தனிச் செய்யுட்கள்

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன தனதனன தனதனன - தானானா

இந்தச் சந்தத்தில்

தினந்தினமும் தினந்தினமும் உணவுபிற சுவைகளென
தருணமுதல் தளரும்வரை தவிதவிக்கு மென்றனையேக் - காவாயே!

அழகுமயில் வாகனத்தில் களியுடனே ஆடிவரும்
முருகுதமிழ்க் கடவுளென ஒருபெயரை யுடையவடி - வேலானே!

உனதுபதம் இவன்சிரத்தில் உடனடியாய் அருளிதுயர்
கடுகிமிக நைதிடவே கணப்பொழுதில் எதிர்வருவாய் - முருகோனே!

இருவினையும் அகலவருள் பழனிமலை தனில்தனியே
பழமதினால் மருகியுறை மலைமகளின் மனங்குளிரும் - கதிரேசா!

கழலினையே கதியெனவே அடைந்தவரை சடுதியிலுன்
னருள்மழையில் நனையவிடு குறமகளின் மனமுறையு - மருளாளா !

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

மனத்தில் ரீங்கரிக்கும் ஒரு சந்தம் அதில் இன்னுமொன்று

திகுதிகென திகுதிகென பரவுமொரு நெருப்பிடையே
கலகலென கலகலென சிரிக்கும்நிலை தரவேணும்
மனைவிமக்கள் நட்புசுற்றம் எனப்பலவும் இறுக்கிவிட
உனதடியை மறக்கவிடா கருணையெனு மழையைப்பொழி - தாயேநீ

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

சிடுசிடென சிடுசிடென சினமுறாத நிலையையளி
படபடென படபடென இமைதனையே அடித்திடுமப்
பரங்கிரியில் கரம்பிடித்த பெருவழகின் மணவாளா
இமயகிரி நாதருக்கு குருவெனவே உரைத்ததுநின் - விளையாட்டே

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 27 Jul 2023, 22:07 சிடுசிடென சிடுசிடென சினமுறாத நிலையையளி
படபடென படபடென இமைதனையே அடித்திடுமப்
பரங்கிரியில் கரம்பிடித்த பெருவழகின் மணவாளா
இமயகிரி நாதருக்கு குருவெனவே உரைத்ததுநின் - விளையாட்டே
அழகு.
அனைத்தும் காய்ச்சீர் !

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

இன்னும் ஒன்று

முழுமதியைப் பழிக்குமொரு முகமுடையப் பவழநிற
அழகுடையக் குறமகளின் மனம்வளரும் அழுவமதில்
துயில்பயிலு பவன்மருக! குறுநகையும் அழகுவிழி
விரியழகும் திகட்டிடுடு மெனநினைப்ப திழுக்கலவோ - இளையோனே

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 27 Jul 2023, 22:30
sankark wrote: 27 Jul 2023, 22:07 சிடுசிடென சிடுசிடென சினமுறாத நிலையையளி
படபடென படபடென இமைதனையே அடித்திடுமப்
பரங்கிரியில் கரம்பிடித்த பெருவழகின் மணவாளா
இமயகிரி நாதருக்கு குருவெனவே உரைத்ததுநின் - விளையாட்டே
அழகு.
அனைத்தும் காய்ச்சீர் !
சிடுசிடென சிடுசிடென சினமுறாத நிலைதருவாய்/யளிப்பாய்
படபடென படபடென இமைதனையே அடித்திடுமப்
பரங்கிரியில் கரம்பிடித்த பெருவழகின் மணவாளா
இமயகிரி நாதருக்கு குருவெனவே உரைத்ததுநின் - விளையாட்டே

மாறுதலுடன்! நிலையையளி கனிச்சீர், ஆயினும் சந்தம் குறைவுபடவில்லை?

