KavithaigaL by Rasikas
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
aruviyAip pozivIr, kavidai ARAip perukkeDuppIr
emmil yArum eTTA eNNikkai um kavidai varisai
inRo, sollin peru veLLam, paLichiDum varigaL pala--
kuDaiyai nADip pOvOmO? koDaiyALigaL AvAmO?
'thEnE enRAn' kavidaiyil nagaich chuvaiyil maRainda thathuvam...
emmil yArum eTTA eNNikkai um kavidai varisai
inRo, sollin peru veLLam, paLichiDum varigaL pala--
kuDaiyai nADip pOvOmO? koDaiyALigaL AvAmO?
'thEnE enRAn' kavidaiyil nagaich chuvaiyil maRainda thathuvam...
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
It never rains: it pours!
(what a relief for us during this drought!)
PB = Prativathi Bhayankaram
(The famous poet who incidentally composed the Venkatesa Suprabhatam!)
(what a relief for us during this drought!)
PB = Prativathi Bhayankaram

(The famous poet who incidentally composed the Venkatesa Suprabhatam!)
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Thanks a lot!!!
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
# 1185...# 1189..
Thank you so much..punarvasu and cml...
I am sorry that I have been late in acknowledging...
Thank you so much..punarvasu and cml...
I am sorry that I have been late in acknowledging...
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Somebody was following me…
There are the ones who can only follow..
And, not lead…
As it is not in their trait…
To get ‘great trifle’ gain..
But, can never be on par..
Just like my shadow..
Some times lengthy and some times short…..
But can never go beyond….
Can only follow and always be behind..
And always needs a light…..
As are not bright……
Its fate is tied to me……
To be always at my feet……
There are the ones who can only follow..
And, not lead…
As it is not in their trait…
To get ‘great trifle’ gain..
But, can never be on par..
Just like my shadow..
Some times lengthy and some times short…..
But can never go beyond….
Can only follow and always be behind..
And always needs a light…..
As are not bright……
Its fate is tied to me……
To be always at my feet……
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Note: This is just another poem to highlight the irony of similarity between two different scenes.
(245)
ஊர்வலம்
(1)
அரசன் வருவான் முன்னே
காவலர் வருவர் பின்னே - வாளை ஏந்தியபடி!
(தொடரும்)
.
(245)
ஊர்வலம்
(1)
அரசன் வருவான் முன்னே
காவலர் வருவர் பின்னே - வாளை ஏந்தியபடி!
(தொடரும்)
.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
தாதியர் வருவார் முன்னே - தாம்பாளம் ஏந்தியபடி
அரசி வருவாள் பின்னே...
Now let us follow your
irony of similarity between two different scenes
அரசி வருவாள் பின்னே...
Now let us follow your
irony of similarity between two different scenes
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
ஊர்வலம்
(1)
அரசன் வருவான் முன்னே
காவலர் வருவர் பின்னே - வாளை ஏந்தியபடி!
(2)
குற்றவாளி வருவான் முன்னே
காவலர் வருவர் பின்னே - துப்பாக்கி ஏந்தியபடி!
.
ஊர்வலம்
(1)
அரசன் வருவான் முன்னே
காவலர் வருவர் பின்னே - வாளை ஏந்தியபடி!
(2)
குற்றவாளி வருவான் முன்னே
காவலர் வருவர் பின்னே - துப்பாக்கி ஏந்தியபடி!
.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Ironically what is now happening in US is
குற்றவாளி வருவான் முன்னே-துப்பாக்கி ஏந்தியபடி!
காவலர் வருவர் பின்னே
குற்றவாளி வருவான் முன்னே-துப்பாக்கி ஏந்தியபடி!
காவலர் வருவர் பின்னே
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
kAvalar varuvar munnE, thuppAkki EndiyapaDi
munnE avan thuppAkki Endiyadu polE--
kuTRavALi varuvAn avar pinnE
munnE seidadu pinnE viLaivadAl...
munnE avan thuppAkki Endiyadu polE--
kuTRavALi varuvAn avar pinnE
munnE seidadu pinnE viLaivadAl...
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(246)
முன் ஜாக்கிரதை
கைக்கெட்டியதை எடுத்தே பழகியவன்
கோயிலுக்குச் சென்றான்.
கைகொட்டி எல்லோரும் பாடியபோதும்
கைகட்டியே நின்றான்
பழக்கத்தில் திருடிவிட்டால்?
கைகட்டி கால்கட்டி 'அர்ச்சனை' செய்வாரல்லவா?
