் சார்! மனுஷனுக்கு மன நிம்மதி வேணும்னா அங்கேதான் போகணும். ஆனாலும், எவன் போவான்? வழியிலே புலி அடிச்சுப் போட்டாலும் கேட்கிறதற்கு ஆளில்லை. நான் ஒருத்தனே போயிருக்கேன் சார்! இப்படித்தான் சபரி மலையிலேயும் தனியாய்ப் போய்...ஐயப்பா! அவன்தான் என்னைக் காப்பாத்தினான்!
இதோ பாருங்க சார், வீடு கட்டறான் புறாக்கூண்டு மாதிரி! பம்பாய் தோற்றது, போங்கோ! வர வர ஊரே மோசமாயிடுத்து. முன்னாலெ ஸிடி மார்க்கெட்டிலே ஒரு எட்டணாவைத் தூக்கி எறிஞ்சா, சும்மா பச் பச்னு கறிகாயெக் கூடையிலெ அள்ளிக் கொடுப்பான். சொன்னா நம்ப மாட்டேள் சார். அப்ப்பிடியே பச்சையா கடிச்சு சாப்பிடலாம் போலிருக்கும்.
அங்கே பளெ பேட்டே திரும்பற ரோடு இருக்கு பாருங்கோ--இது பதினஞ்சு வருஷத்துப் பேச்சு-- ஒரு தோசை போடுவான் பாருங்கோ. இன்னைக்கு எல்லாம் என்னமோ ஸ்பெஷல் வெண்ணெய் மஸால் தோசை என்று அலையறதுகளே, ராஜு ஹோட்டல் தோசையை விண்டு வாயிலெ போட்டுக்கறதுக்குக் கொடுத்து வெச்சிருக்கணுமே! ஒரு பெஞ்சு, ஒடெஞ்ச நாற்காலி கிடையாது. ஆனாலும் ஒவ்வொருத்தனும் நின்னுண்டே சாப்பிட்டு விட்டுப் போவான். நம்ம ஜட்ஜ் ஐயங்கார் கூட காரிலெயே ஒக்காந்து சாப்பிடுவார். அவருக்குப் பூர்விகம் திருப்புல்லாணி. ஒரு தரம் அவரோடெ சேதுக்கரை வரையில் போய் தரிசனம் செய்துட்டு வந்தேன். ஆந்தக் கோவில் பாயசம் சாப்பிட்டிருக்கேளோ? அம்பலப் புழை பாயசத்தை அதன் காலிலே கட்டி அடிக்கணும்.
ஆமாம், நீங்கள் எது வரையிலுமோ? அட, திருச்சியா? திருச்சியெல்லாம் தண்ணி பட்ட பாடு சார் எனக்கு. தெற்கே எங்கெ போனாலும் திருச்சியை ' டச்' பண்ணாத போக மாட்டேன். எனக்கு மலைக் கோட்டை வறுத்த சீவல்னா உயிர். அதுக்குன்னே திருச்சிக்கு எடுத்துக் கட்டிண்டு வருவேன்.
அட! ஜோலார்பேட்டை வந்துடுத்தா? இங்கே கோல்ட் ஸீல் போட்டு பாட்டில்லெ பால் விற்பானே சார்? கள்ளிச் சொட்டு மாதிரி இருக்குமே! நான் எப்பவும் ரெண்டு பாட்டில் ஸ்வாஹா பண்ணிடுவேன். குழந்தைக்கு வாங்கப் போகிறீர்களா? அப்படியே எனக்கும் வாங்கிடுங்கோ, தாங்க்ஸ்!
இப்படித்தான் சார், நான் கல்கத்தா போகும் போது, உங்களை மாதிரித் தான், பொறந்த நாள்லெ இருந்தே பழகினவா போலே. வழி முழுக்க அப்படி ஆப்தாளாய்ப் போய்ட்டோம். அவாத்துலெ ஒரு புளியோதரை பிசிஞ்சிண்டு வந்தா பாருங்கோ, இன்னிக்கு நெனைச்சாலும் நாக்கிலெ ஜலம் கொட்டறது, போங்கோ. அப்புறம் ஒரு தயிர் சாதம். மாங்காய், வெள்ள்ரிக்காயெல்லாம் பொடியாக நறுக்கிப் போட்டு, கடுகு பெருங்காயம் தாளிச்சு...தேவாம்ருதம்தான்!
ஆனா, தயிர்னா ஹரித்வார்லேதான் பார்க்கணும். கத்தியெ வெச்சு வெட்டினாலும் அறுபடாது சார், அவ்வளவு கெட்டி.
மண் சட்டியிலே போட்டுக் கொடுப்பான். இன்னமே அப்படி ஒரு தயிர் சாப்பிடணும்!
அடடே, இதென்ன கொய்யாப் பழமா? தாங்க்ஸ் சார். ஆனா, கொய்யாப் பழத்துக்கு அலஹாபாத் தான். ஒண்ணொண்ணும், சும்மா தேங்காய் ஸய்ஸ் இருக்கும்!
அந்தப் பெட்டியைக் கொஞ்சம் தள்ளி வைக்கிறீர்களா சார்? ஆந்தக் கூடையையும் தான். ஆ...வ்! தூக்கம் கண்ணை சுழட்டுகிறது. கொஞ்சம் மேலே ஏறி, காலை நீட்டலாம் என்று பார்க்கிறேன். குட் நைட் சார், அனால் கரூர் வந்ததும் என்னை ஜரூராக எழுப்பிடுங்கோ! அந்த அஞ்சரை மணிக்கு ஒரு கப் காப்பி வயிற்றிலே போனால்தான் வண்டி ஓடும்...
திருப் பள்ளியெழுச்சி
எனக்கும் சேர்த்தே வாங்கிட்டீர்களா காப்பி? பாவம், உங்களுக்கு சிரமம் சார். ஆனா, காப்பியா, கழு நீர் தண்ணியா இது?
(continued)

