Short Stories (in Tamil script)
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Short Stories (in Tamil script)
Sorry! That article is available only through subscription...
Perhaps you are referring to the following
http://articles.timesofindia.indiatimes ... n-language

- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Short Stories (in Tamil script)
I could see it.....
Anyway..

" Do not lose faith"
The mountains and streams
The rivers and the ocean
The waves and stars..
Are all smiling at me ..nay laughing at…
Smugly laugh full of pathos or is it irony?…..
Intrigued as I …asked them why?..
In a country where glory was held high
Where …. ‘The Words are to
Come Out From the Depth of Truth’….
They have become a fiction..See around you what is happening..
Deceit and hypocrisy…… have its way….
Paving the way for truth to hide its face…
Hiding its face in shame….
Are there any Semblance of recovery……they yelled..
Do not lose faith …..I countered….. ..
“The clear stream of reason has not lost its way into the dreary desert”
Righteousness will always win…….
“satyameva jayathe “
Venkat k

Of course in India
Satyam Eva jayatE|
http://en.wikipedia.org/wiki/Satyam_scandal

perhaps you can now claim
Mahendra satyam Eva jayatE!!
Satyam Eva jayatE|
http://en.wikipedia.org/wiki/Satyam_scandal

perhaps you can now claim
Mahendra satyam Eva jayatE!!
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Short Stories (in Tamil script)
cml...No problem..in whatever way you want to call...
The Boy and The Apple Tree...A Touching Story...
See the slide show at...
http://www.slideshare.net/ohteikbin/the ... hing-story
The Boy and The Apple Tree...A Touching Story...
See the slide show at...
http://www.slideshare.net/ohteikbin/the ... hing-story
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Short Stories (in Tamil script)
மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ''மழை வருமா?''எனக் கேட்டான்.'
'வராது''என்றான் அமைச்சன்.
வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.
அதைப் பொருட்படுத்தாமல் போன மன்னன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது கடும்மழை வந்து நன்றாய் நனைந்துபோனான்.
திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து ,''மழைவரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?''எனக் கேட்டான்.
அவனோ,''மன்னா எனக்குத் தெரியாது.ஆனால் என்கழுதைக்குத் தெரியும். அது மழை வரும்முன் காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றான்.
உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.
இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,''அதில் தான் மன்னன் ஒரு மிகப்பெரிய தவறு செய்து விட்டான்,
என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன...
only a share from a friend...

One correction! The story is from India especially TN.
The starting point was CNA!
The starting point was CNA!
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Short Stories (in Tamil script)
ஒரு பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்துக்கொண்டிருந்தார்.
விமானம் வர இன்னும் தாமதமாகுமென அறிவிப்பு வரவே கடைக்கு சென்று ஒரு புத்தகமும் ஒரு பிஸ்கட் பாக்கட்டும் வாங்கி வந்து ஒரு சேரில் அமர்ந்தார்.
அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார். அவரின் அடுத்த இருக்கை காலியாக இருந்தது. அதற்கு அடுத்த இருக்கையில் ஒரு முரட்டு தோற்றமுள்ள மனிதன் வந்தமர்ந்தார். அவர் சிறிது நேரம் கழித்து ஒரு பிஸ்கட் பாக்கட்டைபிரித்து ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டு விட்டு பாக்கட்டை அந்த இடையில் உள்ள காலி இருக்கையில் வைத்தார்.
அந்த பெண்மனி அவரை முறைத்துப்பார்த்து விட்டு தானும் அதில் ஒரு பிஸ்கட் எடுத்துக்கொண்டே அந்த முரட்டு மனிதரை முறைத்துப்பார்த்தார். அந்த முரட்டு மனிதன் மற்றுமொரு பிஸ்கட் எடுத்துக்கொண்டார்.
அந்த பெண்மணிக்கு ஒரே கோபம் , ஆனாலும் அந்த முரட்டு மனிதனின் உருவத்தை பார்த்து பேசாமலிருந்தார். அந்த மனிதர் மேலும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த பெண்மணி தன் பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து திருடி தின்கிறானே , இவனுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லையா என மனதுள் திட்டிக்கொண்டே தானும் மீண்டும் ஒரு பிஸ்கட் எடுத்துக்கொண்டார்.
இப்படியே மாறி மாறி இருவரும் ஒவ்வொரு பிஸ்கட்டாக எடுத்து சாப்பிட்டனர். கடைசியில் ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது.. இருவரும் அந்த ஒரு பிஸ்கட்டைபார்த்தனர். சற்று நேரம் அமைதியாக இருந்தனர் இருவரும்.
அந்த முரட்டு மனிதன் அந்த ஒரு பிஸ்கட்டை எடுத்துக்கொண்டே அந்த பெண்மணியை பார்த்துக்கொண்டே அந்த பிஸ்கட்டை இரண்டாக உடைத்து ஒரு துண்டை தான் எடுத்துக்கொண்டு மற்றொன்றை அந்த சேரில் வைத்தார். அந்த பெண்மணி அந்த பாதி பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டு முடிக்கவும் அவர் ஏற வேண்டிய விமானம் வந்து விட்ட அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது..
அந்த பெண்மணி விமானம் ஏறி தன் சீட்டில் அமர்ந்து முகத்தில் கோபம் கொப்புளிக்க,
“ சே என்ன மனிதன் அந்த மனிதன் , விமானம் மட்டும் வந்திருக்காவிட்டால் என் பிஸ்கட் பேக்கட்டில் இருந்த்து அத்தனை பிஸ்கட் திருடி தின்றதற்க்கு நன்றாக திட்டு வாங்கியிருப்பான் , காசு கொடுத்து வாங்கி தின்ன வேண்டியதுதானே. இப்படியா திருடி தின்பார்கள்" என முனங்கிகொண்டே தண்ணீர் குடிக்க தன் பையை திறக்க, அதில் அந்த பெண்மணி புத்தகத்துடன் வாங்கிய பிஸ்கட் பாக்கட் அப்படியே முழுதாக இருந்தது.

- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Short Stories (in Tamil script)
We have heard many tales about people walking away with a similar looking suitcase, but this one has a crunchy difference to it!
If you want to prolong the tale, it may go like this:
Sometime later...
A man comes rushing into the plane which is about to take off, sits down, buckles up, takes a deep breath and looks around, stares at the woman sitting one seat away from him: same man, same woman!
She leans across the seat and with apologies for shamelessly eating his biscuits some time ago.
He dips into his bag, hands her a biscuit pack and says: I stopped to buy biscuits and saw you go past, hurrying to the gate to this plane and wondered, why don't I buy another pack for that forgetful lady, just in case I happen to sit next to her...
They both burst out laughing and after lots of pleasant exchanges, succeeded in finding a match in her nephew and his neighbor's daughter!
He said to his neighbor that along with all other sweets offered to the bridegroom's family, there better be plenty of packets of biscuits of all kinds

Legal Jokes for Free
---------------------------
Last year I replaced all the windows in my house with those expensive, double-pane, energy-efficient kind.
Today, I got a call from Home Depot who installed them. He complained that the work had been completed a year ago and I still hadn't paid for them.
Helloooo,............ just because I'm blonde doesn't mean that I am automatically stupid.
So, I told him just what his fast-talking sales guy told me last year... that these windows would pay for themselves in a year. Hellooooo? It's been a year, so they're paid for, I told him.
There was only silence at the other end of the line, so I finally hung up. He never called back. I bet he felt like an idiot.

Very nice followup Arasi.
You must get back to writing Novels. That is your forte!
Forget that "vaggeyakara" fantasy.
Start writing short stories here. I (others too!) would love to read them...
(you have a fertile imagination ...)
You must get back to writing Novels. That is your forte!
Forget that "vaggeyakara" fantasy.
Start writing short stories here. I (others too!) would love to read them...
(you have a fertile imagination ...)
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Short Stories (in Tamil script)
Thanks, my friend, but guess what! I'm very much in a song and poetry mode at the moment
Blame Arun for that. Where is he these days?
Me and my timing! You are right. Life is full of ironies!