ப்ரத்யக்ஷம் பாலா,
17.08.2012.
முன் ஜாக்கிரதை
கைக்கெட்டியதை எடுத்தே பழகியவன்
கோயிலுக்குச் சென்றான்.
கைகொட்டி எல்லோரும் பாடியபோதும்
கைகட்டியே நின்றான்
பழக்கத்தில் திருடிவிட்டால்?
கைகட்டி கால்கட்டி 'அர்ச்சனை' செய்வாரல்லவா?
ப்ரத்யக்ஷம் பாலா,
17.08.2012.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
I am reminded of what 'Ponbhairavi' said in post 844 of 21 Apr 2012 ...
'ஒரு நல்ல கீர்த்தனதுக்கு என்ன criteria என்று யோசித்தேன்.
கிடைத்த விடை:
ராகவிநயம் (elegant raga)
கவிநயம் (poetic beauty)
விநயம் (humility)
நயம்(simplicity)
யம்
கோபுச்சம்( cow's tail)?"
Is it possible to change the heading of this thread as...
kavithaigal , kathaikal and natakankal by rasikas, so that more people can provide inputs...
'ஒரு நல்ல கீர்த்தனதுக்கு என்ன criteria என்று யோசித்தேன்.
கிடைத்த விடை:
ராகவிநயம் (elegant raga)
கவிநயம் (poetic beauty)
விநயம் (humility)
நயம்(simplicity)
யம்
கோபுச்சம்( cow's tail)?"
Is it possible to change the heading of this thread as...
kavithaigal , kathaikal and natakankal by rasikas, so that more people can provide inputs...
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
'ஒரு நல்ல கீர்த்தனதுக்கு என்ன criteria என்று யோசித்தேன்.
கிடைத்த விடை:
ராகவிநயம் (elegant raga)
கவிநயம் (poetic beauty)
விநயம் (humility)
நயம்(simplicity)
யம்
ம் (ஆம்)
கிடைத்த விடை:
ராகவிநயம் (elegant raga)
கவிநயம் (poetic beauty)
விநயம் (humility)
நயம்(simplicity)
யம்
ம் (ஆம்)
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Vkailasam
Let us not meddle with the title.
This is primarily the only thread where Tamil script exclusively is permitted without trransliteration/translation
Nothing precluding posting kathaikal and natakankal by rasikas here!
Let us not meddle with the title.
This is primarily the only thread where Tamil script exclusively is permitted without trransliteration/translation
Nothing precluding posting kathaikal and natakankal by rasikas here!
-
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
.(full stop)cmlover wrote:'ஒரு நல்ல கீர்த்தனதுக்கு என்ன criteria என்று யோசித்தேன்.
கிடைத்த விடை:
ராகவிநயம் (elegant raga)
கவிநயம் (poetic beauty)
விநயம் (humility)
நயம்(simplicity)
யம்
ம் (ஆம்)
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
!
?
mm...
innum--
illai,
muDiyavillai
Go back and forth
for more
gOpucham
micham Edum vaikkAdu--
Go
for
gO
p
u
ch
a
m
!
?
mm...
innum--
illai,
muDiyavillai
Go back and forth
for more
gOpucham
micham Edum vaikkAdu--
Go
for
gO
p
u
ch
a
m
!
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Another short gOpuccam
அரசி
ரசி
சி (Sri = Lakshmi)

அரசி
ரசி
சி (Sri = Lakshmi)

-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas

which is siri (smile)
which is the same as ilakkumi
mangaLamAm muga viLakku
siri

Now, back to catch up with gOpucham--though the saying goes like this: catch the cow by the rope, not by the tail (thumbai viTTu vAlaip piDippArgaLA?)!
Last edited by arasi on 18 Aug 2012, 06:46, edited 1 time in total.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
பக்தி ஒன்றே போதுமே...
குமரனின் மனதை கவர....
பக்தி ஒன்றே போதுமே....
அவனியில் கந்தனை அடைய...
பக்தி ஒன்றே போதுமே....
'கை கட்டி வாய் பொத்தி'
பக்தி செய்தால்....
தானே வந்து புகுவான்...மனதினில்...முருகன்...
கட்டவிழ்பான் கந்தன்...
ஊழ்வினை கட்டை நீக்குவான்...தரணியில்...
துயரமதை துடைப்பான்...மகிழ்விப்பான்...வேலன்..
இன்னலை நீக்குவான்..