Last edited by arasi on 27 Jun 2014, 08:41, edited 1 time in total.
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
மைஸூர் காஃபி பாலஸ்லே சாப்பிட்டிருக்கேளா சார்? அதுதான் காப்பி...
இதென்ன சார், அறுவடை காலமா? அப்போ தஞ்சாவூர்லே என் ஃப்ரெண்டு வைத்தி இருக்கிறான், அவனுக்கு எழுதிப் போட வேண்டியதுதான். பெரிய லாண்ட் லார்ட், எத்தனை நெல் வகை! வடக்கத்தியான் பாஸுமதி தின்னுவான், அரிசி சும்மா முல்லைப் பூப் போல இருக்கும். வெறும் சாதமாகவே சாப்பிடலாமே சார்!
அதென்ன இவ்வளவு பெரிய ஸ்டேஷன்? அதுக்குள்ளியே திருச்சி வந்துடுத்தா? போய்ட்டு வரேளா சார்? நானும் வரேன். இங்கெ ஐ. ஆர்.ஆர்-லே அப்போதெல்லாம் ஊத்தப்பம் போடுவான், அமிர்தமா இருக்கும். இப்ப எப்படி இருக்கோ? போய் ஒரு நடை பார்த்துட்டு வரேன், வரட்டுமா சார்?

- Posts: 477
- Joined: 22 Sep 2009, 02:55
Re: Vintage Vignettes...
Brings back old time memories. The writing style reminds me of Devan. Very good, Arasi!
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
'சண்டை'க்டர் சண்முகம்
....................................................
வசை புராணம்
அட, என்னாய்யா இது? மரம் கணக்கா நின்னுக்கிட்டு? எங்கேயாவது போய் குந்துய்யா!
ஏன் சார், எங்கே போவணும்? ஏறி எம்புட்டு நேரமாச்சு, சொல்லித் தொலையுங்களேன்?
ஏ பாட்டிம்மா, என்னா இது? ஒம்மவன் வூடுன்னு நெனச்சுக்கிட்டியா? நல்லா மெத்தெ தெச்சுப் போட்டிருக்குதேன்னு 'டீக்கா' ஒக்காந்துட்டியே? நவந்து ஒக்காரும்மா..
இது என்னாங்க இது? எல்லாரும் தாள் தாளா நவட்டறிங்களே? சில்லறைக்கு நா எங்கேய்யா போவுறது? கொள்ளை அடிச்சுட்டு வரச்சொல்றீங்களா?
ஒரு பைசா இருக்குதா? அட, சொல்லுய்யான்னா? நல்லாக் கெடந்து முளிக்கறியே? சீக்கிரம் குடுய்யா!
அ, அ, அ! ஏறுங்க எல்லாரும்!
ரைட், விடண்ணே வண்டியை. ஏய் கெளவி, எறங்கு கீளே! வண்டி கெளம்பிருச்சு, தெரியலே? வுளுந்து மண்டெ ஒடெஞ்சா தெரியும். ரைட், ரைட், வண்டி போவட்டும்.
இது என்னாய்யா, வளீலெ கூடையை வச்சிக்கிட்டு? இவுங்களெல்லாம் வூட்டெயே தூக்கி வண்டிலெ வச்சிக்கிட்டு வந்திடுவானுங்க! ஏன்யா? இந்தப் பெட்டி படுக்கையெல்லாம் கை வண்டிலெ வச்சு தள்ளிக்கிட்டு வருவியா? பஸ்லே
ஏத்தி நம்ம உசுரை வாங்கிகிட்டு!
எய் கொளந்தே, கையெ வெளிய நீட்டாதே!
முன்னுக்குப் போங்க, முன்னுக்குப் போங்க!
ஏய் பொம்பளே, டிக்கெட்டு வாங்கியிருக்கியா? மொவத்தைப் பாத்தா அப்படித் தெரிலியே? அட ஏம்மா மொண மொணாக்கிறே? ஏதோ ஓன் வீடு மாரியில்லே நெனச்சுப் பேசுறே? மருவாதியாப் பேசுவியா...?

கொட்டும் மழையிலே...
அண்ணே, இந்த ஸ்டாப்புலெ நிறுத்தாதீங்க, எக்க சக்கமா கூட்டம் நிக்குது. இதுங்களெ அள்ளிப் போட்டுட்டுப் போக நம்மாலெ ஆவாது.
அட, நீ என்னாய்யா, குறுக்கெ பேசிக்கிட்டு? மளெ பெஞ்சா என்ன? அம்புட்டுப் பேரும் கரெஞ்சா போவாங்க? இப்படித்தான் அண்ணெக்கு வண்டியெ நிறுத்தி போட்டு, ஊருக்குள்ளெ இருக்கற சனங்களெல்லாம் வண்டிக்குள்ளெ ஏறி, அதுங்களுக்கு
டிக்கெட்டு குடுத்து, வெளியெ கொண்டு தள்ளுறதுக்குள்ளாரெ உயிரே போயிருச்சில்லே? எல்லாரும் ராசா கணக்கா குந்திட்டு, ஏன் பேச மாட்டீங்க? தொண்டைத் தண்ணி வத்த இங்கனெ கத்திக்கிட்டு கெடந்தா தெரியும்!
இதென்னம்மா, டிக்கெட்டை சுருட்டி மடக்கறீங்க? செக்கிங் வந்து கேட்டா என்ன சொல்லுவீங்க? படிச்சவங்களுக்கு இது கூட தெரியாது போலே...
அட என்னண்ணே நீ வண்டியெ நிறுத்திப்போட்டே? எல்லா சனியன்களும் ஏறித் தொலைக்குமில்லே?
என்னா? ஏம் பொஞ்சாதி நிக்குதா? நிறுத்துங்க, நிறுத்துங்க!...
மீனாச்சி, இதென்ன மளைல நின்னுக்கிட்டு? சீக்கிரம் ஏறு பிள்ளேன்னா?.....

