KavithaigaL by Rasikas

Post Reply
arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

வையமெல்லாம் வாழும் நாமும் நம் பாட்டுக்கு
செய்யும் கிரியைகள் கேளீரோ, சென்னையில்
பையெடுத்து டிக்கெட்டு வேட்டையில்--வீட்டிலுண்ணோம்
ஐய்யர் கான்டீனையோர் கை பார்ப்போம், பின்னும்
மையும் மலரும் பாடகிகளுக்கென்போம், செய்யாதன செய்வோம்
ஐயமும், கெஞ்சலுமாய் ஸீட்டும் வெல்வோமெம்பாவாய்!

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

ஓங்கி உலகுசுற்றிய பாடகர் தாம்பாடி
நாங்களவ் விசைமழையில் நனைந்து நீராடினால்
தீங்கின்றி சபா எல்லாம் திங்கள் முக்கச்சேரி செய்து
ஓங்குபெரும் ராகத் தூடு பல்லவியுகள
நீங்குக பசியென்று கேண்டீனும் களைகட்ட
ஆங்கோர் கணிப்பொறியில் அவ்வெலியைக் கிளிக்க
ஏங்காமல் கேட்பாய் இந்தா எம்.பி.த்ரீ என்று
நீங்கா இசைச் செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

வையத்து வாழ்வீர்காள் நாளும் நம் பாவைபடும்
துயர் கோடி பல கேளீரோ- வேர்கடலை வாங்
கையிலே பை பறிக்கும் பாவிகளுடன் போராடி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் cholesterol வேண்டாண்டி
மை தொட்டு எழுதோம் ballpoint , கை பேசி மறந்திடோம்
செய்யாதன செய்யோம் போலீசில் பிடிபடோம் கோயில்முன்
ஐயமும் பிச்சையும் போட்டு மாளாது வெறும் கை காட்டி அவர்
உய்யுமாறு எண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்

we badly miss CML's cryptic comments!!

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

I miss him, and let him know that often. His hiatus has been too long. He should know how much we miss him :(

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

ஓங்கி உ லகளந்த இக் கட்டிடத்தின் மாடியில்
வங்கியில் நம் பாவைக்கு வேலை கிடைத்துவிட்டால்
தீங்கின்றி நாளெல்லாம் நிம்மதியாய் கழித்து
ஓங்கு பெருஞ்செல்வம் ஒரு பயல் அறியாமல்
கண்ணன் வண்ண பணத்தை சுவிஸ் வங்கியில் தேக்கி
இங்கிதமாய் பேசுவது சங்கீத கலை பற்றி
பதுங்கிய குடம் நிறைய வெள்ளியும் தங்கமுமாய்
நீங்காத செல்வமும் நிறைந்தேலோ ரெம்பாவாய்

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

இது திருப்பாவை ( 4 )
ஆழி மழை கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியந் தோளுடைய பத்மநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


இது தெரு பாவை (4)

ஆழி மழை கண்ணா, ஒன்று நீ கணம் மறவேல்,
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
பார்லரில் “ dye “ அடித்த கேசம் போல் கறுத்து
பார்டர் ஜரிகை அசல் தங்கம் பட்டு பாடகியின்
தோடு போல் மின்னி தனி தவில் போல் அதிர்ந்து
சர மழையாய் நாட்டின் அணைகளில் பெய்திடுவாய்
இங்கு வேண்டாம் , நாறும் சாக்கடையாய் மாறும் வீதிகள் - நாங்களும்
மார்கழி இசை நீராடி மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

பணி தொடரட்டும்!

தெருப்பாவை தித்திக்கிறாள், தினமும் வருகை தரட்டும்!
சிரிதரனும் சேர்ந்து கொண்டால், மூட நெய் பெய்து எம்
முழங்கை வழிவாரும்--மூத்தவரும்* வந்தாரெனில்...!

* 'இசையன்பர்'

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

இது திருப்பாவை

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெரு நீர் யமுனை துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவி தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகு தருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் .

