KavithaigaL by Rasikas

Post Reply
Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(316)
போற்றி!

கயிலைமால் மீதமர்ந்த கோமானே போற்றி!
இயலிசைக்கு உயிரளிக்கும் ஈஸ்வரியே போற்றி!
பயில்வோர்க்குத் துணையிருக்கும் புத்திநாதா போற்றி!
மயிலாடும் வேல்சூடும் குமரனே போற்றி!

ப்ரத்யக்ஷம் பாலா,
21.12.2013

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

அபரோட்சம்

Post by vgovindan »

நீயுண்டென பிறர் சொன்னதால் உன்னை நம்ப வேணுமோ
நீயில்லையெனச் சொன்னால்தான் ஏற்றுக்கொள்ள வேணுமோ
அனைத்தையும் மறுத்தாலும் என்னை நானே மறுக்கவியலேனே
நான் யாரெனக் கேட்டு உன்னைக் கண்டனர் ஞானியர்
நீயே சரணெனக் கொண்டு உன்னையடைந்தனர் பக்தர்கள்
இப்புண்ணிய நாட்டிலுதித்த முனிவர்களும் ஞானிகளும் சொன்னது பொய்யாமோ
உண்டென்போருக்கு உண்டுண்டெனப் பாடிய தியாகராஜன் பொய்யனோ
கேள்வி ஞானத்தினால் மட்டும் வருவதன்றே உனது சாட்சாத்காரம்
அபரோட்சக் காட்சி அடைந்திடவும் உன் அனுக்கிரகம் கிட்டுமோ, அருளாளா

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(317)
காட்சி

மயிலாடும் சோலையொன்று கண்டேன்! - ஆங்கே
குயில்பாடும் கீதமொன்று கேட்டேன்! - மால்
அலைவீசி கீற்றசைக்கக் கண்டேன்! - இயற்கையின்
பொலிவுடைக் காட்சிக்கு இணையேதும் உண்டோ?

ப்ரத்யக்ஷம் பாலா,
21.12.2013

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(318)
தட்டுப்பாடு

மேல்நாட்டுப் பணமளித்து மனையொன்று பெற்றான்;
மால்போட்டு தனதென்று உரிமையைக் குறித்தான்.
கால்நாட்டி பூமிபூசை சிறப்பாக முடித்தான்; - ஆனால்
சால்நிறைய மணல்கூட வீடுகட்டக் கிடைக்கவில்லை!

ப்ரத்யக்ஷம் பாலா,
22.12.2013

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

மண் எங்கே போகிறது - கொள்ளை கொள்ளை
பணம் எங்கே போகிறது - ஊழல் ஊழல்
மக்கள் எங்கே போகிறது - அமெரிக்கா நாடி
தமிழ் எங்கே போகிறது - தெரியவில்லை!

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

சரணாகதி

Post by vgovindan »

இச்சையில்லை தருமத்திலே, இச்சையில்லை செல்வத்திலே,
இச்சையில்லை இன்பம் துய்த்தலிலே; முன்வினைப் பயனாய், இப்பிறவியில்,
இனி வருவிருப்பதுவும் வருவதாக - ஆயின், இறைவா
இனி வரும் பிறவிகளிலும், உனது கமலத்திருவடி
இணையினின்றகலாத பற்றிருப்பதாக - இவ்வொரு வரம் வேண்டுவனே

குலசேகராழ்வாரின் முகுந்தமாலை தோத்திரப்பாடல் 5-ன் தமிழாக்கம்
http://vedabase.net/mm/5/en1

(sarva dharmAn paritryajya mAmEkaM SaraNaM vraja - gItAcArya)

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

மணல்-வீடு

Post by vgovindan »

நதியெங்கே போகிறது - கடலைத் தேடி
நதியின் மணலெங்கே போகிறது - வீட்டைத் தேடி
வீடெங்கே போகிறது - பணத்தைத் தேடி
பணமெங்கே போகிறது - ஸ்விட்ஸர் லேண்டைத் தேடி

(கண்ணதாசன் மன்னிப்பாராக)
Last edited by vgovindan on 22 Dec 2013, 12:55, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(319)
காதலன் சொல்

மாங்கல்யம்தந்து நானேஉனை மணம்முடிப்பேன்!
சாங்கியம் அத்தனையும் விடாது நடத்திடுவேன்!
காங்கேயன் சாட்சி! கதிரவன் மேல் ஆணை!
பூங்குயிலே! என்னவளே! பயமேதும் வேண்டாம்!

