Bhakthi movement

Post Reply
sam
Posts: 124
Joined: 04 Mar 2020, 20:25

Bhakthi movement

Post by sam »

8

HISTORY .OF INDIA -SOME ASTOUNDING FACTS-BAKTHI MOVEMENT


18-8-2016

புத்தர் காலத்திலேயே ( கி.மு.600), அதற்கும் சற்று முன்பாக, ஆப்கானிஸ்தான், இன்றைய பாகிஸ்தான் , ஆகிய பிரதேசங்கள் , பெர்சிய பேரரசின் கீழ் இருந்தன. !. கி.மு. 700 ல் , இன்றைய பெஷாவர் ( புருஷபுரம்) , பகுதியில், உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகம் இருந்தது. மத்திய ஆசிய, அரேபிய, பெர்சிய , கிரேக்க அறிஞர்கள் பலரும் அங்கு கற்றும் கற்பித்தும் உள்ளார்கள். சம்ஸ்க்ருத மொழிக்கு புகழ்பெற்ற இலக்கண நூல் எழுதிய பாணினி அங்குதான் கற்பித்தார். ..இரு நூற்றாண்டுகள் பின்னர், பெர்சிய பேரரசு , அலெக்ஸாண்டரால் தோற்கடிக்கப்பட்டபின், அலேக்சாண்டர் படைகளையும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் இருந்து விரட்டிவிட்டு சந்திர குப்த மௌர்யன் , அப்போது வலுவாக இருந்த கங்கைச் சமவெளியின் மகத சாம்ராஜ்யத்தையும் கைப்பற்றி, இன்றைய கர்நாடக sravanabelkola வில் , ஒரு சமண துறவியாக மாறி, உண்ணாநோன்பு இருந்து மறைந்தது வரலாறு. அசோகன் காலத்தில் ( கி,மு,200) தமிழ்நாட்டில் கூட, காஞ்சிபுரம் பகுதிவரை மௌர்ய சாம்ராஜ்யம் நிலவியது. .

.3) இஸ்லாம் அரேபியாவில் தோன்றிப் பரவியது கி.பி. 600. ! அதிலும் , இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந் மாவட்டத்த்தோடு நின்று விட்டது. ஆனால், மேற்கே இராக், சிரியா, பாலஸ்தீன், எகிப்து, லிபியா, அல்ஜீரிய, டியூனீஷியா ,மொரோக்கோ, வழியாக ஸ்பெயின் நாட்டில் கிட்டத்தட்ட முழு நாட்டிலும் அதன் ஆட்சி பரவியது. துருக்கியிலும் !.. இதை நேரு அரேபியாவின் எழுச்சியாகக் காண்கிறார்.

. 4) ஷியா பிரிவினர் இன்றைய இரான் ( பெர்சியா) நாடு முழுவதும் பெரும்பான்மை மக்கள். அதனை அடுத்த இராக் நாட்டிலும், ஷியா பிரிவினர்தாம் பெரும்பான்மை.

..ஆனால், உலகில் உள்ள மற்ற அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் சன்னி பிரிவினர் தாம் உள்ளனர்.
..சன்னி பிரிவினர் என்றால், சகிப்புத் தன்மை இல்லாதவர்கள், என்ற பார்வை மிக மிக தவறானது. . இன்றைய பங்களதேஷ் நாட்டில் சன்னி பிரிவினர் தாம் ..மிகமிகப் பெரும்பான்மை . ஆனால், வலதுசாரி இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்த நாட்டின் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் புதல்வி ஹசீனா வின் அவாமிலீக் கட்சியும், அங்கு உள்ள உச்ச நீதி மன்றமும், தயவு தாட்சண்யம் இல்லாமல் , நடவடிக்கை எடுத்து வருவது நாம் காண்கிறோம்.

துருக்கி பல ஆண்டுகள் மத வழிகாட்டும் மையமாக KHALIPHATE இருந்தது. ஆனால், முதலாம் உலகப் போர் காலத்திலேயே கமால் பாஷா தலைமையில், பழமைவாதத்தை ஒழித்து, மேற்கத்திய அறிவியல் பிரயாணத்தை மேற்கொண்டது. ( நேரு அதை ஆதரித்து எழுதியுள்ளார்) . பிற்போக்கு மௌல்விகளின் ஆதரவுடன் காந்திஜி கிலாபத் இயக்கம் தொடங்கியது ,நேருவுக்கு ஒப்புதல் இல்லை! )..

….வியத்தகு விஷயம் எதுவெனில், வட இந்திய -தென் இந்திய கலாச்சார – மொழி பரிவர்தனைகளுக்கு , ஈரான்- இராக் , பகுதிகள்தான் தோற்றுவாய். ! இன்றைய இந்திய கலாச்சாரம் முற்றாக ஈரான்-இராக் பண்பாட்டின் கலவை தான். ( காண்க : நீலகண்ட சாஸ்திரி..தென் இந்திய வரலாறு).

