KavithaigaL by Rasikas
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
Aah ok, that was not easy to get.....perhaps மடிந்தவர் would have communicated it too, but not in the sense you meant (end of the second 'piRappu' by discarding the thread and taking up sanyaasa aashramam).
As for your friend's interpretation, I'm not sure 'tavar' can refer to a tapasvi, may be tavattavar is more apt! I can recall 'Sengal poDikkURai veNpal tavattavar' from tiruppAvai, and 'naRRavaRRavar' ('nal tavattavar') from the famous viruttam 'peRRa tAi tanai maga maRandAlum'

- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
That is indeed a new term PB!
The derivation is abstruse...
The derivation is abstruse...
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
THANKS !sridhar_rang wrote:Aah ok, that was not easy to get...
THANKS !!cmlover wrote:That is indeed a new term PB!
Hope this finds a place in the Tamil lexicon in due course!
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(254)
சேராயிசை
மத்தளம் சொதப்ப
கடம் தடம் புரள
வயலின் வழுக்கிவிட
பாடகர் விதியை நொந்தார்.
ரசிகர்கள் ?
17.09.2012.
.
சேராயிசை
மத்தளம் சொதப்ப
கடம் தடம் புரள
வயலின் வழுக்கிவிட
பாடகர் விதியை நொந்தார்.
ரசிகர்கள் ?
17.09.2012.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
layippu
---------
pADagar edaiyum pArATTAdu
pATTilEyE gavanamAgi--than
'Art'--aip piRaroDu pagirndu--
'chodappal'aiyum, iDarum
gaDathaiyum, vazha vazha
violin izhuppaiyum puRam thaLLi
seyal purindAl--
solikkumE kalaiyum--isai
olikkumE mei silirkka
---------
pADagar edaiyum pArATTAdu
pATTilEyE gavanamAgi--than
'Art'--aip piRaroDu pagirndu--
'chodappal'aiyum, iDarum
gaDathaiyum, vazha vazha
violin izhuppaiyum puRam thaLLi
seyal purindAl--
solikkumE kalaiyum--isai
olikkumE mei silirkka

-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
P Bala wrote:
ரசிகர்கள் ?
இத்தனைக்கும் காரணமே ஓயாமல் பெசிக்கொண்டிருநத அவர்கள் தானோ என்னவோ?
அப்படியானால்
ரசிகர்கள் : தம் நடத்தையை நொந்துகொண்டனர்
அல்லது :
இத்தனையும் நிகழ்வித் த தம் ஆற்றலை எண்ணி பெருமை பட்டுகொண்டிருந்தனர்
( நவராத்திரி கொலுவில் அடுக்கி வைத் திருந்த பொம்மைகளை கலைத்து மகிழும்
மூன்று வயது குழந்தையைப் போல

- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
சமீபநாட்களில் எழுதியவை:
சிவமாகி சக்தியாகித் திகழ் சக்கரமுமாகி
ஸ்ருதியாகி லயமாகி சுநாத சுதனுமாகி
அனாதியாய்ப் பலவாய் ஆற்றலாய் வீற்றிருக்கும்
அக்னியே ஜ்வாலையே ஆனைமுகா சரணம்.
வாலைக் குமரியாய் வந்தருள் சிவசக்தி
ஜ்வாலைத் திகிரியாய் ஞானம் தந்தருள
வேலைக் கரம்கொண்ட மால்மருகன் சோதரன்
வேழனை வணங்கியே வேண்டிடுவோம் ஞானமே.
தீபத்தின் ஒளியைத் திகழ்ந்திடும் சுடரை
தில்லையைத் திருக்கடவூரை திருமாலைத் தீந்தமிழை
தூலனை சூக்ஷ்மனைத் தூயனைத் துதிக்கையை
துலங்கவே பணிந்தனைத் துலகங்களும் உய்யவே.
சுருதியாய் லயமாய் சுடராய் விளங்கிடும்
சுமுகனை சுந்தர ரூபனைப் பணிந்து
கயிலையைக் காவல்செய் நந்தியாம் மத்தள
நாதனே நின்கழல் காப்பு.