Arasi,
Please continue writing these interesting and short snippets. I can't wait for your next selection. This brings back memories of our hometown and the people. You have brought out the Bus scene and presented it right before our eyes. I can see and hear him in my mind. Very enjoyable. More, please!
Please continue writing these interesting and short snippets. I can't wait for your next selection. This brings back memories of our hometown and the people. You have brought out the Bus scene and presented it right before our eyes. I can see and hear him in my mind. Very enjoyable. More, please!
-
- Posts: 3033
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Vintage Vignettes...
அரசி ஜி வெகு அருமை. எந்த காலத்திலோ எப்பவோ படித்ததை மீண்டும் நினைவு கூறும் வகையிலே தொகுப்புகளை அள்ளி அள்ளி கொடுக்கின்றீர்கள். படிக்க படிக்க சுவை அதிகரிக்கின்றது. பணி தொடர வாழ்த்துக்கள்.
தஞ்சாவூரான்
04 07 2014
தஞ்சாவூரான்
04 07 2014
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
Thank you both
Maduraimini,
No wonder, your beloved home town won me more marks!
Thanjavooran,
As I mentioned before, these are from the beginning of the sixties--when this young journalist started writing a weekly column in Dinamami SuDar. This sunday edition, she was asked to put together each week, because the senior sub-editors were too busy tackling the news! She was also roped in sometimes when the newsroom needed more hands to handle the spate of news...

I want to mention here, the Bus Conductor you wrote about is so true, but not in my hometown, Madurai. The TVS Bus Drivers and Conductors were the known to be the Best, at that time you mention. They were polite and more than willing to help older people and women in particular. I myself have enjoyed their friendliness whenever I rode the bus.
This reflects more of the conductors of Chennai and other towns. But your sketch was so realistic. Thanks.
I want to mention here, the Bus Conductor you wrote about is so true, but not in my hometown, Madurai. The TVS Bus Drivers and Conductors were the known to be the Best, at that time you mention. They were polite and more than willing to help older people and women in particular. I myself have enjoyed their friendliness whenever I rode the bus.
This reflects more of the conductors of Chennai and other towns. But your sketch was so realistic. Thanks.
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
இவர் ஒரு விதம்...
சீமை மோகாம்பாள்
...........................
இப்பதான் வந்தீங்களா? ஒக்காருங்க!
ஏய் பாய்! ஃபானைப் போடு!
அந்த வயத்தெரிச்சலை ஏன் கேக்குறீங்க! எங்க வீட்டு ஏர் கண்டிஷன் மெஷினுக்கு என்ன வந்துருச்சோ, தெரியல. ரெண்டு நாளா ஓடவே மாட்டேங்குது. இப்படித்தான் பாருங்க, நானும் என் வீட்டுக்காரரும் லண்டன் போயிருக்கையிலே நாங்க தங்கி இருந்த ஹோட்டலிலே தண்ணி நின்னிருச்சு. தவிச்சுப் போயிட்டோம். ஆனா, என்ன இருந்தாலும், இதெல்லாம் இங்க்லிஷ் காரன் கிட்டெ கத்துக்கணும். ரிப்பேர் ஆச்சுன்னு கூடத் தெரியாது. அதுக்குள்ளெ கழட்டி, மாட்டி, சரி செய்துட்டானுங்க.
அது என்னன்னு பார்க்கிறீங்களா? ஸ்வீடென்லெ வாங்கின பொம்மைங்க. அதுங்க கண்ணைப் பாருங்களேன்! நிஜ மனுஷங்க கண்ணை தோற்கடிக்கிறது போலே இல்லே? நம்ம ஊருகளிலும் பொம்மை செய்யுறானே, சோளக்கொல்லையிலே வைக்கிற மாதிரி!
அது என்னவோ போங்க, நம்ம ஊரிலே பொழுது போகிறதே கஷ்முங்க. ஒரு டெலிவிஷனா, நைட் க்ளப்பா, ஒண்ணும் கிடையாது. ஸ்காலா தியேட்டர்லே, போன வருஷம் ஒரு ரஷ்யன் பாலே டான்ஸு பார்த்தோம்,பாருங்க! சும்மா அன்னம் மாதிரி பறக்க இல்லே செய்யுறாங்க! நம்ம ஊர்லேயும் ஆடுதுங்களே, ஸ்டேஜ் ஒடெஞ்சு போகிற மாதிரி--தைய்யா தக்காண்ணு!

கோடையிலே...
முதல்லே இந்த வெய்யிலை சொல்லுங்க! என்ன இருந்தாலும் அங்கே மாதிரியெல்லாம் வருமா? போன வாரம்தான் சும்மா ஊட்டி வரைக்கும் போய் வரலாம்னு கெளம்பினேன். ஐய்யோ! அங்கெ என்ன இருக்குதுங்க? எல்லாம் நம்ம ஜனங்கதான் சுத்தி சுத்தி வராங்க.
அதுக்குத்தான் என் வீட்டுக்காரர் கிட்டே சொன்னேன். இந்த சம்மர் பேசாமெ ஸ்விட்சர்லன்டிலே போய் ஸ்பெண்ட் பண்ணலாமேன்னு. ' நீ வேணும்னா போய்ட்டு வா, எனக்கு ஆஃபீஸ் விஷயமா ஜப்பான் எல்லாம் சுத்தணும்'னுட்டாரு. எனக்கென்னவோ ஜப்பான் பார்த்து அலுத்துப் போச்சுங்க. எல்லாம் நம்ம ஊர் pOlலே கெஜம் கெஜமா துணியை சுத்திக்கிட்டு, தரையிலே ஒக்காந்துக்கிட்டு...
அமெரிக்காலே இருக்கா பாருங்க, என் பொண்ணு? அவ பாருங்க, ரொம்ப நாளாய்க் கூப்பிட்டுட்டிருக்கா. அவங்க வீட்டுக்குள்ளேயே இன் டோர் ஸ்விம்மிங் பூல் கட்டறாங்களாம். கட்டி முடிச்சதும் போகலாம்னு இருக்கேன்.
அந்த ஃபோட்டோவிலே இருக்கிறது யாருன்னு கேட்கறீங்களா? அய்யோ, இங்க்லிஷ்காரி இல்லீங்க. அவதான் என் ரெண்டாவது பொண்ணு டாலி. ராக் அண்ட் ரோல் ராணின்னு பேப்பர்லே எல்லாம் வந்துச்சுங்களே? அவ இப்போ ஹேர் ஸ்டைலிங்க் கோர்ஸுக்காக ரோம் போயிருக்கிறா.
அவுங்க ஸ்பகெட்டின்னு செய்யுறாங்களே, இதாலியிலே? அதைத் திங்கறத்துக்காகவே அங்கே போகலாமுங்க! நம்ம ஊர்லேயும் செய்யுறாங்களே ஸேமியா பாயசம்! அதுக்காகத்தானுங்க, போன வருஷம் கொஞ்ச நாளைக்கின்னு ஒரு ஃப்ரென்ச் ஷெஃப்ஃபை கூட்டியாந்துட்டேன்.
நீங்க என்ன சாப்பிடறீங்க? ஏ பாய்! அம்மாவுக்கு சீஸ், பிஸ்கெட்டு, சில்ட் ட்ரின்க் எல்லாம் கொண்டா!
அடேடே? போறீங்களா? என்னங்க அவ்வளவு அவசரம்?...
* * *

