KavithaigaL by Rasikas
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(335)
தண்டம்
திருமுடி களைந்து தண்டம் ஏற்றான்!
மறுபடி இயலுமா முன்போல் உழைக்க?
திருவடி அடையும் திருநாள் வரையில்
இருகை ஏந்தி இரப்பதே விதி!
ப்ரத்யக்ஷம் பாலா,
18.01.2014.
தண்டம்
திருமுடி களைந்து தண்டம் ஏற்றான்!
மறுபடி இயலுமா முன்போல் உழைக்க?
திருவடி அடையும் திருநாள் வரையில்
இருகை ஏந்தி இரப்பதே விதி!
ப்ரத்யக்ஷம் பாலா,
18.01.2014.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
நம்பிக்கை
எமனைக் காணோமென்று தேடவேண்டாம்; ராமனே எமனும் சந்தேகம் வேண்டாம்
நம்பிய விபீடணனுக்கு ராமனாக, நம்பாத ராவணனுக்கு எமனாக
நம்பிய பிரகலாதனுக்கு ஹரியாக, நம்பாத இரணியனுக்கு அரியாக
நம்பிய உக்கிரசேனனுக்குக் கண்ணனாக, நம்பாத கஞ்சனுக்கு சாவாக
நம்பிய அர்ச்சுனனுக்கு நண்பனாக, நம்பாத துரியோதனனுக்கு எதிரியாக
நம்பியும் நம்பாலும் நடுவிருக்கும் எனக்கு நீ ராமனோ எமனோ?
(முதலைந்து வரிகள் புரந்தரதாசர் பாடலின் தமிழாக்கம்)

Last edited by vgovindan on 19 Jan 2014, 16:11, edited 1 time in total.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(336)
திரும்பாது
மொட்டவிழ்த் தாமரை மறுபடி கூடுமோ?
விட்டநாள் திரும்பவும் வரத்தான் கூடுமோ?
கட்டிய சோறும் கசக்கும் ஓர்நாளில்.
கிட்டிய வரையில் கொள்வதே மேல்.
ப்ரத்யக்ஷம் பாலா,
19.01.2014.
திரும்பாது
மொட்டவிழ்த் தாமரை மறுபடி கூடுமோ?
விட்டநாள் திரும்பவும் வரத்தான் கூடுமோ?
கட்டிய சோறும் கசக்கும் ஓர்நாளில்.
கிட்டிய வரையில் கொள்வதே மேல்.
ப்ரத்யக்ஷம் பாலா,
19.01.2014.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
immuRai Or kELvi
moTTavizhvadu malarvadaRku
viTTa nAL pudiya nALukku vazhi viDa
kaTTiya SORu oru pozhudE kANum
kiTTiya varai koLvadO?
eTTiya varai aDaivadE adu
eTTa muyalvadellAm
edaRkO enbadE KELvi...
moTTavizhvadu malarvadaRku
viTTa nAL pudiya nALukku vazhi viDa
kaTTiya SORu oru pozhudE kANum
kiTTiya varai koLvadO?
eTTiya varai aDaivadE adu
eTTa muyalvadellAm
edaRkO enbadE KELvi...
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
1. போனது வாராது.
2. காலம் திரும்பாது.
3. அளவுக்கு மீறி சேர்த்தாலும் பயனின்றி போகக்கூடும்.
எனவே விரும்பும் பொருள் தேவையான அளவு கிடைக்காவிட்டாலும், கிடைத்தவரை கொள்வதே மேல்.

