KavithaigaL by Rasikas
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
''எப்பெயர் சூட்டினும் ஏற்றே மகிழ்வார்''
அப்பனென்றாலும், மகவென்றாலும்...
அப்பா என அழைத்தாலும் வேல் மகன் மகிழ்வான்
இப்பாரில் சாரதியவனை குழந்தாயென்றாலும்
ஒப்புவானவன்--பன்றியானவன், சிங்க முகன்
தப்பாது வருவான், மனம் நிறைந்தருள்வான்...
அப்பனென்றாலும், மகவென்றாலும்...
அப்பா என அழைத்தாலும் வேல் மகன் மகிழ்வான்
இப்பாரில் சாரதியவனை குழந்தாயென்றாலும்
ஒப்புவானவன்--பன்றியானவன், சிங்க முகன்
தப்பாது வருவான், மனம் நிறைந்தருள்வான்...
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
357
சந்தியாகாலத்துக் கதை
கனவிலே கந்தன் வந்து கதைபல சொல்வானெனலாம்.
தினமுமே கண்ணன் வந்து திண்பண்டம் தருவானெனலாம்.
தனமுடை குபேரன் வந்து தங்கரசம் கொடுப்பாரெனலாம்.
எனதரும் சீடரிடத்தே இவையெலாம் கிசுகிசுப்பேன் ! பரவட்டுமே !!
ப்ரத்யக்ஷம் பாலா,
11.01.2015.
சந்தியாகாலத்துக் கதை
கனவிலே கந்தன் வந்து கதைபல சொல்வானெனலாம்.
தினமுமே கண்ணன் வந்து திண்பண்டம் தருவானெனலாம்.
தனமுடை குபேரன் வந்து தங்கரசம் கொடுப்பாரெனலாம்.
எனதரும் சீடரிடத்தே இவையெலாம் கிசுகிசுப்பேன் ! பரவட்டுமே !!
ப்ரத்யக்ஷம் பாலா,
11.01.2015.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
இரவினிருளோட்டிடும், இரணியனை வதைத்தவன் பெயர்
இரவியினொளி பரவும் இதயத்தே, அதன் இனிமையிலே--
பரவிடுமின்பம், தெளிவும் பிறந்திடும், இதையறிந்தோமாயின்
அரவின் தலையாடியவன் அச்சமொழிப்பான், அறிவு சேர்ப்பான்
அருகிருந்து உறு துணையாவான், உதவுவான் பணியாளென
பரம பதம் இன்றே தருவான், ஈடுபாடு அவனில் மட்டுமே ஆயின்
அரு மருந்தும், அமிர்தமும் ஆரும் அவனே ஆவான், அகிலன்...

- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
திருப்பாவை (29) ஈற்றடி -பல ஸ்ருதிக்கு முன்
“மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் “
இத்தை திருநாளே ! என்
அத்தை திருமகள் தான்
தத்தை விழி யழகாள்
மெத்தப் படித்துவிட்டு
கத்தையாய் பொருள் ஈட்டும்
வித்தகி ! பொய் மொழியாள் என்
சித்தம் தனைக் கவ ர்ந்தாள்
நித்தமும் நான் கேட்கும்
முத்த மும் தந்திடாள்
மத்தளமாய் இருபுறமும்
மொத்துக்களே கிட்டியது என்
பித் த ம் தெளிந்தொழிய
உத்தி ஒன்று ரைப்பாயா?
“மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் “
இத்தை திருநாளே ! என்
அத்தை திருமகள் தான்
தத்தை விழி யழகாள்
மெத்தப் படித்துவிட்டு
கத்தையாய் பொருள் ஈட்டும்
வித்தகி ! பொய் மொழியாள் என்
சித்தம் தனைக் கவ ர்ந்தாள்
நித்தமும் நான் கேட்கும்
முத்த மும் தந்திடாள்
மத்தளமாய் இருபுறமும்
மொத்துக்களே கிட்டியது என்
பித் த ம் தெளிந்தொழிய
உத்தி ஒன்று ரைப்பாயா?
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
உத்தியா வேண்டும்?
அத்தனையும் மற.
புத்தியைத் தீட்டு.
மத்ததைக் கவனி.
பித்தம் தெளியும்.
அத்தனையும் மற.
புத்தியைத் தீட்டு.
மத்ததைக் கவனி.
பித்தம் தெளியும்.
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
சிற்றஞ் சிறுகாலே போர்வை முகம்மறைத்து
பெற்றோர் எழுப்பியும் சட்டையே பண்ணாமல்
சற்றே ஒலியெழுப்பி சன்னக் குறட்டையோ (டு
உற்ற மகனும் உறங்கி வழிகின்றான்
எற்றைக்(கு) இவனும் இளங்கலைப் பட்டத்தைப்
பெற்றுப் பொறுப்புணர்ந்து பேரும் புகழுமாய்
மற்றோர்க் குதவும் மனிதப் பிறவியாய்
சுற்றம் புகழச் சொலிப்பானோ எம்பாவாய் ?