Last edited by arasi on 08 Jul 2014, 18:37, edited 1 time in total.
-
- Posts: 3033
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Vintage Vignettes...
வெகு அருமையான தொகுப்பு. எனக்கு உடனே நினைவுக்கு வரும் வரிகள்
'சொர்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா'
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
08 07 2014
'சொர்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா'
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
08 07 2014
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: Vintage Vignettes...
Wonderful slice-of-life snapshots from another era! Thank you for sharing these Arasi.
Can you also indicate the approximate date/ year you wrote them / got them published? Are all these from the early sixties?
Can you also indicate the approximate date/ year you wrote them / got them published? Are all these from the early sixties?
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
Thanjavooran,
Thanks kindly! I'm glad my wanting to share some old writings with rasikA friends was not a bad idea then. I'm amused to note the way the world has evolved in the past half century, as I type these segments! How in Japan, a kimono-clad woman is hard to encounter now. Why, even in India, saris are fast getting to be mere costumes among the present generation...
For some reason, I had trouble pasting the second segment last night. I was tired when I noticed a typo after all that. Since I could not type it in tamizh, I corrected it with english letters. A rap on my knuckles for that
Sridhar,
Good to know that you like these jottings. These are from 1961, and I remember writing a number of them under the title ivar oru vidam. My deadline was tuesday afternoon every week, and they came out on sundays.
A more laid-back series called nIngaLum nAnum followed. Thanks to my mother, she had saved many of the columns and gave them to me years ago. I photocopied them but forgot all about them. I came across them recently and thought I'd share--where else? At Rasikas.org

Last edited by arasi on 09 Jul 2014, 07:55, edited 1 time in total.
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Vintage Vignettes...
அருமை, அரசி! நாடோடி, ( “இதுவும் ஒரு பிரகிருதி”) சாவி ( கேரக்டர்) ...இவர்களின் பாத்திரப் படைப்புகளுக்கு ஒரு மாற்றும் குறையாத படைப்புகள்! இந்தத் தொகுப்பை நூலாக வெளியிடலாம்..நிச்சயமாய்!
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
I'm overwhelmed! You place me in the ranks of humorists of that level...

-
- Posts: 477
- Joined: 22 Sep 2009, 02:55
Re: Vintage Vignettes...
Arasi,
I just read your latest and enjoyed it so much. I second Pasupathy, in saying ,it is like Nadodi or Chavi's works. We have seen and met people like Cheemai Mohambal. People who have gone to any foreign country or even Delhi, saying how everything is better there. People who have been to Delhi to see their married daughter and grandchildren, boasting to their friends and neighbors, how the children don't know Tamil and speak only in Hindi ( What do you expect of a little child who grows up hearing only Hindi?) or they eat only chapathi not sadam. I am with Tanjavooran - Sorgame enralum adu nam nattukkeedguma? Your descriptions of the everyday people are really great!
Like you say, times have changed a lot within the last 50 years. Now everybody has someone in America and they have traveled to different countries. Soon sari may be in the Museum to show how the Indian women used to wear a long piece of fabric around them!
Please continue with more of these characters we have seen!

Thanks, m&m...
Last edited by arasi on 12 Jul 2014, 18:08, edited 1 time in total.
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
இவர் ஒரு விதம்...
திடீர் கோதண்டம்
.....................................
வரவு:
பயந்து போய்ட்டியா ராமு, இப்படி நடு ராத்திரியிலே யார் வந்து கதவைத் தட்டறதுன்னு? தட்டற விதத்துலிருந்தே கோண்டுதான்னு தெரியலையோ? இந்த நேரத்திலே எந்த ரயில்லே வந்தேன்னு கேக்கறயே? காரிலேதான் வந்தேன்.
நம்ம கோர தாண்டவ மர்த்தினி மில்ஸ் அனந்தரங்கம் இருக்கார் பாரு, ஹைதராபாதிலேர்ந்து அவர் வரும்போது நேற்று அவரை ஏரோட்ரோமிலே பார்த்தேன். ' நாளைக்குப் பழனி போறேன், வரயா?'ன்னார். திடீர்னு நெனச்சிண்டேன், புறப்பட்டு வந்துட்டேன். நாளைக்கு சாயங்காலம் எனக்கு கோயம்பத்தூர்லே ஒரு மீடிங் அடெண்ட் பண்ணியாகணும். இங்கிருந்து அப்படியே போய்டலாமே, உன்னையும் பார்த்துடலாமேன்னுதான் வந்தேன்.
வயிற்றுக்கும் சற்று...
ஏண்டா, சாப்பிட ஏதாவது இருக்கா? பசி ப்ராணன் போகிறதே? ஒரு மோர் சாதம் இருந்தாலும் போதும்டா. உள்ளே போய்ப் பாரேன். உன் வீட்டுக்காரியை எழுப்ப வேண்டாம். நானே இருக்கிறதை எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடுகிறேன். வீண் சிரமம் எதற்கு?
உன் பிசினெஸ் எல்லாம் எப்படி இருக்கு? ஆமாம், மாவடு ஜாடி எங்கேடா? நான் பார்க்கிறதிலெ எல்லாம் உப்பும் புளியுமா நிரம்பியிருக்கே?
சில்லுனு பானைத் தண்ணி இருந்தா ஒரு சொம்பு கொண்டு வா. நாக்கு ஒட்டிக்கறது.
உஸ்...அப்பா!
ஏண்டா? இப்போதான் நியாபகம் வறது. போன தடவை நான் இங்கெ வந்தபோது உன் கிட்டெ சொல்லிக்காமலே ஊருக்குப் போய்ட்டேன், இல்லை? என்ன ஆச்சு தெரியுமோ? நம்ம ஒட்டன்சத்திரம் ரெட்டியாரை மலைக்கு மேலே பார்த்தேன். அவர் ரொம்ப நாளாய்க் கூப்பிட்டுக் கொண்டிருந்தாரா? ஒரு நடை போய்ட்டு வரலாமேன்னு அவரோடெ கெளம்பிட்டேன். வரும்போது உன்னைப் பார்க்கலாமென்றிருந்தேன். பொழுது போனதே தெரியலை. டைமைப் பார்க்கிறேன், மூணரை! அடடா, நாலரை மணி ட்ரைனைப் பிடிக்கணுமேன்னு அறுபது மைல் ஸ்பீட்லெ ஓடினேன். நான் ஏறரதுக்காகவே காத்திருந்தது போலெ ஒடனே ரயில் கிளம்பிடுத்து...

