KavithaigaL by Rasikas

Post Reply
Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(301)
முறைகள்

மெல்லச் செல்ல வேண்டுமெனில்
...............மனதைக் கொஞ்சம் அடக்கவேண்டும்.
நல்ல பொருள் வேண்டுமெனில்
...............கிடைக்கும் வரை தேடவேண்டும்.
இல்லம் சிறக்க வேண்டுமெனில்
...............இனிமை காத்து இருக்கவேண்டும்
வெல்லத் திறன் வேண்டுமெனில்
...............விரும்பி நிறையக் கற்கவேண்டும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
06.12.2013.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

சங்கீத அறிவு வேண்டுமெனில்
Rasika.org ல் சேர வேண்டும்
நல்ல நண்பர் வேண்டுமெனில்
அரசியாரை நாட வேண்டும்
தினம் ஒரு கவிதை வேண்டுமெனில்
PB யிடம் கோர வேண்டும் :)

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(302)
சிவ மடம்

ஆக்கினையில் தினம் ஆக்கினை இடவேண்டுமெனும்
ஆக்கினையை மீறினால் ஆக்கினை கிட்டும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
07.12.2013.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(303)
பெரும் கதை

மறையைக் கற்காது மனப்போக்கில் விரிப்பதுபோல்
மறையா மக்களெலாம் மேலுலகைத் திரிப்பதுபோல்
இறையைக் காணாதோர் அவன்பற்றிக் கதைத்திருப்பர்.

ப்ரத்யக்ஷம் பாலா,
07.12.2013.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

'avan paTRik kadaithiruppar'
ari kadaiyum kETTiruppar--adaRkum mEl
kavaikkudavA 'serial' um pArthiruppar--ISan
SuvaiyaRiyAdu nilam mIdirundiDuvOr
Last edited by arasi on 07 Dec 2013, 23:24, edited 1 time in total.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

Pratyaksham Bala wrote:(302)
சிவ மடம்

ஆக்கினையில் தினம் ஆக்கினை இடவேண்டுமெனும்
ஆக்கினையை மீறினால் ஆக்கினை கிட்டும் !


07.12.2013.
Unable to get the meaning of this one PB, could you kindly provide a 'pozhippurai'?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

sridhar_ranga,

சிவ மடம்:-
ஆக்கினை - நெற்றி
ஆக்கினை - திருநீறு
ஆக்கினை - ஆணை
ஆக்கினை - தண்டனை

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

பெம்மான்

செந்தழலைக் கையில் ஏந்தி
சந்திரனின் பிறையைச் சூடி
செம்மானை விரலில் தூக்கும்
பெம்மானை மனதில் தூக்கு!

ப்ரத்யக்ஷம் பாலா,
08.12.2013.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

nALum nAmellAm ALukkoru kavidai ezhudinAl
thALumO adan bAram nam fOrumumE...

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(305)
மணிவண்ணா!

கொட்டும் மழைக்குக் குன்றமெடுத்த லாலா!
சிட்டுக் கோபியர் சூழ்ந்திருக்கும் லீலா!
சுட்டு விரலில் சுழல்கொண்ட வீரா!
எட்டுத் திக்குமுனக்கு இணையேது கண்ணா!

ப்ரத்யக்ஷம் பாலா,
08.12.2013.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

Pratyaksham Bala wrote:sridhar_ranga,

சிவ மடம்:-
ஆக்கினை - நெற்றி
ஆக்கினை - திருநீறு
ஆக்கினை - ஆணை
ஆக்கினை - தண்டனை
Thanks PB, clear now....brilliant play on the many meanings of the word!
ஆக்கினை - நெற்றி - comes from AjnA chakra, I suppose!
ஆக்கினை - திருநீறு - couldn't find a direct reference for this - perhaps short for 'AgnEyam'?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

sridhar_ranga,
Thanks!
ஆக்கினை - திருநீறு - couldn't find a direct reference for this - perhaps short for 'AgnEyam'?
Tamil Lexicon:-
ஆக்கினை ākkiṉai :
ஆக்கினேயம் ākkiṉēyam
, n. < āgnēya. Sacred ash; விபூதி. (சங். அக.)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

PB is right!
In Hindu rituals is prescribed "AgnEya snAnam" (taking a bath by smearing vibhUti all over the body).
That is done when one cannot take a regular bath for purification for various reasons, especially in death-bed.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

ஆக்கினை எனை என ஆக்கினோனைப் பணிந்தவனுக்கு
ஆக்கினியில் அவி ஆக்கினெய்யில் அளித்திட வேண்டும்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