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

உடலுமன மிளகிருவர் ஒருவரென புணருநேரந்
தனிலேவிந்தின் துளியுமொரு கருவதனைக் கூடிவுயிர்
துளிர்க்கயிந்தப் பிறப்புநிக ழுமிதுவிதி யெனவறிந்தேன்
இருவினையும் தொலையவருள் சுரக்குமோ வுனக்கென்மேல் - சமர்வீரா

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

சந்தம் இன்னும் விடவில்லை , ஆக இன்னுமொன்று

குரல்குழற விழியொழிய மனமுமொரு நிலையிலது
சமயமதில் உனதுபெயர் உரைப்பதுவும் கடினமன்றே
பரவையிடம் தூதுசென்ற பரமன்மக னுனைப்பணிய
இதுபொழுதே சரியெனும றிவையளியெ மக்கித்தருணம் - முருகோனே
Last edited by sankark on 29 Jul 2023, 20:19, edited 1 time in total.

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

திருவருளும் குருவருளும் உனதருளால் எனையடையப்
பெருவுளம ரிதிலையே பெருமைமிகு நெடுவடிவே
லுடையவுணர் நிருதர்வல்ல சுரர்தமை யழித்தமரர்
படைக்கதிப தியெனபெய ருடைத்தமடக்தேவ குஞ்சரிதன் - மணவாளா

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

வெண்பா குறித்து ஒரு வெண்பா

நாளும் மலரும் பிறப்புடன் காசென
தாளடி ஈற்றிலே சீர்பெற் றமையும்
இயலுடன் வெண்சீ ரிவையேபு ழங்கும்
பயிலுந் தளைவெண் டளைதானே ஈற்றடி
கொள்வது முச்சீர் எனவறி மூவடி
கொள்வது சிந்தியல் நான்கே நிறையவாம்
ஈரடிக் கொண்டால் குறளாம் பெயரெனக்
கூறுவர் கற்றவர் பத்துட னீரடிமிக்
காப்பா வதுவெண்பா வாகும்

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

மூக பஞ்சசதி-யின் ஒவ்வொரு சதகத்துக்கும் ஒரு வெண்பா

உயர்ந்தாளைத் தூய வடசொற் றனிலே
பயந்தார் பலப்பல வாய்க்கவி‌ மூகரம்மே
எந்நூற் றிலுமாமோ யெம்மால் பிறப்பினும்
ஐநூற் றிலொன்றின் முதல்

எவளாலே இவ்வண்ட முண்டாயிற் றேகாண்
அவளடிக் கஞ்ச மலரிரண் டின்புகழ்
எந்நூற் றிலுமாமோ யெம்மால் பிறப்பினும்
ஐநூற் றிலடுத்த தே

தவழ்புன்ன கைத்தனை யித்தனை கூறு
மவமாயை யையொழிக் குங்கவி பொங்குமே
எந்நூ றிலுமாமோ யெம்மால் பிறப்பினும்
ஐநூற் றிலேமூன் றதாய்

கடைவிழிக் கேயுண்டுய்த் தல்கேண்மி னாற்றல்
தடையெது வோதாயின் மாரிக் கருள்விழியின்
எந்நூ றிலுமாமோ யெம்மால் பிறப்பினும்
ஐநூற் றிலேநானூ று (றிலேநான்காம் நூறு சாலப் பொருந்தும்?)

போற்றிப் புகழுரைப் பாடல்வெண் டாமரையாள்
பெற்றி யுரைக்கமாட் டாக்காமக் கண்ணினாட்
கெந்நூற் றிலுமாமோ யெம்மால் பிறப்பினும்
ஐநூற் றினிறுதி நூறு

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

காதொரு சொல்லைக் கேட்க கண்ணொரு காட்சி காண
யாதொரு தாக்க மின்றி யுள்ளமோ யெங்கோ நிற்கும்
வாதமும் செய்தற் கில்லை போதமே வேண்டி நிற்பன்
மாதொரு பாகன் பாதம் பற்றலால் பற்றும் போமே

நீயுறும் தோற்றம் யாவும் ஆயிர ஞாயி றன்ன
தேயுவும் நீராய்த் தீயாய் மற்றுமாய் ஆனாய் அன்னாய்
கோதிலாக் கூற்றும் நீயே கோடியாய்ச் செய்வன் போற்றி
மாதொரு பாகா பாதம் பற்றலால் பற்றும் போமே

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

மாசிலா மாணிக் கமேநீ/நல் வைரமே வைடூ ரியமே
தேசிகா ஞானத் தீயே வாசியா நின்றோ ருக்கும்
காதலால் நன்மை செய்வா யாதலாற் செய்யொன் றில்லை
மாதொரு பாகா பாதம் பற்றலால் பற்றும் போமே
Last edited by sankark on 12 Aug 2023, 13:12, edited 3 times in total.