Last edited by sridhar_ranga on 14 Jan 2015, 20:31, edited 1 time in total.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
பலே பலே
"மற்றை எம் காமங்கள் மாற்றாது " ஆரம்ப பாணியிலேயே இப் பாசுரத்தையும் மாற்றியதற்கு சபாஷ்!
"மற்றை எம் காமங்கள் மாற்றாது " ஆரம்ப பாணியிலேயே இப் பாசுரத்தையும் மாற்றியதற்கு சபாஷ்!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
358
யதார்த்தம்
(1)
பெருங்கடல் ஓடியும் பிழைப்பைத் தேடு,
அருளுடைத் தீர்த்தம் மறுப்பார் எனினும்.
(2)
திரு மறைந்தாரென முடி களையாதீர்,
ஒருமடத் தலைவர் ஒளிவார் எனினும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
14.01.2015.
யதார்த்தம்
(1)
பெருங்கடல் ஓடியும் பிழைப்பைத் தேடு,
அருளுடைத் தீர்த்தம் மறுப்பார் எனினும்.
(2)
திரு மறைந்தாரென முடி களையாதீர்,
ஒருமடத் தலைவர் ஒளிவார் எனினும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
14.01.2015.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
P>B
நினைக்க தெரிந்த மனதிற்கு மறக்க தெரியவில்லை.அதற்கு ஒரு உத்தி ?
ஒரு துணுக்கு:
--டாக்டர் .,ஏன் சொப்பனத்தில் அனுமார் வந்து பயமுறுத்துகிறார்.எப்படி மறப்பது ?
--இந்த மாத்திரையை சாப்பிடு சரியாக போய்விடும்
--எப்படி சாப்பிடவேண்டும் ?
--காபியுடன் சாப்பிடலாம். ஆனால் ஒன்று: விழுங்கும் சமயத்தில் குரங்கை பற்றி மட்டும் நினைக்ககூடாது
அன்று மாலை நம் ஆள் மாத்திரையை எடுத்தவுடன் அவன் நினைவுக்கு வந்தது குரங்கு மட்டும் தான்.
அதனால் தான் மனம் ஒரு குரங்கு என்கிறார்களோ ?

நன்றி ப்ரத்யக்ஷம் பாலா மற்றும் பொன்பைரவி அவர்களே
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
A cousin just shared on whatsapp pictures of pOLi's she made for bhogi, prompting me to write this 
சித்திரா பௌர்ணமிபோல் "ஷேப்"பாய் இலையெனினும்
உத்திரா கைமணத்தில் உண்டானால் - பத்திரமாய்
வாளி நிறையவே வைத்துச் சுவைக்கலாம்
போளி அதனைப் புகழ்