Last edited by arasi on 17 Oct 2013, 00:30, edited 1 time in total.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Short Stories (in Tamil script)
Life is short!
Live for yourself Now!
Good Luck!
Live for yourself Now!
Good Luck!
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Short Stories (in Tamil script)
Whether arasi is a vaggeyakara or not, she is a born to compose...It is uncharitable to ask her to leave the fertile field which she has chosen..
I doubt her capacity to write Novels..Perhaps stories...yes..and translation ..however big it may be..
In the olden days Kaa Sri Sri used to translate Kandekar's novels from Marathi to Tamil...She may try from kannada to Tamil or English...biography of some great kannadigas like she did for Barthi
I have not come across any of her clips where she is singing and as such I cannot tell anything..
I doubt her capacity to write Novels..Perhaps stories...yes..and translation ..however big it may be..
In the olden days Kaa Sri Sri used to translate Kandekar's novels from Marathi to Tamil...She may try from kannada to Tamil or English...biography of some great kannadigas like she did for Barthi
I have not come across any of her clips where she is singing and as such I cannot tell anything..
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Short Stories (in Tamil script)
நீதிபதி வந்து அமர்ந்தார். வாதி, பிரதிவாதி, அவங்க வக்கீல் எல்லாரும் எழுந்து மரியாதை செலுத்திய உடன் நீதிபதி வழக்குத் தொடங்கலாம் என்று உத்தரவிட்டார்.
பிரதிவாதியின் வக்கீல்: யுவர் ஆனர்! இந்த சட்டப் புத்தகத்தில் பதினைந்தாம் பக்கத்தில் உள்ள ஆறு ஷரத்துக்களின் படியும் முன்நூற்றினாற்பதாம் பக்கத்திலுள்ள நான்கு ஷரத்துக்களின் படியும் இந்த வழக்கில் என் கட்சிக்காரருக்குச் சாதகமாய்த் தீர்ப்பு வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
நீதிபதி: அந்தப் புத்தகத்தை நான் பார்வை இட வேண்டும்.
புத்தகத்தை வாங்கி அந்த இரு பக்கங்களிலும் ரூ 1000/= நோட்டுக்கள் முறையே 6 ம் , 4ம் இருக்கக் கண்டு புன்னகையுடன் மூடினார். பின்பு
நீதிபதி: இந்த அளவு சாட்சியங்கள் போதாது. இதுபோல் இன்னும் நான்கு மடங்கு சாட்சியங்கள் இருந்தால் யோசிக்கலாம். அதற்குமேல் இருந்தால் வழக்கு உங்கள் பக்கம் மிகவும் பலப்படும் !!..
A share from FB friend Sivaraman Ramachandran
பிரதிவாதியின் வக்கீல்: யுவர் ஆனர்! இந்த சட்டப் புத்தகத்தில் பதினைந்தாம் பக்கத்தில் உள்ள ஆறு ஷரத்துக்களின் படியும் முன்நூற்றினாற்பதாம் பக்கத்திலுள்ள நான்கு ஷரத்துக்களின் படியும் இந்த வழக்கில் என் கட்சிக்காரருக்குச் சாதகமாய்த் தீர்ப்பு வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
நீதிபதி: அந்தப் புத்தகத்தை நான் பார்வை இட வேண்டும்.
புத்தகத்தை வாங்கி அந்த இரு பக்கங்களிலும் ரூ 1000/= நோட்டுக்கள் முறையே 6 ம் , 4ம் இருக்கக் கண்டு புன்னகையுடன் மூடினார். பின்பு
நீதிபதி: இந்த அளவு சாட்சியங்கள் போதாது. இதுபோல் இன்னும் நான்கு மடங்கு சாட்சியங்கள் இருந்தால் யோசிக்கலாம். அதற்குமேல் இருந்தால் வழக்கு உங்கள் பக்கம் மிகவும் பலப்படும் !!..
A share from FB friend Sivaraman Ramachandran
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Short Stories (in Tamil script)
இரவு நேரம். சிக்னல்ல டூவீலர நிறுத்தியிருந்தேன்.
அந்த கேப்புல ஒரு அன்பர் வந்து,
சார் அப்பல்லோ ஆஸ்பத்திரி வரைக்கும் லிப்ட் கொடுங்க”னு கேட்டு வண்டியில ஏறிகிட்டார்.
க்ரீன் சிக்னல் விழுந்ததும் கிளம்பிட்டோம்.
அப்புறம்…
வண்டியில ஹெட்லைட் போடாம இருக்கீங்க…”
அது உடைஞ்சி பத்து நாளாச்சு…”
சார்.. சார்.. இப்படி திரும்பும்போது இன்டிகேட்டர போடுங்க..”
அது நாலு நாளா எரிய மாட்டேங்குது சார்…”
அய்யோ… எதிர்ல போற வண்டிமேல இடிச்சிட பாத்தீங்களே.
தள்ளி வரும்போதே பிரேக்க பிடிக்க கூடாதா?”
நான் பிடிக்க மாட்டேன்னா சொன்னேன். அது சரியா பிடிக்கல…”
இப்படியா சார் ஓவர்டேக் பண்றது.. ஹாரன் அடிங்க...”
வச்சிக்கிட்டா வஞ்சன பண்றேன்.. அடிக்க மாட்டேங்குது...”
அப்பாடி… இப்படி ஸ்பீட் பிரேக் மேல வேகமா ஏறாதீங்க சார். தூக்கிப் போட்ரும்…”
கண்ணு சரியா தெரியல. கண்ணாடி ஆர்டர் பண்ணியிருக்கேன்..”
“நிறுத்துப்பா வண்டிய…
நான் இறங்கிக்கறேன்..”
ஆஸ்பத்திரிக்குபோகணும்னு சொன்னீங்க..”
அட்மிட் ஆகுறதுக்கு இல்லப்பா… ஆளவிடு..”
சே இதுக்கெல்லாமா பயப்படுவாங்க ??

- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Short Stories (in Tamil script)
திருடர்கள் கதவை உடைத்து ஒரு வங்கியினுள் நுழைந்தனர் ..Lockerஐ உடைக்கும் சமயத்தில் ஒரு நாய் குலைக்கும் சப்தம் காசாளர் அறியிலிருந்து கேட்டது
நாய் குலைத்த சப்தத்தில் திருடர்கள் தப்பினர் \
Lockerஇல் இருந்த 15 கோடி ரூபாய் தப்பியது
வங்கியில் பணம் வைத்திருந்த வாடிக்கை யாளர்கள் தப்பினர்
பணம் ஏதும் திருட்டு போகாததால் வங்கி அதிகாரிகள் தப்பினர்
திருட்டு எதுவும் நடக்காததால் காவல் துறையினர் தப்பினர்
அகப்பட்டு கொண்டது
ஒரு தெரு நாய்
காசாளர் மேசையின் கீழ் tiffin carrier இல் மிச்சமிருந்த மாமிச துண்டுகள் வாசனையில் ஈர்க்கப்பட்டு திருடர்களை பின் தொடர்ந்து உள்ளே நுழைந்த து criminal tresspass.வெளியேறிய அவசரத்தில் திருடர்கள் கதவை வெளியே தாழிட்டுக்கொண்டு போய்விட்டனர் .
moral of the story:
வங்கி ஊ ழியர்கள் பணிக்கு non veg க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
வங்கி வாயிலில் beware of dogs board வைக்கவேண்டும் --திருடர்கள் கவனத்திற்காக
philosophical interpretation:
இரவில் நாய்க்கு எப்போதோ சோறு போட்ட புண்ணியம் திருடர்களை காத்தது.திருடர் வீட்டு சோறு சாப்பிட்ட பாபம் நாய் சிறைப்பட்டது'
குறள் நெறி:
யா காவா ராயினும் நாய் காக்க- காவாக்கால்
சோ காப்பர் பொருள் திருடப் பட்டு

Super..யா காவா ராயினும் நாய் காக்க- காவாக்கால்
சோ காப்பர் பொருள் திருடப் பட்டு
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Short Stories (in Tamil script)
Again here
தப்பார்க்குத் தப்பாய தப்பாக்கித்
தப்பார்க்குத் தப்பாய தூஉம் நாய்,,
தப்பார்க்குத் தப்பாய தப்பாக்கித்
தப்பார்க்குத் தப்பாய தூஉம் நாய்,,
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Short Stories (in Tamil script)
thanks CML. your kural is top.
here is my adaptation of your version:
தப்பார் தப்பிக்க வைத்த தப்புத்தான்-அத்தப்பால்
தான் தப்பா மோப்பம் தப்பாத நாய்
here is my adaptation of your version:
தப்பார் தப்பிக்க வைத்த தப்புத்தான்-அத்தப்பால்
தான் தப்பா மோப்பம் தப்பாத நாய்
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Short Stories (in Tamil script)
Beautiful!
Just a small change..
தப்பார் தப்பிக்க வைத்த(து) தப்புத்தான்-அத்தப்பால்
தான் தப்பா மோப்பம் தப்பாத நாய்
Just a small change..
தப்பார் தப்பிக்க வைத்த(து) தப்புத்தான்-அத்தப்பால்
தான் தப்பா மோப்பம் தப்பாத நாய்
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: Short Stories (in Tamil script)
appropriate thanks
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Short Stories (in Tamil script)
thappAdu thOnRum thuppAkki ingu thappithadE, pizhathOm 

-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Short Stories (in Tamil script)
கடவுள்
கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார்,
நீ கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும் பொதி சுமப்பாய். உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத் தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்"
கழுதை சொன்னது,
கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்"
அப்படியே ஆகட்டும்" என்ற கடவுள் நாயை படைத்து அதனிடம் சொன்னார்,
நீ மனிதனின் வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும் மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்"
நாய் சொன்னது,
30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்."
அப்படியே ஆகட்டும்." என்ற கடவுள், குரங்கைப் படைத்து அதனிடம் சொன்னார்,
நீ மரங்களில் கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்"
குரங்கு சொன்னது,
எனக்கு 10 வருடங்களே போதும் சாமி"
"அப்படியே ஆகட்டும்" என்ற கடவுள், மனிதனைப் படைத்து அவனிடம் சொன்னார்,
"நீ சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன் அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்"
மனிதன் சொன்னான்,
சாமி... 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு. கழுதை வேண்டாமென்று சொன்ன 30 வருடங்களையும், நாயின் 15 வருடங்களையும், குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்"
அப்படியே ஆகட்டும்" என்றார் கடவுள்.
அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப் போல குடும்பப் பாரம் சுமந்தும், குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள் நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும், கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப்
போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான் !!

வெுற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம்!
இது ஒரு சுவாரஸ்யமான கதை.
அதாவது ஒரு தம்பதிகள் தங்களது திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்ததற்கான ரகசியம் பற்றியது.
கதை ஆரம்பம்...
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள்.
ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் பிரசுரிக்க விரும்பினார்.
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.
"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக ஷிலம்லா சென்றோம்.
அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம்.அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைுவியை அது கீழேத் தள்ளியது.
அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இதுதான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு
"இதுதான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.
மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும்,
அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது.
நான் அவளை திட்டினேன்.
"ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா?
ஒரு விலங்கைக் கொன்றுவிட்டாயே?
அறிவில்லையா?" என்று கேட்டேன்.
அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து,
"இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள்.
அவ்வளவுதான்.
அதன்பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர் !!