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தீஞ்சுவைச் சொல்லால் தெய்வத் தமிழிலே மாலை கோர்த்துத்
தேன்சுவை பாவாய்ப் பாட வல்லமை மிக்கத் தாராய்
நீதரும் வாக்கின் சத்தி நல்லதில் தோயச் செய்வாய்
மாதொரு பாகா நின்தாள் பற்றலால் பற்றும் போமே

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

மாலவர் உந்தித் தாம ரைமல ரிற்பி றந்தார்க்
கோலமாய் மேலும் கீழும் காணுறாப் பித்தா எந்தப்
போதிலும் நெஞ்சத் துள்ளே வைப்பதே வைப்பு நின்னை
மாதொரு பாகா நின்தாள் பற்றலால் பற்றும் போமே

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

ஆலமே யுண்டாய்க் கால காலனே அரவம் பூண்ட
நீலனே வெண்ணீ றானே நின்மலா நித்தம் நித்தம்
ஓதவே ஐந்தெ ழுத்து நின்புகழ் நாளும் பாடி
மாதொரு பாகா நின்தாள் பற்றிடப் பற்றும் போமே

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 12 Aug 2023, 09:32 காதொரு சொல்லைக் கேட்க கண்ணொரு காட்சி காண
யாதொரு தாக்க மின்றி யுள்ளமோ யெங்கோ நிற்கும்
வாதமும் செய்தற் கில்லை போதமே வேண்டி நிற்பன்
மாதொரு பாகன் பாதம் பற்றலால் பற்றும் போமே
ஆசிரிய விருத்தம்.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 12 Aug 2023, 10:33 மாசிலா மாணிக் கமே வைரமே வைடூ ரியமே
தேசிகா ஞானத் தீயே வாசியா நின்றோ ருக்கும்
காதலால் நன்மை செய்வா யாதலாற் செய்யொன் றில்லை
மாதொரு பாகா பாதம் பற்றலால் பற்றும் போமே
முதல் வரியில் மூன்றாம் சீர் 'கமே' என்பது 'விளம்' ஆக உள்ளது.
இதை 'தேமா' சீராக மாற்றினால் சந்தஒழுங்கு அமையும்.
Last edited by Pratyaksham Bala on 12 Aug 2023, 12:33, edited 1 time in total.

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 12 Aug 2023, 12:18
sankark wrote: 12 Aug 2023, 10:33 மாசிலா மாணிக் கமே வைரமே வைடூ ரியமே
தேசிகா ஞானத் தீயே வாசியா நின்றோ ருக்கும்
காதலால் நன்மை செய்வா யாதலாற் செய்யொன் றில்லை
மாதொரு பாகா பாதம் பற்றலால் பற்றும் போமே
ஆசிரிய விருத்தம்.
நன்றி. விளம் மா மா x 2 x 4.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 12 Aug 2023, 10:33 மாசிலா மாணிக் கமே வைரமே வைடூ ரியமே
தேசிகா ஞானத் தீயே வாசியா நின்றோ ருக்கும்
காதலால் நன்மை செய்வா யாதலாற் செய்யொன் றில்லை
மாதொரு பாகா பாதம் பற்றலால் பற்றும் போமே
முதல் வரியில் மூன்றாம் சீர் 'கமே' என்பது 'விளம்' ஆக உள்ளது.
இதை 'தேமா' சீராக மாற்றினால் சந்தஒழுங்கு அமையும்.

