KavithaigaL by Rasikas

Post Reply
arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Igaiyum irAgamum koNDa innoruvan--
avanum PB--yE!
pAmAlai pala punaibavan allan,
pUvai viDuttu, enRO pon pOl kavi SolvAn--
nammiDai ettuNai tuNaivar--
ponnAi vaittu, pUvAip poZhibavar!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(145)
திட்டம்

ஆசிரமம் ஒன்றமைத்து அருள் பரப்ப நினைத்திருந்தேன்.
ராசியெனக்குண்டாயெனத் திகைத்திருந்த நேரம்
கானடா நாட்டரசர் கவியென்றார்! கர்ணனென்றார்!
தேனடை இச்சொற்கள்! திகட்டாது, இன்னும் வேணும்!

நீரேதான் கானடா கிளைக்கும் அரசர்! ஸ்ரீலஸ்ரீ சியெம்மெல்!
ஊரே மெச்சும்போது உமக்கன்றோ பெருமையெல்லாம்!
நாடெங்கும் கிளைகள் வரட்டும்! கொடிகள் பறக்கட்டும்!
வீடெங்கும் தொங்கட்டும் உண்டியல்! நிறையட்டும் பொற்காசு!


ஸ்ரீலஸ்ரீ ப்ரத்யக்ஷம் பால ப்ரஹ்மம்,
04.07.2011.

.
Last edited by Pratyaksham Bala on 05 Jul 2011, 00:09, edited 3 times in total.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

:)

veeyens3
Posts: 424
Joined: 09 May 2010, 23:19

Re: KavithaigaL by Rasikas

Post by veeyens3 »

CML and Arasi, a belated thanks for discerning some thing good in my voice,which was quite good in the past but suffes from want of stamina nowadays. As a person who is more happy looking down the bonnet of a car or tinkering with home appliances, I never opened this thread and when Iopened it couple of days back, I am amazed at the Indrajalam you people are doing with Tamil words. It is mind boggling. May Sri Rama bless you all

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Thanks and praNAms, Veeyens. Your daughter is no mean verse maker either ;)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

காலையிலே எழுந்ததும் கடும் குளிர் நாட்களிலும்
(நும்) கவிதையின் கணகணப்பில் காணுமின்பம் புதிதே
கடல் கடந்து வாழ்ந்தாலும் கன்னித்தமிழ்க்கு நாம் அடிமை
ந்ன்றி சொல்ல சொற்களில்லை நாளும் நீவீர் வாழியவே...

(கவிதை தொண்டு தொடர்க..)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Dear veeyens
You are an inspiration for us trying to reach and lead a full life like you and your gifted family...

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: KavithaigaL by Rasikas

Post by PUNARVASU »

cml/arasi, was a little busy all these days, and came to reading this thread leisurely ; thanks for your kind wors of encouragement.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

While reading post 601 of Arasi I thought I should also write something but as a kANa mayilAda kandirunda vAnkOzhi I could get only a doormat as inspiration. I know How far this is from the ebullient humoristic verses...spreading contagious hilarity

உங்களிலும் என்னைப்போல உண்டோ ?

நானும் இளமையில்
வண்ணமயமாக வழுவழுப்பாய்ததான் இருந்தேன்
படியாய் கிடந்து நான் கண்ட
பவள வாய்களும் குவளை கண்களும்
இன்று என்னை ஏறெடுத்தும் பார்பதில்லை
இத்தனைக்கும் அவர்களின்
பாததூளி படுவதே என் பாக்கியம்
என்று எண்ணி இறுமாப்போடு இருந்தவன் நான்
அவர்களே என்னை காலால் மிதித்து
ஒதுக்கி தள்ளும் போது மனம் அழுகிறது
பூஜை அறையிலும் வரவேற்பு வாசலிலும்
நான் பகட்டாய் திகழ்ந்தது பழைய கதை
இப்போதும்கூட இவர்களில் சிலர்
தம் வாழ்வில் வழுக்கி வீ ழ்ந்திடாமல்
ஊமை சாட்சியாய் இருந்து
பாத்ரூம் வாசல் வரை வந்து
நான் காப்பாற்றி இருக்கிறேன்
கண்ணீரையும் அபிஷேக பன்னீ ரையும்
துடைத்த என்னை இப்போது
அழுக்கு எண்ணெய் விளக்கை துலக்க
எடுக்கும் போது வேஸ்ட் என்று
கூசாமல் கூறுகிறார்கள்
இது தான் என் தலை விதி
ஆம்- நான் ஒரு கால் மிதி
Igaiyum iRAgamum konda innoruvan.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Igaiyum irAgamum koNDu neida thuNi
aDiyAik kiDandAlum thuNivu koNDirukkum,
maTRavai paRandu pOmE?

vinayam oru 'waste'--um illai,
midi aDiIyum 'mean' illai--
'Mighty' mAdhavanE, aDiyArin
midi aDiyAith thigazhgiRAnE?