ஒரு சமயம் , கடவுளிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன். கேட்டான்
சாமி , ஒரு கோடி வருஷமங்க்குகறது உங்களுக்கு எவ்வளவு நேரம் ?
இறைவனும் சிரித்துக் கொண்டே " ஒரு கோடி வருஷங்கறது ஒரு நிமிஷம் " என்றார்.
அதைக் கேட்டு சந்தோஷமடைந்த அவனும் " அப்படின்னா, ஒரு கோடி ரூபாய்ங்கறது , சாமி ? "
அவரும், ஒரு ரூபாய் போல " என்றார்.
உடனே, கடவுளை மடக்க எண்ணியவனாய், " அப்ப,எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன் " என்றான் மிகவும் அடக்கமாய் ...
இறைவனும், மென்மையாக சிரித்துக்கொண்டே" நீ ஒரு நிமிஷம் பொறு என்றாராம் !!
சாமி , ஒரு கோடி வருஷமங்க்குகறது உங்களுக்கு எவ்வளவு நேரம் ?
இறைவனும் சிரித்துக் கொண்டே " ஒரு கோடி வருஷங்கறது ஒரு நிமிஷம் " என்றார்.
அதைக் கேட்டு சந்தோஷமடைந்த அவனும் " அப்படின்னா, ஒரு கோடி ரூபாய்ங்கறது , சாமி ? "
அவரும், ஒரு ரூபாய் போல " என்றார்.
உடனே, கடவுளை மடக்க எண்ணியவனாய், " அப்ப,எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன் " என்றான் மிகவும் அடக்கமாய் ...
இறைவனும், மென்மையாக சிரித்துக்கொண்டே" நீ ஒரு நிமிஷம் பொறு என்றாராம் !!
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Short Stories (in Tamil script)
The man was very pleased knowing that he will live for one crore years 

-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Short Stories (in Tamil script)
Smart Lawyer..
வயசான மனிதர் ஒருத்தர் சாகும் நிலையில் இருந்தார் அவர் தன்னோட குடும்ப டாக்டர், வக்கீல், பாதிரியார் மூணு பேரையும் கூப்பிட்டார். ”என்னோட மொத்த சொத்து மூணு லட்சம்
ரூபாய், இதை யாருக்கும் தர எனக்கு இஷ்டம் இல்லை. இந்தப் பணத்தை என்னோடவே கொண்டு போகணும்-னு ஆசைப்படறேன். இதை உங்க மூணு பேரிடமும் ஆளுக்கு ஒரு லட்சமா
தர்றேன். நான் செத்ததும் என் சவப்பெட்டியில் இந்தப் பணத்தையும் போட்டுப் புதைச்சிடுங்க”-னு குடுத்துட்டு கொஞ்சநாள்ல அவர் செத்துப் போய்ட்டார்.
அவரது சவப்பெட்டியில் மூணு பேரும் ஆளுக்கொரு கவரைப் போட்டாங்க. கொஞ்ச நேரம் கழித்துப் பாதிரியார் அழுதுக்கிட்டே, ”நான் எழுபதாயிரம் ரூபாய்தான் போட்டேன். ஒரு அநாதை
குழந்தையோட கல்விக்காக அதிலிருந்து முப்பதாயிரம் ரூபாயை எடுத்துட்டேன்” னு குற்றவுணர்வோடு சொன்னார்.
இதைக் கேட்டதும் டாக்டரும் “நான் நாற்பதாயிரம் ரூபாய்தான் போட்டேன். மருத்துவமனையில் ஒரு மெஷின் வாங்கறதுக்காக அறுபதாயிரம் ரூபாயை எடுத்துட்டேன். நான் பாவி”-னு
ரொம்ப அழுதார். அதைக் கேட்டுட்டிருந்த வக்கீலுக்குக் கோபம் வந்தது. ”ச்சே நான் உங்களை மாதிரி ஏமாத்து ஆசாமி கிடையாது. சுளையா ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி அந்த
சவப்பெட்டிக்குள்ள போட்டுட்டேன்னார் !!

ஆனால் அந்தக் கிழவர் உண்மையில் சாகவில்லை. இறந்த வேறொருவர் பிணத்தை
சவப் பெட்டியில் இட்டிருந்தார். அப்பெட்டியில் இருந்த பணத்தை அவர்களுக்கே
திரும்ப அனுப்பிக்கொடுத்தார். வக்கீல் போட்டிருந்த செக்கில் ஒரு ஸைபர் சேர்த்து
பத்து லட்சம் ரூபாய்க்கு காசாக்கி தன் பேரை மாற்றி குசாலாக வாழத்தொடங்கினார்.
வக்கீல் முகத்தில் அசடு வழிந்தது! அவருக்கு கேஸ் போடமுடியாது!
ஏனென்றால் கிழவர்தான் காலமாகி விட்டாரே!!
சவப் பெட்டியில் இட்டிருந்தார். அப்பெட்டியில் இருந்த பணத்தை அவர்களுக்கே
திரும்ப அனுப்பிக்கொடுத்தார். வக்கீல் போட்டிருந்த செக்கில் ஒரு ஸைபர் சேர்த்து
பத்து லட்சம் ரூபாய்க்கு காசாக்கி தன் பேரை மாற்றி குசாலாக வாழத்தொடங்கினார்.
வக்கீல் முகத்தில் அசடு வழிந்தது! அவருக்கு கேஸ் போடமுடியாது!
ஏனென்றால் கிழவர்தான் காலமாகி விட்டாரே!!
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Short Stories (in Tamil script)
இரண்டு தோழிகள் சந்தித்துக்கொண்டார்கள் !!
எப்படியிருக்கிறார்கள் உன் பிள்ளைகள்?"
அதை ஏண்டி கேக்குற? ...என் மகனுக்கு வந்து வாய்ச்சவ படு சோம்பேறி ... காலையில் 11 மணிக்குத்தான் எழுந்திருப்பாள் ... வேலைவெட்டி எதுவும் செய்றதில்லை ... நாள் முழுக்கக் கடைத்தெருவெங்கும் சுத்தி என் பையன் சம்பாதிக்கிற பணத்தை செலவழிச்சி நாசம் பண்ணுவாள்"
"அப்படியா?"
ஆமாடி … அது மட்டுமல்ல, என் மகன் வேலை முடிஞ்சி வீட்டுக்கு வர்றப்போ ஒரு காப்பி தண்ணிகூட போட்டுக் கொடுக்க மாட்டா ... சமையலும் பண்றதுல்ல ... எப்ப பாரு ஹோட்டல் சாப்பாடுதான் ... வீட்ல சோறு கூட சமைக்கலைன்னா அவள் என்ன பொம்பள?"
ச்சே... என்ன வெட்கக் கேடு! சரி விடு. உனது மகள் எப்படி இருக்கிறாள்?"
அவளுக்கென்னடி ... அவள் ஒரு அதிர்ஷ்டக்காரி. என் மாப்பிள்ளை ரொம்ப தங்கமானவர். என் மகள் காலையில் எழுந்திருக்கும் முன்னரே எழும்பி காலை உணவைத் தயாரித்துவிடுவார். என் மகளுக்கு படுக்கையிலேயே காப்பி கொடுத்துவிடுவார். தினமும் என் மகள் விரும்புறத வாங்குறதுக்கு பணம் கொடுத்துவிடுவார். அது மட்டுமல்ல, ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் விதவிதமா சப்பாடு வாங்கிக் கொடுப்பார் ... கொடுத்து வைத்தவள் என் மகள் !!

If A = B
and if A is bad
Then (how can) B be good ?
It is not illogical
That is the Human Equation!
and if A is bad
Then (how can) B be good ?
It is not illogical
That is the Human Equation!
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Short Stories (in Tamil script)
The season has begun, and no seasonal writing yet?
Fellow rasikA from Hyderabad, Sivakami had sent me something seasonal she wrote a few months ago, I liked it so much and asked her to post it around December. Have sent her a reminder. Hope she hurries before the New Year comes!