பின் நின்று காப்பான்…
அவனை அடைய பக்தி ஒன்றே போதுமே...
விநயமும் கவிநயமும் இழைந்து வரும்…
கவிதை புனையும் ஆற்றலை அளிப்பான்..
அளித்து மகிழ்வான்...
ஆண்டியாய் நின்றாலும்... குகன்..
வேண்டியதை தர தயங்கான்..
தத்வமிதை அறியா அகதிகளாய் நிற்க
இன்னமும் தகுமோ...
Swamy Tejomayananda
OM
Happiness is in being ONE…
Know thy self.
The moment you know your roots…
You flow with love and want to spread love and happiness.
When the veil of ignorance falls down and you
Sit hours together with tiny petals shining with dew pearls that is the real beauty……
Just sit in lap of nature where there is no pain and pleasure…just Divine Ecstasy………
HARI OM..
leave behind your desires....
present moment
be with your roots..
is of universal love....
BIG .
குமரனின் மனதை கவர....
பக்தி ஒன்றே போதுமே....
அவனியில் கந்தனை அடைய...
பக்தி ஒன்றே போதுமே....
'கை கட்டி வாய் பொத்தி'
பக்தி செய்தால்....
தானே வந்து புகுவான்...மனதினில்...முருகன்...
கட்டவிழ்பான் கந்தன்...
ஊழ்வினை கட்டை நீக்குவான்...தரணியில்...
துயரமதை துடைப்பான்...மகிழ்விப்பான்...வேலன்..
இன்னலை நீக்குவான்..
பின் நின்று காப்பான்…
அவனை அடைய பக்தி ஒன்றே போதுமே...
விநயமும் கவிநயமும் இழைந்து வரும்…
கவிதை புனையும் ஆற்றலை அளிப்பான்..
அளித்து மகிழ்வான்...
ஆண்டியாய் நின்றாலும்... குகன்..
வேண்டியதை தர தயங்கான்..
தத்வமிதை அறியா அகதிகளாய் நிற்க
இன்னமும் தகுமோ...
Swamy Tejomayananda
OM
Happiness is in being ONE…
Know thy self.
The moment you know your roots…
You flow with love and want to spread love and happiness.
When the veil of ignorance falls down and you
Sit hours together with tiny petals shining with dew pearls that is the real beauty……
Just sit in lap of nature where there is no pain and pleasure…just Divine Ecstasy………
HARI OM..
leave behind your desires....
present moment
be with your roots..
is of universal love....
BIG .
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
arasi
My சி for Sri is from Tamil lexicon...
You are welcome to take it as
இலக்கு 'me' (ilakkume)
My சி for Sri is from Tamil lexicon...
You are welcome to take it as
இலக்கு 'me' (ilakkume)

-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
nam kavi pADinAn:
annaiyavaL vaiyamellAm AdarippAL 'siri' dEvi
thanniru poTRALE saran pugundu vAzhvOmE
annaiyavaL vaiyamellAm AdarippAL 'siri' dEvi
thanniru poTRALE saran pugundu vAzhvOmE

-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
Dedicated to the world eye donation fortnight now being celebrated :
இறந்தும் உலகெழில் காண வேண்டின்
விரைந்து செய்திடுக கண்தானம்
கண்ணினைத் தானமாய் செய்திட்ட சீர்மிகு
பெண்ணிற் பெருந்தக்க யா வுள?
காணாதார் காட்டுவான் தான் கண்ட கண்களைத்
தானமாய் த் தந்த தயாளன்.
காண கண் கோ டி வேண்டும்
-அதற்கு நாம் கண்தானம் செய்திட வேண்டும்
இறந்தும் உலகெழில் காண வேண்டின்
விரைந்து செய்திடுக கண்தானம்
கண்ணினைத் தானமாய் செய்திட்ட சீர்மிகு
பெண்ணிற் பெருந்தக்க யா வுள?
காணாதார் காட்டுவான் தான் கண்ட கண்களைத்
தானமாய் த் தந்த தயாளன்.
காண கண் கோ டி வேண்டும்
-அதற்கு நாம் கண்தானம் செய்திட வேண்டும்
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Beautiful, ponbhairavi!
tamizh nATTilE idai inspirational varigaLagap payan paDuthi innum anEgar vAzhvinai vaLam peRa vaikkalAm!
tamizh nATTilE idai inspirational varigaLagap payan paDuthi innum anEgar vAzhvinai vaLam peRa vaikkalAm!