(337)
மாற்றம்
மந்திரம் சொல்லும் முறையொடு கூட
எந்திரம் இயக்கும் எழுச்சியும் வேண்டும்.
முந்தைய முறைகள் முடக்கிக் கிடத்தி
விந்தைகள் செய்து விஞ்சிட வேண்டும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
19.01.2014.
மாற்றம்
மந்திரம் சொல்லும் முறையொடு கூட
எந்திரம் இயக்கும் எழுச்சியும் வேண்டும்.
முந்தைய முறைகள் முடக்கிக் கிடத்தி
விந்தைகள் செய்து விஞ்சிட வேண்டும்!
ப்ரத்யக்ஷம் பாலா,
19.01.2014.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(338)
விதிவசம்
விழுந்த நண்பன் வெந்து தணிந்ததும்
அழுதகண் துடைத்து, "அடுக்குமோ?" என்றான்.
பழுத்தது விழுந்திடும் பரமனின் கூத்தில்.
உழுபவன் விழுவதும் இயற்கை தானோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
20.01.2014.
விதிவசம்
விழுந்த நண்பன் வெந்து தணிந்ததும்
அழுதகண் துடைத்து, "அடுக்குமோ?" என்றான்.
பழுத்தது விழுந்திடும் பரமனின் கூத்தில்.
உழுபவன் விழுவதும் இயற்கை தானோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
20.01.2014.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Bala,
I liked the lines:
mundaiya vindaigaL muDDakkik kiDathi
vindaigaL Seidu vinjiDa vENDum.
In the next poem, who is uzhubavan?
I liked the lines:
mundaiya vindaigaL muDDakkik kiDathi
vindaigaL Seidu vinjiDa vENDum.
In the next poem, who is uzhubavan?
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
uzhubavan - active worker
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(339)
கக்சேரி
வேய்ங்குழல் இனிமை உய்த்திட வந்தான்.
ஓங்கிய கூச்சலால் ஓயாத் தலைவலி!
காசு கொடுத்தா கருமம் ஏற்பது?
ஏசி என் பயன்? இழந்தது திரும்புமா?
ப்ரத்யக்ஷம் பாலா,
20.01.2014.
கக்சேரி
வேய்ங்குழல் இனிமை உய்த்திட வந்தான்.
ஓங்கிய கூச்சலால் ஓயாத் தலைவலி!
காசு கொடுத்தா கருமம் ஏற்பது?
ஏசி என் பயன்? இழந்தது திரும்புமா?
ப்ரத்யக்ஷம் பாலா,
20.01.2014.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
izhandavai
kAdu, kAsu, kAlam...

kAdu, kAsu, kAlam...

-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
யாருக்கு யாருண்டு
யாருக்கு யாருண்டே, இரவல் சமுசாரத்தினிலே
நீரின்மேற்குமிழியே, மெய்யல்ல, ஹரியே
தாகமெடுத்ததென, வாவி நீருக்குப்போனால்
வாவிநீர் வற்றி, இல்லாமற்போனதே, ஹரியே
வெப்பம் தாளாது, மரநீழலுக்குப்போனால்
மரமே சாய்ந்து தலைமேல் வீழ்ந்ததே, ஹரியே
அடவியில் குடிசைவேய்ந்து, கிளையில் தொட்டில் கட்ட
தொட்டிலின் குழவியே மாயமானதே, ஹரியே
தந்தை ஸ்ரீ புரந்தரவிட்டலா, நாராயணா
நான் சாகும்போதாகினும், நீ காப்பாயோ, ஹரியே
புரந்தரதாசர் பாடல் 'யாரிகே யாருண்டு' - தமிழாக்கம்
நன்றி - RSachi-யின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு

களி
எப்போ வருவாயோ எந்தன் களி தீர
முப்பாலும் கடந்து மோனநிலை நான் பெற
களிப்பாலே நீ செய்த ஈரேழுலகினிலே
புளிப்பாகிப்போனதே என் தீராக்களிப்புமே
அன்பே ஆராவமுதேயென நாளுமுனை ஏத்தாதே
அன்பே என்றாடிப் பெண்ணில் களித்தேனே
செய்யாத வினைகளும் செய்துநான் நொந்தேனே
பொய்யாத மழையெனும் பேரருள் பெறாநின்றேனே
நொய்யினுக்காசைப் பட்டு நாடோறும் திரிந்தேனே
பொய்யினுக்காளாகி போழ்தெல்லாம் கழித்தேனே
நிதியே நித்தியமே நீங்காத செல்வமே
நிலையான பொருளே நின் புகழ்பாட மறந்தேனே
நில்லடா என்றென்னை நீயாண்டுகொள்வாயோ
நினைப்போற்றி நானுய்யும் வகை நீயருளாயோ
(முப்பால் - அறம் - பொருள் - காமம்)