- Posts: 261
- Joined: 07 Mar 2009, 14:03
Re: Short Stories (in Tamil script)
மாட்சிங் மாமியின் மியூசிக் சீஸன்
முன்குறிப்பு:
இந்தக் கதை மாட்சிங்-மரகதம் மாமியைப் பிரதானமாக வைத்து மட்டுமே எழுதப்பட்டுள்ளது. மற்றபடி, மியூசிக் (இசையையோ அல்லது இசைக் கலைஞர்களையோ) பற்றி (ஏதாவது தவறுதலாக) எழுதியுள்ளதாக தயவு செய்து யாரும் தவறாகக் கருத வேண்டாம் என வாசகர்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே; யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் எழுதப்படவில்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பரமரஸிகா
மாட்சிங் மாமியின் மியூசிக் சீஸன்
கணேச பஞ்சரத்னம் எம். எஸ் அம்மாவின் குரலில் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கிது..
“ஏன்னா, இங்கே பாத்தேளா, டிசம்பர் மாச கச்சேரி சீஸன் புரோகிராம் பத்தின விவரங்கள்ளாம் இந்த இங்கிலீஷ் பேப்பர்ல வந்துருக்கே.. கொஞ்சம் படிச்சுச் சொல்லுங்களேன்” என்று (காப்பி ஆற்றியவாறே) மரகதம் மாமி ஹாலுக்குள் வருகிறாள்.
“நீ எப்போ மரகதம் இங்கிலீஷ் பேப்பர்லாம் படிக்க ஆரம்பிச்சே? மாவு சலிக்கறதுனாக் கூடத் தமிழ் பேப்பர்தானே எடுத்துப்பே” – இது திருவாளர் மரகதம் (அதாவது சுவாமிநாதன். 65. வயது, மத்திய சர்க்காரில் ‘சீஃப் கண்ட்ரோலர் ஆஃப் அக்கவுண்ட்ஸ்’ ஆக இருந்த பொழுது எல்லோரையும் தன் கண்ட்ரோலில் வைத்து செங்கோலாட்சி செய்தவர். தற்பொழுது, ரிடையரான பின் மாமியின் கண்ட்ரோலில் பெட்டிப்பாம்பைப் போல, வராண்டா ஈஸிசேரில் ஓர் வாயில்லா ஜீவனாய் முடங்கிக் கிடப்பவர். தனது ஆறடி சரீரத்தை நான்கடியாக்கி கூனிக் குறுகி நிற்பவர்.
“ஒங்களுக்கு காலங்கார்த்தாலே என்னை சீண்டி சீற விடாட்டா, பொழுதே விடியாதுன்னா! சரி, அதை விடுங்கோ, என் லேடீஸ் கிளப் ஃப்ரெண்ட் பத்மா பரசுராமன் தான் போன் பண்ணி (வேலை மெனக்கெட்டு, பொழுது விடிஞ்சதும் காலம்பற 7 மணிக்கே போன் பண்ணி) எனக்குத் தெரியப் படுத்தினா... ஏதோ நான் மறந்துப் போய்ட்டா மாதிரி.. கச்சேரி சீஸன்னா விடுவேனா என்ன? பொளந்துக் கட்டிட மாட்டேனோ”…..
“ஆமாமா, ஒவ்வொரு சபா கேண்டீன்ல ஒவ்வொரு வேளையும் என்ன மெனு, எந்த மாமி என்ன நகை புதுசா போட்டுண்டிருந்தா, லேட்டஸ்ட் பாஷன் புடவைனு, இதையெல்லாம் பத்தி விலாவரியா தினம் என்கிட்ட வந்து சொல்லி, என் பிராணனை வாங்கறதுக்குத்தானே கச்சேரிக்கு போகணும்னு குதிக்கறே. நெஜமா கலை ஆர்வம், சங்கீத ஞானம், ரசனை ஏதாவது ஒண்ணானு கொஞ்சமாவது ஒனக்கு இருக்கோ” என்று மனதில் சொல்லிக் கொள்கிறார் திருவாளர் சுவாமிநாதன். (வாய் விட்டு இதையெல்லாம் சொல்ல முடியுமா என்ன….. போன வருஷம், வாய் தவறி இப்படி ஏதோ சொல்லி விட்டு, பின் தான் பட்ட அவஸ்தைகள் யாவும் அவர் கண்முன் தோன்றி, வரிசையாக அணிவகுத்து பயமுறுத்தின..
கோபமடைந்த மாமி தான் ஒரு மாசம் ஹங்கர் ஸ்ட்ரைக், அதாவது பழங்கள்/ஜூஸ் மட்டுமே சாப்பிடும் உண்ணாவிரதம் என்று அறிவித்து விட்டு, தினமும் ஒவ்வொரு வேளையும் அரையே அரை டஜன் வாழைப்பழம் (பல வகைப்பட்டவை), அரைக்கிலோ திராட்சை, அரை டஜன் ஆப்பிள், ஒரே ஒரு பைனாப்பிள், ஒரே ஒரு ராட்சத சைஸில் பப்பாளி மற்றும் ஒரே ஒரு பம்ப்ளிமாஸ் என, கோயம்பேடு பழ மார்க்கெட்டே வீட்டீற்குள் வந்து விட்டது. பக்கத்து வீட்டு விசுவநாதன் அதைப் பார்த்து விட்டு, “என்ன ஓய், புதுசா பழ வியாபாரம் ஆரம்பிச்சுட்டேள் போலிருக்கே.. உபயோகமான பொழுது போக்குதான், இந்த ரிடையர்ட் லைப்க்கு இது தேவைதான்” என்றுக் கிண்டலடித்தார்.. போதாக்குறைக்கு சுவாமிநாதனுக்கு தண்டனை என்னவென்றால் --- நாயை ஒரு வருஷம் தினமும் வாக் அழைத்துப் போய், குளிப்பாட்டி, பாத்துக் கொள்ளணும்....
இவற்றை பற்றியெல்லாம் மாமா அசை போட, மாமி, “மேலே படியுங்களேன்” என உறுமினாள்..
“டிசம்பர் 1ந்தேதி, அகாடமில, காலை 10 மணி: பத்மஸ்ரீ-விருது பெற்ற ஸ்ரீமதி. ‘சுகுணா சுப்பராம்’ ஓபனிங் கச்சேரி, 12 மணிக்கு வேதாரண்யம் சகோதரிகள்.... எனத் தொடங்கி, ஒரு 3 மணி நேரம் கச்சேரி-விவரங்களை வரிசையாக பட்டியலிட்டுப் படித்ததினால் அயர்ச்சியில் மயங்கி விழாதக் குறையாக, மாமா, “மரகதம், ஒரு டம்ளர் காபி கிடைக்குமா” என பரிதாபமாக வினவ,
“இப்ப சாப்பாட்டு வேளைல காபி என்ன வேண்டிக் கிடக்கு, ஜில்லுனு மோர் வேணா தரேன்” என, சொன்னதற்காக கால் டம்ளர் மோரில் முக்கால் டம்ளர் தண்ணீரைக் கலந்து கொணர்ந்து மாமாவிடம் ணங் என்று வைத்து விட்டு, “சரி, சரி மசமசனு நிக்காமல் வாஷிங் மெஷினை சித்த ஆன் பண்ணிடுங்கோன்னா… சமையல் ஆய்டுத்து! மளமளனு 2 வாய் சாப்பிட்டுட்டு, சிரமத்தைப் பாக்காமல், தி.நகர் போகணும்” என்றாள் மாமி. “தி.நகரா இப்போ எதுக்கு மரகதம் திடீர்னு” எனும்போதே மாமாவின் முகம் பேயறைந்தாற் போல் மாறி விடுகிறது.
“இப்பப் போகாம, பின்ன எப்பப் போறதாம் டிசம்பர்1-ந்தேதி கச்சேரி ஸ்டார்ட், அதுக்கு முன்கூட்டியே எல்லாம் மாட்ச்,-மாட்சா ரெடியா இருக்க வேண்டாமா? என் பட்டப்பெயரான மாட்சிங் மரகதம்ங்கறதை நான் காப்பாத்திக்க வேண்டாமா” என்றாள் மாமி.
“அது சரி மரகதம், வாஷிங் மெஷின்ல துணி போட்டா, அதை எடுத்துக் காயப் போட வேண்டாமா, அதனால நா வேணா ஆத்லயே..... “என்று மாமா இழுக்க, “அதுக்காக துணி காயப் -போடறேன்னு சொல்லிண்டு நாள் முழுக்க ஆத்லயே உக்காந்துண்டு, என் ஷாப்பிங் வேலைகளுக்கு ஹெல்ப் பண்ணாம டிமிக்கி குடுக்கலாம்னு கனவு காணாதீங்கோ. மளமளனு துணியெல்லாம் காயப் போட்டுட்டு, சட்டுபுட்டுனு நம்ம காரை எடுத்துண்டு பனகல் பார்க் வந்து சேருங்கோ….. சாப்பிட்ட கையோட நான் முன்னாடிக் கிளம்பி, கால் டாக்ஸி புடிச்சுண்டு போய் என் செலக்ஷ்னை ஸ்டார்ட் பண்றேன்....”
“மரகதம், சாப்பிட்ட கையோட அப்படியே போகாதே, கைய நன்னா அலம்பிண்டு போ.. இல்லேன்னா, நீ செலக்ட் பண்ற புதுப்புடவை மேலேயெல்லாம், நம்மாத்து அழுகின முருங்கைக்காய் சாம்பார் வாசனை அடிக்கப் போறது..”…
“ஆமாமா, இந்த கிண்டலும் கேலியும் உங்காத்து மனுஷா மாதிரி, உங்களுக்கும் கூடவேப் பொறந்தது..”- என்று நொடித்துக் கொண்டே உள்பக்கம் போகிறார் மாமி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாமியின் மியூசிக் சீஸன் தொடரும்

Sivakami,
Thanks for finally posting!
Let me add: readers have to pretend as if we are still somewhere in November because...
Mami has to find matching blouses
Thanks for finally posting!
Let me add: readers have to pretend as if we are still somewhere in November because...
Mami has to find matching blouses