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 12 Aug 2023, 12:34
sankark wrote: 12 Aug 2023, 10:33 மாசிலா மாணிக் கமே வைரமே வைடூ ரியமே
தேசிகா ஞானத் தீயே வாசியா நின்றோ ருக்கும்
காதலால் நன்மை செய்வா யாதலாற் செய்யொன் றில்லை
மாதொரு பாகா பாதம் பற்றலால் பற்றும் போமே
முதல் வரியில் மூன்றாம் சீர் 'கமே' என்பது 'விளம்' ஆக உள்ளது.
இதை 'தேமா' சீராக மாற்றினால் சந்தஒழுங்கு அமையும்.
ah thanks for catching that miss. its not even vilam its just a Orasai-cheer (nirai). fixed with கமேநீ.

that's also a very apt place for seyyuLisai aLabedai (கமேஎ) to make it a maachcheer! or make it கம்மே with a stress on manikkaammE to make it a natural maachcheer
Last edited by sankark on 12 Aug 2023, 12:54, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 12 Aug 2023, 10:33 மாசிலா மாணிக் கமேநீ வைரமே வைடூ ரியமே
தேசிகா ஞானத் தீயே வாசியா நின்றோ ருக்கும்
காதலால் நன்மை செய்வா யாதலாற் செய்யொன் றில்லை
மாதொரு பாகா பாதம் பற்றலால் பற்றும் போமே
ஆசிரிய விருத்தம் !
(எதுகை - இன எதுகை)

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

நான்கு சேர்த்துப் பதிகமாய்.

கொம்பது கிட்டக் கொடியும் படருமே வளரும் வளமாய்
கொம்பெனக் கிட்டி னாய்நீ கொடியெனப் பற்றி னோம்யாம்
மாதொரு கங்கை தன்னைப் பிறையுடன் சடையிற் கொண்டாய்
மாதொரு பாகா நின்தாள் பற்றிடப் பற்றும் போமே

மோனமாய் நால்வர்க் குறைசெய் நான்மறை நவிலும் நல்லோய்
ஞானமேத் தூயா தேவர்க் காதியாம் தேவே யூழிப்
போதிலே அழித்தும் மற்றும் மறைத்தலும் அருளிச் செய்யும்
மாதொரு பாகா நின்தாள் பற்றிடப் பற்றும் போமே

காதலால் கசிந்து கண்ணீர் மல்கிட நமச்சி வாயா
ஓதினார் தன்னை யுற்றாய் மனமெனும் பழனத் தில்நீர்
காதலைப் பெருக்கி நன்காய்ப் பத்தியாற் கனிய வையும்
மாதொரு பாகா நின்தாள் பற்றினாற் பற்றும் போமே

ஆதுரம் போகப் பொலிக நற்குணம் மக்க ளிடத்தே
தீதெலாம் ஒழிக வாழ்க நற்றமிழ்க் கலைகள் மாக்கள்
தாதமர்க் கொன்றைச் சூடும் வேந்தனேத் தவழ வமைதி
மாதொரு பாகா நின்தாள் பற்றினோம் பற்றி னோமே

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 13 Aug 2023, 09:17 காதலால் கசிந்து கண்ணீர் மல்கிட நமச்சி வாயா
ஓதினார் தன்னை யுற்றாய் மனமெனும் பழனத் தில்நீர்
காதலைப் பெருக்கி நன்காய்ப் பத்தியாற் கனிய வையும்
மாதொரு பாகா நின்தாள் பற்றினாற் பற்றும் போமே
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

sankark wrote: 13 Aug 2023, 09:17 ஆதுரம் போகப் பொலிக நற்குணம் மக்க ளிடத்தே
தீதெலாம் ஒழிக வாழ்க நற்றமிழ்க் கலைகள் மாக்கள்
தாதமர்க் கொன்றைச் சூடும் வேந்தனேத் தவழ வமைதி
மாதொரு பாகா நின்தாள் பற்றினோம் பற்றி னோமே
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

நாரணன் பேரே யாகும் நாலிரு நால்வர் செய்தப்
பூரணக் கவிதை யாலே போற்றிய மாலும் அவனேச்
சீர்மிகு செய்யாள் தன்னைத் தன்னுடை மார்பில் வைத்தான்
பார்புகழ் கீதை தன்னைப் பார்த்தனுக் கீந்தா னன்று