கொட்டம் அடித்து கோகுலத்தை கலக்கி
ஆட்டம் அடித்து அரவினை அடக்கி
திட்டம் அடித்து கௌரவரை மாய்த்து
சட்டம் வகுத்து மாநிலம் காத்தோனே!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

#1415 --
ஆக்கினை எனை - you created me
ஆக்கினோன் - creator
ஆக்கினியில் - in agni ?
அவி ஆக்கி - make havis
னெய்யில் - in ghee

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Right!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(306)
மாலனருள்

திருநாமம் அணிந்தபடி தினந்தோறும் பாடு;
திருவோடு அருளெல்லாம் தருமாறு வேண்டு.
திருக்கோல உருவிலவன் வந்திடுவான் பாரு;
திருமாலன் மலர்நாபன் வழங்கிடுவான் பேறு !

ப்ரத்யக்ஷம் பாலா,
14.12.2013.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(307)
சிவனருள்

திருநீறு அணிந்தபடி தினந்தோறும் பாடு;
திருவோடு அருளெல்லாம் தருமாறு வேண்டு.
திருமூலர் உருவிலவன் வந்திடுவான் பாரு;
திருநாடு அளித்துனக்கு வழங்கிடுவான் பேறு !

ப்ரத்யக்ஷம் பாலா,
14.12.2013.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

'tirunADu' does refer to paramapadam in Srivaishnava paribhaashai. Does it have a similar meaning (kailasa padam?) in Saivism?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

Here the term 'tirunADu' is used to mean 'tiruk-kailAyam' !

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(308)
செல்வம்

கொட்டிக் குவித்து வைத்தால் குட்டியா போடும்?
பெட்டியில் வைத்திருந்தால் வட்டியா கிட்டும்?
கட்டிவைத்த செல்வம் ஒட்டி உலர்ந்துவிடும்!
துட்டின் மகிமையெலாம் திட்டமிட்டால் தெரியும்!

ப்ரத்யக்ஷம் பாலா,
14.12.2013.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(309)
மாயக் கண்ணன்

எண்ணத்தில் வரைந்து வைத்தேன்;
உண்ணாமல் இருந்து பார்த்தேன்;
பண்ணிலே பாடி நின்றேன்;
கண்ணன் வரக் காணோமே?

மண்ணிலே மீண்டும் வருவான் !
விண்ணிலே பறந்து வருவான் !
கண்ணனிங்கே வந்து நிற்பான் !
கண்ணுக்குள் காத்து வைப்பேன் !


ப்ரத்யக்ஷம் பாலா,
15.12.2013.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(310)
வட்டம்

இல்லாத ஒன்றை இருப்பதைக் காட்டி
கல்லாத மனிதரைக் கனவிலே வீழ்த்தி
பொல்லாத செயல்களைப் பெரிதுமாய்க் கூட்ட
செல்லாது புகழேதும் சுற்றங்கள் தாண்டி.

ப்ரத்யக்ஷம் பாலா,
16.12.2013.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

What is the idea behind the last line?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

சுற்றங்கள் - (1) Walls around the place (2) Fawning admirers (வட்டம், as mentioned in the heading.)

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(311)
கோபியின் விரகம்

பூத்ததடீ கண்கள் வரும்வழி பார்த்துப் பார்த்து!
நேற்றே வருவேன் என்றார் - நெஞ்சு துடிக்குதடீ !

நீராடி இருக்கையிலே நின்று பார்த்தாரடீ! - பின்னே
தேரடி அருகே வந்தென் தோளைத் தொட்டாரடீ!
ஓரடி பாயும் முன்னே உடும்பாய்ப் பிடித்தாரடீ!
பாரடீ கன்னத்தை! என்னத்தைச் சொல்லி அழ?

யாரடீ அங்கிருந்து எட்டி எட்டிப் பார்ப்பது?
போராடியாவது அவரை அழைத்து வாருங்கடீ!

ப்ரத்யக்ஷம் பாலா,
18.09.2012.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

Beautiful Padam for bharata nATyam.
Have it set to music.
Arasi
What raga do you suggest (coming from your heart) ?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

cmlover:
THANKS!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(312)
அனுமன்

தூசனை செய்வோரைத் துவைத்து எடுப்பேன்!
நேசம் மறுப்போரை நாசம் செய்திடுவேன்!
பாசம் வைத்திடினோ பதினெட்டும் செய்திடுவேன்!
தாசனாய்க் கிடப்பேன்! தகைமை காப்பேன்!