-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Short Stories (in Tamil script)
ஆஹா! அருமையான கற்பனை
தொடரவும்...
தொடரவும்...
-
- Posts: 261
- Joined: 07 Mar 2009, 14:03
Re: Short Stories (in Tamil script)
மாட்சிங் மாமியின் மியூசிக் சீஸன் (1ம் பாகம்) see post #135 in this thread
மாட்சிங் மாமியின் மியூசிக் சீஸன் (2ம் பாகம்)
மறுநாள் காலை 6 மணி இருக்கும்.
மாமா ராணி மெய்யம்மை ஹாலில் நடக்கும் சஞ்சனி-சாவித்ரி கச்சேரியில் மூழ்கியிருக்கிறார், (கனவில்தான்). முன்வரிசையில் உட்கார்ந்து தாளம் போட்டுக் கொண்டு தலையாட்டி ரசிப்பது போல் .. “என்னமா அருமையா பாடறா 2 பேரும்.. அந்த பஜன்ஸ் & விருத்தங்கள் பாடறதுக்குன்னே இவா பிறவி எடுத்துருக்கா போல.” என்றெல்லாம் சிலாகிக்கும் வேளையில்..
“ஏன்னா, சித்த இங்க வர்றேளா” என்ற சிம்ம கர்ஜனை வீட்டையே உலுக்குகிறது, 8 ரிக்டர் ஸ்கேலில் பூகம்பம் வந்தது போல. என்னமோ ஏதோவென்று பயந்து, மாமா சஞ்சனி-சாவித்ரி கச்சேரிக்கு மங்களம் பாடி விட்டு, அவிழ்ந்த வேட்டியை சரி செய்தவாறே, தடதடவென்று மாடிப்படியில் இறங்கி ஓடி வருகிறார் ஹாலுக்குள்...
வந்து பார்த்தால்,
ஹாலில் மாமியைச் சுற்றி, ஜோத்தீஸ், மன்னை சில்க்ஸ், NMRV, ஜல்லி, விமலன்ஸ், ஷாரதா -ராம்ஸ், சிங்கனாச்சாரி, சீதா சில்க்ஸ், ராமா எம்போரியம் என தி. நகரில் உள்ள அத்தனை ஜவுளிக்கடைகளையும் ஒரு சேரக் குவித்தது போல், புடவை துணிமணிகளின் அணிவகுப்பு.... நடுவில் (தன்னை ஒரு நல்ல ஹோம் மேக்கர் ஆக உணர வைக்கும்) நிம்மீஸ் நைட்டியுடன் மாமி.
பதறிப்போன மாமா, “என்ன மரகதம் ஏதானும் அடி கிடி பட்டுடுத்தா என்ன” என்று கவலையுடன் கேட்க, “இல்லேன்னா அதை விட பெரிய சமாசாரம், இந்தாங்கோ லிஸ்ட்” என்று ஒரு பெரிய 100-பக்க பேப்பர் கத்தையை மாமாவின் கையில் திணித்து விட்டு,
“இதுல நான் அட்டெண்ட் பண்ணப் போற கச்சேரிகளின் டீடெய்ல்ஸ் எல்லாம் இருக்கு, எந்த சபாவுல என்னிக்கு, காலையா/ மாலையா, அதுவும் அன்னிக்கு என்ன தீம்– இந்த விவரத்தைப் பொறுத்து என் டிரஸ்ஸை செலக்ட் பண்ணுவேன், அதுக்கப்புறம் அந்த டிரஸ்-நகை செட்டை உங்கள்ட்ட குடுப்பேன், நீங்க அந்த செட்டை கசக்காமல் அழகாக ஒரு அட்டைப்பெட்டியில் போடணும், அந்த பெட்டி மேல லேபிள் ஒட்டணும்..”
“அட்டைப்பெட்டியா..? லேபிளா…?” என்று மாமா சந்தேகம் கேட்க, “என்னன்னா இது கூடத் தெரியாதா? என்ன சீஃப் கண்ட்ரோலர் உத்யோகம் பாத்தேளோ என்னவோ? அட்டைப் பெட்டியெல்லாம் அதோ கலர் கலரா அடுக்கி வெச்சிருக்கு பாருங்கோ” என, ஹாலில் ஒரு மூலையில் தரையிலிருந்து மேல்கூரை வரை 4 வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகள் யாவும் அவரைப் பார்த்து ‘அட அசட்டு அசமஞ்ச சுவாமிநாதா’ என்று இளித்தன.
“அதேப்போல, லேபிள்னா, அந்த ஸ்டிக்கர் மேல, சபா பேரு, ஆர்ட்டிஸ்ட்ஸ், கச்சேரி தீம், தேதி எல்லாத்தையும் எழுதி ஒட்டணும். இப்படி நான் செலக்ட் பண்ணிக் குடுத்ததும் லேபிள் ஒட்டி தேதி-டைம் வாரியா என் 2 பீரோல அடுக்கறேள், புரியறதா? உங்க ஆபீசில சொதப்பினா மாதிரி இங்கேயும் சொதப்பினா தெரியும் சேதி.. சரி, சரி இப்ப டைமை வேஸ்ட் பண்ணாம மளமளனு போய் பல்லைத் தேய்ச்சுட்டு வாங்கோ, நான் சூடா, ஸ்ட்ராங்கா டிகிரி காபி கொண்டு வரேன்..” மாமி அடுக்களைக்குள் காணாமல் போக,
மாமா மானசீகமாக, “உன் புடவை அடுக்கணும்னா மட்டும் ஸ்ட்ராங்-டிகிரி காபியா, மத்த நாள்ள, கழுநீர் மாதிரி ஒரு வெந்நீர்தானே கிடைக்கும், எனக்கும் நம்மாத்து வேலைக்காரி மினியம்மாவுக்கும்....”
“இந்தாங்கோன்னா சூடா காபி.. ஆறிடப் போறது, உடனே சாப்பிடுங்கோ..”
“அப்புறம் பாருங்கோன்னா, மேட்ச்-மேட்சா பாத்து அடுக்கணும். இந்த செப்டம்பர்ல கோகுலாஷ்டமி கச்சேரில பாடும்போது அந்த பாடகி லதா ரங்க நாதன் கட்டிண்டிருந்த ‘அலங்ருத்தா’ பட்டுப்புடவை ரொம்ப நன்னாருந்துது. நேத்திக்கி நானும் அதே மாதிரி வாங்கி வெச்சுட்டேன். நானும் லதா மாதிரியே டிரஸ் பண்ணிக்கப்போறேன்… அவாளோட அடுத்தக் கச்சேரிக்குப் போகும்போது. வெச்சுக்கறதுக்கு மல்லிப்பூக் கூட ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிட்டேன். என்ன, அவாளோடது மாதிரி ஜிமிக்கிதான் எனக்கு சரியா அமையல. இன்னும் 2 கடை ஏறியிறங்கினா அதுவும் கெடச்சுடும்..”
மாமா மானசீகமாகத்தான் – “லதா ரங்கநாதன் தன் 32 வயசுக்கேத்தாற் போல, ஜிமிக்கி-தொங்கட்டான், மாட்டல்னு வித,விதமா போட்டுண்டு, தலை நிறைய பூ வெச்சுண்டா பாக்க அழகா லட்சணமா இருக்கு. தம்பூராவை மீட்டிண்டு, கண்ணை மூடிண்டு ஸ்டேஜ்ல உக்காந்து பாடும்போது தெய்வீகமாக இருக்கு. ஆனா நீ உன் 60 வயசுல, அஞ்சடி உயரத்துல உள்ள பூதாகாரமான 90 கிலோ உடம்பை வெச்சுண்டு, அவாளை மாதிரி அலங்காரம் பண்ணிக்கணும்னு அலையறயே.. ஏதாவது நன்னாவா இருக்கும்? இதுல ஜிமிக்கி அமையலனு குறை வேற..அதை வாங்க, 2 கடை ஏறி இறங்கறதாவது,.... ஒரு தரம் நம்மாத்து வாசல்ல 4 படி ஏறறதுக்கே நாலு நாழி, தஸ்ஸூ புஸ்ஸூனு பெருமூச்சு விட்டுண்டு.. இதுல என்னத்த கடை ஏறி இறங்குவியோ...என்ன கண்ராவியோ..”
“என்னன்னா, நான் சொன்னது காதுல விழுந்துதா இல்லையா.. எங்கேயோ எண்ணை மழை பொழியறதுன்னு யோசனைல மூழ்கிடாதீங்கோ. அந்த அலங்ருத்தா புடவைய வித்ஹோல்ட்ல தற்சமயம் வெச்சிடுங்கோ…. ஏன்னா அதுக்கு ரவிக்கையும் நம்ம லதா மாதிரியே தைக்கச் சொல்லியிருக்கேன்.. கூலி, லைனிங் எல்லாமே சேர்த்தே, ஜஸ்ட் 1,000 ரூபாய்தான்..”