ஐயிரு பிறப்பு மாகி யல்லவர் தன்னைச் செற்றும்
பையிலே துயிலும் உந்திக் கமலனாம் கமலக் கேள்வன்
நீர்நிலம் காற்றும் தீயும் மற்றெலாம் நிலைக்கச் செய்வான்
பார்புகழ் கீதை தன்னைப் பார்த்தனுக் கீந்தா னன்று

ஐம்பதோ டைம்ப துமெட்டும் தனக்கொரு தலமாய்க் கொண்ட
வைப்பினான் வைப்பைத் தனது தாரமா யுடையத் திரண்டக்
கார்முகில் வண்ணத் தானே நெஞ்சினிற் சிவனைக் கொண்டான்
பார்புகழ் கீதை தன்னைப் பார்த்தனுக் கீந்தா னன்று
Last edited by sankark on 14 Aug 2023, 17:14, edited 1 time in total.

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தாடகை தன்மேல் வாளி எய்திடத் தயங்கி நின்ற
வாடிய சிறுவர்க் காகத் தூணிலே தோன்றி வந்த
நீர்மலர்க் கண்ணான் கால நேமியின் காலன் கண்ணன்
பார்புகழ் கீதை தன்னைப் பார்த்தனுக் கீந்தா னன்று

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

அல்லவை யழித்துப் போக்கி நல்லவை நீடு நிறுத்திப்
புல்லறி வாளர் கொற்றம் மண்ணொடு மண்ணாய் ஆக்கும்
வார்கழ லாடுந் தெய்வந் தன்னுடன் வேறா யில்லான்
பார்புகழ் கீதை தன்னைப் பார்த்தனுக் கீந்தா னன்று

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

மருவிலா மாலோன் கொழுநன் நிலமடந் தைத னக்கு
மொருவரு மில்லை யொப்பு மிக்கென யாரு மில்லான்
சார்பவ னன்பர் தமக்கு நாமகள் கேள்வன் தாதை
பார்புகழ் கீதை தன்னைப் பார்த்தனுக் கீந்தா னன்று

மூவடி மண்ணைக் கேட்டு யாவுல குடைத்த வண்ணல்
காவிரித் தீவின் நடுவே தென்திசை நோக்கிப் பள்ளி
சீர்மலி யரங்கத் துள்ளே கொண்டன னுள்ளங் குளிரப்
பார்புகழ் கீதை தன்னைப் பார்த்தனுக் கீந்தா னன்று

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

ஐமல ரம்பற் கப்ப னெம்மல மில்லா தெங்குந்
துய்யனா யூடே நிற்பான் பாற்கடற் பள்ளி யாளன்
சேர்த்துள பத்தான் சங்கம் சக்கரக் கையான் மெய்யான்
பார்புகழ் கீதை தன்னைப் பார்த்தனுக் கீந்தா னன்று

எட்டெழுத்தானுக்கு எட்டு!

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

சீர்தனிச் செம்மல் கண்ணன் போர்த்தொழில் செய்வா யென்னப்
பார்த்தனும் காண்டீ பத்தால் மாரியாய்ப் பெய்தான் வாளி
நூற்றவர் கொற்றங் கெட்டுப் போயின ரானா ரூழிக்
கூற்றுவ ருண்டா ராவி ஆயிர மாயி ரமாக

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

அனைத்தும் தேமாச் சீர் கொண்டு ஒரு பா (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்?)

கற்ற கல்வி பெற்ற வெற்றி சுற்ற முற்றார் மற்றும் நட்பு
பெற்றங் கொற்றம் பெற்றி யாவு மீச னன்றி யீவா ராரோ
குற்றஞ் சொல்லி சாடு வார்க்கு மற்றை நாளில் உற்றா னாகு
மொற்றி யூர னாரூ ரன்னண்ணல் தன்னை விட்டு வேறு முண்டே

வேறு ஒரு கடையடி
(ங்)கொற்றை மாலை சூடு மாடுந் தெய்வ மன்றி வேறு முண்டே

took a poetic license to make konRai into koRRai for edhugai
Last edited by sankark on 16 Aug 2023, 20:32, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 16 Aug 2023, 15:08 அனைத்தும் தேமாச் சீர் கொண்டு ஒரு பா (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்?)