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

I am terribly sorry for the wrong impressions created by my shabby presentation of my poem. It is supposed to be the புலம்பல் of a doormat which is getting worn out with passing days and is moved from puja room to bath room and then used as cleaning shreads. It is asking the human counterparts whether there are any such specimen among them (title) the நான் in the last line is the doormat talking and not rajagopalan. I am nowhere in it pl excuse me for the wrong signals emitted. My mistake of not expliciting properly the differenciation between the character, the narrator and the author.
now this is Rajagopalan

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Ponbharavi,
I don't think I was mistaken.
A piece of cloth which goes through all this, as in human strife, is also entitled to our sympathy, don't you agree? ;)

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

correct. It was such a thought which prompted me to write
rajagopalan.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Ponbhairavi
Actually your poem is முதுமையின் புலம்பல்.
In the large context of our human life we all turn into
'door-mats' as we start aging and experience the same fate
and your poem pidturesquely captures our 'inner cry'!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(146)
உதிர்காலம்

கதிர் வதனம் எங்கே?
உதிர் முறுவல் எங்கே?
சதிர் நடனம் எங்கே?
அதிர் நடையும் எங்கே?


ப்ரத்யக்ஷம் பாலா,
27.12.2006.

.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

புதிர் போடுவதேன்?
(பதில்) எதிர் பார்க்கிறேன்
முதிர் கவிஞரே...
:D

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

cmlover:

Wonderful! You have played with the edugai!

That was written in 2006 when a relative of mine, a very lively lady, fell sick and was hospitalised.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

uLLum veLiyumAi avan oLirginRAn,

veLLamAip pAyum ANDugaLai--
melllap pO!--enil kAlam kETkumO?

naraiyum kuRaiyum ninaiyAdu
nalindAlum manam SaliyAdu
uRudi uLLam tEDinAl...
mudumaiyilum valivuNDAm!

uLLum veLiyumAi avan oLirginRAn.
Last edited by arasi on 17 Jul 2011, 22:02, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(147)
வளைகாப்பு
(மாப்பிள்ளையின் புலம்பல்)

"கிட்ட நெருங்க முட்டிடும் திருவயிறும்
கட்டி அணைக்க ஒலிக்கும் வளையலும்
சுட்டி மைத்துனன் சுற்றிவரும் கொட்டமும்
எட்டி வைத்தெனைக் கட்டும் கொடுமை காண்!"

ப்ரத்யக்ஷம் பாலா,
21.09.2003.

.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

நெருங்கினால் நெருப்பு
அது நீ வைத்த தீ அல்லவா
புலம்பலை நிறுத்து
விரைவில் கேட்பாய் குவா குவா சத்தம்
பின் நெருங்க முடியுமா அவளை?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

[*](148)[/color][/size]
தானம்

பாரதி கொடுத்தார் பாம்பாட்டிக்குப் பழைய வேட்டி -- பதிலுக்கு
பாரதிக்குக் கொடுத்தார் மண்டையம் புது வேட்டி!

ப்ரத்யக்ஷம் பாலா,
18.07.2011.

.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

PB,
bhArathi koDuttAr pAmbATTikkup 'pudiya' vETTI--badilukku
bhArathikkuk koDutthAr maNDayam--'puththap' pudu vETTi!

maNDyam (those from the town of ManDyA). Another large community of IyengArs in KarnATakA is from HebbAr. In Tamizh maNDyam morphed into maNDayam.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

1) உடுத்தியதெல்லாம் பழையதே!