சித்திரா பௌர்ணமிபோல் "ஷேப்"பாய் இலையெனினும்
உத்திரா கைமணத்தில் உண்டானால் - பத்திரமாய்
வாளி நிறையவே வைத்துச் சுவைக்கலாம்
போளி அதனைப் புகழ்
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
சிரிதரா,
அத்தனையும் அ.ரு.மை!
தீபாவளியன்று போளியில்லையென்றாலும்
போளியுண்டு போகியில்--'கீ'யுமுண்டு--
வாளி நெய் (கீ) முழங்கை வழி வாராவிடினும்...
கேளீர், கொலெஸ்ட்ராலுடையீர்... நூற்பீர் நோம்பே
ஒளிரும் காரடை கொழுக்கட்டை துணையுடனே...!
அத்தனையும் அ.ரு.மை!
தீபாவளியன்று போளியில்லையென்றாலும்
போளியுண்டு போகியில்--'கீ'யுமுண்டு--
வாளி நெய் (கீ) முழங்கை வழி வாராவிடினும்...
கேளீர், கொலெஸ்ட்ராலுடையீர்... நூற்பீர் நோம்பே
ஒளிரும் காரடை கொழுக்கட்டை துணையுடனே...!
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
மீத்தேன்
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் உன்மடியில்
இருந்து மீத்தேன் உறிஞ்சியபின்
எங்கே காண்பேன் காவேரி?
பூவர் சோலை மயிலாடப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி! காவேரி!
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம், உனைக்கொன்று
ஈமச் சடங்கும் நடத்தியபின்
எவரே அறிவர் காவேரி?
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் உன்மடியில்
இருந்து மீத்தேன் உறிஞ்சியபின்
எங்கே காண்பேன் காவேரி?
பூவர் சோலை மயிலாடப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி! காவேரி!
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம், உனைக்கொன்று
ஈமச் சடங்கும் நடத்தியபின்
எவரே அறிவர் காவேரி?
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரப் பாடலுக்கு இணையாக உள்ளது தங்கள் படைப்பு!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
359
ஓர் மடத்தலைவரின் புலம்பல்
கொஞ்சலெலாம் பதித்துவைத்துக் கும்பியைக் கலக்குறானே.
செஞ்சதெலாம் படம்பிடித்துச் சந்தியில் விற்கிறானே.
மனம்மயக்கி மேய்ந்ததெல்லாம் தினம் வெளியாகுதே.
தினம்சுருட்டி வைத்ததெல்லாம் மனம் கிலி தருகுதே.
ப்ரத்யக்ஷம் பாலா,
13.01.2015.
ஓர் மடத்தலைவரின் புலம்பல்
கொஞ்சலெலாம் பதித்துவைத்துக் கும்பியைக் கலக்குறானே.
செஞ்சதெலாம் படம்பிடித்துச் சந்தியில் விற்கிறானே.
மனம்மயக்கி மேய்ந்ததெல்லாம் தினம் வெளியாகுதே.
தினம்சுருட்டி வைத்ததெல்லாம் மனம் கிலி தருகுதே.
ப்ரத்யக்ஷம் பாலா,
13.01.2015.
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
கொத்தமங்கலம் சுப்புவுக்கு இணையாக தங்கள் சிந்தனைத் திறம் உள்ளதே ஐயா !
அவரையும் தேவன் போன்ற இன்ன பிறரையும் நமக்கு மீள் அறிமுகம் செய்விக்கும் பசுபதி அய்யாவுக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
சென்னை புத்தகத் திருவிழாவில் புலியூர்க்கேசிகன் உரையுடன் சிலப்பதிகார நூல் வாங்கிப் படித்து வருகிறேன். அதன் தாக்கம் தான் மேலே உள்ள மீத்தேன் கவிதை.
ஆற்று வரி, கானல் வரி, ஆய்ச்சியர் குரவை என எளிய சொற்களில் எம் உள்ளம் கொள்ளை கொள்ளும் பெருவித்தைக்காரர் இளங்கோ அடிகள் எங்கே, இவ்வற்பன் எங்கே? அப்படியெல்லாம் பொலிவுடன் காவிரித்தாய் ஒய்யார நடை போட்டாள் என்றறிந்து கொள்வதே எத்தனை இன்பத்தைக் கொடுக்கிறது! இதை எல்லாம் இழந்து விட்டோம் / இழக்கக் கூடும் என நினைக்கவே நெஞ்சம் எப்படிப் பதறுகிறது?
அவரையும் தேவன் போன்ற இன்ன பிறரையும் நமக்கு மீள் அறிமுகம் செய்விக்கும் பசுபதி அய்யாவுக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
சென்னை புத்தகத் திருவிழாவில் புலியூர்க்கேசிகன் உரையுடன் சிலப்பதிகார நூல் வாங்கிப் படித்து வருகிறேன். அதன் தாக்கம் தான் மேலே உள்ள மீத்தேன் கவிதை.