ப்ரத்யக்ஷம் பாலா,
18.12.2013.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

பத்தி செய்வோரை நித்தமும் காப்பேன்
முத்திக்கு வழியுண்டு என்
அத்தனை பணிவோர்க்கு

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

பத்தி செய்யினும் செய்யாவிடினும்
நித்தியம் காப்பேன் நானுன்னை - இஃதென் கடனன்றோ
பத்தி செய்யின் என் அண்மையினை உணர்ந்திடுவாய்
மெத்தனம் விடுத்து உன் பணி செய்து கிடப்பாயின்
முத்திக்கென தனி யத்தினம் வேண்டுமோ
இத்தரணியன்றி வேறேதும் வானுலகம் உண்டாமோ
அத்தன் நான் உன்னுள்ளே நன்கறிந்திடுவாய் என் மகனே

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

ஒரு பத்திரிகை செய்தி :
மனித உரிமை ஆர்வலர்களும் முற்போக்கு சிந்தனை யாளர்களும்உச்ச நீதி மன்றத்தின் (ஓரினச்சேர்க்கை பற்றிய) தீர்ப்புக்கு கடும் கண்டனம் !
ஒரு கவிதை
வருங்காலத் தலைமுறை யினரின் பரத நாட்டியத்திற்கு ஒரு பதம் (ஏதோ என்னாலானது !)

டாமி யின் தூது .

நான் கம்ப்யுட்டர் காட்சியிலே அன்று என்னை மறந்திருந்தேன்
நாற்காலி பின் வந்தவன் எந்தன் கண்களைப் பொத்திவிட்டான்.
மாறன் அவன் செய்த ஜால கள்ளதனமெல்லாம்
நாலு பேர் கேட்க சொல்ல எதுவும் நாணம் எனக்கில்லை
கன்னத்தில் என்ன காயம் என்று கேட்ட மனைவிக்கு நீ
கவ்வியதாகச் சொல்லி பழியை உன் மேல் போட்டுவிட்டேன்
தூது நீ செல்லாயோ, டாம் மியே தூது போய் சொல்லாயோ
நாலு கால் பாய்ச்சலிலே போய் மாறனை அழைத்தோடி வா.
சீ சீ போடி போ டாம்மியே நீ யோ ஒரு பேதை மிருகம் !
ஓரினச் சேர்கை இன்பம் பற்றி என்னைத்தை நீ அறிவாய் ?
மாற்றினத்தின் மேலே உனக்கேன் அப்படி ஓர் ஆசை ?
நானோ ஆணழகன் எனக்கு மாறன் உறவுதான் வேண்டும்
மானுடச் சுதந்திரம் தந்த மாட்சியை இழப்பேனோ ?
உச்ச நீதி மன்றமும் எனக்குத் துச்சமாய் தோன்றிடுதே !
Last edited by Ponbhairavi on 18 Dec 2013, 17:17, edited 1 time in total.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

ஆணென்ன? பெண்ணென்ன? நீரென்ன? நானென்ன?
~.......... அனைவரும் ஓரினம்தான்;
பாணினால் பாடுவீர் பத்தியும் செய்குவீர்
~........... புருஷோத் தமனிடந்தான்;
மாறனோ மங்கையோ மற்றெந்த மோகமோ
~............ மறப்பீர் சிற்றின்பம்;
நாரணன் தன்னையே நாடுவீர் கூடுவீர்
~............. நாளுமே பேரின்பம்!

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

irukkum padamellAm* pOdAdO?
padamAi uraithiDinum, padam padamE...

padamE* ellAm, AmAm...
padam SuDum--idu veyyilinAlO?
nAvinAl SuTTa puN--nayamAi navilAda
pAvAnAlum, pEchE enRAlum...

uLLa padamellAm pOdumE, paDap pATTumuNDE!
uLLam Sezhikka rasikarukkudavum pANDi naNbarE!
padamum pADugiRIr, pulamaiyil SiRandavarE!
padamAi SolvEn, en padam kETpIrO?

gOvindanum siridaranum SolliviTTArE?

kavi pADuvIr, kAdalaiyum pADuvIr anbarE,
kavi nATTArE!, bhArathi vAzhnda nilathOrE!

Avai pOdumE, azhiyum yAkkai paTRiya varigaL viDuthu
agathin thAkkangaLum, EkkangaLum paTRip PADuvIr,
avar SoRpaDi aZhaguRa anda nAraNan perumaigaLumE!

* 1 padam (pATTu vagai)
2 padam (Sol)

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

மரணப் பாட்டு பிடிக்கவில்லை;
மாலன் பாட்டு வேண்டும்!
அவ்வளவுதானே?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(313)
துளசிக் காடு

மலை பெயர்த்து குடையாக்கிய மன்னா! ஸ்ரீ கண்ணா!
இலை மறைவில் லீலை செய்து என்னை மயக்கிவிட்டீர்!
தூக்கம் சற்றுமில்லை; உணவிலும் நாட்டமில்லை.
நோக்கும் இடமெல்லாம் ஸ்வாமீ! நீரே தெரிகின்றீர்!

