Maha Periva...I Lived with God.. By Dr.D.Sundararama

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Maha Periva...I Lived with God.. By Dr.D.Sundararama

Post by venkatakailasam »

நான் கடவுளுடன் வாழ்ந்தேன்.
By Dr.D.Sundararaman.

(Sundararaman, ‘that son of Duraiswamy’)

பகுதி——-1

விஸ்வரூப தரிசனம்.

1993—ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 7—ஆம் தேதி அன்று நானும் எனது மனைவி லக்ஷ்மியும் பெரியவாளைத் தரிசித்து,

வரப்போகும் எங்கள் மகன் குருப்ரசாத்தின் திருமணத்திற்கு ஆசீர்வாதம் பெறுவதற்குக் காஞ்சீபுரம் சென்றிருந்தோம். மடத்தை

அடைந்தவுடன், பெரியவாள் அன்றும் அதற்கடுத்த நாளும் தரிசனம் தருவதற்கில்லை என்று அறிந்தோம். இருந்தாலும், 11-30

முதல் 12 மணி வரை, நாங்கள், அவர் வழக்கமாக தரிசனம் தரும் இடத்தில் வரிசையாக, நின்றோம். பிறகு, ஸ்ரீ

விஜயேந்த்ரசரஸ்வதி ஸ்வாமிகள் செய்த சந்திரமௌளீஸ்வரர் பூஜையைப் பார்த்துவிட்டு, பிரஸாதம் பெற்றுக்கொண்டு,

எங்கள் மருமான் ஸ்ரீ சந்த்ருவின் வீட்டிற்குச் சென்றோம்.

மதிய உணவு ஆன பிறகு, சுமார் 4-30 மணிக்கு, அதிருஷ்டவசமாக, பெரியவாள் மாலை தரிசனம் கொடுப்பாரோ என்ற

நம்பிக்கையில், மடத்திற்குத் திரும்பச் சென்றோம். விஷயம் அறிந்தவர்கள் அது சாத்யமில்லை என்று கூறி விட்டனர். சுமார்

5-30 மணிக்கு, எங்கள் பிரார்த்தனைக்குப் பலன் கிடைத்தது. பெரியவா, சொல்ப சமயத்திற்கு தரிசனம் தருவார் என்று

அறிந்தோம். சில நிமிஷங்கள் கிடைக்காதா என்று இருந்த எங்களுக்குப் பதினைந்து நிமிஷங்கள் தடையின்றி தரிசனம்

கிடைத்தது. பெரியவாளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு ஸ்வாமிகள் என்னிடம் வந்து சொன்னார், ”பெரியவாளோட

நூறாண்டு நிறைவு வைபவத்தின் போது, ஒரு புஸ்தகம் வெளியிடலாமென்றிரு& #2965;்கிறோம்; பெரியவாளோடு நெருங்கிப்

பழகியவர்கள் எழுதிய கட்டுரைகள் அதில் பிரசுரமாகும்; அதில நீங்களும் உங்கள் அனுபவங்களை எழுத வேண்டும்.” என்று

கேட்டுக் கொண்டார். அந்த ஸ்வாமிகளை முதலில் எனக்கு யாரென்று தெரியவில்லை; அவர்தான் ‘மேட்டூர் ஸ்வாமிகள்’

என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன்.

Read the full text at :kahanam

http://kahanam.wordpress.com/tag/%E0%AE ... %E0%AE%A9/

Post Reply