கற்ற கல்வி பெற்ற வெற்றி சுற்ற முற்றார் மற்றும் நட்பு
பெற்றங் கொற்றம் பெற்றி யாவு மீச னன்றி யீவா ராரோ
குற்றஞ் சொல்லி சாடு வார்க்கு மற்றை நாளில் உற்றா னாகு
மொற்றி யூர னாரூ ரன்னல் தன்னை விட்டு வேறு முண்டே
அருமை.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்!

sankark wrote: 16 Aug 2023, 15:08 வேறு ஒரு கடையடி
(ங்)கொற்றை மாலை சூடு மாடுந் தெய்வ மன்றி வேறு முண்டே

took a poetic license to make konRai into koRRai for edhugai
கொற்றை என்ற சொல் குறையுடைய என்ற பொருள் கொண்டதாக இருப்பதால் இதைத் தவிர்க்க முயலலாம் எனத் தோன்றுகிறது.
வெற்றி மாலை எனலாமா?

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 16 Aug 2023, 16:14
sankark wrote: 16 Aug 2023, 15:08 வேறு ஒரு கடையடி
(ங்)கொற்றை மாலை சூடு மாடுந் தெய்வ மன்றி வேறு முண்டே

took a poetic license to make konRai into koRRai for edhugai
கொற்றை என்ற சொல் குறையுடைய என்ற பொருள் கொண்டதாக இருப்பதால் இதைத் தவிர்க்க முயலலாம் எனத் தோன்றுகிறது.
வெற்றி மாலை எனலாமா?
எனலாமே.

கொற்றை indeed means izhivaanadhu. Didn't know! I just made konRai to koRRai!

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

அன்னா யெனைப்படைத் தாயிந்த வூனிலுயிர் புகுத்தி
யென்னா ளருள்சொரி வாயிந்த வாழ்வுவளம் பெருக
முன்னாள் பிரமனு டையொரு சிரமதைக்கொய் தவனே
தன்னாய் வுகந்துவி ரித்திந்தப் பார்முதலாக் கினையே

துய்ய நிறத்தழக வுன்னை வவ்வியதை யலுடைச் பெண் மகளின்
செய்ய நிறமுடைத் தாய வெண்பிறைசூ டியவா
பைய ரவம்பூண்டுக் காட்டி டையுறையுன் றனையிவ்
வைய கமாந்தரெல் லாம்போற் றும்வையெழுத் துவாழ

இரண்டும் நெடிலடி, விருத்தம் (ஆசிரிய?)

றும்வையெழுத் அல்லது றுமையெழுத் எது சரி?
Last edited by sankark on 22 Aug 2023, 22:25, edited 2 times in total.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

sankark wrote: 22 Aug 2023, 11:30 அன்னா யெனைப்படைத் தாயிந்த வூனிலுயிர் புகுத்தி
யென்னா ளருள்சொரி வாயிந்த வாழ்வுவளம் பெருக
முன்னாள் பிரமனு டையொரு சிரமதைக்கொய் தவனே
தன்னாய் வுகந்துவி ரித்திந்தப் பார்முதலாக் கினையே
எதுகையோடு கூடிய நெடிலடிகள் நான்கு கொண்டிருப்பதால் இது கலித்துறை.

மூன்றாம் வரியில் மூன்றாவது சீர் 'டையொரு' என்பதை மற்ற வரிகளில் உள்ளது போல 'காய்' சீராக மாற்றினால் சிறப்பாக அமையும்.