ப்ரத்யக்ஷம் பாலா,
04.03.2011.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

அடாடா, இதுவன்றோ ரசிகத்தன்மை!
PBயை பதம் பார்க்கிறீர்கள் :)

ஓரினக்காதலுக்கு அனுமனே உதாரணம்!
ராமனே அவன் நாயகன்.
மேனாட்டார் கொச்சையாக சிந்திப்பர், பைபிள் வழக்கு படி
நம் நாட்டு வழக்கப்படி "நாயக நாயகி" உறவு புனிதமானது!
ஏன் மேனாட்டு கலாச்சாரத்தை புகுத்துகிறார்கள்?

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

idil mElai nADum kizhakku nADum Edu?
vazhakkilirundavai, iruppavai maRukkavillai
vArthaiyil kavidai varigaLai vaDippadaRku
vAri vAriyAi ethanaiyO inba thunba varNippugaL

adil iRaiyAnAlum, idara vagiyAnAlum vAkkaLippadaRku
badil Aga ethanai uNarvugaL, pArvaigaL!
adilum varaiyilA eNNangaL, kONangaL ethanai!

aduvE SonnEn... :)

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

பித்தன்

Post by vgovindan »

உனக்குள் நான், எனக்குள் நீயென்றால் - இங்கு
உரைப்பதார், கேட்பதார், உரையாடலும் தான் பொய்யோ - இங்கு
காண்பதார், காணப்படுவதார், காட்சியும் தான் பொய்யோ - இங்கு
நினைப்பதார், நினைக்கப்படுவதார், நினைவும் தான் பொய்யோ - இம்மடல்
எழுதுவதார், சேரிடம்தான் எதுவோ, இரண்டுமே பொய்யோ - இங்கு
நீ யார், நான் யார், இடை நிற்கும் இவ்வுடல்தான் திரையோ - இங்கு
நடப்பதென்ன நாடகமோ, நாடகத்தலைவன் தான் நீயோ - உன்
கேளிக்கைக்கு நான் பாத்திரமோ, முடிவுதான் என்றைக்கோ - என்னைப்
பித்தனாக்கினாய், உண்மையில் பித்தன் நீயன்றோ.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

CML wrote: ஏன் மேல் நாட்டு கலாச்சாரத்தை புகுத்துகிறார்கள்?

என் கருத்தும் அதுவே தான். சுய நிலை விளக்கம் .

மாக்களும் நாணும் உடல் உறவு எங்கள் மனித உரிமை எனக்கோரி ஆயிரக் கணக்கானோர் தில்லி உச்ச நீதி மன்றத்தின்
முன் வந்து கோஷமிட்டு இதற்காக இன்னாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என குரல் எழுப்புவதை
ஊடகங்கள் தினமும் உலகறிய காட்டுகின்றன இசை நாட்டியம் என நுண் கலைகளில் உலகில் உயர்ந்து நிற்கும் இந்நாட்டிற்கு
இந்த கலாச்சார சிரழிவா என்ற என் உள்ள புலம்பலை கொட்டி திர்த்தேன். என் கவிதை அடுத்த தலைமுறைக்கு என்றும் எழுதியிருந்தேன்.படிப்போருக்கு புரியும்படி எனக்கு சொல்லதெரியவில்லயே அது தான் குறை
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் சயனித்திருக்கும் மலர் மார்ப னை புனித இம்மார்கழியில் போற்றும்
பக்தர்களில் நானும் ஒருவன் . ஆபாசம் என் நோக்கமன்று

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

AbASam enRu karudavillai
aga uzhalvum maRukkavilllai
thaNikkai SEyvadum pazhakkamillai

padam pANiyil vanda pADalellam
uDalum, kUDalumAga vazhangum veRum
'sadai' paTRiya manap pulambalgaLE
sol nayamum iSai azhagumE avai
pallANDu vAzhndirukkath thuNaiyAnadE

pinnum, bAlarum pArkkum thaLamidu
van muRailiyil kURavillai, munnETramum
maRukkavillai--iDam, poruL ninaindEn, poRuppIr :)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

Polygamy was not illegal in India. We abolished it, thanks to "Western influence".
Substance abuse was not illegal in India, many 'saadhus' in India still indulge in the practice. Now it has no legal sanction, thanks to "Western influence".
The minimum age for marriage / age of consent were much lower in India. Now it stands at 18/21,thanks to "Western influence".