ஆற்று வரி, கானல் வரி, ஆய்ச்சியர் குரவை என எளிய சொற்களில் எம் உள்ளம் கொள்ளை கொள்ளும் பெருவித்தைக்காரர் இளங்கோ அடிகள் எங்கே, இவ்வற்பன் எங்கே? அப்படியெல்லாம் பொலிவுடன் காவிரித்தாய் ஒய்யார நடை போட்டாள் என்றறிந்து கொள்வதே எத்தனை இன்பத்தைக் கொடுக்கிறது! இதை எல்லாம் இழந்து விட்டோம் / இழக்கக் கூடும் என நினைக்கவே நெஞ்சம் எப்படிப் பதறுகிறது?
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
அடிகள் அடியில் நடை போடுகிறார், நம்மில் சிறாராம் சிரிதரன்!
வடிவாய் வடிப்பதே அவர் திறன், அதனைப் படித்தின்புறுவது நாம்!
பள்ளியில் படித்தாரோ? குலத்தே பலரும் பாடியவர் உண்டோ?
வெள்ளக் காவிரி போல் பொழியுமோ இக்கவி மேகமும்தான்?
வடிவாய் வடிப்பதே அவர் திறன், அதனைப் படித்தின்புறுவது நாம்!
பள்ளியில் படித்தாரோ? குலத்தே பலரும் பாடியவர் உண்டோ?
வெள்ளக் காவிரி போல் பொழியுமோ இக்கவி மேகமும்தான்?
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
ஸ்ரீதர்
இளங்கோவடிகளின் காலத்து தமிழ் நாட்டு காவிரியின் வருணனை கண்டபின் இன்றைய காவிரியின் நிலையை பார்த்து உண்டாகும் மன ஏக்கத்தை அருமையாக வடித்து இருக்கிறீர்கள் .அதுவும் அவர் கவிதையின் ஈற்று அடிகள் இரண்டை மாற்றி தொடராக செய்திருப்பது அருமையான கவி நயம் பாராட்டுக்கள்.
ஆனாலும் அடிகளின் காவிரி வருணனை இன்றும் அப்படியே பொருத்தமாகத்தான் இருக்கும் -- கர்நாடக மாநிலத்துக்குள் இருக்கும் காவிரியை மட்டும் பார்த்தால்.
இளங்கோவடிகளின் காலத்து தமிழ் நாட்டு காவிரியின் வருணனை கண்டபின் இன்றைய காவிரியின் நிலையை பார்த்து உண்டாகும் மன ஏக்கத்தை அருமையாக வடித்து இருக்கிறீர்கள் .அதுவும் அவர் கவிதையின் ஈற்று அடிகள் இரண்டை மாற்றி தொடராக செய்திருப்பது அருமையான கவி நயம் பாராட்டுக்கள்.
ஆனாலும் அடிகளின் காவிரி வருணனை இன்றும் அப்படியே பொருத்தமாகத்தான் இருக்கும் -- கர்நாடக மாநிலத்துக்குள் இருக்கும் காவிரியை மட்டும் பார்த்தால்.
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
360
பிழைப்பு
காரிலேன், வீடும் இல்லை;
கார்டும் ஒரு செல்லும் இல்லை.
பாரினில் வேலை இல்லை;
பஜனைதான் ஒன்றே வழி !
ப்ரத்யக்ஷம் பாலா,
16.01.2015.
பிழைப்பு
காரிலேன், வீடும் இல்லை;
கார்டும் ஒரு செல்லும் இல்லை.
பாரினில் வேலை இல்லை;
பஜனைதான் ஒன்றே வழி !
ப்ரத்யக்ஷம் பாலா,
16.01.2015.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
rshankar:
THANKS !
THANKS !
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
சுப ஸ்வீகாரம்
பூவுடன் பொட்டுடன் உனைக்கொன்று
ஈமச் சடங்கும் நடத்தியபின்
பதின் மூன்றாம்நாள் அந்தியிலே
உன் படத்தை மாட்டி பூவைப்போம்
பூவுடன் பொட்டுடன் உனைக்கொன்று
ஈமச் சடங்கும் நடத்தியபின்
பதின் மூன்றாம்நாள் அந்தியிலே
உன் படத்தை மாட்டி பூவைப்போம்
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
இன் மக்கள்
படத்தை மாட்டிப் பூவும் வைப்போம்-- நீ விட்ட மூளி
இடத்தைப் பார்த்திருப்போம், பலதும் பேசுவோம்--உன் இன்
நடப்பு, சிரிப்பு என்று விவரிப்போம், வியப்போம், உன்னில்
அடக்கம், அன்பு குடி கொண்டதை விரித்துரைப்போம், சலியோம்!
தீய சந்திதிகள்
ஆச்சு! எல்லாம் செய்து முடித்தாயிற்று! இனிமேல் என்ன? நம்
பேச்சு என்றாவது கேட்பாளா? கடமை, கண்யம், கருத்து என்றெல்லாம்
நச்சரிப்பாள், நன்னடத்தை, நல்வாழ்வு என்றெல்லாம் உபதேசிப்பாள்--
பச்சைக் குழந்தையா நாம்? இந்த உலகம் பற்றி இவள் என்ன அறிவாள்?
எங்கே, பீரோவைத் திறப்போம். காசு மாலை எனக்கேதான்! நீ தான்
வங்கியை எடுத்துக் கொள்ளேன்? அவள் வைத்திருந்ததே குறைவு
சிங்கி சிங்கனுக்கெல்லாம் வாரி வழங்கிடுவாள், 'ஐயோ பாவம்' என்று!
இங்கே நமக்கெல்லாம் வேண்டுமே என நினையாமல், சங்கதி அதுதான்!

