Kanchi Maha Periyava
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Kanchi Maha Periyava
ஒரு வைஷ்ணவ சிறுவன் பெரியவாளிடம் அபார பக்தி கொண்டவன். அவனுக்கு உபநயனம் நடந்து ரெண்டு வாரம் இருக்கும். அப்போது பெரியவா அவன் இருக்கும் கிராமத்தில் பட்னப்ரவேசம் பண்ணினார். எல்லார் வீட்டிலும் பூர்ணகும்ப மரியாதை பண்ணினார்கள். இவன் வீட்டிலும் பூர்ணகும்பம் குடுத்துவிட்டு எல்லாரும் பெரியவாளுடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தனர். இந்தப் பையனும் புதுப்பூணூல் ஜோரில் "அபிவாதயே" சொல்லி பெரியவாளை நமஸ்கரித்தான். "அபச்சாரம்! அபச்சாரம்! டே, அம்பி! பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்றச்சே அபிவாதயே சொல்லப்டாதுடா !"
பக்கத்தில் பல குரல்கள் ஏககாலத்தில் ஒலித்தன. பையன் மனஸில் ஓடிய என்னமோ,
"பூணூல் போட்ட வாத்யார்தானே பெரியவாளப் பாத்தா அபிவாதயே பண்ணுன்னு" சொன்னார் ! இவா என்னடான்னா பண்ணப்டாதுங்கறாளே !
அப்போ இவா பெரியவாளா? இல்லையா?" அந்தர்யாமி சிரித்துக்கொண்டே, "ஒனக்கு என்னைப் பாத்ததும் பெரியவாளா, இல்லியான்னு சந்தேஹம் வந்துடுத்தோல்லியோ?".
பையனுக்கு தூக்கி வாரிப் போட்டது! என்னது இது? X-ray மாதிரி சொல்றாரே! பையனை முன்னிட்டு எல்லாருக்கும் திருவாய் மலர்ந்தார்.
"அபிவாதயேங்கறது ஒரு life history மாதிரி. அந்தக்காலத்ல மனுஷாள்ளாம் மாப்பிள்ளைய, நீலத்தனல்லூர் சந்தைல, மாடு வாங்கறா மாதிரி, வாங்க மாட்டா! இங்கிதம் தெரிஞ்சவா, அதுனால "அபிவாதயே" மூலமா, இவன் இன்ன கோத்ரம், இன்ன சூத்ரம், இன்னார் பையன்ன்னு தெரிஞ்சுண்டு, பொண்ணைக் குடுக்கலாமா? வேணாமா?ன்னு முடிவு பண்ணுவா. நானோ சன்யாசி. எனக்கு பொண்டாட்டி, பொண்ணு இல்லே, ஒனக்குக் குடுக்க. அதுனால அபிவாதயே சொல்றது அவஸ்யம் இல்லியே ஒழிய, தப்பு இல்லே, புரிஞ்சுதா?"
அழகாக அன்பொழுக நடுரோடில் அந்த பையனுக்கு உபதேசம் பண்ணினார் உம்மாச்சி தாத்தா...

- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: New series on Maha Periva
Wonderful idea! .... worth trying by others 

-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: New series on Maha Periva
பெரியவா பாத்துப்பா - 9 !
அதுக்கப்றம், 86ல நடந்த சாம்ராஜ்ய பட்டாபிஷேகம், 88ல அதி ருத்ரம் பத்தி உங்க கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன். அதுல கொஞ்சம் விட்டு போயிருக்கு, அத அடுத்த தடவை சொல்றேன். இப்போ 94க்கு சமீபத்துல பீக்ஷாவந்தனம் செஞ்சத சொல்றேன்.
மாமாவும், நானும் காஞ்சிபுரத்துக்கு வந்திருந்தோம். என் தம்பி பெங்களூர்லேருந்து பெரியவாளுக்கு பீக்ஷை பண்ணி வைக்கறதுக்கு அரிசி, பருப்பு, நெய், வேற சாமான்கள், காய்கறி எல்லாம் லாரில போட்டு அனுப்பி இருந்தான். அதை மாமா பெட்டி, பெட்டியா இறக்கிண்டு இருந்தார். ஒரு தட்டுல தேங்காய், பழம், வைத்தலை, பாக்கு எல்லாம் வச்சோம்.பால பெரியவா பூஜை பண்ணிண்டு இருந்தார். மஹா பெரியவா எங்கிட்ட ' பெங்களூர்லேருந்து எனக்கு என்ன கொண்டு வந்திருக்கே'ன்னு கேட்டுண்டே அவருக்கு முன்னாடி சமர்ப்பிச்சதையெல்லாம் அப்பிடியே கட்டி பிடிச்சாப்போல தன் பக்கமா நகர்த்தி வச்சுண்டார். மந்த்ரங்கள் கூட ஒண்ணுமே சொல்லலை. எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம். சிலர் கேக்கவே கேட்டுட்டா, 'என்ன மாமி தெய்வம் உங்ககிட்ட கேட்டு வாங்கிக்கறதே'ன்னு. நான் ஆனந்தமா பாத்துண்டே இருந்தேன். திடீர்னு பெரியவா மூணு முள்ளு கத்திரிக்காயை எடுத்துண்டு அம்மானை ஆடினா. ஒரு தரம் கூட தப்பல. எனக்குத்தான் கஷ்டமா இருந்தது, முள்ளு கைல குத்திடப் போறதேன்னு.
அப்போ எனக்கு தெரியாது, அதுதான் பெரியவாளுக்கு நான் பண்ணின கடைசி பீக்ஷையா இருக்கப் போறதுன்னு. அதுக்கப்றம், பெரியவா சித்தி ஆன பதிமூணாவது நாள் கார்யத்துக்குதான் மறுபடி பெங்களூர்லேருந்து சாமான்கள், காய்கறி எல்லாம் வரவழைச்சேன். ஆராதனைக்கு என்னால முடிஞ்ச தக்ஷிணை கொடுத்தேன். அடுத்த வருஷத்துலேர்ந்து மத்தூர் ஸ்வாமிகள் சொன்னதன் பேர்ல ஜெயந்தி கொண்டாட ஆரம்பிச்சேன். இன்னை வரைக்கும் அவரோட க்ருபைல நல்ல படியா நடந்துண்டு வரது.
அப்போ எல்லாம் நான் அவர தரிசனம் பண்ண போறச்சே, சிஷ்யாள் யாராவது அவர்ட்ட 'பெங்களுர் மாமி வந்திருக்கா'ன்னு சொல்லுவா. பெரியவா 'அப்பிடி சொல்லாதேடா, சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் வந்திருக்கா'ன்னு சொல்லு அப்படின்னு திருத்துவா. எனக்கு ஒரே லஜ்ஜையா இருக்கும். ஆனா, அதனோட அர்த்தம் இப்பதான் புரியறது. ராம ராஜ்யம், அம்பாள் ராஜ்யம், பெரியவா ராஜ்யம் இங்க ஏற்படப் போறதுங்கறத சூசகமா சொல்லி இருக்காங்கறது. அது நடக்கணும். தர்மம் தழைக்கணும். கலியோட பிடிலேர்ந்து ஜனங்கள் விடுபடணும். லோகம் ஷேமமா இருக்கணும். அதெல்லாம் நடக்கத்தான் போறது. ராம், ராம்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம், ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

பெரியவா பாத்துப்பா 10 !
தர்மம் ரக்ஷிக்கப்படனும்னு பெரியவா சொல்றா? எதுக்காக? அப்போதான் அந்த தர்மம் நம்மை ரக்ஷிக்கும். ஆனா, அது அவ்வளவு சுலபம் இல்லை. ஆயிரம் அபவாதம் வரும். அதுக்கெல்லாம் சளைக்கக் கூடாது. நம்ம வழியில போயிண்டே இருக்கணும். தர்மங்கள் எல்லாம் லோக ஷேமத்துக்காகத் தான் ஏற்படுத்தப்பட்டிருக்கு. அதையெல்லாம் அனுஷ்டிச்சா இந்த உலகத்துல இருக்கற கோடானு கோடி ஜனங்களுக்கும், சகல ஜீவராசிகளுக்கும் நல்லது உண்டாகும். அதுல, அனுகூலமானவா, பிரதிகூலமானவா அப்டிங்கறது இல்லை. எல்லாருக்கும் சேர்த்துத்தான் மழை பெய்யும். பயிர் செழிக்கும். நாடு வளம் பெரும்.
ஆனா ஒண்ணு, அந்த தர்மத்தை நம்ம சௌகர்யத்துக்காக தளர்த்திக்கறோம். அது கூடாது. அதுக்கு நமக்கு எந்த தகுதியும் கிடையாது. அதெல்லாம் ரிஷிகள் ஏற்படுத்தினது, அப்பிடியே கடைபிடிக்கணும். பெரியவா இதுக்கு ஒரு கதை சொல்லுவா. காட்டுல எடுத்த சுள்ளிக் குச்சிகளை சேர்த்து ஒரு கயரால இறுக்கமா கட்டி தலை மேல வெச்சு எடுத்துண்டு வருவா. அப்பதான் குச்சிகள் கீழ விழாது. அதுமாதிரி, தர்மங்களை நாம வைராக்கியம்ங்கற கயரால இறுக்கமா கட்டணும். நம்மோட மன உறுதி கொஞ்சம் கொறஞ்சாலும் ஒவ்வொரு தர்மமா விட்டுடுவோம். அப்படித்தான் இப்போ நடந்துண்டு இருக்கு.
அதனாலதான், பெரியவா இதை வெறுமனே சொல்லிட்டு விட்டுடாம தர்மத்தின்படி வாழ்ந்து காட்டிருக்கா. அவர் ஞானாக்னி. எப்பவும் தபஸ்ல இருந்தாலும் எல்லா கார்யத்துலயும் தர்மத்தை ஒட்டி நடந்துருக்கா. அவர் இந்த கலில லோகத்தை புனருத்தாரணம் பண்றதுக்காகவே அவதாரம் பண்ணினா. சூர்ய ஒளி சகல ஜீவராசிகள் மேலேயும் படற மாதிரி, பெரியவா கடாஷம் எல்லாருக்கும் கெடைக்கணும்னு தான் அவராகவே இங்க வந்து அம்பாளோட சாம்ராஜ்யத்தை ஸ்தாபிச்சிருக்கார். அவ தன்னோட ஸ்ரீ சக்ரத்துல இருந்துண்டு சனாதன தர்மத்தை நிலை நிறுத்துவா.
ஜனங்கள் எல்லா வித சம்பத்துக்களோடையும் சந்தோஷமா வாழணும். நீங்க எல்லாரும் பரம ஷேமமா இருக்கணும்னு பெரியவாட்ட ப்ரார்த்திச்சுக்கறேன். ராம் ராம்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

பெரியவா பாத்துப்பா 11 !
யதிகள் பிக்ஷை பண்ணித்தான் சாப்படனும். பெரியவாளுக்காக உஞ்சவ்ருத்திக்கு போறவா பரிவட்டம் கட்டிக்கணும். அதுக்கு எனக்கு க்ரஹஸ்தா ஒருத்தரும் கிடைக்கலை. அதனால ஒரு பிரம்மச்சாரி வேத பாடசாலை பையனை ஸ்ரீ.கிருஷ்ண ப்ரேமி கிட்ட அனுப்பி, இந்த குழந்தை உஞ்ச வ்ருத்தி பண்ணலாமான்னு கேட்டேன். அவன், ஏற்கனவே அவர்கிட்ட இருந்தவன் தான். அவரும், அனுப்பலாம், அதுக்கு தர்மம் உண்டுன்னு சொல்லி, மந்த்ரோபதேசம் பண்ணி, ஒரு சொம்புல அரிசி, பணம் போட்டு, மஞ்ச வஸ்த்ரமும் கொடுத்து அனுப்பினார். அந்த குழந்தையும் பிக்ஷைக்கு போச்சு. ஆனா, ஒருத்தரும் ஒண்ணும் போடலை. நான் என்ன பண்றதுன்னு யோசிச்சுண்டு பெரியவாளை பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தேன். அப்போ ஒருத்தர் கார்ல வந்து ஒரு மூட்டை அரிசியை இறக்கி வச்சுட்டு போனார். அன்னிலேர்ந்து பெரியவா பிக்ஷை தானா நடக்கறது. இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா எல்லாத்தையும் நடத்தறது பெரியவாதான்.
இந்த கோவிலை கட்டித் தரவர் கூட முதல்ல கேட்டார், என்ன மாமி, இவ்ளோ பெரிய கார்யம் எப்படி உங்களால முடியும்னு. நீங்க பெரியவாளை நம்பறேளா, அப்டின்னா செய்யுங்கோன்னு சொன்னேன். அப்புறம், அவரே வந்து, மாமி நீங்க ஜெய்ச்சுட்டேள்ன்னு சொன்னார். நானா ஜெயிச்சேன்? பெரியவாதான் ஜெயிச்சா.
இதை போலத்தான் எங்கிட்ட பேசறவா எல்லாம், மாமி கவலை படாதீங்கோ ன்னு ஆறுதலா சொல்லுவா. ஆனா, நான் எங்க கவலைப் படறேன். எல்லாம் அவர் சங்கல்பம். அவர் செய்யறார். எனக்கு என்ன தெரியும்? நான் பூஜ்யம். அவர் பூரணம். ராம் ராம்.

பெரியவா பாத்துப்பா 12 !
அதி மஹா ருத்ரம் முடிஞ்ச கையோட சத சண்டி ஹோமம் வச்சிருந்தேன். பண்ணி வச்சவா நூத்தி எட்டு பேருக்கு தக்ஷிணை கொடுக்கணும். கலெக்க்ஷன், எல்லாரோட நகைகள் அடகு வச்சது போக இன்னும் ஷார்ட்டேஜ் இருந்தது. என்ன இப்படி ஆயிடுத்தேன்னு அம்பாள்ட்ட மனமுருகி பிரார்த்தனை பண்ணிண்டே கூட்டத்துக்கு நடுல உண்டியலை குலுக்கினேன். ஒரு குரூப்பா உக்காந்துண்டு இருந்த பசங்க நான் அவாளை எப்ப தாண்டிப் போனாலும் பணம் போட்டுண்டே இருந்தா. நான் அதை அவாட்ட கேட்டேன். அந்த பசங்க 'நீங்க எத்தனை தடவை வந்தாலும் போடுவோம் மாமி'ன்னு சொன்னா. உண்டியல் பல தடவை ரொம்பி வழிஞ்சுது. கடைசில கணக்கு பாக்கும் போது அம்பத்தி ரெண்டாயிரம் கடன் ஆச்சு. ரெண்டரை லட்சம் ஆகும்னு நெனச்சிருந்தேன். எல்லாம் அம்பாள் கருணை. அப்போ நடந்த ரெண்டு சம்பவம் பத்தி சொல்லணும். சண்டி ஹோம பூர்ணாஹுதி ல பொடவையை போட்டப்போ ஒரு சின்ன துண்டு அதுலேர்ந்து பறந்து போய் ஒரு பொண் மேல விழுந்தது. அவ வாந்தி எடுத்து, மயக்கம் போட்டுட்டா. அவளை உடனே அங்கேருந்து கூட்டிண்டு போய்ட்டா. ஒரு வாரம் கழிச்சு அவகிட்டேருந்து எனக்கு போன் வந்தது. அவ சொன்னா 'மாமி, எனக்கு பேய் பிடிச்சுருந்தது. அது என்னை பாடாய் படுத்தும். ஆனா, அம்பாள் வஸ்த்ரம் என் மேல பட்ட உடனே அது ஓடியே போய்டுத்து, இப்போ நான் நன்னா இருக்கேன். எனக்கு ரெண்டு குழந்தைகள் வேற. ரொம்ப பயந்துண்டு இருந்தேன். எல்லாம் அம்பாள் கருணை'ன்னு. இன்னொருத்தியோட புருஷன் ராஜாங்க ஆபீசுக்கெல்லாம் பெயிண்ட் பண்றவர். அவருக்கு வர வேண்டிய பணம் நெறைய பாக்கி நின்னுது. அவ சீட்டு பிடிச்சுண்டு இருந்தா. அந்த பணத்தை வேறொருத்தி அடிச்சுண்டு போய்ட்டா. கடன். சொத்து தகராறுல வீதிக்கு வர நிலைமை. உயிர் வாழறதுக்கே பிடிக்கலை. அப்போ அவ எங்கிட்ட கேட்டா 'மாமி, நீங்க எங்க அகத்துக்கு வந்து தேவி மகாத்மியம் பாராயணம் பண்ணுவேளான்னு. நானும், சரின்னு சொன்னேன். ஒரு நாள், நானும் மாமாவுமா அவாத்துக்கு போனோம். நாங்க படிக்க, அவளும், அவ புருஷனும் பூஜை பண்ணினா. ஆச்சு, கொஞ்சம், கொஞ்சமா குடும்பம் தலை நிமிர்ந்தது. சில வருஷத்துக்கு முன்னாடி பெங்களுர் போனப்போ அவ கூப்டுருந்தான்னு பாக்க போயிருந்தேன். பசங்கள் எல்லாம் நன்னா தலையெடுத்திட்டா. எல்லாருக்கும் கல்யாணம் ஆகி இருந்தது. மாட்டுப் பொண்களுக்கும் நல்ல உத்தியோகம். பெரிய வீடு. கோடீஸ்வராளா ஆய்ட்டா. என்னல்லாமோ ஒரு தட்டுல வச்சு கொடுத்தா. நான் சொன்னேன், எனக்கு எதுக்கும்மா இதெல்லாம், எல்லாம் அம்பாள் கருணை'ன்னு. இதெல்லாம் எதுக்கு சொல்றேன்?. சண்டி ஹோமத்துக்கும், தேவி மகாத்மியத்துக்கும் ஈடா வேற ஒண்ணும் இல்லை. சாதாரணமான ஸ்லோகமா தெரிஞ்சாலும் ஒவ்வொண்ணும் மூல மந்த்ரம். அபார சக்தி. அதை புரிஞ்சுண்டு பக்தி ஸ்ரத்தையோட படிச்சா அம்பாள் சகல விதத்துலயும் நம்மள காப்பாத்துவா. ராகு, கேது தோஷம் நிவிர்த்தியாகும், தேவதா சித்தி, இஷ்ட சித்தி, கார்ய சித்தி, மந்த்ர சித்தி எல்லாமே சித்திக்கும். அவளோட மந்த்ரங்கள் கெட்ட சக்திகள்ட்டருந்து நம்மளை காக்கும், மோக்ஷத்தை கொடுக்கும். இப்பிடி பட்ட சண்டி ஹோமம்தான் இந்த மாசம் பதினெட்டாம் தேதி நடக்கப்போறது. எல்லாரும் வந்து கலந்துண்டு அம்பாள்ட்ட உங்களோட ஞாயமான கோரிக்கைகளை சொல்லுங்கோ. எல்லாத்தையும் அவ நிறைவேத்தி வைப்பா. அவளோட கோவிலும் பூர்த்தி ஆயிண்டு இருக்கு. பரம எழையா இருக்கறவா ரெண்டு செங்கல் வாங்கிக் கொடுத்தா போறும். அம்பாள் மனசு குளிர்ந்து போய்டுவா. ஒன்னுக்கு பல மடங்கா திருப்பி கொடுப்பா. நீங்க ஒவ்வொருத்தரும் உங்களால முடிஞ்சத பண்ணுங்கோ. அம்பாளோட அனுக்ரஹத்துல பரம க்ஷேமமா இருப்பேள். ராம், ராம். ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

அம்பது கோடி செலவாகுமே!
(திரு கௌரிசங்கர் அனுப்பிய மெயில்)
ஆந்திர அரசின் ஆலோசகராக இருந்த Dr S V நரஸிம்மன் பெரியவாளை தர்சிக்க வந்தார்.
"கல்கத்தால நல்ல சென்டரான எடத்ல, நல்ல விசாலமா ஒரு வீட்டை வாங்கு. மண்டபம் வெச்ச மாதிரி வீடு. அதுல வங்காள புள்ளை கொழந்தேளுக்குன்னு தனியா ஒரு ஸாமவேத பாடசாலை ஒண்ணை ஆரம்பி! ஏதாவது வீடு இருக்கா?"
"அங்க தென் இந்திய பஜனை ஸமாஜ் இப்போ ஒரு வாடகைக் கட்டடத்ல இருக்கு. அது நல்ல சென்டரான எடம்.."
"ரொம்ப நல்லதாப் போச்சு! அந்த கட்டடத்தை வாங்கிடு! பஜனை ஸமாஜ்காரா அவா பாட்டுக்கு அதுல இருக்கட்டும்."
"அதை வாங்கணும்ன்னா நெறைய ஆகும் பெரியவா....எங்கிட்ட அவ்ளவ் பணம் இல்லியே! "
"எவ்ளோவ் ஆகும்?"
"கிட்டத்தட்ட அம்பது கோடி வேண்டியிருக்குமே!.." பெரியவா உத்தரவிட்டதை நிறைவேற்றவும் ஆசையாக இருந்தது. அதே சமயம் பணத்துக்கு என்ன செய்வது? என்ற கவலையும் சேர்ந்தது.
"நீ...இப்போ நேரா மெட்ராஸ் போ! அங்க அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ! அது அம்பது கோடி பெறும்!..." புன்னகைத்தார்.
ஐம்பது கோடிக்கு ஐம்பது ரூபாயா? பெரியவா சொல்லிவிட்டார் என்பதால் உடனே மெட்ராஸ் வந்தார். அண்ணாத்துரை ஐயங்காரிடம் விஷயத்தை சொல்லி அவரிடமிருந்து முதல் பணமாக ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொண்டு, அன்றே கல்கத்தா போய்ச் சேர்ந்தார். பஜனை ஸமாஜ் இருந்த கட்டடத்தின் சொந்தக்காரர் ஆஸுடோஷ் முகர்ஜி, பெரிய்..ய கோடீஸ்வரர். அவரை நேரில் சந்தித்து இது பற்றிப் பேசுவதற்காக அவருடைய பங்களாவுக்குச் சென்றார் நரஸிம்மன்.
இவர் உள்ளே நுழைந்ததும் "வாருங்கள்! வாருங்கள்! உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்!..." என்றார் ஆஸுடோஷ் முகர்ஜி. இவருக்கோ ஒரே ஆச்சர்யம்!
"நேற்று இரவு என்னுடைய கனவில் அன்னை மஹா காளி வந்தாள்! நீங்கள் குடுக்கும் பணம் எதுவானாலும் வாங்கிக்கொண்டு, அந்தக் கட்டடத்தை குடுத்து விடும்படி எனக்கு உத்தரவிட்டாள். அன்னையோட உத்தரவை நிறைவேற்ற, உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று பெங்காலியில் மிகுந்த நெகிழ்வோடு கூறினார். திரு.நரஸிம்மன் மானசீகமாக பெரியவாளின் திருவடிகளை நமஸ்கரித்தார். என்ன லீலை இது? "நீ...இப்போ நேரா மெட்ராஸ் போ! அங்க அண்ணாத்துரை ஐயங்கார்கிட்டேர்ந்து அம்பது ரூவா வாங்கிக்கோ! அது அம்பது கோடி பெறும்!..." ....என்று கூறிவிட்டு, ஆஸுடோஷ் கனவில் மஹாகாளியாக வந்து உத்தரவையும் போட்டு, இதோ.....ஐம்பது ரூபாயில் ஐம்பது கோடி அந்தர்த்தானமானது! பகவான் அலகிலா விளையாட்டுடையான் என்று மஹான்கள் கொண்டாடுவார்கள். தனியாக "செஸ்" விளையாடுவது போல், பகவான் நம்மையெல்லாம் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். கீதையில் "உனக்குண்டான கர்மத்தை செய். பலனை எங்கிட்ட விட்டுடு" என்று சொன்னதை பெரியவா ப்ரூவ் பண்ணிக் காட்டினார்.
உடனேயே மளமளவென்று காரியங்கள் நடந்தன. மூன்றே மாசத்தில் பஜனை சமாஜ் புதுப்பிக்கப்பட்டு, "வேத பவன்" என்ற பெயரில் பெரியவா சொன்னமாதிரி ஸாம வேத பாடசாலையும் தொடங்கப்பட்டு, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.

அடக்க முடியுமோ காணும் ஆவலை?
அளக்கமுடியுமா உன் கருணையை?
மறக்கமுடியுமா உன் லீலைகளை?
தவிர்க்க முடியுமா நீ விரும்புவதை?
நான் சரண சரண மென்று
பல்லவி பாடலுற்றேன்....
வேங்கடவன் என்னை காக்கும்
தருணம் இதுவே!
காரணம் யாதென்று நீயே அறிவாய்!
கருணா சாகரனே! சச்சிதானந்தா!
மதி வதனா! பாஸ்கரா!
பாண்டு ரங்க விட்டலா
பரம தயாளா!
சரணம்! சரணம்! சரணம்!
venkat k
Image a collage created by me..
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: New series on Maha Periva
Pleasee Contribute..Contribution in the form of draft and cheque drawn in favour of Sri Jagadguru Kanchimamunivar Charitable Trust may be sent to the Trust premises at 4/305, Snathi Ashram, Ayyan Vaikkal South Bank, Kollidam North Bank, Madhavaperumal Koil (Nochiam), Tiruchi – 621216. Raw materials for construction also accepted. For details call 9443370605, 9600933390, 9840410346 and 9841077045.
Payments may be made through NEFT to the following accounts: Lakshmi Vilas Bank, No 1, Toll Gate, No. 0784301000016904, IFS Code: LAVB 0000784, Indian Bank, No. 1, T.V. Kovil, No. 886244176, IFS Code: IDIB 0000110, City Union Bank – SB115001001829205, IFS Code: CIUB 0000115. PAN: AAKTS 9298 J.
http://mahaperiyavaa.wordpress.com/2013 ... m-project/
Payments may be made through NEFT to the following accounts: Lakshmi Vilas Bank, No 1, Toll Gate, No. 0784301000016904, IFS Code: LAVB 0000784, Indian Bank, No. 1, T.V. Kovil, No. 886244176, IFS Code: IDIB 0000110, City Union Bank – SB115001001829205, IFS Code: CIUB 0000115. PAN: AAKTS 9298 J.
http://mahaperiyavaa.wordpress.com/2013 ... m-project/
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: New series on Maha Periva
பெரியவா பாத்துப்பா 13 !
காருண்யா மூர்த்தியான பெரியவாளைப் பத்தி சில விஷயங்களை சொல்றேன் கேளுங்கோ. ஒரு தடவை அவர் மாட்டுக் கொட்டகைல இருந்த மரத்து மேல சாஞ்சுண்டு மணிக்கணக்கா ஒக்காந்துண்டு இருந்தார். தியானம். தபஸ். எழுந்து அவரோட குடிலுக்கு வந்த உடனே யாரையோ கூப்பிட்டு பக்தர் ஒருத்தர் கொடுத்த மயில் தோகை விசிறியை எடுத்துண்டு வரச்சொல்லி தன்னோட முதுகை மெதுவா வருடி விடச் சொன்னார். எதுக்கு தெரியுமா? அவரோட முதுகு பூரா ஒரே கரையான். அது அவருக்கு உபத்ரவம் பண்ணி இருந்தாலும், அதை தான் ஹிம்சிக்கக் கூடாது அப்படீங்கற கருணை. இது இன்னொரு சம்பவம். ஒரு நாள் திடீர்னு பெரியவாளுக்கு வாய் முழுக்க ஒரே புண்ணு. நாக்கு செக்கச் செவேல்னு இருக்கு. பக்தாளுக்கெல்லாம் திக்குனு இருந்தது. யாரோ ஒருத்தர் துணிஞ்சு கேட்டுட்டார் 'பெரியவா, என்ன ஆச்சு?'. 'ஒன்னும் இல்லை, உக்ராணத்துல அம்பாளுக்கு நெய்வேத்யம் தயார் பண்ணிண்டு இருந்தா, கம கம ன்னு வாசனை வந்துது. உடனே நாக்குல ஜலம் ஊறிடுத்து. அது எவ்வளவு பெரிய அபச்சாரம். அதான் இலுப்ப கரண்டியை சூடு பண்ணி இழுத்துண்டுட்டேன்'ன்னு சொன்னார். வேதம், சாஸ்திரம், தர்மம் இதையெல்லாம் அவர் உபதேசம் மட்டும் பண்ணலை. அதன்படி வாழ்ந்தே காட்டினார். ஈடு இணை இல்லா தெய்வம் அவர். இன்னும் அவரைப்பத்தி சொல்றதுக்கு நெறைய இருக்கு. சொல்லப்போனா அதுக்கு ஒரு முடிவே இல்லை. ராம் ராம். ஸ்ரீ மஹா பெரியவாள் திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர. பி.கு : மாமி கட்டிக் கொண்டிருக்கும் அம்பாள் கோவிலில் ஸ்தபதி மற்றும் கட்டிட வேலைகள் மிக துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. தை மாதம் லலிதைக்கு பட்டாபிஷேகம் நடத்த உத்தேசித்துள்ளார். பெரியவாளின் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கு இம்மகத்தான தொண்டில் இணைந்து அம்பாளின் அனுக்ரஹத்தை பெற வேண்டும் என்பது மாமியின் ஆசை. முப்பது வருடங்களுக்கு முன் ப்ரெண்டிடம் தன் சொன்னது போல், இன்று உலகம் முழுக்க பரவி இருக்கும் பெரியவா பக்தர்களிடம் போனிலும், நேரிலும் பேசுவதிலும் மாமிக்கு அளவு கடந்த சந்தோஷம்.

பெரியவா பாத்துப்பா 14 !
எங்கேயோ வெளி ஊர்ல கேம்ப். ஒரு நாள் திடீர்னு பெரியவா எங்க போனான்னு தெரியல. எல்லாரும் தேடினா. பாத்தா நெருஞ்சி முள் மேல படுத்து பொரண்டுண்டு இருந்தார். முதுகு பூரா ரத்தம். கேட்டா, இன்னைக்கு வேதத்துக்கு அடி விழுந்துடுத்து, அதுக்கு எனக்கு நானே தண்டனை கொடுத்து பிராயச்சித்தம் பண்ணிக்கறேன்னு சொன்னார். விஷயம் இதுதான். ஒரு பாடசாலை குழந்தை பசிக்கறது, சாதம் போடுங்கோன்னு அங்க இருக்கற பாட்டிகிட்ட கேட்டுருக்கு. அவ கைல இருந்த துடைப்ப கட்டயால அடிச்சிருக்கா. அதை, அங்க எதேச்சியா வந்த பெரியவா பாத்துட்டா. அதான். அப்புறம் எல்லாருமா மன்னிப்பு கேட்டு நமஸ்காரம் பண்ணி கூட்டிண்டு வந்தா.
இதுமாதிரி பல தடவை நடந்திருக்கு. எப்பவும் தன்னை தானே தண்டிச்சுப்பாளே தவிர வேற யாரையும் கோச்சுக்க மாட்டா. இன்னொரு சமயம் வயக்காட்டுக்குள்ள போய் உக்காந்துட்டா. கொட்டாங் கச்சில ஒரு கண்ணுல ஓட்ட போட்டு அதுல ஒரு கயத்தை கட்டி அங்க இருந்த ஒரு பாழுங் கெணத்துலேர்ந்து தண்ணிய மட்டும் எடுத்து குடிச்சுண்டு இருந்துட்டா. என்னவோ அபசாரம் நடந்துடுத்து. கேட்டாலும் ஒன்னும் சொல்லல. அப்பவும் மன்னிப்பு கேட்டு, நமஸ்காரம் பண்ணி அழைச்சுண்டு வந்தா.
எனக்கே அப்படி ஒரு அனுபவம் இருக்கு. நான் எப்பவும் ஸ்வீட், முறுக்கு எல்லாம் தயார் பண்ணி எடுத்துண்டு போவேன். பெரியவா, இது கையாலா சுத்தினதா, நாழியால பிழிஞ்சதான்னு அவட்ட கேளுன்னு சொன்னார். நான், கையால சுத்தினதுதான்னு சொன்னேன். அப்புறம், அங்க இருந்த பழங்களையும் எங்கிட்ட கொடுத்து, பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுன்னு சொன்னார். மாமாவும் நானுமா போனோம். குழந்தைகளுக்கு தீர்த்தம் போடறதுக்காக நின்னுண்டு இருந்தேன். அப்போ, அங்க ஒருத்தர் ஒரு குழந்தை ஊருக்கு போயிட்டு லேட்டா வந்துதுன்னு ரொம்ப திட்டினார். அது குனிச்சுண்டு அழுதுது. கண்ணுலேர்ந்து ஜலம் சாதத்து மேல விழுந்தது. எனக்கு அப்படியே மனசை பிழிஞ்சுது.
ஒரு நாள் பெரியவாட்ட யாரோ இந்த குழந்தைகளை பத்தி புகார் சொன்னா. பெரியவா கொஞ்ச நேரம் பேசாம இருந்தா. அப்புறம் 'வசதியான வீட்டுக் குழந்தைகள் எல்லாம் வேற படிப்புக்கு அனுப்பிச்சுடறா. எனக்கு கெடைக்கறது எல்லாமே ஏழையும், வித்யாசமான தெறமை உள்ள குழந்தைகள் தான். நீங்க அவாட்ட கருணையோட நடந்துக்கணம். அப்படி இல்லாம குறை சொன்னேள்னா வேதத்தை காப்பத்தறதுக்கு நான் என்ன பண்ணுவேன்'னு. ஒருத்தரும் ஒன்னும் பதில் சொல்லலை. ராம் ராம்.