“அடுத்தபடியா, நம்ம சஞ்சனி-சாவித்ரி இருக்காலோள்யோ. அவாள மாதிரி, நானும் .பக்கத்தாத்து விசாலாக்ஷி விசுவநாதனும் ‘மிக்ஸ்-அண்ட்-மாட்ச்’ (mix and match) கலர் காம்பினேஷன்ல, புடவைகளை ஆடித்தள்ளுபடி போடும்போதே சீப்பா வாங்கி வெச்சுட்டோம். என் புடவை கலர்ல, விசாலாக்ஷி புடவை பார்டர், அவ புடவையோட உடல் கலர்ல என் புடவை பார்டர். அதுக்கு மாட்சிங் ப்ளவுஸஸ், அவா அவா உடல் கலர்.. புரிஞ்சுதோல்யோ...அந்த பாடகிகள் மாதிரியே, எங்கள்ல ஒருத்தர் நீளமான முத்து மாலை, காதுக்கு முத்து செட், இன்னொருத்தர் கழுத்ல கல் அட்டிகை, காதுக்கு கல் தோடு என கல் வெச்ச செட்…”
இதைக் கேட்ட மாமாவிற்கு தலை கிறுகிறுவென்று தட்டாமலை சுற்றுகிறது. மனசுக்குள் -“அன்னிக்கு இவ என்ன கலர் புடவை, என்ன நகை செட் போட்டுண்டு பயமுறுத்தப் போறாளோ, ஆண்டவனே, எனக்கு இந்த சோதனையெல்லாம் தேவையா.?. அன்னிக்கி நாம எப்படியாவது எஸ்கேப் ஆய்டணும். இல்லேன்னா இவ ஒருத்தி போறாதுனு, கூட .பக்கத்தாத்து விசாலாக்ஷி விசுவநாதன் வேற இன்னொரு 90 கிலோ! விசுவநாதன் கிட்ட கார் கிடையாதுங்கறதாலே, நம்ம தலைலதான், இவாளை சுமந்து கொண்டு ட்ராப்---பிக்கப் பண்ண வேண்டிய பாரம் வந்து விழும். ஏதாவது ஐடியா பண்ணி, காரை பழுதாக்கி வொர்க் ஷாப்புக்கு அனுப்பிடணும். அப்புறம் நமக்கென்ன, அவாளாச்சு, அந்த கால் டாக்ஸி டிரைவர் ஆச்சு.. வேணும்னா கிரேனோ or ரோட் ரோலரோ வெச்சுண்டு போகட்டும்”
நெக்ஸ்ட் வந்து சிம்பிளா நாலு புடவை நறுக்குனு எடுத்திருக்கேன். அதுக்கெல்லாம் டிசைனர் ப்ளவுஸ். கடைல வாங்கினதுமே நேரா டெய்லர் கிட்ட குடுத்தாச்சு. அதுல ஒண்ணு டி.வில வர்ற ‘சொர்ண வேட்டை’- சொப்னா மாதிரி ரவிக்கைல முத்து, மணி சலங்கை எல்லாம் வெச்சு.. இன்னொண்ணு லக்கி-லக்பாட் நடத்தற ‘லாஸ்யா லாரன்ஸ்’ மாதிரி ஜன்னல் வெச்சு, பாட்ச் வொர்க் (patch work) பண்ணி, மற்றொரு ரகம் ஸ்ட்ரிங்ஸ் அதாவது பின்னாடி கட்டிக்கறா மாதிரி கயறு வெச்சு.. இப்படி எல்லாம் வெரைட்டி, வெரைட்டீயா…”.
மாமா தலையிலடித்துக் கொள்கிறார் “அன்னிக்கி டி.வில ஒரு அம்மாவோட பேட்டி பாத்தோமே, எவ்ளோ சிம்பிளா இருந்தாங்க.. நிறைய பாட்டு கவிதை எல்லாம் எழுதியிருக்காங்களாமே, பல பாஷைகள், சங்கீதம்னு பல விஷயம் தெரிஞ்சவங்க.. அந்தம்மா கூட அமெரிக்காலேர்ந்து வந்திருக்கிறதா சொன்னாளே..அவங்களை மாதிரி இருக்கக் கூடாதா நீயும், இந்த வயசுல இந்தக் கோமாளி வேஷமெல்லாம் தேவையா..?“ இந்த வார்த்தைகள் மாமியின் பாம்புச் செவியில் விழுந்து விட,
“பின்ன என்னன்னா பண்றது? எனக்கு 60 வயசு ஆனாலும், இந்த மாதிரி ஃபாஷன் எல்லாம் இப்பதானே டி வில காட்டறான். எனக்கு 25 வயசா இருந்த போது, டி.வி தான் இருந்துதா, இல்ல நீங்களாவது ஒரு சினிமாவுக்குத்தான் அழைச்சுண்டு போயிருக்கேளா? அந்த எதிர் நீச்சல் சௌகார் ஜானகி- பட்டு மாமி மாதிரி, நானே தனியா 3 ஷோவுக்கும் போயிண்டிருந்தேன். நீங்க வாங்கின ஆயிர ரூபா சம்பளத்துல, உங்க அக்கா தங்கைகளுக்கு சீர் செய்யவே சரியா இருந்துது. எனக்கும் வாழ்க்கைல அழகா டிரஸ் பண்ணிண்டு, லைஃபை என்ஜாய் பண்ணணும்னு ஆசை இருக்காதா” என்று புலம்புகிறார்.
மாமா வாயே திறக்காமல் அடுத்த அட்டைப் பெட்டியை நகர்த்த,
“சரின்னா, பழசை விடுங்கோ, நான் சொல்ல மறந்துட்டேனே – விசாலாக்ஷியோட சேர்ந்து ‘மிக்ஸ்-அண்ட்-மாட்ச்’ (mix and match) மாதிரி, இன்னொரு நாள் ‘மாட்ச்-அண்ட்-மாட்ச்’ (match and match) நம்ம க்ரியா ஸிஸ்டர்ஸ் (ஜனக்ரியா-ரஸக்ரியா) டைப்ல… அதாவது அவா 2 பேரும் கச்சேரிக்கு பாட வரும்போது எப்பவும் ஒரே மாதிரியான புடவை, ரவிக்கை, நகை செட், கர்ச்சீப் தான் யூஸ் பண்ணுவா.. அதே மாதிரி நானும், எதிர்த்தாத்து ஹேமா ஏகாம்பரம் 2 பேரும் ஒன்று சேர்ந்து கச்சேரிக்கு போகப்போறோம். அநேகமா ‘ஹம்ஸநாதம்’ சபாவுல நடக்கப்போற க்ரியா ஸிஸ்டர்ஸ் புரோகிராம்க்குத் தானிருக்கும். அடாடா மறந்தே போய்டுத்து, ஒரே மாதிரியான கர்ச்சீப் தான் நேத்தி கிடைக்கல. வாங்க வேண்டியவைனு ஒரு லிஸ்ட் உங்க கைல இருக்கே, அதுல இந்த கர்ச்சீப் மேட்டரையும் சேர்த்துடுங்கோ...”
மாமா மானசீகமாக, “ஐயையோ, உங்க 2 பேரையும் பார்த்துட்டு, க்ரியா ஸிஸ்டர்ஸ் இருவரும் ‘க்ரையிங் ஸிஸ்டர்ஸ்’ (crying sisters) ஆக மாறி, ஸ்டேஜை விட்டு எழுந்து ஓடப்போறா...பாவம் அந்த ஹம்ஸநாதம் சபா செகரட்ரி” மாமாவுக்கு சிரிப்பு தாங்கவில்லை……..மாமாவின் சிரிப்பைக் கண்ட மாமி, தான் சொன்னதைக்கேட்டு அவர் சந்தோஷப்படுவதாக நினைத்து “நாங்க டிராம்பே ஸிஸ்டர்ஸ் கச்சேரிக்கும் அவாளை மாதிரி போலாம்னு யோசிச்சு ஐடியா பண்ணிண்டிருக்கோம்.”
[மாமா மனதுக்குள், “நல்லவேளை தப்பிச்சோம்டா சாமி, இவாளுக்கு கச்சேரி பண்ணப் போற ஆண் வித்வான்கள் போல வேஷம் போட்டுக்கணும்னு தோணல. இல்லேன்னா 12 முழ வேஷ்டி, 4 மீட்டர் சட்டைத்துணி அல்லவா வேண்டியிருக்கும்.. ஜிப்பா தைக்கணும்னா, ஒரு முழு ரோல் துணி மொத்தமும் அல்லவா தேவை? போதாதுக்கு, அந்த இளம் வித்வான்கள் மாதிரியெல்லாம் டிசைனர் குர்த்தா போட்டுக்கணும்னு ஆசை கெளம்பல…………நல்ல வேளை..”.]
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாட்சிங் மாமியின் மியூசிக் சீஸன் - அடுத்த பாகத்துடன் நிறைவு பெறும்