Last edited by vgovindan on 04 Feb 2014, 08:38, edited 2 times in total.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
KaLi (Bliss)
dAsar hariyil kaLithadai nIr kaLithu, adai nAmum kaLithOm!
vAsa migu malar niRaiyum kavich chOlaiyilE--adaninRum piRanda
'hosa' 'haNN'Am* pUvaiyumE--igam kaDandu uyyum vagai thEDiyE...
hosa haNNu : pudiya paN (also fruit, so it makes it a mudirndavar kavidai)
dAsar hariyil kaLithadai nIr kaLithu, adai nAmum kaLithOm!
vAsa migu malar niRaiyum kavich chOlaiyilE--adaninRum piRanda
'hosa' 'haNN'Am* pUvaiyumE--igam kaDandu uyyum vagai thEDiyE...

hosa haNNu : pudiya paN (also fruit, so it makes it a mudirndavar kavidai)
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
இசைமொழி
இசைக்கேது மொழி இன்னிசைக்கேது மொழி
இனிப்புக்கும் புளிப்புக்குமேது மொழி
அன்புக்கும் அரவணைப்புக்குமேது மொழி
அறிவுக்கும் உணர்வுக்குமேது மொழி
பண்புக்கும் பரிவுக்குமேது மொழி
நாணத்திற்கும் மோனத்திற்குமேது மொழி
நெருப்புக்கும் நீருக்குமேது மொழி
நன்மைதரும் நாராயணாவுக்கும் மங்கள சிவத்துக்குமேது மொழி
இனிப்புக்கும் புளிப்புக்குமேது மொழி
அன்புக்கும் அரவணைப்புக்குமேது மொழி
அறிவுக்கும் உணர்வுக்குமேது மொழி
பண்புக்கும் பரிவுக்குமேது மொழி
நாணத்திற்கும் மோனத்திற்குமேது மொழி
நெருப்புக்கும் நீருக்குமேது மொழி
நன்மைதரும் நாராயணாவுக்கும் மங்கள சிவத்துக்குமேது மொழி
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
ஸரிகம ஸரிகம...
..................................
ஸரிகம பாடினால் போதுமா?
ஸரியாகப் பாட வேண்டாமா?
அதனதன் இடத்திலே ஸ்வரம் போய் விழ வேண்டாமா?
அதிகப்படியாய் சுருதியோ, சங்கதியோ ஆனால், ஆவது என்ன?
அது பாட்டுக்குக் குரலை அலைய விடலாமா?
பாட்டுக்கெல்லாம் ஒரு நியதி இல்லையா?
ஆனால், உங்களுக்கெல்லாமெங்கே அக்கரை?
அப்பா பணம் கொடுத்து நான் ட்யூஷன் சொல்லித் தருகிறேன்,
அவர் ஆசைக்கு அவரே சொல்லிக் கொள்ளலாம், நீங்கள் எதற்கு?
ட்ரங்குப் பெட்டியைக் கையில் கொடுத்து ரயிலேற்றி விட்டார் அப்பா--
நல்ல பிள்ளையாய் நட ந்துக்கோ! உன் அம்மா நாக்கை வளர்த்து விட்டாள்
குரு மாமி சமையல் எப்படியோ? உனக்கு என்னவெல்லாம் போடுவாளோ?
சுருக்காதே முகத்தை, சொன்னதை செய்! அவ்வப்போது அவர் பாடுவதையெல்லாம்
மனப் பாடம் பண்ணிக்கோ, நோட்டிலும் எழுதிக்கோ, தப்பில்லை-- கைக் காரியம் எல்லாம்
செய்து கொடுத்தது போக, தூங்குவது தவிர, பாட்டையே நினை, சாப்பாட்டை அல்ல!
கல்யாணக் கச்சேரி எல்லாம் வரும், விருந்து சாப்பாடு நன்றாய்க் கிடைக்கும், சாப்பிட்டுக்கோ!
துணி தோய்த்துக்கோ, அம்மா வருவாளா? குருவோட துணிகளும்தான்-- கேட்ட குரலுக்கு
பதில் சொல்ல, காரியம் செய்ய ரெடியாக இரு, பகலிலே தூங்கி விடாதே! பத்திரம்!
எத்தனை செய், செய்யாதே-க்கள்!
எத்தனை வருஷ சிஷ்யத்தனம்!
இன்று நான் ஒரு மூன்றாம் ரேட் பாட்டு வாத்தியாராகப் பட்டணமெல்லாம்
உலாவி வருகிறேனென்றால், அதற்கு குரு நாதர்தான் காரணம்--
ரெண்டு வேளை சாப்பிடுகிறேன் என்றால், அவர் போட்ட பிச்சை-
அம்மான் பெண்ணும், சொல்லணும், எப்படியோ குடும்பம் நடத்திடறாள்...
பார்த்தேளா? மறுபடி குரலை அலைய விடறேளே?
கச்சிதமாய்ப் பாட மாட்டேளோ? ரேடியோக்கேட்டு
அந்த சினிமாப் பாட்டெல்லாம் அச்சுப் பிழறாமப் பாடறேளே!
உங்க அப்பாவுக்காக, என் த்ருப்திக்காக, பாடுங்கோ சரியாக!
யார் கண்டா? பிற்காலத்திலே இன்னும் என்னவெல்லாம் வருமோ?
அசலூரிலிருந்து, இப்போ டெலிஃபோன் வரதே, அது போலே, நேரிலேயே
ஒக்காந்து பாட்டு சொல்லித் தராப் போலே ஒரு மெஷின் வருமாய் இருக்கும்!
ஸரிகம ஸரிகம...
சரியாப் பாடுங்கோம்மா!

- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Bravo!
பாட்டு வாத்தியார் படும் பாடு !
படித்தேன், ரஸித்தேன்..
நன்றி (தமிழ் எழுத்துக்களில் எழுதியதற்கு
பாட்டு வாத்தியார் படும் பாடு !
படித்தேன், ரஸித்தேன்..
நன்றி (தமிழ் எழுத்துக்களில் எழுதியதற்கு

-
- Posts: 1088
- Joined: 08 Apr 2007, 08:19
Re: KavithaigaL by Rasikas
Thamizh ezhutthukkaLil ezhudhum vindai eppadiyO, enakkum solliththaramudiyumA?!
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
இன்றே எழுதினேன், உடனே பகிர்ந்தேன், நன்றி, நன்றி 

-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
ஸுந்தரராஜன்,
அது தெரியாது இத்தனை நாள் நான் கேட்டு வாங்கிக் கொண்டேன்
முன்பு தமிழிலே என் கவிதைப் புத்தகத்தை முழுதும் அச்சடித்து அனுப்பியிருந்தாலும், இந்த 'வெட்டுவதும் ஒட்டுவதும்' தெரியாமல் திண்டாடினேன். பசுபதியும், விகைலாசமும் வழிகள் சொன்னார்கள். அப்படியும் கடினமாய்த் தோன்றியது.
அண்மையில் பசுபதியும், என் மகளும் இந்த ஏறாத மண்டையிலும் இதை ஏற்றி வைத்தார்கள். மறக்காது இதைத் தொடர்ந்து செய்தால் பழகி விடும் என்று உரை நடையும் நிறைய தட்டச்சு செய்கிறேன். ஆசான்களுக்கு நன்றி
அவர்கள் உதவுவார்கள். இல்லையேல், நானே எனக்குத் தெரிந்ததை உமக்கு எழுதி அனுப்புகிறேன்...