ஆங்கிலேயத் தம்பதிக்குக் கிடைத்த ஆனந்த அனுபவம்
=========================================================
ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த எழுத்தாளர் மணியன். பிற்காலத்தில் தனக்குச் சொந்தமாக - இதயம் பேசுகிறது என்கிற பத்திரிகையை ஆரம்பித்தார்.
அந்தப் பத்திரிகையில் அவர் வெளிநாட்டுக்குச் சென்று இருந்தபோது நடந்த ஓர் அற்புதமான விஷயத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார். எந்த நாட்டிற்குப் போனாலும் அவர் தங்கும் அறையில் இருக்கும் மேஜை மீது காஞ்சி மகானின் படத்தை வைத்து, தினமும் வணங்குவது வழக்கம். அவர் அப்போது தங்கி இருந்தது ஓர் ஆங்கிலேயரின் வீடு.
வீட்டின் சொந்தக்காரர், மணியனிடம் “படத்தில் இருப்பவர் யார்?” என்று கேட்டு இருக்கிறார். “அவர் நான் வணங்கும் தெய்வம்” என்று பதில் சொன்னார் மணியன்.
“சக்தி வாய்ந்த தெய்வமா அவர்? நாம் நினைத்தது நடக்குமா? என்று ஆங்கிலேயர் ஒரு வினா எழுப்ப அதற்கும் மணியன் பதில் சொன்னார்.
“நாம் உண்மையாக வேண்டிக் கொண்டால், நிச்சயம் நாம் நினைத்தது நடக்கும். அந்த கருணைக்கடல் அதை நிறைவேற்றி வைப்பார்.
மணியன் சொன்ன தோரணை,அவர் குரலில் ஒலித்த பக்தி, ஆங்கிலேயரை நம்பச் செய்தது.
“என் மகன் எங்கோ போய்விட்டான்…அவனைப் பிரிந்து என் மனைவி ஓயாமல் அழுது கொண்டு இருக்கிறாள். அதனால்தான் ஒரு நம்பிக்கையோடு உங்களிடம் கேட்டேன் என்றார் அந்த ஆங்கிலேயர்.
“எங்கள் குருவான காஞ்சி மகானை நீங்கள் மனமுருகி பிரார்த்தியுங்கள். உங்களுக்கு அவரது அருள் நிச்சயம் கிட்டும்.
மணியன் வாக்கை அப்படியே ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயர், காஞ்சி தெய்வத்தின் படத்தின் முன் நின்று மனமுருகி வேண்டி தனக்கு அருள் புரியும்படி வேண்டிக் கொண்டார்.
சில மணி நேரம் கடந்ததும், அவரது வீட்டு போன் ஒலித்தது. ஆங்கிலேயர் போய் போனை எடுத்தார். போனில் வந்த செய்தி அவருக்கு அளவு கடந்த வியப்பை அளித்தது.
காணாமற்போன அவரது மகன்தான் பேசினான், தான் எங்கேயோ போயிருந்ததாகவும், இப்போது ஊருக்கு வந்துவிட்டதாகவும், உடனே வீட்டுக்கு வருவதாகவும் தகவல் சொன்னான்.
ஆங்கிலேயருக்கு மெய் சிலிர்த்தது. காஞ்சி மகானை வணங்கியபடியே,மணியனுக்கு நன்றி சொன்னார்.
“எங்கள் தெய்வம்…இவர்தான்….இந்த உருவில்தான் தெய்வத்தைப் பார்ப்போம்” என்று கடல் கடந்து எங்கேயோ இருந்த ஆங்கிலேய தம்பதிகள் ஆனந்த அனுபவத்தில் உருகி நின்றார்கள்.
Jaya Jaya Sankara!!! Hara Hara Sankara !!!

பெரியவா பாத்துப்பா 15 !
'எதுக்கு மாமி இப்படி இழுத்து விட்டுக்கறேள்?' இதுதான் எல்லாரும் எங்கிட்ட கேக்கற கேள்வி. அவாளுக்கு, நான் என்னோட வயசுக்காரா மாதிரி ரெஸ்ட் எடுத்துண்டு இருக்கலையேன்னு கரிசனம். அதனால கேக்கறா. ஆனா, நான் எப்பவும் சுறுசுறுப்பா இருக்கத்தான் ஆசைப்படறேன். ரொம்ப ஆனந்தமாத்தான் இருக்கேன். இந்த்ரிய இச்சைகள் இருந்தாத்தான் கஷ்டமெல்லாம். எனக்கு அப்படி ஒன்னுமே இல்லை. ஒரு பிரயோஜனமும் இல்லாத கதை புஸ்தகம் படிக்கணும், சினிமா, சீரியல் பாக்கணும், வகை வகையா சாப்படணும், விலை உசந்த புடவை கட்டிக்கணும், நகை போட்டுக்கணும் இப்படி எந்த ஆசையும் இல்லை. சிலர் அவாளோட நான் நெறைய பேசணும்னு எதிர் பாக்கறா. பகவானை பத்தி பேசினா சரி. ஒன்னுத்துக்கும்உபயோகமில்லாத பேச்சுன்னா எதுக்கு அது? நான் எல்லா நேரமும் பகவான் ஸ்மரணைல லயிச்சு இருக்கத்தான் விருப்பப் படறேன். படிச்சா ராமாயணம், அம்பாள் திரிசதி இப்படி. இப்போன்னு இல்லை, எப்பவுமே இப்படித்தான். சதிகாரி என்று தெரியாமல் உனை நான் நம்பினேனே அப்படீன்னு அம்பாளை பழிக்கற மாதிரி வர்ணிக்கற வரி கூட என்னால படிக்க முடியாது. என்னை நீ நன்னா தானே வச்சிருக்கே, நான் ஏன் உன்னை நிந்தா ஸ்துதி பண்ணனும்னு நினைப்பேன். அதை என் மாமியார் கிட்ட 'அம்மா, என்னால சொல்ல முடியலை'ன்னு சொல்லி அழுவேன். அந்த வரியை விட்டுடேன்னு மாமியார் சொல்லுவா. சிருங்கேரில கீழே விழுந்து கால்ல அடிபட்டு கட்டு போட்டு மயக்கத்துல இருந்தப்போ அந்த சர்வேஸ்வரி காட்சி கொடுத்ததை பத்தி ஏற்கனவே சொல்லி இருக்கேன். அது மாதிரி ஒரு சம்பவம் ஸ்ரீநிவாசன் ங்ரவருக்கும் நடந்தது. அதை பத்தி சொல்றதுக்கு முன்னாடி நம்மோட சனாதன தர்மத்துலையும், புராணங்களிலையும் படிச்ச வேற சில விஷயங்களை பத்தி சொல்லணும் - விதியை யாராலயும் மாத்த முடியாது. ஆனா, பகவான் கிட்ட பரிபூரணமா சரணடைஞ்சுட்டா அவன் நாம கர்ம பலனை அனுபவிக்கும் போது கூட நம்மை காத்து ரட்ஷிப்பான். திரௌபதி ரெண்டு கையையும் விரிச்சு 'ஹே, கிருஷ்ணா'ன்னு கதறினப்போ அவன் ஓடோடி வந்து அவளோட மானம் பறிபோகாம காப்பாத்தினான். அதே மாதிரி, கஜேந்திரன் 'ஹே,ஆதிமூலமே' அப்டின்னு பிளரினப்பவும் கருடன் மேல பறந்து வந்து அந்த யானைக்கும் ப்ரத்யக்ஷமாகி மோட்ஷத்தை கொடுத்தான். அதுமாதிரி தான் நாமும் நம்மளால முடியாதுன்னு வரும் போது அவன் கிட்ட போறோம். அவனும் நம்மை காத்து ரக்ஷிக்கறான். ஆனா, உடனே அவனை மறந்துட்டு கேளிக்கைகள்ல ஈடுபடறோம். சம்சார சாகரத்துல மூழ்கிடறோம். அதுலேர்ந்து வெளில வரணும்கற எண்ணமே வரது இல்லை. நமக்கு வேணும்போது மட்டும் அவனை நினைக்கிறோம். ஏதோ ஒரு அஜாமிளனுக்கு ஒரே ஒரு தடவை தன் பிள்ளையை 'நாராயணா'ன்னு கூப்டதுக்காக நற்கதி கெடச்சுது அப்டிங்கறதுனால நாமளும் வயசாகும் போது பகவானை ஸ்மரிக்கலாம், இப்போதைக்கு நம் புலன்கள் மூலமா லௌகீக சுகங்களை அனுபவிக்கலாம்னு இருந்துடக்கூடாது. உடம்பும் மனசும் தளர்ந்துபோறப்போ அவன் நம் ஞாபகத்துக்கு வருவானா அப்டிங்கறதே சந்தேகம் தான். அதனாலதான், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் நாராயணா எனும் நாமம்னும், இப்பவே சங்கரா, சங்கரா ன்னு சொல்லிடறேன்னும் ஆழ்வார்களும்,அடியார்களும் சொல்லி வச்சுட்டு போயிருக்கா. கிருஷ்ணனோட குழலிசை கேட்ட உடனே கோபிகாள் எல்லாரும் அவா செஞ்சுண்டு இருந்த வேலையை அப்படியே போட்டுட்டு, தன் பதி, குழந்தைகளை மறந்து ஓடினா. ஏன்னா, அவாளோட மனசுல எப்பவுமே அவன்தான் இருந்தான். அவளோட ஒவ்வொரு துடிப்பும் கிருஷ்ணா, கிருஷ்ணான்னு தான் இருந்தது. அப்படி ஒரு ப்ரேமை நமக்கும் இருக்கணும். பகவானுக்கு தொண்டு செய்யும் போது ஆயிரம் தடைகள், அபவாதங்கள் வரும். அந்த மாதிரி நேரத்துல நெறைய பேர் 'நமக்கென்ன போச்சு'ன்னு விட்டுடுவா. அப்படி விட்டுட்டா நாம செய்ய நெனச்ச ஒரு தர்ம காரியமும் நின்னு போய்டும். ஆனா, அதுக்கெல்லாம் அசராம வேங்கடாசலபதிக்கு கோவில் கட்டி அதுல விசேஷமா ஆஞ்சநேயரையும் பிரதிஷ்டை பண்ணினவர்தான் ஸ்ரீநிவாசன். அவரோட வாழ்க்கைல என்ன நடந்ததுன்னு இப்போ சொல்றேன். என்னோட ப்ரெண்ட் சுகந்தா வோட அகத்துக்காரர் தான் ஸ்ரீநிவாசன். ஒரு தடவை அவா திருப்பதில நடந்த கல்யாணத்துக்கு போயிருந்தா. அப்போ அவர் யாரையோ அழைச்சுண்டு வரதுக்காக பஸ் ஸ்டான்ட்டுக்கு போயிண்டு இருக்கறச்சே பின்னாடிலேர்ந்து ஒரு பஸ் மோதி அவரோட ரெண்டு கால் மேலேயும் எறிடுத்து. உடனே அவர் போன் நம்பர் கொடுத்து தன்னோட சொந்தக்காராளுக்கு தகவல் கொடுக்க ஏற்பாடு பண்ணினார். தனியா விழுந்த ரெண்டு காலையும் எடுத்து பத்ரப்படுத்தி வைக்கச் சொன்னார். அப்புறம் மயக்கமாயிட்டார். அவா அவரை அப்பல்லோ ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணினா. சர்ஜரி நடந்தது. துண்டா போன ரெண்டு காலையும் சேர்த்து வச்சா. ஆறு மாசம் படுக்கைல இருந்தார். நாங்க அவர பாக்கப் போன சமயம் வாக்கிங் ஸ்டிக் வச்சு நடக்க ஆரம்பிச்சிருந்தார். அந்த அக்சிடென்ட் எப்படி நடந்ததுன்னு விவரிச்சுண்டு வரும்போது 'பஸ் கால் மேல ஏறப்போறதுன்னு தெரிஞ்சுது. நாராயணா ன்னு கத்தினேன். ரெண்டு பக்க சக்ரங்களுக்கு நடுல ஸ்ரீதேவி, பூதேவி சமேதரா நாராயணன் காட்சி கொடுத்தார். அதுக்கப்றம் எனக்கு நெனவு தப்பிடுத்து' அப்டின்னு சொன்னார். அவர் கட்டின கோவில பெங்களுர் ஆர்த்தி நகர்ல (ஆனந்த் நகர் அருகில்) பாக்கலாம். ஸ்ரீநிவாசனும், சுகந்தாவும் பரம க்ஷேமத்தோட இருக்கணும்னு பெரியவாட்ட ப்ரார்த்திச்சுக்கறேன். ராம், ராம். ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

‘மகா பெரியவாளிடம் சில வருடங்கள் பாடம் கற்றுக்கொண்டது என் பாக்கியம். அவருடைய ஞானம் ஆழமானது. அவரிடம் படித்த நாட்கள் எனக்கு இன்னமும் நன்றாக நினைவு இருக்கிறது. ‘நீதி-சதகம்’ எல்லாம் அவர் நேரிடையாக எங்களுக்குச் சொல்லித் தந்ததுதான்.
அவர்-ஈஸ்வர-அவதாரம். நாங்கள் பரம்பரையாக காமாட்சி அம்மன் கோயிலில் பூஜை செய்து வருகிறோம். பெரியவா என்னைப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளச் சொன்னது, எனக்குக் கிடைத்த பெரும்பேறு!” என்று பழைய நினைவுகளில் மூழ்கிய நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், தொடர்ந்து பேசினார்…
‘பெரியவாளுக்குக் கர்னாடக சங்கீதத்தில் மிகுந்த விருப்பம் உண்டு. நல்ல சங்கீதத்தைக் கேட்டால், நேரம் போவது தெரியாமல் ரசித்துக் கேட்பார்’ என்றவர், அந்த நாட்களில் பெரியவாளை வந்து சந்தித்த பிரபல சங்கீத வித்வான்கள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
‘தன்னைச் சந்திக்க வருகிற வித்வான்களிடம் அவர்களுக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் எடுத்துச் சொல்வார் பெரியவா. சில பாடல்களுக்கு அவர் தரும் விளக்கத்தை வித்வான்களே வியந்து கேட்பார்கள்.
திருவையாற்றில் பகுள பஞ்சமி அன்றைக்குத் தியாகராஜரின் சமாதியில் எல்லா வித்வான்களும் கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடுவார்கள் அல்லவா? அதேபோன்று, காஞ்சிபுரத்திலும் தமிழ் வருடப்பிறப்பு அன்று விடியற்காலையில் ஆரம்பித்து பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாடச்சொல்லிக் கேட்க வேண்டும் என்று பெரியவாளுக்கு ஆசை. அதற்குக் காரணம் இருந்தது. பெரியவா ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தபோது, கோடம்பாக்கத்தில் தத்தாஜி என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போதுதான் திருவையாற்றில் தியாகராஜ ஆராதனை உத்ஸவம் நடந்து கொண்டிருந்தது. அதை ரேடியோவிலும் ஒலிபரப்பினர். காஞ்சிபுரத்திலும் அதுபோன்று நடத்தவேண்டும் என்கிற ஆசை அப்போதுதான் பெரியவாளுக்கு உண்டாயிற்று.
செம்மங்குடி சீனிவாச அய்யர் பெரியவாளை தரிசனம் பண்ண அடிக்கடி மடத்துக்கு வருவார். அவரிடம் தன் ஆசையைச் சொன்னார் மகா பெரியவா. பிறகென்ன… செம்மங்குடிக்கு ரொம்ப சந்தோஷம். அவர் உடனே அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் விசுவநாத அய்யர் போன்றோரிடம் சொல்லி, அதற்கு ஏற்பாடு செய்து, காஞ்சிபுரத்தில் பிரமாதமாக நடத்தினார். அதை ரேடியோவில் ஒலி பரப்பவும் ஏற்பாடு செய்தார்.
எல்லோரும் பஞ்சரத்ன கிருதிகள் பாடி முடித்ததும், பக்கத்தில் இருந்த மகாராஜபுரம் விசுவநாதய்யரிடம், ‘ஆரத்தியின்போது நீங்கள் பாடணும்’ என்று கேட்டுக் கொண்டார் பெரியவா. விசுவநாதய்யருக்குச் சந்தோஷம் தாளலை! அதுவும், பெரியவா முன்னால் பாடறதுங்கறது எவ்வளவு பெரிய விஷயம்! பக்திப் பரவசத்துடன், ‘நிபஜனகான’ பாட்டை அருமையா பாடினார். பெரியவா, கண்கள் மூடி பாடலைக் கேட்டு ரசித்தார்.
‘உன் பஜனையாகிற சங்கீதத்தில் ஈடுபடுகிறவர்களை இந்த உலகில் நான் எங்கே பார்ப்பேன்? லட்சுமி, சிவன், பிரம்மன், சசிதேவியின் பதியாகிய இந்திரன் முதலானவர்களால் வணங்கப் படுகிறவனே! சகுண- நிர்க்குண உபாசனைகளின் உண்மை, பொய்களையும்… சைவம், சாக்தம் முதலான ஆறு சமயங்களின் ரகசியங்களையும், அணிமா முதலான அஷ்டஸித்திகளின் பகட்டையும் நீ விளக்க… நான் மகிழ்ச்சியுடன் அறிந்து கொண்டேன். நல்ல முகம் உடையவனே… உமது பஜனை என்னும் கானத்தில் லயித்து ரசிப்பவர்களை நான் எங்கே காண்பேன்?’ என்பது அந்தப் பாடலுக்கு அர்த்தம். மகா பெரியவாளுக்கும் ரொம்ப சந்தோஷம்!
http://balhanuman.wordpress.com/2013/02/16/

- Posts: 884
- Joined: 27 Dec 2006, 10:52
Re: Kanchi Maha Periyava
நீ மிருதங்கம் வாசிக்காமல் இருந்தால் தான் மகா பாவம். உனக்கு ஒரு பாவமும் வராது.
பாலக்காடு மணி ஐயர் வாழ்வில் நடந்த சம்பவம்
கர்நாடக இசை மேதை பாலக்காடு மணி ஐயர் வாழ்வில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது.
பாலக்காட்டில் தனது வீட்டில் அமர்ந்து மிருதங்கங்களை வாசித்துப் பார்த்தார் மணி ஐயர். அவற்றில் சிலவற்றுக்குத் தோல் மாற்ற வேண்டியிருந்தது. எனவே கடைவீதிக்குச் சென்றார்.
கடைக்காரர் அவரிடம் “தற்சமயம் தோல் ஸ்டாக்கில் இல்லை. அடிமாடுகள் வந்துள்ளன. தோலை உரித்துப் பதப்படுத்தி ஒரு வாரத்தில் தருகிறேன்” என்றார்.
மிருதங்க இசைக்குத் தோல் தேவைதான். இருந்தாலும் இந்த முறை மணி ஐயரின் மனம் ஏனோ வேதனைப்பட்டது. ”ஒரு ஜீவனை ஹிம்சைப் படுத்தி இந்தத் தொழிலைத் தொடரத்தான் வேண்டுமா?” என்கிற சஞ்சலமான மனதுடன் வீடு திரும்பினார்.
அன்று இரவு அவருக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. உண்ணாமலே படுத்து விட்டார். மூன்று மாத காலத்திற்கு கச்சேரிகளை அவர் ஒப்புக் கொண்டிருந்தார். எனவே அவற்றை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு மேற்கொண்டு புதுக் கச்சேரிகளை ஒப்புக் கொள்ளாமல் தவிர்ப்பது என்று தீர்மானித்தார்.
ஓரிரு நாட்களுக்குப் பின் கச்சேரி ஒன்றுக்காக சென்னை வந்த மணி ஐயர் மஹாபெரியவரைத் தரிசிக்கக் காஞ்சி ஸ்ரீமடத்திற்குச் சென்றார். அப்போது மஹாபெரியவர் அங்கு இல்லை. காஞ்சியில் இருந்து 50 கி.மீ.தொலைவில் ஒரு கிராமத்தில் முகாமிட்டிருப்பதாக சொன்னார்கள். ”மஹா பெரியவாளை எப்படியும் பார்த்து விடுவது” என்று தீர்மானித்த மணி ஐயர், அந்தக் கிராமத்தை அடைந்த போது மாலை மணி ஐந்து.
சந்திப்பும் நிகழ்ந்தது.
மஹா பெரியவர், “மணி, நீ இன்று இரவு தங்கு…. நாளை காலை போகலாம். உன் தனி ஆவர்த்தனம் கேட்டு ரொம்ப நாளாச்சு!” என்று கூறிப் பூஜைக்குச் சென்றார்.
பூஜை முடிந்து எல்லோருக்கும் ப்ரசாதம் வழங்கினார்கள். இரவு எட்டு மணிக்கு மடத்து சிஷ்யர் ஒருவர் மணி ஐயரிடம் வந்து, “ பெரியவா வந்து பார்க்கச் சொன்னார்!” என்றார்.
மணி ஐயர் மஹா பெரியவருடைய குடிசைக்குச் சென்றார். ஒரு ஹரிக்கேன் விளக்கு மட்டும் இருந்தது. சிஷ்யர் அதைத் தூண்டி விட்டார். மஹா பெரியவா, ”என்ன மணி, உடம்பு அசௌகரியமோ? ஏன் வாட்டமா இருக்கே? கவலையா?” என்று அன்புடன் வினவினார்.
மணி ஐயர் கண்கள் கலங்க தன் வேதனையை விவரித்தார். அந்தப் பேச்சின் முடிவாக, ”இதுவரை நடந்தது போதும் பெரியவா. இனி ஜீவஹிம்சை செய்து அதன் மூலம் கச்சேரி செய்யப் போவதில்லை. அதனால் வரும் வருமானம் ஒரு சல்லிக்காசு கூட எனக்கு வேண்டாம்” என்றார் குரலில் உறுதியாக.
மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்த மஹா பெரியவா, ”மணி, நீ சிவன் கோவில்ல நந்திகேஸ்வரரை தரிசனம் செஞ்சிருக்கியோ?” என்று கேட்டார்.
மணி ஐயர் “ஆமாம்” என்று தலையசைத்தார்.
”அவரது வேலை மத்தளம் (மிருதங்கம்) வாசிப்பது. நீயோ கலியுக நந்தி. இனிமேல் நீ மிருதங்கம் வாசிக்காமல் இருந்தால் தான் மகா பாவம். உனக்கு ஒரு பாவமும் வராது. மனசைப் போட்டு அலட்டிக் கொள்ளாதே. போய் வேலையைப் பார். இன்னிக்கு ரொம்ப நாழி ஆயிடுத்து. படுத்துத் தூங்கு. நாளைக்குப் பிரசாதம் வாங்கிண்டு கிளம்பு. உன்னுடைய தனி ஆவர்த்தனத்தைக் கேக்கணும்னு ஆசையா இருக்கு. நாளைக்கு ஒரு அரை மணி நேரம் வாசிச்சுட்டுக் கிளம்பலாம்!” என்று கூறி அனுப்பினார்.
மறு நாள் பூஜைக்குப் பிறகு கச்சேரி செய்து விட்டு மஹா பெரியவரிடம் பிரசாதமும் பெற்றுக் கொண்டு மனநிறைவுடன் வீடு திரும்பினார் மணி ஐயர்.
இந்த அரிய தகவலைக் கூறியவர் மணி ஐயரின் மருமகன் பதஞ்சலி!

fine episode...grsastrigal ....
அமரத்துவம் தந்த ஆதிசங்கரர் - மகாபெரியவா சொன்ன கதைகள்!...
அகராதி, நிகண்டு என்றெல்லாம் சொல்லுகிறார்களல்லவா? ஸம்ஸ்கிருதத்தில் இருக்கிற பிரசித்தமான அகராதிக்கு 'அமரகோசம்’ என்று பெயர். 'அமரம்’ என்று சுருக்கிச் சொல்வார்கள். அதைப் பற்றியும், அதை எழுதினவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். இதில் பல ரசமான விஷயங்கள் இருப்பதால்தான் சொல்கிறேன். இதில் நம் பகவத்பாதாளின் பெருமை, மதங்களில் ஒன்றுக் கொன்று இருக்கப்பட்ட உறவுகளின் போக்கு எல்லாம் வெளியாவதால் சொல்கிறேன்.
இந்த அகராதிக்குப் பேர் 'அமரகோசம்’ என்றேன். 'கோசம்’ என்றால், 'பொக்கிஷம்’ என்று அர்த்தம். சப்தக் கூட்டங்கள், சொற்களின் சமூகம் பொக்கிஷமாக இருக்கிற புஸ்தகத்துக்குக் 'கோசம்’ என்று பெயர் வந்தது. இம்மாதிரி ஸம்ஸ்கிருதத்தில் பல கோசங்கள் (அகராதிகள்) இருந்தாலும், ரொம்பவும் பிரசித்தமானது 'அமரகோசம்’தான்.
அமரசிம்மன் என்பவனால் செய்யப்பட்டதால், அதற்கு 'அமர கோசம்’ என்று பெயர்.
அமரசிம்மன் மகா புத்திமான். இந்த நிகண்டுவைப் பார்த்தால், அறிவில் அவனுக்கு ஈடு உண்டா என்று பிர மிப்பு உண்டாகும். ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அர்த்தம் சொல்கிறான். அமரசிம்மன் ஹிந்து அல்ல; ஜைனன்.
இந்த அமரசிம்மன் ஒருமுறை ஆசார்யாளிடம் வாதப்போருக்கு வந்தபோது, ''நான் ஒரு திரைக்குப் பின்னாலிருந்துதான் உம் கேள்விகளுக்குப் பதில் சொல் வேன்'' என்றான்.
ஆசார்யாளும் இதில் உள்ள ரகசியத்தை ஆராய்ச்சி செய்து பார்க்காமல் ஒப்புக் கொண்டார்.
ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களுக்கும் அமரசிம்மனுக்கும் வாதப் போர் ஆரம்பித்தது.
அமரசிம்மன் ஒரு திரையைக் கட்டிக்கொண்டு, அதற்கு உள்ளேயிருக்கிறான். ஆசார்யாள் வெளியே இருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார். அத்தனைக்கும் அமரசிம்மன் பளிச் பளிச்சென்று பதில் சொன்னான்.
அவன் என்னதான் மகா புத்திமானாக இருந்தாலும்கூட, இத்தனை சாமர்த்தியமாக எப்படிப் பிரதிவசனம் கொடுக்கிறான் என்று ஆசார்யாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. க்ஷண காலம் யோசித்தார். உடனே பரமேசுவர அவதாரமும், ஸர்வக்ஞருமான அவருக்கு ரகசியம் புரிந்துவிட்டது.
அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொன்னது அமர சிம்மனே இல்லை! ஸாக்ஷ£த் சரஸ்வதிதேவியே அவன் மாதிரி பேசியிருக்கிறாள் என்று தெரிந்தது. இவன் அவளை ரொம்ப நாளாக உபாஸித்திருக்கிறான். நியாயமாகப் பார்த்தால், இவன் அப்படிச் செய்திருக்கவேகூடாது. ஏனென்றால், இவனுடைய ஜைன மதம் ஒரு கடவுளைப் பற்றியே சொல்லவில்லை; அதைப் பல ரூபத்தில், ஸரஸ்வதி மாதிரி பல தெய்வ வடிவங்களில், ஆராதிப்பதை ஜைன தத்துவம் ஒப்புக்கொள்ளாது. அப்படியிருந்தும், இவன் ஜைன மதத்துக்கு ஆதரவாகப் புஸ்தகம் எழுதுவதற்கே ஸரஸ்வதியின் அநுக்கிரகம் வேண்டுமென்று கருதி, அவளை உபாஸனை பண்ணியிருக்கிறான். உள்ளன்று வைத்துப் புறமொன்றாக இருந்திருக்கிறான்.
இப்போதுகூட நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களில் ரொம்பப் பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால், வேங்கடரமண ஸ்வாமிக்கு வேண்டிக்கொள்கிறார்கள்; மாரியம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். கேட்டால், 'வீட்டில் இப்படி அபிப்ராயம்; சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை; அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி(feeling)க்கு மதிப்பு (Respect) கொடுத்தேன்’ என்று ஜம்பமாகச் சொல்லிக் கொள்வார்கள்.
இந்த ரீதியில்தான், ரொம்பக் காலம் முந்தியே ஹிந்து மதத் தைக் கண்டனம் பண்ணும் கிரந்தங்களை எழுதிய அமர சிம்மன், அவை நன்றாக அமையவேண்டும் என்று ஹிந்து மதத்தின் வாக்குத் தேவதையையே உபாஸனை செய்தான். ஒருவன் எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் - அது நல்லதாகத்தான் இருக்கட்டும், கெட்டதாகத்தான் இருக்கட்டும், அதிலே பூரண சிரத்தையுடன் இறங்கிவிட்டான் என்றால், அதற்குண்டான பலனை பகவான் தரத்தான் செய்கிறான். அப்படியே இவனுடைய உபாஸனையின் சிரத்தையை மதித்து இவனுக்கும் ஸரஸ்வதி அநுக்கிரகம் செய்துவிட்டாள்.
எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும்- அது நல்லதாக இருக்கட்டும், கெட்டதாக இருக்கட்டும்... அதில் ஒருவன் பூரண சிரத்தையுடன் இறங்கிவிட்டான் என்றால், அதற்கான பலனை பகவான் நிச்சயம் தருவார். அப்படியே, அமரசிம்மனுக்கும் ஸ்ரீசரஸ்வதியின் அருள் கிடைத்தது என்று பார்த்தோம். சரி, அதற்குப் பிறகு என்ன நடந்தது?
இதோ, மகாபெரியவாளே விவரிக்கிறார்...
''திரைக்கு இந்தப்புறம் ஸரஸ்வதி தேவியை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவிட்டு உட்கார்ந்திருக்கிறான் அமரசிம்மன். தான் எத்தனை புத்திசாலியானாலும், ஆசார்யாள் எதிரில் சூரியனுக்கு முன் பிடித்த மெழுகுவத்தி மாதிரி ஆகிவிடுவோம் என்பது இவனுக்குத் தெரியும். அதனால், முன்னமேயே வாக் தேவியைத் தஞ்சம் புகுந்திருந் தான். இவனுடைய உபாஸனைக்கு இன்னும் கொஞ்ச காலம் பலன் தந்துதான் ஆகவேண்டும் என்று அவளும் கட்டுப்பட்டிருந்தாள்.
எனவே, ''என்னை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவைத்துச் சுற்றிலும் திரை போட்டுக்கொண்டு, அதற்குள் நீ இரு. சங்கரர் வெளியிலிருந்து கேள்வி கேட்கட்டும். உனக்காக நானே பதில் சொல்கிறேன்'' என்று வாக்குத் தந்தாள் வாக் தேவி.
அந்தப்படிதான் இப்போது நடந்தது. அதை ஆசார்யாளும், துளி மனஸைச் செலுத்தியவுடனே கண்டுபிடித்துவிட்டார்.
உடனே அவர், ''அம்மா! உன் காரியம்தானா இது? நீ இப்படிச் செய்யலாமா? உன்னையும் மற்ற அத்தனை தெய்வங்களையும் ஆரா திக்கிற பழக்கத்தையே தொலைத்துவிடவேண்டும் என்று கிரந்தம் செய்கிறவனுக்கே நீ இப்படி அநுக்கிரகம் செய்யலாமா? அவனுடைய உபாஸனா பலத்துக்காகச் செய்தாய் என்றாலும், அவன் இத்தனை புஸ்தகங்கள் எழுதியுமா அது தீரவில்லை? அதோடு, இத்தனை நேரம் என்னோடு தாக்குப்பிடித்து வாக்குவாதம் செய்ததிலும் எத்தனையோ அநுக்கிரகம் செய்துவிட்டாயே! அவனுக்குச் செய்யவேண்டியதற்கு அதிகமாகச் செய்வது நியாயமா?'' என்று ஸரஸ்வதியைக் கேட்டார்.
அவருடைய கணக்கு சரியாகத்தான் இருந்தது. அமரசிம்மனுடைய உபாஸனைக்குப் பிரதிபலன் தந்து தீர்த்தாயிற்று என்று ஸரஸ்வதி தெரிந்துகொண்டாள். உடனே, கடத்திலிருந்து அந்தர்த்யானமாகி விட்டாள். திரை அறுந்து விழுந்தது. அப்புறம், அமரசிம்மனால் ஆசார்யாளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆசார்யாளிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டான்.
அதற்கப்புறம், அவனுக்கு தான் எழுதிய புஸ்தகங்கள் எல்லாம் ஏன் இனிமேலும் லோகத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அத்வைத பரமாக ஆசார்யாள் எவ்வளவு எழுதியிருந்தாரோ, அவ்வளவு இவனும் ஜைன சம்பந்தமாக எழுதியிருந்தான். இப்போது தன் சித்தாந்தம் தோற்றுப் போனதாக ஒப்புக்கொண்டபின், இந்தப் புஸ்தகங்களை மற்றவர்களுக்காக விட்டுவைப்பது சரியாகாது என்று நினைத்தான்.
எதற்குச் சொல்லவந்தேன் என்றால், அடிப் படையான சீலங்களில் எந்த மதஸ்தருக்கும் நிரம்பப் பற்று இருக்கலாம். இப்போது அமர சிம்மனுக்குத் தப்பென நிரூபணமாகிவிட்ட தன் சித்தாந்தங்கள் லோகத்தில் இருக்கவேண்டி யதில்லை என்ற எண்ணம் வந்துவிட்டது. எனவே, பெரிதாக நெருப்பை மூட்டி, தான் எழுதியிருந்த சுவடிகளை ஒவ்வொன்றாக அதிலே போட்டுப் பஸ்மமாக்கினான்.
இதை ஆசார்யாள் கேள்விப்பட்டார். ஆனால் துளிக்கூடச் சந்தோஷப்பட வில்லை. மிகுந்த துக்கமே கொண்டார். அவர் அமரசிம்மனிடம் ஓடோடி வந்தார்.
'அடடா, என்ன காரியம் செய்துகொண்டு இருக்கிறாய்? லோகம் என்று இருந்தால், நானா தினுசான அபிப்பிராயங்கள் இருக்கத்தான் செய்யும். பல அபிப்பிராயங்கள் இருந்து ஒன்றுக்கொன்று ஒப்பிட்டுப் பார்த்து சர்ச்சை பண்ணுவதுதான், பல நிலைகளில் இருக்கிற ஜனங்களுக்கு அறிவைத் தெளிவுபடுத்தும். நீ எந்த மதஸ்தனாகத்தான் இருந்து விட்டுப் போ..! ஆனாலும், நீ மகாபுத்திமான்! நான் உன்னைக் கௌரவிக்கிறேன். உன் கொள்கைகளை, புத்தி விசேஷத்தால் எத்தனை நன்றாக எடுத்துச் சொல்லமுடியுமோ அத்தனை நன்றாகச் செய்து புஸ்தகங்கள் எழுதியிருக்கிறாய். உண்மையில் பரமதத்வம், இதற்கு மாறாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; உன் புத்தியளவில் நீ இந்தச் சித்தாந்தங்களுக்கு எப்படி ஆதரவு காட்டியிருக்கிறாயோ, அதிலேயே ஒரு அழகு, புத்தியின் பிரகாசம் இருக்கிறது. இதை எல்லாம் லோகத்துக்கு இல்லாமல் செய்யலாமா?'' என்று ஆசார்யாள் அவனிடம் சொல்லி, அவன் கையைப் பிடித்து, அவன் கடைசி கடைசியாக அக்னியில் போட இருந்த புஸ்தகத்தைப் போட வொட்டாமல் தடுத்தார்.
அப்போது, அவன் கையில் இருந்துதான் 'அமரகோசம்’. ஆசார்யாள் தடுத்திருக்கா விட்டால் அதுவும் 'ஸ்வாஹா’வாகியிருக்கும். துரதிருஷ்டவசமாக, சமய சம்பந்தமான அவனுடைய புஸ்தகங்கள் எல்லாம் போயே போய்விட்டன. அகராதி, நிகண்டு மட்டுமே நம் ஆசார்யாளின் கருணையால் பிழைத்தது. 'அமரம்’ என்ற பெயருக்கேற்றபடி அதை மட்டும் அவர் அழியாமல் அமரமாக்கிவிட்டார்....
A share from FB MAHAPERIYAVAL SRI CHANDRASEKARENDRA SARASWATHI'S LIFE AND TEACHINGS.