Want to delete this, but there is no edit button visible 

Last edited by arasi on 13 Jul 2014, 20:33, edited 2 times in total.
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
ஏண்டா, எலை அசையலையே? ஒரு பொட்டுக் காற்றைக் காணோம்? வாசல் திண்ணையிலே வேணும்னா போய்ப் படுத்துக்கட்டுமா?...
அவசரத்திலே வந்தேனா, ஹோல்டால் கொண்டு வராமெ வந்துட்டேன். எனக்குத் தலைகாணி பஞ்சாய், பட்டுப் போலெ இருக்கணும். இல்லேன்னா தூக்கம் வராது. உள்ளேயிருந்து ஒண்ணு கொண்டு வரயா? ஜமக்காளம் கிமக்காளம்னு அமர்க்களம் பண்ணாதே. ஸிமென்ட் திண்ணைதான் நன்னா பளிங்கு போலெ இருக்கே?
அடேயப்பா! இங்கே காற்று ப்ரம்மானந்தமா வரதுடா! நான் பாட்டுக்கு மெய் மறந்து தூங்கிடப் போறேன். டேய், கார்த்தாலெ அஞ்சு மணிக்கெல்லாம் எழுப்பிடுடா. எனக்கு பாலுசாமியைப் போய்ப் பார்த்தாகணும். ப்ரான்ச் ஆஃபீஸுக்கு வேறே போகணும். அப்புறம் எங்கேடா? ட்ரெய்னைப் பிடிக்கதான் நேரம் சரியாக இருக்கும்.
பார்த்தியா, மறந்துட்டேனே? வண்ணான் காலை வாரி விட்டுட்டாண்டா! ஒரு
வெள்ளைச் சட்டை கூட இல்லை. உன் சட்டைதான் எனக்குன்னு தைச்சாப்லே இருக்குமே? நல்லதா, வெளுப்பா ஒண்ணு பார்த்து வைடா. எழுப்புவையாடா? கரெக்டா அஞ்சுக்கு? மறக்க மாட்டேயே?.....
* * *.

கோதண்டம் கொன்னுட்டார்.... பலே!
-
- Posts: 477
- Joined: 22 Sep 2009, 02:55
Re: Vintage Vignettes...
Arasi,
Kodandam reminds me of someone we both know. I am sure evrybody knows somebody like that. Your writing is a photographic caricature of the everyday man. Very good!

- Posts: 4201
- Joined: 21 May 2010, 16:57
Re: Vintage Vignettes...
விறுவிறுப்பான காட்சிகள். கோதண்டம் கண்ணெதிரே தெரிகிறார் !
வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் !
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
Pasupathy, Maduraimini and PBala,
Thanks
Thanks

-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
செல்லக் கண்ணு...
அருமைப் பெண் தரணி
.................................................
("பறந்து வந்த தேவதை" படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்த தரணி குமாரியைப் பேட்டி காணச் செல்கிறார் நிருபர். ஆனால் அவர் பேட்டி கண்டதோ?...)
நான்தானுங்க, தரணி குமாரியின் அம்மா! வாங்க, இப்படி உக்காருங்க. கண்னம்மா ஷூட்டிங் போயிருக்குது. என்ன, முளிக்கிறீங்க? உங்களுக்கெல்லாம் தான் அது தரணி குமாரி. அது பொறந்து மொத மொதல்லே 'குவா குவா'ன்னுச்சே, அப்போலேயிருந்து அதை நான் கண்ணாம்மான்னுதான் கூப்பிடுறேனுங்க. ஏன் தெரியுங்களா?அது கண்ணு அளகுக்கு வேறே என்ன பேரு வைச்சாலும் நல்லா இருக்காது போலே இருந்துச்சு. இப்பக் கூட கண்ணுக்குக் கீளே திருஷ்டிப் பொட்டு வைக்காமே அதை வெளியெ னுப்பமாட்டேனுங்களே?
நீங்க எந்தப் பத்திரிகையுங்க? என்ன? சினிமா பக்தனா?...எனக்கு ஒங்க மேலே ரொம்பக் கோபமுங்க . நீங்கதானே, 'இனிமேல் தரணி குமாரி ஊதுவதை நிறுத்த வேண்டும்'னு எளுதினீங்க? அண்ணையிலிருந்து அது கொலைப் பட்டினி, போங்க! அதுக்கு குலாப் ஜாமுன் ரொம்பப் பிரியம். சின்னப் பிள்ளையா இருக்கும்போது ஜாமுன் ஜீராவிலெயே நீஞ்சி வெளையாடும். இப்போ அதை திரும்பிப் பார்க்க மாட்டேங்குதே? உடம்பு பருத்துப் போயிடுமாம்! அட! நீங்கெல்லாம் சேர்ந்து பஞ்சக் கூட்டங்கதான் சினிமாவிலே நடிக்கணும்னு ரூல் கொண்டு வந்து விடுவீங்க போலிருக்கே? அதென்னவோ, அதை ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூஸ் குடிக்க வைக்கறதுக்குள்ளே பெரிய தொந்தரவாய்ப் போயிடுது....
என்ன சொன்னீங்க? அடுத்த வாரம் பேட்டி--தரணி குமாரியுடனா? ஒங்க பத்திரிகையிலே போடணுமா? அது எதுக்குங்க? நானே சொல்லிடறேன்....
அதுக்கு ரொம்பப் பிடிச்ச பொளுதுபோக்கா? இதென்னங்க இப்படி கேக்கறீங்க? நாட்டியம்தான். அதை விட நல்லா ஆடறவங்க இப்போ யாரு இருக்காங்க? விரலை மடக்குங்க, பார்க்கலாம்! என்ன, என்ன, குமாரி vaன மோகினியா?அவுங்க எல்லாம் எங்க கண்ணம்மா கால் தூசி பெறுவாங்களா? நாட்டியக் கலையே அவளுக்காகப் பிறந்ததாச்சுங்களே? மத்தவங்கெல்லாம் சர்க்கஸ்காரங்க கணக்கா ஒடம்பை வளைச்சிட்டுப் போறாங்களே, அந்த மாதிரியா? "வேல் இழந்தாலும் வீரன் வீரனே'' படத்திலே கண்ணம்மா ஒரு ஜிப்ஸி ஆடிச்சே, பாத்தீங்களா?

