Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post Reply
arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Pasupathy,
Thanks. You have now opened the window to the shining star of modern tamizh ilakkiyam! This means I have to read more of his works. Here is someone who makes one say, as the song goes, "I want to look inside your head, yes I do!"--by which I mean of course that here is a giant in modern literature, and how little I know of him!

Thanks for opening that window for me to have a glimpse :)

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

கொத்தமங்கலம் சுப்பு - 9
திரைப்படத்துறையில் கொத்தமங்கலம் சுப்பு

http://s-pasupathy.blogspot.com/2014/07/9.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஜெயகாந்தன் கதைகள் : நூல் வெளியீட்டு விழா.
மூலத்தில் வந்த ஓவியங்களுடன் புதினங்கள், கதைகள், கட்டுரைத் தொடர்கள் மீண்டும் அச்சில் வந்தால் நலம் என்று நான் அடிக்கடி என் வலைப்பூவில் எழுதுவது வழக்கம். பழைய கதை, கட்டுரைகளையும் முடிந்தவரை அந்த மூல ஓவியங்களுடன் நான் இடுவதுதான் வழக்கம். நண்பர் ராமின் முயற்சியால் அப்படி ஒரு நூல் இப்போது வெளிவரப் போகிறது. 60, 70-இல் விகடனில் வெளிவந்த ஜெயகாந்தனின் கதைகள், கோபுலு, மாயா ஓவியங்களுடன்.
டாக்டர் ராம் அனுப்பிய அழைப்பு இதோ:
========
ஜெயகாந்தன் 80-ஆவது பிறந்த நாள் &
‘ஜெயகாந்தன் கதைகள்’ நூல் வெளியீட்டு விழா
மாலை 6.30 மணி
24 ஜூலை 2014, வியாழன்
மியூசிக் அகாடமி, சென்னை
(டி. டி. கே. அரங்கம்)

******8
தலைமை: பத்மஸ்ரீ திரு. நல்லி குப்புசாமி ; வரவேற்புரை: டாக்டர் ராம் (லண்டன்);திரு. எஸ். பாலசுப்பிரமணியன் அவர்கள்,(தலைவர், விகடன் நிறுவனம்) ‘ஜெயகாந்தன் கதைகள்’ நூலை வெளியிடுகிறார்
******
வாழ்த்துப் பெறுவோர்:
திரு. ஜெயகாந்தன்,ஓவியர் திரு. கோபுலு,ஓவியர் திரு. மாயா:
வாழ்த்துவோர்:
கவிப்பேரரசு பத்மபூஷண் வைரமுத்து, நடிகர் சிவகுமார்,நடிகை லட்சுமி
நன்றியுரை: டாக்டர் கே. எஸ். சுப்பிரமணியன்,(முன்னாள் இயக்குநர், ஆசிய வளர்ச்சி வங்கி)
******
நூல் தொகுப்பு :டாக்டர் ராம் & திருமதி வனிதா ராம்
வெளியீடு :விகடன் பிரசுரம்
தமிழ் நூல் வரலாற்றிலேயே முதன்முறையாக!
‘ஆனந்த விகடனில்’ வெளியான அதே அச்சு அதே ஓவியங்கள்
அதே வடிவமைப்புடன்! பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய
காலப் பொக்கிஷம்!
====

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Great news! Hope our thamizanbargaL in Chennai make it a point to be at the MA on the 24th. Please bring us a report and share the evening with us, please...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »


Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பதிவுகளின் தொகுப்பு: 226 – 250

http://s-pasupathy.blogspot.com/2014/07/226-250.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆனந்த சிங்: மாயக் களவு -1

ஆர்தர் கானன் டாயில் தனக்குப் பிடித்த 20 ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளின் பட்டியல் ஒன்றைப் பிறகு வெளியிட்டார்; அதில் 10-ஆவது இடத்தில் இருப்பது ‘ப்ரியாரி பள்ளியில் சாகஸம்’ ( The Adventure of the Priory School).
http://s-pasupathy.blogspot.com/2014/07/1.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆனந்த சிங்: மாயக் களவு -2
மாயக் களவு -2
http://s-pasupathy.blogspot.com/2014/07/2.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆனந்த சிங்: மாயக் களவு -3


http://s-pasupathy.blogspot.com/2014/07/3.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

ஆனந்த சிங்: மாயக் களவு -4

http://s-pasupathy.blogspot.com/2014/07/4.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தென்னாட்டுச் செல்வங்கள் - 11
கங்கை கொண்ட சோழபுரம் -1

மாமன்னன் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 -ஆம் ஆண்டுவிழா ஜுலை 24, 25, 2014 -இல் தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. ( மேலும் படிக்க)
http://s-pasupathy.blogspot.com/2014/07/11.html

maduraimini
Posts: 477
Joined: 22 Sep 2009, 02:55

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by maduraimini »