The prelude is fantastic and is appropriate following the vinayaka chaturthi.
I assume a grand kaaviyam is in the making!
Will wait patiently....
I assume a grand kaaviyam is in the making!
Will wait patiently....
-
- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
nothing like that and not at all mama... just wrote this and felt like sharing 

-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
No problem.
I assumed the காப்பு is the prelude.
But then you must compose one on our Kanchi PeriyavaaL at your time and convenience.
I assumed the காப்பு is the prelude.
But then you must compose one on our Kanchi PeriyavaaL at your time and convenience.
-
- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
neenga solRadhu vAsthavam. ezhudha Arambiththu, ninnu pOchchu. ezhudhaRadha vida, pEsaRadha vida, uNarudhal mukkiyamnu thONip pOyiduththu. adhAn, oNNumE ezhudha valla. summA facebook, twitter-la one liners pOttuNdu irukkEn. adhuvum nikkaNum.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
வேறு ஒரு தளத்தில் ஸ்ரீதர் எழுதிய வெண்பாவை தழுவிய ஏன் பா :
நீலமென வந்தாய் நிலமெங்கும் நீ செய்த
கோலமது போதாது--என கோர சுனாமி ,தானேயில்
பணம் சுருட்டிப் பழகிய பலே அரசியல் வாதி பலர்
பிணம் தின்னிக் கழுகென பேராசையில் காத்திருக்க
அவர்களையே ஏமாற்றி அசத் தி வீழ்த்திவிட்ட
சமர்த்தன் நீ -சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்
நீலமென வந்தாய் நிலமெங்கும் நீ செய்த
கோலமது போதாது--என கோர சுனாமி ,தானேயில்
பணம் சுருட்டிப் பழகிய பலே அரசியல் வாதி பலர்
பிணம் தின்னிக் கழுகென பேராசையில் காத்திருக்க
அவர்களையே ஏமாற்றி அசத் தி வீழ்த்திவிட்ட
சமர்த்தன் நீ -சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
deleted and posted as separate thread.
-
- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
Blog Update: வித்யாவின் மரணமும் வலித்தது
//நாடொன்றை எரித்தவளின் நகரத்தில்
தானேயெரிந்தபடி தேசத்தைச் சபித்தபடி...//
http://erodenagaraj.blogspot.in/2013/02/blog-post.html
//நாடொன்றை எரித்தவளின் நகரத்தில்
தானேயெரிந்தபடி தேசத்தைச் சபித்தபடி...//
http://erodenagaraj.blogspot.in/2013/02/blog-post.html
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by RasikasBurn the
Nagaraj,
AniyAyangaL OIvadillai (Injustice doesn't take a break). Your writing touches the heart.
Here's the echo of your feelings...
Apologies for posting the following lines in Angilam. Mods are welcome to move it elsewhere.
New Age??
.............
Break the heart, burn the skin--
To ashes her very being, burn!
Burning with desire of the most destructive,
Burn buds, flowers--why, blooms of a future--
Negate life, erase hope, navigate hate--
Nullify tomorrows which of dreams are made--
What are you, evil force?
Why call yourself human?
Villain, virulent plague!
Why were you born?
That too of a woman
Mother, who would wish
You to see one in all her kind?
KaNNagi then, annihilating mighty Madurai--
Now, alas, an end to all kaNNagis in the making!
Man power! Protector in potential
But destroyer in deed! Woe it is!
Yet another story where Sakthi
Lies burning, by brute force!
And Bharathi has died a thousand deaths