நம்பளுக்கு எல்லாம் தெரியும் அந்த ஜிரா மாமியை..“அன்னிக்கி டி.வில ஒரு அம்மாவோட பேட்டி பாத்தோமே, எவ்ளோ சிம்பிளா இருந்தாங்க.. நிறைய பாட்டு கவிதை எல்லாம் எழுதியிருக்காங்களாமே, பல பாஷைகள், சங்கீதம்னு பல விஷயம் தெரிஞ்சவங்க.. அந்தம்மா கூட அமெரிக்காலேர்ந்து வந்திருக்கிறதா சொன்னாளே.
அவங்க 'லுக்கிலெ' மட்டுமில்லை எல்லாத்திலேயும்
பரம சாத்வீகம்

மரகதம் மாமி அவா கூட கொஞ்சம் பழ்கினா இப்படி
காசை கரியாக்க மாட்டா..
ஆமாம் மாமாவுக்கு எப்படி கட்டுபடி ஆறது?
நிறய 'ஸம்திங்' வாங்கிருப்பாரோ

-
- Posts: 261
- Joined: 07 Mar 2009, 14:03
Re: Short Stories (in Tamil script)
மாட்சிங் மாமியின் மியூசிக் சீஸன் (நிறைவுப் பகுதி)
மாமி அதற்குள், “அப்புறம் வந்துன்னா, நடுநடுவுல, நம்ம ரிஷிகா ரவியோட உபன்யாசம்.. அவாளுக்கு மேட்சா நாங்களும் அம்சமா மடிசார் புடவை, அதுக்குத் தோதா ஜரிகை பார்டர் போட்ட பட்டு ரவிக்கை, கைல வங்கி, கழுத்ல கல் அட்டிகை, முடிஞ்சா ராக்கொடி, ஜடைபில்லை எல்லாம் உண்டு. தலைல கொண்டை போட்டுக்கலாம்னு ஐடியா – அதுக்காக ‘சவுந்தர்யா அண்ட் சிருங்காரா’ பியூட்டி பார்லேர்ந்து எலிசபெத் வருவா என்னை தயார் பண்ண...”
“ஏன் மரகதம், எலிசபெத் உன்னைத் தொட்டு கொண்டை போட்டா, நீ விழுப்பு ஆய்ட மாட்டியோ, அவா கிறிஸ்துவா மாதிரினா தெரியறது“மாமா சீண்டுகிறார்.. “அதுக்கு என்னன்னா பண்றது, ஆபத்துக்கு பாவமில்லை, அறியாததுக்கு தோஷமில்லை! ஆத்திர அவசரம்னா, நாம் மெர்ஸிங்கற நர்ஸ்கிட்டே ஊசி போட்டுக்கறதில்லையா, அது மாதிரி தானே இதுவும்…? மேலும் எலிஸபெத் வந்தா எனக்கு மடிசார் புடவையும் நன்னாக் கட்டி விடுவாளோல்யோ.. அடிக்கடி கட்டிக்காததினால மறந்து போயிடுத்து, சரியாவே அமைய மாட்டேங்கறது..” “ஆமா, நமக்கு தெரிய வேண்டியது, எலிசபெத்துக்கு தெரிஞ்சிருக்கு.. ரொம்பவே லட்சணம் தான்“ மாமா முணுமுணுக்கிறார்.
“இடையிடையே ஹிந்துஸ்தானி கச்சேரிஸ், லெக்சர் டெமான்ஸ்ட்ரேஷன்ஸ்–அதுக்கெல்லாம் போச்சம்பள்ளி, பனாரஸ், மைசூர் ஸில்க், பட்டோலா சாரீ வகைகள்–மேட்சிங்கா குட்டைக்கை, ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் என்று வெரைட்டீ, வெரைட்டீயா போட்டுண்டு என் பட்டப்பெயரான “மாட்சிங் மரகதம்” ங்கறதை நிலைநாட்டிக்கணும் இல்லையா..?”
இதற்குள் ஹாலிலுள்ள கடிகாரம் 12 முறை டாண்-டாண் என அடிக்கிறது. மாமாவின் வயிற்றிலும் தான்..... ஆனாலும் வாயைத் திறந்து பசி என்று சொல்லி மாமியிடம் ஏதாவது வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டுமே என்று தயங்கும் வேளையில், மாமியே “காலம்பற ஒரு டம்ளர் காபி சாப்பிட்டப்புறம் வேற ஒண்ணுமே சாப்பிடலையோன்னோ, எனக்கு மயக்கமா, கிறுகிறுனு வர்றது. சரி சரி, நீங்க சட்டைய மாட்டிண்டு போய், நம்ம காரை ஷெட்டை விட்டு வெளில எடுங்கோ, நேரா சண்முக பவன்ல போய் லன்ச் சாப்பிடுடலாம். நான் இதோ ஒரு நொடியில் டிரஸ் சேன்ஜ் பண்ணிண்டு வந்துடறேன்” – மாமி உள்ளே போக, மாமா காரை ஷெட்டிலிருந்து எடுக்கிறார்..
அவரின் மனது எப்பவும் போல பின்வருமாறு அசை போடுகிறது...
“பாட்டுக் கச்சேரிகளுக்கு இசையார்வத்தோட போனால், வேண்டாம்னு யாராவது சொல்லப் போறாளா என்ன? இப்படி ஆடம்பரம் பண்றது தான் நன்னாவே இல்ல! இதுக்கு மாட்சிங், அதுக்கு மாட்சிங்னு பேசறயே, கொஞ்சம் மாட்சிங் குறைந்தாலும், நிறைய செலவு செய்து வாங்கியவைகளை அப்படியே புறக்கணித்து, ஒதுக்கித் தள்ளி விட்டு, புது மோஸ்தர்னு அலையறயே.... மனஷாள் நாம 2 பேரும் குடும்பத்துல, அல்லது நம்ம குழந்தைகளோடயோ, அக்கம்பக்கத்துல இருக்கறவாளோடயோ மனசாலயோ செயலாலயோ மாட்சிங்-ஆ இருக்கணும்னு உனக்கு தோண மாட்டேங்கறதே..... நாம இப்படி நடந்துக்கறதுனாலதானே, நம்ம பிள்ளை-மாட்டுப்பெண்- பேரக்குழந்தைகள்ளாம் கூட நம்மளை விட்டு விலகி தனியா இருக்கா..”
“நான் லைட்டா, ஆரோக்யமா, அளவா சாப்பிடணும்னா நீ அப்போதான் சண்முக பவன்ல நெய் ரோஸ்ட், அசோகா ஹல்வா, பாசந்தி, பட்டர் நான் – னு ஆர்டர் பண்றே. நான் டி. வில நியூஸோ கச்சேரியோ வெச்சா, அதை மாத்திட்டு ஸீரியல்ஸ் பாக்கணும்கறே. சரினு நானும் காலம் பூராவும் உன்னோட ஆசைகளுக்கு என்னை மாட்ச் பண்ணிக்கறேன். நீ வாரத்ல ஒரு நாள், ஒரு தடவையைவது எனக்கு மாட்ச்-ஆக இருக்க முயற்சி பண்ணியிருக்கியா..”
மாமாவின் மானசீக புலம்பல் தொடற்கிறது..
“அந்தக் காலத்தில் உங்க அம்மாவும், எங்க அம்மாவும் மொத்தமே 4 ஸெட் துணிமணிகள்- 2 ஸெட் புழக்கத்தில், 2 செட் உள்ளே என வைத்துக்கொண்டு வாழவில்லையா? வீட்டிலே உள்ள அனைவரது துணிமணிகளும் ஒரே டிரங்கு பெட்டியில் அடங்கி விடும் அப்போது. அப்பெண்மணிகள் இருவரும் தத்தம் கணவர்களின் மனதறிந்து, தம் குழந்தைகளின் தேவையறிந்து, குடும்ப சூழலுக்கேற்றாற்போல் தம்மை மாட்சிங் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழவில்லையா.. அதே போல உன் தகப்பனாரும் என் தகப்பனாரும் கூட தங்கள் மனைவியின் (தனக்கென்று எதையும் கேட்கத்தெரியாத குணமறிந்து) தேவையறிந்து -அவர்களுக்கு வேண்டியவற்றை தங்கள் சொற்ப சம்பளத்திலும் கூட வாங்கிக் கொடுத்து மகிழவில்லையா.. அப்பெண்மணிகள் நோய்வாய்ப்படும்பொழுது பாசத்துடனும், பரிவுடனும் ஆதரவாக பார்த்து பார்த்து மருந்து கொடுத்து தங்களை அவர்களோடு மாட்ச் செய்து கொண்டார்களே………….. ஒருவருக்கேற்ப இன்னொருவர் நடந்து சுகப்படவில்லையா என்ன..”
“இப்போது நாம் ஏன் இப்படி மாறிப்போனோம்? பணம், காசு, பதவி, வசதி எல்லாம் அதிகமாக, அதிகமாக நமது சந்தோஷமும் கூடியிருக்க வேண்டுமே! அப்படியில்லாமல் நமது துணிமணி, வெளிப்புறத் தோற்ற-மாட்சிங் பற்றிய கவலை என்று எப்பொழுதும் திருப்தியின்மை ஏன்..? நாம் எப்பொழுது வெளிப்புற சுற்றுச்சூழல்-மாட்சிங், மனது-மாட்சிங், மனுஷா-மாட்சிங் என்பவற்றையெல்லாம் யோசிக்கப் போகிறோம்..”
‘மாட்சிங் பொருந்திய’ ஸாரி, ஸாரி, ‘மாட்சிமை பொருந்திய’மஹாகவி பாரதி இன்று இருந்தால்,
“என்று தணியும் இந்த மாட்சிங் தாகம்?
என்று மடியும் உங்கள் துணிமணி மோகம்?”
என்றுதான் பாடியிருப்பாரோ என்னவோ......
பின்னாலிருந்து மாமியின் கர்ஜனை ஒலிக்கிறது “என்னன்னா ஆச்சு, தூங்கிப் போய்ட்டேளா என்ன? கார் ஷெட்டுக்குள்ள என்ன ஆராய்ச்சி? காரை வெளில எடுங்கோ, இங்க எனக்கு பசில பிராணன் போறது...” மாமா கனவிலிருந்து விடுபட்டு, காரை ஓட்ட ஆரம்பிக்கிறார்...
நிறைவாக, மாட்சிங்-மரகதம்-மாமியின் கார், முருகனுக்கு ஹரோஹராவென்று சண்முக பவனை நோக்கி விரைகிறது..

Well done!
You are very creative!
Write some more stories..
You are very creative!
Write some more stories..
-
- Posts: 261
- Joined: 07 Mar 2009, 14:03
Re: Short Stories (in Tamil script)
Thank you very much cmlover and arasiji,
for your encouraging words..
this is my first one..
Not finding the time to type..
I have some more ready in my mind..
But, then I expect, our fellow forumites may get bored with those lengthy stories, and may pounce with brickbats..
)
for your encouraging words..
this is my first one..
well, I have a couple of them ( on other topics) ready, in the hand-written form..Write some more stories..
Not finding the time to type..
I have some more ready in my mind..
But, then I expect, our fellow forumites may get bored with those lengthy stories, and may pounce with brickbats..