இது தெரு பாவை ;

மாயனை மசால் வடை கொணரும் பையனை
தூய வெறு நீர் பாட்டில் ஒன்றும் கேட்க உள்ளே
மறைந்தானை காணவில்லை மணி ஆகிறது
முறையாக தீயில் வேகவில்லை பரவாயில்லை
பய்யவே வந்து அதில் சட்னியை த்தூவி
கையினால் எடுத்து வாயினால் சாப்பிட்டு உள்ளே
போய் நுழைந்து நல்லிசையில் லயித்துவிட்டால்
தீயினில் தூசாகும் பட்ட துயர் ஏலோ ரெம்பாவாய்.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

அருமை :)

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

திருப்பாவை 6

புள்ளும் சிலம்பின காண்,புள்ளரையன் கோயில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ள சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் .

தெரு பாவை. 6
புள்ளு ம் சிலம்பின காண். அகாடெமி வாயிலில்
வெள்ளை நிற கார்கள் பேரரவம் கேட்டிலையோ ?
பிள்ளாய் எழுந்திராய் கையில் அசல் டிக்கெட் உண்டு
கள்ளத்தனம் நமக்கெதற்கு ?கால் வீசி நெஞ்சை
அள்ளும் பைரவியை வாயினால் முணுமுணுத்து
உள்ளம் மகிழும் மாமிகளும் என் ஆர் ஐ களும்
மெள்ள எழுந்து அங்கே வரும் முன்னே நாம்
உள்ளே சென்று A/C யில் குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

பேஷ்! இதில் முத்திரையும் வந்ததோ பாட்டியற்றியவரின்?
Gosh! மூத்தவர், 'இசையன்பர்' வந்து போற்றுவதும் என்றோ?

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

திருப்பாவை

கீசு கீசுஇது என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைபடுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயக பெண் பிள்ளாய் ! நாராயணன் மூர்த்தி
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய் .

இது தெரு பாவை

கீசு கீசு என்று இரண்டு குட்டிச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய் குரலில்
காசும் பிறப்பும் கலந்தமைந்த திமிர் போலும் !
மோச மான அம்மையார் முழங்கால் முட்டியால் மொத்தி
ஓசை படுத்தல் நம் நாற்காலி முதுகுப்புறம்
ஓயவில்லை . நான் திரும்பி ராம கிருஷ்ணன் முர்த்தி
கேசவனை பாடுவதை நீ கேட்க விட்டிலையோ
தேச முடையாய் சும்மா இருப்பேலோ ரெம்பாவாய்.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

மிக்க அருமை !!!!!
வாழ்த்துக்கள் !!!!

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

மிக்க்க்க்க்க்க்க்க்க நன்றி ( ஒன்பது ஆச்சர்ய குறிகள்

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

Ponbhairavi wrote: மோச மான அம்மையார் முழங்கால் முட்டியால் மொத்தி
ஓசை படுத்தல் நம் நாற்காலி முதுகுப்புறம்
....

சும்மா இருப்பேலோ ரெம்பாவாய்.
ROFL PBhairavi sir! :))

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

கீசுகீசென் றுசெல்போன் சத்தம் கலந்து
பேசின பேச்சரவம் கேட்கிறதே பேய்ரசிகா!
மோசம் இதுவே! முகரக்கட் டைபெயர்ந்து
ஊசலாடும் உன்னுயிர்! ஓடிடுநீ!! மொத்துவேன்!!!
காசைக் கொடுத்து கச்சேரி கேட்கவந்தேன்!
ஓசைப் படுத்தும் உனதரவம் கேட்கவல்ல!!
லூசேநீ பாட்டதனை கேட்டே கிடந்திடாய்!
ஏசவைக் காதே எனச்சொல்வேன் எம்பாவாய் !!!!

:)

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

பலே! பேஷ்!