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
Thanks Arasi. as suggested by you, I have added two more and sent It to Aravind Eye Hospitals.
இம்மண்ணை விட்டு விண் செல்லும்போது
உம் கண்ணை விட்டுச் செல்லவும்
ஒளியிழந்த கண்ணினார் நீங்கள் கண்ட
வெளி உலகை காண அவை உதவும்
கண்ணா என்றாள்
கண்ணே என்றான்
விண் ணேகி இருவரும் சென்றபின்
இன்றும் என்றென்றும்
காதலன் கண்ணன்தான்
காதலி கண்ணே தான்
கண் தானம் இப்புவிகாண
என்றும் ஒரு தொடர்கதை .
இம்மண்ணை விட்டு விண் செல்லும்போது
உம் கண்ணை விட்டுச் செல்லவும்
ஒளியிழந்த கண்ணினார் நீங்கள் கண்ட
வெளி உலகை காண அவை உதவும்
கண்ணா என்றாள்
கண்ணே என்றான்
விண் ணேகி இருவரும் சென்றபின்
இன்றும் என்றென்றும்
காதலன் கண்ணன்தான்
காதலி கண்ணே தான்
கண் தானம் இப்புவிகாண
என்றும் ஒரு தொடர்கதை .
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(247)
கேள்வி
பாடுபட்டுப் பல்லாயிரம் செலவிட்டுப்
பாட்டுக் குறுந்தட்டொன்று உருவாக்கி
பாட்டுக் கடைகள் பலவற்றில் போட்டு
போட்ட பணமெடுக்கக் காத்திருக்கும் நேரத்தே
படிதனை எடுத்தல் தவறெனும் போதும் அதன்
படிதனை எடுத்து பலருக்கும் அளிப்பது
முறையா? முறைகேடா?
ப்ரத்யக்ஷம் பாலா,
24.08.2012.
.
கேள்வி
பாடுபட்டுப் பல்லாயிரம் செலவிட்டுப்
பாட்டுக் குறுந்தட்டொன்று உருவாக்கி
பாட்டுக் கடைகள் பலவற்றில் போட்டு
போட்ட பணமெடுக்கக் காத்திருக்கும் நேரத்தே
படிதனை எடுத்தல் தவறெனும் போதும் அதன்
படிதனை எடுத்து பலருக்கும் அளிப்பது
முறையா? முறைகேடா?
ப்ரத்யக்ஷம் பாலா,
24.08.2012.
.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
திருட்டே திறமையென துதி பாடும் திருநாட்டில்
முறைமை யையும் நேர்மை யையும் எதிர் பார்த்துகொண்டிருத்தல்
பாலை வனத்தின் பொரியும் மணல் நடுவே ஓர்
கோலப் பங்கயம்மலரக் காத்திருப்ப தற்றே
முறைமை யையும் நேர்மை யையும் எதிர் பார்த்துகொண்டிருத்தல்
பாலை வனத்தின் பொரியும் மணல் நடுவே ஓர்
கோலப் பங்கயம்மலரக் காத்திருப்ப தற்றே
Last edited by Ponbhairavi on 08 Sep 2012, 08:28, edited 3 times in total.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
பாட்டுகள் பல இருக்க திருடனை போல சுற்றும் முற்றம் நோக்கி
அந்த ' சாய்ந்து சாய்ந்து' பாடல் குருந்தகட்டைவாங்கி பையில் அடைத்து
இல்லத்தில் மனைவிகள் படை சூழ
கேட்டு ரசிப்பதில் அடையும் இன்ப ரகசியத்தை யாதென்று விளம்புவது!
அந்த ' சாய்ந்து சாய்ந்து' பாடல் குருந்தகட்டைவாங்கி பையில் அடைத்து
இல்லத்தில் மனைவிகள் படை சூழ
கேட்டு ரசிப்பதில் அடையும் இன்ப ரகசியத்தை யாதென்று விளம்புவது!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Beautiful!venkatakailasam wrote: விநயமும் கவிநயமும் இழைந்து வரும் …
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(248)
பேரரசி
பட்டுக் கன்னம் தொட்டுப் பார்த்து
கட்டி அணைத்து முத்தம் இட்டு
தொட்டில் அசைத்து பாட்டுப் பாடி
பொட்டொன்று வைத்தேன் திருஷ்டிக் கழிக்க!
சட்டென்று விழித்து வெட்டிச் சிரித்தாள்
குட்டிக் குழவி என் புத்தம்புது பேத்தி!
ப்ரத்யக்ஷம் பாலா.