thank you arasi...
this is latest, wrote yesterday on seeing the common tailor bird -thaiyal chittukkuruvi, a pregnant crow, butterflies, thumbi...
உணராதபோதும்... கவிதை - ஈரோடு நாகராஜ்
http://idlyvadai.blogspot.in/2013/03/blog-post_2.html
this is latest, wrote yesterday on seeing the common tailor bird -thaiyal chittukkuruvi, a pregnant crow, butterflies, thumbi...
உணராதபோதும்... கவிதை - ஈரோடு நாகராஜ்
http://idlyvadai.blogspot.in/2013/03/blog-post_2.html
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
"kavidaiyai uNarAdum
kalaiyAi vAzhum paRavaigaL..."
What a keen eye, poet!
kalaiyAi vAzhum paRavaigaL..."
What a keen eye, poet!
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
பூழுதியில் எறிந்த வீணைகள் !!
சேறும் சகதியும் நாற்றமிடும் சந்துமுனை
ஆழப் பதிந்திருந்த பல பன்றிகள் கால தடங்கள
சிதறிச் சிதைந்து பாதி புதைந்தும் கிடந்தன
ஒரு சிவப்பு ரோஜாவின் பூவிரிச் செவ்விதழ்கள்
ஆட்டை விரட்டும் உன் முள்ளை நம்பி வரலாமா ?
இன்று வீதிகளில் ஆட்டைவிட பன்றிகளே அதிகம் .
முறிந்த கழுத்திலிருந்து பெருகிய குருதியில்
ஒட்டிக் காய்ந்துபோன சில பச்சை சிறகுத் துண்டு
சிதைந்து கிடந்தது அருகே ஒரு கிளியின் சிவந்த மூக்கு
கொஞ்சு மொழி பேசி தத்திதிரிந்த தத்தையே
உன் யஜமானியின் தோளும் சிறு கூண்டுமே உன் பாதுகாப்பு
தோட்டத்தில் வீட்டைச்சுற்றி வட்டமிடும் காட்டுப்பூனை
நீண்டு மருண்ட விழிகள் நிலை குத்தி நிற்குதையோ !
தொட்டால் சிலிர்க்கும் உன் புட்டா பட்டு மேனி
மார் பிளந்து குடல் பிதுங்கி குருதியில் மிதக்குதய்யோ !
சுதந்திரம் என நம்பி துள்ளித்திரிந்த மானினமே
இரு கொம்புகளை நம்பி தோட்டத்தை விட்டகன்றனையே !
ஓநாய்க்கும் உறுபுலிக்கும்கூட இன்று ஊருக்குள் சுதந்திரந்தான்
மெல்லினத்தை காக்க வல்லினம் தவறிய நாட்டில்
ஆயுதங்கள் எழுத்தளவே ,ஆபத்தில் உதவாது
சுதந்திரம் பொருளற்ற வெற்று ஏமாற்று வேலை
பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
நாமே முன்வந்து கட்டுண்டு காத்திருப்போம்
காலம் மாறிச் சற்றே நாகரிகம் மலரும்வரை