சூரிய-சந்திரர்கள்-உள்ளவரை—பேராசிரியர்-வீழிநாதன்
(நன்றி-பால ஹனுமான்)
மஹா பெரியவர் வழிகாட்டி, தேர்வு செய்த பல சுலோகங்களையும், கீதங்களையும் எம்.எஸ்.அம்மா பாடி ஒலிப்பதிவு செய்து அளித்துள்ளார். மேளராக மாலிகை இவர் உத்தரவின் பேரில்தான் பாடப்பட்டது. பாலாஜி பஞ்சரத்ன தொகுப்பில் சுலோகங்களும் அவர்தேர்வு பண்ணிக் கொடுத்தவைதான். உச்சரிப்பு திருத்தமாக உள்ளதா என்று சரி பார்ப்பதும் உதவுவதும் எனக்குத் தரப்பட்ட பணி. இதை ஒரு மிகப் பெரிய கௌரவமாக நான் கருதிச் செய்து வந்தேன்.
எத்தனை முறை திருத்தம் சொன்னாலும் மனதிலே சோர்வு இல்லாமல் திருத்திக் கொள்வார் அம்மா. ஸ்ரீரங்க கத்யம் மிகக் கடினமான உச்சரிப்பு கொண்டது. அதைத் துல்லியமாக பதம் பிரித்துப் பாட அம்மாவால் தான் முடிந்தது. அதிலே தோஷம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தேடினாலும் முடியாது! அப்படி ஒரு அப்பழுக்கில்லாத சுத்தம்.மேளராக மாலிகையின் வார்த்தைகள் அர்த்தங்களைப் பொதித்துப் பொதித்து அடக்கிய அமைப்பில் இருக்கும்.
‘கெளரிமனோஹர தம்பர சத்தம்‘ என்று வந்தால் ‘கௌரிமனோஹரி‘ என்பது ராகத்தைக் குறிக்கும். ‘ஹரதம்பர சத்தம்‘ என்பது பரமேசுவரனைக் குறிக்கும். (திக்கெல்லாம் தன் ஆடையாகக் கொண்டவன் என்று பொருள்) . இந்த இடத்தில் ஒரு கணத்துக்கும் குறைவாக இடைவெளி கொடுத்து இரண்டு அர்த்தங்களும் விளங்கும்படிப் பாட வேண்டும் என ஆணையிட்ட மஹா பெரியவர்களிடம்
‘இது எப்படி சாத்தியம் ?’ என்று கேட்டேன். அதற்குஅவர் சொன்னார்:
“நீயா பாடப் போறே…? அவா பாடிடுவா… நீ ஏன் கவலைப்படறே!”
அதேமாதிரி, பெரியவர்களின் ஆசி அனுக்கிரஹத்தால் உரிய முறையில் துல்லியமாக அந்த இடத்தில் எம்.எஸ்.அம்மா பாடியிருப்பது, கவனித்துக் கேட்டால் புலனாகும்.
இந்த ஒலிப்பதிவு முடிந்து காஸெட் வெளியாகிற தருணத்தில் மஹா பெரியவர் எம்.எஸ்.ஸிடம் என்ன சொன்னார் தெரியுமோ…?
“சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !” என்றார்.
இதை விட பெரிய அனுக்கிரஹம் என்ன வேண்டும் ?

About Raa Ganapathi...
அப்பா சொல்லைத் தட்டமுடியாமல் ஓரிக்கைக்கு வந்தார் கணபதி. அங்கே பெரியவா .................
அப்பா சொல்லைத் தட்டமுடியாமல் ஓரிக்கைக்கு வந்தார் கணபதி. அங்கே பெரியவா இருந்த சின்ன அறையில் வெளிச்சம் கூட இல்லை. அவரும் ஏதோ காஷாயம் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கணபதிக்கு அங்கே எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்ன இவர்... கோயில் வாசலில் இருக்கும் ஆண்டியைவிட சாதாரணமா இருக்காரே என்ற எண்ணம்! அறைக்குள் நுழைந்தது முதல், வைத்த கண் எடுக் காமல் கணபதியைப் பார்த்துக்கொண்டிருந்த மகா பெரியவா, சிறிது நேரம் கழித்துப் 'போகலாம்’ என்று உத்தரவு கொடுத் ததும்தான் 'அப்பாடா’ என்றிருந்தது கணபதிக்கு. இருந்தாலும், வீடு திரும்பிய பின்னரும் கணபதியின் மனசு பூராவும் பெரியவா நினைப்பே சுழன்று சுழன்று வந்தது. எங்கே திரும்பினாலும் பெரியவா இருக்கிற மாதிரி ஒரு பிரமை! 'பெரியவா என்னைத் தடுத்தாட்கொண்டு இருக்கார்னு புரிஞ்சுது. அதன் பிறகு என் வாழ்க்கையே திசை திரும்பிடுச்சு!’ என்று கூறியிருக்கிறார் கணபதி. அதன் பிறகு, 'கல்கி’ பத்திரிகையுடன் தொடர்பு ஏற்பட்டு, சதாசிவம், எம்.எஸ் தம்பதியின் கருணை வட்டத்தில் வந்து விட்டார். சில காலம் கழித்து, மடத்துக்கு மீண்டும் அறிமுகமாகி, பெரியவா சொல்வதைக் குறிப்பு எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பெரியவா ஓரிடத்தில் சொன்ன சமாசாரத்தை இன்னோர் இடத்தில் தொடர்வார்.
பெரியவா பேச்சில் சயின்ஸ் இருக்கும்; வேதம் இருக்கும். கணபதி எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்துக்கொள்வார். வேத வியாசருக்கு விநாயகர் அமைந்த மாதிரி, மகா பெரியவாளுக்கு ரா.கணபதி கிடைத்தார் னுதான் சொல்லணும். ஆசார நியம நிஷ்டை, தபஸ் எல்லாமே கணபதிக்குப் பழகிப் போச்சு. நைஷ்டிக பிரம்மசாரி. ராமகிருஷ்ண மடத்து 'அண்ணா’தான் அவருக்கு மந்திர குரு; உபதேசம் செய்து வைத்தவர். கணபதி அம்பத்தூரில் தங்கியிருந்த காலத்தில் அவர் அம்பாள் பூஜை செய்வதை பார்க்கணுமே... அவ்வளவு சிலிர்ப்பா இருக்கும். கேரள நம்பூதிரி ஒருவர் இந்த அம்பாள் விக்கிரகத்தைத் தலையிலேயே சுமந்துகொண்டு வந்து, சிதம்பரத்தில் இருந்த இவரது வீட்டில் சேர்ப்பித்தாராம். கேட்டதற்கு, 'இங்கேதான் கொடுக்கணும்னு அம்பாள் சொல்லிட்டா’ என்றாராம். கொஞ்ச காலம் புட்டபர்த்தியில் தங்கலாம் என்று அங்கே போனார் கணபதி. ஆனால், ஸ்ரீசாயிபாபா இவரைக் கூப்பிட்டு, 'தெய்வத்தின் குரலை’ எழுதுவதே உங்களின் பிறவிப் பணி. நீங்கள் தொகுக்கும் 'தெய்வத்தின் குரல்’ இந்து மதத்துக்கும் சனாதன தர்மத்துக்கும் பலமாக - உபநிஷத்துக்குச் சமானமாக இருக்கப் போகிறது’ என்று அருளினாராம். மகா பெரியவாளை ஸ்ரீராமர் என்றுதான் கணபதி சொல்வார்.
பெரியவாளுடைய நூற்றாண்டு விழாவின் போது, கணபதியை கௌரவம் பண்ணி சன்மானம் கொடுக்க... அதை அப்படியே ஓரிக்கை கோயிலுக்குக் கொடுத்துவிட்டார் கணபதி. ஒரு சந்தர்ப்பத்தில், பெரியவா சரிதத்தைக் 'கல்கி’யில் எழுதத் தொடங்கினார். இரண்டு வாரம்தான் வந்திருக்கும். பெரியவா கணபதியைக் கூப்பிட்டனுப்பி, 'போறும் நிறுத்திடு’ன்னு சொல்லிட்டார். 'அதுக்குப் பதிலா, மடத்திலே எனக்காக எத்தனையோ பேர் இரவும் பகலும் உழைக்கறவா இருக்கா. அவாளைப் பத்தி எழுது!’ன்னார். 'அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே’ என கணபதி தயங்கவும், 'தெரிஞ்சதை எழுது; தெரியாததை நான் சொல்றேன். 1907-ல் பைங்காநாடு கணபதி சாஸ்திரி எனக்கு வித்யா குருவா இருந்திருக்கார். அவரைப் பற்றி எழுது. பெரிய புராணம் மாதிரி, இதைத் திருத்தொண்டர் புராணம்னு எழுது’ என்று சொன்னாராம் பெரியவா. ஆனால், கடைசியில், மடத்தைச் சேர்ந்த ஏ.குப்புசாமி ஐயர் என்பவர்தான் அதை எழுதினார்.
'தெய்வத்தின் குரலை’ நான் உபன்யாசம் செய்வது இருக்கட்டும்... அதைப் படித்தவர்கள் யாரேனும் வாழ்க்கையில் சிறிதேனும் தங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார்களா என்பதை அறிய, நானும் நண்பர் சிவராமனும் போகிற இடங்களில் எல்லாம் கவனித்துப் பதிவு செய்வது வழக்கம். அப்படியான சம்பவங்கள் நிறைய! 'தெய்வத்தின் குரல்’ ஏழு பாகங்கள் வெளியாகி இருக்கு. ஏழாவது வால்யூமை பெரியவா பார்க்கலை. கணபதி, இன்னும் இரண்டு வால்யூம்களுக்கு விஷயம் வைத்திருந்தார். 'அதையெல்லாம் எப்போது எழுதப் போகிறீர்கள்?’ என்று கேட்டபோது, கணபதி என்ன சொன்னார் தெரியுமா? 'என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. இனிமே என்னால எழுத முடியாது!’ என்றார் தமாஷாக. மகா பெரியவா மாதிரியே கணபதிக்கும் அசாத்திய ஞாபக சக்தி. பத்து வருஷத்துக்கு முந்தி சந்தித்தவரைக்கூட, நினைவில் வைத்து விசாரிப்பார்.
ரா.கணபதி போதேந்திராள் சரிதத்தையும் 'காம கோடி ராம கோடி’ எனும் தலைப்பில் எழுதி வெளியிட்டிருக்கார். போதேந்திராள் 59-வது ஆசார்ய பீடம்; அவர் கோபி சந்தனம் இட்டுக் கொண்டிப்பார் எனப் புத்தகத்தில் எழுதியிருந்தார் கணபதி. 'அது தப்பு; திருத்தணும்!’ என்றாராம் பெரியவா. அத்துடன், 'விபூதி, ருத்ராட்சம் தவிர வேறெதுவும் அணிவதில்லை என்ற மடத்து சம்பிரதாயத்தை அவர்கள் (போதேந்திராள்) ரட்சித்துக் கொடுத்தார்கள். அதை ஜனங்க தெரிஞ்சுக் கணும்’ என்றும் அறிவுறுத்தினாராம். ஆதிசங்கரர் குறித்த 'ஜெயஜெய சங்கர’, ஸ்ரீரமணரைப் பற்றிய 'ரமணாயனம்’, மீராபாயின் வரலாற்றைச் சொல்லும் 'காற்றினிலே வரும் கீதம்’, பாபாவின் சரிதம் சொல்லும் 'ஸ்வாமி’, ராமகிருஷ்ண பரமஹம்சர்- விவேகானந்தர்- சாரதாமணி அம்மையார் பற்றி 'அறிவுக்கனலே, அருட் புனலே’ ஆகிய அற்புதமான நூல்களும் ரா.கணபதியின் படைப்புகளே! எனினும், 'தெய்வத்தின் குரல்’ ஒன்றுக்காகவே தமிழுலகமும் ஆத்திக உலகும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது'' - நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் கணேச சர்மா.
'ஒருமுறை நானும் பால்யூவும் ரா.கணபதி சாரும் பாபாவை தரிசிச்சுட்டு, புட்டபர்த்தியில் இருந்து ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். மாலை நேரம் ஆனதும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் கணபதி சார். நெற்றி நிறைய விபூதியுடன் அவரைப் பார்த்தபோது ஆதிசங்கரர் மாதிரி இருந்தது. வழியில் ஓரிடத்தில் பயங்கரச் சத்தம். அசம்பாவிதம் எதுவும் இல்லை என்றாலும், எல்லோரும் பயந்துபோனோம். ஆனால், கணபதி சார் கொஞ்சம்கூட அசையவில்லையே! அப்படியரு யோக நிஷ்டையில் இருந்தார். இப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் ஆச்சரியம் அது!'' என்று நெகிழ்கிறார் ஓவியர் மணியம் செல்வன்.
அறிஞர் அண்ணாவின் அன்னையார் மறைந்த தருணம்... மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாராம் பேரறிஞர். அந்த வாரம் கல்கி இதழில் 'ஜெயஜெய சங்கர’ தொடரில்... ஆதிசங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் மரணம் அடைவது பற்றி உருகி எழுதியிருந்தார் கணபதி. 'அதில் தாயை இழந்த சோகத்தை சங்கரர் அனுபவித்த விதம் குறித்து கணபதி எழுதியிருந்த விதத்தைப் படித்து நானும் நெகிழ்ந்துவிட்டேன்’ என அறிஞர் அண்ணா, பாரதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'தன் வரலாறு’ நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆம்... அனைத்துத் தரப்பினரையும் அசைத்துப் பார்க்கும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர் ரா.கணபதி.

பெரியவா பாத்துப்பா 16 !
பெங்களூர்ல எனக்கு லீலான்னு ஒரு ப்ரெண்ட் இருந்தா. நான் அவளை 'லீலா பெஹென்'னு கூப்பிடுவேன். அவ ஒரு குருஜி. அவளுக்கு நெறைய பாலோயர்ஸ் உண்டு. அவ கடைசில பிருந்தாவனத்துக்கே போய்ட்டா. ஒரு நாள் லீலா பெஹென் எங்கிட்ட ஒரு கதை சொன்னா. தண்ணில நீந்திண்டே போற மீன்கள் எல்லாம் 'தாஹி, தாஹி'ன்னு சொல்லிண்டே போச்சாம். அதை ஒரு முனிவர் பாத்துட்டு 'ஏன் வெளில பாத்துண்டே தாகம், தாகம் ன்னு சொல்றேள். உள்ளுக்குள்ள பாருங்கோ எவ்ளோ தண்ணி இருக்கு'ன்னாராம். அது மாதிரி நீங்களும் உங்களுக்கு உள்ளே பாருங்கோ'ன்னா. அவ சொன்னது த்யானம்,தபஸ் ன்னு ஞான மார்கத்துக்கு வாங்கோ. ஏன் இன்னும் நாம ஜபம், விக்ரஹம், பூஜைன்னே இருக்கேள் அப்டிங்கற அர்த்தத்துல. எனக்கும் த்யானம், தபஸ் எல்லாம் உண்டு. ஆனா, நான் அதுல ராமன், அம்பாள், பெரியவா இவாளோட நெனப்புலேயே லயிச்சு போய்டுவேன். எனக்கு கர்ம யோகமும், பக்தி மார்க்கமும் தான். என்னோட கர்மாக்களை செஞ்சுண்டே பகவனோட நாம ஸ்மரணைல ஈடுபடுவேன். எப்பவுமே என்னோட கடமைகளை, பொறுப்புகளை தட்டி கழிச்சுட்டு த்யானம், தபஸ் ன்னு இருந்தது கிடையாது. எனக்குன்னு கெடைக்கற நேரத்துல தான் ராமாயணம், திரிசதி படிக்கறது, சொல்றது எல்லாம். ஞான யோகத்துக்கு கிடைக்கக் கூடிய பலன் கர்ம, பக்தி யோகத்துக்கும் உண்டு. அதுக்கு உதாரணமா, நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்றேன்.
பிரசவ வலில துடிச்சுண்டு இருந்த ஒரு ஸ்திரி ஆஸ்பத்ரிக்கு போறதுக்காக பஸ்ல ஏறி கெடச்ச சீட்ல உக்காந்தா. பக்கத்து சீட்ல ஒரு ஆச்சாரமான பாட்டி. இவ நெளியரதையும், மூச்சு விட ஸ்ரமப்படறதையும், கண்ல ஜலம் கட்டிக்கறதையும் பாத்துட்டு 'என்னம்மா முடியலையா?'ன்னு கேட்டா. அவ 'ஆமாம் பாட்டி'ன்னு சொன்ன உடனே பஸ்ஸை நிறுத்தச் சொல்லி எல்லாரையும் கீழே இறங்கி நிக்கச் சொன்னா. அந்த ஸ்த்ரியோட குலம்,கோத்ரம் எல்லாம் பாக்காம, தன் ஆச்சாரத்தை தள்ளி வச்சுட்டு அவளுக்கு பிரசவம் பாத்தா. அவளுக்குன்னு தனி இடம் ஒதுக்கி பஸ்ஸை ஆஸ்பத்ரிக்கு விடச் சொன்னா. எல்லாருமா சேர்ந்து அவளை ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணிட்டு பாட்டி எங்கேன்னு தேடினா. பாட்டி பஸ்லயே ஒரு மூலைல சுருண்டு படுத்துண்டு கிடந்தா. பாவம் பாட்டி ரொம்ப களைச்சுப் போய் தூங்கிட்டா போல இருக்குன்னு அவளை எழுப்பப் போனா. ஆனா, பாட்டி இந்த உலகத்தை விட்டே போயிருந்தா. பகவான் அவளுக்கு மோட்ஷத்தை கொடுத்து தன் கிட்டயே சேர்த்துண்டுட்டார். யார் ஒருத்தருக்கு மத்த உயிர்கள் கிட்ட கருணையும், அன்பும் இருக்கோ அவாளை பகவான் தன் பக்கத்துலையே வச்சுப்பார். பாட்டி கிட்ட அதெல்லாம் இருந்தது. கூடவே, பாட்டி தான் அந்த நேரத்துல செய்ய வேண்டிய கடமையையும் செஞ்சா. இதைவிட பகவானுக்கு ப்ரியமான கார்யம் வேற என்ன இருக்க முடியும்?ராம், ராம்.

பெரியவா பாத்துப்பா 17 !
சண்டி ஹோமம் முடிந்த மறு நாள் ஊருக்கு கிளம்பும் போது (மனசே இல்லை) மாமி இப்போ நீங்க எழுதப்போறதுக்கு 'எனக்கு நானே'ன்னு தலைப்பு வைங்கோன்னு சொன்னார். (அது ஏன் என்பது கடைசியில்). ஆனால், திடீரென மாற்றினால் வேறு எதைப் பற்றியோ எழுதி இருக்கிறேன் என நினைத்து நீங்கள் படிக்காமல் போய்விட நேரிடலாம் என்பதால் பழைய தலைப்பிலேயே தொடருகிறேன். மேலும், இந்த இரண்டு தலைப்புகளுக்கு இடையே பெரிய வித்யாசம் இல்லை என்பது என் அபிப்பிராயம். நீங்களும்'அது சரிதான்' என்று உணருவீர்கள். இப்போது, பதினெட்டாம் தேதி நடந்த சண்டி ஹோமம் மற்றும் வேறொரு நிகழ்வைப் பற்றி பார்க்கலாம். நாங்கள், கோயம்பத்தூரில் இருந்து பதினேழாம் தேதி காலை புறப்பட்டு, வழியில் குணசீல பிரசன்ன வெங்கடேச பெருமாளை தரிசித்து, மதியமே நொச்சியம் போய் சேர்ந்து விட்டோம். ஆஸ்ரமத்தில் அடுத்த நாள் சண்டி ஹோமத்திற்கான பரபரப்பே இல்லை. திக்கென்றிருந்தது. ஆனால் மாமியோ, ஒவ்வொரு நாளும் நாம் உபயோகிக்கும் ஸ்ட்ரெஸ், பிரஷர், டென்ஷன், சரியான தலைவலி போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே இல்லாதது போல் அமைதியாய், நிதானமாய் இருந்தார். 'மாமி, நாங்க கொண்டு வந்ததை எல்லாம் எடுத்து வச்சுடட்டுமா?'. 'அதுக்கென்ன அவசரம் இப்போ? முதல்ல சாப்டுங்கோ' என்றார் மாமி, தன் மிருதுவான குரலில். மளிகை, காய்கறி, பழங்கள், பூ, ஹோம பொருட்கள், பூர்ணாஹுதி, சுவாசினி, கன்னி, வடுக, தம்பதி பூஜை வஸ்திரங்கள் எல்லாவற்றையும் வகைப் படுத்தி தனித்தனியாக வைத்தோம். அதற்குள்ளாகவே நன்றாக இருட்டி விட்டது. இன்னும் ஏகப்பட்ட வேலைகள் பாக்கி இருந்தது. நாங்கள் கவலைப் பட்டோம். மாமி 'நாளைக்கு நெறைய பேர் வருவா, நிமிஷமா ரெடி பண்ணிடலாம்' என்றார் வெகு சாதாரணமாய். இதற்குள் அங்கு தன் சொந்த செலவில் சோலார் வாட்டர் ஹீட்டர் பொருத்திக் கொண்டிருந்த Sundar Subrahmanyam Kaniyanoor எங்களுக்கு மிக பரிச்சயமாகி இருந்தார். அவருடைய வீட்டிலேயே எங்களை தங்கச் சொன்னார். ஆஸ்ரமத்தில் சாப்பிட்டு விட்டு அவருடன் பொன்னி டெல்டா போய் தங்கினோம். மறு நாள் காலை நாங்கள் ஆஸ்ரமத்தை அடைந்த போது மணி ஏழு. மாமி ஆறு மணிக்கே வரச்சொல்லி இருந்தார். எனக்கு லேசான பதட்டம் இருந்தது. ஆனால், கணபதி ஹோமம் ஆரம்பிக்க இன்னும் சற்று நேரம் ஆகும் என்று சொன்னார்கள். பயம் விலகியது. உடனே வேலையில் இறங்கினோம்.
இடையில், சில அத்யாவஸ்ய பொருட்களை வாங்குவதற்காக நான் திரு ஆனைக்கா சென்று விட்டேன். திரும்பி வருவதற்குள் மாமாவும், மாமியும் சங்கல்பம் முடித்திருந்தார்கள். கோ பூஜையும் முடிந்திருந்தது. மாமி, ஹோமம் நடக்கும் இடத்தில் வந்தவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து பார்த்த போது மாமி கண்களுக்கு தென் படவே இல்லை.
கோயம்பத்தூரில் இருந்து தேவி மகாத்மீயம் பாராயணம் செய்ய வந்திருந்த இருபது பேரை வரவேற்க சென்ற போது தான் மாமிக்கு நடந்த அந்த விபத்து பற்றி எனக்கு தெரிந்தது. ராம், ராம். தொடர்ச்சி, பெரியவா பாத்துப்பா 18ல். ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