மிகஂக நனஂறி. ஸுநஂதரராஜனஂ.Thank you Sri Venkatakailasam for the input and Ms.Arasi for the encouragement. I tried and it works ! I guess it takes lot of practice and patience before one could venture to write a long sentence, let alone a paragraph. Also does one compose the material, copy and then paste it, as I have done above?
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Copy and paste..is correct..
மிக்க நன்றி..
ம+what is below இ=மி
க+dot=க்
க
ந
ன+ dot=ன்
ற+ what is below இ=றி
First column ..you have all உயிர் எழுத்துக்கள்..R TO L
Second column is Dot..
Third column all மெய் எழுத்துக்கள்
When you combine both, you get உயிர் மெய் எழுத்துக்கள்..
மிக்க நன்றி..
ம+what is below இ=மி
க+dot=க்
க
ந
ன+ dot=ன்
ற+ what is below இ=றி
First column ..you have all உயிர் எழுத்துக்கள்..R TO L
Second column is Dot..
Third column all மெய் எழுத்துக்கள்
When you combine both, you get உயிர் மெய் எழுத்துக்கள்..
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
நாதம்
ஏழு சுரங்களூடேயும், அவற்றினை மிஞ்சியும்
எழுத்துக்கள் அனைத்திலும், அவற்றினை மிஞ்சியும்
காற்றின் இசைவினிலும், பறவையின் கூவலிலும்
மின்னலின் இடியிலும், கடலின் அலையிலும்
ஓயாதொலிக்கும் நாதத்திலே
கருநாடகமென்ன, இந்துஸ்தானியென்ன
மேற்கத்தியமென்ன, அபஸ்வரம்தானென்ன?
அனைத்திலும் நாதத்தைத் துய்க்கலாமே.
எழுத்துக்கள் அனைத்திலும், அவற்றினை மிஞ்சியும்
காற்றின் இசைவினிலும், பறவையின் கூவலிலும்
மின்னலின் இடியிலும், கடலின் அலையிலும்
ஓயாதொலிக்கும் நாதத்திலே
கருநாடகமென்ன, இந்துஸ்தானியென்ன
மேற்கத்தியமென்ன, அபஸ்வரம்தானென்ன?
அனைத்திலும் நாதத்தைத் துய்க்கலாமே.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Through the seven swarAs and beyond them
In every written alphabet, further more
In pleasant wind, and in bird song
In lightning's thunder, in waves of the sea
In the never-ending sound of nAdA
karnAtakA or hindusthAni
In western, even in an off note,
We can relish sound, nAdA
VG,
This translation is to say that I liked your poem
In every written alphabet, further more
In pleasant wind, and in bird song
In lightning's thunder, in waves of the sea
In the never-ending sound of nAdA
karnAtakA or hindusthAni
In western, even in an off note,
We can relish sound, nAdA
VG,
This translation is to say that I liked your poem

-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Thanks to you!
I wasn't sure if the last line quite conveyed your feelings about the word 'thuyppathu'. You are welcome to suggest an alternative to 'relish'.
I wasn't sure if the last line quite conveyed your feelings about the word 'thuyppathu'. You are welcome to suggest an alternative to 'relish'.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
We can enjoy the Nadha...
-
- Posts: 13754
- Joined: 02 Feb 2010, 22:26
Re: KavithaigaL by Rasikas
Could also be 'cherish', right??arasi wrote:Thanks to you!
I wasn't sure if the last line quite conveyed your feelings about the word 'thuyppathu'. You are welcome to suggest an alternative to 'relish'.

-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Agreed, on both counts, but what did the poet feel when he used the word?
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
சிற்றின்பத்திற்கும், பேரின்பத்திற்கும் உள்ள பெருமை, இசைக்குமுண்டு என்ற பொருளில் கூறினேன்.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(340)
அதிதி (வயது 2)
காலைவேளை பூசையிலே மணியடித்துக் களிப்பாள்.
திருத்துழாய் கிள்ளிவந்து திருமாலைத் தொழுவாள்.
பிள்ளையாரின் சிலைதொட்டு கன்னத்தில் ஒத்துவாள் !
'கண்பதிபப்பா' மோர்யா' கைதட்டிக் குதிப்பாள் !
அம்மாவின் துப்பட்டாவை ஆசையோடு அணிவாள்.
அப்பாவின் முன்னமர்ந்து மொபைக்கை ஓட்டுவாள்.
பாட்டியோடு தரையமர்ந்து படம்வரைந்து குவிப்பாள் !
தாத்தாவின் கண்ணாடியை தானணிந்து விழிப்பாள் !
தட்டாமாலை சுற்றிவிட்டு தலைகிறங்கி விழுவாள்.
இருக்காலும் தூக்கியே எம்பியெம்பிக் குதிப்பாள் !
புதுப்புது விளையாட்டு தினம் கற்றுத் தருவாள்.
நடப்பதே மறந்ததையா நாளெங்கும் ஓட்டம்தான் !
கொத்துப்பூ பறித்துவந்து கொண்டையிலே சூடுவாள்.
பாடும்போது தானும்சேர்ந்து தாளமிட்டுக் கூவுவாள்.
தமிழிங்லிஷ் ஹிந்தியொடு மராட்டியில் கதைப்பாள் !
நாலுமொழி மழலையிலே புலமைதான் என்னே !
ப்ரத்யக்ஷம் பாலா,
09.09.2014.