2) I am familiar with the history of the famous 'Mandyam' a.k.a. 'Mandayam' Srivaishnava community. A few excellent sites are there which offer detailed information on the contributions made by the members of this community during the last 900 years! In Tamil the community is referred to as 'Mandayam' and 'Mandaiyam'.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

PB,
My explanation was for those who may not have a clue about it. I bow to your research capabilities which many of us do not possess. No wonder I call those of you who are very good at it, sleuths. At the Rasikas.org community, each brings his or her own skills and shares it with others.That's what makes it a special place!

Did you notice the pudu vETTi? ;)

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(148)
கூத்து

டுகுடுகு டுகுடுகு டுகுடுகு டுகுடுகு

"வா இங்கே!" "வந்தேன்!"
"பேசு!" "பேசுகிறேன்!"
"பேசாதே!" "பேச வில்லை!"

***
***

டுகுடுகு டுகுடுகு டுகுடுகு டுகுடுகு

"வா இங்கே!" "வர மாட்டேன்!"
"போ அங்கே!" "போக மாட்டேன்!"
"பேசு!" "பேச மாட்டேன்!"

"டேய்! முரண்டு பிடிக்காதே, தலை வெடிக்கிறது!"
"வெடிக்கட்டும்!"

டுமீர்!
"ஐயையோ! ஐயையோ!"

ப்ரத்யக்ஷம் பாலா,
17.07.2011.

.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(149)
உயிர்த் தோழன்

ஓரிடம் சேர்ந்து விட்டாய் - நீ
ஓங்கி வளர்ந்து விட்டாய்.
சேரிடம் புகழ் கூடவே - நீ
செகமெங்கும் அலைந்து உள்ளாய்.

பாரினில் உனைப் போலே - இனி
பழக ஒருவர் உண்டோ?
யாரிடம் நான் பகிர்வேன் - என்
எண்ணக் குவியல்களை?


ப்ரத்யக்ஷம் பாலா,
20.07.2011.

.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(150)
பாரதி!

ஓங்கி உயர்ந்து மெலிந்த உடல்
தாங்கி எழும்பி விசையும் நடை
தீங்கு நினையாத உன்னத மனம்
ஏங்கித் தவிப்போர்க்கு உதவும் குணம்
தூங்கிக் கிடந்தாரை எழுப்பிய கவி
வேங்கை நிகர்த்த வியத்தகு பாரதி!


ப்ரத்யக்ஷம் பாலா,
26.07.2011.

.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(151)
கண்ணா!

இன்னுமெவ்வெவ்விதமெல்லாமெங்களிதயமலைந்திருக்கலா-மென்றறியுமெண்ணத்திலெங்களனைவரையுமேக்கத்திலேயிருத்தியிருப்ப-தென்பதுனக்கழகா?


ப்ரத்யக்ஷம் பாலா,
29.07.2011.

.

erode14
Posts: 726
Joined: 21 Jan 2007, 21:43

Re: KavithaigaL by Rasikas

Post by erode14 »

அல்ப தூறல்...


திருமணக் கூடங்களில்
திடீரெனத் தலையடைந்து
பட்டதுமே காய்ந்துவிடும்
பன்னீர்த் துளிகள் போல,
பரவலாய் நீர தெளித்து
நனைவதற்குள்
நின்று போனாய்.

மனிதர்கள் நாங்கள்,
வெப்பத்தைக் கிளப்பிவிட்டு
வேர்த்தது தான் மிச்சமென
பேசியோ
பரிமாறியோ
கவிதையாய்க்
குறுஞ் செய்தியாய்
நூற்றி நாற்பதுக்குள் கீச்சுகளாய்

சுழல்கின்ற இறக்கைகள்
வருடிச் செல்லும் காற்றில்
இந்த ஒரு இரவையும்
கடந்தோம் விழித்தோம்.

வான் நீரே உணவென்று
இலை பரப்பி மழையேந்தி,
கிளையடியே நனையவில்லை
வேரெங்கே நீரறியும்.

ஈரம் வாங்குதலின்
பூர்வாங்கம் முடிவதற்குள்
முத்தங்களில் தொடங்கி வைத்து
முடியுமுன்னே பிரிந்தாற்போல்
தாகமும் தீராமல்
தாமதமும் புரியாமல்
செடி மனங்கள் என் செயும்,
மரமொழிகள் என்ன கூறும்?


-------------------------------------------------------

மேலும் சில: http://bit.ly/ppb1Q5

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

நூற்றி நாற்பதுக்குள் கீச்சுகளாய் ???