-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Short Stories (in Tamil script)
ஒரு கழுதையின் கதை
டெரெக் லின் என்ற தாவோ அறிஞர் ஒரு கழுதையின் கதையைக் கூறியதை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.
பண்டைய சீன தேசத்தில் ஒரு கிராமத்தில் சக்கரவர்த்திக்குக் கோயில் எழுப்ப தீர்மானிக்கப்பட்டது. அப்பகுதியின் கவர்னர் மிகக் குறுகிய காலத்தில் கோயிலைக் கட்டி முடிக்க கிராமத்தினருக்குக் கட்டளை இட்டார்.
கோயில் கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் தடுப்புச் சுவர் இல்லாத கிணறு ஒன்று இருந்தது. எனவே கட்டிடப் பணி துவங்கும் முன் அக்கிணறை மூட வேண்டி வந்தது.
மண்ணைப் போட்டு மூட முடிவெடுத்த கிராம மக்கள், மண்ணைச் சுமக்க ஒரு கழுதையைப் பயன்படுத்தினர். சிறிது பணி புரிந்த பின் ஒரு முறை கழுதை கிணற்றின் விளிம்பு வரை சென்று சறுக்கி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
கிணற்றுக்குள் விழுந்த கழுதையை மீட்க சில முறை முயற்சித்த மக்கள் அது முடியாமல் போகவே அது உள்ளே இருக்கையிலேயே அந்தக் கிணற்றை மூட முடிவு செய்தனர். கழுதையைக் காப்பாற்ற நேரம் எடுத்துக் கொண்டால் கவர்னர் தந்த காலக் கெடுவுக்குள் கோயில் பணியை முடிக்க முடியாது என்று அவர்கள் எண்ணினர்.
கிராம மக்களே மண்ணைச் சுமந்து வந்து கிணற்றுக்குள் கொட்ட ஆரம்பித்தனர். கழுதை பரிதாபமாகக் கத்தியது. அதைக் கண்டு கொள்ளாமல் மண்ணைக் கொண்டு வந்து கிணற்றில் கொட்டியபடி இருந்தனர். சிறிது நேரத்தில் கழுதையின் சத்தம் நின்று விட்டது. கழுதை இறந்திருக்கும் என்று எண்ணிய அவர்கள் சிறிது நேரம் கழித்து கிணற்றில் எட்டிப் பார்த்தனர்.
கழுதை உயிரோடு தான் இருந்தது. தன் மீது விழுந்த மண்ணை உதறி அடியில் தள்ளி அந்த மண் இறுகிக் கெட்டியாகும் வரை கால்களால் வேகமாக மிதித்தபடி இருந்தது.
அப்படி மண்ணால் உறுதியாகி கிணற்றின் அடித்தளம் மேற்பட மேற்பட கழுதையும் மேலே வந்த வண்ணம் இருந்தது. கடைசியில் ஒரே எட்டாகக் குதித்து கிணற்றுக்கு வெளியே வந்து தப்பித்ததைக் கிராம மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
பல சமயங்களில் நாமும் இந்தக் கழுதையின் பரிதாப நிலைக்கு ஆளாகிறோம். நம் மேல் விழ ஆரம்பிக்கும் பிரச்சினைகள் என்ற மண் குவியல் நம் புலம்பலுக்கு செவி சாய்த்து நிறுத்தப்படுவதில்லை.
எலிஸபெத் குப்ளர் ரோஸ் என்ற அறிஞர் சோதனைகள் வரும் போது ஒவ்வொரு மனிதனும் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டி இருப்பதாகக் கூறுகிறார்.
முதல் நிலை அந்த சோதனையை ஒத்துக் கொள்ளவே முடியாத ஒரு வித ஜடநிலை.
இரண்டாவது நாம் மறுப்பதால் சோதனை நீங்கி விடும் என்று எதிர்பார்க்கும் நிலை. மூன்றாவதாக சோதனைகள் நீங்காததைக் கண்டு சோகமடையும் நிலை.
நான்காவதாக நடந்ததை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காண முற்படும் நிலை.
முதல் மூன்று நிலைகளை எந்த அளவுக்கு சீக்கிரமாகக் கடந்து நான்காம் நிலைக்கு வந்து செயல்பட ஆரம்பிக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் புத்திசாலிகளாகிறோம்.
இந்தக் கதையின் கழுதை தப்பித்தது தனது கூக்குரலால் அல்ல; தனது செயல் திறனால் தான்.
சோதனைகள் வரும் போது வருத்தப்படுவது இயல்பே. ஏன் இப்படி நேர்ந்தது என்ற கேள்வி நமக்குள் எழுவதும் சகஜமே. ஆனால் வருத்தத்தாலும் புலம்பலாலும் எதுவும் மாறப் போவதில்லை என்பதை உணர்வதும் பகுத்தறிவுள்ள மனிதர்களுக்கு சாத்தியமே.
கழுதையின் மேல் மணலைக் கொட்டியவர்களுக்குக் கழுதையின் மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. அவர்களது சூழ்நிலையும், கட்டாயமுமே அவர்களை அப்படிச் செய்ய வைத்தது.
சோதனைகள் வரும் போது உலகம் நமக்கு எதிராகச் செயல்படுகிறது என்கிற தீர்மானத்திற்கு வருவது தவறு. குற்றம் சொல்லிச் சுட்டிக் காட்டிக் கொண்டு நிற்கும் போது நாம் காப்பாற்றப்படுவதில்லை.
எலிஸபெத் குப்ளர் ரோஸ் கூறுவது போல "ஆனது ஆகி விட்டது; இதற்குத் தீர்வு என்ன?" என்று சிந்தித்துச் செயல்படத் துவங்கும் போது தான் சோதனைகளில் இருந்து விடுபடுதல் சாத்தியமாகிறது.
மேலே விழுந்த மண் மழையை உதறித் தள்ளி, காலால் தொடர்ந்து மிதித்து உறுதியாக்கித் தான் படிபடியாக உயர்ந்து கழுதை தப்பித்த வழி சிந்திக்கத் தக்கது. அது போல சோதனைகளைக் காலடிக்குத் தள்ளி அவற்றின் மூலம் உயரக் கற்றுக் கொள்வதே வெற்றியின் ரகசியம்.
பயன்படுத்தும் வித்தை தெரிந்தால் வாழ்க்கையில் எதுவுமே வீண் அல்ல. எல்லாவற்றில் இருந்தும் நாம் கற்றுக் கொள்ள முடியும். சோதனைகளிலும் நம் சாதனைகளுக்கான விதைகளைக் காண முடியும். ஒவ்வொன்றின் மூலமாகவும் நாம் உயரக் கற்றுக் கொண்டால் வானம் கூட நமக்கு எட்டி விடும் தூரம்
தான்....share from ஜனனி.ரமணர்.

ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் பண்ணிக்கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு முன்பின் தெரியாத யாரோ ஒரு பெண்மணி தன்னையே கவனித்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. ஷாப்பிங் முடிந்து பணம் கட்ட கேஷ் கௌண்ட்டர் பக்கமாக அவன் முன்னேறியபோது, அந்தப் பெண்மணி குறுக்கே வந்தாள்.
மன்னிக்கணும் நான் உன்னையே பார்த்துக்கிட்டிருந்தது உனக்குத் தர்மசங்கடமா இருந்திருக்கலாம். வேற ஒண்ணும் இல்லை. .. சமீபத்துல செத்துப் போன என் பையன் மாதிரியே நீ இருக்கே என்றாள் அந்தப் பெண்மணி உடைந்துபோன குரலில்.
ஓ.. . ஸாரி, என்ற அந்த இளைஞன், உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா. . ? என்று கேட்டான்.
ஒண்ணும் வேணாம். . நான் இப்போ கிளம்பறேன். ஓரே ஒரு வார்த்தை.. போய்ட்டு வாங்க அம்மா-னு சொன்னேன்னா போதும். என் மனசு குளிர்ந்துடும். . என்றாள். அதன்படியே அவள் கிளம்பும்போது போய்ட்டு வாங்க அம்மா என்று உருகினான் அவன்.
வரிசை மெதுவாக நகர்ந்து, கேஷ் கௌண்ட்டருக்கு அவன் போனபோது ஏகப்பட்ட தொகைக்கு ஒரு பில் நீட்டப்பட்டது.
நான் வாங்கியது கொஞ்சம் பொருட்கள்தானே.. . எப்படி இவ்வளவு பில் ? என்று கேட்டவனுக்குக் கிடைத்த பதில் - நீங்க வாங்கினது கொஞ்சம்தான். இப்ப புறப்பட்டுப் போன உங்க அம்மா வாங்கினது எக்கச்சக்கமாச்சே.........???

aDiyammA!
Kazhudaik kadaiyaiyum rasithEn, adan poruL ninaindu...
Kazhudaik kadaiyaiyum rasithEn, adan poruL ninaindu...
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: Short Stories (in Tamil script)
ஒரு பெண் கம்பரிடம் தன்னை புகழ்ந்து பாடுமாறு கேட்டாள் , ஆனால் கம்பர் 1000 பொற்காசுகள் கொடுத்தால் 4 வரி பாடல் பாடி உன்னை புகழுகிறேன் என்றார் , அதற்கு அவள் 500 பொற்காசுக்கள் மட்டுமே கொடுக்க 2 வரி மட்டும் பாடி அதை அவள் வீடு வாயிலில் எழுதிவிட்டு மிச்சத்தை நீ மீதம் பொன் கொடுக்கும் போது தருகிறேன் என்றார் ...
ஒரு தரம் ஔவையார் அங்கே வரும் போது அவ்வரிகளை பார்த்துவிட்டு நடந்ததை அறிந்து அந்த பெண்ணை புகழுமாறு அடுத்த இரண்டு வரியை அங்கே எழுதியும் பாடியும் முடித்தார் ...
மறுநாள் அங்கு வந்து அதை கண்ட கம்பர் ஔவை மீது கோபம் கொண்டார் , எப்படி இவள் என் பாட்டை முடிக்கலாம் என்று ...
மறு நாள் ஔவை வயலருகே சென்றார் , கம்பரும் அங்கே இருந்தார் , ஔவையை திட்ட வேண்டும் என்று
" ஒரு காலடி நாலிலைப் பந்தலடி " என்று ஆரகீரையை பார்த்து சொல்லுவது போல ஔவையை " டீ " என்றார் ...
(ஒரு காலடி (அதாவது மூன்றங்குலம்), நாலிலைப் பந்தலடி (பந்தல் போல அமைந்த நான்கு இலைகளுக்கு அடியில்). இந்த விடுகதைக்கு விடை ஆரை (க்கீரை))
அதற்கு ஔவையார் சற்றும் யோசிக்கமல்
" எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது"
யார டா சொன்ன என்று மறைமுகமாய் " டா " போட்டு பதில் சொன்னார் ...
தமிழில் எண்கள் எழுதும் போது அ என்றால் 8. வ என்றால் கால் - எட்டேகால் லட்சணம் என்றால் அவ லட்சணமே
எமனேறூம் பரியே - எமனின் குதிரை எருமை
பெரியம்மை வாகனமே - பெரியம்மை என்பது மூதேவி அதன் வாகனம் கழுதை
கூரையில்லா வீடே - குட்டிச்செவுரே
குலராமன் தூதுவனே - குரங்கு
ஆரை கீரையை சொன்னாயா ? என்று கூறுவது போல் " டா " போட்டு சிலேடையில் திட்டினார் ...
What I read on the net..a few days back..

ஔவையின் சாதுர்யத்தை வியந்த கம்பர் (வஞ்சப்புகழ்ச்சி அணியில்) கூறினார்:
"கிழவனில்லாக் கிழவியே
பழம் பொறுக்கி பாட்டியே
ஆரைக்கிரை தேடும் அம்மையே
கம்பனைப் பற்றி யாரையடி"
I leave this as a puzzle to be interpreted by those
who know Tamil well!

- Posts: 1950
- Joined: 07 Nov 2010, 20:01
Re: Short Stories (in Tamil script)
ஆரைக்கிரையா ஆரைக்கீரையா?
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: Short Stories (in Tamil script)
That is a pun on that word!
கிரை = கீரை (colloqualism)
Give it a try...
கிரை = கீரை (colloqualism)
Give it a try...
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Short Stories (in Tamil script)
thamizh aRivilE nAn oru araikuRai--Aga
araiikkIrai theriyum, 'eppaDi kIrE?--yumthAn
ippaDi Or chappANiyAnadinAl, adu SErnda
kIraiyum aRiyEn--aRignargLE aRivuRuthuvIr!