Pasupathy,
As an old timer, it is very good to see all the old stories and pictures. I loved Gopulu's pictures. You have many of the stories from Vikatan and Kalki. Thank you so much. You are doing a great job for people who like to read the old stories.
Thanks.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Thanks, Maduraimini. Though it takes up a lot of my time, I do enjoy sharing what I have with rasika-s like you.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

பசுபதி,
எவ்வளவோ நாட்களுக்குப் பின் இந்தப் பழந்தமிழில் எழுதிய கதை படிக்கிறேன். 'ஆனந்த' மான சில நிமிஷங்கள். அவன் துப்பறியும் 'சிங்'கமே, விச்வனாத வாட்சன் துணையுடனே.

நம் சிறு வயதிலேயே ஆரணி, வடுவூர், வை மு கோ, பம்மல் ஆகியோர் பழங்கால‌மாக ஒலிப்பார்கள். ஆனால், அதுவே ஒரு தனி சுவையாகவும் தெரியும்...

மிக்க நன்றி :)
Last edited by arasi on 27 Jul 2014, 20:56, edited 1 time in total.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Any news about the Jayakanthan event?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Arasi,
Thanks for sharing your memories.

You can watch the proceedings of JK Book Release function at:
https://www.youtube.com/watch?v=-_YAantIeyQ

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தேவன் - 18 ; ராஜத்தின் மனோரதம்
4. சில வீட்டுக்காரர்களுக்குத் தெரிந்தது!
தேவன்
http://s-pasupathy.blogspot.com/2014/08/18.html

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

How many mAmAngangaL, since I've read and reread it!

அப்பா! என்ன சுவை!

நன்றி, பசுபதி :)

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Pasupathy,
I did watch a bit, and skipped through the rest of the JayakAnthan vizhA video. He was very much there, but I did not find him speaking. Nalli, Sivakumar and the women spoke after the intro speech. Is there another part to it? I might have missed something while watching this clip too.The sound was also a bit difficult for me to follow fully...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Arasi,
As far as I know there is no other part. As I understand from other reports, JK spoke ---with difficulty...just for one minute. Hence perhaps they decided to not show that in the video.
The other news is: Since Gopulu's wife suddenly passed away, Gopulu could not attend the function.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Such a pity, on both counts...:(

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

Perhaps you might have read this?
http://tinyurl.com/pbg5tso

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

Just read it. Thanks to you...

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

I recently gave a speech about "ThirumurugAtruppadai" ( திருமுருகாற்றுப்படை) at a Toronto Temple.
You can hear the speech at:
https://www.youtube.com/watch?v=7_HhW9MNP80
Last edited by Pasupathy on 08 Aug 2014, 02:15, edited 1 time in total.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தென்னாட்டுச் செல்வங்கள் - 12
கங்கை கொண்ட சோழபுரம் -2
http://s-pasupathy.blogspot.com/2014/08/12.html

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

. திரு பசுபதி ,
திருமுருகாற்றுப்படை உரை மிக அருமை ஆர்ப்பாட்டமில்லாத ஆழமிகு கருத்துகளின் எளிய தொகுப்பு .பாராட்டுக்கள்.
ஒரு சந்தேகம்.அருணகிரிநாதர் பெரும்பாலான திருபுகழ்களில் திருமாலைபற்றிஏதோ ஒருசம்பவம் சொல்லி முருகனை மாலின் மருகனாகவே
காண்கின்றார். திருமுகாற்றுபடையில் அந்த அளவிற்கு திருமால் வைபவம் பேசப்படுகிறதா?

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

சொல்லோவியம் தீட்டும் கவிஞன் மட்டுமன்றி
கல்லோவியம் வரையும் கலைஞன் பசுபதியின்
நல்லோவியம் காட்டும் நற் கைவண்ணம் இங்கு கண்டோம்
பல் கலை வித்தகர் பார்க்கும் கண். ஈர் ஒன்றரையால்

Appar calls Sivan as 1 1/2 Kannan as he has given half of his body to his better half
2x1 1/2=3 mukkannan Sivan =Pasupathy
He has a 3 dimensional view of statues.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

உரையைக் கேட்டு ரசித்ததற்கு மிக்க நன்றி, பொன்பைரவி.

இல்லை, நக்கீரர் அப்படி எழுதவில்லை. நக்கீரர், அருணகிரி.... சொல்லாட்சிகள் மிக மிக வித்தியாசம்.
வாழ்ந்த காலம், யாப்பு வகை ..இப்படிப் பல காரணங்கள். முருகனைச் சைவ-வைணவப் பாலமாகவே அருணகிரி பார்க்கிறார். மேலும், முருகனை விளிக்க மாலின்( ராமரின், கண்ணனின்) மருகனாக மட்டும் அல்ல, சிவனின் புதல்வன், விநாயகரின் தம்பி, பார்வதியின் புத்ரன்...என்றெல்லாம் சொல்லி , ராமாயணம், பாரதம், புராணங்கள் பற்றி எல்லாம் கவிதைக்கு உள்ளே நுழைப்பது அவர் உத்தி! சந்தத்திற்கு உதவினால், ஸம்ஸ்கிருதச் சொற்களையும் தாராளமாகப் பயன்படுத்தியவர் அவர்.