Inspired lines!மெல்லினத்தை காக்க வல்லினம் தவறிய நாட்டில்
ஆயுதங்கள் எழுத்தளவே ,ஆபத்தில் உதவாது
சுதந்திரம் பொருளற்ற வெற்று ஏமாற்று வேலை
பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
நாமே முன்வந்து கட்டுண்டு காத்திருப்போம்
காலம் மாறிச் சற்றே நாகரிகம் மலரும்வரை
Set it to music and make it the war-cry!
-
- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
//நாமே முன்வந்து கட்டுண்டு காத்திருப்போம்
காலம் மாறிச் சற்றே நாகரிகம் மலரும்வரை//
கட்டுண்டு காத்திருந்தால் காலங்கள் ஓடிவிடும்
நாகரிகம் மலரும் என்றே நாளெல்லாம் வீணாகும்.
மாற்றங்கள் வருமென்ற காத்திருத்தல் தறந்துவிட்டு
மாற்றமாய் நாமிருக்க மனிதநேயம் மாண்புறும்.
காலம் மாறிச் சற்றே நாகரிகம் மலரும்வரை//
கட்டுண்டு காத்திருந்தால் காலங்கள் ஓடிவிடும்
நாகரிகம் மலரும் என்றே நாளெல்லாம் வீணாகும்.
மாற்றங்கள் வருமென்ற காத்திருத்தல் தறந்துவிட்டு
மாற்றமாய் நாமிருக்க மனிதநேயம் மாண்புறும்.
-
- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
Blog update: ஆரும் அறியக்கூடாதென...
(Happened to see this photo in Facebook. A heart with head phones! The picture reminded me the sweet nothings, the whispers of heart to the wishful ears of love)
http://erodenagaraj.blogspot.in/2013/03/blog-post.html
(Happened to see this photo in Facebook. A heart with head phones! The picture reminded me the sweet nothings, the whispers of heart to the wishful ears of love)
http://erodenagaraj.blogspot.in/2013/03/blog-post.html
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
roTTiyum rOjAvum
-----------------------
inRu ulagap peNgaL dinam
veRum pUngoththum
ALuyara 'cArd' um
idaya vaDivilE
aTTaip peTTi niRainda
miTTAi paTRiyum illai idu
nURANDugaLukku munnE
ARAda thuyaruDanE
nADu viTTu New York
nagaram vandaDimaiyarAi
naraga vEdanai anubavitha
thaiyal kalaip peNgaL paTRi
avar pin vanda palar--AN
ATchi ulagilE, peNmaiyin
menmai aRiyAdOr--adanilum
avar paNi madiyAdOr--vElaiku
nigar kUli koDAdOr, nAYAi
peNDir uzhaithiDa--pEyAi
naDandu, kIzhAi naDaththi...
roTTiyum rOjAvum...
vElaikkETRa kUli--
vayiRu niRappavum
tham nilam viTTu
vandavarkku nal vAzhvum--
aduvE avar vELvi...
Bread and Roses...
peNmaiyin perumai
February padinAngil illai
idu vayiTRuk kUZhukkum vaLa vAzhvukkum
Engi, iruNDa kATRilA aRaigaLil, viral
kaDukka OrAyiram ADaigaL thaitha vaNNam
viDuththa nATTaiyum, vandaDainda pATTaiyum
thaiyalar ovvOr thaiyal izhaiyilum izhaithu
EzhmaiyOTTa vizhaindE kaNNIr perukkiya kAlathin
ninaivu nALE idu--vERillai, peNmaiyin veTRu show illai
oru nAL vivakAram illai idu--pala nAL charithiram
sila nATTuk kadaiyillai--anRaiya ulaga nilai idu
inRaikkum thIrvu kANa vENDiya onRidu--
OyAduzhaitha peNDirukkum
avar nalam thEDiya peNgaLODu
ANgaLukkumE ninaivu nAL idu
NalladonRuNDEl adil ANEdu peNNEdu?
peNgaL vAzhgavenbOrkkum uNDu nal vAzhvu--
Bread and Roses
roTTiyum rOjAvum
* * * *