ஆன்மிகப் பேராசை.
===============
எனக்கு பேராசை மிக அதிகம்; பேராசை என்பது பொன்னிலும், மண்ணிலும், பெண்ணிலும் அல்ல. எனது பேராசை ஆன்மிகத்தினாலானது.
அதாவது ஆன்மிகப் பேராசை.
சுமார் 150 வருடங்களுக்குமுன் வாழ்ந்த மகான்கள் சிலர். இன்றும் அவர்களுக்கு நாம் ஆராதனை நடத்திக்கொண்டிருக்கிறோம். சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், வள்ளல் பெருமான், ரமணர், சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ சாய்பாபா (ஷீர்டி) போன்றவர்கள் இந்த மண்ணில் அவதரித்து பல அற்புதங்களை நிகழ்த்திய மகான்கள். அவர்களுடைய காலம் 100-லிருந்து 150 வருடங்களுக்கு முன்னால்தான். அந்தக் காலகட்டத்தில் நம்முடைய பாட்டன்கள் வாழ்ந்திருக்கலாம். சிலர் அவர்களோடு உரையாடும் பேறு பெற்றவர்களாக இருந்திருக்கலாம்; சிலர் அந்த மகான்கள் நிகழ்த்திய அற்புதங்களை நேரில் கண்டு மகிழ்ந்திருக்கலாம்; அல்லது நமது மூதாதையர்களுக்கே ஏதேனும் உபதேசம் செய்திருக்கலாம்.
அந்த முன்னோர்கள் யாரென்று நாம் அறிவோமா? நம் முன்னோர்கள், “நான் இவரைப் பார்த்திருக்கிறேன்; ஓரிரு நிமிடம் அவரோடு பேசியிருக்கிறேன்; எனக்கு அந்த மகான் உபதேசம் செய்திருக்கிறார்…’ என்று யாராவது எழுதி வைத்திருக்கிறார்களா? அனேகமாக இருக்காது. செவிவழிச் செய்திகள் இருந்தாலும் அதற்கு ஆதாரமாக எதைச் சொல்லுவது? சில வருடங்களுக்குமுன் நான் மதுரை சென்றிருந்தேன். சுமார் 370 ஆண்டுகளுக்குமுன், ஸ்ரீ வேங்கடநாதன் என்கிற பூர்வாசிரமப் பெயர்கொண்ட ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள், தன்னுடைய தமக்கை வேங்கடாம்பாள் இல்லத்தில் தங்கி, தமக்கையின் கணவரிடம் வேத சாஸ்திரங்கள் பயின்ற வீடு அங்கே இருப்பதாகவும், அவர்களுடைய வம்சத்தினர் இன்றும் அங்கே வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அறிந்து அந்தப் புனிதமான இல்லத்திற்குச் சென்றேன். வீட்டை தற்கால முறையில் கட்டியிருந்தாலும், ஸ்ரீ ராகவேந்திரர் பூஜை செய்த அந்த அறையை மட்டும் அப்படியே வைத்திருக்கிறார்கள். 370 ஆண்டுகளுக்குமுன் அந்த மகான் வசித்த அந்த அறையில் பூஜைக்குரிய பொருட்கள், பஞ்சபாத்திரம், உத்தரணி, சாளக் கிராமங்களை அப்படியே வைத்து இன்றும் அந்த வீட்டுக்குரியவர் பூஜை செய்துவருகிறார். ஸ்ரீ ராயரின் தமக்கை வழி வந்தவர்கள் என்று செவிவழிச் செய்தியைக் கூறுகிறாரே தவிர எழுத்துப்பூர்வமான ஓலைச் சுவடிகள் இல்லை; ஆனால் அந்த அறையின் தன்மை, ஸ்ரீ ராயர் உபயோகித்த பூஜைப் பொருட்களின் தன்மையைப் பார்க்கும்போது நம் மெய்சிலிர்த்து, கண்கள் பனிக்க பக்தி பரவசத்தில் ஆழ்ந்து போகிறோம். இது அந்த வம்சம் செய்த தவப் பயன்.
அதைப்போல நம் வாழ்வில் ஏதாவது நடந்திருக்கிறதா- நாம் எந்த மகானையாவதுதரிசித்திருக்கிறோமா- அவருடன் உரையாடி யிருக்கிறோமா என்று நினைக்கும்போது, பரமேஸ்வரனுடைய அம்சமான காஞ்சி ஸ்ரீமகா பெரியவரே என் நினைவிற்கு வருகிறார். இது நான் செய்த புண்ணியம் என்பதைவிட என் முன்னோர் செய்த தவமே!
என்னுடைய படிப்பு முடிந்தவுடன் வேலைக்காக நான் தேர்ந்தெடுத்த துறை பத்திரிகைத் துறை. ஒரு வாரப் பத்திரிகையில் 1960-ஆம் ஆண்டு உதவி ஆசிரியராகப் பணியாற்றினேன். மாதச் சம்பளம் 70 ரூபாய்.
அங்கு சரியாக சம்பளம் தரவில்லை என்பதால், என் தந்தை என்னை சிம்சன் கம்பெனிகளில் ஒன்றில் சேர்த்துவிட்டார். மாதச் சம்பளம் 110 ரூபாய். இருந்தாலும் நான் எழுத்துத் துறையை விடவில்லை. (இந்த 70 வயதிலும்). ஆனால் நான் பணிபுரிந்த- அந்த சிம்சன் குரூப் கம்பெனிகளில் ஒன்றான அது எந்த நிமிடத்திலும் மூடப்படும் அபாயத்தில் இருந்தது. அந்த மனக் கவலையோடு இருந்த நேரத்தில், என்னோடு பணிபுரிந்த நண்பருக்கு காஞ்சிபுரத்தில் திருமணம் நடந்தது. அதிகாலையிலேயே நடந்து முடிந்துவிட்டதால், பெரியவர் ஒருவர், “”மகா பெரியவா இங்கதான் கலவைல இருக்கார்… போய் தரிசனம் பண்ணிட்டு வாங்களேன்…” என்றார்.
கலவை ஒரு சிறிய கிராமம். அக்ரஹாரம் மாதிரி இருந்த அந்தத் தெருவே மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒருபுறம் முழுவதும் பழைய காலத்து வீடுகள் முனிவரின் பர்ணசாலையைப்போல் காட்சியளித்தன. அமைதியான கிராமம். சிறிய குளம் ஒன்றும் இருந்தது.
“”பெரியவா ஸ்னானம் பண்ணிண்டிருக்கா…” என்றார் ஒருவர்.
நாங்கள் அந்தக் குளத்தை விட்டு சற்று தூர நின்று பெரியவரை தரிசித்தோம். ஈரம் சொட்டச் சொட்ட குளக்கரைக்குமேல் நின்று எங்கள் பக்கம் பார்வையை ஓட்டினார் பெரியவர். நாங்கள் அனைவரும் சாஷ்டாங்க மாக அவரின் பாதத்தில் விழுந்து நமஸ்கரித் தோம். அற்புதமான அந்தப் பேரொளியின் தீட்சண்யத்தை எங்களால் தாங்க முடியவில்லை. நாங்கள் ஏதேனும் பாவம் செய்திருந்தால் அது அந்த நிமிடமே தொலைந்திருக்கும். அது ஒரு கங்கை நதி. மறுபடியும் சட்டென்று எங்களைப் பார்த்தார்.
“”எதுக்கும் கவலைப்படாதீங்கோ… கம்பெனி எல்லாம் நல்லா நடக்கும். எல்லாம் க்ஷேமமா இருப்பேள்” என்றார்.
எங்களுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்த மாதிரி ஓர் உணர்வு. “நாங்கள் யார்… எங்கிருந்து வருகிறோம்? நாங்கள் பணிபுரியும் அலுவலகம் மூடும் நிலையில் இருக்கிறது. எங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ…’ என்று அவரிடம் யார் சொல்லியிருப்பார்கள்? மகா பெரியவர் எங்களுக்கு கருணா கடாட்சம் எப்படி அளித்தார்? இவருக்கு எப்படித் தெரிந்தது? கண்களில் நீர்வழிய மறுபடியும் அந்த மகானை நமஸ்கரித்தோம். ஏனெனில் அனைத்தும் அறிந்த சர்வேஸ்வரன் அல்லவா அவர்?
இந்த அற்புதம் நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் அந்த இறைவடிவத்தை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அநேகமாக 1963 அல்லது 1964-ஆம் ஆண்டாக இருக்கலாம். நான் அப்போது என் தாய், தந்தை, தம்பிகளோடு பெரம்பூரில் திரு.வி.க. நகர் என்னுமிடத்தில் வாழ்ந்து வந்தேன். அங்கே ஒரு “சத்சங்கம்’ இருந்தது. அதில் நானும் ஓர் அங்கம். திரு.வி.க. நகரின் நுழைவுவாயிலில் ஓர் ஏழைப் பிள்ளையார் வசித்து வந்தார். ஆம்; ஒரு குடிசையில் பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு வந்தோம். தினமும் ஒரு அர்ச்சகர் காலையும், மாலையும் பூஜை செய்துவிட்டுப் போவார். சனிக்கிழமை மாலை பஜனை நடக்கும். சுண்டல் விநியோகம். பலர் கலந்து கொள்வார்கள்.
திடீரென்று எங்கள் சத்சங்க உறுப்பினர் களுக்கு இந்த ஏழைப்பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டவேண்டும் என்கிற எண்ணம் உண்டாயிற்று. அந்த முடிவின்படி நல்ல உள்ளம் படைத்த ஆன்மிகப் பெருமக்களிடம் நன்கொடை வசூலித்து கோவில் திருப்பணியை ஆரம்பித்தோம். ஓர் அன்பர், “”காஞ்சி மகா பெரியவாளிடம் ஸ்ரீமுகம் வாங்கி, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தால் நன்கொடை குவியும்…” என்று சொன்னார்.
நாங்கள் மகா பெரியவரை சந்திக்க ஸ்ரீ மடத்துடன் தொடர்புகொண்டோம். மகா பெரியவர் ஆந்திர மாநிலத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால் காஞ்சிபுரத்திற்கு எப்போது திரும்புவார் என்கிற சரியான தகவல் தெரியவில்லை. நாங்களும் பெரியவர் வரட்டும் என்று காத்திருந்தோம். அவர் வருகைக்காகத் தவமிருந்தோம் என்றுகூடச் சொல்லலாம்.
அன்றிரவு-வழக்கம்போல் உணவுண்டு பகவானை பிரார்த்தித்து விட்டு உறங்கப் போனேன். ஓர் அற்புதமான கனவு. நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மகாசுவாமிகள், பெரம்பூர் ராவ் பகதூர் கண்ணன் செட்டியார் பள்ளியில், புதுப்பெரியவரோடு (ஜெயேந்திரர்) முகாமிட்டிருப்பது போலவும், எங்கள் சத்சங்கத்தினர் மகா பெரியவரிடம் பிள்ளையார் கோவில் கட்ட ஸ்ரீமுகம் வேண்டி நிற்பதுபோலவும் இருந்தது அந்தக் கனவு.
திடுக்கிட்டு எழுந்தேன். இரவு மணி இரண்டரை. அந்த அற்புதக் கனவை மறுநாள் காலையில் எழுந்ததும் எங்கள் சத்சங்க முக்கியஸ்தர்களிடம் சொன்னேன்.
“”நீ அதையே நெனைச்சிண்டு படுத்திருப்பே. அதுதான் அந்த சொப்பனம். மடத்துக்காராளுக்கே பெரியவா எந்த ஊர்ல இருக்கார்னு தெரியலே. நீ என்னடான்னா நம்ப ஊர் ஸ்கூல்ல வந்து தங்கின மாதிரி சொப்பனம் கண்டிருக்கே… அவ்வளவுதான்…” என்று சிலர் சொன்னார்கள்.
என்ன அற்புதம் பாருங்கள். ஒருசில மணித் துளிகள் கழித்து ஸ்ரீ ரங்காச்சாரி என்பவர் ஓடிவந்தார்.
“”சுவாமிகள் நெல்லூர் வழியா வந்து நம்ப ஆர்.பி.சி.சி. ஸ்கூல்ல தங்கியிருக்காராம். எல்லாரும் வாங்கோ… பெரியவாகிட்ட கோவில் கட்டற விஷயத்தைச் சொல்லிடுவோம்…” மூச்சிரைக்க பொங்கிப் பொங்கிப் பேசினார் ரங்காச்சாரி. அவர் சொன்னதைக் கேட்டதும் அனைவரும் என்னைப் பார்த்தார்கள்.
“”உன்னோட சொப்பனம் பலிச்சுடுத்துப்பா…” நாங்கள் ஒரு ஏழெட்டு சத்சங்க உறுப்பினர்கள் உடனே அந்தப் பள்ளிக்குச் சென்றோம். பள்ளி வகுப்புகள்மேல் ஓலை வேய்ந்திருந்த இடத்தில், புதுப்பெரியவரோடு அமர்ந்து சுவாமிகள் அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். சுவாமிகள் எந்த இடத்தில் அமர்ந்திருந்ததாகக் கனவு கண்டேனோ அதே இடத்தில் அதே கோலத்தில் அமர்ந்திருந்தது எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாங்கள் அவரிடம் கோவில் விஷயத்தைப் பற்றி பேசியதைக் கேட்டுக் கொண்டார். அன்று மாலையே புதுப் பெரியவரை கோவிலுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். அனைவரும் அவரை நமஸ்கரித்துவிட்டுப் புறப்படும்போது, நான் எங்கள் குடும்பப் பெயரான “”பாளேகெட்டே குடும்பம் நான்” என்றேன். ஏனெனில் என் தந்தை, “பெரியவாளிடம் நம் குடும்பப் பெயரை சொல்லிவை’ என்றிருந்தார். சட்டென்று சுவாமிகள் என்னை உற்றுப்பார்த்து புன்னகைத்தார். கன்னடத்தில், “”நீ கும்மோணமா?” என்றார். “”ஆம் ஸ்வாமி” என்றேன். “”பத்து உனக்கு என்ன ஆகணும்?” என்று கன்னடத்திலேயே கேட்டார். “”என் சிறிய தாத்தா” என்றேன். மீண்டும் என்னை ஆசிர்வதித்தார். “”போ… சாயங்காலம் இவா வருவா உங்க ஊருக்கு” என்று ஜெயேந்திரரைக் காட்டினார்.
புத்துணர்ச்சி பெற்றவர்களாக திரு.வி.க. நகர் திரும்பினோம். மாலை புதுப்பெரியவர் வரும்போது எப்படி வரவேற்பு கொடுக்க வேண்டும் என்பதை மடத்து ஊழியர் எங்களிடம் தெரிவித்தார். எங்கள் சத்சங்கத்திலோ பணம் இல்லை. என்ன செய்வது? எங்கள் நகரில் ஐந்நூறு வீடுகள் இருந்தன. ஒரு குழுவாக நாங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றோம். சுவாமிகள் நம் ஊருக்கு வருகை தர இருக்கிறார் என்கிற செய்தி கேட்டு அனைவரும் நாங்களே எதிர்பாராதவிதமாக பணத்தை அள்ளிக் கொடுத்தனர். இரவு ஏழு மணியளவில் புதுப்பெரியவர் வரும்போது அதி அற்புதமான வரவேற்பு கொடுத்தோம். புதுப்பெரியவர் குடிசையிலிருந்த பிள்ளையாரை தரிசித்துவிட்டு, “சரி’ என்பதற்கு அடையாளமாக புன்சிரிப்புடன் தலையாட்டினார். மறுநாள் மகா சுவாமிகள் ஸ்ரீமுகம் கொடுக்க, “கல்கி’ வார ஏடு அதைஇலவசமாகப் பிரசுரித்தது. எங்களுக்கு நன்கொடைகள் குவிய ஆரம்பித்தன. முதலில் சிம்சன் கம்பெனிகளின் அதிபர் ஸ்ரீ அனந்தராமகிருஷ்ணன் ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார். அன்றைய தினம் இது மிகப்பெரிய தொகை. பலரிடம் வசூல் செய்து, 64-ஆவது நாயன்மார் என்று போற்றப்படும் ஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகளின் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இப்போது அந்த ஆலயம் மிகச்சிறப்பாக வளர்ந்துள்ளது. அந்த வழியாகப் போகும்போதெல்லாம் இந்த மகான்கள் நினைவில் தோன்றுவர்.
இப்போது 2013-ஆம் ஆண்டு. இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து என் கொள்ளுப் பேரன்களும், பேத்திகளும் இக்கட்டுரையைப் படித்து “எங்க முப்பாட்டனார் காஞ்சி மகாபெரியவர், கிருபானந்த வாரியார் போன்ற மகான்களோட பேசிப் பழகி இருக்காராம்’ என்று சொன்னால் போதும் என்ற பேராசையே இக்கட்டுரையின் மையமாகும்!.
பா . சி . ராமசந்திரன்.

பெரியவா பாத்துப்பா 18 !
மாமிக்கு விபத்து என்றவுடன் நிறைய பேர் போனிலும், கமெண்டிலும் விசாரித்தனர். அவர்களுக்கு நன்றி. ஹோமத்திற்காக எதையோ எடுக்க வீட்டிற்கு சென்றவர் திரும்பும் போது நிலை தடுமாறி, படியில் இடறி கீழே விழுந்து விட்டார். நெற்றியின் இடது மேல் புறத்தில் சற்று பலத்த அடி. அதை பொருட்படுத்தாது, யாரிடமும் காட்டிக்கொள்ளாது, சங்கல்பம் செய்து, கணபதி ஹோமத்திற்கு நெருப்பு எடுத்து கொடுத்து, சிறிது நேரம் வந்தவர்களை உபசரித்து பேசி கொண்டிருந்து விட்டு, பின் வலி அதிகமாகவே ஆஸ்பத்ரிக்கு அழைத்துச் செல்லும் படி கூறி இருக்கிறார். அதுவே, அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கும் ஆச்சர்யத்தையும், பயத்தையும் கொடுத்திருக்கிறது. அவருடைய மூத்த மகன் ஸ்ரீதரும், ஆஸ்ரம ஆரம்ப நாட்களில் இருந்து கூடவே இருக்கும் ஸ்ரீகாந்த்தும் அவரை காரில் கூட்டிக் கொண்டு போனார்கள். சற்று நேரம் கழித்து மாமியின் இளைய மகன் முரளிதரனும் புறப்பட்டு சென்றார். இது எதையுமே நடக்கும் போது நாங்கள் அறியவில்லை. கடைக்கு செல்வது, அனைத்து ஹோம சாமான்கள், வஸ்திரங்களை யாக சாலைக்கு கொண்டு சேர்ப்பது, தண்ணீர், காபி கொடுப்பது, நைவேத்யம் தயாராகி விட்டதா என கவனிப்பது என்று பல தரப்பட்ட வேலைகளில் மும்முரமாகி இருந்ததால் மாமிக்கு ஏற்பட்ட விபத்து எங்களுக்கு அப்போது தெரியாமல் போய் விட்டது. அவர் புறப்பட்டு போன கொஞ்ச நேரத்தில் சில இக்கட்டுகள் ஏற்பட்டன. அவை அனைத்தையும் மாமியின் பெண் மாலா அவர்கள் கையாண்ட விதம் பிரமிக்க வைத்தது. மாமியின் அதே பொறுமை, அமைதி, நிதானம். இத்தனைக்கும், தன் அம்மாவை பற்றிய கவலை அவர் மனதில் நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், அதை அவர் சற்றும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. எனக்கே மாமி அங்கு இல்லை என்பது மிகுந்த மனக் கஷ்டத்தை தந்தது. வேலையில் மூழ்கியதால் கொஞ்சம் மறந்து மறுபடி நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. ஸ்கேன் பார்க்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி இருக்கிறார் என்கிற செய்தி பயத்தை கொடுத்தது. சண்டி ஹோமம் - மஹா கணபதி, நவக்ரஹ, ஆவஹந்தி, பாராயண, ஜப ஹோமங்களை நிறைவு செய்து பூர்ணாஹுதியை நெருங்கிக் கொண்டிருந்தது. இடையே கன்யா, சுவாசினி, வடுக, தம்பதி பூஜைகளும் நடந்தது. மங்கள ஹாரத்திக்கு பிறகு மஹா பெரியவா அபிஷேக ஆராதனையும் நடந்தது. அப்போது, எந்த விதமான அறிகுறியும் இல்லாமால், அம்பாள் தான் அடைந்த சந்தோஷத்தை வருண பகவான் மூலம் தெரிவிப்பது போல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதற்கு பின் ஆச்சார்ய சம்பாவனை முடிந்து, மாமா அட்ஷதை, பிரசாதங்களை பெற்றுக் கொண்டார். இரண்டு தட்டுக்களில் ஒன்றை நான் மாமாவிடமிருந்து வாங்கிக் கொண்டேன். அதை மாமியின் வீட்டில் ஸ்வாமி முன் வைக்க எடுத்துச் செல்லும் போதுதான் மாமி வந்து கொண்டிருக்கிறார் என்ற இனிய செய்தி வந்தது. அவர் வந்து உட்கார்ந்த உடன் ஒவ்வொருவராய் விசாரிக்க ஆரம்பித்தனர். நான் அவர் கைகளில் ப்ரசாதத் தட்டை கொடுத்து நமஸ்கரித்தேன். அம்பாளே நேரில் வந்து பெற்றுக் கொண்டது போல் மனசு நிறைவடைந்தது. ராம், ராம். ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர. இன்னும் சொல்வதற்கு நிறைய உள்ளது.
அவை, பெரியவா பாத்துப்பா 19ல்.
By: Krishnamurthy Krishnaiyer

பெரியவா வாத்யத்தோடு வந்து தன் முன் வாசிக்கச் சொன்னதாகத் தெரி வித்தார்.-எப்பேர்பட்ட ஆசீர்வாதம் அது!
--------------------------------------------------------------------------------
தவில் என்றாலே தவிர்க்க முடியாதபடி நினைவிற்கு வருபவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டீன். திருவையாறு தியாகபிரம்ம சபா செய லாளர். மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி உறுப்பினர். லய சுகம் நிறைந்த அவரது ஆன்மிக உணர்வுகள்:
‘‘சங்கரமடத்தில் வியாச பூஜை. என் குருநாதர் திருச்சேறை ஜி.முத்துக்குமாரசுவாமி பிள்ளையுடன் தவில் வாசிக்க நானும் சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் ஊருக்குப் புறப்பட மகா பெரியவாளிடம் உத்தரவு வாங்க குரு சென்றபோது எனக்கும் பெரியவா கையால பிரசாதம் கிடைக்காதா என்று ஏங்கினேன். அதே நொடியில் பெரியவா என்னை அழைத்து பிரசாதம் தந்தபோது நெகிழ்ந்தே போனேன். ஒருமுறை நவராத்திரி சமயத்தில் சங்கரமடத் தில் 15 தவில் வித்வான்கள் குழு கச்சேரி.
என் குருநாதர், வலங்கைமான் ஷண்முகசுந்தரம்பிள்ளை போன்ற ஜாம்பவான்கள் இடம் பெற்றி ருந்தனர். ஒரு குழு பல்லவி வாசிக்கும்; மறு குழு அனுபல்லவி வாசிக்கும்; மற்றொரு குழு சரணம் வாசிக்கும். ஒவ்வொருவராக வாசித்துக் கொண்டேயிருக்க எனக்கு சந்தர்ப்பமே கிட்டவில்லை.
கச்சேரி முடிந்ததும் ஒருவர், என்னிடம், பெரியவா வாத்யத்தோடு வந்து தன் முன் வாசிக்கச் சொன்னதாகத் தெரி வித்தார். அப்படியே குளிர்ந்து போனேன். என் இழப்பை தான் பெரியவர் எத்தனை மகோன்னதமாக ஈடு செய்தார்! எப்பேர்பட்ட ஆசீர்வாதம் அது!
என் பூர்வீகம் பட்டுக்கோட்டை பக்கம் ராஜாமடம். குலதெய்வம் பேராவூரணி குருவிக்கரம்பை பக்கத்தில் உள்ள ஊமத்தநாடு காமாட்சி பெத்த பெரு மாள். எங்க வீட்ல எந்த விசேஷம்னாலும் அங்க போய் சாமி கும்பிட்டுட்டு வருவோம். என் இஷ்ட தெய்வம் முருகன். கச்சேரி வாசிக்க ஆரம்பிக் கும்போது ‘குருநாதா’ன்னு பிரார்த்தனை செய்துப்பேன். அரித்வாரமங்கலத்தில இருக்கற பாதாளேஸ்வரர்-அலங்காரவல்லி அம்மனுக்கு மாசி மாசக் கடைசி செவ்வாய்க்கிழமை சந்தனக்காப்பு சாத்தி வழிபடுவேன்.
அந்த ஊர்ல இருக்கற மாரியம்மனுக்கு திருவிழா எடுத்து இன்றளவும் கச்சேரி செய்துகிட்டு வர்றதுக்கு குருவருளும் திருவருளுமே காரணம். தவில் கத்துக்கும் போது திருச்சேறை சாரநாதப்பெ ருமாள் கோயில்ல 3 வருடம் தொடர்ந்து காலை, மாலையில தவில் வாசிச்சது என் பாக்கியம். என் பூஜையறையில கருவாழக்கரை மாரி, என் பெற் றோர், சமயபுரம் மாரி, அரித்வாரமங்கலம் முத்துமாரி எல்லோரும் எனக்கு ஆசீர்வாதம் செய்துகிட்டு இருக்காங்க. இருக்கறவரைக்கும் நல்லபடியா வை.
இன்னொரு முறை படைக்காமல் பிறவா வரம்
தா என்பதே என் பூஜையறை பிரார்த்தனை.’’

- Posts: 3040
- Joined: 03 Feb 2010, 04:44
Re: Kanchi Maha Periyava
ஹரித்வாரமங்கலம் AK பழனி வேல் அவர்களை தான் குறிக்கின்றீர்கள் என அறிகிறேன்.
தஞ்சாவூரன்
24 10 2013
தஞ்சாவூரன்
24 10 2013
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: New series on Maha Periva
பெரியவா பாத்துப்பா 19 !
சண்டி ஹோமம் பற்றிய பதிவு பெரியவா பாத்துப்பா 17ல் ஆரம்பித்தது. தயவு செய்து அங்கிருந்து படியுங்கள்.
இது மிக முக்கியமான பதிவு. இதை படிப்பது மட்டும் அல்லாமல் ஷேர் செய்யும் படியும் கேட்டுக் கொள்கிறேன்.
ஏனெனில், மாமியிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வெகு சிறப்பான குணாதிசியங்களான எப்போதும் சாந்தம் தவழும் புன்னகை பூத்த முகம், மென்மையான குரல், எந்த விதமான சூழ்நிலையிலும் பொறுமை, தீர்க்கமாக யோசித்து தெளிவாக முடிவெடுப்பது, விவேகமான அணுகுமுறை, செய்யும் கார்யத்தில் ஸ்ரத்தை, எடுத்த கார்யத்தை முடிக்கும் வைராக்கியம், அதற்கான தைர்யம், அயராத உழைப்பு, வியக்க வைக்கும் ஆற்றல், யாரிடமும் தவறு காணாத மனம், பெரிய தவறாக இருந்தாலும் இதமான, உறுதியான கண்டிப்பு, நல்லவன், கெட்டவன் என வித்யாசமில்லாமல் அனைவரும் நல்வழிப் படவேண்டும் என நினைக்கும் விசாலமான மனசு, பெரியவா மீது முழு நம்பிக்கை, அவரே எல்லாம் தான் ஒன்றும் இல்லை என்கிற சரணாகதி......இதையெல்லாம் தாண்டி இன்னும் சில அபூர்வமான குணநலன்களை அவரிடம் கண்டேன். அவை இதோ:
சண்டி ஹோம ஆரவாரங்கள் முடிந்து அன்று மாலையும், மறு நாள் காலையும் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் அப்போது சொன்னது, அவருடைய வார்த்தைகளில் 'நான் ஏன் ஆஸ்பத்ரிக்கு கெளம்பிப் போனேன் தெரியுமோ? எல்லாரும் என்னை வந்து விசாரிக்க ஆரம்பிச்சுட்டா. ஹோமத்தையும், அம்பாளையும் விட்டுட்டா. நான் சாதாரண மனுஷி. என்னோட நெருக்கமா இருந்து அவாளுக்கு என்ன கெடைக்க போறது?அம்பாளை இல்லையோ அவா அண்டி இருக்கணும்? நான் அங்க இருந்தா அது நடக்காதுன்னு தோணித்து. அதான் பொறப்பட்டுட்டேன்.
* இதே சூழ்நிலையில் 'நான்' இருந்திருந்தால், அடடா எல்லாரும் நம்மை விசாரிக்கிரார்களே என்று கர்வப் பட்டுக் கொண்டிருந்திருப்பேன். 'நான்' ஏற்பாடு செய்த ஹோமத்தில் 'நான்' இல்லமால் இருப்பதா? 'எனக்கு' கிடைக்கக் கூடிய கௌரவத்தை, பேர், புகழ், பெருமையை இழப்பதா? என்று அங்கேயே உட்கார்ந்து முனகிக் கொண்டிருந்திருப்பேன்.
மாமி தொடர்கிறார் : எனக்கு சந்தோஷமான விஷயம் என்ன தெரியுமா? நான் இல்லாட்டாலும் ஹோமம் நல்ல படியா நடந்து முடிஞ்சுது இல்லையா, அதுதான். எல்லாரோட கேள்விக்கு பதில் கெடச்ச மாதிரியும் ஆச்சு, எனக்கும் நிம்மதி ஆச்சு. 'பெரியவா பாத்துப்பா'ன்னு நான் சொல்றத பெரியவாளே 'எனக்கு நானே'ன்னு நிருபணம் பண்ணிட்டா. (இரண்டுக்கும் வித்யாசம் எதுவும் எனக்கு தெரியவில்லை, உங்களுக்கு?) உங்க எல்லாரையும் வச்சுண்டு தன் கார்யத்தை தானே நடத்திண்டுட்டா. எனக்கும், நீங்கள் எல்லாம் இந்த ஆஸ்ரமத்தை நன்னா வழி நடத்துவேள்னு நம்பிக்கை வந்துடுத்து. அதை நீங்க சீக்கரம் செஞ்சா நானும் தபஸ்ல இறங்கிடுவேன். பெரியவா இந்த கலில சனாதன தர்மத்தை நிலை நிறுத்தனும்னு சங்கல்பிச்சுண்டு இங்க வந்து உக்காந்துண்டு இருக்கா. அவரோட அனுக்ரஹத்துல நீங்க அதை நிறைவேத்தணும்.
ஆஸ்பத்ரில இருந்தப்போ என்னை பெட்ல சேத்துடாதேடான்னு என் பிள்ளை கிட்ட சொல்லிண்டே இருந்தேன். ஏன் தெரியுமா?இல்லேன்னா வந்தவாள் எல்லாம் மாமியை பாக்கலையே ன்னு கொறயோட போவா. சண்டி ஹோமத்துக்கு வந்துட்டு நெறஞ்ச மனசோட போகணும் இல்லையா? அதுனால ஹோமம் முடிஞ்சு எல்லாரும் கெளம்பறதுக்கு முன்னாடி ஆஸ்ரமத்துக்கு போய்டனும்னு உறுதியா இருந்தேன். நல்ல வேளைக்கு ஸ்கேன் ரிப்போர்ட் பெரிய பாதகம் எதுவும் இல்லைன்னு வந்தது. நானும் சரியான நேரத்துக்கு திரும்பி வந்துட்டேன்.
* 'நானாக' இருந்திருந்தால் அப்பாடா, ரெண்டு நாள் நல்ல ரெஸ்ட் எடுக்கலாம் என்று ஆஸ்பத்ரியிலேயே இருந்திருப்பேன்.
இத்தகைய அபார குனாதீசயங்கள் மஹா பெரியவாளுக்கு உண்டு என்று படித்திருக்கிறேன். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய மஹத்துவம் தெரியாமல் போய்விட்டதே, அவருடன் நெருங்கி பழக முடியவில்லையே என வருந்தி இருக்கிறேன். அதற்காகத்தானோ என்னவோ, என் போன்றவர்களுக்காக மாமியை தந்திருக்கிறார். ராம், ராம்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
இது பற்றி இன்னும் கொஞ்சம் சொல்வதற்கு உள்ளது. அவை பெரியவா பாத்துப்பா 20ல்.

thanjavooran..
What you say is correct...
This was shared from Shri Baskaran Shivaraman.....failed to include the name..sorry..
What you say is correct...
This was shared from Shri Baskaran Shivaraman.....failed to include the name..sorry..
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: New series on Maha Periva
பெரியவா பாத்துப்பா 20 !

நிகும்பலைல இந்த்ரஜித் சண்டி ஹோமம் பண்றான். முடிச்சுட்டான்னா, ராமா நீ அவனை ஜெய்க்கவே முடியாதுன்னு விபீஷணன் சொன்ன உடனே லக்ஷ்மணனை அனுப்பறான் ராமன். இந்த்ரஜித்தை சண்டைக்கு இழுத்து அவனோட யக்ஞத்தை கலைக்கறான் லக்ஷ்மணன். அவ்வளவு சக்தி வாய்ந்தது சண்டி ஹோமம். எல்லா துர் சக்திகளையும் அழித்து சகல க்ஷேமத்தையும் கொடுக்கக் கூடியது. ( இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள நெட்டில் ப்ரௌஸ் பண்ணவும்). திருச்சில அம்பாள் சன்னதி முன்னால நடந்த ஹோமத்துல சில அதிசயங்கள் சொல்றேன் கேளுங்கோ (மன்னிக்கவும். அவை பின்னல் வரும்) என்று மாமி ஸ்லாகிக்கும் மஹா சண்டி ஹோமம், வருகிற மே மாதம் பெரியவா ஜெயந்தியை ஒட்டி நடக்க இருக்கும் லலிதா பரமேஸ்வரியின் பட்டாபிஷேக, கும்பாபிஷேகத்திற்கு (மாமியின் சங்கல்பம்) முன்னோடியாய் இனிதே நடந்து முடிந்தது.
பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் அந்த மஹோத்சவத்திற்கு மஹா பெரியவா பக்தர்களாகிய நாம் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
ஹோமத்திற்கு வேண்டிய பொருட்கள், வஸ்திரங்கள், நைவேத்யங்கள், மளிகை, காய்கறி, புஷ்பம், பழங்கள், தேங்காய், வெற்றிலை, இதர மங்கல பொருட்கள் அனைத்தையும் சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும். (மாமியிடம் விவரம் கேட்டு வாங்கிக் கொண்டும் வரலாம்)
மஹா கும்பாபிஷேகம், யக்ஞங்களை வந்திருக்கும் அனைத்து பக்தர்களும் மனம் குளிர கண்டு களிக்கும் வசதி, (மீடியாவில் நேரடி கவரேஜ்), கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல், தண்ணீர், போதிய இருக்கைகள், லைட்டிங், உள் சாலைகளை அகலப் படுத்தி சரி செய்தல், அன்னதானம், பார்க்கிங், பாத்ரூம், அய்யன் (காவேரி) வாய்க்காலில் குளிக்க பாதுகாப்போடு கூடிய படித்துறை, வெளியில் தங்கும் இடங்கள், ஐம்பது கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கோவில்களை பற்றிய குறிப்பு இப்படி பல வேலைகளில் சிறு குழுக்களாக பிரிந்து செயல் படலாம். படம், புத்தகம், பிரசாதம், மங்கல பொருட்கள் அடங்கிய தாம்பூலப் பை போன்றவற்றை விருப்பப் படுபவர்கள் ஸ்பான்சர் செய்யலாம்.
இன்னும் இதில் பல விஷயங்கள் விட்டுப் போயிருக்கலாம். அவற்றை தயவு செய்து தெரியப் படுத்தவும்.
இப்போதைக்கு கோவில் கட்டு மானப் பணிகளும், ஸ்தபதி வேலைகளும் எந்த அளவில் உள்ளது என்பதை போட்டோக்களை பார்த்து தெரிந்து கொள்ளவும். உங்களால் முடிந்த உதவியை, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்யவும். இது பற்றி மாமி சொல்லும் போது ' சென்னை லேர்ந்து ஒரு பையன் அவனோட அப்பா கிட்ட கேட்டு இருபது ரூபா அனுப்பி இருக்கான். நாலு செங்கலுக்கு ஆகும்' என்று நெகிழ்ந்தார். 94433 70605 என்ற எண்ணில் மாமியிடம் பேசுங்கள். அவருடைய ஆசிர்வாதத்தையும் பெறுங்கள். என்னைப் பொருத்தவரை ஸ்ரீ ராமனையும், ஸ்ரீ அம்பாளையும், ஸ்ரீ மஹா பெரியவாளையும் மாமியின் ரூபத்தில் தரிசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதே சத்யம். ராம், ராம்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
இன்னும் வரும்.
Payments may be made through NEFT to the following accounts: Lakshmi Vilas Bank, No 1, Toll Gate, No. 0784301000016904, IFS Code: LAVB 0000784, Indian Bank, No. 1, T.V. Kovil, No. 886244176, IFS Code: IDIB 0000110, City Union Bank – SB115001001829205, IFS Code: CIUB 0000115. PAN: AAKTS 9298 J.
http://mahaperiyavaa.wordpress.com/2013 ... m-project/