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

எம்பாவை எம்மவரையெல்லாம்
எப்படியாட்டிப் படைக்கின்றாள்,
படைக்க வைக்கின்றாள்! கவி பாடும்
'படே' ரசிகரெல்லாம் பாடத் திரள்கிறார்
அட, கண்டிட‌ வாராரோ இசையன்பர்*?
கண் முன் குமரனும்*, காவிரி நாடரும்*
நட்ச‌த்திரப் பெண்ணும்*, ஏனையோருமே?

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

ஸ்ரீதர் , அருமை மாற்று கற்பனை

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

8- இது திருப்பாவை ;

கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து உன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடி பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
அவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்


8இது - தெரு பாவை

கிழ நாய் ஒன்று” லொள்” என்று , எருமையின் கால் உதை பட்டு ,
பாய்ந்தது நடு வீதியில் காண். அரண்ட பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் தடுத்து உன்னை
கூவத்தில் தள்ளி விட முழங்கையில் ரத்தம்சொட்டும்
பாவாய் எழுந்திராய்.ஜோராய் பல்லவி பாட
மாவாய் பிளந்தானை பிறகு கேட்போம் டாக்டர் -
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்து
மாவு கட்டின்றி வீடேக அருளேலோ ரெம்பாவாய்.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

கல்லாய் சமைந்து கனம் சேர்க்கும் மாவுக் கட்டுக்கு
வில்லாய் வளைந்து கிழப் பாவை மசிய மறுத்து
கீழே விழாதிருந்தாலும், சபை செல்லுமாவல் தாளாது
வாழைப் பழத்தோலும், வகை வகையாய் ப்லாஸ்டிக்
துண்டும் தப்பி நடந்தாலும்--தள்ளுபவரும், ஆட்டோ ஓசையும்-வெ
குண்டு வ‌ரும் வாஹனமுமவ‌ளைத் துவளச்செய்யும்--
கள்ளமில்லாக் குழந்தையாய் வீதியில் பாதம் வைப்பாள்
பள்ளம் தவிர்த்து வெள்ளமாய்ப் பாட்டுள்ளம் பெருகிடவே.
Last edited by arasi on 27 Dec 2014, 07:42, edited 1 time in total.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

Keep it going. I have a finicky lap top and little time to spend in front of it ...

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

உள்ளமெனும் கோயில்

Post by vgovindan »

உள்ளமெனும் கோயிலில்
உண்மையெனும் விளக்கேற்றி
நாளும் மனந்தளராது
நல்லதையே செய்துவந்தால் போதும்

இறைவனைத்தேடி
இங்குமங்கும் அலையவேண்டாம்
இறைவனுள்ள கோயில்
இங்கிவ்விடமே இவ்வமயமே

இதையறிந்துகொள்ளத்தான்
இத்தனை பாடும்
மறையோதும் கருத்திதுவே
மறையாத மெய்யுமிதுவே

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

Nice one, Sri Govindan. It brought to mind the following BhUtattaazhwaar paasuram:

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்

(இரண்டாவது திருவந்தாதி - பூதத்தாழ்வார்)


I tried to put in veNpaa format your thoughts above, and this is what I could come up with:

உள்ளமே கோயிலாய் உண்மை விளக்கேற்றி
கள்ளமறச் செய்திட்டால் கைங்கரியம் - மெள்ளப்
புரியும் மறைஞானம்; போகேல்வே றெங்கும்!
இருப்பதுவே ஈசன் இடம்!!

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

Sridhar,
Nice.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

341
வறட்சிக் கால வேண்டுதல்

பனிமலர் பலவகை பூத்துக் குலுங்கிட,
கனிவகை பொழிந்திட, கவலைகள் மறந்திட,
இனியதோர் நன்நாள் இனிதே பிறந்திட
தனியொரு தோத்திரம் தந்திடு தேவனே !

ப்ரத்யக்ஷம் பாலா,
02.01.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

342
சரணாகதி

இடர் தடையுடை இந்நிலை மாறுமோ?
தொடர் மனமுடைத் தொல்லையும் தீருமோ?
படர் நொடியுடை பிழைப்பும் வேண்டுமோ?
சுடர் ஒளியுடை சிவனே! சரணே!