.
பேரரசி
பட்டுக் கன்னம் தொட்டுப் பார்த்து
கட்டி அணைத்து முத்தம் இட்டு
தொட்டில் அசைத்து பாட்டுப் பாடி
பொட்டொன்று வைத்தேன் திருஷ்டிக் கழிக்க!
சட்டென்று விழித்து வெட்டிச் சிரித்தாள்
குட்டிக் குழவி என் புத்தம்புது பேத்தி!
ப்ரத்யக்ஷம் பாலா.
.
Last edited by Pratyaksham Bala on 12 Sep 2012, 15:54, edited 2 times in total.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
பெண்ணிற் பெருந்தக்க யாவுள -குறள்!
கண்ணிற் பாவையன்றோ -பாரதி !!
"பால" தாத்தாவிற்கு பேத்தி பேரரசி!!
சீல மிகு வாழ்த்துக்கள் -சிறக்கட்டும்
கண்ணிற் பாவையன்றோ -பாரதி !!
"பால" தாத்தாவிற்கு பேத்தி பேரரசி!!
சீல மிகு வாழ்த்துக்கள் -சிறக்கட்டும்
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
பேத்தியைக் கொஞ்சிடும் பாவலர் பாலாவை
வாழ்த்துவோம் நாமும் மகிழ்ந்து
வாழ்த்துவோம் நாமும் மகிழ்ந்து
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Ponbhairavi & sridhar_rang,
THANKS!
THANKS!
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
umai 'ETRam puriya' vandavaL,
En, kANbOrai ellAm mATRilAp ponnAm
avaL kuzhandai guNathAl
tiruthi aruLa vandavaL!
avaL vaLamuRa vAzha vAzhthukkaL pala!
Congratulations to the whole family!
En, kANbOrai ellAm mATRilAp ponnAm
avaL kuzhandai guNathAl
tiruthi aruLa vandavaL!
avaL vaLamuRa vAzha vAzhthukkaL pala!
Congratulations to the whole family!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
arasi,
Thanks!
Thanks!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(249)
நல்வாக்கு!
கூட்டைத் திருத்தி, பின்செலும்
வீட்டைத் திருத்தி, சுற்றியுள
கேட்டைத் திருத்தி, இத்திரு
நாட்டையும் திருத்துவாள் இப்பேரரசி!
திண்ணம்.
ப்ரத்யக்ஷம் பாலா,
12.09.2012.
.
நல்வாக்கு!
கூட்டைத் திருத்தி, பின்செலும்
வீட்டைத் திருத்தி, சுற்றியுள
கேட்டைத் திருத்தி, இத்திரு
நாட்டையும் திருத்துவாள் இப்பேரரசி!
திண்ணம்.
ப்ரத்யக்ஷம் பாலா,
12.09.2012.
.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Cogratulations!
Your dream will come true through her!
Your dream will come true through her!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
cmlover,
THANKS!
THANKS!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(250)
வாழ்க்கைப் படிகள்
களித்துக் கூத்தாடி சிதறிப் பேயாடி
ஒளித்துக் குமுறிச் சிதைத்து ஓய்ந்து பின்
குளித்துத் தணலெழுதி கருமம் தொலைத்து
விளித்துக் கூவி விண்ணதிர ஓது.
ப்ரத்யக்ஷம் பாலா,
12.09.2012.
.
வாழ்க்கைப் படிகள்
களித்துக் கூத்தாடி சிதறிப் பேயாடி
ஒளித்துக் குமுறிச் சிதைத்து ஓய்ந்து பின்
குளித்துத் தணலெழுதி கருமம் தொலைத்து
விளித்துக் கூவி விண்ணதிர ஓது.
ப்ரத்யக்ஷம் பாலா,
12.09.2012.
.
Last edited by Pratyaksham Bala on 12 Sep 2012, 23:45, edited 1 time in total.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
I guess you mean(?)குளித்துத் தனலெழுதி கருமம் தொலைத்து
குளித்து அனலெழுதி கருமம் தொலைத்து
or
குளித்துத் தணலெழுதி கருமம் தொலைத்து
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Thank you!
Yes, it is தணலெழுதி.
Yes, it is தணலெழுதி.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(251)
போதும்!
மதிநிறை மாந்தர் கூட்டம்
மடத்திடை போந்து வீழ
கதியொரு காவி மட்டோ?
கவலைகள் ஓய்ந்து போமோ?
நிதியொடு வாழ்வில் நீந்தி
நடத்திய வேள்வி போரே.