நிகும்பலைல இந்த்ரஜித் சண்டி ஹோமம் பண்றான். முடிச்சுட்டான்னா, ராமா நீ அவனை ஜெய்க்கவே முடியாதுன்னு விபீஷணன் சொன்ன உடனே லக்ஷ்மணனை அனுப்பறான் ராமன். இந்த்ரஜித்தை சண்டைக்கு இழுத்து அவனோட யக்ஞத்தை கலைக்கறான் லக்ஷ்மணன். அவ்வளவு சக்தி வாய்ந்தது சண்டி ஹோமம். எல்லா துர் சக்திகளையும் அழித்து சகல க்ஷேமத்தையும் கொடுக்கக் கூடியது. ( இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள நெட்டில் ப்ரௌஸ் பண்ணவும்). திருச்சில அம்பாள் சன்னதி முன்னால நடந்த ஹோமத்துல சில அதிசயங்கள் சொல்றேன் கேளுங்கோ (மன்னிக்கவும். அவை பின்னல் வரும்) என்று மாமி ஸ்லாகிக்கும் மஹா சண்டி ஹோமம், வருகிற மே மாதம் பெரியவா ஜெயந்தியை ஒட்டி நடக்க இருக்கும் லலிதா பரமேஸ்வரியின் பட்டாபிஷேக, கும்பாபிஷேகத்திற்கு (மாமியின் சங்கல்பம்) முன்னோடியாய் இனிதே நடந்து முடிந்தது.
பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் அந்த மஹோத்சவத்திற்கு மஹா பெரியவா பக்தர்களாகிய நாம் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
ஹோமத்திற்கு வேண்டிய பொருட்கள், வஸ்திரங்கள், நைவேத்யங்கள், மளிகை, காய்கறி, புஷ்பம், பழங்கள், தேங்காய், வெற்றிலை, இதர மங்கல பொருட்கள் அனைத்தையும் சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும். (மாமியிடம் விவரம் கேட்டு வாங்கிக் கொண்டும் வரலாம்)
மஹா கும்பாபிஷேகம், யக்ஞங்களை வந்திருக்கும் அனைத்து பக்தர்களும் மனம் குளிர கண்டு களிக்கும் வசதி, (மீடியாவில் நேரடி கவரேஜ்), கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல், தண்ணீர், போதிய இருக்கைகள், லைட்டிங், உள் சாலைகளை அகலப் படுத்தி சரி செய்தல், அன்னதானம், பார்க்கிங், பாத்ரூம், அய்யன் (காவேரி) வாய்க்காலில் குளிக்க பாதுகாப்போடு கூடிய படித்துறை, வெளியில் தங்கும் இடங்கள், ஐம்பது கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கோவில்களை பற்றிய குறிப்பு இப்படி பல வேலைகளில் சிறு குழுக்களாக பிரிந்து செயல் படலாம். படம், புத்தகம், பிரசாதம், மங்கல பொருட்கள் அடங்கிய தாம்பூலப் பை போன்றவற்றை விருப்பப் படுபவர்கள் ஸ்பான்சர் செய்யலாம்.
இன்னும் இதில் பல விஷயங்கள் விட்டுப் போயிருக்கலாம். அவற்றை தயவு செய்து தெரியப் படுத்தவும்.
இப்போதைக்கு கோவில் கட்டு மானப் பணிகளும், ஸ்தபதி வேலைகளும் எந்த அளவில் உள்ளது என்பதை போட்டோக்களை பார்த்து தெரிந்து கொள்ளவும். உங்களால் முடிந்த உதவியை, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்யவும். இது பற்றி மாமி சொல்லும் போது ' சென்னை லேர்ந்து ஒரு பையன் அவனோட அப்பா கிட்ட கேட்டு இருபது ரூபா அனுப்பி இருக்கான். நாலு செங்கலுக்கு ஆகும்' என்று நெகிழ்ந்தார். 94433 70605 என்ற எண்ணில் மாமியிடம் பேசுங்கள். அவருடைய ஆசிர்வாதத்தையும் பெறுங்கள். என்னைப் பொருத்தவரை ஸ்ரீ ராமனையும், ஸ்ரீ அம்பாளையும், ஸ்ரீ மஹா பெரியவாளையும் மாமியின் ரூபத்தில் தரிசித்துக் கொண்டிருக்கிறேன் என்பதே சத்யம். ராம், ராம்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
இன்னும் வரும்.
Payments may be made through NEFT to the following accounts: Lakshmi Vilas Bank, No 1, Toll Gate, No. 0784301000016904, IFS Code: LAVB 0000784, Indian Bank, No. 1, T.V. Kovil, No. 886244176, IFS Code: IDIB 0000110, City Union Bank – SB115001001829205, IFS Code: CIUB 0000115. PAN: AAKTS 9298 J.
http://mahaperiyavaa.wordpress.com/2013 ... m-project/
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: New series on Maha Periva
பெரியவா பாத்துப்பா 21 !
ஒரு வருஷம் அகிலாண்டேஸ்வரி கோவில்ல சண்டி ஹோமம் பண்றதுக்கு ரெண்டு நாள் முன்னாடி அவ சன்னதில உண்டியல் பக்கத்துல நின்னுண்டு இருந்தேன். நல்ல கூட்டம். உள்ள போறதுக்கு டிக்கெட் வாங்கனும்கறதால அங்க இருந்துண்டே அம்பாள்ட்ட வேண்டிண்டேன். அப்போ, நெறைய முடியும், தாடியும், மீசையும் வெச்சுண்டு ஒருத்தர் என்னை தாண்டி உள்ள போனார். பக்கத்துல இருந்த கோவில் காவல்காரன் அவர்தான் எழுத்தாளர் பாலகுமாரன்னு சொன்னான். அவர் திரும்பி வரச்சே சண்டி ஹோம பத்திரிகையை அவர் கைல கொடுத்தேன். அவர் ஹோமத்துக்கு என்னால இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு பணம் எடுத்து கொடுத்தார்.
சண்டி ஹோமம் முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் அவரை அம்பாள் சன்னதில பாத்தேன். ஹோமம் நன்னா நடந்துதான்னு கேட்டார். ரொம்ப விமர்சையா மனசுக்கு நெறவா நடந்ததுன்னு சொல்லிட்டு ஹோமம் நடந்த எடத்தை காமிக்கறதுக்காக திரும்பினேன். அப்போ, பஸ்மத்துலேர்ந்து அம்பாள் மஹா மேருவா மரகத பச்சைல ஒன்றரை அடி உசரத்துக்கு எழுந்து நின்னா. பாருங்கோ, பாருங்கோன்னு நான் சொல்லிண்டு இருக்கறச்சையே மெதுவா அடங்கி அப்படியே பஸ்மாத்துக் குள்ளேயே போய்ட்டா. ரொம்ப பரவசமான அனுபவம் அது. ஆஞ்சநேயர் அது மாதிரி காட்சி கொடுத்த சம்பவத்தை பின்னால சொல்றேன்.
ஒரு தடவை ஒரு அம்மா எங்கிட்ட வந்து, மாமி எனக்கு வயத்துல பெரிய கட்டி இருக்கு. சர்ஜரி பண்ணிக்கலாம்னா, ரொம்ப ரிஸ்க், உங்களுக்கு பிரஷர், சுகர் இருக்குன்னு சொல்லிட்டா. நீங்க தான் மாமி என்னோட கஷ்டத்துக்கு வழி சொல்லணும்னு கேட்டா. அம்மா, வைத்தியம் பாக்கறதுக்கு நான் டாக்டரும் இல்லை, பரிஹாரம் சொல்றதுக்கு ஜோஸ்யனும் இல்லை, சண்டி ஹோம பஸ்மத்தை தரேன். அதை, காலேலையும், சாயங்காலமும் தீர்த்த ப்ரசாதமா எடுத்துக்கோ, அப்புறம் எல்லாம் அம்பாள் விட்ட வழின்னு சொல்லி கொடுத்தேன். மூனு மாசம் கழிச்சு அவ போன் பண்ணினா. டெஸ்ட் டுக்கு போனாளாம். வயத்துல கட்டி இருந்ததோட அறிகுறி கூட இல்லை, என்ன பண்ணினேள் னு கேட்டாளாம். ஓ ன்னு அழுதா. அடுத்த வருஷ சண்டி ஹோமத்துக்கு வந்து நெறைய கைங்கர்யம் பண்ணினா. அப்புறம் சில வருஷத்துக்கு அவளோட பிள்ளைகள் கிட்ட பணம் கொடுத்து அனுப்பினா. அதுக்கப்றம் தொடர்பு விட்டுப் போச்சு. இதை படிச்சா ஒரு வேளை காண்டக்ட் பண்ணுவாளோ என்னமோ. ராம், ராம்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
இன்னும் வரும். தொடர்ந்து படியுங்கள். ஷேர் செய்யுங்கள். மாமியிடம் 94433 70605 என்ற எண்ணில் பேசுங்கள். அவருடைய ஆசிகளை பெறுங்கள். அவர் கட்டி வரும் லலிதையின் கோவிலுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
பெரியவா பாத்துப்பா 22 !
எப்போதும் ஒரு போஸ்ட் போட்டுவிட்டு குறைந்தது இரண்டு நாட்கள் அல்லது ரெகுலராக படிக்கும் அனைவரும் படித்து விட்டார்களா என்று பார்த்து விட்டுத்தான் அடுத்த போஸ்ட் போடுவது வழக்கம். ஆனால், இன்று மாமி சொன்னதை உடனே எழுதி விடவேண்டும் என்று மனசு பரபரக்கிறது. ஆகவே, ஸ்பெஷல் போஸ்ட். ஆனால், தயவு செய்து இதற்கு முந்தய முக்கியமான போஸ்டை படித்து விடவும்.
வேத பாடசாலைக்கு புதுசா நாலு குழந்தைகள் வந்திருக்கா. அவா ருத்ரம் சொல்லி இன்னைக்கு பெரியவாளுக்கு அபிஷேகம் நடந்தது. அவ்ளோ திவ்யமா இருந்தது. 1987/88 ல ஒரு மண்டலம் காஞ்சிபுரத்துலையே தங்கி, ஒவ்வொரு நாளும் மூல மந்த்ரம் ஜபிச்சுண்டே பெரியவா பிக்ஷைக்கு காய்கறி நறுக்கி எடுத்துண்டு போய் ஸ்ரீ கண்டண்ட்ட கொடுப்பேன். அதுவே எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.
இப்போ, காலைல எழுந்துண்ட உடனே பெரியவாளோட அகத்தை (வீடு) பெருக்கி, கோலம் போட்டு, அவரோட கோ சாலைல இருக்கற பசு மாடு, கன்னு குட்டிகளுக்கு தீனி போட்டு கவனிச்சுண்டு, மூல மந்த்ரம் சொல்லிண்டே அவருக்கு பிடிச்ச நைவேத்யத்தை சமைச்சு, ருத்ராபிஷேகம் பண்ணி, பூஜை முடிச்சு, அவர் ரொம்ப ப்ரீயமா இருக்கற பாடசாலை குழந்தைகளுக்கு சாதம் போட்டு, ஜப, பாராயனத்துல மனசை செலுத்தி, இங்க வர அவரோட பக்தாளோட அவரை பத்தி பேசிண்டு, அவாளை உபசரிச்சு .....இதுக்கெல்லாம் என்ன புண்ணியம் பண்ணினேனோ தெரியலை. ஆனா, இது ஒரு ஜன்ம புண்ணியம் இல்லை, பல பிறவில நாக்குல தழும்பு ஏறற அளவுக்கு நாம ஸ்மரணை பண்ணி இருந்தாத்தான் இப்படி ஒரு பாக்கியம் கெடைக்கும். இதைத்தான் பெரியவா அம்பது வருஷத்துக்கு முன்னாடி 'நீ அமோகமா இருக்கப் போறே'ன்னு சூட்ஷுமமா சொல்லி இருக்கா. அன்னிக்கு அதோட அர்த்தம் தெரியல. இப்போ புரியறது. இந்த கலி யுகத்துல ஜன்மா கடைத் தேரனும்னா அதுக்கு சுலபமான வழி நாம ஜபம் தான். நீங்களும் நாம ஸ்மரணைல ஈடுபடுங்கோ. உங்களுக்கு பரம க்ஷேமம் உண்டாகும். ராம், ராம்.
ஸ்ரீ மஹா பெரியவ திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
பெரியவா பாத்துப்பா 23 !
1988ல மஹா ருத்ரம் முடிச்ச கையோட சண்டி ஹோமம் நடந்து, பணம் இல்லாம தட்டு ஏந்தி கடைசில அம்பத்து ரெண்டாயிரம் கடன் ஆச்சுன்னு சொன்னேன் இல்லையா? அந்த ஹோமத்துல ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது. பூர்ணாஹுதில அம்பாளுக்கு போட்ட புடவைலேர்ந்து ஒரு பிட் பறந்து போய் பக்கத்துல நின்னுண்டு இருந்த ஒரு சுமங்கலி மேல விழுந்திருக்கு. உடனே அவ வாந்தி எடுத்து கீழே விழுந்து மூர்ச்சை ஆயிட்டா. கூட வந்தவா அவளை கூட்டிண்டு போயிருக்கா. இதெல்லாம் அப்போ எனக்கு தெரியாது. ஒரு வாரம் கழிச்சு அந்த பொண்ணே எனக்கு போன் பண்ணினா. மாமி, எனக்கு பேய் பிடிச்சிருந்தது. அப்பப்போ அது என்னை பிடிச்சு உலுக்கும். எனக்கு ரெண்டு (அல்லது மூன்று) குழந்தைகள் வேற. என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுண்டு இருந்தேன். அம்பாள் புடவைலேர்ந்து ஒரு சின்ன துண்டு என் மேல விழுந்த உடனே அந்த பேய் ஓடி போய்டுத்து. இப்போ நான் சௌக்கியமா இருக்கேன்னு சொன்னா.
அதி மஹா ருத்ரம், சீதா ராம பட்டாபிஷேகம் பத்தி பேசறப்போ வேற ஒன்னு ஞாபகத்துக்கு வரது. அப்போ எனக்கு சரஸ்வதி ன்னு ஒரு ப்ரெண்ட் இருந்தா. அவ தன் பிள்ளை கிட்ட காரை கொடுத்து எல்லா எடத்துக்கும் என்னை அழைச்சுண்டு போகச் சொல்லுவா. அந்த சமயத்துலதான் எனக்கு லீலா பெஹன் அறிமுகம் ஆனா. அவளை பத்தி ஏற்கனவே உங்க கிட்ட சொல்லி இருக்கேன். ஒவ்வொரு வீடா போய் டொனேஷன் கேப்பேன். அப்படி போகும் போது ஒரு செட்டியார் வீட்டுக்கு போனோம். அவர் பெரிய நகை கடை வச்சிருந்தார். கொஞ்ச நேரம் எல்லாம் கேட்டுண்டு இருந்துட்டு அவரோட பூஜை ரூமுக்கு கூட்டிண்டு போனார். எல்லாம் பெரிய பெரிய படம். படத்துக்கெல்லாம் நெறைய நகை போட்டிருந்தார். ஸ்வாமியை நன்னா வச்சிண்டு இருக்கேள்ன்னு சொன்னேன். அவர், நானே இப்படி தெய்வங்களை கொண்டாடும் போது நீங்க நடத்தற ஹோமத்துக்கு எதுக்கு பணம் தரணும், நீங்க படி ஏறி வந்திருகேள் ங்கறதுக்காக தரேன்னு சொல்லிட்டு பணம் எடுத்து கொடுத்தார். உடனே நான் ரசீது போட்டு கொடுத்தேன். அவர், நீங்க கேக்கறதுக்காகத்தான் கொடுத்தேன், ரசீது வேண்டாம்னு சொல்லிட்டு மறுபடி பணம் கொடுத்தார். நானும் மறுபடி ரசீது போட்டு கொடுத்துட்டு, நான் எனக்காக இங்க வரலை, உங்களுக்காகத்தான் வந்தேன், பகவானுக்கு ஒன்னு செஞ்சேள்னா அவன் நூறு மடங்கா திருப்பி கொடுப்பான். உங்க குடும்பமும் க்ஷேமமா இருக்கும். நீங்க எத்தனை தடவை பணம் கொடுத்தாலும் நான் ரசீது கொடுத்துண்டு தான் இருப்பேன்னு சொன்னேன்.
இப்பவும் நம்மிடம் நம்மாலான துளி மட்டுமே கேட்கிறார். அதுவும் நம் க்ஷேமத்துக்காக. ஒரு பத்து ரூவா கொடுத்தா ரெண்டு செங்கலுக்கு ஆகும். இந்த கைங்கர்யத்துல பெரியவா பக்தாள் எல்லாம் பங்கு எடுத்துக்குங்கோ. அவரோட அனுக்ரஹத்துல சௌக்கியமா இருங்கோ என்கிறார்.
மாமி இதுவரை ஒரு தடவை கூட எப்படி இந்த அம்பாள் கோவில் கட்டி முடியப் போறதோன்னு கவலைப்பட்டு பேசியதே இல்லை. தளம் போட்டாச்சு, கோவில் எல்லாம் வந்துண்டு இருக்கு, ஸ்தபதி வேலை நடக்கறது, கட கட ன்னு கட்டிண்டு இருக்கா - இப்படித்தான் எப்போதுமே உற்சாகத்துடன் சொல்கிறார். கேட்டால், எல்லாம் பெரியவா பாத்துப்பா, எனக்கு நானேன்னு அவர் உங்களைப் போல பக்தாள் மூலமா தானே எல்லாத்தையும் நடத்திண்டு இருக்கார். நான் எதுக்கு கவலைப் படணும் என்கிறார். ராம், ராம்.

அடியிலே பொக்கிஷம்!’
நன்றி;பால ஹனுமான்.
”மேட்டூருக்கு அருகே, நெருஞ்சிப்பேட்டை என்றொரு கிராமம். 1928-ஆம் வருடம் இந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா.
ஊரின் முக்கியஸ்தரான சுந்தர ரெட்டியாருக்கும் அப்போ தைய எம்.எல்.ஏ. குருமூர்த்திக்கும் பெரியவாளிடம் அதீத பக்தியும் அபிமானமும் உண்டு. நினைத்தபோதெல்லாம் ஊர்ப் பெரியவர்களுடன் சென்று, அந்த மனித தெய்வத்தைத்தரிசித்து வருவார்கள். அப்படியிருக்க, அவரே தங்களது கிராமத்துக்கு விஜயம் செய்திருக்கிறார் என்றால், கேட்கவேண்டுமா?!
ஒருநாள்… ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர’ எனும் கோஷம் முழங்க, பெரியவாளைச்சுற்றி அமர்ந்திருந்தனர் ஊர்மக்களும் பக்தர்களும். அப்போது சற்று தூரத்தில், ‘கோவிந்த… கோவிந்த’ எனும் கோஷம் ஒலித்தது. உடனே பெரியவா, ‘இந்த கோவிந்த கோஷம் எங்கேயிருந்து வர்றது?’ என்று கேட்டாராம்.
”பக்கத்திலேயே பாலமலைன்னு ஒரு மலை… அதன் உச்சியில், ஸ்ரீசித்தேஸ்வரர் கோயில் இருக்கு. அந்த ஈஸ்வரனை தரிசிக்க மலையேறும் பக்தர்கள், ‘கோவிந்த, கோவிந்த’ன்னு கோவிந்த நாமாவைச் சொல்லிக்கிட்டுதான் மலை ஏறுவார் கள். கிட்டத்தட்ட 12 மைல் தூரம்!’ என்று ஊர்ப் பெரியவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
மகா பெரியவாளுக்கு ஏக ஆனந்தம். ‘ஈஸ்வரனைத் தரிசிக்க ‘கோவிந்த’ கோஷமா?!’ என்று வியந்து சிலாகித்தவர், ‘நானும் ஸ்ரீசித்தேஸ்வரரை தரிசிக்கணுமே’ என்று தனது ஆசையைக் கூறினாராம். ‘ஸ்வாமிகளுக்கு 12 மைல் மலையேறுவது கஷ்டம் ஆயிற்றே!’ என்று பக்தர்களுக்கு தயக்கம். ஆனால், மகா பெரியவரோ தயங்காமல் கிளம்பிவிட்டார்.
நம் எல்லோருக்கும் வழிகாட்டிய அந்த மகானுக்கு, ஸ்ரீசித்தேஸ்வரரைத் தரிசிக்க வழிகாட்டுவதற்காக, அன்பர்கள் குழு ஒன்றை அவசர அவசரமாக ஏற்பாடு செய்தார் சுந்தர ரெட்டியார்.
மலையில் 12 மைல் தூரம் ஏறிச் சென்று, சுயம்புவான ஸ்ரீசித்தேஸ்வரரைத் தரிசித்த மகா பெரியவர், ”ஒரு நாள், ஒரேயொரு பக்தர், தன் சொந்தச் செலவில் இந்த ஸ்வாமிக்குக் கோயில் கட்டுவார்!’ என்றாராம். மகா பெரியவரின் அந்த தெய்வ வாக்கு அதன்பின் 62 வருடங்கள் கழித்து, 1990-ல் பலித்தது.
அந்த வருடம்… வடநாட்டு சேட்ஜி ஒருவர், ஸ்ரீசித்தேஸ்வரரைத் தரிசிக்க வந்தார். அவருக்கு அந்த ஈஸ்வரன் என்ன ஆணையிட்டாரோ… அந்த அன்பரே தனியொருவராகக் கோயில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்து முடித்து விட்டார்!”
- பரவசத்துடன் இந்தச் சம்பவத்தை விவரித்த அகிலா கார்த்திகேயன், இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் சொன்னார்…
”முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், முழு வரியையும் பாக்கி இல்லாமல் செலுத்திய தன் குடி மக்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க விரும்பினார்.
மந்திரியை அழைத்து, ‘பணத்தைத் தண்ணீ ரில் கொட்டு’ என்று ஆணையிட்டார். அந்த மதியூக மந்திரி என்ன செய்தார் தெரியுமா? தகுந்த பணியாட்களைக் கொண்டு, அங்கே இரண்டு அணைகள் கட்டினாராம். இதனால், ஊர் செழித்தது!
மகா பெரியவா நெருஞ்சிப்பேட்டையில் தங்கியிருந்த காலத்தில், அணைகளின் நடுவே கற்களையே அடித்துச் செல்வதுபோல் பெரும் சத்தத்துடன் தண்ணீர் பாய்ந்ததாம். அங்கே ஒரு பெருமாள் விக்கிரகமும் இருப்பதைக் கண்ட பெரியவர், அணையையும் விக்கிரகத்தையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, ‘இதுபத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?’ என்று ஊர்ப் பெரியவர்களிடம் கேட்டிருக்கிறார்.
”ஒரு ராஜா, இங்கே வேங்கடபெருமாளுக்கு ஆறு ஏக்கர் பூமியைக் கொடுத்ததைக் கதை கதையாகக் கேட்டிருக்கோம். அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும்!” என்று அவர்கள் கூற, ‘அடியிலே பொக்கிஷம்!’ என்று அந்த இடத்தைச் சுட்டிக்காட்டிச் சொன்னாராம்பெரியவா. அப்போது, ஊர் மக்களுக்கு பெரியவா ஏன் அப்ப டிச் சொன்னார் என்பது விளங்கவில்லை!
பல வருடங்கள் கழித்து, மேட்டூர் அணையிலிருந்து வரும் நீரில் மின்சாரம் எடுக்க ஏற்பாடு ஆனது. இன்ஜினீயர்கள் அந்த இடத்தில் பள்ளம் தோண்டிய போது, பெருமாள் விக்கிரகத்தையும் அகற்ற வேண்டியதாயிற்று. வெகு ஜாக்கிரதையாக பெருமாள் விக்கிரகத்தை அகற்றி, 25 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி, அஸ்திவாரப் பணியைத் துவங்கியபோதுதான்… ‘அடியிலே பொக்கிஷம்’ என்று மகா பெரியவாள் சொன்னதன் அர்த்தம் புரிந்தது ஊர்க்காரர்களுக்கு!
முதலில், அனுமன் விக்கிரகம் கிடைக்க, அடுத் தடுத்து ஸ்ரீராமன், சீதாதேவி விக்கிரகங்களும் கிடைத்தனவாம். சிலிர்த்துப்போன சுந்தர ரெட்டியாரும் இன்னும் சில ஊர்ப் பெரியவர்களும், அந்த விக்கிரகங்களை ஒரு டெம்போவில் ஏற்றிக் கொண்டு காஞ்சிபுரம் சென்றார்கள். மகா பெரியவரைத் தரிசித்து, விஷயத்தைச் சொல்லி அந்த விக்கிரகங்களை வைத்துக் கோயில் கட்ட ஆசி வேண்டினர். மகாபெரியவாளும், ”உடனே செய்யுங்கள். சீக்கிரமே நடக்கும்!” என்று அருளாசி வழங்கினார்.
அனைவரும் கிளம்பும்போது, பெரியவர் அவர்களை அழைப் பதாகக் கூப்பிட, மீண்டும் அவர் கள் உள்ளே வந்தனர். ”நான் ஸ்ரீசித்தேஸ்வரரைத் தரிசிக்க மலை ஏறினப்போ, வழிகாட்டியா வந்த பெருமாள் கவுண்டர் நன்னா இருக்காரா?’ என்று கேட்டார்பெரியவர். ஒரு பாமர வழிகாட்டியை, 70 வருடங்கள் கழித்தும் பெயர் முதற்கொண்டு நினைவு வைத்திருந்து, அன்போடு நலம் விசாரிப்பதை எண் ணிச் சிலிர்த்தனர் அவர்கள்.
”கவுண்டர் நன்றாக இருக்கிறார். 95 வயது ஆகிறது” என்று அன்பர்கள் பதில் அளிக்க,பெரியவர் தன் முன் இருந்த தாம்பாளத்தில் இருந்த புது வஸ்திரங்களை அவர்களிடம் காட்டி, ‘இந்த வஸ்திரங்களைக் கொண்டுபோய்ப் பெருமாள் கவுண்டரிடம் நான் கொடுத்ததாகக் கொடுங்கோ. நான் அவரை ரொம்பவும் விசாரிச்சேன்னு சொல்லுங்கோ!’ என அன்புடன் கூறினார். பெருமாள் கவுண்டர் எத்தனை பாக்கியம் செய்திருக்கிறார் என்று உருகிப் போனார்கள் நெருஞ்சிப் பேட்டை அன்பர்கள்.
எங்கோ, எப்போதோ தனக்கு வழிகாட்டியதை மறக்காமல், அந்த அன்பரை நினைவு வைத்திருந்து, தன் மரியாதையையும் அன்பையும் காட்டினாரே… பெரியவாளின் கருணையே கருணை!’‘
நன்றி – சக்தி விகடன்

‘சாஸ்திரத்தை மீறிவிட்டோமோ’ "
பெரியவர்கள் உலக மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தம்மைஅடக்கிக் கொண்டு, தம்மைச் சுருக்கிக்கொண்டு, தம்மை உருக்கிக் கொண்டுஉலக மக்களின் துயர்களை எல்லாம் அடக்குபவர்கள், துன்பத்தைத்துரத்துபவர்கள்
தர்மசாஸ்திரத்தை வாழ்வின் அடித்தளமாகக் கொண்ட ஆன்றோர்கள், கடல்கடந்து செல்வதை சாஸ்திரம் அனுமதிக்காது என்பார்கள். காஞ்சிமகாபெரியவாளின் பக்தர் ஒருவர், சாஸ்திர நியதிகளை உயிராகப் போற்றிவந்தார். இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. குடும்ப நலனையும்எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, வெளிநாடு செல்லும் வாய்ப்பைஏற்றுக்கொண்டார். அந்த நாட்டின் சூழலும் பணியின் தன்மையும் திருப்தியேஎன்றாலும், ‘சாஸ்திரத்தை மீறிவிட்டோமோ’ என்ற உறுத்தல், பக்தரைவாட்டியது. தனது மனக்கலக்கத்துக்கு மருந்தாக… மகாபெரியவாளைஅனுதினமும் தியானித்து வந்தார்! அவருக்கு காஞ்சி மகான் திருவருள் புரிந்தசம்பவத்தை உள்ளம் உருக விவரித்தார் அகிலா கார்த்திகேயன்…
”ஒரு விடுமுறையில் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை ஆசைஆசையாகச் செய்தார். குடும்பத்தாரைப் பார்க்கப் போகிறோம் என்பதைவிட,வெகு நாட்களுக்குப் பிறகு காஞ்சி மகானைத் தரிசிக்கப் போகிறோம் என்றகுதூகலமே அவருக்கு அதிகம் இருந்தது. சென்னை வந்ததும்,விமானநிலையத்தில் இருந்து டாக்சி பிடித்து காஞ்சிபுரம் சென்றார்.
காஞ்சிமடத்தில், அன்றைய சமையல் குறித்து சிப்பந்திகளிடம்பேசிக்கொண்டிருந்தார் மகா பெரியவா. தரிசனத்துக்காக வந்திருந்தஅடியவர்களுக்கு வியப்பு. ‘சமையல் இன்னின்ன மாதிரியெல்லாம்இருக்கவேண்டும் என்பது முதற்கொண்டு பெரியவா சிரத்தைஎடுத்துக்கொள்கிறாரே? இதுவரை இப்படியெல்லாம் சொன்னது கிடையாதே’என்ற ஆச்சரியம் அவர்களுக்கு. இந்த நிலையில்தான் மடத்துக்கு வந்துசேர்ந்தார் பக்தர். மகா பெரியவாளைக் கண்டதும் நெடுஞ்சாண்கிடையாகவீழ்ந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்த பெரியவா, சிப்பந்திகளைஅழைத்து, ”இவருக்கு, உடனே ஆகாரம் பண்ணி வையுங்கோ” என்றார்.வந்ததும் வராததுமாக அந்தப் பக்தரை சாப்பிட அழைத்துச் செல்லும்படிபெரியவா சொல்வது ஏன் என்று ஊழியர் களுக்குப் புரியவில்லை. ஆனால்,கடல் கடந்து தன் பக்தன் வந்திருக்கிறான்; வந்ததும், தன்னைத் தரிசிக்க ஓடிவந்துவிட்டான். எனில், அவனுடைய நிலை என்ன என்பது பெரியவாளுக்குத்தெரியாதா?!
வயிறாரச் சாப்பிட்டு முடித்த பக்தர், மீண்டும் மகாபெரியவாளுக்கு எதிரில் வந்து நின்றார். அவரை உற்றுப் பார்த்த பெரியவா, ”என்ன… உன் விரதம் பூர்த்தி ஆயிடுத்தா?” என்றார் கருணையும் கரிசனமும்பொங்க. அதைக் கேட்டு வியந்து நின்றார் பக்தர்; அவரிடமிருந்துவார்த்தைகளே வரவில்லை! ‘பெரியவா… பெரியவா…’ என்று திருப்பித்திருப்பிச் சொன்னபடியே இருந்தார்; கண்களில் கரகரவென நீர் வழிந்தது!மெள்ளப் புன்னகைத்த காஞ்சி மகான், ”நானே சொல்லி டறேன்!” என்றுஆரம்பித்தார்…
”இவர், வெளிநாட்டுலே இருந்து வர்றார். அங்கேபுறப்பட்டதுலேருந்து எந்த ஆகாரமும் எடுத்துக்கல. என்னை வந்து பார்க்கறவரைக்கும் ஆகாரம் எடுத்துக்கறதில்லேன்னு ஒரு சங்கல்பத்தோட விரதமாஇருந்து, இங்க வந்து சேர்ந்திருக்கார்…” என்றவர், பக்தரைப் பார்த்து, ”என்னநான் சொல்றது சரியான்னோ?” என்று கனிவுடன் கேட்டார். அவ்வளவுதான்…தரிசனத்துக்காக நின்றிருந்த அனைவரும் அசந்துபோனார்கள். எனில், அந்தப்பக்தரை கேட்கவும் வேணுமா… நெக்குருகி நின்றார் அவர்! இதற்கு நடுவில்இன்னொரு சம்பவமும் நடந்தது. அந்த பக்தர் சாப்பிடச் சென்றிருந்தநேரத்தில், தன்னை தரிசிக்க வந்திருந்த மற்றஅன்பர்களிடம்,”வெளிநாட்டுலேருந்து இப்ப இங்கே வந்திருக்காரே…அவர்கிட்டேயிருந்து நான் என்ன கேட்டு வாங்கலாம்னு சொல்லுங்கோ”என்று கேட்டாராம். இதுவும் அங்கேயுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தைஅளித்தது. ஏனெனில், எவரிடமும் ‘இதைக் கொடு, அதைக் கொடு’ என்றுஎதையும் கேட்டறியாதவர் பெரியவர். ஆகவே, பதில் சொல்லத் தெரியாமல்திகைத்துப் போனார்கள் அந்த அன்பர்கள். இந்த வேளையில்தான்… சாப்பிட்டுமுடித்து மீண்டும் பெரியவாளைத் தரிசிக்க வந்தார் அந்த பக்தர்! அவரையும்சுற்றியிருந்த மற்ற அடியவர்களையும் மெல்லிய சிரிப்புடன் பார்த்தமகாபெரியவா, ”இவருகிட்டேயிருந்து என்ன கேட்டு வாங்கலாம்னு யாருமேசொல்லலையே…” என்று கேட்டுவிட்டு, அவரே தொடர்ந்தார்…
”சரி சரி… இவரை அழைச்சுண்டு போய், எள்ளு புண்ணாக்கையும் தையல்இலையையும் எனக்காக வாங்கித் தரச் சொல்லி, வாங்கிக்கோங்கோ!”என்றார். அந்த பக்தர், பரம சந்தோஷத்தில் திளைத்தார். ‘தெய்வத்துக்குநிகரான காஞ்சி மகான், தன்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டாரே’ என்றுநெகிழ்ந்தார்..ஆனால், மடத்தில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு மட்டும் சற்றுதவிப்பு; ஆனால் பெரியவாளிடம் நேரே கேட்கவும் தயக்கம்! இதையெல்லாம்உணராமல் இருப்பாரா பெரியவா. அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர், ”இந்த பக்தர், என் மேல ரொம்ப பக்தியா, அபிமானமா இருக்கார். எங்கிட்டஇருக்கற பிரியத்துனால எனக்கு எதையாவது சேர்ப்பிக்கணும்னு ரொம்பவும்ஆசைப்படறார். ஆனா கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும்வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம் தடுக்கறது. இருந்தாலும் எனக்குஎன்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை நோகவிட்டுடமுடியுமா?” என்று கூறிவிட்டு சற்றே நிறுத்தியவர், மீண்டும் தொடர்ந்துபேசினார்.
”இப்போ அவர் வாங்கிண்டு வர எள்ளுப் புண்ணாக்கை, மடத்துல இருக்கிறபசு மாட்டுக்குக் கொடுங்கோ அந்தப் பசுகிட்டே இருந்து தினமும் கறக்கிறபாலை எனக்குக் கொடுங்கோ. நான் சந்தோஷமா ஏத்துக்கறேன். ஏன்னா,இப்போ அவர் கொடுத்த புண்ணாக்கைப் பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கறபாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ? பசு மாட்டு வழியாவந்தா எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும். அதனால அவர்மனசுல நெனச்சபடி,எனக்குக் கொடுத்த மாதிரியும் ஆச்சு. அதை நான்ஏத்துண்ட மாதிரியும் ஆச்சு. இல்லையா?” என்றார் விளக்கம் சொல்வதுபோல! இப்படி, தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும்பக்தியும் செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை,மகாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்
இன்று அந்த மஹானின் அவதார தினம் காலடியும் மூன்று வார்த்தைகள்தான் காஞ்சியும் மூன்று வார்த்தைகள்தான் எனக்கு இரண்டுமே ஒன்றுதான்.
அனனவருக்கும் அந்த மஹானின் கருணையும், காருண்யமும், அருளும்,அனுக்கிரஹமும் கிட்டட்டும்.
லோகா சமஸ்தா ஸுகினோ பவந்து

பெரியவா பாத்துப்பா 24 !
1986ல சீதா ராம சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் முடிஞ்ச உடனே அதை நடத்தி குடுத்த வடஇலுப்பை குமாரசாமி தீட்சிதர் மாமி, நாம நிச்சயமா பவன (ஹனுமன்) ஹோமம் பண்ணனும்னு சொன்னார். ஆனா, அதுக்கு ஒரு ஆறு மாசம் ஆச்சு. மைசூர் பேலஸ்ல ஒரு சுயம்பு மாருதி கோவில் இருக்கு. அங்கதான் ஹோமம்நடந்தது. பூர்ணாஹுதி பண்ணின உடனே குப் புன்னு ஜ்வாலை மேல எழுந்துது. அதுல ரெண்டு மூனு ஆள் உசரத்துக்கு ஆஞ்சநேயர் நின்னுண்டு இருந்தார். தலைல கிரீடம், கழுத்துல பதக்கம், கைல கங்கணம், இடுப்புல ஒட்டியாணம், முட்டி வரைக்கும் வஸ்த்ரம், கால்ல தண்டை, உருண்டு தெரண்ட புஜங்கள், இடுப்புல கையை வச்சுண்டு அக்னி பிழம்பா இருந்தார். நாங்க எல்லாரும் 'ஜெய் ஹனுமான், ஜெய் ஆஞ்சநேயா' ன்னு கத்தினோம். அவர் அப்படியே அக்னிக்குள்ள இறங்கி மறஞ்சுட்டார்.
இன்னொரு சம்பவத்தையும் சொல்லணும். கொரட்டூர்ல என் மூத்த பிள்ளை ஸ்ரீதர் வருஷா வருஷம் இராமாயண பிரவசனம் ஏற்பாடு பண்ணுவான். ஒரு தடவை சுந்தர் குமார் உபன்யாசம் பண்ணினார். அது நடந்த இடம் மெயின் ரோடுக்கு பக்கத்துல. அதனால எல்லா பஸ்ஸும் அங்க நின்னு போகும். எல்லாரும் கொஞ்சம் ராமாயணம் கேட்டுட்டு போறான்னு நெனச்சுப்பேன். ஒரு நாள் என் மாட்டுப்பெண்னோட தங்கை, அவ மாமியார், மாமனார் எல்லாரும் வந்திருந்தா. அவ ப்ரவசனம் முடிஞ்சு திரும்பி போயிட்டு எனக்கு போன் பண்ணினா. மாமி, ப்ரவசன பந்தலுக்கு நேர் எதிர்ல ஒரு மரத்துல ஆஞ்சநேயர் உக்காந்துண்டு ராமாயணம் கேட்டுண்டு இருந்தார், நாங்க எல்லாரும் பாத்தோம் னு சொன்னா. அப்பதான் எனக்கு புரிஞ்சுது, ஏன் எல்லா பஸ்ஸும் அங்க நின்னு அப்புறம் போச்சுன்னு. ராமாயணம் நடக்கற எடத்துல நிச்சயம் ஹனுமன் எங்கயாவது இருந்துண்டு ராம நாமத்தை கேட்டுண்டு தான் இருப்பார். ராம், ராம்.