அருமை.
பெண்களின் பெருமை ஃபிப்ரவரி பதினான்கில் இல்லை தான். அது நவம்பர் பதினாலில் உறைந்து கூட இல்லை, மலர்ந்திருக்கிறது.
வாழ்த்து அட்டைகளைப் பற்றிப் படித்ததும், பழைய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. (efforts to impress and express love)
எனக்காக....
---------------------
காதலைச் சொல்லிடும் நூதன விதங்களை
காகிதம் கூறியது...
வாழ்த்து அட்டைகள்; வாடாத பூக்களென
வழிகளைச் சொல்லியது.
வீதி வழி தவிக்கும்
விதி முடிந்த கிழவியை
விரைவாய்க் கடந்திட
விரல் பற்றி இழுத்து,
யாரென்று அறியாமல் வீணென்று தெரிந்தும்
வீரத்தைக் காட்டிடவே விடலையாய்ச் சண்டையிட்டு...
வீட்டு வாசலில் விளையாடச் சேர்ந்து
வருங்கால மைத்துனனை வகையாகக் கவனித்து....
பேருந்து நிற்குமிடம், பெருங்குடை நிழலில்
பக்கத்தில் மணி கேட்டு பா(ர்)வைக்காய்த் தவமிருந்து...
விருப்பமாய் பார்த்தும் விடாது துரத்தியும்
விழியோரம் பதில் கேட்டு விரல் நகம் கடித்தும்
விண்ணிலே வெண்ணிலா; மண்ணிலே பெண்ணென்று
பேனாவில் மை தீரப் பேப்பரிலே எழுதிவிட்டும்
பேச்சு வராமல் பேதலித்துப் பின்
ஓராயிரம் முறைகள் ஒத்திகை பார்த்து
சட்டெனச் சொல்லியதும் சடுதியில் பிழைத்ததடி
சந்தோஷ அலைகளிலும் சங்கடங்கள் முளைத்ததிடி!
காதல்.....
மூளைக்குள் நுழைந்ததும் முடியுதிர்ந்து போனதடி,
முத்தங்கள் தந்திடவே திட்டங்கள் வந்ததடி!
வாழ்த்து அட்டைகள்; வாடாத பூக்கள்
புத்தகங்கள் புனைந்துரைத்த புதியதான வழிமுறைகள்
நண்பர்கள் நடத்திய நாடக அரங்குகள்...
எத்தனை இருக்கும் எண்ணியெண்ணிப் பார்க்கிறேன்...
எல்லா விதத்திலும் முன்பே சொல்லியதால்,
"ஐ லவ் யூ" க்கள் அலுக்காதிருக்க
என் செய்வேன்... அன்பே...
எனக்காக நீ யோசி.

உனக்காகத்தான் என்அன்பே ..
பறவைகள் விற்கும் கடைக்குச்சென்றேன்
பறவைகள் வாங்கி வந்தேன்
உனக்காகத்தான் என் அன்பே
மலர்கள் விற்கும் கடைக்குச் சென்றேன்
மலர்கள் வாங்கி வந்தேன்
உனக்காகத்தான் என் அன்பே
குஜிலி* கடைக்குச் சென்றேன்
சங்கிலிகள் வாங்கி வந்தேன்
கனமான தடி சங்கிலிகள்
உனக்காகத்தான் என் அன்பே
பின் அடிமைகள் விற்கும் கடைக்குச் சென்றேன்
உன்னைத் தேடிப்பார்த்தேன்
உன்னை அங்கு காணவில்லையே
என் அன்பே .
குஜிலி =பழைய இரும்பு சாமான்கள் விற்கும் கடை
POUR TOI MON AMOUR…
Je suis allé au marché aux oiseaux
Et j’ai acheté des oiseaux
Pour toi mon amour
Je suis allé au marché aux fleurs
et J’ai acheté des fleurs
pour toi mon amour
Je suis allé au marché à la ferraille
Et J’ai acheté des chaines
De lourdes chaines
Pour toi mon amour
Et puis Je suis allé au marché aux esclaves
Et je t’ai cherchée
Mais je ne t’ai pas trouvée
Mon amour
Jacques Prévert(paroles)1945.