ப்ரத்யக்ஷம் பாலா,
22.12.2013

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(320)
திருமுருகா போற்றி!

நாவற்பழ கண்ணா! நீறணிந்த வண்ணா!
சேவற்கொடி வேலா! சென்னிமலைச் சீலா!
பழம்பெரும் திருப்பதி பழநிமலை அழகா!
பொழிலேழும் புகழும் பிரணவ குருநாதா! போற்றி! போற்றி!

ப்ரத்யக்ஷம் பாலா,
23.12.2013

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

VGV
Just super!
More such Kannadasan copycat welcome!
( I am away from home. No access to Tamil fonts here )

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

தளை

Post by vgovindan »

எத்தனைத் தளைகள் என்னைப் பிணைக்கும்
அத்தனையும் நானே இறுக்கிக்கொண்டதன்றோ

இவ்வுடலென, இப்பாலென - தந்தை தாய் தந்தது
இன்னாரெனப் பெயரொன்று - பெற்றோரும் உற்றாரும் இட்டது
இவ்வூரான், இந்நாட்டான், இம்மொழி, இவ்வினமென
இவையனைத்தும் பிறப்பினால் வந்தவையன்றோ

அத்தனையும் என்னதெனப் பெருமிதம் கொண்டு - அதனால்
அளப்பரிய ஆணவம் கொண்டு,
மற்றுள்ளவர் அனைவரும் இங்ஙனமே தளைப்பட்டனர் என்றுணராது
மற்றவரை மற்றவரென்று, எதிரிகளென்று, பகைவரென்று, பங்காளிகளென்று

என் வீடு, என் நாடு, என் மொழி, என்னினமென்று
என் மனைவி, என் மக்கள், என் சுற்றமென்று
புவியின் பொதுவுடைமைகளை ஒவ்வொருவனும் தன்னதென்று
புவியினையோர் போர்க்களமாக்கிட்டு

இப்புவியில் எந்நாளும் இருந்திடுவோமென இறுமாப்புற்று
இவ்வுடல் தளர்ந்து, பார்வை மங்கி ஏகும் நாள் வர
போகின்றேனே, போகின்றேனே எனப் புலம்ப
போகும் ஊர் இன்னதென்று விளங்காமலே

அனைத்துத் தளைகளும் ஒரு நொடியில் உயிரோடு விட்டகன்று
அனாமத்தாக நான் செல்லும் நாளொன்று வந்திடுமே
அன்று என் உடலெங்கே, பாலெங்கே, பேரெங்கே
அல்லல் பட்டு சேர்த்த சொத்தெங்கே, உற்றார் உறவினரெங்கே

அனைத்தும் அந்நியமாக, எனக்கு நானே அடையாளம் அறியாது
எங்கு நான் செல்வேனோ, என்னவாவேனோ ஏதும் அறிந்திலேனே
இந்த 'நான்' உணர்வின் மருமம் தான் என்னவோ
இதற்கு வித்திட்டதாரோ, இது மாயையென்றால் இதல் தலைவனாரோ

இன்னுமோர் முறை இச்சுழற்சி வருமாகில்
இத்தனைத் தளைகள் திரும்பவும் வந்திடுமோ
இதற்கோர் முடிவில்லையோ

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(321)
விழிப்பு

நானெனது என்றெல்லாம் நாளும் விடைத்து
மானென்றும் தேனென்றும் மதிகுலைந்து மயங்கி
ஊனினைப் பெருக்கி உலகெலாம் சுற்றி - பின்
ஏனிந்த மடமையென இறுதியில் விழிப்புவரும்!

ப்ரத்யக்ஷம் பாலா,
30.12.2013.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

iRudiyil,vizhippu varugaiyil--
mILA uRakkam pin varumE!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

:ymapplause:

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(322)
விவேகம்

ஆடும் ஆட்டம் ஆணவம் அழியும்வரை!
நாடும் கூட்டம் நானிலம் புரியும்வரை!
தேடும் ஊட்டம் தேகம் தளரும்வரை!
வாடும் காலம் வேடம் விடுக்கும்வரை!

ப்ரத்யக்ஷம் பாலா,
31.12.2013.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(323)
விவேகம் - 2

ஆடிய ஆட்டமென்ன! ஆணவம் அழிந்ததோ?
நாடிய கூட்டமென்ன! நானிலம் புரிந்ததோ?
தேடிய ஊட்டமென்ன! தேகம் தளர்ந்ததோ?
வாடிய போது வரும் விவேகம்தான் என்னே!