பெரியவா பாத்துப்பா 25 !
தீபாவளி. கட்டட, ஸ்தபதி வேலை செய்யறவா எல்லாரும் ஊருக்கு போறதுக்கு ரெடியா நிக்கறா. ஆனா, கொடுக்கறதுக்கு போதுமான அளவுக்கு பணம் இல்லை. எல்லா எடத்துலயும் கேட்டு பாத்தாச்சு. எங்கயும் கெடைக்கல. நெருக்கடி. உள் மனசு, பெரியவா பாத்துப்பா ன்னு சொல்றது. வெளி மனசு, இவா இந்த பணத்தை வெச்சுத் தானே குழந்தைகளுக்கு டிரஸ், பட்டாசு, ஸ்வீட்ஸ் எல்லாம் வாங்கணும் னு பதபதைக்கறது. அப்போ ஒரு போன் வரது. மாமி, நான் ....பேசறேன். டிரஸ்ட் அக்கௌன்ட் ல .....பணம் போட்ருக்கேன்னு. மனசுல ஒரு நிம்மதி. சந்தோஷம். பெரியவா மறுபடி ப்ரூவ் பண்ணிட்டா, தன் கார்யத்தை தானே பாத்துப்பேன்னு. பெரியவா சொல்லி இருக்கா, தீபாவளி அன்னிக்கு சன்யாசிகள் கூட கங்கா ஸ்நானம் பண்ணனும்னு. நீங்க எல்லாரும் விடிய காலம்பற எழுந்து, தலைக்கு எண்ணெய் தேச்சு, வெந்நீர் போட்டு ஸ்நானம் பண்ணுங்கோ. அன்னிக்கு எல்லா ஜலத்துலயும் கங்கை வாசம் பண்றா. நெறைய விளக்கு ஏத்தி வெச்சு பிரகாசமா தீபாவளி கொண்டாடுங்கோ. சௌக்யமா இருங்கோ. பெரியவா அனுக்ரஹத்துல உங்க எல்லாருக்கும் பரம க்ஷேமம் உண்டாகட்டும் னு நான் பகவானை பிரார்த்தனை பண்ணிக்கறேன். ராம், ராம்.

கார்த்திகை பாலனைப் பற்றி காஞ்சி மாமுனி
-----------------------------------------------------
பரமசிவனின் நேத்ராக்னியில் இருந்து வந்தவரே குமாரசுவாமி. அவர் ஞானாக்னியானாலும் இதயத்தில் குளிர்ந்தவர். ஏனென்றால் ரொம்ப ஜலசம்பந்தம் உள்ளவர். சரவணம் என்ற பொய்கையில் தான், சிவதேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது. அம்பாளே சரவணப் பொய்கை. அப்பா நெருப்பாக இருக்க, அம்மா நீராக இருந்தாள். ஜலரூபமான கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா. அதனால் முருகனை காங்கேயன் என்று அழைத்து வழிபடுகிறோம். எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா. சஷ்டிப் பெண்களுக்கு அவர் பாலன் ஆனார். கார்த்திகைப் பெண்டிருக்குப் பிள்ளையாகக் கார்த்திகேயர் ஆனார். நட்சத்திரத்தில் ஆறாக இருப்பது கார்த்திகை. திதியில் ஆறாவது சஷ்டி. இவருக்கு ஆறுமுகம். ஆறு அட்சரம் கொண்ட சடாக்ஷரி (சரவணபவ) இவருடைய மந்திரம். மனிதர்களிடமுள்ள காமம் (பெண்ணாசை), குரோதம் (கோபம்), லோபம் ( பற்று), மோகம் (பிற ஆசை), மதம் (ஆணவம்), மாச்சர்யம் (வெறுப்பு) என்ற ஆறு பகைவர்களைக் கொன்று ஞானம் அருளும் ஆறுபடை வீரர் அவரே. ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை சக்தி சக்தி என்றே சொல்லுகிறோம். வேதமே முக்கியமாக அக்கினி வழிபாட்டு மதம் தான். அக்கினி என்ற வார்த்தையோடு தான் வேதம் ஆரம்பமாகிறது. உபா சனையில் (இறைவனை வழிபடும் முறை) ஒளபாசனம் என்னும் அக்கினி முறையே முக்கியமானது. இதற்கு சுப்பிரமணியரே அதிதேவதையாக இருக்கிறார்.
-காஞ்சி மஹாஸ்வாமி

தமிழ் நாடு இல்லேன்னா சங்கீதமே இல்லை
================================
1990 ஆம் ஆண்டு நான் சங்கீத வித்வத் சபையில் உள்ள இசைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி. என்னுடன் படித்தவர்களில் பெரும்பான்மையோர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.
ஒரு நாள் எங்களுக்குள் ஒரு சிறு விவாதம் வந்தது. அப்போது அவர்கள், “சங்கீத மும்மூர்த்திகள் 3 பேருமே…சம்ஸ்க்ருதம் & தெலுங்கில்தான் பாடி இருக்கிறார்கள்.எனவே தெலுங்கும் சம்ஸ்க்ருதமும் இல்லை என்றால், சங்கீதமே இல்லை என்று தெலுங்கர்கள் கூறினார்கள்.தமிழ் சுத்த waste என்றார்கள். சாதாரணமாக நான் மொழிகளிக்கிடையில் எந்த வித்யாசமும் பார்ப்பதில்லை. ஆனால், அவர்கள் இப்படி சொன்னதும் எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
ஆகையால் நானும் பதிலுக்கு ஏன்? தமிழில் தேவாரம், திருவாசகம் எல்லாம் இல்லையா? பழந்தமிழர் இசை எல்லாம் இல்லையா என்று வாதாடினேன்.அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால், தனியே வாதாடிக் கொண்டிருந்த என் வாதம் ஈடு படவில்லை. அதற்குள் கல்லூரி முடிந்து அன்று சோர்ந்து போய் கிட்டத்தட்ட அழுத நிலையில் வீட்டுக்குப் போனேன்.
என் முக வாட்டத்தைக் கண்ட என் தாயார், என்ன விஷயம் என்று விசாரித்தார்கள். நானும் சொன்னேன். ஆனால், இதை ஒரு பொருட்டாகவே மதிக்காக என் அம்மா, ” நாளைக்கு காஞ்சீபுரத்துக் போய் பெரியவாளை தரிசனம் பண்ணப் போறேன். நாளைக்கு காலேஜுக்கு லீவ் போட்டுவிட்டு நீயும் வா என்றார். எனக்கோ மன சங்கடம். நம் வருத்தத்தைப் பற்றி அம்மா கொஞ்சம் கூட கவலையே படவில்லையே….என்று.
அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. எனவே அடுத்த நாள், கல்லூரிக்குச் செல்லாமல் காஞ்சீபுரம் செல்வது என்று தீர்மானித்தேன்.
எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. எனவே நான் வரைந்த சங்கீத மும் மூர்த்திகளின் (தியாக ராஜர், முத்து சுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்த்ரிகள்) ஓவியங்களை மஹா சுவாமிகளுக்கும் காட்டி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
மறுநாள் நானும் என் அம்மாவும் மஹா சுவாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருந்தோம். தரிசனமும் நன்றாகக் கிடைத்தது. நான் கொண்டு சென்றிருந்த ஓவியங்களை, சுவாமிகளின் அருகில் இருந்த உதவியாளர் மூலமாக, சுவாமிகளிடம் கொடுத்தேன். அந்த மூன்று படங்களையும் பார்த்த பெரியவர், இதெல்லாம் யார் வரைஞ்சா? என்றார். அந்த உதவியாளர், என் பெயரையும் ஊரையும் கேட்டார். சொன்னேன். அப்படியே பெரியவாளிடம் சொன்னார். உடனே பெரியவா, அந்த குழந்தையை, என் முன்னாடி வர சொல்லு, என்றார். நானும் அம்மாவும் போனோம். எங்களை உட்கார சொன்னார்.
அதற்கு முன் அவரை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததோ அவருடன் பேசியதோ இல்லை என்பதால், ஆச்சர்யம் சந்தோஷம் பயம் என பலவித உணர்சிகளுடன் எதிரே அமர்ந்திருந்தேன்.
என்னுடைய படிப்பு பற்றி எல்லாம் விசாரித்தார். நானும் சங்கீதக் கல்லூரியில் படிப்பதாகக் கூறினேன். அப்போது ஒரு க்ஷண நேரம் முதல் நாள் நடந்த வாக்கு வாதத்தைப் பற்றி பெரியவாளிடம் சொல்லி அதற்கு ஒரு தீர்வு கேட்கலாமா என்று தோன்றியது. அப்படி செய்தால், அதிகப் பிரசங்கி என்று நினைத்துவிடப் போகிறார்களே என்று என்னை நானே அடக்கிக் கொண்டுவிட்டேன்.
ஓவியங்களைப் பார்த்த பெரியவர், சங்கீத மும் மூர்த்திகளின் கீர்த்தனைகளைப் பாட சொன்னார். மூன்று பேருடைய கீர்த்தனைகளிலும் ஒவ்வொன்று பாடினேன்.
பிறகு அந்த ஓவியங்களைப் பற்றி விசாரித்தார்.
அதில் முத்து சுவாமி தீட்சிதரின் . கையில் உள்ள வீணையில் நான் ஒரு தவறு செய்திருந்தேன். முத்து சுவாமி தீட்சிதரின் வீணை மற்ற வீணைகளைப் போல் இல்லாமல், யாளி மேல் பக்கமாக இருக்கும். ஆனால், எவ்வளவு முயன்றும் ஏனோ அந்த இடம் மட்டும் எனக்கு சரியாகவே வரைய வரவில்லை. ஆகையால், எல்லா வீணைகளையும் போல் யாளியைக் கீழ்ப் பக்கமாகவே வரைந்திருந்தேன்.
அந்தத் தவறை சுட்டிக் காட்டிய பெரியவா, "அந்த வீணை தீட்சிதருக்கு சாக்ஷாத் கங்கா தேவியே அனுக்ரஹம் பண்ணிக் கொடுத்தது. அதை மாத்தறது தப்பு. அடுத்த தரம் வரும் போது அதை சரியா வரஞ்சு எடுத்துண்டு வா." என்றார்.
பிறகு, “இவளோட ஜீவிய சரித்ரம் தெரியுமோ உனக்கு?” என்றார். நானும், ” ஓரளவுக்குத் தெரியும் பெரியவா” என்றேன். தெரிஞ்சமட்டும் சொல்லு…..என்றார்.
இவா மூணு பேரும் திருவாரூர்லே பிறந்தா…..என்று நான் ஆரம்பித்ததுதான் தாமதம். உடனே நிறுத்து என்று சைகை செய்த பெரியவர் தொடர்ந்தார். அவர் வாக்கிலேயே சொல்கிற...
contd அவர் வாக்கிலேயே சொல்கிறேன்.
“தர்சநாத் அப்ர சதஸி ஜனநாத் கமலாலையே
காச்யாம் து மரணான் முக்தி: ஸ்மரணே அருணாச்சலே“
இதுக்கு என்ன அர்த்தம்னா…....
சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசனம் பண்ணினா முக்தி, சிதம்பரத்தை அப்ர சதஸ் ன்னே சொல்லி லிருக்கு. சபைன்னா, சித் சபைதான். சபாபதின்னா நடராஜ மூர்த்திதான். ருத்ரத்துலே கூட சபாப்யோ சபாபதிப்யச்சவோ நமோ நமோ…ன்னு சொல்லி இருக்கு.
இப்பேர் பட்ட மஹா சபையான பொன்னம்பலத்தை தரிசனம் பண்ணிக்கணும்.
அடுத்தது, ஜனநாத் கமலாலையே….
இதுக்கு கடைசிலே வரேன்…..
காச்யாம்து மரணான் முக்தி: ன்னா…காசியிலே போய் ஜீவனை விட்டா, மோக்ஷம்…இது நம் எல்லாருமே கேள்விப் பட்டுருக்கற சமாச்சாரம்தான்.
ஸ்மரணே அருணாச்சலே…. சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசனம் பண்ணிண்ட முக்தின்னா….இங்கே அருணாசலேஸ்வரரை நினைச்சுண்ட தத் க்ஷணத்திலே (அந்த நிமிஷத்திலேயே) முக்தி.
இப்போ கமலாலயம் சமாசாரத்துக்கு வருவோம்.
ஜனநாத் கமலாலையே ன்னா திருவாரூர்லே பிறந்தால் முக்தி. அந்த ஓவியங்களைக் காட்டி, இவா -மூணு பேருமே திருவாரூர்லே பிறந்திருக்கா. அங்கே பிறந்ததுனாலேயே ஜீவன் முக்தாள் ஆய்ட்டா.
இப்போது என்னிடம்…..
“ஆமா…உனக்கு ஒரு சமாசாரம் தெரியுமோ…..
இந்த திருவாரூர்…நம்ப தஞ்சாவூர் ஜில்லாலதான் இருக்கு….
ஆமாம் என்பது போல் நான் தலையை ஆட்டினேன்.
அவா எந்த பாஷையிலே பாடி இருந்தாலும் அவா பிறந்த இடம் நம் தமிழ்நாடுதான். அப்படி பார்த்தா….சந்கீதத்தினுடைய பிறப்பிடமே நம் தமிழ் நாடுதான்னு சொல்லலாம் இல்லையா.( மீண்டும் ஆமாம் என்ற பாவனையில் தலை ஆட்டினேன்.)
தமிழ் நாடு இல்லேன்னா சங்கீதமே இல்லை ன்னு சொல்லிடலாமே இல்லையா…..பாஷைங்கறது நம் மனசுலே நினைக்கறதை வெளிப் படுத்தற ஒரு கருவிதான். அதனாலே….அவா தமிழ்லே பாடலயேன்னு நாம் ஒண்ணும் வருத்தப் பட்டுக்க வேண்டாம்…..
முதல் நாள் கல்லூரியில் நடந்த வாக்கு வாதத்திற்கு ஒரு அருமையான விளக்கம் நான் கேட்க்காமலேயே கிடைத்தது. பெரியவாளின் மேற்படி விளக்கத்தைக் கேட்டு நான் எப்படிப்பட்ட உணர்ச்சியில் இருந்தேன் என்பதை விவரிக்கத் தெரியவில்லை. என் கண்களில் கரகரவென்று கண்ணீர் வந்துவிட்டது.
சங்கீத மும்மூர்த்திகள் பலவிதமான தெய்வங்களை பற்றிப் பாடி இருக்கிறார்கள். அது எந்த தெய்வத்தைப் பற்றி இருந்தாலும் ஒவ்வொரு முறை நான் பாடும் போதும் நான் நினைத்துக் கொள்ளும் ஒரே தெய்வம் நம் கருணைக் கடலாம் காஞ்சி மகான் ஒருவர்தான்....

இத்தகைய பேறு பெற்ற விதூஷி யார் என்று அறிந்து கொள்ள அவா
தஞ்சாவூரான்
05 11 2013
தஞ்சாவூரான்
05 11 2013
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: New series on Maha Periva
http://blog.dinamani.com/?p=217
பெரியவா பாத்துப்பா !
தீபாவளிக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. கோவில் கட்டட வேலை செய்யறவாளும், ஸ்தபதிகளும் ஊருக்கு போறதுக்கு ரெடியா நிக்கறா. ஆனா, அவாளுக்கு கொடுக்கறதுக்கு கைல பணம் இல்லை. எல்லா முயற்சியும் பண்ணிப் பார்த்தாச்சு. எங்கேயும் கிடைக்கல. உள் மனசு ‘பெரியவா பாத்துப்பா’ன்னு சொல்றது, ஆனா வெளி மனசு வேலை செய்தவாளுக்கெல்லாம் பணம் கொடுத்தாத்தானே அவாளோட குழந்தைகளுக்கு டிரஸ், பட்டாசு, இனிப்பு, கார பதார்த்தங்கள் வாங்க முடியும்னு பதைபதைக்கிறது. அப்போ ஒரு போன் வரது, ‘மாமி, டிரஸ்ட்ல பணம் போட்ருக்கேன், எடுத்துக்கோங்கோ’ன்னு. ஒரு நொடில நெருக்கடி தீர்ந்தது. அதுதான் பெரியவா. சன்யாசிகளே கங்கா ஸ்நானம் பண்ணி தீபாவளி கொண்டாடனும்னு அவர் சொல்லி இருக்கறச்சே, குடும்பஸ்தர்களை தவிக்க விட்ருவாரா என்ன?’ என்று சிலாகிக்கிறார் ராஜலக்ஷ்மி விட்டல் மாமி.
rajalakshmiயார் இவர்? கோவில், ஸ்தபதி என்றெல்லாம் சொல்கிறாறே, அப்படியானால் இவர் ஏதேனும் கோவில் கட்டிக் கொண்டிருக்கிறாரா? யாருக்கு? சற்று விரிவாகவே இவரது கதையை பார்ப்போம்.
மாமிக்கு வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. திருச்சியில் இருந்து முசிறி செல்லும் பாதையில் நொச்சியம் என்று வழங்கப்படும் மாதவப்பெருமாள் கோவில் என்கிற ஊரில் லலிதா பரமேஸ்வரிக்கு கோவில் எழுப்பிக் கொண்டிருக்கிறார். கணபதி, சுப்ரமண்யர், வேத வியாசர், ஆதி சங்கரர், மஹா பெரியவர் – இவர்களுக்கும் சன்னதிகள் உண்டு. அது சரி, இந்த வயதில் எதற்கு இப்படியொரு பகீரத பிரயத்தனம்?
‘முதல்லேர்ந்து சொன்னாதான் புரியும். சொல்றேன் கேளுங்கோ. 1961ம் வருஷம். பூந்தமல்லி ரோட்ல எதோ ஒரு எடத்துல பெரியவா கேம்ப். என்னோட நாத்தனார் குடும்பத்துல எல்லாருக்கும் அவர் கிட்ட ரொம்ப பக்தி. நானும் அவரை தரிசனம் பண்ணனும்னு என் அப்பாவை அழைச்சிண்டு போனேன். மத்யான நேரம். அவர் பந்தலுக்கு கீழே உட்கார்ந்துண்டு இருந்தார். நான் ஒரு கம்பத்தை பிடிச்சு நின்னுண்டு அவரையே பார்த்துண்டு இருந்தேன். அவர் திடீர்னு எழுந்துண்டு விறுவிறுன்னு நடக்க ஆரம்பிச்சார். என்னை தாண்டி போகும் போது ‘நீ அமோகமா இருக்கப் போறே’ன்னு சொல்லிண்டே போனார். அப்போ எனக்கு அதோட அர்த்தம் தெரியலை. ஆனா, இப்போ புரியறது. அதுக்கப்றம் பெரியவா தன்னை எங்கிட்டேர்ந்து மறச்சுண்டுட்டா. குடும்பம், அகத்துக்காரர், குழந்தைகள் அப்டின்னே இருந்துட்டேன்.
அப்புறம் சில வருஷம் திருச்சில இருந்தோம். 1967-68ல மழையே இல்லை. ஜனங்கள் தண்ணிக்கு தவியா தவிச்சுது. லாரில தான் தண்ணி வரும். ஆடு, மாடுகளுக்கு அதுவும் கிடைக்கலை. விளைச்சல் இல்லை. விவசாயிகளும் ரொம்ப கஷ்டப்பட்டா. அப்போ, அரியூர் சுப்ரமண்ய கனபாடிகளோட இராமாயண பிரவசனம் வச்சேன். முதல் ஒன்பது நாள் மழைக்கான அறிகுறியே இல்லை. பத்தாவது நாள், இன்னைக்கும் மழை வரலைன்னா ராமனும் பொய், என்னோட பக்தியும் பொய், நான் இராமாயண உபன்யாசம் பண்றதையே விட்டுடறேன்னு அவர் சங்கல்பம் பண்ணிண்டார். அவர் ஊருக்கு கிளம்பற சமயம் வானம் பொத்துண்டு மழை கொட்டி தீர்த்தது. ராமன் தான் பொய் இல்லைன்னு நிரூபிச்சான்.
அதுக்கப்றம் நாங்க பெங்களூரு போய்ட்டோம். அப்போதான் மாமாவும் நானும் பெரியவாளுக்கு பிக்ஷை பண்ண ஆரம்பிச்சோம். அதுக்கு பின்னால ஒரு கதை இருக்கு. நான் என் நாத்தனார் கிட்ட நானும் உங்களை மாதிரி பெரியவாளுக்கு பிக்ஷை பண்ணனும்னு சொல்லுவேன். அவாளும், உனக்கு பெரியவா பக்தி இவ்வளவு இருக்கே, நிச்சயம் நடக்கும்னு சொல்லுவா. ஒரு நாள் ராத்திரி எனக்கு ஒரு கனவு வந்தது. வெள்ளை புடவை கட்டிண்ட ஒரு நடுத்தர வயசு மாதுவோட பெரியவா கதவை திறந்துண்டு உள்ளே வரா. ஆதிசங்கரரோட தாயார் ஆர்யாம்பாள் தான் அதுன்னு எனக்கு தெரியறது. அப்படின்னா, ஆதி சங்கரர் தான் இப்போ பெரியவாளா அவதாரம் பண்ணி இருக்கார்னு புரிஞ்சுது. நான் பெரியவாளுக்கு பிக்ஷை பண்ணனும்னு கேக்கறேன். அவர், எனக்கு வெறும் மோர் சாதம் போறும்னு சொல்றார். ஆனா, 1975க்கு அப்புறம் தான் நாங்க விடாம பெரியவாளுக்கு பிக்ஷை பண்ணினோம். அது பெரியவா 1994ல சித்தி ஆகற வரைக்கும் தொடர்ந்தது. அதுக்கப்றம் என்ன பண்றதுன்னு தெரியல. மத்தூர் சுவாமிகள் கிட்ட கேட்டேன். அவர், நீங்க இனிமே பெரியவா ஜெயந்தி கொண்டாடுங்கோன்னு சொன்னார். அது பெரியவா அனுக்ரஹத்துல இதுவரைக்கும் நடந்துண்டு வரது.
இதுக்கு நடுவுல 1986ல மைசூர் பேலேஸ்ல சீதா ராம பட்டாபிஷேகம் வடஇலுப்பை குமாரசாமி தீட்சிதரை வச்சு பண்ணினோம். அதுவும் பெரியவா ஏற்பாடு பண்ணினதுதான். ராமனோட சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் அமோகமா நடந்தது. நாங்க பிரசாதத்தையும் மத்த எல்லா சாமான்களையும் எடுத்துண்டு பெரியவாளை பார்க்க போனோம். அவர், ‘என்ன, பரமேஸ்வரனுக்கு யக்ஞ சேஷத்தை கொண்டு வந்திருக்கியா’ன்னு கேட்டார். தான் சாக்ஷாத் ஈஸ்வரன்னு அவர் தன் வாயால சொன்னது எனக்கு பிரமிப்பா இருந்தது.
1988ல நடந்த அதிமஹா ருத்ரம் தான் என்னை அடியோட மாத்தினது. அதுல கொஞ்சம் கடன் ஆயிடுத்து. அப்போதான் நான் பெரியவாளை மனசுல நினைச்சுண்டு ‘இன்னேலேர்ந்து என்னோட உடல், பொருள், ஆவி எல்லாமே உங்களை சேர்ந்தது. நான் உங்களோட அடிமை’ன்னு பிரதிக்ஞை எடுத்துண்டேன். அப்புறம் சில மாசத்துல கடனும் அடைஞ்சது.
பெரியவா சித்தி ஆனதுக்கு அப்பறம் முதல் ஜெயந்தி சென்னைல நடந்தது. அதுக்கு பின்னால திருச்சில பல இடத்துல பெரியவா ஜெயந்தி உற்சவம் பண்ணினோம். ஆனா, நமக்குன்னு ஒரு இடம் வேணும்னு தோணிண்டே இருந்தது. அப்போதான் கொள்ளிட கரைல இந்த இடத்தை பார்த்தேன். வாழை தோட்டம், தென்னை மரங்கள், மாடு, கன்னு குட்டிகள்னு ரொம்பவே பிடிச்சு போச்சு. பெரியவாளுக்குன்னு சேர்த்து வச்ச பணத்தை கொடுத்து வாங்கினோம். முதல்ல எனக்கு வேத பாடசாலை மட்டும்தான் மனசுல இருந்தது. அப்புறம் பெரியவாதான் கோசாலை, கோவில்னு விரிவு படுத்தி இருக்கா. இன்னும், ஏழைகளுக்கு அன்ன தானம், படிப்பு, நூலகம், மருத்துவம், அனாதை பிரேத சம்ஸ்காரம், திதி கொடுக்கற வசதி எல்லாம் பண்ணனும்னு ஆசை இருக்கு. எல்லாம் பெரியவா தானே பார்த்துப் பார்த்து நடத்திக்கறா. அடுத்த வருஷம் பெரியவா ஜெயந்தியை ஒட்டி லலிதாம்பிகா பட்டாபிஷேகம், கும்பாபிஷேகம் பண்ணலாம்னு சங்கல்பிச்சுண்டு இருக்கேன். எல்லாம் அந்த கைலாசபதி கைலதான் இருக்கு. உலகம் பூரா பெரியவாளை கொண்டாடனும்னு எனக்கு ஆசை. அது இப்போ நிறைவேறிண்டு இருக்கு. பெரியவா இங்க இருந்துண்டு தர்ம பரிபாலனம் பண்ணுவா. அவரோட அனுக்ரஹத்துல நாடு சுபிக்ஷம் அடையும். ஜனங்கள் சந்தோஷமா இருப்பா.
தீபாவளியை பத்தி ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன். அன்னிக்கு விடிய காலம்பற எழுந்து, எண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர் போட்டு ஸ்நானம் பண்ணுங்கோ. அந்த நன் நாள்ல எல்லா ஜலத்துலையும் கங்கை வாசம் பண்றதா ஐதீகம். விளக்குகள் ஏத்தி வச்சு, புதுசு உடுத்திண்டு, எல்லாருக்கும் இனிப்பு வழங்கி உறவுகளோடையும், நட்புகளோடையும் தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்கோ. தீயது எல்லாம் அழிஞ்சு, தர்மம் நிலைச்சு வீடும், நாடும், லோகமும் நன்னா இருக்கணும்’னு பிரார்த்தனை பண்ணிக்குங்கோ. ராம், ராம்.
அவர் முடித்து விட்டார். ஆனால், அவருடைய பக்தி, அசைக்க முடியாத நம்பிக்கை, எடுத்த கார்யத்தை முடிப்பதில் உறுதி, அதற்கான தைர்யம், தெளிவான சிந்தனை, தீர்கமாக யோசித்து முடிவெடுப்பது, விவேகமான செயலாற்றல், மலர்ந்த முகம், கனிவான குரல், எல்லோரிடத்திலும் அன்பு, நகைச்சுவை உணர்வு, அசாத்திய ஞாபகத்திறன் தவறுகளை கண்ணியமான கண்டிப்புடன் திருத்தும் பக்குவம், இவை ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் நமக்கு நீங்கவில்லை.
94433 70605 என்ற எண்ணில் மாமியுடன் பேசலாம். அவரது ஆஸ்ரமம் திருச்சி நொச்சியத்தில் மாதவப் பெருமாள் கோயில் அருகே உள்ளது, 4/305, ஐயன் கால்வாய் தெற்குக் கரையில். ‘Sri Jagadguru Kanchimamunivar Charitable Trust’. என்ற பெயரில் இந்தப் பணி நடைபெறுகிறது.
இந்தப் பணியில் தோள் கொடுக்க, மகாபெரியவரின் அன்பர்கள், Indian Bank A/C Number: 886244176 (Bank Address: 51, Sannadhi Street Tiruvanai Koil Trichy 620005, IFSC Code: IDIB000S110) ராஜலட்சுமி மாமிக்கு உதவலாம்.

