Kannan Kadhai Amudham (in tamil script)

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

thanks sridhar, yes it indeed has come with viLam, mA, mA.. fixed the kannangaL asai as well

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

பாரத்தைத் தாங்க வொண்ணா
  மெல்லிடை அசைய அளக
பாரத்தில் மாலை சூடி
  பார்த்தவர் மனத்தைச் சுண்டும்
கோலமாய் வந்தாள் அரக்கி
  கோகுலம் தன்னில் ஆங்கே
மாலவன் தன்னை மரண
  வாயிலில் தள்ளக் காண்டி (௰௮)
Last edited by sankark on 25 Mar 2013, 23:38, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

It must be
பாரத்தைத் தாங்க வொண்ணா

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

தேமது உண்ண வண்டு
  தேடுமாப் போலே அவளும்
கோமகன் நந்தன் மகனைக்
  கோமளப் பாத மகவை
தேடியே அலைந்து திரிந்து
  தேவகி மைந்தன் இருந்த
வீடுளே சென்றாள் எவர்க்கும்
  வீடளி  இறையைக் கொல்ல (௰௯)

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

நெருப்பது சாம்பர் பூத்து
  நெருங்கினால் தீய்க்கு மாபோல்
கருப்பனாம் கண்ணன் ஆங்கே
  கண்களை மூடி ஆழத்
துஞ்சுதல் போலே இருந்தான்
  துடியிடை வடிவாய் வந்தாள்
கொஞ்சுமா போலே தூக்கிக்
  கொடுஞ்செயல் செய்ய லானாள் (௰௭)

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

மதியிழந் தாங்கே ஒருவன் 
  கயிறென எண்ணிப் பாம்பை 
மடியிலே எடுத்தார்ப் போலே  
  மதலையை மடியில் கிடத்தி 
மதனவன் தந்தை தனக்கு
  மரலியின் வாசல் காட்ட 
மருங்கிலே சாய்த்துத் தந்தாள் 
  மதர்த்தோர் செழித்த கொங்கை (௧௧௧)

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

உயிரினுள் இறையும் தேவன் 
  உயிரினைக் கொள்ளப்  பாவி 
உயிரளி முலையிற்  கொடிய 
  உயிரழி விடத்தைத் தரவே 
உயிர்களை உய்க்க வந்தான் 
  உயிர்தனை உறிஞ்ச லானான் 
உயிரினை எடுக்க வந்தாள் 
  உயிர்க்குலை நடுங்க லானாள் (ககஉ)

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

வியர்த்தனள் இழுத்து மூச்சை
	விடுத்தனள் விரைவாய் அலறி
அயர்த்தனள் அதுவும் விடுத்து
	அலைந்தனள் எதுவும் புரியா(து)
உயர்த்தினள் குரலை நாக்குக்
	குளறினள் அடங்கி உயிரைப்
பயந்தனள் எமற்கு உலகிற்
	பயந்தனர் நரரும் எவரும் (௧௧௩)

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

அழகுறு வடிவம் நீங்கி
  அளவிலாக் கோர உருவாய் 
பழவினை அனைத்தும் போகப் 
  பவளவாய் கமலச் செங்கண் 
அழகனின் கருணைக் கரத்தால் 
  அடைந்தனள் அரக்கி வீடு 
குழவியாய் உருவம் கொண்டான் 
  குறுநகை தவழ நின்றான் (கக௪)

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

பயந்ததோர் பெண்டிர் கூட்டம் 
  அயனவன் தகப்பன் மாயன் 
மயக்குமோர் சிரிப்பைக் கண்டு 
  மனதினில் மகிழ்ச்சி பொங்கத் 
தயக்கமே விலக்கி அவனைத் 
  தழுவினர் கொடுங்கண் விலக 
நயமொடு செய்தார் சடங்கு
  நாயகன் தனக்கு நன்றாய் (கக௫)

arasi
Posts: 16875
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Nice to see you continue, Sanakark.

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Sorry for the hiatus. Quite a few other things keeping me away. Be back in a couple of weeks.

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

கோபியர் எல்லாம் மனத்தில்
	தாய்மையின் தாக்கம் கொண்டார்
கோபியர் தலைவி தானும்
	தன்முலை தந்தாள் மகற்கு
ஆநிரை மேய்ப்போர் தம்மை
	ஆள்பவன் தன்னோ டாங்கே
ஆம்பெரும் சடலம் கண்டு
	வியப்போடு வந்தே சேர்ந்தார் (௧௧௬) 

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Be back soon.