Are we prepared to rollback any of these Western-influenced changes in our society?

India has had a great tradition of acceptance / tolerance towards all types of minorities, including sexual minorities. Since when have we begun to see some of them as "Western-influenced" and "unsuited to our great culture"? We seem to be selective in our acceptance of some sections of them (e.g. transgenders) while denouncing others as 'decadent' in behaviour & deny them their rights.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

Who says polygamy is legal is India. It was neither legal nor illegal. But our forefathers knew better that by enacting laws, you cannot change the society. Therefore, they went by setting examples. What Lord Rama did was an example about the virtue of monogamy. Laws are not made in Heaven (probably they are now made in Western Societies - are they?) The customs and practices of the society become laws - this is the basic lesson of law. However, modern rulers of India seem to be believe that by enacting laws, they can change the society - it simply doesn't happen. The present chaotic situation is a result of such unthinking enactments.

I fully agree that what transpires between two individuals - whoever they may be - should be their own business. Therefore, from that point of view homosexuality is not a criminal act. However, I will not agree with the slogan that homosexuality is 'natural'. Let the minority practice whatever they may want in private, but they should not try to impose their view on the larger society - that is bad. That is what termed as 'Western Influence'. That is what media is blaring day in and day out.

Indian society is much more advanced in its thought than decadent Western society. Child marriage etc were abolished not because of Western influence but our society and our leaders felt that way. Please remember British rulers were very skeptical about interfering with religious beliefs - they always kept a safe distance - this is so because they were prudent not to upset the apple cart of their colonialism.

Moderators - This subject needs to be treated as separate topic.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

பக்திப் பாடல்:-
(314)
மாலே! மணிவண்ணா!

நூற்றாறும் கண்டுவிட்டேன்!
பாற்கடலைக் காணவேண்டும்;
பரமபதம் பற்ற வேண்டும்.
பரமனே அருள் புரிவாய்!

ப்ரத்யக்ஷம் பாலா,
19.12.2013

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(315)
இயற்கை

செடிகளெலாம் செங்கதிரை நாடி ஆடும்;
கொடிகளெலாம் கொழுகம்பைத் தேடிச் சூடும்.

புசித்த ரசிகர்கள் நல்லிசையை நாட
பசித்த கூட்டம் காண்டீனைத் தேடும்!

ப்ரத்யக்ஷம் பாலா,
20.12.2013
Last edited by Pratyaksham Bala on 20 Dec 2013, 09:10, edited 1 time in total.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

நூற்றாறும் = ?

பாற்கடலைக் காணவேண்டும்;
பரமபதம் பற்ற வேண்டும்.
நாரணனே அருள் புரிவாய் ?

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

ஆபாசமா..

அமெரிக்க அம்மையாரே!
கர்நாடக சங்கீதம் மட்டுமல்ல நம் பழமை நாகரீகம்.
சிறார்க்கு புரிய வேண்டும்.
தங்கள் நீதிமுறை என்று நம் நாட்டு பெண் (அரசினரை)
துகிலுரிதல் முறையோ?
நாமும் அவர் முறைகளை பின் பற்றினால் ????
(மெல்ல செத்து விடும் நம் கலாசாரம் :(

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

cmlover wrote:நூற்றாறும் = ?
106 திவ்ய தேசங்கள்

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

சரணாகதி

Post by vgovindan »

தன்மானம் தன்மானமென்று தன் மானத்தைத் தான் காத்தவரை-உனது
தன்மானம் உனது பொறுப்பென்றிருந்தவன் - எனது
தன்மானமும் எனதல்லவென, தன் மானத்தினைத் துறந்து - எனது
தன்மானமும் உனதேயெனக் கையிரண்டையும் உயர்த்தி, கண்ணா என்று கதற - உனது

தன்மானத்தைக் காக்க இதோவந்தேன் என்று துரோபதைக்குத் துகில் அளித்த
தன்மானம் அற்றக் குழலூதுவோனை 'சரணடைந்தேன்' என
தன்மானத்துடன் கூடிய வெற்று வாய்மொழி சரணாகதியாமோ?
தன்மானத்தைத் துறத்தல் தன்மானத்தின் வேறினை அறியாது சாத்தியமோ?

தன்மானத்தைத் துறத்தலே ஞான மார்க்கத்தின் நோக்கமன்றோ
தன்மானத்தின் வேறறுத்து ஞான மார்க்கத்தில் சரணடைந்த
தன்மானம் சிறிதுமற்ற அனுமன் போன்றோருக்கே அது சாத்தியமன்றோ

Post Reply