பெரியவா பாத்துப்பா 26 !
சமீபத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது மாமி சொன்னார் 'இதையே எழுதிண்டு இருந்தேள்னா படிக்கறவாளுக்கு போர் அடிச்சுடும். அதனால இப்போதைக்கு நிறுத்தி வச்சுட்டு, செய்ய வேண்டிய திருத்தங்களை எல்லாம் செஞ்சு, இங்கிலீஷ்ல பண்ணனும்னு சொன்னேளே அதையும் தயார் பண்ணிட்டு, மறுபடியும் ஆரம்பிக்கலாம்'. இன்னும் எழுதுவதற்கு என்னிடம் குறிப்புகள் இருப்பினும் 'சரி மாமி' என்றேன். 'ஆனா, அதுக்கு முன்னாடி நான் இப்போ சொல்றத எழுதிடுங்கோ'....... 'இந்த எடத்தை வாங்கும் போது வேத பாடசாலை மட்டும் தான் எனக்கு மனசுல இருந்தது. பெரியவாதான் அதை கோசாலை, கோவில்னு பெரிசு பண்ணி இருக்கா. இது சாமுத்ரிகா லக்ஷணத்தோட அமைஞ்ச எடம். கோ முகமா இருக்கு. அது ரொம்ப விசேஷம்னு சொல்லுவா. நான் வந்து பாக்கறச்சே வாழையும், தென்னையுமா, பசு, கன்னு குட்டிகளோட லக்ஷ்மிகரமா இருந்தது. பெரியவா தானே அமைச்சுண்டது. வேத, கோ சம்ரக்ஷனையும், அன்னதானமும் பெரியவாளுக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்கள். அதெல்லாம் கால காலத்துக்கும் இங்க நடக்கப் போறது. பெரியவா இங்க உட்கார்ந்துண்டு தர்ம பரிபாலனம் பண்ணப் போறா. இதையெல்லாம் நெனச்சா சந்தோஷமா இருக்கு. பெரியவா பக்தி உலகம் பூரா பரவனும்னு எனக்கு ஆசை. அது இப்போ நடந்துண்டு இருக்கு. எந்தெந்த தேசத்துலேர்ந்தோ எனக்கு போன் பண்ணி பேசறா. நேர வரா. அம்பாளுக்கும், பெரியவாளுக்கும் நிறைய செய்யறா. அவாள பாக்கறதும், பெரியவாளை பத்தி பேசறதும் மனசுக்கு நெறவா இருக்கு. மூனு வருஷத்துக்கு முன்னாடி இங்க ஒன்னுமே கெடயாது. ஆனா, இப்போ கோவில் கோபுரம் வரைக்கும் வந்தாச்சு. யாரால? என்னாலயா? இல்லை, எல்லாம் பெரியவா உங்கள மாதிரி பக்தாளை வச்சுண்டு தானே செஞ்சுக்கறா. ஆச்சு, இன்னும் ஆறு மாசத்துல பெரியவா ஜெயந்தியை ஒட்டி கும்பாபிஷேகம். எல்லா பக்தாளும் அதுல கண்டிப்பா கலந்துக்கணும்னு எழுதுங்கோ. அந்த மஹா பிரபுவோட அனுக்ரஹத்துல உங்க எல்லாருக்கும் சகல சௌபாக்யங்களும் உண்டாகும். அநாதை பிரேத சம்ஸ்காரம், ஏழை குழந்தைகளுக்கு படிப்பு, மூதாதையர்களுக்கு ஸ்ரார்த்தம் பண்றது இப்படி இன்னும் சில முக்கியமான தர்மங்களையும் பெரியவா சொல்லி இருக்கா. அவரோட கருணையினால அதெல்லாம் கூட இங்க ஏற்படுத்தணும். நீங்க எல்லாருமா சேர்ந்துண்டு இந்த கார்யங்களை செய்யணும். பொறுப்புகளை நீங்க எடுத்துண்டேள்னா நான் தியானம், தபஸ்னு இருந்துடுவேன். நீங்க எழுதறத படிக்கற எல்லாரையும் எங்கிட்ட பேசச் சொல்லுங்கோ. தயக்கமே வேண்டாம். பெரியவா பக்தாளோட பேசறதுல எனக்கு சந்தோஷம்தான். ஆஸ்ரமத்துக்கும் வரச் சொல்லுங்கோ. எல்லாரும் வைகாசி மாசம் நடக்கப் போற அம்பாளோட பட்டாபிஷேகத்துக்கு அவசியம் வரணும். ராம், ராம்.
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
*கிட்டத்தட்ட ஐம்பது எபிசோடுகள். இன்னும் எழுதுவதற்கு நிறைய உள்ள போதிலும், ஏற்கனவே எழுதியவற்றில் பல திருத்தங்கள் செய்ய வேண்டி இருப்பதாலும், ஆங்கில மொழியாக்கம் செய்து கொண்டிருப்பதாலும், சற்று இடைவெளி விட்டு கூடிய மீண்டும் 'பெரியவா பாத்துப்பா' தொடரும். இத்தனை நாட்கள் இத்தொடரை படித்து, ஷேர் செய்து, கருத்துக்களை கூறி என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி. மீண்டும் சந்திப்போம்.
மாமியுடன் 94433 70605 என்ற எண்ணில் பேசுங்கள்.
I have sent Rs 5000/ to mami a few days back and also spoke to mami for the construction of the Temple at Nochiam
She conveyed her blessings to all my relatives and also my friends.
Few hours after I spoke to her ,I got information from my Son-in law that my daughter who was hospitalized for nearly 12 days
was discharged from there after getting back to near normal....That is the power of MahaPeriva through the blessed mami..
-venkatakailasam

A story by Maha Periva...
சிபியின் கதை எல்லோருக்கும் தெரியும். ஒரு புறாவுக்காகத் தன் சரீரத்தையே, பிராணனையே தியாகம் செய்ய முற்பட்ட மஹாபுருஷன் அவன். நம் மதத்தில் ஜீவகாருண்யத்துக்குத் தந்திருக்கிற முக்கிய மான ஸ்தானத்துக்கு சிபி கதை ஒன்றே போதும்.
வேத பூமியான இந்த பாரதபூமியின் விசேஷம் மனுஷ்யனுக்காக மட்டுமில்லாமல், மற்ற ஜீவராசி களுக்கும், பூச்சி பொட்டுகளுக்கும்கூட க்ஷேமத்தைக் கோரி தியாகம் பண்ணச் சொல்வது. இதில், இன்னொரு பக்கம், இந்த மண்ணின் விசேஷத்தால் மற்ற ஜீவராசிகளுக்கும்கூட இப்படிப்பட்ட பரோபகார சிந்தனையும், தியாக புத்தியும் இருப்பதாகச் சொல்கிற புராண விருத்தாந்தங்களைப் பார்க்கிறோம்.
புறாவுக்காகத் தியாகம் செய்த சிபியைப் பற்றிச் சொன்னேன். புறாக்களே செய்த பரம தியாகத்தை 'கபோத உபாக்யானம்’ சொல்லுகிறது. 'கபோதம்’ என்றால் புறா என்று அர்த்தம். 'உபாக்யானம்’ என்றால், சின்ன கதை என்று அர்த்தம். இந்தப் புறாக்களின் கதை மனசை ரொம்பவும் உருக்குவது.
வேடன் ஒருத்தன் இருந்தான். அவன் காட்டிலே வலை வீசி, ஒரு பெண் புறாவைப் பிடித்தான். அப்போது ஒரே இடியும் மழையுமாக வந்தது. இந்தப் புறாவும், அதன் ஜோடியான ஆண் புறாவும் வசித்த மரத்தடியிலேயே அவன் ஒண்டிக்கொண்டான். மழை நின்றபோது, நல்ல இருட்டாகிவிட்டது. ஒரே குளிர்! வேடனால் அங்கிருந்து புறப்பட முடியவில்லை. குளிரில் உடம்பெல்லாம் நடுங்க, அங்கேயே ஒடுங்கி உட்கார்ந்து விட்டான்.இதைப் பார்த்த மரத்தின் மேல் இருந்த ஆண் புறா தன்னுடைய ப்ரிய பத்தினியைப் பிடித்த பாபி நன்றாக அவஸ்தைப் படட்டும் என்று நினைக்கவில்லை. நேர்மாறாக, நம் தேசத்தின் விருந்தோம்பல் பண்பு முழுதும் அந்தச் சின்ன பட்சியிடம் திரண்டு வந்துவிட்டது. ''நாம் வசிக்கிற மரத்தின் கீழ் இவன் வந்துவிட்டான். அதனால் இவன் நம் வீட்டுக்கு வந்துவிட்ட மாதிரி. 'அதிதி தேவோ பவ’ - 'விருந்தாளியை தெய்வமாக நினை’ என்பது வேதை ஆக்ஞை. எனவே, இந்த அதிதிக்குத் தன்னாலான ஒத்தாசையைச் செய்ய வேண்டும்'' என்று நினைத்தது.முதலில், குளிரில் நடுங்குகிறவனுக்குக் கணப்பு மூட்டவேண்டும் என்று நினைத்தது. தன் கூட்டையே பிரித்து, அதிலிருந்த காய்ந்த குச்சிகளை வேடனுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டது. தன் வீடு போனாலும் சரி, அவனுக்கு சௌகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற உத்தமமான எண்ணம்.'சிகிமுகி’ கல் என்று ஒன்று உண்டு. 'சிக்கிமுக்கி’ என்று பேச்சு வழக்கில் சொல்லு கிறார்கள். 'சிகி’ என்றால் நெருப்பு என்று அர்த்தம். 'சிகை’ உள்ளதெல்லாம் 'சிகி’தான். சிகையை விரித்துக்கொண்டு ஆடுகிற மாதிரிதானே நெருப்பு ஜ்வாலை நாக்குகளை நீட்டிக்கொண்டு கொழுந்துவிட்டு எரிகிறது? 'முகம்’ என்றால் வாய். வாயில் நெருப்பை உடைய கல்தான், அதாவது தேய்த்தால் நெருப்பை உமிழ்கிற கல்தான் 'சிகிமுகி’.
இப்படிப்பட்ட சிகிமுகி கற்களைப் புறா தேடிக்கொண்டு வந்து போட்டது. வேடன் அவற்றை ஒன்றோடொன்று தட்டி நெருப்பு உண்டாக்கி, அந்த நெருப்பில் சுள்ளிகளைப் பற்றவைத்துக் குளிர் காய்ந்தான்.தனக்குப் புறா இத்தனை உபகாரம் செய்ததும், வேடனுடைய குரூர சுபாவம் கூட மாறி, மனசு இளகிவிட்டது. தான் பிடித்திருந்த அதனுடைய பேடையை விட்டுவிட்டான்.'விருந்தோம்பல் என்றால், முக்கியமாக அதிதிக்குச் சாப்பாடு போடுவதுதான். இந்த வேடன் இங்கே நம் விருந்தாளியாக வந்துவிட்டுப் பட்டினி கிடந்தால், அதனால் நமக்கு மஹாபாபம் ஏற்படும். இவனுடைய பசியை ஆற்றுவதே நம் முதல் தர்மம்’ என்று பெண் புறா நினைத்தது.அவனுடைய ஆகாரத்துக்காக அது வேறு எங்கேயோ போய்த் தேடவில்லை. தானே இருக்கும்போது வேறு ஆகாரம் தேடுவானேன் என்று நினைத்தது. உடனேயே, கொஞ்சங்கூட யோசிக்காமல், பரம சந்தோஷத்தோடு அந்த அக்னியில் தானே விழுந்து பிராண தியாகம் பண்ணி விட்டது. நெருப்பில் வெந்து பக்வமான தன்னை அவன் புசிக்கட்டும் என்ற உத்தம சிந்தை.இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதனுடைய ஜோடிப் பட்சியும் அந்த நெருப்பிலேயே விழுந்து தன்னை வதக்கிக் கொண்டது. 'என்பும் உரியர் பிறர்க்கு’ என்கிற மாதிரி, இப்படி உயிரையே தந்தாவது இன்னொருத்தருக்கு உபசரிக்க வேண்டும் என்ற தத்துவத்தை நம் மத க்ரந்தங்களில் எல்லாம் நிறையச் சொல்லியிருக்கிறது.'
A share...

"அமுதசுரபி புத்தகத்திலிருந்து " - -- ஸ்ரீ ஸ்ரீ ரா.கணபதி
1907 இல் பெரியவா பீடாதிபத்தியம் ஏற்ற போதிலும் காஞ்சியிலுள்ள ஸ்ரீ மடத்தில் முதல் வ்யாசபூஜை செய்தது 1953 இல்தான் . அதனை சேர வந்த சாதுர்மாசத்தின்போதும் அது முடிந்த பிற்படும் கூட பல மாசங்கள் மௌனம் பூண்டிருந்தார் . அதில் பெரும் பாகம் காஷ்ட மௌனம் . அதாவது சிறிய அசைவும் இல்லாமல் கட்டையை போல் சமைந்திருபார். .
இச் சமயம் பார்த்து பர்மாவைச் சேர்ந்த ஒரு கோடிஸ்வரர் தரிசனத்திற்கு வந்தார். பௌத்த மதத்தில் தீவிர அனுஷ்டானமுள்ள அவருக்கு ஆன்மியமாக ஒரு சங்கை. அது பெரியவாளாலேயே தீரும் என்று சமிக்ஞை பெற்று தான் காஞ்சிக்கு வந்திருக்கிறார் . பெரியவாளா னால் கண் கொட்டாமல் மூச்சு விடுகிறாரா என்று கூட தெரி யா மல் சிலையாக இருக்கிறார்.
பர்மியர் கூறியதை அவர் காதில் வாங்கியதாகவே குறிப்பு காணோம்.
பர்மியரும் பொறுத்து பொறுத்து பார்த்தார்.
அந்நாள் ஸ்ரீ மட மேனேஜர் C.S. விஸ்வநாதையர் வெள்ளை மனதுடன் சொல்லுவார் : " என்னால் தான் பொறுத்து கொள்ள முடியவில்லை. விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அந்த பர்மாகாரன் எத்தனை ஏக்கமும் துக்கமுமாயிருகிறான் என்று ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ,கோடிஸ்வரனாய் இருக்கிறானே , வந்த காரியம் அனுகூலமானால் நம்ம கஜானாவை ரொப்பி விடுவானே . இந்த எஜமானரானால் இப்படி பண்ணுகிறாரே என்று . எத்தனையோ முட்டி கொண்டு பார்த்தேன் . ஒன்றும் அந்த காஷ்டத்திடம் பலிக்கவில்லை !"
தவித்து வேண்டிய சந்தேக நிவாரணத்தைப்பெறாமலே பர்மியர் ஊருக்கு திரும்ப வேண்டிய நேரமும் வந்தது. பெரியவாள் சந்நிதியில் இருந்த அளவும் தம்மை அவர் கவனித்ததாகத் தெரியவிட்டாலும் , அந்த சாநித்யமே தமக்கு ஒரு பெரும் சாந்தியூட்டியதாக ஸ்ரீ மடதினரிடம் அந்த பர்மியர் கூறிக்கடைசியாக ஒரு தரிசனம் செய்யச் சென்றார் - மடத்தின் கஜானாவையும் ஓரளவு நிரப்பிவிட்டு .
பெரியவாள் நேராக அவரை நோக்கினார். பல காலமாகப் புறப்பொருள் எதையும் உற்று நோக்காதிருந்த திருநயனங்களில் சூரியனின் ஒளியும் சந்திரனின் குளுமையும் கலந்து நர்த்தனமிட்டன .
பர்மியர் பரவசரானார் . அழுதார் , சிரித்தார் ! ஆடினார் , பாடினார்! பன்முறை பணிந்தெழுந்தார் .
சரேலென பெரியவாளை மிகவும் சமீபித்து அவருடைய காதோடு காதாக ஏதோ விம்மி விம்மிக் கூறினார்.
பல காலமாக நெகிழாதிருந்த திரு அதரங்கள் தாமரை மலர்வதைப்போலத் திருநகை புரிந்தன .
பூமியில் கால் பாவாமலே பர்மியர் ஆனந்தமாக அகன்றார். அவருடைய இதய கஜானா நிரம்பிவிட்ட இறும்பூது!
மாதங்கள் கடந்து பெரியவாள் பெரியவா பேச்சுலகுக்குத் திரும்பினார்.
ஸ்வாதீன பக்தர்கள் சிலர் அன்று பர்மியர் அழுது சிரித்து ஆடி பாடும் படி என்ன நேர்ந்தது என்று அவர் சொல்லித்தானாக வேண்டும்மென்று அடம் பிடித்தனர் .
அவரும் அதற்கும் மேல் அடம் பிடித்தார். அது பற்றி சொல்லவதில்லை என்று.
"அவனுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு எப்படித் தெரியும் ? அவனையே போய் கேட்டுக்கோங்கோ !" என்றார்.
" சரி , பெரியவா காதுலே அவர் என்னமோ சொல்லி , பெரியவா அதை அங்கீகாரம் பண்ணிண்டு சிரிச்சேளே ! அதுவாது என்னன்னு பெரியவா சொல்லலாமே !" என்றார் அவர்களில் ஓர் அதிஸ்வாதீன அடியார்.
""அதுவா?" என்று பெரியவாள் சட்டென்று விஷயத்தைக் கொட்டி விட்டார் . குறும்பு கொப்பளிக்க " பொழுது விடிஞ்சு பொழுது போனா நான் யாரைக் கண்டனம் பண்றேனோ அந்த புத்தரைச் சொல்லி "அவர் நீதான்!" ன்னுட்டுப் போய்ட்டான் !"
சங்கர மடத்தின் ஜகத்குருராக இருந்து கொண்டு எவரைக் கண்டித்தி ருக்கிறாரோ அவராகவே தரிசனமும் உள் அனுபவமும் தருகிறார் ஒரு தனி ஜீவனுக்கு குருவாகும்போது.

காமாட்சி அம்மனுக்கு மேலே ஒரு காலத்தில் பொன்மயமாக இருந்த விமானம், தங்க ரேக்கெல்லாம் அழிந்து வெறும் செம்பாக இருந்தது.
அந்த கால கட்டத்தில் மடத்துக்கு வசதி போதாது. அன்பர்களும், பக்தர்களும் கொடுப்பதைவைத்து மடம் நடந்து கொண்டிருந்தது.பல நாட்கள் பிட்சா வந்தனத்துக்கு யார் வரப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பது கூட உண்டு. சந்நியாச தர்மப்படி அந்த பிட்சாவந்தனத்தை வைத்துத்தான் பெரியவாளுக்கு பிட்சையே நடக்கும்.
எனவே "விமானத்துக்கு தங்கரேக்கைப் பயன்படுத்தாமல் ஏன் வெறும் செம்பாக வைத்திருக்கிறீர்கள்?" என்று பெரியவா மானேஜரைக் கேட்ட போது, "பண வசதி போதாது" என்று அவர் தெரிவித்து விட்டார்.
பெரியவா ஆசாரியை வரவழைத்து எவ்வளவு பவுன் ஆகுமென்று கேட்டார். விமானமெல்லாம் கழற்றிக் கீழே வைக்கப்பட்டது. பார்த்துவிட்டு,ஆசாரி பல பவுன்கள் வேண்டும் என்றார். "அதற்கு எங்கே போவது?" என்ற கேள்விக்குறி பெரியவா முகத்தில் பெரியவாளோ, "பண்ண ஆசையிருக்கு,எப்படி என்றுதான் தெரியலை?" என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.அந்த சமயம் மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், பெரியவாளை தரிசனம் பண்ண உள்ளே வந்தார்.பெரியவா கட்டளைப்படி தேவகானம் பொழிந்தார் பெரியவா அவரிடம், "எனக்கு காமாட்சி அம்மனின் விமானத்தை தங்க ரேக்கால் ஒளி வீசச் செய்யணும்னு மிகவும் ஆசையாக இருக்கிறது.இவர்களெல்லாம் அது முடியாத காரியம். பவுனுக்கு எங்கே போவது என்கிறார்கள். பெரிய குறையாக இருக்கிறது.
ஆனால்,உன் பாட்டைக் கேட்டதும் அந்தக் குறை தணிந்துவிட்டது. உனக்குக் கனகதாரா தோத்திரம் தெரியுமோ?" என்று கேட்டார்.
"சுமாராகத் தெரியும்" என்றார் விஸ்வநாதய்யர். அங்கே வந்திருந்த பெண்மணிகளில் சிலர்,"எனக்குத் தெரியும்" என்று முன் வந்தனர். எல்லோரும் சேர்ந்து கனகதாரா தோத்திரத்தை முழக்கினார்கள். அதைச் சொல்லி முடித்தார்களோ இல்லையோ ஒரு அதிசயம் நடந்தது.
அங்கேயிருந்த ஒரு தட்டில் அத்தனை பெண்களும் தங்கள் நகைநட்டுகளைக் கழட்டிப் போட்டனர். "ஆசார்யரது ஸ்லோகத்தை இன்றைக்குச் சொன்னாலும் பொன்மாரி பொழிகிறதே" என்று பெரியவர் புளகாங்கிதம் அடைந்தார். அதை அப்படியே ஆசாரியிடம் அள்ளிக் கொடுத்து ஐந்து நாட்களுக்குள் தங்க விமானம் பண்ணி எடுத்து வா என்றார்.
அந்த பவுனை எடை போட்டுப் பார்த்தபோது ஆசாரி கேட்ட பவுனுக்கு ஒரு குந்துமணி கூடவுமில்லை, குறையவுமில்லை என்று அதிசயப்பட்டார் ஆசாரி.
சர்வ வல்லமை படைத்த மகானான பெரியவா ஒன்று நினைத்தால் அது நடக்காமல் போய்விடுமா என்ன? ஆறே நாளில் தங்க விமானம் வந்து,கும்பாபிஷேகமும் அமோகமாக நடந்தேறியது.
ஒரு ஏழைப் பெண்ணுக்காக அம்பாள்,அன்று பொன்மழை பொழிந்தாள் இன்று பல ஏழைப் பெண்மணிகள் மனதால் ஒன்றுபட்டு,அம்பாளுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பியது போல் அந்த நிகழ்ச்சி அமைந்தது....
Shared...

A share from my friend
தமிழக முதல்வராக இருந்த திரு M G R பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். அவர் சற்று உடல் நலக்குறைவாக இருந்ததால், veசரியாகப் பேசக்கூட முடியாமல் இருந்தார். பெரியவாளை தர்சனம் பண்ணும் ஆசையில் மனைவியுடனும், பிச்சாண்டி என்னும் தன் P A வுடனும் காரில் காஞ்சிபுரம் வந்தார். பெரியவாளும் அப்போது கொஞ்சம் உடல்நலக்குறைவாக இருந்தாலும், எம்.ஜி.ஆருக்கு தர்சனம் குடுத்தார். போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் எல்லாரும் அமர்ந்திருந்தனர். வெளியே நின்று கொண்டிருந்த பிச்சாண்டியை எம்.ஜி.ஆர் உள்ளே வரும்படி அழைத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.
"ஒன்னோட P A வா?.."
"ஆமாம்.." கரங்களை உயர்த்தி ஆசிர்வதித்தார்.
எம்.ஜி.ஆர். பெரியவாளிடம் "உங்கள் தேகம் எப்படியிருக்கு?.." என்று கேட்டது, பெரியவா காதில் "தேசம்" என்று விழ,
"தேசத்துக்கு என்ன? நன்னாத்தானே இருக்கு.." என்றதும், எம்.ஜி.ஆர் பிச்சாண்டியைத் திரும்பிப் பார்க்க,
"பெரியவாளோட தேகம் எப்டி இருக்குன்னு முதல்வர் கேக்கறார்.." என்று பிச்சாண்டி கூறினார்.
"அதுக்கென்ன? நன்னாத்தான் இருக்கு.." என்று சிரித்ததும், பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாரிஷதர்கள் டக்கென்று குறுக்கே பாய்ந்து, "பெரியவாளுக்கு ஒடம்பு ரொம்ப முடியலே; மருந்தே சாப்ட மாட்டேங்கறார்...மொதல் மந்திரிதான் சொல்லணும்" என்று 'போட்டு'க் கொடுத்தார்கள்.
எம்.ஜி.ஆர் சிரித்துக் கொண்டே, "சொல்லுங்க...நான் என்ன பண்ணணும்?.." என்று பணிவாகக் கேட்டார்.
"எனக்கு நீ மூணு கார்யம் பண்றதா வாக்குறுதி குடுக்கணும்...குடுப்பியா?"
"உத்தரவிடுங்க. கட்டாயம் செய்யறேன்.." எம்.ஜி.ஆர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கூறினார்.
"மொத விஷயம்...தமிழ்நாட்ல பல கோவில்கள்ள வெளக்கே எரியறது இல்லே; எல்லாக் கோவில்லயும் வெளக்கு எரியணும்; அதுக்கு நீ ஏற்பாடு பண்ணணும் ..." எம்.ஜி.ஆர் தலையாட்டினார்.
"ரெண்டாவுது விஷயம்..பல கோவில்கள் ரொம்ப மோசமான நெலைமேல இருக்கு. அதையெல்லாம் ஒழுங்கு படுத்தி, கும்பாபிஷேகம் பண்ணணும் .."
"பண்ணிடறேன்..."
"மூணாவது ...." பெரியவா சொல்லத் தயங்கினார். எம்.ஜி.ஆர் அவரை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
"மூணாவது விஷயம்...அந்த நாகசாமியை மன்னிச்சுடு!.."
[யார் இந்த நாகசாமி? பழங்காலக் கோவில்கள், சின்னங்கள் இவற்றை ஆராய்ந்து புதுப்புது தகவல்களை சேகரித்து வைத்திருப்பவர் இந்த நாகசாமி. தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் பெரிய அதிகாரியாக இருந்தவர். அவர், தான் கண்டுபிடிக்கும் பல பழமையான விஷயங்களை, நேரடியாக தானே பத்திரிகைகளுக்குச் செய்தியாகத் தொகுத்துக் கொடுத்துவிடுவார். பத்திரிகைகளைப் பார்த்துதான், முதல்வரே அவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுவார். முதல்வருக்கு இது தம்மை உதாசீனப்படுத்தும் செயலாகப் பட்டது. அரசாங்கத்துக்குச் சொல்லிவிட்டுத்தானே வெளியில் எதையும் சொல்லவேண்டும் என்பதால், நாகசாமியை சஸ்பெண்ட் செய்திருந்தார். இந்த விஷயத்தை நாகசாமி பெரியவாளிடம் சொல்லக்கூட இல்லை! முதல்வரிடமும் எந்த விளக்கமும் கொடுக்கவும் இல்லை.]
எம்.ஜி.ஆர் கொஞ்சம் மௌனம் சாதிக்கவும், பெரியவா "ஏன்னா, நாகசாமி நெறைய கோவில்களைப் பத்தி ரொம்ப நன்னா, வெவரமா ஆராய்ச்சி பண்ணி, எவ்வளவோ விஷயங்களை நாட்டுக்காக தெரியப்படுத்தியிருக்கார். அவர் ஆராய்ச்சி பண்ணலேன்னா, இன்னிக்கி பல விஷயங்கள் தெரியாமலேயே போயிருக்கும்...."
"மன்னிச்சிடறேன்..." எம்.ஜி.ஆர் மனதார சொன்னார்.
தன்னுடைய உடல்நலக் குறைவைப் பற்றிக் கவலைப்படாமல், தமிழ்நாட்டுக் கோவில்களைப் பற்றி பெரியவா பட்ட கவலையால், எம்.ஜி.ஆர் காலத்தில், அனேகமாக எல்லாக் கோவில்களுக்கும் நன்மையே உண்டானது.

Maha Periyava's message!
by Smt.E Gayathri from her blog Jasmine Strings...

Above is a crown made of Tulasi beads, cardamom and 'lavangam' strewn around and shaped as "OM" (in sanskrit) on it. This is the crown which His Holiness, Pujyasri Sri Sri Chandrasekharendra Saraswathi asked me to wear on my head while I performed in His Divine Presence (in Orikkai village, while He was observing Silence) when I was 11 years old.
Kumudam Bhakti magazine (Issue:-April 16-30,2010) carried my photographs and interview. The interview though well presented had a few gaping holes (obviously due to a communication gap) which I thought I would fill up here.
The interview states that I had been to the Ashram of Paramahamsa Yogananda in Encinitas and I also had His darshan!!!! He had attained liberation in the year 1952,even before I was born!
The article also states that I do not go abroad due to my belief that Hindu Dharma is opposed to flying overseas. This statement is partially true. There was a long period of time (through the best part of the 80s and all through the 90s) when I had simply refused to go abroad as I firmly believed that my living God, Paramacharya was against Hindus crossing the high seas. In the bargain I had even rejected plum offers from abroad inviting me to perform veena. In the latter half of 80s to the best part of 90s, I was frequenting Kanchipuram, involving myself (for a brief period during mid-90s) in the fund raising of the temple that is being constructed for Paramacharya in Orikkai village, near Kanchipuram. In the bargain I had the great fortune of meeting and interacting with renowned vedic scholars and close associates of Paramacharya. In all our conversations, the one thing that struck a chord in me was His objection to Hindus crossing the mighty Oceans. I wondered whether the rule (not to go abroad) applied only to vedic pundits and sanyasis. I even knew of a few staunch devotees who not only travelled abroad frequently, but also raised funds abroad towards the construction of Paramacharya's temple. I was genuinely confused and no matter how much I discussed about this, I could never get a clear and concrete answer whether women and artistes could go abroad. After much introspection, I decided not to accept concerts abroad. My trips to Muscat in early 90s and Berlin, Germany in 2002 for unavoidable reasons were the only exceptions. I had rejected many offers all through till last year, when the mother got the better of the aritste in me.
2009 was the year I rushed to San Diego to be with my daughter, Haritha who works for Qualcomm.
In my interview I had mentioned all about the dreams I had while in San Diego. From day one in San Diego, I had dreamt of saints and great sages. The prophetic dream about Paramahamsa Yogananda got me trailing the path to His ashram in Encinitas (a half-an-hour's drive from San Diego).
I had semi-visions of Sri Vidyaranya Swami while in San Diego and Houston. I was taken aback that all these divine things were happening to me in the US!!!! While I was posting articles on Soundarya Lahari (mantras,yantras and text) in my blog, 'Jasmine Strings' while in San Diego, I had curious dreams of 'Kundalini' rising like a serpent!
The ultimate dawning (that I was all along wrong in believing that Paramacharya was opposed to Hindus going abroad) ascended on me in the form of a prophetic dream!
In my dream, Paramacharya, in His saffrons,smiled gently as He beckoned to me. I was pushing back my two plaits and more keen to play in the sand (which means I was a child of 6 or 7 when I used to wear two braids and loved to play in the sand!) I slowly walked towards Him and He smilingly made me sit on His lap. He started chanting a famous and most powerful mantra and asked me to repeat it. I repeated it and word by word He made me repeat the entire mantra. In between, when I mispronounced a verse, He smiled and asked me "Idu yaaru solluvaa?". I corrected myself and repeated the whole mantra to His satisfaction. I asked Him in english,"how many times should I say this everyday?" He smiled widely as though to a child and told me the number, allowing me to run towards the sand.
When I woke up the next day, I understood the implication of Paramacharya appearing in my dreams while in San Diego. His appearance in my dream not only reaffirmed the fact that He was "Sarvaantharyaami" (Omnipresent), He also let me know through the dream that He was not against Hindus travelling anywhere under the sun! He actually sought His child (myself) in the US to preach me the mantra! I also realized that while I was in India I had never had such powerfully divine dreams almost everyday! From the next day of my dream till today, I recite the mantra everyday as instructed and guided by Paramacharya in my dreams in San Diego.
The Kumudam Bhakti interview mentions my dream without mentioning the crux, that Paramacharya IS NOT opposed to Hindus crossing the oceans to go abroad.
I am a follower of her blo for a long time..now..
http://egayathri.blogspot.in/2010/04/pa ... ssage.html

'எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே"?
பெரியவா சொன்ன ஒரு கதை;
( அவன் உன்கிட்டேயே இருப்பவன்தான். 'தத்தூரே தத்வந்திகே’)
'கல்யாணம் ஆகவேண்டிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளின் பெற்றோர், பந்துக்களுக்குள்ளேயே ஒரு முறைப் பையனைப் பார்த்து, அவனுக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தீர்மானித்தனர். ஆனால், அந்தப் பெண்ணோ, ''புருஷர்களில் எல்லாம் உயர்ந்தவன் எவனோ, அவனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்'' என்று பிடிவாதம் பண்ணினாள். அவர்களும், ''உன் இஷ்டப்படியே செய்!'' என்று விட்டுவிட்டார்கள்.
அந்தப் பெண், 'புருஷர்களுக்குள்ளேயே உயர்ந்தவன் ராஜாதான். எனவே, அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டு, அவ்வூர் ராஜா பின்னாலேயே போய்க்கொண்டிருந்தாள்.
ஒருநாள், ராஜா பல்லக்கில் போய்க்கொண்டு இருந்தபோது, ஒரு சாமியார் எதிரே வந்தார். ராஜா பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி, அந்தச் சாமியாருக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டுத் திரும்பவும் பல்லக்கில் ஏறிப் போனான். இதை அந்தப் பெண் பார்த்தாள். 'அடடா! ராஜாதான் புருஷர்களுக்குள் உயர்ந்தவன் என்று எண்ணி இத்தனை நாளும் ஏமாந்துவிட்டேனே! ராஜாவைக் காட்டிலும் உயர்ந்தவர் சாமியார் போல் இருக்கிறதே! கல்யாணம் பண்ணினால் இந்தச் சாமியாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானித்து, அந்தச் சாமியார் பின்னாலேயே சுற்ற ஆரம்பித்துவிட்டாள்.
ஒருநாள், சாமியார் தெருக் கோடியில் ஓர் ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையார் முன் நின்று நெற்றியில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்தாள். 'சரி சரி, சாமியாரைவிடப் பெரியவர், உயர்ந்தவர் இந்தப் பிள்ளையார்தான். அதனால் பிள்ளையாரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும்’ என்று தீர்மானம் பண்ணிக்கொண்டாள். சாமியாரோடு போகாமல், அந்தப் பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டாள்.
அவளைத் தவிர, அந்தப் பிள்ளையாரிடம் வேறு யாரும் அடிக்கடி வருகிற இடமாக அது இல்லை. அது கோயில்கூட இல்லை; வெறும் மரத்தடிதான். அதனால், தெருவோடு போகிற நாய் ஒன்று அந்தப் பிள்ளையார் மேலே காலைத் தூக்கிக்கொண்டு 'ஒன்றுக்கு’ப் போயிற்று. அதைப் பார்த்தவுடன், 'அடடா, இந்தப் பிள்ளையாரையும்விட உயர்ந்தது இந்த நாய்தான் போலிருக்கிறதே!’ என்று, அந்த நாயைத் துரத்திக்கொண்டு போக ஆரம்பித்துவிட்டாள்.
வழியில், அந்த நாய் மீது ஒரு பையன் கல்லை விட்டெறிந்தான். அது 'வள்... வள்’ என்று குரைத்துக்கொண்டு முன்னிலும் வேகமாக ஓடியது. ''ஏண்டா அந்த நாயை அடித்தாய்?'' என்று அந்தப் பையனை ஒருவன் பிடித்துக்கொண்டு அதட்டினான்; முதுகில் ஒன்று வைத்தான். 'நாயைக் காட்டிலும் நாயை அடித்தவன் பெரியவன் என்று எண்ணினேன்; அவனையே அதட்டி அடிக்கிற இவன்தான் எல்லாரைக் காட்டிலும் உயர்ந்தவன்’ என்று தீர்மானம் பண்ணிவிட்டாளாம் அந்தப் பெண்.
இப்படிக் கடைசியில் அவள் கண்டுபிடித்த அந்த ஆசாமி வேறு யாருமல்ல; அவளுடைய அப்பா- அம்மா பார்த்து, முதலில் அவளுக்குத் தீர்மானம் பண்ணியிருந்த பிள்ளைதான்!
'வெகு தூரத்தில் யாரோ இருக்கிறான், இருக்கிறான்’ என்று எண்ணிக்கொண்டே சுற்றினாள். கடைசியில், அவன் அவளுக்கு அருகிலேயே இருந்தவனாகப் போய்விட்டான். இப்படி, லௌகிகமாக ஒரு கதை சொல்வர்.
''எங்கோ தூரத்தில் இருக்கிறான் ஸ்வாமி என்று ஊரெல்லாம் சுற்றுகிறாயே! தெரியாத வரையில் அவன் தூரத்தில் இருப்பவன்தான். ஊரெல்லாம் சுற்றினாலும் அவனைப் பார்க்க முடியாது. அவன் உன்கிட்டேயே இருப்பவன்தான். 'தத்தூரே தத்வந்திகே’ - தூரத்திற்கெல்லாம் தூரம், சமீபத்திற்கெல்லாம் சமீபம் என்று ஸ்ருதி சொல்கிறது.
— with Narasimman Nagarajan.