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

14 into10அளவுள்ள அறையில் கீச்சு சப்தத்துடன் சுழலும் மின் விசிறி ???

erode14
Posts: 726
Joined: 21 Jan 2007, 21:43

Re: KavithaigaL by Rasikas

Post by erode14 »

keechu is tweet. twitter allows only 140 characters for one status update.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

Baudelaire எனும் பிரெஞ்சு கவிஞரின் கவிதை இது :


அன்னப் பறவை

கூடு விட்டு தப்பி வந்த அன்னப் பறவை ஒன்று
விரிந்த தன் பாதத்தால் ஈரமற்ற நகர் தெருவை
பெருக்கி தேய்த்து தன் வெண்ணிற சிறகுகளை
கட்டாந்தரையின்மேல் இழுத்துக்கொண்டே சென்றது
தன் அலகை அகலத் திறந்து நீர் வற்றிய ஓடையிலே
நடுங்கி பயந்துகொண்டே தன் இறக்கைகளை
தெருப்புழுதி மண்ணில் முழுகாட்டியது
தன் பிறந்த இடத்து எழில்மிகு ஏரியின் நினைவு
அதன் இதயம் முழுவதையும் நிரப்பிடக் கூறியது :
தண்ணீரே நீ எப்போது மழையாக பொழியப்போகிறாய்?
இடியே நீ எப்போது முழங்கப்போகிறாய் ?
பாவம் துன்பத்தைச் சுமந்துநிற்கும்இப்பழங்காலதுப்பறவை
தணியா ஆவலுடன் தலை நிமிர்த்தி
படபடக்கும் தன் கழுத்தை நீட்டி
எள்ளி நகையாடும் அவ்வானத்தை
ஈவிரக்கமற்ற அநநீல வானத்தை நோக்கியது
கடவுளை குற்றம் சாட்டுதல் போல்

இன்னும் சில at:frenchliterature.angelfire.com.with audio of the french original

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Nice! Do post the original French also for us to be educational!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

Le cygne

Un cygne qui s'etait evade de sa cage,
et de ses pieds palmes frottant le pave sec,
sur le sol rabotteux trainait son blanc plumage
pres d'un ruisseau sans eau la bete ouvrant le bec

baignait nerveusement ses ailes dans la poudre,
et disait, le coeur plein de son beau lac natal:
"eau , quand donc pleuvras-tu ?quand tonneras- tu foudre?
je vois ce malheureux, mythe etrange et fatal

vers le ciel quelquefois, comme l'homme d'Ovide,
vers le ciel ironique et cruellement bleu,
sur son cou convulsif tendant sa tete avide
comme s'i ladressait des reproches a Dieu!
Charles Baudelaire- Les fleurs du Mal.
If you click in the link given by me and see under french poems you can find the text of the poem and there is also audio recording of the french original and the tamil version that you can listen. If there is any problem in the site pl let me know so that I can get it corrected.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

I'm just passing by!
Quick words:

PBala,
iranDu line kavidaiyum, adaRku mundaiyadum rasittEn.

AravarasE!
You make me think--which is good ;) and of the deep feeling you convey in your poems. enRO oru nAL varum iniya, valiya mazhaith thuLigal...

Ponbhairavi,
At long last, you are putting your translations up, and am I glad!
a good 'signe' ;)

Will look in after a few days...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

ThX ponbhairavi...

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

Thanks.
அன்ன பறவை =தூய மனித ஆன்மா
கூடு = கர்ப வாசம்
இவ்வுலகு வந்தபின் மனித வாழ்வு துன்பங்கள்
வான் மழை =தெய்வ காருண்யம்
இடி = மரணம்
இரக்கமற்ற நீல வானம் = கர்ம பலன்
the poem gives room to several interpretations out of which I like the above
rajagopalan

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Interesting interpretation based on Eastern Philosophy.
I found reference to Baudelaire's exposure to India
His stepfather sent him on a voyage to Calcutta, India in 1841 in the hope of ending his dissolute habits
http://en.wikipedia.org/wiki/Charles_Baudelaire

He is the originator of the "prose-poetry" style (which our arasi/Erode/...) adopt where the emphasis is on 'ideas' in lieu of poetic grammar. They are a treat to the mind/intellect rather than the ears. Such verses are capable of multiple interpretations depeneding on the mood of the reader. For example interpreting
அன்னப் பறவை as a forlorn Lover pining for its pair one can feel the pain of 'vipralambam'.