iraTTaik kavidaigaL--both touch the heart.
And...
peN innum manam malargiRAL kanavu kaNDE...
sonna pEchuppaDi pUNgothukkenak kAthiruppAL...
nambuvadE avaL vazhi--bArathi sonnAnE?
Et la femme reve, comme toujours...
Ilya des fleurs et bon mots de BhArathi!
And...
peN innum manam malargiRAL kanavu kaNDE...
sonna pEchuppaDi pUNgothukkenak kAthiruppAL...
nambuvadE avaL vazhi--bArathi sonnAnE?
Et la femme reve, comme toujours...
Ilya des fleurs et bon mots de BhArathi!
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
Arasi thanks.
What would be her reply if reads that poem?
My imagination goes like this:
பறவைகள் விற்கும் கடைக்குசென்றேன்
நீ வந்து வாங்கிச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள்
பூக்கள் விற்கும் கடைக் குசென்றேன்
நீ வந்து வாங்கிச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள்
பூங்கா விற்கு சென்று உனக்காக காத்திருந்தேன்
நீ நேராகச் செல்வதைக்கண்டேன்
அடிமைகள் விற்கும் கடைகள் நோக்கி
கையில் ஒரு இரும்பு சங்கிலியுடன் .
ஏமாற்றத்தை விழுங்கி கொண்டு எங்கோ மறைந்து விட்டேன்
தெய்வத்துக்கு என் நன்றியைச் சொல்லியபடி

What a great 'denouement'!
'Untying' enRum sollalAm
'Untying' enRum sollalAm

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
ஆசிரமம்
செத்தவர் சமாதி மீது
மெத்தையாய் மலர் அடுக்கி
நித்தமும் கதைகள் கூட்டி
பித்தனின் பிறவி என்பார்
பத்தரைத் தங்கமென்பார்
வித்தகர் இவரே என்பார்
சொத்துகள் கரைத்து ஆட
எத்துகள் மறைத்து வைக்க
இத்தனை கூத்தும் போதா.
ப்ரத்யக்ஷம் பாலா,
06.07.2013.
.
ஆசிரமம்
செத்தவர் சமாதி மீது
மெத்தையாய் மலர் அடுக்கி
நித்தமும் கதைகள் கூட்டி
பித்தனின் பிறவி என்பார்
பத்தரைத் தங்கமென்பார்
வித்தகர் இவரே என்பார்
சொத்துகள் கரைத்து ஆட
எத்துகள் மறைத்து வைக்க
இத்தனை கூத்தும் போதா.
ப்ரத்யக்ஷம் பாலா,
06.07.2013.
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
அன்னை
கண்ணேறு தீர்ப்பாள் கதையெலாம் கூறுவாள்
உண்ணா நோன்பிருந்து உருப்பெற வேண்டுவாள்
பண்ணாயிரம் பாடி பலவாறு பேணுவாள்
விண்ணேறும் வரையிலே காத்திடுவாள் அன்னை.
ப்ரத்யக்ஷம் பாலா,
07.07.2013
.
அன்னை
கண்ணேறு தீர்ப்பாள் கதையெலாம் கூறுவாள்
உண்ணா நோன்பிருந்து உருப்பெற வேண்டுவாள்
பண்ணாயிரம் பாடி பலவாறு பேணுவாள்
விண்ணேறும் வரையிலே காத்திடுவாள் அன்னை.
ப்ரத்யக்ஷம் பாலா,
07.07.2013
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
"viNNERum varaiyilE kAthiDuvAL annai"
azhagAna vari...
So true...
In another sense, the ones who alas, have lost their children--will also until--viNNERum varaiyilE 'ninaivu' kAthiDuvAr...
azhagAna vari...
So true...
In another sense, the ones who alas, have lost their children--will also until--viNNERum varaiyilE 'ninaivu' kAthiDuvAr...
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
arasi:
More appropriate to your thinking will be:
maNNERum varaiyilE kAthiDuvAL annai
More appropriate to your thinking will be:
maNNERum varaiyilE kAthiDuvAL annai
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
ஏமாளியே!
காலையில் பிச்சைக்கு துதிபாடி வருவார்;
காலிலே விழுந்து கிடைத்ததைக் கொட்டுவாய்.
மரத்தடி ஜோதிடன் மனமகிழக் கதைப்பான்;
கரங்கட்டிக் குழைந்து கனவிலே மிதப்பாய்.
பொருளொன்றும் விளங்காது சாமியார் பிதற்றுவார்;
அருளென்று எண்ணி அகமெலாம் பூரிப்பாய்.
காமாலைக் கண்ணனே! கதிமோட்சம் வேண்டுமா?
பாமாலை பலசூடி பரம்பொருளை வேண்டு!
ப்ரத்யக்ஷம் பாலா,
08.07.2013