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 22 Aug 2023, 11:51

முன்னாள் பிரமனு டையைந்தாஞ் சிரமதைக்கொய் தவனே
தன்னா யுகந்துவி ரித்திந்தப் பார்முதலாக் கினையே

மாற்றியாயிற்று

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 16 Aug 2023, 16:14 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்!
இற்றை நாளில் அன்னை தந்தை தந்த வாழ்வில் நன்று செய்க
அற்றை நாளில் எண்ணி னாலும் செய்ய நம்மில் தெம்பு முண்டோ
கற்ற வற்றை மற்ற வர்க்குச் சொல்லி வைத்து நன்று செய்க
பெற்ற கல்வி மக்கி டாதே சொல்லித் தந்தால் அள்ளித் தந்தால்

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

Yes!

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

பித்த னாகிப் பேதை யாகி கூத்த னுக்கு ஆளு மாகி
சித்தத் துள்ளே தாரை போலே வைந்தெ ழுத்து நீங்க லாது
ஆடல் வல்ல கங்கை கொண்ட வாத வூரன் செந்த மிழ்த்தேன்
பாடல் செய்த வாதி தன்னைப் போற்றி வாழ்க நீற ணிந்து

வாழ்க வாழ்க பெய்க ழல்க ளோங்க வோங்க வண்ணல் பேரே
தாழ்க தாழ்க தீய தெல்லாம் நான்ம றைதன் நாதன் தில்லை
யாடுந் தெய்வம் தன்னைப் போற்றி செய்வ தெல்லாம் நன்மை யாக
நீடு வாழ்க நானி லத்தில் மக்கள் மாக்கள் அன்பு பூண்டு

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

எதுகை மோனை இரண்டும் அமைந்திருந்தால் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எனலாம்.

பாடலைச் சமைக்கும்போதே எதுகை மோனை இரண்டும் இருக்குமாறு செய்வது எளிது. பின்னர் இவை இருக்குமாறு பாடலை மாற்றி அமைக்கும்போது சற்றே கடினமாக இருப்பதோடு, ஓட்டமும் தடைபடும் கருத்தும் மாறுபடக் கூடும்.

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

வாழ்க வாழ்க பெய்க ழல்க ளோங்க வோங்க வண்ணல் பேரே
தாழ்க தாழ்க தீய தெல்லாம் நான்ம றைதன் நாதன் தில்லை
யாடுந் தெய்வம் தன்னைப் போற்றி செய்வ தெல்லாம் நன்மை யாக
நீடு வாழ்க நானி லத்தில் மக்கள் மாக்கள் அன்பு பூண்டு

எடுத்துக்காட்டாக மேலே உள்ள கவிதையின் முதல் வரியின் முதல் சீரை 'நாடு' என்றும், அடுத்த வரியின் முதல் சீரை 'கேடு' என்றும் மாற்றி அமைத்தால் எதுகை கிட்டிவிடும். வேகம் சற்றே குறைந்தாலும் பொருளுக்கு பாதிப்பில்லை.

ஆனால் மோனை ?

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

anaiththadiyum edhugai payila vendum endru kattaayam undo?

தேன்சுவை பாவாய்ப் பாட வல்லமை மிக்கத் தாராய்

Pratyaksham Bala
Posts: 4165
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

.
ஆசிரிய விருத்தம் :-
நான்கு அடிகளும் ஒரே எதுகை கொண்டிருக்க வேண்டும்.
நான்கிலும் மோனையும் அமைந்திருக்க வேண்டும்.

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 24 Aug 2023, 17:07 .
ஆசிரிய விருத்தம் :-
நான்கு அடிகளும் ஒரே எதுகை கொண்டிருக்க வேண்டும்.
நான்கிலும் மோனையும் அமைந்திருக்க வேண்டும்.
thanks! shall try.

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: தனிச் செய்யுட்கள்

Post by arasi »

vaLam migu varigaL ethanaiyO...nanRi :)

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

arasi wrote: 28 Aug 2023, 19:43 vaLam migu varigaL ethanaiyO...nanRi :)
nanRi!

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தமிழ்ப் பாவில் தோடக எண்பா

tOtakAshtakam https://www.kamakoti.org/shlokas/kshlok1.htm இப்பதிவில் கொடுக்கப்பட்ட பொருளைத் தழுவி, பெரும்பாலும் மூலத்தைத் தழுவும் என்று நினைக்கிறேன். இயன்றவரை புளிமாச்சீர் கொண்டு.