திருமுருகாற்றுப்படை முழுப் பாடலை இங்கே பார்க்கலாம். சிறிது படித்தாலே உங்களுக்கு வித்தியாசங்கள் தெரியும்.

http://www.kaumaram.com/tmpadai/indexu.html

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Ponbhairavi »

Pasupathy,
மிக்க நன்றி
நீங்கள் குறிப்பிட்டிருந்த தளம் சென்று திருமுருகாற்றுப்படையினை (இதுவே முதல் முறை )படித்தேன் அவ்விளக்கங்கள் இல்லாவிடின் எனக்கு ஒன்றும் புரிந்திராது.முழுவதுமே முருகன் புகழ் மட்டுந்தான் மதுரை யை பற்றி பேசும்போது கூட ஆலவாயனை பற்றியோ அல்லது அங்கயற்கண்ணி பற்றியோ குறிப்பிடவில்லை.ஒரு இடத்தில திருமால் சிவன் இந்திரன் பெயர் வருகிறது அதுவும் அவர்கள் வந்து பிரமனை விடுவிக்க வேண்டி நிற்பதாக தான். வீர ரசத்திற்கு முன்னுரிமை.திருமணம் பற்றி கூட அதிகம் இல்லை.இயற்கை வருணனை மிக அதிகம்.காதல்பற்றிமூச்சு விடக்கூடாது.(அகப்பொருள் ஆகிவிடுமோ ?) good no mixing of genres.
அருணகிரி சிற்றின்பத்தை வருணிதுவிட்டு அதனின்று விடுபடவேண்டும் என்று ஒவ்வொரு பாடலிலும வேண்டுவார் More practical and down to earth man closer to us.
Just casual observations.no high research pretensions Thanks for the opportunity

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பொன்பைரவி,
முழு தி.மு.ப படித்து விட்டீர்களே? மகிழ்ச்சி. பத்துப் பாடலில் 5 நூல்கள் இம்மாதிரியான ஆற்றுப்படைகள் தாம்! இப்போது ஒன்றைப் படித்து நீங்கள் ஆற்றுப்படை இலக்கணம் தெரிந்துகொண்டதால், நீங்கள் பாதி ‘பத்துப் பாடல்” படித்த மாதிரிதான்! மற்றவற்றில் ‘வள்ளல்’கள் ’சாதாரண’ அரசர்கள்! இங்கேயோ வள்ளல் ஒரு முருகன்! அவ்வளவுதான் வித்தியாசம்! மற்றபடி ஆற்றுப்படை இலக்கணம் மீறாமல் எழுதியுள்ளார் நக்கீரர்!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

சுதந்திர ’ விகடன்’
15 ஆகஸ்ட், 1947. முதல் சுதந்திர தினம்.

http://s-pasupathy.blogspot.com/2014/08/blog-post.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தென்னாட்டுச் செல்வங்கள் - 13
கங்கை கொண்ட சோழபுரம் -3
http://s-pasupathy.blogspot.com/2014/08/13.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

திரு பசுபதி அவர்களே,
அருமையான தகவல்களுடன் கூடிய தொகிப்பினை அளித்தமைக்கு நன்றி.
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
23 08 2014

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, தஞ்சாவூரான். மேலும் மூன்று கட்டுரைகள் வரும்!

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பாடலும் படமும் - 7
பிள்ளையார் சிந்தனை
http://s-pasupathy.blogspot.com/2014/08/7.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தென்னாட்டுச் செல்வங்கள் - 14
கங்கை கொண்ட சோழபுரம் -4
http://s-pasupathy.blogspot.com/2014/09/14.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

அசலும் நகலும் அருமை. இளவயதினில் ரசித்தவைகளை மீண்டும் நினைவு கூறும் வகையினில் தொகுப்பினை அளித்தமைக்கு நன்றி.
வாழ்த்துக்களுடன்,
தஞ்சாவூரான்
04 09 2014

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, தஞ்சாவூரான்.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

நானும் ரசித்தேன்! நன்றி.

கோபுலுவைப் பற்றி தூர் தர்சன் நிகழ்ச்சி யூ ட்யூபிலே பார்த்தேன். 'யெமினென்ட் கார்டூனிஸ்ட்ஸ்' என்னும் தொடரிலே...நீங்களூம் பார்த்தீர்களா? அதையிங்கு பகிர்ந்து கொள்வீர்களா?