ப்ரத்யக்ஷம் பாலா,
03.01.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

343
தரிசனம்

இடடா பளிச்சிடும் இருமண் குறியினை !
எடடா மலருடன் இன்திருத் துழாயும் !
நடடா, தொடடா நம்பெரும் கோயிலை !
அடடா! பாரடா! அமலன் திரு அழகை!!

ப்ரத்யக்ஷம் பாலா,
03.01.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

344
வீண்

நில்லாதே ஓடி நித்தம் பணம் தேடி
வில்லாதி வீரனாய் வெற்றிமுடி கண்டவன்
முல்லைச் சரம் சூடி முத்துநகை காட்டுமோர்
பொல்லாத புழுதியில் புதைந்து போனானே !

ப்ரத்யக்ஷம் பாலா,
31.12.2014.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

345
மாசா கசம்

ஆசா னனைவரும் அதமச் சீடரென
ஏசா தொருநாள் இருந்தது காணேன்.
பேசா திருப்பின் பிழைப்புக் கெடுமென
கூசா தெழுதிக் குமுறிக் குலைவார்.

ப்ரத்யக்ஷம் பாலா,
04.01.2015.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

சற்றே வறண்டிருந்த காலம் ( hibernation ) முடித்து பாலா வின் கவிதை பொழி காலம் வந்தது களிப்பே வாழ்க புத்தாண்டு !

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

ஓ! நன்றி!

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

346
பாரதப் போர்

வில்லெடுத்து வீரம் காட்டு - ஒரு
புல்லெடுத்து சிலம்பம் ஆடு - சிறு
கல்லெடுத்து கண் குருடாக்கு - பெரும்
சில்லெடுத்து சிரம் வீழ்த்து.

ப்ரத்யக்ஷம் பாலா,
05.01.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

347
சஞ்சலம்

உடைத்த தேங்காய் மறுபடி கூடுமோ?
எடுத்த தேனும் அடையில் சேருமோ?
பொடித்த மாவும் பருப்பாய் மாறுமோ?
விடுத்தது விடுத்ததே! வேலையைப் பாரும்! ஓய்!

ப்ரத்யக்ஷம் பாலா,
06.01.2015.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

கடைக்குப் போனால் தேங்காய் கிடைக்குமே
காட்டில் தேடக் கிட்டுமே தேனடை
அடுத்த பசலியில் பருப்பும் விளையுமே
விடுத்ததை மீளப் பிடிப்பதும் கூடுமே ?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

இறந்தவர் இறந்தவரே.
பிரிந்த உயிர் மறுபடி ஒட்டாது.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

348
உலகு

இல்கடை யோரம் இரந்து நிற்பானை
............இறுமுறி என்றே இழித்துப் பழிக்கும்.
கள்கடை யோரம் கிரங்கிக் கிடப்பானை
............கழிசடை என்றே ஒதுக்கித் தள்ளும்.
சொல்கடை விரித்துச் சுழன்று வருவானை
............சுற்றி வணங்கி உண்டி வழங்கும்.
பல்கடை விரித்துப் பலர்க்கு அளிப்பானை
............பரமனே என்று வாழ்த்தி வணங்கும்.

ப்ரத்யக்ஷம் பாலா,
07.01.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

349
சாமியார்

கையேந்தி உணவருந்தி கண்டயிடம் கிடந்து
ஐயேயென்ற சொல்லை அனுதினம் கேட்டழுகி
மெய்தேய ஊரலைந்து மக்களுக்குப் பாரமாகி
நைந்ததோர் கோலமே நானிலத்தில் சிறந்ததென்பார்.