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

அருக்கனோர் ஆயிரம் ஒத்தத்
	திருமகள் கேள்வன் தாதை
பெருமகன் தன்னை நந்தன்
	உறுவதோர் ஊழிக் கூற்றம்
கருத்ததாய் முன்னம் தெரிந்து
	செலுத்தினான் நம்மை இங்கே
பெருந்திறன் பெற்றான் என்று
	உருகினன் வியந்த வாறே (௧௧௭)

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by Ponbhairavi »

இன்று கண்ணன் பிறந்த நாள்
அவன் கதை அமுதத்திற்கு ஒன்றரை வயது
திருப்பணி தொடரட்டும்

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

வெட்டினர் துண்டைக் கொண்டுச்
	சுட்டனர் சாம்பல் தன்னை
எட்டிலும் காற்றில் கலந்து
	விட்டனர் பூதனை தன்னை
விட்டதே பாவம் எல்லாம்
	தொட்டதால் அவனைச் சடலம்
விட்டதே சுட்ட போதில்
	நறுமண நாற்றம் ஐயே (௧௧௮)

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

பரம்பொருள் தன்னை அணைக்கும்
	அரும்பெறும் பேறு டைத்த
வரமுறு அரக்கி கதையை
	நறுமண வாசத் தாலே
நெருங்கியே வந்தோர் கேட்டார்
	பரம்பொருள் தன்னை மகவாய்
வரப்பெறும் உயர்ந்தான் தனக்கு
	உரைத்தனர் கோடி நன்றி (௧௧௯) 
With that we wrap the 6th chapter of SB Canto 10.

arasi
Posts: 16875
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

sankark,
I went back and read many verses together today. It's meaningful, what you are doing. This isn't a 'stick to all the rules of the verse but wonder if the essence of the content is transmitted effectively' kind of didactic work. You convey the emotions effectively, and as CML says, with a flow!

Thanks again!

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Quite a long hiatus. Somehow I am not getting to start on the next chapter :( Anyways, just had this tune going my mind and had to put some words to that. Bouquets or brickbats?

தன்னா தன தானா தன நானனா

கண்ணா மணிவண்ணா எந்தன் உள்ளமே
திண்ணம் உன்னை நாடிச் செல்லும் வெள்ளமே

வெண்ணெய் உண்ட வாயா உன்கைகளால்
வெண்ணையென உருகத் தழுவென்னையே

உண்ணும் சோறும் நீரும் வெற்றிலையும்
உன்னையன்றி வேறோ பெரும் கள்வனே
என்னைக் கொண்டு விட்டாய் அறியாமலே
பெண்ணாள் என்ன செய்வேன் என்னய்யனே

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Sorry for the long hiatus. Back with canto 10/chapter 7.

காண்டம் ஏழு (த்ரிநாவர்த்தன் வதம்)

Code: Select all

பேறுடை மன்னன் எமக்குத்
	தேவரீர் மேலும் விளக்கிக்
கூறுவீர் பரமன் கூத்தன்
	மைத்துனன் செய்த மாயம்
என்றுரை செய்து பாண்டின்
	எஞ்சிய குலத்தோன் கேட்க
உன்னத குணத்துச் சுகனும்
	உவப்புடன் விரித்தான் கதையை (௧௨௦)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

Welcome back!
Good opening!
Pl continue...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by cmlover »

பாண்டின் = பாண்டுவின் ?

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

கழிந்தன மூன்று திங்கள் 
  விழியினைக்  காக்கும் இமையாய்ப் 
பழியிலா யசோதை தானும் 
  அழிவறு தேவன் தன்னை 
வழுவறக் காத்து வந்தாள் 
  வழக்கமாம் உத்தா னத்தை 
முழக்கமாய் வேதம் ஓங்க
  உரோகிணி நாளில் செய்தாள் (௧௨௧)
cml - have to check.

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

Code: Select all

சேற்றினில் வளரும் செந்தாமரை  
   மலராள் கேள்வன் தன்னைப் 
போற்றிய வேதத் தார்க்கு  
   வேண்டிய பொருளைத் தந்தாள் 
நறுமலர் வாசம் சேர்த்து
   நீராட்டினாள் நன்கு தாயும் 
கருவிழி இரண்டும் சூழ 
   மையிட்டு உறங்கச் செய்தாள் (௧௨௨)

உற்றவர் மற்றோர் தன்னை 
   ஓம்பவே சென்றாள் அவளும் 
கற்றவர் பணிசெய் வோர்க்குப்  
   பசுக்களும் பரிசும் ஈந்தாள் 
நற்றவத்  தாயும் கண்ணன் 
   அழுவதோர் ஓசை உணராள் 
புற்றர வல்குல் பெண்ணாள் 
   பெருமகள் நந்தன் மனையாள் (௧௨௩)

sankark
Posts: 2451
Joined: 16 Dec 2008, 09:10

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by sankark »

One more

Code: Select all


நாவினில் இனிக்கும் தேனாய்
    நல்லவர் நெஞ்சில் நிற்பான்
பாவினால் அடியார் பாடிப்
    பரவிடும் பெருமை உடையான்
பூவிரி சோலை நடுவே
    நறுமண வாச மோங்கப்
பா(ல்)விழைந் தழுத நேரம்
    பாதகம் வந்ததே யம்மா (௧௨௪)

Last edited by sankark on 03 Nov 2014, 08:37, edited 2 times in total.

arasi
Posts: 16875
Joined: 22 Jun 2006, 09:30

Re: Kannan Kadhai Amudham (in tamil script)

Post by arasi »

Welcome back, Sankark!

This verse is very appealing...

Post Reply