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

நன்றி, அரசி! நீங்கள் குறிப்பிட்டதால் தான் என்னால் பார்க்கமுடிந்தது!
இதோ ’கோபுலு’ இரு பகுதிகள்:
https://www.youtube.com/watch?v=OkfSJyy4694
https://www.youtube.com/watch?v=KbP_1x1_brw

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

நன்றி, பசுபதி! நண்பர்களெல்லாம் இப்போது இதைக் கண்டு ரசிக்கலாம் :)

நன்றி, ஸஞ்சய் ஸுப்ரஹ்மண்யனுக்குமே. அவருடைய பதிவைப் பார்த்தே நானும் இது பற்றி அறிந்துகொண்டேன்.

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

திரு பசுபதி அவாகள்,
நன்றி !
தொ மு பாஸ்கர தொண்டமான் உதவி வட்டாட்சி அலுவலராக பணி ஆற்றிய பொழுது நிறைய கோவில்கள் பற்றியும் கலை நுணுக்கமுடைய சிற்பங்கள் பற்றியும் அவர் வடித்த கட்டுரைகள் படித்த ஞாபகம் உண்டு . தங்களிடம் அது பற்றி ஏதேனும் செய்திகள் உண்டா. பகிர்ந்து கொள்ளலாமே
வாழ்த்துக்களுடன்,
தஞ்சாவூரான்
07 09 2014

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

அரசி, உங்களுடன் சேர்ந்து சஞ்சய்-க்கு ஒரு நன்றி!

அன்புள்ள தஞ்சாவூரான்,

தொ.மு.பா அவர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டவை. பல இணையதளங்களில் பெறலாம்.
உதாரணம்,
http://thamizhagam.net/nationalized%20b ... imaan.html
’கல்கி’யில் தொடர்ந்து வந்த ’வேங்கடம் முதல் குமரி வரை ‘ ..ஐந்து பாகங்களை ( தரவிறக்கி) மீண்டும் படித்து மகிழுங்கள். ‘வேங்கடத்துக்கு அப்பால்’ உள்ள கோவில்களிலும் நுழையலாம்!

பசுபதி

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

திரு பசுபதி அவர்களுக்கு
நன்றி
தஞ்சாவூரான்
08 09 2014

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

தேவன் -19 : இதென்ன உபசாரம் ?
செப்டம்பர் 8. தேவன் பிறந்த தினம். இதோ அவருடைய ஒரு கட்டுரை!

ஒட்டவைத்த முந்திரிப் பருப்பைப் போன்றதுதான் உபசாரம்.” -தேவன்

http://s-pasupathy.blogspot.com/2014/09/19.html

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

பி.ஸ்ரீ. -9: பாரதி விஜயம் -1

கதாகாலக்ஷேபம் -- பி.ஸ்ரீ

http://s-pasupathy.blogspot.com/2014/09/9-1.html

thanjavooran
Posts: 3041
Joined: 03 Feb 2010, 04:44

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by thanjavooran »

நன்றி திரு பசுபதி அவர்களே ! முடிவினில் வரும்
உளவுத்துறை காவலர்களின் ஐயமும் விளக்கமும் வெகுவாக ரசித்தேன்.
தஞ்சாவூரான்
12 09 2014

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by arasi »

தேவன் தேவன் தான்!
...............................

வெறும் புகழ்ச்சியில்லை இது--
சிறு கட்டுரையிலும் கூட நாம்
பெறும் இன்பம் குறைவிலாதபடி
மறு முறையும் படிக்க வைக்கிறாரே!

ஆம்...

உபசாரங்களெல்லாம் சம‌யங்களிலே
அபசாரங்களே--அள‌வு மீறினால்
அபரிமிதமாம் வலுக் கட்டாயங்களே--
வரிசையாய், வாழையடி வாழையாய் வந்த‌,
பரிகாசமும் செய்யத் தக்க பழக்கங்களே!


'சம்பாதி'யாகவும் வந்து சம்பாதித்தாரே அவர்
அம்பாரி தாங்கிய‌ ஆனையளவு புகழையுமே!


கோபுலுவின் சித்திரமோ!
பந்தியில் அமர்ந்த ஒவ்வொருவர் முகத்திலும் எவ்வள‌வு வேறுபட்ட முக பாவங்கள் :)
Last edited by arasi on 13 Sep 2014, 08:19, edited 1 time in total.

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி, தஞ்சாவூரான், அரசி !

Pasupathy
Posts: 7868
Joined: 26 Jan 2013, 19:01

Re: Nostalgia . . . Mostly! ( in Tamil script)

Post by Pasupathy »

arasi wrote:தேவன் தேவன் தான்!
துப்பறியும் சாம்பு -1
http://s-pasupathy.blogspot.com/2012/06/1.html

Post Reply