361
பிரளயம்
பேரிருள் கவ்வக் கண்டான்;
பெரும்புயல் வீசக் கண்டான்.
ஊரினுள் வெள்ளம் தாவி
உயிர்கள் அழியக் கண்டான்.
ஓம் தத் ஸத் !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.01.2015.
பிரளயம்
பேரிருள் கவ்வக் கண்டான்;
பெரும்புயல் வீசக் கண்டான்.
ஊரினுள் வெள்ளம் தாவி
உயிர்கள் அழியக் கண்டான்.
ஓம் தத் ஸத் !
ப்ரத்யக்ஷம் பாலா,
17.01.2015.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
Re: KavithaigaL by Rasikas
பேரிருளும் அவனே, பெரும்புயலும் அவனே
வெள்ளமும் அவனே, வெந்தணலும் அவனே
உயிர்களும் அவனே, ஊழியும் அவனே
என்னே அவன் ஊழித்தாண்டவம்!
வெள்ளமும் அவனே, வெந்தணலும் அவனே
உயிர்களும் அவனே, ஊழியும் அவனே
என்னே அவன் ஊழித்தாண்டவம்!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
362
அருள்
கல்லோ, சிலையோ, கிழங்கோ, மஞ்சளோ
எல்லாம் அவனே எதுவும் தகுமே !
நில்லாது ஓதியே நல்வழி தேடலாம் --
சொல்லா திருந்தும் சிவனருள் பெறலாம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.01.2015.
அருள்
கல்லோ, சிலையோ, கிழங்கோ, மஞ்சளோ
எல்லாம் அவனே எதுவும் தகுமே !
நில்லாது ஓதியே நல்வழி தேடலாம் --
சொல்லா திருந்தும் சிவனருள் பெறலாம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.01.2015.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
363
சந்நியாசம்
சொல்லொனாக் கொடுமைபல செய்திட்டு பின்னர்
இல்லறம் துறந்ததும் இறையாவாரோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
17.01.2015.
சந்நியாசம்
சொல்லொனாக் கொடுமைபல செய்திட்டு பின்னர்
இல்லறம் துறந்ததும் இறையாவாரோ?
ப்ரத்யக்ஷம் பாலா,
17.01.2015.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
364
விழிப்பு !
"என்னென்னவோ சொல்லி என்னைநீர் மயக்கிவிட்டீர் !
அன்னமென்றீர், அழகியென்றீர், அப்சரஸ் நங்கையென்றீர்.
கின்னரரையும் மயக்கும் கயல்விழிக் கன்னியென்றீர்.
சொன்னெதெலாம் கிடக்கட்டும்; திருமணமெப்போ கூறுங்கள் !"
ப்ரத்யக்ஷம் பாலா,
23.01.2015.
விழிப்பு !
"என்னென்னவோ சொல்லி என்னைநீர் மயக்கிவிட்டீர் !
அன்னமென்றீர், அழகியென்றீர், அப்சரஸ் நங்கையென்றீர்.
கின்னரரையும் மயக்கும் கயல்விழிக் கன்னியென்றீர்.
சொன்னெதெலாம் கிடக்கட்டும்; திருமணமெப்போ கூறுங்கள் !"
ப்ரத்யக்ஷம் பாலா,
23.01.2015.
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
வாரணமாயிரம் சொல்லியிருக்கேன் வந்ததும் கல்யாணம்
பூரணப் பொற்குடம் பூஜையிலிருக்கு முடிஞ்சதும் கல்யாணம்
நாரண நம்பி திருவுளச் சீட்டு குடுத்ததும் கல்யாணம்
காரணமாத்தான் இன்னும் நடக்கலை கனியலையே காலம்!
பூரணப் பொற்குடம் பூஜையிலிருக்கு முடிஞ்சதும் கல்யாணம்
நாரண நம்பி திருவுளச் சீட்டு குடுத்ததும் கல்யாணம்
காரணமாத்தான் இன்னும் நடக்கலை கனியலையே காலம்!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
365
நம்பிக்கை
"வாரணமாயிரம் வருவதெப்போ ? வயதாகிவிடும் அதற்குள்ளே !
பூரண பூசை முடிவதெப்போ ? புனித நாளும் கிடைப்பதெப்போ ?
காரணம் சொல்லிக் கடத்தாதீர், கனிந்த காலம் எப்போ வரும் ?
நாரணன்தான் என் நம்பிக்கை ! நல்லது செய்வார் நிச்சயமாய் !"
ப்ரத்யக்ஷம் பாலா,
24.01.2015.