Last edited by arasi on 19 Jul 2014, 03:22, edited 1 time in total.
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
அடுத்த கேள்வியா? கேளுங்க.
அதுக்குப் பிடிச்ச ஆடை அலங்காரமா? ஐயோ, நம்ம கண்ணம்மாவே தனிங்க. அதுக்கு ஆடம்பரமே பிடிக்காது. ரொம்ப சிம்பிள்-ஆகத்தான் இருக்கும். ஒரு நாளு வீட்டிலெ இருக்கும்போது வந்து பாருங்களேன், சாதா பட்டுப் புடவைதான் உடுத்தும். நகையைக் கிட்டே கொண்டு வராதேன்னும். என் தொந்தரவுக்காக ஏதோ, களுத்துக்கு ஒரு நெக்லெஸ், இல்லை மாங்கா மாலை, பதக்க செயின் போட்டுக்கும். காதுக்கு ஜிமிக்கி, மாட்டல். அவ்வளவுதான். அதுக்குக் கண்ணாடி வளையல் மாத்திரம் ரொம்பப் பிடிக்கும். டஜன் கணக்கா போட்டுக்கும்.
பூன்னா அதுக்கு உயிருங்க. மதுரைப் பூ ஒரு நாள் வரல்லையின்னா தவிச்சுப் போயிடும்.
அதுக்கு பிடிச்ச பளமா? திராட்சை தான் ரொம்பப் பிடிக்கும். இதுக்காகவே காபூலிலே இருந்து வாரா வாரம் ப்ளேனுலெ வந்து எறங்கற பளம் வாங்கறோமே?
அதென்னங்க ஸோஃபா மேலே காலைத் தூக்கி வெக்கறீங்க? ஓகோ, விஸ்கியா? கண்ணம்மாவுக்கு நாய்களுன்னா உயிரு, போங்க! நாலு நாய் வெச்சிருக்குறோம். பெங்களூர்லே ஒரு நாய்க்கு சொல்லியிருக்குது, அடுத்த வாரம் வருது.
ஆமாம், பேட்டி போடறீங்களே? கூட ஃபோட்டோ வேணாமா? எங்க கண்ணம்மா சமைக்கிறாப் போலே, கோலம் போடறது போலே, அப்புறம் கேரம் ஆடுகிறது ஒண்ணு, டெலிஃபோனிலே பேசுறது ஒண்ணு, நாலு கலர் படம் போடவேணாங்களா?...
கார் சத்தம் கேட்குதே? கண்ணம்மாதான்!
வா கண்ணு, ஒக்காரு தங்கம்! என்ன கொண்டாரட்டும் உனக்கு? ஆப்பிள் ஜூஸா, ஆரெஞ்சு ஜூஸா?
ஏ முனியம்மா! உள்ளேயிருந்து மிளகாய் எடுத்துக்கிட்டு வா! குளந்தைக்கு திருஷ்டி சுத்தணும்....

யோ அம்மாடி ஆத்தாடி! இதுக்கு பேர் தான் சிம்பிள் எனப்படும் எளிமையா?
அரசி ஜி வெகு அருமை போங்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
19 07 2014
அரசி ஜி வெகு அருமை போங்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
19 07 2014
-
- Posts: 7868
- Joined: 26 Jan 2013, 19:01
Re: Vintage Vignettes...
Vintage Vignettes... அல்லது “அரசி அசத்துகிறார்” !
-
- Posts: 3033
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Vintage Vignettes...
சபாஷ் சரியான தலைப்பு !
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
Old wine in new bottles...
And for this 'can't catch up with this technological age' oldie, the new bottling is more of an exercise than the original writing!
Thank you for the encouragement
And for this 'can't catch up with this technological age' oldie, the new bottling is more of an exercise than the original writing!
Thank you for the encouragement

-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
மாற்றுக் குறையாதிருக்க வேண்டுமே!
-
- Posts: 1935
- Joined: 07 Nov 2010, 20:01
Re: Vintage Vignettes...
நூறு மாற்று - பத்தரைக்கூடவல்ல -
https://in.answers.yahoo.com/question/i ... 931AAZ8mro
https://in.answers.yahoo.com/question/i ... 931AAZ8mro
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
பிள்ளைக் கனியமுது
.............................................
ஏய், எய், பொட்டுக் கடலை, என்ன செய்கிறே அங்கே?
அடடா, இந்தப் பொட்டுக் கடலையைக் காணோமே? கொஞ்சம் யாராவது போய்ப் பாருங்களேன்! அடுப்பிலே குழம்பு கொதிக்கிறது. சாந்தா, இந்த வீட்டிலே மனுஷர்களே கிடையாதா? எல்லாத்துக்கும் நான்தான் வரணுமா?
ஏய் பொட்டுக் கடலை? .....
என்ன விஷமம் பண்ணிக் கொட்டுகிறதோ அது!
"ஐயோ, அம்மா, இங்கே வந்து பாரேன்!"
ஏண்டா, என்ன ஆச்சு? ஐயய்யோ! பால் பொங்கி வழியறதே? தெய்வமே! என்னடா?
"அம்மா, சீக்கிரமா இங்கெ வந்து பாரேன்! பொட்டுக்கடலை ஒரு பாட்டில் எண்ணையைக் கொட்டி, அதிலேயே சீக்காயைக் கரைத்து..."
கடங்காரா! அதைப் பாத்து ரசிச்சிண்டு நிக்கறாயாடா நீ? முதுகிலே நாலு வைச்சா என்ன?
ஏய் கழுதை பொட்டுக் கடலை, வா இங்கே! இனிமே இப்படிப் பண்ணுவியா? அட கஷ்ட காலமே! கண்ணுலெ போய் சீயக்காய் கையை வெச்சா என்ன ஆகும்? சாந்தா, இதை பாத்ரூமுக்குக் கொண்டு போய் கையை சோப்புப் போட்டு அலம்பி கொண்டா! அங்கே சாதம் அடி பிடிச்சுடறப் போறது.........
அப்பாடா! இந்த வீட்டிலே ஒரு நிமிஷம் ரெஸ்ட் கிடைச்சா தேவலை. இந்த நண்டு செய்கிற விஷமம் யாராலே தாங்க முடிகிறது? பாலு, அது தூங்கியாச்சாடா? ஏ பாலு, உன்னைத்தாண்டா! தூங்கப் பண்ணினியா அந்த வாலை? நான் செத்தெ அந்தத் தொடர் கதையை படிச்சுட்டு ரெண்டு நிமிஷம் கண்ணை மூடறேன். அதுக்குள்ளேதான் அது காளியாய்க் கத்தி எழுந்துடுமே? அந்த மலர் வனம் பத்திரிகை எங்கேடா?
ஐயய்யோ, போச்சு, போச்சு! அடுத்த வீட்டுப் பொஸ்தகம்னு தெரியாது? கிழிச்சு எறிஞ்சுடுத்தே? அந்த படவா பாலு இதை விட்டுட்டு கிரிக்கெட் மட்டையோடு விட்டானா வண்டி?