பேத்தியைக் கண் முன் கொண்டு நிறுத்தி விட்டீரே ஐயா!
கணினி முன்னமர்வாள், சிறு கை கொண்டு அது தட்டிக் களிப்பாள்
கண்மணியின் கை வித்தை படம் பார்த்து அறிவோம்--பெரியவள்!
எண்ணமெல்லாம் நிறைந்து, அகமும் நிறைபவளல்லவா அவள்!
அதிதி
கணினி முன்னமர்வாள், சிறு கை கொண்டு அது தட்டிக் களிப்பாள்
கண்மணியின் கை வித்தை படம் பார்த்து அறிவோம்--பெரியவள்!
எண்ணமெல்லாம் நிறைந்து, அகமும் நிறைபவளல்லவா அவள்!
அதிதி

Last edited by arasi on 10 Sep 2014, 01:45, edited 1 time in total.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
arasi:
Thanks !
Thanks !
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
சரி நீ வாசி, ஸ்ரீனிவாஸ்!
--------------------------------------
வாசித்துக் கொண்டே இரு!--அதை
யாசிப்பவர்கள் எங்குமிருப்பாரே?
யோசித்துப் பார்ப்பவரும் உண்டு இங்கு,
வாசிப்பில் தம்மை மறப்போருமுண்டு
நேசித்தவர் உன் பாட்டை எத்தனை பேர்!
பசிக்குப் பண்டம் போல, மனதுக்கு உன் இசை
கந்தர்வ உலகம் விட்டு இங்கு வந்தாய்
கந்தர்ப்பனும் விரும்பும் பாட்டுனது
வந்தித்து வேண்டினாலும் வருவாயோ?
இந்திரன் விடுவானோ, ஏனையருமே?
ஏதோ சில காலம் எமக்கென வந்தாய்
வாதோ வழக்கோ உனைக் கொணருமோ?
நாதோபாசனை அங்கும் செய்வாய்
புதிதோ அவர்க்கும் உன் இசையே?
அங்கிருந்தே வந்தாய், சிறிது
தங்கிடவே இங்கு வந்தாய்
எங்கனம் இறைஞ்சினாலும்
எங்களுக்கென நீயுண்டோ?
கந்தர்வனே, அங்கேயே இரு!
எந்த கானம் விட்டுச் சென்றாயோ,
அந்த சுரங்கள் என்றுமிங்கொலித்திடும்
எந்த நாளுமுன் கானம் இங்குமுண்டு....
* * *
--------------------------------------
வாசித்துக் கொண்டே இரு!--அதை
யாசிப்பவர்கள் எங்குமிருப்பாரே?
யோசித்துப் பார்ப்பவரும் உண்டு இங்கு,
வாசிப்பில் தம்மை மறப்போருமுண்டு
நேசித்தவர் உன் பாட்டை எத்தனை பேர்!
பசிக்குப் பண்டம் போல, மனதுக்கு உன் இசை
கந்தர்வ உலகம் விட்டு இங்கு வந்தாய்
கந்தர்ப்பனும் விரும்பும் பாட்டுனது
வந்தித்து வேண்டினாலும் வருவாயோ?
இந்திரன் விடுவானோ, ஏனையருமே?
ஏதோ சில காலம் எமக்கென வந்தாய்
வாதோ வழக்கோ உனைக் கொணருமோ?
நாதோபாசனை அங்கும் செய்வாய்
புதிதோ அவர்க்கும் உன் இசையே?
அங்கிருந்தே வந்தாய், சிறிது
தங்கிடவே இங்கு வந்தாய்
எங்கனம் இறைஞ்சினாலும்
எங்களுக்கென நீயுண்டோ?
கந்தர்வனே, அங்கேயே இரு!
எந்த கானம் விட்டுச் சென்றாயோ,
அந்த சுரங்கள் என்றுமிங்கொலித்திடும்
எந்த நாளுமுன் கானம் இங்குமுண்டு....
* * *
-
- Posts: 3051
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
அரசி அன்னை கனத்த மனத்துடன்
சரியாக செப்பினார்கள் நின் பயணம் பற்றி
வேண்டாம், அங்கேயே இரு அமைதி பெறு, விரும்பிடின்
மீண்டும் வா மகிழ்ச்சி தா
தஞ்சாவூரான்
20 09 2014
சரியாக செப்பினார்கள் நின் பயணம் பற்றி
வேண்டாம், அங்கேயே இரு அமைதி பெறு, விரும்பிடின்
மீண்டும் வா மகிழ்ச்சி தா
தஞ்சாவூரான்
20 09 2014
-
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
ஒரு மாண்டலின் கேட்கிறது
ஒரு மூலையில் கிடந்த என்னை கண்டெடுத்தாய்
தூசு தட்டி என் தந்திகளை சுருதி சேர்த்தாய்
அன்று முதல் நீ நான் ஆனாய் நான் நீ ஆனேன்
கிழக்கும் மேற்க்கும் சேராதென்பார்
நீயுமோ நானுமோ பிரியவே இல்லை
நீ உயரப் பறந்தாய் என்னையும் கொண்டு சென்றாய்
இன்று நான் பாரமானேனோ? என்னை விட்டு
நீ மட்டும் சென்றதேனோ?

- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
பார் புகழ் நம் இசைக்கு வான் உலகில் இசை குழு !
ஊர் சுற்றும் நாரதர் தும்புரு மீட்டி நிற்க
மாசில் வீணைக்கு ஓர் வெண் அணி வாணியவள்
தேசு குழல் ஊதும் தேரோட்டி கண்ணன் உடன்
நந்தியின் மிருதங்கதிற்கு நடராசன் ஆடுகிறார்
விந்தை ! அக்குழுவிலும் குறை இரண்டு கண்டனையோ ?
ஆல்அன்ன லால் குடியும் வில் ஏந்தி சென்ற பின்னே
கோல் ஓச்சி இவ்வுலகை ஆண்டது போதுமென்று
மாண்டலினைக் கொண்டு ஆங்கு மற்றதினை நிறை செய்ய
மாண்டாயோ அவசரமாய் மானுடனே ஸ்ரீனிவாசா !
ஊர் சுற்றும் நாரதர் தும்புரு மீட்டி நிற்க
மாசில் வீணைக்கு ஓர் வெண் அணி வாணியவள்
தேசு குழல் ஊதும் தேரோட்டி கண்ணன் உடன்
நந்தியின் மிருதங்கதிற்கு நடராசன் ஆடுகிறார்
விந்தை ! அக்குழுவிலும் குறை இரண்டு கண்டனையோ ?
ஆல்அன்ன லால் குடியும் வில் ஏந்தி சென்ற பின்னே
கோல் ஓச்சி இவ்வுலகை ஆண்டது போதுமென்று
மாண்டலினைக் கொண்டு ஆங்கு மற்றதினை நிறை செய்ய
மாண்டாயோ அவசரமாய் மானுடனே ஸ்ரீனிவாசா !
-
- Posts: 3051
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
திரு வேங்கடவா தேவையா? துரித முடிவு
தங்களின் சுட்டியில் ரசித்தவை ஏராளம்
மறு பரிசீலனை மகிழ்ச்சி அளிப்பதாயின்
வேறு என்ன வேண்டும் எங்களுக்கு?
அருட்பேராற்றல் கருணையினால் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ வாழ்த்துக்கள்.
தஞ்சாவூரான்
06 10 2014
தங்களின் சுட்டியில் ரசித்தவை ஏராளம்
மறு பரிசீலனை மகிழ்ச்சி அளிப்பதாயின்
வேறு என்ன வேண்டும் எங்களுக்கு?
அருட்பேராற்றல் கருணையினால் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி வாழ வாழ்த்துக்கள்.
தஞ்சாவூரான்
06 10 2014
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
தஞ்சாவூரான்,
அங்கனமே ஆகுக, என நானும் வேண்டினேன்--மனம்
தங்குமன்பர் தருவெனப் பிணைந்த சித்திரம் கண்டீரோ?
எல்லாம் *'மங்களமே'! மங்களமே அவர்க்குமே!
* மங்களத்தை மறுபடியும் கேட்போமா? அவள் சுவையான பேச்சையுமே??
அங்கனமே ஆகுக, என நானும் வேண்டினேன்--மனம்
தங்குமன்பர் தருவெனப் பிணைந்த சித்திரம் கண்டீரோ?
எல்லாம் *'மங்களமே'! மங்களமே அவர்க்குமே!
* மங்களத்தை மறுபடியும் கேட்போமா? அவள் சுவையான பேச்சையுமே??