ஒரு சங்கர ஜயந்தியின்போது, ஒர் இசைக் கலைஞர், ஜலதரங்கக் கச்சேரி செய்ய உட்கார்ந்தார். ‘வாதாபி கணபதிம்…’ வாசிக்க வேண்டும். அனுபவம் மிக்க கலைஞர் தான் என்றாலும், பல முறை முயன்றும் ஸ்ருதி சேர்க்க முனைந்து கொண்டிருந்தார்.
அவர் படும் அவஸ்தையைப் புரிந்துகொண்டார் பெரியவா.
பக்கத்திலிருந்த சிஷ்யரைக் கூப்பிட்டு, ‘அஞ்சாவது கிண்ணத்திலேர்ந்து ஒரு அவுன்ஸ் ஜலம் எடுக்கச் சொல்லு…” என்று சொல்லியனுப்பினார்.
வித்வான், அவ்வாறே ஜலத்தை எடுத்துவிட்டுச் ஸ்ருதி கூட்டியதும், சரியாக இருந்தது.
அவர், உடனே, எழுந்து வந்து பெரியவா பாதங்களில் நமஸ்கரித்தார், குரல் தழுதழுக்க, ‘பெரியவாளுக்கு எப்படி தெரிஞ்சுது? என்று விம்மிய குரலில் கூறினார்.
உம்மாச்சி தாத்தாக்கு தெரியாதது எதுவும் உண்டா???
shared from Sage of Kanchi
அவர் படும் அவஸ்தையைப் புரிந்துகொண்டார் பெரியவா.
பக்கத்திலிருந்த சிஷ்யரைக் கூப்பிட்டு, ‘அஞ்சாவது கிண்ணத்திலேர்ந்து ஒரு அவுன்ஸ் ஜலம் எடுக்கச் சொல்லு…” என்று சொல்லியனுப்பினார்.
வித்வான், அவ்வாறே ஜலத்தை எடுத்துவிட்டுச் ஸ்ருதி கூட்டியதும், சரியாக இருந்தது.
அவர், உடனே, எழுந்து வந்து பெரியவா பாதங்களில் நமஸ்கரித்தார், குரல் தழுதழுக்க, ‘பெரியவாளுக்கு எப்படி தெரிஞ்சுது? என்று விம்மிய குரலில் கூறினார்.
உம்மாச்சி தாத்தாக்கு தெரியாதது எதுவும் உண்டா???
shared from Sage of Kanchi
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Kanchi Maha Periyava
A share from Lalitha Nandini
Mahaperiyava Charanam.....
இது பெரியவாளின் இன்னொரு பக்தையை பற்றியது . கல்கத்தாவில், அந்த பக்தை கணவருடன் , அப்போது அவரது வேலை நிமித்தமாக இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம். அன்றும் கணவர் ஆபீஸ் போன அப்புறம் வாசலில் பெல் அடித்ததும் , கதவை திறந்தார் , அந்த பெண்மணி . நக்சலைட்டுகள் 3- 4 பேர் திமு திமு என்று உள்ளே நுழைந்தும் என்ன செய்ய, என்றே தெரியாத அவர் தன்னை கொல்ல அவர்கள் தயாராக இருப்பதை அவர்கள் பேச்சின் மூலம் புரிந்து கொண்டார். பயத்தில் வெலவெலத்து போன அந்த மாது அவர்கள் கேட்ட படி சாய் போட்டு கொடுத்து விட்டு, அவர்களிடம் ஒரு போன்கால் போட்டு கொள்ள அனுமதி கேட்டார். சென்னையில் விடுதிஇல் படித்து வரும் தன் அன்பு குழந்தைகளிடம் ஒரு நிமிடம் பேசினார் . நாளை எந்த செய்தி கேட்டாலும் அதை சுவாமி கொடுத்தது என்று எடுத்துகொள்ள வேண்டும் என்றார். வீட்டின் ஹால் பகுதிக்கு வந்த அவர் , பெரியவா படத்தையும் அதை அடுத்து இருக்கும் காளி மாதாவின் படத்தையும் பார்த்து பூரண பக்தி யோடு நமஸ்கரித்தார் . இன்னிக்கு ஏகாதேசி .இன்று இந்த சோதனைக்கு உளாகி இருக்கேனே என்று வருத்தப்பட்டார் அவர்களை பார்த்து ஓரே போடாக போட்டு விடுங்கள். வேறு ஒன்றும் என்னை செய்து விடாதீர்கள் என்று மனமுருக சொன்னார். பெரியவா படத்தை பார்த்து மனமுருகி வேண்டினார். தரையில் அவரை வேண்டி கொண்டே படுத்தார் அப்ப அந்த அதிசயம் நடந்தது. நக்சலைட்டுகள் மேலே பார்த்தவர்கள் கண்ணுக்கு , பெரியவா போட்டோ இருந்த இடத்தில் பயங்கர உருவத்தோடு பவதாரிணி காட்சி கொடுத்தாள் .காளி பக்தர்கள் ஆன அவர்கள் திகைத்து போனார்கள் . ஒரு காளி இருந்த இடத்தில இப்ப எப்படி ரெண்டாவது உக்ர காளி வந்தாள் என்று ஸ்தம்பித்து போனார்கள். காளியை மதிக்கும் அவர்கள் அந்த அம்மையாரையும் அம்பாள் ரூபமாக பார்க்க தொடங்கினர். "மன்னித்து விடுங்கள் தாயே " என்று எடுத்தனர் ஓட்டம் . கணவர் வந்தவுடன் கண்ணீரை அடக்க முடியாமல் சொரிந்த அந்த மாது உடனே பெரியவாளை பார்க்க காஞ்சிக்கு புறப்பட்டார். மடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம் . வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு பெர்யவாளை நமஸ்கரிக்க , "காமாக்ஷி காப்பதினாளா " என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்கு தெரியும் என்பதை உணர்த்தினார் உம்மாச்சி தாத்தா. உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது .

'தத்-அது, த்வம்-நீ(யாக), அஸி-இருக்கிறாய்’ என்று அர்த்தம்.
நீயே அது’ என்பதை 'தத்-த்வமஸி’ என்ற மஹாவாக்கியமாக வேதம் சொல்கிறது.
"ஹொரைஸன் என்பார்களே, தொடுவானம்; இங்கிருந்து பார்த்தால் ஆகாசமும் பூமியும் அந்த இடத்தில் சேருவதுபோல இருக்கும். அங்கே ஒரு பனை மரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 'அந்தப் பனை மரத்தடிக்குப் போனால் பூமியும் வானமும் சேருகிற இடத்தைப் பிடித்துவிடலாம்’ என்று இங்கே இருந்து பார்க்கிறபோது நமக்குத் தோன்றும். ஆனால், அங்கே போனால், தொடுவானமும் அங்கிருந்து வெகு தூரத்திற்கு அப்பால் போய்விட்டது போலத் தெரியும். நாம் போகப்போக அதுவும் போய்க்கொண்டே இருக்கும்
. 'இந்தப் பனை மரத்தின் கீழ் வந்து நின்றால் தொடுவானம் வெகுதூரத்திற்குப் போய்விட்டதே, அதைப் பிடிக்க இன்னும் நாமும் போக வேண்டும்’ என்று போய்க்கொண்டிருந்தால், அதைப் பிடிக்க முடியுமா? இந்தப் பனை மரத்துக்கு வெகு தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த இடத்தில்தான் தொடுவானம் இருப்பதுபோல இருந்தது. இந்த இடத்திற்கு வந்தவுடன், அது நம்மைவிட்டு இன்னும் வெகு தூரம் போய்விட்டது.
ஆகவே, அது எங்கே இருக்கிறது? நீ இருக்கிற இடத்தில்தான் இருக்கிறது. நீ இருக்கிற இடம்தான் அது. அப்படி 'அது’, 'அது’ என்று சொல்லப்படுகிற, வெகு தூரத்தில் இருக்கிற ஸ்வாமி, உன் கிட்டேயே- உன் உள்ளேயே இருக்கிறார்; நீயே அதுதான் என வேதம் உணர்த்துகிறது.
'நீயே அது’ என்பதை 'தத்-த்வமஸி’ என்ற மஹாவாக்கியமாக வேதம் சொல்கிறது. 'தத்வம்’ என்றால் இங்கே தத்தின் தன்மை என்று அர்த்தமில்லை. 'த்வம்’ என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு. 'தன்மை’ என்பது ஒன்று. 'நீ’ என்பது இன்னொரு அர்த்தம். தத்-த்வம் அஸி என்னும்போது 'தத்-அது, த்வம்-நீ(யாக), அஸி-இருக்கிறாய்’ என்று அர்த்தம்.
நான்... நான் என்று எதை நினைத்துக்கொண்டிருக்கிறாயோ, அதுதான்- அந்த அறிவுதான் ஸ்வாமி. அந்தப் பிரகாசம் உன்னிடத்தில் இல்லையென்றால், உன்னால் ஸ்வாமி என்றே ஒன்றை நினைக்க முடியாது. 'நான் என்று அறிகிறேன், நான் என்று நினைக்கிறேன்
, அப்படி நினைக்கிற அறிவுக்கு மூல வஸ்து வெகுதூரத்தில் இருந்து கொண்டிருக்கிற 'தத்’ என்று நினைக்கிறாயே, அந்த 'தத்’தும் நீயும் ஒன்றுதானப்பா!’ இதுதான் வேதத்தின் முடிவில் சொல்வது.'
என்ன அருமையாகச் சொல்லியிருக்கிறார், மகா பெரியவா! நாம்தான் உண்மையை அறிந்து தெளிய வேண்டும்..
Shared from MAHAPERIYAVAL SRI CHANDRASEKARENDRA SARASWATHI'S LIFE AND TEACHINGS....

பெரியவா பாத்துப்பா 27 !
'இப்போ போன் பண்றவா எல்லாம் இதத்தான் சொல்றா. இந்த மாதிரியான கஷ்டம் வந்துது. ரொம்ப கவலையா இருந்தது. அப்புறம், எல்லாம் 'பெரியவா பாத்துப்பா' ன்னு அவர்ட்ட பாரத்தை இறக்கி வச்சு பிரார்த்தனை பண்ணிண்டேன். தானா பிரச்சனை தீந்துடுத்துதுன்னு. நான் உங்ககிட்ட இந்த தலைப்பை வைங்கோன்னு சொன்னது சத்தியமான வார்த்தை. ஏன்னா நான் இவ்ளோ பெரிய எடம் வாங்கனும்னு நெனக்கவே இல்லை. வேத பாடசாலை மட்டும் தான் என் மனசுல இருந்தது. அப்படி பாத்துண்டு வரச்சேதான் கொள்ளிட கரைல இருக்கற இந்த பூமி கண்ணுல பட்டுது. தீபகற்பம், கோ முகம், மாடு, கன்னு குட்டிகள், வாழை, தென்னை தோப்பு, கற்பக விருக்ஷம் இப்பிடி சகல சாமுத்ரிகா லக்ஷணங்களோட இருந்துது. அப்புறமும், ஆர்க்கிடெக்சர் படிச்சா அபர்ணா ங்கற பெங்களுர் பொண்ணு கிட்ட ஒரு வேத பாடசாலை குடிசை, சுத்தி வர தோப்பு, இதை வரையச் சொன்னேன். அவ ஸ்ரீ சக்ரம் வரைஞ்சு எடுத்துண்டு வந்தா. அப்போ தான் பெரியவா அம்பாளை இங்க கொண்டு வரச் சொல்றான்னு புரிஞ்சுது. அப்புறம் கோ சாலை, கோவில்னு எல்லாம் படிப்படியா வந்துது.
ஆரம்பத்துல எல்லாருக்குமே சந்தேகம். எங்கிட்டேயே கேப்பா, மாமி, உங்க வயசுக்கு இதெல்லாம் சாத்தியமான்னு. வயசு மட்டும் இல்லை, எனக்கு ஒன்னுமே தெரியாது, எல்லாம் பெரியவா பண்றா, அவா பாத்துப்பான்னு சொல்லுவேன். இப்போ தொண்ணூறு பர்சென்ட் வேலை முடிஞ்சுது. ஆனாலும், இன்னும் நெறைய பேருக்கு சந்தேகம் தீர்ந்த பாடு இல்லை. நேர்ல வந்து பாத்தப்றம்தான் நம்பறா. ஆச்சு, குறை வேலையும் சீக்கிரமா முடிஞ்சுடும். நீங்க ஒன்னு செய்யுங்கோ, பெரியவா பக்தாள் எல்லாருக்கும் சொல்லுங்கோ. அவளால முடிஞ்சத பண்ணட்டும். வர மே மாசம் பெரியவா ஜெயந்திய ஒட்டி கும்பாபிஷேகம் பண்ணலாம்னு நெனச்சுண்டு இருக்கேன். எல்லாம் பெரியவா சித்தம்.
நான் எப்பவுமே உங்க கிட்ட சொல்லுவேன், எனக்கு அம்பாளும், ராமனும், பெரியவாளும் ஒன்னுதான்னு. அதுலையும் பெரியவா சாக்ஷாத் அந்த ராமச்சந்திர மூர்த்தி தான். அவன் அவதாரம் பண்ணினப்போ ராஜாங்க சட்டங்கள், விதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தான். அவன் மஹா விஷ்ணுவே தான் அப்டிங்கறது ஒரு சிலருக்கும், அவனுக்கும் எப்பவாவது தான் தெரிஞ்சுது. ஆனா, இன்னைக்கு நாம் அவனை தெய்வமா கொண்டாடறோம். ராம நாமாக்கு ஈடு இணையே இல்லை. எல்லாரும் இப்போ ராம நாம சங்கீர்த்தனம் பண்றா, ராம நாம த்தை ஜபிக்கறா, எழுதறா.
அதே போலத்தான் பெரியவாளும். பரமேஸ்வரன் தான் ஆதி சங்கரராவும், மஹா பெரியவாளவும் அவதாரம் பண்ணி இருக்கார். இந்த அவதாரத்தோட லக்ஷணமே தர்ம ரக்ஷனை தான். அதுல முக்கியமா வேத ரக்ஷனையும், கோ சம்ரக்ஷனையும், அன்ன தானமும், வேற எல்லா தர்மங்களும் அடங்கும். அதுக்காக முப்பது வருஷங்களுக்கு மேல கிராமம் கிராமமா யாத்திரை போனா. ஆனா, பெரியவாளோட அவதார மகிமை கொஞ்சம் பேருக்கு தான் தெரிஞ்சு இருந்தது. பெரியவா கர்னூல் ல இருக்கா, சத்தாரா ல இருக்கா அப்படின்னு ஒரு வட்டத்துக்குள்ள வெச்சுண்டு தான் பேசினா. பெரியவாளும் தான் யார்ங்கறத மறச்சுண்டுடுட்டா.
இப்போ அப்படி இல்லை. பெரியவா சூக்ஷுமுமா எல்லா எடத்துலயும் வ்யாபிச்சிருக்கா. இங்கயும் அவராதான் வந்து உக்காந்துண்டு உலகம் பூரா இருக்கற தன்னோட கோடிக் கணக்கான பக்தர்களை தன் பக்கம் இழுத்துண்டு இருக்கா. நாளுக்கு நாள் அவரோட பக்தாள் எண்ணிக்கை கூடிண்டே போறது. ஏன்னா, 'மஹா பெரியவா' ங்கற நாமா க்கு அவ்வளவு கீர்த்தி உண்டு. அவரே அம்பாளாவும், ராமச்சந்திர பிரபுவாவும் இருந்துண்டு தர்ம பரிபாலனம் பண்ணப் போறா. ஊரும், நாடும், லோகமும் சுபிக்ஷம் அடையைப்போறது. ராம், ராம்,
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.
மாமியிடம் 9433 70605 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

அல்ஜீரியாவில் அபயமளித்தார் மஹா பெரியவர்
Courtesy:Sri.Mayavaram guru
பின் தங்கிய நாடாகிய அல்ஜீரியாவில் ரயில்வேயை மேம்படுத்த திட்டம் வகுத்தார்கள். அதற்கு அந்நாட்டு ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்த்து நம் இந்திய இரயில்வேத்துறைப் பொறியாளர்களை. (எல்லா நாடுகளிலும் வெறியாளர்கள் இருப்பார்கள்; ஆனால் பாரதத்தில் தான் பொறியாளர்கள் கிடைப்பார்கள்!)
பல கோடி ரூபாய் திட்டம்; பல் வகையான இயந்திரங்கள் !
பொறியாளர்களும் பணியாளர்களுமாக அந்த நாட்டில் 1986 மே 17ம் தேதியன்று காலடி வைத்தோம்.
முதுனிலைப் பொறியாளனான என்னிடம் , இயந்திரங்ளை இயக்குவது, செப்பனிடுவது, சரி பார்ப்பது என்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
எங்கள் போதாத காலம் போலிருக்கிறது... இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்தன; வாரம் தவறாமல் ஒரு விபத்து ! இந்தத் தொழிலாளிக்குத் தலையில் அடி; அவர் கீழே விழுந்து கால் உடைத்துக்கொண்டார்; அந்தப்பகுதி இடிந்து விழுந்தது...! என்பன போன்ற "மகிழ்ச்சிகரமான " செய்திகள்.
குறித்த காலத்திற்குள் வேலையை முடித்துவிட முடியுமா என்பது ஒருபுறமிருக்க, எங்கள் குழுவைத்தேர்ந்தெடத்த இந்திய இரயில்வே வாரியத்தினர் எங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற மனக்குறையும் சேர்ந்துகொண்டது.
இனி, எங்ளுக்கு தெய்வமே துணை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோ.
மேம்பாட்டுத்திட்; முதன்மை அதிகாரி திரு. செல்வம் அவர்களுக்கும், தலைமை செயற்பொறியாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் கலக்கம் வந்துவிட்ட்து
"ராமச்சந்திரன் , என்ன செய்யலாம் ? "
" தெய்வமே துணை..."
" ரொம்ப சரி. நாங்களும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்றோம். இப்போ, நீங்கள் தெய்வத்தைக் காட்டுங்கள்...."
" உங்களுக்கே தெரியும் சார் ! உங்கள் அறையில் அந்த ஒரு படத்தை மட்டும் தானே வைத்திருக்கிறீர்க. அந்த நடமாடும் தெய்வம் தான் நமக்குத்துணை..."
" வெரிகுட் ஜடியா !"
அடுத்த நாளே ஒரு நீண்ட கடிதம் எழுதினோம் பரமாச்சாரியாருக்கு எங்கள் இன்னல்கள், துயரங்கள், சோகங்கள், இயந்திரக்கோளாறுகள, விபத்துகள்,... திட்டம் குறித்த காலத்தில் நிறைவேறி, வெற்றியுடன் தாய்நாடு திரும்பவேண்டும் – என்ற பிரார்த்தனையோடு.
பதினைந்தாம் நாள் , ஆசீர்வாத கடிதமும் பிரசாதமும் வந்தன – காஞ்சி ஸ்ரீ மடத்திலிருந்து.
சனிக்கிழமைதோறும், மாலையில் எங்கள் முகாமில் இறைவழிபாடு நடை பெறும். அந்தவார பூஜையின் போது எல்லாருக்கும் பெரியவாள் அனுக்ரஹித்த பிரசாதம் கொடுத்தோம். எல்லார் நெற்றியிலும் திருநீறு ஜொலித்தது.
என்ன விந்தை !!
அதற்குப்பின் ஒரு சிறு விபத்துகூட ஏற்படவில்லை! இயந்திரங்கள் இயந்திரகதியில் சுழலத்தொடங்கின. தொழிலாளர்கள் பயமில்லாமல் பணி செய்தார்கள்.
மேம்பாட்டுப்பணி, பற்பல இடங்களில் (site) நடைபெற்றது. ஒவ்வோர் இடத்திலும் வேலையைத் துவக்கும்முன், எனக்கு நிச்சயமாக அழைப்பு வரும் – பூஜை செய்வதற்காக.
குறிப்பிட்டிருந் காலத்திற்கு முன்னதாகவே, எங்கள் பணி சிறப்பாக நிறைவேறியது. பிரெஞ்சு, அல்ஜீரிய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக எங்கள் குழுவைப் பாராட்டினர்.
பாராட்டைக் கேட்டுக்கொள்ளும் கடமை எங்களுக்கு இருந்தது.
உரிமையாளர் காஞ்சிபுரத்திலிருதார் !
அது எங்களுக்கு மட்டுமே தெரியும்!

I AM POSTING THIS WITH TEARS ROLLING DOWN...
காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!
பெரியவாளை தர்சனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஐந்து செகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க்கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல், “தாத்தா!..” என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக்கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் ! வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக்குழந்தைக்கு இல்லை!
அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம்,வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்து அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது!
அலறிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.
“கொழந்தையை ஒடனே மெட்ராஸுக்கு கொண்டு போய்டுங்க! ரொம்ப ஸீரியஸ்கேஸ்!..” டாக்டர்கள் கைவிரித்து விட்டு, ஏதோ முதலுதவியைச் செய்தனர். விஷயத்தை கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்த அவர்களுடைய சொந்தக்காரர் ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து விட்டு, நேராக பெரியவாளிடம்ஓடினார்.
“பெரியவாளைப் பாக்கறதுக்காக வர்றச்சே வழில கொழந்தை மேல லாரி மோதிடுத்து! டாக்டர்கள் கைவிரிச்சுட்டா! பெரியவாதான் கொழந்தையைக் காப்பாத்தணும்..”அழுதார்.
“என்னைப் பாக்க வரச்சேயா ஆக்ஸிடென்ட் ஆய்டுத்து?…” என்று கேட்டுவிட்டு, சற்றுநேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அப்புறம் பக்கத்தில் இருந்த ஒரு ஆப்பிள்பழத்தை எடுத்து அவர் கையில் ப்ரஸாதமாகப் போட்டுவிட்டு, “மெட்ராஸுக்கு கொழந்தையைப் பாக்க போறச்சே இதைக் குடு. போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” என்று உத்தரவிட்டார்.
உறவினரும் உடனேயே காமாக்ஷி கோவிலுக்குச் சென்று தர்சனம் பண்ணப் போனார். ஆனால், நடை சார்த்தும் நேரம் என்பதால், அவரால் ஒரே ஒரு க்ஷணம் மட்டுமே அம்பாளை தர்சனம் பண்ண முடிந்தது.
நெய்தீபச் சுடரில் ஸர்வாலங்கார பூஷிதையாக பச்சைப் பட்டுப் புடவையுடன், அருள்பொழியும் முகத்தோடும் அமர்ந்திருந்த அம்பாளை ஒரு க்ஷணமே தர்சனம் பண்ணினாலும், மனஸில் அந்தக் கோலத்தை இருத்தியபடி மெட்ராஸுக்கு பஸ் ஏறினார். நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று, ICU வில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த ஆப்பிளை எப்படியோ வைத்துவிட்டார். அழுது கொண்டிருந்த பெற்றோரிடம் பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னதைப் பற்றி கூறினார்.
“கொழந்தை “கோமா”க்குப் போய்ட்டா! மணிக்கணக்கோ, நாள்கணக்கோன்னு டாக்டர்சொல்றார்….” அம்மா கதறினாள். சில மணி நேரங்கள் கழிந்தது. ICU வாசலில்குடும்பமே அமர்ந்திருந்தது.
இதோ! குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்! “கோமா”; மணிக்கணக்கு; நாள்கணக்கு என்று பெரிய பெரிய டாக்டர்கள் சொன்னதையெல்லாம் அடித்து த்வம்ஸம் பண்ணிவிட்டு, “அம்மா!…”என்று குழந்தையை அழைக்க வைத்தது தெய்வத்தின்அனுக்ரஹம் !
அழுகையெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது. ஓரிரண்டுநாட்களில் ஓரளவு நன்றாகத் தேறிய குழந்தையைத் தனி ரூமுக்கு ஷிப்ட் பண்ணினார்கள். ஆப்பிள் கொண்டு வந்த உறவினரும் கூடவே இருந்தார்.
“அம்மா…..” தீனமாகக் கூப்பிட்டாள் குழந்தை.
“என்னம்மா?….”
“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா?…”
“பாப்பாவா? இங்க ஏதும்மா பாப்பா? நீ ஆஸ்பத்ரிலன்னா இருக்கே! இங்க பாப்பா யாரும்இல்லியேடா!..”
குழந்தை சிணுங்கினாள். “அந்தப் பாப்பா எங்கேம்மா? எனக்கு அவகூட வெளையாடணும்..”
ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறாள் என்று எண்ணி அவளை சமாதானப்படுத்த வேண்டி “எந்தப் பாப்பா? எப்டி இருந்தா சொல்லு! நான் கூட்டிண்டுவரேன்” என்றாள்.
“பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!…”
மற்றபேருக்கு புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த உறவினருக்கு பொட்டில் அடித்தார்ப்போல் புரிந்தது!
“போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ!…” பெரியவா சொன்னதும், அம்பாள் ஒரு க்ஷணமே தர்சனம் தந்தாலும், ஹ்ருதயத்தை விட்டு அகலாவண்ணம், பச்சைப் பட்டுப் புடவையில் காஷி அளித்ததும் அவருக்குப் புரிந்தது; மேனியெல்லாம் புல்லரித்தது!
பெரியவா சொன்னதுக்கு எத்தனை மஹத்தான அர்த்தம்! அம்பாளே அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, அவளுக்கு உயிரூட்டியிருக்கிறாள்!
உறவினர், மற்றவர்களுக்கு இதைச் சொன்னதும், திக்கற்றோருக்கு துணை வரும் பெரியவா இருந்த காஞ்சிபுரம் நோக்கி விழுந்து விழுந்து நமஸ்கரித்தனர்

அன்று காலையில்தான் மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ மடத்தில் பரமாசார்யாளைத் தரிசித்து விட்டு ஆசி பெற்றுச் சென்றிருந்தார்கள் . ஆசார்யாள் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். மாலை சுமார் நான்கு மணியிருக்கும். “பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள பிரஞ்சு பேராசிரியர்கள் பெரியவாளை தரிசிக்க இப்பொழுது வரப் போகிறார்கள். நீங்களும் இருந்து விட்டுப் போங்களேன்” என்றார் ஸ்ரீ மடத்தில் இருந்த ஒருவர். “சரி” என்று தயங்கினேன்.
சில நிமிடங்களுக்குள்ளாக எதிர்பார்த்த பேராசிரியர்கள் வந்தனர். “பெரியவாளைப் பார்க்க அவர்கள் வரலாம். உங்களையும் பெரியவாள் கூட வரச் சொன்னார்” என்றார் மடத்தைச் சேர்ந்தவர். மகிழ்ச்சியுடன் உடன் சென்றேன். பெரியவாள் எளிமையே உருவமாகத் தரையில் அமர்ந்திருந்தார்கள். தரிசிக்க வந்த ஐந்து பிரஞ்சு பேராசிரியர்களையும் எதிரில் அமரும்படி கூறினார். என்னை தமக்கு அருகில் வந்து அவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லுமாறு பணித்தார்.
வந்தவர்களில் மூவர் பெண்கள்; இருவர் ஆண்கள். அவர்களின் தலைவராக இருப்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்திருப்பதாகவும், மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்திருப்பதாகவும் கூறினார். பெரியவாள் சிரித்துக் கொண்டே ஒவ்வொருவருடைய பெயரையும், அவர்கள் எந்தத் துறையில் பேராசிரியர்களாகத் திகழ்கிறார்கள் என்பதையும் கேட்டறிந்து கொண்டார்.
அவர்கள் தங்கள் தங்கள் துறைகளைக் கூறி வரும்போது, பெரியவாள் சட்டென்று அவர்களில் ஒரு பெண்மணியைப் பார்த்து, “நீங்கள் இத்தாலியிலிருந்து வந்தவர்களா?” என்று கேட்டார். அந்தப் பெண்மணி பிரஞ்சு நாட்டு பாரீஸ் மாநகரைச் சேர்ந்தவர். அங்கு பேராசிரியர். அப்படி இருக்கும்போது ஏன் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணினேன். அந்த பெண்மணி கூறிய பதில் எங்களை வியப்பிலாழ்த்தியது. “எங்கள் முன்னோர்கள் இத்தாலியைச் சார்ந்தவர்கள் தாம்” என்றார். அடுத்து பெரியவாள் கேட்ட கேள்வி மேலும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. பாரிஸுக்கு வடக்கில் லுக்ஸ்ம்பர்க் என்ற நகருக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களா? என்று கேட்டார். அந்த பெண்மணி ஆச்சரியத்தில் மூழ்கி தன்னுடன் வந்த ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டே, “ஆமாம்” என்று கூறினார். இதற்கு முன் அப்பெண்மணி இந்தியா வந்ததேயில்லை. அப் பெண்மணியைப் பற்றி யாருக்குமே தெரியாது. அப்படியிருக்க, பெரியவாள் பிரான்சு ஜெர்மனி நாடுகளின் அமைப்பையும், இந்தப் பகுதி தான் என்று வரையறுத்துக் கூறும் பாங்கையும் கண்டு நாங்கள் வியப்பை அடக்க முடியாது வாய் புதைத்து நின்றோம்.
எங்கள் முக பாவங்களைப் பார்த்து பெரியவாளே அது எப்படி என்று விரித்து உரைத்தார்கள். “இத்தாலிய நாட்டினருக்கும், பாரிஸுக்கும் வடக்கே லுக்ஸ்ம்பர்கிற்குத் தெற்கில் உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் தலைக் கேசம் கருப்பாயிருக்கும். இத்தாலியர்களின் லத்தீன் மொழியின் உச்சரிப்பு ஒருவிதமாக இருக்கும்” என்றார்கள். அதைக் கேட்டு அந்த பெண்மணி, “ஆமாம்! ஆமாம்!” என்று வேகமாகத் தலையாட்டினார்.
காஞ்சிபுரத்தில் ஏதோ ஒரு பகுதியிலிருக்கும் பெரியவாள், உலகில் எங்கிருந்து யார் வந்தாலும், எம்மொழி பேசினாலும், இந்த பகுதியிலிருந்து வந்தவர், இந்த மொழி பின்னணி கொண்டவர் என்று சொல்லும் பாங்கையும் பார்த்த போது, வேத காலத்தில் அனைத்தையும் அறிந்த மகரிஷிகள் எல்லாம் ஒருங்கே இணைந்து இன்று பெரியவாள் உருவில் ஒரு ஒப்பற்ற பரம ஞானியாகத் திகழ்வதை உணர்ந்தேன்.
– டாக்டர், இரா. நாகசாமி (முன்னாள் தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவர்)