366
முடிவு
இன்னவர் பற்றச் சொல்லு
இல்லையேல் தலையைக் கிள்ளு !
என்பவர் இன்றும் உண்டு
என்றுதான் தொலைவர் விண்டு ?
ப்ரத்யக்ஷம் பாலா,
29.01.2015.
முடிவு
இன்னவர் பற்றச் சொல்லு
இல்லையேல் தலையைக் கிள்ளு !
என்பவர் இன்றும் உண்டு
என்றுதான் தொலைவர் விண்டு ?
ப்ரத்யக்ஷம் பாலா,
29.01.2015.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
நூற்றாண்டு இன்று!
..........................................
ஒரு நூற்றாண்டு முன்பு வந்தவன்
தருவான் தந்தையென எனக்கிதம்
காலமறியாதிளமையிலே காலன்
சாலவுமே அன்பு செய்த எந்தையை
எடுத்தேகிடவே--விந்தையாம் மனிதன்,
படித்தறிந்தவன், அவனே சிறியவன்--
கடிதில் முதிர்ந்தெனக்குத் துணை தந்தான்
சடுதியில் தானே பொறுப்பேற்றான் காண்!
சில ஆண்டுகளே அவன் அருகாமை--ஆயின்
சிலம்புச் செல்வரும், சிறந்த கருத்தாளரும்
சிறுகதை மன்னரும், கவிகளுமவன் சூழலிலே--
வெறும் நாரே நானெனினும், கலை மணமென்னில்!
இசையோடு கவிதையும் இலக்கியமும் முற்றும்
அசை போடும் பல வித்தகரென் அருகாமையில்*
மெத்தப் படித்தவரின், வித்தை பல கற்றோரின்
மத்தியில், மற்றவையும் வேண்டிடுமோ மனமுமே?
பெற்ற தாயின் உடன் பிறந்தான், உற்ற நண்பனுமே!
சிற்றம் சிறார் உள்ளம் கொள்ளை கொண்டவன்!
சடகோபன் எனும் பெயர் கொண்டான்-- வடக்கிலும்
படர்ந்த இவ்வுலகிலும் பேர் புகழ் பெற்றவன்!
அவனை இன்று எண்ணி...அரசி
*Please read it as 'suTRum'...don't know how to go back and edit the tamizh script