-
- Posts: 3051
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
நிறைய பிழைகள் இருக்க வாய்ப்புண்டு. கன்னி முயற்சி
அகவை எட்டு பத்தினை எளிதில் தொடும் வேங்கடவா
வையகம் உள்ளவும் வாழ்க. விரும்பியபடி
மீண்டும் எங்களை மகிழ்ச்சியில் திளைக்க
எண்ணம் கொண்டது ஏற்பு
தஞ்சாவூரான்
08 10 2014
அகவை எட்டு பத்தினை எளிதில் தொடும் வேங்கடவா
வையகம் உள்ளவும் வாழ்க. விரும்பியபடி
மீண்டும் எங்களை மகிழ்ச்சியில் திளைக்க
எண்ணம் கொண்டது ஏற்பு
தஞ்சாவூரான்
08 10 2014
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
பதியோடு போர் களமேகிய திரு மாதர்கள் இருவர்
ததி சோரனின் *பிரியாள் சத்ய பாமா எனும் பெயராள்
எழிலாய் சமர் புரிந்தாள் அந நரகாசுரன் அழிந்தான்
அழியாப் புகழ் கொண்டாள் அது தீபாவளி திருநாள்
மட மயிலாள் **துணை புரிந்தாள் என்பதனால் வரம் பெற்றாள்
திட மைந்தனை மனையாளோடு நெடுங் கானகம் போக்கி
சீர் இலங்கா நகர் ***கொடுங் காவலன் முடி பத்தும் சிந்துவித்தாள்
பார் நல மேவிய செயலாகினும் பதி இழந்தாள் பழி சுமந்தாள்
பின் **** யுகமே போற்றிடுமே செயல் ஒன்றே தான் எனினும்
முன் யுகம் வாழ்ந்த ஓர் பெண்மைக்கு பழி யானது விதி வழியோ
* தயிர் திருடியவன் ** மயிலை சின்னமாக கொண்ட கேகய நாட்டு பெண் கைகேயி
***ஒரே சொற்றொடர் நேர் விரோதமான இரு பொருளில் : பெருமை துலங்காத நகர் - செல்வமிகு இலங்கை
****பின் யுகம் கிருஷ்ணாவதாரம் முன் யுகம். ராமாவதாரம் l
Sent from my iPad

'டெல்' என்று சொன்னதை நீட்டி.
'டிலைடெட்' என்கிறேன்-- நல்லதொரு
மயிலாட்டம், சொற்களுடன்...
சிந்திக்க வைக்கும் வரிகளும் கூட...
'டிலைடெட்' என்கிறேன்-- நல்லதொரு
மயிலாட்டம், சொற்களுடன்...

சிந்திக்க வைக்கும் வரிகளும் கூட...
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
arasi, thanks
The mayilattam is due to the santham set by Shri Pasupathy which I tried to copy
The mayilattam is due to the santham set by Shri Pasupathy which I tried to copy
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
ச. ரி. க. ம. க. ரி. ச
மே வு. ஸ். வ ர. மே ழு. ( எனினும்)
ந. ல். லி. சை இ ல் லை. ( அதனால்)
வா,வே க. மா. க. வே,வா
நீ ரா க. மா க ரா* நீ
*தெலுங்கில். வா
முதலடியும் ஈற்றடி. இரண்டும் மாலைமாற்று
மே வு. ஸ். வ ர. மே ழு. ( எனினும்)
ந. ல். லி. சை இ ல் லை. ( அதனால்)
வா,வே க. மா. க. வே,வா
நீ ரா க. மா க ரா* நீ
*தெலுங்கில். வா
முதலடியும் ஈற்றடி. இரண்டும் மாலைமாற்று
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
தெரு ப் பாவை
நாளொரு teasing உம் தினம் ஒரு பந்தும் நடக்கும் சென்னைமா நகரின் தெருக்களில் அன்றாடம் பணிக்கு சென்று திரும்பும் எளிய தெரு பாவைகளுக்கு சங்கீத சீசன் ஒரு வரம் . இதை அவர்களுக்கே அற்பணிப்போம்
மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
இசை கேட்க போதுவீர் ,நேரிழையீர் கோணல் வகுடீர்
தெருவில் வெறி நாய் ஓடும் சென்னைச் செல்வர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
பேர் கொண்ட வித்துவான்கள் பல இடத்தில பாடுகின்றார்
நாராயணனே நமக்கே free pass தருவான்
பாரோர் பலர் வருவார் கிளம்பேலோ ரெம்பாவாய்