இதுவரை வாழ்வு போதும்
இனியொரு பிறவி வேண்டா!
ப்ரத்யக்ஷம் பாலா,
14.09.2012.
.
போதும்!
மதிநிறை மாந்தர் கூட்டம்
மடத்திடை போந்து வீழ
கதியொரு காவி மட்டோ?
கவலைகள் ஓய்ந்து போமோ?
நிதியொடு வாழ்வில் நீந்தி
நடத்திய வேள்வி போரே.
இதுவரை வாழ்வு போதும்
இனியொரு பிறவி வேண்டா!
ப்ரத்யக்ஷம் பாலா,
14.09.2012.
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(252)
நிதர்சனம்
பேரருவி வீழ்தல் அழகு
பங்கயம் விரிதல் அழகு
காரிருளில் மின்னல் அழகு
கருமேகம் வரைதல் அழகு - என்போர்
சேரிடம் சேர்ந்த பின்னர்
பார்வையின் கோணம் மாறும்
போரிடும் களத்தில் ஊறும்
குருதியும் அழகு என்பர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
15.09.2012.
.
நிதர்சனம்
பேரருவி வீழ்தல் அழகு
பங்கயம் விரிதல் அழகு
காரிருளில் மின்னல் அழகு
கருமேகம் வரைதல் அழகு - என்போர்
சேரிடம் சேர்ந்த பின்னர்
பார்வையின் கோணம் மாறும்
போரிடும் களத்தில் ஊறும்
குருதியும் அழகு என்பர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
15.09.2012.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
sEriDam sErnda pin
pArvaiyin kONam mARum---
Rich material there! I bet you have many more images than just the porkkaLam.
URum kurudi conjures up the 'inner' blood boiling also, which leads to the war (pOr)!
pArvaiyin kONam mARum---
Rich material there! I bet you have many more images than just the porkkaLam.
URum kurudi conjures up the 'inner' blood boiling also, which leads to the war (pOr)!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
arasi,
Thanks.
Thanks.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(253)
மயக்கம்
பிடித்தவர் சேட்டை எல்லாம்
பொருள்செறி செயலாய்த் தோன்றும்.
மடித்தவர் கூற்று எல்லாம்
மதிநிறை அருளாய்த் தோன்றும்.
விழித்தெழும் குரங்கு மனம்
வேறிடம் நாடும் போது
பழையதை மறக்கத் தோன்றும்.
பழுதென சிரிக்கத் தோன்றும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
16.09.2012
.
மயக்கம்
பிடித்தவர் சேட்டை எல்லாம்
பொருள்செறி செயலாய்த் தோன்றும்.
மடித்தவர் கூற்று எல்லாம்
மதிநிறை அருளாய்த் தோன்றும்.
விழித்தெழும் குரங்கு மனம்
வேறிடம் நாடும் போது
பழையதை மறக்கத் தோன்றும்.
பழுதென சிரிக்கத் தோன்றும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
16.09.2012
.
Last edited by Pratyaksham Bala on 16 Sep 2012, 07:52, edited 1 time in total.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
arasi,
Thanks.
Corrected.
Thanks.
Corrected.
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
What is மடித்தவர் (in the line மடித்தவர் கூற்று எல்லாம் மதிநிறை அருளாய்த் தோன்றும்)?
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
பூணூலை ஏற்கும் பொது இரண்டாவது பிறப்பு நிகழ்கிறது.
பிறகு, பூணூலைத் துறந்து சன்யாசம் கொள்ளும்போது இரண்டாவது பிறப்பு மடிகிறது.
எனவே, சன்யாசம் ஏற்றவர்களை 'மடித்தவர்' என்று குறித்துள்ளேன்.
இது பற்றி நண்பர் ஒருவருடன் பேசியிருந்தபோது அவர் 'மடித்தவர்' என்றால் 'மடி'யாகத் தவம் செய்பவர் என்று நினைத்தேன் என்றார்!
பிறகு, பூணூலைத் துறந்து சன்யாசம் கொள்ளும்போது இரண்டாவது பிறப்பு மடிகிறது.
எனவே, சன்யாசம் ஏற்றவர்களை 'மடித்தவர்' என்று குறித்துள்ளேன்.
இது பற்றி நண்பர் ஒருவருடன் பேசியிருந்தபோது அவர் 'மடித்தவர்' என்றால் 'மடி'யாகத் தவம் செய்பவர் என்று நினைத்தேன் என்றார்!