ப்ரத்யக்ஷம் பாலா,
07.01.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

350
ஆசிரமம்

அஞ்சாதே திருமகனே, அருந்தலைவர் ஒருவருண்டு !
தஞ்சம் அடைந்திட்டால் தீர்ந்திடும் கவலையெலாம் !
நெஞ்சாரப் புகழ்ந்திருந்தால் நமக்குண்டு படுக்க இடம் !
கொஞ்சம் கால் பிடித்தால் கவலையில்லை சோத்துக்கு !

ப்ரத்யக்ஷம் பாலா,
07.01.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

351
கந்தனருள்

கந்தனை நினைத்திரு! கரம் கொடுப்பார்!
சொந்தங்கள் நெருங்கி சுகம் அளிக்கும்!
விந்தைகள் மண்டிய வாழ்வு வரும்!
சொந்த மண் கொண்டிடும் நாளும் வரும்!

ப்ரத்யக்ஷம் பாலா,
21.04.2012.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

352
குடிமகன்

குடித்துக் கெடுத்த குடல் கடுக்க
உடுத்திக் கெடுத்த உடை கசங்க
முடங்கிக் கிடந்த உடல் நடுங்க -- --
அடுத்த முடக்கு எமன் கொடுப்பானோ?

ப்ரத்யக்ஷம் பாலா,
09.01.2015.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

முடக்கி விடாதே--முக்கிலே நின்று என்னை
மடக்கி விடாதே--'மற்றும் இங்கென்ன? மூச்-
சடங்கி, மூதாதையர் இல்லம் போ!' என்று விடாதே!

எத்தனை நாள் இத்தரை மீதிருந்தும் கற்றிலேன்
பித்தனாய் உலகு சுற்றி வந்தேன்--சத்துடையவை ஏதும்
வித்தகர் போல் கற்றிலேன்--என்ன வெட்டி முறித்தேன்!

பட்டப் பகல் போல் காயும் அழகு நிலா அழைத்தாலும்
வெட்டி வேலைகளை விட மனமின்றி அது காண ஓடேன்
சுட்டிகளெல்லாம் செய்யும் அற்புதமேதும் நான் செய்யேன்

இனியாகிலும் உயர் வாழ்வின் சுவை சற்றே அறிய, அகம் இனிக்க
கனிந்துள்ளமார் கவி பாடி இருந்திட-- நீ காலம் தாழ்த்தி வா!
பனி போர்த்த கூந்தலும், சுருங்கிய தோலும் மதியேன், அறிவாய்

மண்ணிசை வாழ்வு மதிப்பற்றதே, இங்கே விண்ணைக்கொணரும்
பண்ணும், பல கலையும், இறையுணர்வும், இனிமை குணமும்
எண்ணுவதெல்லாம் பயன் கொண்டதும் வேண்டுமே? கேள்!

யமனே, என்னவென்றெனை அணுகுவாய்? என்னவரும் அங்கு பொறுத்திருப்பர்,
சமமே உன் பார்வை, அறிவேன், ஆயினும் எருமை எறி வாராதே, இறை
கமனத்திலே, கானத்திலே, கவிதையிலே நான் உயிர்த்திட விடு!

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

நமனே,
உண்டோ உன்னைப்போல் தருமம் காப்போன் தேவருள் ஒருவன்?
பண்டு நான் செய் வினையெல்லாம் நீ நன்கறிவாயன்றோ?
மீண்டுமோர் பிறவி நான் எடுக்குமுன், என் தீவினையாவும்
மாண்டிடத் தகுமோர் தண்டனை தந்தென்னை நீ தூயனாக்கிடுவாயே.
உன்னை நான் அஞ்சுகிலேன், நின்னைப் போற்றி நின்றேனே.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: KavithaigaL by Rasikas

Post by sridhar_ranga »

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.

தேன்மாந்தித் திரிவதொரு தும்பி யைப்போல்
தியாகையன் கீர்த்தனங்கள் தேர்ந்து தோய்ந்தோம்
பூமாரி பொழிந்ததுபோல் புளகித முற்றோம்
புவியிலெமக் கினியெதுவும் பொருட்டி லையே

ஸத்குரோ: சரணம்!!