கலைய முதத்தி ரளெலா முணர்ந்தக் கடலே
மறையி றுதிவி வரித்துப் புகல்வோய் முழுதும்
மனதிற் குறையற் றமலர்ப் பதமே நிறையும்
வழிகாட் டிநலம் புரிவோய்! புகலா யிருப்பாய்!

கருணைக் கடலே யெனைக்காப் பதுவுன் கடனே
பிறவிக் கடலால் வருந்து மடியேன் றனக்கு
புரியும் படியே அருள்வாய் பலதத் துவமே
வழிகாட் டிநலம் புரிவோய்! புகலா யிருப்பாய்!

உலகிற் பிறந்தோர் சுகமெய் திடுவா ரருளால்
உளதா னதறிந் தவரே அறிவுத் திருவே
உயிருள் விவரம் புரியும் படியே அருள்வாய்
வழிகாட் டிநலம் புரிவோய்! புகலா யிருப்பாய்

நினது ருவமப் பரமே யெனநா னறிந்தேன்
அறிந்தே மனத்திற் புளக மிகவூ றியதே
இகவாழ் வெனுமி துவாரி தியிற்றோ ணியென
வழிகாட் டிநலம் புரிவோய்! புகலா யிருப்பாய்

நலம்நா டிபலச் செயல்செய் வதனாற் பரந்தே
பரத்தை அறியும் நிலையில் மனமொன் றிடுமே
மிகவா டுகிறேன் ஒருதீ னனிடம் பரிவாய்
வழிகாட் டிநலம் புரிவோய்! புகலா யிருப்பாய்

புரளண் டமிதைப் புரத்தற் பொருட்டு வுயர்ந்தோர்
பலவே டமிட்டுத் திரிவா ரலையோ யலையோ
பனியை விரட்டும் பகல வனேநற் குருவே
வழிகாட் டிநலம் புரிவோய்! புகலா யிருப்பாய்

குருவே றலவாக் கொடியு மதுவே நினதே
நிகரி லிநீயெ னநான றியும்ப டியாமோ
புகலாய் வரும டியார்க்குப் பெருமன் புடையாய்
வழிகாட் டிநலம் புரிவோய்! புகலா யிருப்பாய்

உணரே னடியே னொருநற் கலையின் றுவரை
பொருட்கொண் டவனோ சிறுது ளியுமி லனேன்யான்
விரைவாய் வருவாய்க் கருணை தனைநீப் பொழிவாய்
வழிகாட் டிநலம் புரிவோய்! புகலா யிருப்பாய்

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

விநாயக சதுர்த்தி சிறப்புப் பா

கரிமா முகனேக் கணநா தனேநீப்
பரிவா யருளை நிதமும் பொழிவாய்
பரிபா டலிலேப் புகழ்மா தவசோ
தரிதன் மனமே மகிழுங் குமரா (மகிழும் புதல்வா )

இதுவேத் தருணம் வருவாய் விரைவாய்
புதிதாய்ப் பலபா புரியத் தருவாய்
கதிநீ யெனவே யடைவோர் தனக்கு
மதிமுன் னழகா கருணைக் கடலே

phAlachandra - மதிமுன்னழகா*
Last edited by sankark on 19 Sep 2023, 09:28, edited 1 time in total.

sankark
Posts: 2339
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

மேலும் ஒன்று

குணவா ரிதியேக் குறுமா முனியால்
புனல்மண் டியதைக் குறும்பாய் விரித்தாய்
கணமே னுமறப் பறியா நிலையாந்
தனமே தருவாய்க் கரமைந் துடையோய்

arasi
Posts: 16789
Joined: 22 Jun 2006, 09:30

Re: தனிச் செய்யுட்கள்

Post by arasi »

pudidAi pala pA punaiya anda ainkaran umakkaruLaTTum!

iduvE taruNam, illaiyA? angu ithannA tEvaiyA? (iduvE(t) taruNam?

Post Reply