மிக்க அருமை !
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
இதோ வந்தான் சடகோபன்!
அரசியின் அன்னாளைய இங்கிலாந்துத் தோட்டத்திலே...1969-ஆம் ஆண்டு.
வெ. கைலாசம் அவர்களுக்கு நன்றியுடனே...அரசி
அரசியின் அன்னாளைய இங்கிலாந்துத் தோட்டத்திலே...1969-ஆம் ஆண்டு.
வெ. கைலாசம் அவர்களுக்கு நன்றியுடனே...அரசி
Last edited by arasi on 29 Jan 2015, 19:27, edited 1 time in total.
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
அம்மான் சடகோபன்
நண்பனாய்த் தந்தையாய் நல்லா சிரியனுமாய்ப்
பண்பும் படிப்பும் பலகலை வல்லோர்
அருகாமை யும்தந்(து) அரசியைப் பேணிப்
பெருவாழ்(வு) அளித்த பெருமான்
நண்பனாய்த் தந்தையாய் நல்லா சிரியனுமாய்ப்
பண்பும் படிப்பும் பலகலை வல்லோர்
அருகாமை யும்தந்(து) அரசியைப் பேணிப்
பெருவாழ்(வு) அளித்த பெருமான்
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
சிரிதரரே!
உம்மைப் போலவே உயர் கவியாற்றும் திறன் எனக்குண்டோ?
எம் மாமனின் திறன்களிலெல்லாம் சிறு பங்கும் எனதாமோ?
உம்மைப் போலவே உயர் கவியாற்றும் திறன் எனக்குண்டோ?
எம் மாமனின் திறன்களிலெல்லாம் சிறு பங்கும் எனதாமோ?
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
367
பாடம்
அயராது தொழிலில் முனை.
உயர்நிலை கற்றுத் தெளி.
செல்வங்கள் நேராய்க் குவி.
இல்லாதார் இனிக்க அளி !
ப்ரத்யக்ஷம் பாலா,
29.01.2015.
பாடம்
அயராது தொழிலில் முனை.
உயர்நிலை கற்றுத் தெளி.
செல்வங்கள் நேராய்க் குவி.
இல்லாதார் இனிக்க அளி !
ப்ரத்யக்ஷம் பாலா,
29.01.2015.
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
தாங்கள் செய்யாத உயர் கவியா அரசியாரே? என் முயற்சிகள் வெறும் உல்டா / உட்டாலக்கடி சமாச்சாரம்தான்
- சரக்கு உங்களது, சட்டம் (frame) மட்டுமே என்னுடையது.