எங்கும் அவனே!
கள்ளிச் செடியிலும் கடவுள் இருப்பார்!
சுள்ளித் துண்டிலும் சுவாமி இருப்பார்!
பள்ளித் தலத்திலும் பரமன் இருப்பார்!
உள்ளம் நிறைந்து உணர்ந்திட வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
16.07.2013
.
எங்கும் அவனே!
கள்ளிச் செடியிலும் கடவுள் இருப்பார்!
சுள்ளித் துண்டிலும் சுவாமி இருப்பார்!
பள்ளித் தலத்திலும் பரமன் இருப்பார்!
உள்ளம் நிறைந்து உணர்ந்திட வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
16.07.2013
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
"பள்ளித் தலத்திலும் பரமன் இருப்பார்!"
பள்ளித்தலம் = workplace, வேலைக்களம்
.
"பள்ளித் தலத்திலும் பரமன் இருப்பார்!"
பள்ளித்தலம் = workplace, வேலைக்களம்
.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
"துள்ளித் திரியும் சிறாரிலும் இருப்பான்"
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
வியத்தகு பேரருள்!
தொள்ளைக் காதனின்
பொள்ளா அருள்கொண்டு
கொள்ளைச் சிரிப்பழகி
கிள்ளைப் பேச்சழகி --
கல்லைக் கரைத்தொரு பொற் கோயில் சமைத்திடுவாள்!
முல்லை மலர்கொண்டு வைர மாலை தொடுத்திடுவாள்!
ஊற்று நீரெடுத்து அரும் அமுதம் ஆக்கிடுவாள்! - ஜகம்
போற்றும் பாரிஜாதத்தில் ஓர் பதியம் செய்திடுவாள்!
ப்ரத்யக்ஷம் பாலா,
09.07.2013.

யாரோ?!
"ஜகம்
போற்றும் பாரிஜாதத்தில் ஓர் பதியம் செய்திடுவாள்!"
"The Parijaat tree is a sacred baobab tree in the village of Kintoor, near Barabanki, Uttar Pradesh, India, about which there are several legends.
"In botanical terms, Parijaat is known as Adansonia digitata and has been kept in a special category, because it does not produce either its fruit or its seeds, neither can its branch cuttings can be planted to reproduce a second Parijaat tree. The botanist say, that there is no such tree anywhere else to be found."
http://en.wikipedia.org/wiki/Parijaat_tree,_Kintoor

pAril jathi, malli, mullaiyuNDu
"pArum, nIr thanda parisai!
parigAsamthAn ithu!
parimaLa malar avaLukku,
parithApamAi niRkum maram enakkO?"
enRALE bhAmai? andap pArijAtham
inRaiyap peNgaLukkillai, engiRIrO? !!
Seriously, listening to the story always brought to mind the coral stemmed delicate blooms with tender pearl white petals whose fragrance was simply unique.
The stamp illustration has a flower which is very different. The tree and the leaves too. Wonder what the botanical name of the shrub (small tree) we associate with the name pArijAtatham. I know you will bring it to us in no time at all!