ப்ரத்யக்ஷம் பாலா,
31.12.2013.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சிவந்தெழும் கதிரவன் சுடர்மிகு ஒளியில்
தவழ்ந்திடும் முகிலிடைத் தண்ணில வொளியில்
அவனியில் நடைபெறும் அரியபல் நிகழ்வில்
நவநவ உணர்வினில் நலமொடு மலர்வோம்!

ப்ரத்யக்ஷம் பாலா.

―•●•―

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

அந்தாதி

நலமொடு மலர்வோம் நன்மைகள் புரிவோம்
பலமொடு இணைந்து பாக்கள் பகிர்வோம்
அறிவினை வளர்ப்போம் அறம் வழி நடப்போம்
செறிவினைக் கூட்டி நந்தமிழ் காப்போம்.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

பழைய சோறு

Post by vgovindan »

பாசத்துடன் பாலூட்டி வளர்த்த தாயின் கை
பழைய சோற்றுக்கு அறுசுவை உண்டி ஈடாமோ
தன்னையே அளித்துத் தனிமை போக்கிய தாரத்தின் கை
தாளித்த சீரக ரசச்சோற்றுக்கு அறுசுவை உண்டி ஈடாமோ

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(324)
நமச்சிவாய!

தழைத்த சடையிற் தண்மதி தரித்து
விழித்த மானை விரலிடை ஏந்தி
பழுத்த தீயொடு மழுவும் தூக்கிய
செழித்த செம்மலைச் சிந்தையிற் சூடு!

ப்ரத்யக்ஷம் பாலா,
05.01.2014.
Last edited by Pratyaksham Bala on 05 Jan 2014, 21:13, edited 1 time in total.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

நமச்சிவாய!

தாழ்சடையிற் தண்மதியும் தாங்கும் உடுக்கையும்
வீழ்கங்கை யாம்நதியும் வில்வமும் - சூழரவும்
யாழ்மீட்டும் பொற்கரமும் யாசிக்கும் ஓடதுவும்
பாழ்பட்ட நெஞ்சமே பற்று

(யாழ் = வீணை)

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(325)
வைகுண்டம்

அடித்துப் பிடித்து இடிபட்டு வரிசையில்
படியேறி, வைகுண்ட வாசல் கடந்து,
திரும்பவும் தினம் சுற்றும் சுற்றடைந்தேன்!
இருப்பதே வைகுண்டம் என்றுணர்ந்தேன்!

ப்ரத்யக்ஷம் பாலா,
11.01.2014.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

avan iruppadum vaikunTamE--
aduvum inRu maTTum--Enenil--
veguNDezhum tsunAmiyena
Suzhalum avan paDaippugaLin
SUzhal viTTu inRu vaikuNTamE
avan virumbiDum iruppiDam

SuruL kuzhalAn inRu ninRu, pin
SuTRu thEnkuzhalum laDDuvumE
nALai puSippAn--left-over enavE...

kOyilukkup pOnIrgaLO?

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Sridhar,
Lovely lines.
avanukkum thiruvAdiraiyil idE gathidAn!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

வைகுண்ட ஏகாதசி

கருப்பு நிறத்தானைக் கண்குளிரக் கண்டால்
விருப்பு நிறைவேறும்; வீடுபேறு திண்ணம்!
நெருக்கியது கூட்டம்; நெளிந்துதிரும் பிட்டேன்
இருப்பிடம் வைகுந்தம் என்று!!

:-)

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

Superb!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(326)
கிரக்கம்

கிண்ணிக் கதைகளில் கிரங்கிக் கிடக்கின்றான்;
பண்ணில் மயங்கி பட்டியில் அடைந்துள்ளான்.
வண்ணக் கிணற்றில் விரும்பியா வீழ்ந்தான்?
எண்ணி விழிக்கவும் இடமில்லையே! ஐயே!

ப்ரத்யக்ஷம் பாலா,
11.01.2014.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(327)
பாமரர் கூற்று

நீ நீயில்லை என்று நீட்டி முழங்குவார்;
தீ தீயில்லை என்பார்! தீராத நோயும்
நோயல்ல என்பார்! நாரதர் வேலையோ?
போமையா! எமது பசிக்கு வழிகூறும்!