Thanks again Ponbhairavi for bringing the spirit of such beautiful compositions to the attention of the Tamil community...

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(152)
இசை ஓசை

கை வலிக்கிறது கை தட்டி கை தட்டி - த
லை வலிக்கிறது தலையாட்டி தலையாட்டி - செவிப்ப
றை வலிக்கிறது இசைகேட்டு இசைகேட்டு
'தை' வலிக்கிறது தாளமிட்டு தாளமிட்டு!


ப்ரத்யக்ஷம் பாலா,
02.08.2011.

.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Nice trick of ensuring 'mOnai' by spilitting words appropriately and mixing languages..
(but not necessarily meaningfully :D
புது
மை தெரிகிறது சொல்ல சொல்ல - இச்
சை விளைகிறது கேட்க கேட்க - ம்தி
யை மயக்குகிறது படிக்க படிக்க - தமி
ழை விழைகிறது (மனம்) மேலும் மேலும்

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

Great! The flow is admirable!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

Cmlover,
another possible interpretation is that it can refer to poor people from india migrating to middle east countries through brokers /agents in the hope of earning money and returning to india for a comfortable
living but who are totally exploited over worked and even lose their passport... but nostalgically yearn for a return to their motherland...
rajagopalan.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Beautiful analogy Ponbhairavi!
Since you are a senior you may recall Musiri's famous 'ThEyilai thoTTatthilE' vinyl which captured the pathos and travails of indenture workers from TN in Ceylon in the 20's and 30's. Arasi also has partially translated the reaction of Bharathy's reaction to such labourers in Fiji - the proverbial chaathaka birds.
I look forward to a nice poem from PB capturing the spirit which is currently relevant to our Tamil compatriots getting massacred in Sri Lanka ....

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

cmlover:
This was written before I saw your above post.

(153)
தங்க மனசு

ஊருக்கே மகிழ்ச்சி உண்டு உனக்கது இல்லை எனினும்
பாருக்கு சேதம் என்றால் பதறிடும் மனத்தைக் கொள்நீ.
வேருடன் அழியும் காலம் விரைவிலே வருமென்றாலும்
யாருக்கோ சிறுவலி எனினும் ஏதேனும் செய்ய ஓடு.

ப்ரத்யக்ஷம் பாலா,
03.08.2011.

.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Good! Captures the sentiments and blends it with self sacrifice for the good of humanity!

I was deeply disturbed watching Channel 4 and wanted to see a poetic vent of the agony and anguish of our suffering brethern...

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(154)
விவசாயி

குளம் தளும்புது, குட்டை வழியுது - எங்க
குலம் உயருது பாருங்களேன்!
களம் நிரம்புது, கதிர் குவியுது - எங்க
கனவு மெய்க்குது பாருங்களேன்!
உளம் களிக்குது, உடல் சிலிர்க்குது - நாங்க
உணர்ச்சி பொங்கப் பாடுகிறோம்!
வளம் கொழிக்குது! வாழ்க்கை இனிக்குது!
விக்ன விநாயகா உம்மை வாழ்த்துகிறோம்!


ப்ரத்யக்ஷம் பாலா,
04.08.2011.

.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

தந்தனத் தானே தந்தானே - தன
தந்தனத் தானே தந்தானே

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(155)
விவசாயி 2

குளம் நிறையுது நீராலே - எங்க
குலம் உயருது சீராலே!
களம் குவியுது போராலே - எங்க
கனவு மெயக்குது அதனாலே.
உளம் களிக்குது என்றாலே - எங்க
உணர்ச்சி பொங்குது முன்னாலே!
வளம் கொழிக்குது என்றாலே - எங்க
வாழ்க்கை இனிக்குது தன்னாலே!


ப்ரத்யக்ஷம் பாலா,
05.08.2011.

.
Last edited by Pratyaksham Bala on 05 Aug 2011, 21:14, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

I think it must be
குளம் நிறையுது நீராலே
The word நிரை derived from நிரப்புதல் means 'to fill'
the word நிறை derived from நிறைவு indicates fulness
which is more appropriate here IMHO...
Also consider
குலம் உயருது சீராலே!

Post Reply