-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
சட்டம் பேசாதீர், திட்ட வட்டமாய்ச் சொல்வேன் 
பட்டம் உமக்கேயாம்--மட்டமா உம் கவிதை, சொல்லும்?
நட்ட நடு வயதுமது, எட்டுமா உமக்கென் ஆண்டுகளுமே?
பட்டப் பகல், இரவுக்கெத்தனை தொலை! பேசாதிரும்!
எட்டாக்கனியாம் எனக்கான கவிதையெல்லாம் உமதாகுக!
பாட்டி சொல் அத்தனையும் பலித்திடும், பொறுத்திருப்பீர்

பட்டம் உமக்கேயாம்--மட்டமா உம் கவிதை, சொல்லும்?
நட்ட நடு வயதுமது, எட்டுமா உமக்கென் ஆண்டுகளுமே?
பட்டப் பகல், இரவுக்கெத்தனை தொலை! பேசாதிரும்!
எட்டாக்கனியாம் எனக்கான கவிதையெல்லாம் உமதாகுக!
பாட்டி சொல் அத்தனையும் பலித்திடும், பொறுத்திருப்பீர்

-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
அக்கப்போர்
தயிர்க்குடம் தலையிலேந்தி இடைச்சியொருத்திச் செல்ல
தயிர்க்குடத்தை மூடியிருந்த துணி காற்றடித்ததனால் அகல - அவ்வேளை
அரவொன்றை வாயில் கவ்வி கருடன் வானில் செல்ல
அரவு கருடனின் பிடியினின்று தப்பும் போரில் விடத்தினைக் கக்கிட
விடம் நேராகத் தயிர்ப்பானையில் விழுந்திட
விடம் கலந்த தயிரென்றறியாது இடைச்சி தயிரை விற்றிட
தயிரை உண்டவன் பிறவி முடிந்திட
தன் கடனைச் செய்திட எமனங்கு வந்திட - மாண்டவன் பாவம்
இடைச்சியைச் சேருமா, துணியை விலக்கிட்ட காற்றினைச் சேருமா,
அரவினைக் கவ்விச்சென்ற கருடனைச் சேருமா,
விடத்தினைக் கக்கிட்ட அரவினைச் சேருமா என
நடப்பனைத்தினையும் கண்டிருந்த இரு யட்சர்கள் தமக்குள் வாதிட
இடைச்சியுமல்ல, காற்றுமல்ல, கருடனுமல்ல, அரவுமல்ல
இவ்வியற்கைச் செயலுக்கு விளக்கம் தேடும் உம்மிருவரைச் சேரும் என
எமன் கூறி அவ்விருவரையும் யமலோகம் அழைத்துச்சென்றானே

368
சீடன்
"சொத்தெல்லாம் விற்றாலும் சொர்க்கத்துக்கு வழியுண்டோ ?
செத்தவரைச் சுற்றிவந்தால் செல்லலாம் சொர்க்கம்" என்பான் !
தித்திக்கும் சொற்களால் திகைக்கவைத்துக் களைவான்.
இத்தனையும் போதாது இன்னமும் வேண்டுமென்பான்.
எத்தனை வழியுண்டோ அத்தனையும் எடுத்தாள்வான். -- இந்த
எத்தனை ஒத்தவனை ஒருபோதும் கண்டதில்லை !
ப்ரத்யக்ஷம் பாலா,
13.02.2015.

369
இற்றை தினம்
மனம்கவர் கள்வன்கதை மனதாரக் கேட்டு(உ)வந்து
கன்னத்தில் போட்டுக் கட்டையாய் விழுவான் -- பின்
மனம்கவர் காதல்இணை மரத்தடி கண்டுவிட்டால்
கன்னத்தில் அறைந்து கழுதை என்று ஏசுவான்.
ப்ரத்யக்ஷம் பாலா,
14.02.2015.

370
வழி
பந்திக்குக் காத்திருந்து பசியோடு கிடக்காதே.
அந்திக்காலம்வரை அழுதழுது சாவாதே.
சந்தி சிரித்ததெல்லாம் சட்டென மறந்துதொலை.
நிந்தனை செய்தவரை நினைவிலே வைக்காதே.
சிந்தித்தால் தெளிவுவரும் சக்தியெலாம் உனக்குண்டு !
சொந்தமெல்லாம் சிரிக்கட்டும் சுமைதூக்கு தப்பில்லை !
முந்தைநிலை மாறும் ! மனநிறைவு வந்துசேரும் !!
விந்தையாடா வாழ்க்கை ! வரும்காலம் பொன்னாகும் !!
ப்ரத்யக்ஷம் பாலா,
15.02.2015.

371
பிரிவுத் துயர்
விரகதாப ஏக்கம் வாடிச்சுருள வைக்கும்,
சரசநேரக் கொஞ்சல் செவியில்வந்து மோதும்,
இரவிலொரு கனவு இனிக்கவைத்துத் தாக்கும் --
கிரகநிலை மாறி கலக்கம் தீரும் வரையில்.
ப்ரத்யக்ஷம் பாலா,
16.02.2015.

373
நாட்டாண்மை
நல்லது செய்தால் தட்டிக் கொடுக்கணும்.
அல்லது என்றால் தட்டிக் கேட்கணும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
18.02.2015.
நாட்டாண்மை
நல்லது செய்தால் தட்டிக் கொடுக்கணும்.
அல்லது என்றால் தட்டிக் கேட்கணும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
18.02.2015.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
கை தட்ட வேண்டியதொன்று...