ப்ரத்யக்ஷம் பாலா,
12.01.2014.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

தெற்கு வாயில்

Post by vgovindan »

தெற்குவாயிலென்ன, நான்கு வாயிலும் திறந்துவைத்தேன்
தெரியுமோ தெரியாதோவென்று மறையினால் பறைசாற்றினேன்
தெரிந்தும் தெரியாது, கண்டும் காணாது நீ சென்றாய்
தெள்ளத் தெளியச் சொல்வேன் கேள் அன்பனே

உனக்குமெனக்குமெனக்குமுள்ள உறவு ஒழிக்க ஒழியாது
எனக்கு நானே போட்டுக்கொண்ட தளையின் பயனது
காத தூரம் நீ சென்றாலும், காலமெல்லாம் காத்திருப்பேன்
காதலுக்கு இலக்கணம் நீயறிந்தால் உணர்வாய் எந்தன் கூற்று
Last edited by vgovindan on 14 Jan 2014, 08:33, edited 1 time in total.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

.
உட்பொருள்

பிக்ஷை இட்டால் புண்ணியம் உண்டு!
(பவதி பிக்ஷாம் தேஹி)

பணத்தில் ஆசை கொள்ளாதே!
(என் உண்டியலில் போடு)

குருவே தெய்வம்!
(நானே உன் குரு)

நான் உனக்கு அருள்வேன்!
(கட்டணம் கேட்டறி)

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(328)
அழகன்

கன்றுக் கறவைகள் காத்‌திடும் கந்தன்
சின்னக் குழல்கொண்டு ஊதுவதைக் காணீர்!
இன்னல்கள் அழித்துக் காத்‌திடும் கந்தன்
கன்னம் குழிந்திடச் சிரிப்பதைக் காணீர்!

ப்ரத்யக்ஷம் பாலா,
13.01.2014.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

கண்ணனில் கந்தனைக் காணவும் கூடுமோ?
வெண்ணையும் பஞ்சா மிருதமும் ஒன்றாமோ?
வண்ண மயிலுந்தான் மாடாமோ? வேலாமோ
பண்ணிசைக்கும் புல்லாங் குழல்?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

இது கந்தன் பாட்டு; கண்ணன் பாட்டு அல்ல!

ஒரு கதை:-
முருகன் மாடு மேய்ப்பவனாக ஔவைக்குக் காட்சி அளித்தான்; சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டான்!

(கண்ணன் பாட்டு அடுத்து வரக்கூடும்.)

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

pullAnguzhal paNNiSaikka
pul mEyum kaRavai--vElinRi
puLLi mayilinRi thirindE--pin
veNNaiyum tharum kaNNanukkenavE

paNNil kandan vandAn! 'chandada kanda'
kannaDathil--Selvan enRa poruLil--
in mozhiyAm thamizhilum thAnO?

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

மாடு மேய்க்கும் கந்தன்

மயிலேறும் அக்குழந்தை மாடையும் மேய்க்கும்!
ஒயிலாக வேய்ங்குழலும் ஊதும்! பயில்வதாம்
பட்டறிவு தன்னைப் பழுத்த கிழவிக்குச்
சுட்ட பழமாய்த் தரும்!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(329)
பொங்கல்

தீச்சுடரின் வெள்ளத்தில், தை பிறக்கும் திருநாளில்,
பூச்சூட்டி ஆவினத்தைப் பெருமையுடன் போற்றுவோம்!
மாபலா வாழை தரும் நிலமகளை வாழ்த்துவோம்!
மாசிலாத வாழ்வுபெற மனமொன்றி வேண்டுவோம்!

ப்ரத்யக்ஷம் பாலா,
14.01.2014.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: KavithaigaL by Rasikas

Post by cmlover »

தித்திக்கும் பொங்கலுடன் தேமதுரத் தமிழ் பாக்கள்
எத்திக்கும் எட்ட இசைப்போரே - புத்திக்கும்
விருந்தாம் உங்களது தமிழ்ச் சேவை எமக்குமிவை
மருந்தாம் மனம் குளிர வாழ்த்துவோம் யாம்.

அனைவர்க்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(330)
தனிமரம்

களஞ்சியம் காத்திருந்து காலமெலாம் வீணாக்கி
இளஞ்சிங்கம் இப்போது ஏங்கித் தவிக்கின்றான்.
நடப்பை ஏற்காது நிலைதவறிப் போனதாலே
உடப்புக் காட்டிலே ஒத்தையாய் நிற்கின்றான்.