Last edited by arasi on 24 Jul 2014, 01:59, edited 1 time in total.
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
இந்த நண்டு அடிக்கற கூத்துக்கு இன்னொருத்தியா இருந்தா பைத்தியம் பிடிச்சு ஓடியிருப்பளே!
ஐய்யோ! அதுக்குள்ளே ஜன்னல் மேல ஏறிட்டயா? சிவ சிவா! எறங்கு கீழே! போன ஜன்மத்துலே ராமதூதன் குலத்திலேதான் பிறந்திருக்கணும்!
அப்பா! வலி ப்ராணன் போறதே? கடிக்க வேறெ தெரிஞ்சாச்சா? பேஷ்! ஏய் சாந்தா, எல்லாரும் எங்கே போய்த் தொலஞ்சேள்?
இதோடெ நான்தான் தவிச்சு தண்ணீராய்ப் போகவேண்டியிருக்கு.
யாரோ வாசல் கதவைத் தட்டறாப்லே இருக்கே? யாரது? அம்மாவா? வாம்மா, வா. இந்த வெய்யில்லே கெளம்பி வந்திருக்கியே? இந்தா, இந்தக் குட்டி ராட்சசியைப் பிடி. ஒரு க்ளாஸ் எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சிண்டு வரேன்...
என்ன சொன்னே? இதை ஒன்னோடே கூட்டிண்டு போய் ஒரு வாரம் வெச்சிக்கிறயா? தாரா...ளாமாய் வெச்சிக் கோயேன்.
அப்பாடா! ஒரு வாரம் நிம்மதியா, பிடுங்கல் இல்லாமல் ஹா...யா இருப்பேன்! உனக்குப் புண்ணியம் உண்டும்மா! ஒரு வாரம் என்ன, ஒரு நாள் வைச்சுண்டாலுமே எனக்கு நிம்மதிதான்...
* *
என்னடா பாலு சொல்றே நீ? பொட்டுக் கடலையில்லாமல் வெறிச்சுனு இருக்கா? அது இருக்கும்போது ஒருத்தரும் அதை நெருங்க மாட்டேள், இப்போதுதான் என்னிக்கும் இல்லாத அன்பு வந்ததாக்கும்! எனக்கும்தான் அது இல்லாதெ கையை ஒடச்சுப் போட்ட மாதிரி இருக்கு. பொழுது கூடப் போக மாட்டேங்கறதே? ஏண்டா, வேணும்னா சாயங்காலம் அதைப் போய்க் கூட்டிண்டு வந்துடேண்டா! குழந்தை கண்ணிலேயே நிக்கறது. ரெண்டு நாளா எனக்கு சாப்பாடே எறங்கலை. ''அம்மா, பப்பு மம்மு!"ன்னு என் முன்னாலே வந்து நிக்குமே! சைக்கிளெ எடுத்துண்டு போய் அதைக் கூட்டிண்டு வந்துடுடா!
* *
அப்பப்பா! இந்த வீட்டிலே வேறெ யாரால பொங்கிப் போட முடியும்னு கேக்கறேன். எல்லாரும் எங்கே போய்த் தொலஞ்சேள்? இந்த ப்ரம்ம ராக்ஷஸ் அண்டா தண்ணியையும் அபிஷேகம் பண்ணிண்டு நிக்கறதே! கூப்பிட்ட குரலுக்கு என்னன்னு கேக்கறதுக்கு இங்கே யாராவது இருந்தால்தானே?
கழுதை! அத்தனை தண்ணியையும் கொட்டியிருக்கியே! போடு முதுகிலே! கொண்டு போய் பாட்டி வீட்டிலே தள்ளு சொல்றேன்....!

அரசி ஜி இந்த தொகுப்புக் காகத்தான் காத்திருந்தேன். அருமை போங்கள். அது சரி இந்த சதாவதானம் மாமியிடம் எந்த குழந்தை உங்கள் அகத்தில் மிக சாது என்றால் என்ன பதில் வரும். அதோ கூரையின் உச்சியில் வத்தி பெட்டியை வைத்துக்கொண்டு ........
மீண்டும் மீண்டும் பணி தொடர வாழ்த்துக்கள்.
தஞ்சாவூரான்
24 07 2014
மீண்டும் மீண்டும் பணி தொடர வாழ்த்துக்கள்.
தஞ்சாவூரான்
24 07 2014
-
- Posts: 477
- Joined: 22 Sep 2009, 02:55
Re: Vintage Vignettes...
Arasi,
Excellent! Haven't we all gone through this stage at one time or another? But this mami seems to have her hands full with this imp! You have also brought out the mother's sentiments when the 'kutti rakshasan' is away for a few days! What a solid description in such a short skit? You really have surpassed yourself in this one.
Thanks.
Excellent! Haven't we all gone through this stage at one time or another? But this mami seems to have her hands full with this imp! You have also brought out the mother's sentiments when the 'kutti rakshasan' is away for a few days! What a solid description in such a short skit? You really have surpassed yourself in this one.
Thanks.
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
Thanks, m&m (because you are sweet!).
Since poTTuk kaDalai's real name isn't mentioned in the text, you take it to be a little tyke. It's actually a toddler girl that I had visualized! Is there a hint of it somewhere? I have to look again to see if there is one
Wonder what tanjavooran thought...
Since poTTuk kaDalai's real name isn't mentioned in the text, you take it to be a little tyke. It's actually a toddler girl that I had visualized! Is there a hint of it somewhere? I have to look again to see if there is one