சங்க காலத் தமிழுலகிற்கு , பக்தி இயக்கம் புதிதல்ல. பரிபாடல் முற்றும் முழுவதும் வைணவ இலக்கியம்.. சமணரான் இளங்கோ அடிகளின் சிலம்பின் மதுரைக்காண்ட ஆய்ச்சியர் குரவை, வைணவத்தின் பொக்கிஷம்.

பின்னர் ஆழ்வார்கள். .அதன் பின்னர் ராமானுஜர். மாதவாச்சார்யர். ( கர்நாடகம்) .. பின்னர் ராமானந்தர். இவர்கள் எவருமே ஜாதி வேறுபாட்டையையோ ,தீண்டாமையையோ, , கற்பிக்கவில்லை.
..இஸ்லாம் இந்தியாவில் பரவியது, வெறும் முஸ்லீம் அரசர்களின் கட்டாயத்தினால் அல்ல. மாறாக , இந்தியாவின், பௌத்த, சமண, வைணவ பக்தி இயக்க துறவிகளின் வழியிலேயே , இஸ்லாமிய யோகிகளும், எளிய மக்களிடம் வாழ்ந்து, அவர்களுக்கு சேவை செய்து, அவர்களிடையே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று போதித்து, அவர்களின் மனம் கவர்ந்ததால் ஏற்பட்ட மாற்றம்.

இந்தியாவின் கிழக்கு கோடியில், கோடிக்கணக்கான வங்காள தேச மக்கள் அனைவரும் எப்படி இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள் என்று விவேகானந்தர் வினவுகிறார். .
அன்றும் இன்றும் , வைதீக ஹிந்து மதத்தில் நிலவும் பிறவி அடிப்படையில் ஆன சமூக அநீதிகளே , அவ்வர்று எளிய மக்கள் திரள் திரளாக இஸ்லாம் வழியை ஏற்றுக்கொண்டதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டுகிறார். .

.ஹிந்து மதமும், வைதீக மதம் அல்ல. குறிப்பாக, பக்தி இயக்கம் , இந்தியா முழுவதும் பரவி , இஸ்லாம் போதித்த சமத்துவச் செய்தியை பரப்பியது. ஒரு கலவை உண்டானது. அதன் குரல், கபீர், துளசிதாஸ், மீராபாய், துக்காராம், மராட்டிய பக்தி இயக்கம், குஜராத்தில் நரசி மேத்தா ,வங்கத்தின் சைதன்ய மஹாப்ரபு, ஒரிஸ்ஸாவின் ஜெயதேவர், ஆந்திர பத்ரசாலம் ராமதாசர், பஞ்சாபில் குரு நானக், கேரளத்தில், நாராயண குரு, ,,என நீண்ட ஒரு சமத்துவ ,சமரச பாரம்பரியத்தை உண்டாக்கியது. இன்றும் நீடிக்கிறது.

ஹிந்துஸ்தானி சாஸ்திரீய சங்கீதத்தில் இதை நாம் நன்கு உணர்கிறோம். .. தமிழ்நாட்டில், மதுரை கோரிப்பாளையம், நாகூர் , ஏர்வாடி தர்ஹாவில், அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் ஒன்று கூடி , மறைந்த மகான்களுக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்கிறது.

.மராட்டிய மண்ணில் உள்ள ஷிரதி க்ஷேத்ரத்தில் கோடிக்கணக்கான அனைத்து மதத்தினரும் தொழுதேத்தும் சாய் பாபா ( அவர் ஒரு முஸ்லீம் துறவி…சித்தர் ). நினைவிடம் உள்ளது. அவர் இஸ்லாமிய ர்களைவிட இந்துக்களால் மிகவும் போற்றப்படுகிறார்.

காந்திஜி கூறியது போல ‘கடவுளுக்கு மதம் ஏது? “. .. சொல்லிக் கொன்டே போகலாம். ..

கர்நாடக சங்கீதத்தின் மூலவர் என்று போற்றப்படும் புரந்தரதாசர் ,ஜாதியத்தையும், தீண்டாமையையும் வெறுத்து ஒதுக்கி, சமத்துவப் பிரச்சாரம் செய்த புரந்தரதாசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் வாழ்ந்தவர். (கி.பி. 1500) . வட இந்தியாவில் (1600)அக்பர்! அவரும் மத நல்லிணக்கம் காண தீன் இலாஹி என்று புதிய சமயம் தோற்றுவித்தவர்.
அக்பர் காலத்தில் , அதே உத்தர பிரதேசத்தில் , அனைத்து மக்களும் போற்றும் ஹிந்தி ராமாயணம் எழுதிய துளசிதாசர் வாழ்ந்தார் என்று ஒரு PUNCH LINE கொடுத்து, நேரு அக்பர் பற்றிய கட்டுரையை முடிக்கிறார். .

…துளசிதாஸ் ராமாயணம் எப்படி, உத்தரப்பிரதேசத்தில் புரட்சிகர விவசாயிகள் இயக்கத்தை நடத்து உதவியது என்பதை, நேரு தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார். ..

Post Reply