ப்ரத்யக்ஷம் பாலா,
15.01.2014.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

தருமன்

Post by vgovindan »

தருமம் தவறாலாமோ நீயே, இறைவா
தரும தேவனைக் காலாலுதைக்கலாமோ
வயது பதினாறென்று வரமளித்தது நீயன்றோ
வயது நிறைய, தரும தேவன் வந்தது தவறோ

என்னைக் குறைகூறுகின்றாயோ, மகனே
என்னைப் பற்றியவனைக் கைவிடலாமோ
என் திருவடிப் பெருமை நீயறியாயோ
என் திருவடி பட்டுத்தான் தருமனானான், அறி.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

Pratyaksham Bala wrote: களஞ்சியம் காத்திருந்து காலமெலாம் வீணாக்கி
இளஞ்சிங்கம் இப்போது ஏங்கித் தவிக்கின்றான்.
நடப்பை ஏற்காது நிலைதவறிப் போனதாலே
உடப்புக் காட்டிலே ஒத்தையாய் நிற்கின்றான்.
Meaning please, PBala.

Also, what is meant by 'உடப்புக் காட்டிலே'?

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

oTRaiyAi niRkiRAn oruthan kATTilE--
paTRiladavanO? uDappu Or maramO?

ilavu kAtha kiLi pOlavO ivan?
ilakku ilAdu, iRakkai ilAdu ninRAnO?

SingamenRAl SIRi ezhAnO?
angam naDungiDa Sinam koNDE??

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

Wasted his prime age in safeguarding his treasures ignoring personal life, with the result he is lonely now -- to him, the world around him looks like a forest of thorn trees.

உடப்புக் காடு - முட்காடு - முள் மரக் காடு

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(331)
லாட்டரி திட்டம்

"மகேஸ்வரன் பெயரிடுவோம் மடிநிறையக் காசுகிட்டும்;
ஈஸ்வரியின் பெயரும்சேர் இன்னமும் கிடைக்கக் கூடும்.
வாய்ப்பினை விடவேண்டாம் விட்டால் இனி திரும்பாது;
பொய்ப்பது தெரிவதற்குள் பெரிதாகச் சேர்க்கவேண்டும்."

ப்ரத்யக்ஷம் பாலா,
16.01.2014.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(332)
போராட்டம்

"பால்காரன் வந்து நிற்பான் பத்து ரூபா பாக்கியென்று.
குடக்கூலி தரவேண்டும் கொடுக்கவில்லை இந்தமாதம்.
அரிசிப்பானை காலியிப்போ அடுத்தவேளை பட்டினிதான்.
தை பிறந்தும் வழியில்லை! தாயே! நீயே துணை!"

ப்ரத்யக்ஷம் பாலா,
17.01.2014.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

'Sakthi!' enRAn bhArathi--adu avan sattu
Bhakthi enbAr paSi ninaippArO?

'thEDi SORu nidam thinRu'
vEDikkai vAzhvu vAzhum nAm

embi eTTip piDikkap pArthAlum
embirAn aruL avanilum peRuvOmO?

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Didn't find 'Edit' button, so this add on:

avanilum: more than BhArathi did.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(333)
படைப்பு

கருத்த ஒருமேனி! கரும்பவள வாய்!
சுருண்ட கருமுடி! சிவந்த பல்வரிசை!
-- அப்பாடா
ஓவியப் படைப்பு ஒருவாறு முடிந்தது! -- யாரோ
ஏவுவது கேட்கிறது. "இதோ வருகிறேன்!"

ப்ரத்யக்ஷம் பாலா,
17.01.2014.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

(334)
கேள்வி

ஒப்பாரி ஓலம் ஓங்கி ஒலித்தது.
இப்பாரில் எங்கோ ஓருயிர் போனது.
அப்பாலே இருக்கும் அவருடன் சேருமோ? - அன்றி
இப்பாலே மறுபடி இருந்திட வருமோ?

ப்ரத்யக்ஷம் பாலா,
17.01.2014.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

வைதரணி

Post by vgovindan »

ஐயா தருமரே - எமது
ஐயம் தீர்த்திடுவீரய்யா
வைகையும் காவிரியும் வற்றின - ஆயின்
வைதரணி மட்டும் வற்றாத மருமமென்ன?

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Badil

ippAril eppOdum pOlavE
Or uyir pOnadu ingum angum engumE
oppAriyilEyE adan badil edirolikkum
ippAr viTTavar, appAlE pOnavar pOnavarE

maRu piRappum uNDO? enil, uru mARi
karu mARi, kaLam mAri, kANa muDiyA,
iruppaRiya muDiyA kadai namadAgum...

echam micham edaRku? maDinda vAzhvin
michamum thAn--pudidAip piRappOm--avan
ichai irundAl pada malar enRum kiDandiDuvOm :)

Post Reply