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே

உண்மைக்கும் அன்புக்கும் பண்புக்கும் கடமைக்கும்
உயரியதோர் இலக்கணம் வகுத்தளித்தப் பெருந்தகைகள்
இயேசுவையும், நபிகள் நாயகத்தையும், கண்ணனையும், ராமனையும்
கேலிச் சித்திரம் என்ற பெயரால் எள்ளி நகைத்திடக் கண்டு (நெஞ்சு பொறுக்குதில்லையே)

கேட்டால் எழுத்துச் சுதந்திரமென்றும், பேச்சுச் சுதந்திரமென்றும்
கருத்துச் சுதந்திரமென்றும், பசப்புச் சொற்களாடித் திரியும்
கற்றும் கல்வியின் நோக்கத்தினின்று வழுவிய
கலவியும், கள்ளும், களிப்புமே வாழ்வெனத்திரியும்
மக்களெனும் மாக்களைக் கண்டு (நெஞ்சு பொறுக்குதில்லையே)

என் பெற்றோர் எனக்கு மேதகையோர்
என் பெற்றோரையீன்றவன் என்னிறைவன்
இவன் இறைவனெனக் காட்டுவித்த மேதகையோரை
இங்கு செல்லாக் காசுக்கும் பெறுமானமற்றோர் எள்ளி நகைத்திட
நான் கைப்பிசைந்துகொண்டிருக்கவோ? (நெஞ்சு பொறுக்குதில்லையே)

பாரதி மன்னிப்பாராக.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

Pratyaksham Bala wrote:இறந்தவர் இறந்தவரே.
பிரிந்த உயிர் மறுபடி ஒட்டாது.
உண்மை உரைத்தீரய்யா, உயிரற்ற தேங்காய் மூடி பேசுகின்றேன்,
இறவாவிடில் விதையாகி முளைத்திருப்பேன், ஆயிராமாயிரம் தென்னையாக;
இறந்து உமக்கு நான் உணவாகினேன், உண்மை இதுவே.
உணவாகி உமக்கு, உமது இனம் தழைத்திடச் செய்தேனே.

இறந்து நான் பிறருக்குணவாவேன், உண்டவன் இனம் தழைக்க ஏதுவாவேன்;
நீரிறந்தால் வெறும் சாம்பராவீர், யாருக்குப் பயன்?
யாருடைய இறப்பு உண்மையில் இறப்பாம்?
நீரே சிந்தித்துத் தேர்ந்திடுவீரய்யா.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

353
பீதி

குண்டு, வெடிப்பு, குருதி, சாவு.
இண்டு, இடுக்கு, எங்கும் பீதி !
நண்டு, சிண்டு, நல்லோர் அனைவரும்
முண்டி யடித்து முக்கில் முடங்கவோ?

ப்ரத்யக்ஷம் பாலா,
11.01.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

354
ம.பி.

புதைத்தால் பல்லுயிர்க்கு உணவு.
எரித்தால் அக்னிக்குத் தீனி !
மரிப்பவர் முடிவா சாம்பராவது ?
எரிப்பவர் முறையே முடிவாகுது.

ப்ரத்யக்ஷம் பாலா,
11.01.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

355
கருணைக் கடவுள்

அப்பனின் கருணைக்கு அளவில்லை காணீர்.
எப்பெயர் சூட்டினும் ஏற்றே மகிழ்வார் !
வியப்புடை உருவெலாம் விரும்பியே ஏற்பார் !
பெயர் உருப் பூசல்களைப் பார்த்து ரசித்திருப்பார் !

ப்ரத்யக்ஷம் பாலா,
11.01.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

356
புண்ணியம்

வண்டி நிறைய வைக்கோல் திரட்டி
முண்டி விற்பினும் மடி நிறைந்திடுமா?
பண்டம் எப்படி, பரிசும் அப்படியே.
கொண்டது என்ன? காலன் சொல்வான்!

ப்ரத்யக்ஷம் பாலா,
21.01.2014.

Post Reply