-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
VG,
Had missed your post until now. You are generous!
Had missed your post until now. You are generous!
-
- Posts: 477
- Joined: 22 Sep 2009, 02:55
Re: Vintage Vignettes...
Arasi,
Darani kumari's ( her mother's) interview was good. We have read
that it is the mother of the heroine who does all the talking and here she proves it. Reminds me of Thillana Mohanambal's mother Vadivambal. Good!
Sorry, I thought Pottukkadalai was a boy. Don't know why the thought of a girl never occured to me. It is usually the boys who are very active and get into everything at that age. Pottukkadalai proves what a boy can do a girl can too! I would like to nominate her mother for the "most patient Mother" Award!

Though she 'sounds' impatient most of the time 

-
- Posts: 4201
- Joined: 21 May 2010, 16:57
Re: Vintage Vignettes...
"... இந்தா, இந்தக் குட்டி ராட்சசியைப் பிடி..."arasi wrote:It's actually a toddler girl that I had visualized! Is there a hint of it somewhere? ...
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
PB,
Yes, she is also referred to as kALi elsewhere, I noticed

I am happy that some of you are really interested in reading what I penned half a century ago!
We are stepping into August, which is family time for me
Will try to post one or two installments before I take time off. Come September, there will be several more...
We are stepping into August, which is family time for me

Will try to post one or two installments before I take time off. Come September, there will be several more...
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Vintage Vignettes...
நீங்களும் நானும்
ஸ்தல புராணம்
................................
"யோவ்! மனுசன்னு நெனச்சியா, இல்லே, என்னன்னுட்டு எருமை மாடு கணக்கா மேலாலே வந்து விளுவறே?"
"திரு மாமலையிலும் இப்படித்தான் காணும், ஒவ்வொரு சிற்பமும் ஒரு கோடி பெறும்! அந்த அப்ஸராள் சிற்பத்தையெல்லாம் பாரும்! கல்லிலே இப்படி ஒரு தேஜஸை வடிச்சிருக்கானே! அடடா, என்ன அற்புதம் பாருமேன்!"
ஒரு பாதம் தரையிலூன்றி மறு காலைச் சற்றே உயர்த்திய பாணியில் வெகு நளினமாக, அழகின் மறு உருவாக உறைந்து நின்றிருந்தனர் வானோர். அவர்களைப் போலவே ஒரு கணம் நிற்கப் பார்த்து, நான் காலை மாற்றிக் கொண்டேன். நாட்டியக் கலையின் மகத்துவத்தால் அல்ல. க்யூ வரிசையில் நின்று கடுத்துப் போன கால்களை சற்றே சுளுக்கெடுக்க...
"இன்னா சாமி, இன்னும் எம்மாந் நேரம் நின்னுக்கிட்டு இருக்கிறதாம்? எப்போ கதவு தெறந்து உள்ளாரே போவுறது? இம்மாஞ்சனம் காத்துக்கிட்டு இருக்குதே?"
"அதெல்லாம் இப்போ கிடு கிடுன்னு உள்ளே போய்ட மாட்டோமா? அதுக்குள்ளே பணத்தைக் குடுங்கோ. ஒரு நிமிஷத்திலே அர்ச்சனைக்கெல்லாம் தயார் பண்ணிண்டு வந்துடறேன். ரெண்டு ரூபாய் எண்ணிக் குடுத்துடுங்கோ. அதுக்கு மேலே பைசா வேண்டாம். எல்லாம் அதிலேயே அடக்கம்."
"இன்னா சாமி இது? தேங்கா, பளம் அஞ்சணா, பூவு ஒரணா, அப்புறம் கல்பூர வில்லை. அது இது எல்லாம் சேத்துக்கிட்டா கூட..."
"ஓய், அந்தக் கூடத்துத் தரையைப் பார்த்தீரா? முக்கோண முக்கோணமா, வரி வரியா இருக்கே, அதெல்லாம் எப்படி வந்துது தெரியுமாங்காணும்? தேவேந்திரன் அமர்க்களமா ஒரு விருந்து நடத்தணும்னு இருந்தானாம். அதுக்கு அத்தனை பேரையும் இன்வைட் பண்ணினானாம். மஹா விஷ்ணுவை மட்டும் கூப்பிடலையாம். மறந்து போய்த்தான். அவர் பேர் லிஸ்டிலே விட்டுப் போச்சோ, இல்லை, வேணும்னுதான் அப்படிப் பண்ணினானோ? எப்படியிருந்தாலும், மஹா விஷ்ணுவுக்கு மூக்குக்கு மேலே கோவம் வந்துடுத்து.
தேவ லோகத்திலேயே விருந்துகள் நடத்தி, இந்திரனுக்கு அலுத்துப் போயிருந்துதாம். இந்த தடவை பூலோகத்துக்கு பிக்னிக் போகலாமேன்னு ஒரு ஐடியா தோணித்தாம். ஸ்புட்னிக்குகளாய்க் கொண்டு வந்து நிறுத்தி, கெஸ்டுகளை அதிலே ஏற்றி, பூலோகம் வந்துட்டானாம். குலாப் ஜாமூன் என்ன, ஜிலேபி, ஜாங்கிரி என்ன, என்று தேவ லோகத்திலே சாப்பிட முடியாத டிஷஸ் அத்தனையும் இண்டியன் குக்ஸை வைத்தே பாகம் பண்ணச் சொல்லி, எலையைப் போடுன்னுட்டானாம். அப்போதான் மஹா விஷ்ணு வெளையாடினார்...