Pavazha-malli (coral jastine) flower of Nyctanthes arbor-tristis shrub is also called Paraijatham:-

But, here is a rare photograph of Parijat Flower of the only Parijat Tree in the world:-

Please check this interest site:-
http://betweensaneinsane.blogspot.in/20 ... ichay.html

But, here is a rare photograph of Parijat Flower of the only Parijat Tree in the world:-

Please check this interest site:-
http://betweensaneinsane.blogspot.in/20 ... ichay.html
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
வாலிபக் கவிஞர் "வாலி" இறைவனடி சேர்ந்தார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=760279
இரங்கல்கள்
http://www.dinamalar.com/news_detail.asp?id=760279
இரங்கல்கள்
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
அஞ்சலி:
திரு வாலி (டி.எஸ். ரங்கராஜன் ஐயங்கார்) அவர்களுடைய மறைவு பேரிழப்பாகும். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.
திரு வாலி (டி.எஸ். ரங்கராஜன் ஐயங்கார்) அவர்களுடைய மறைவு பேரிழப்பாகும். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
நிம்மதி வாழ்க்கை முறை
ஒருபடி அளித்துவிட்டு ஒருகை வாங்கிவந்து பானையிலே சேர்ப்பாள்.
ஒருதார் படைத்துவிட்டு இரண்டுமட்டும் வாங்கிவந்து மாடத்திலே வைப்பாள்.
நிறைவாக வழங்கிவிட்டு நல்லாசி வாங்கிவந்து நினைவினிலே வைப்பாள்.
சுரைவீணை மீட்டுவாள்; சுவையாகப் பாடுவாள்; சுகமாக இருப்பாள்!
ப்ரத்யக்ஷம் பாலா,
15.07.2013.
.
நிம்மதி வாழ்க்கை முறை
ஒருபடி அளித்துவிட்டு ஒருகை வாங்கிவந்து பானையிலே சேர்ப்பாள்.
ஒருதார் படைத்துவிட்டு இரண்டுமட்டும் வாங்கிவந்து மாடத்திலே வைப்பாள்.
நிறைவாக வழங்கிவிட்டு நல்லாசி வாங்கிவந்து நினைவினிலே வைப்பாள்.
சுரைவீணை மீட்டுவாள்; சுவையாகப் பாடுவாள்; சுகமாக இருப்பாள்!
ப்ரத்யக்ஷம் பாலா,
15.07.2013.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Thank you PBala, the mercurial procurer!
-
- Posts: 1309
- Joined: 12 Oct 2008, 14:10
Re: KavithaigaL by Rasikas
PB, Arasi,
The reference to the baobab as parijAta is relatively recent; since the tree isn't native to the subcontinent. The specimens in Uttar pradesh and Savanur in Karnataka were mostly likely introduced by the British or the Portuguese. It is seen in many parts of India now, including the Theosophical society Garden in Chennai and Lalbagh in Bangalore.
So the stories about a certain specimen being the only one in the world should be taken with a big pinch of salt. Referring to it as Parijata, too is a recent trend and doesn't seem to have any textual references.
The pavazha malli, Nyctanthes arbor-tristis, on the other hand is a truly Indian plant, and is predominantly found all over the subcontinent except in the higher altitudes. It has several names in the various Indian languages - shephalika, har-singAr etc, and has various mentions inliterature as well as texts related to worship and medicine.

keerthi:
Hope you are right.
There are 26 baobab trees in Pondicherry.
One tree has been given a religious touch - its trunk is decorated as Vinayaka and daily pooja is being conducted!

Hope you are right.
There are 26 baobab trees in Pondicherry.
One tree has been given a religious touch - its trunk is decorated as Vinayaka and daily pooja is being conducted!

-
- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re: KavithaigaL by Rasikas
Keerthi, then what is the mythical pArijAta? I have assumed that the fragrant flower that's labeled as pavazhamalli here was the pArijAta flower....
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
पारं अस्य अस्ति इति पारी समुद्र: तत्र जात: इति पारिजात: ।
(It was born abroad in the ocean hence it is pArijAta)
pArijAta was produced during the churning of the milky ocean by the devas and
asuras and hence the name.
It was brought to bhAratam by lord Krishna at the instance of SatyabhAma and
so it perhaps is an imported flower...