KavithaigaL by Rasikas
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
426
மாறு
குன்றேறி முடி களை, குறையெலாம் மறையவேண்டி.
கொன்றே சாய்க்க உள கோபமும் தணியட்டும்.
இன்றே கடன்கள் தீர் இதுவேதான் கடைநாள் என !
தின்றே கழித்த நாட்கள் தொலையட்டும் மறந்துவிடு !
ப்ரத்யக்ஷம் பாலா,
29.03.2015.

427
ஓர் தர்மபத்னியின் கதறல்
போகாதீர் அங்கெலாம் பேய் பிடித்துக் கொள்ளும்.
நோகாதீர் என்மனதை நோய் கொண்டு வாராதீர்.
வேகாதீர் தினமுமென வேண்டுவது கேட்கலையோ ?
ஆகாதே நம்குடிக்கு ஆசைக்கொன்று கொள்ளாதீர்.

428
பாடகர் புலம்பல்
கம்முன்னு இருக்கலாம்; கேட்டீங்கன்னு சொல்லறேன்.
அம்புட்டும் நமக்கா ? ஆளாளுக்குக் கொடுத்தாச்சு !
செம்பொன்னார் கடத்துக்கு சொன்னத்துக்கும் மேலே.
தம்புராவைத் திணித்ததிலே தொலைந்தது மிச்ச பணம் ! ...
வம்பேதும் வேண்டாமையா; வந்ததே கொஞ்சம்தான்.
அம்பத்தூர் போகணும் ! இங்கே அம்போன்னு நிற்கறேன் !
ப்ரத்யக்ஷம் பாலா,
31.03.2015.

- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
தருமம்

ஊரெல்லாம் தேடினேன்,
உனக்குவமை இல்லையம்மா;
உன் மகவுக்கோர் ஆடையில்லை;
உண்பதற்கு நீ பெற்ற ஒரு சிறிதில்,
உன் மகவுக்கோர் பங்களித்தாய்;
உன் பங்கில், எனக்கோர் பங்கு தந்தாய்
போதாது தனக்கென, தன்னேழு சந்ததிக்கும்
பொருளீட்டி வைத்தாரே;
இன்றோ, நாளையோ, மறுநாளோ
இவனென்று சாவானென,
வாய்க்கரிசியும் வாய்க்காது
வாரிக்கட்டிக் கொண்டு செல்வாரே;
இன்று பிறந்தோம், இன்று வாழ்ந்தோம்
இன்று இறந்தோம், இஃதெங்கள் வாழ்க்கையம்மா
இதனை இம்மனிதர் உணர்ந்திடாரோ?
தனக்கு முந்தி தருமமென்பதனை
தனக்கு மிஞ்சி தருமமென்றனரே
தருமமென்பது நீ செய்வதன்றோ
தாய்க்குலமே! தெண்டனிட்டேன் உன்னிரு கால்களிலே;
ஊரெல்லாம் தேடினேன்,
உனக்குவமை இல்லையம்மா.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
கோவிந்தன்,
நன்றி! நல்லதோர் கவிதை...
இப்படியோர் படம்! எப் புகைப்படக்காரர் எடுத்ததோ?
அப்பா! புகையாவது படமாவது! தொலை பேசியில்
பாப்பாவும் எடுக்குமே? பத்தாம் பசலி நான்...
அப்படித்தான்! காலம் பிறந்ததிலிருந்து, பல்லில் கடித்தோ,
அப் பக்குவம் தெரிந்து சமைத்தோ, ஊட்டிடுவாள்--
எப் பக்கம் பார்த்தாலும், அதாவது எத் திசையிலும்,
இப் பாரிலும், சந்திரனில் கூட (?) , எப்பேற்பட்டவள்!
என்றும் அன்னைyE அவள், பின்னே?

429
அப்பாடா !
வரவர வரிவரியாய் எழுதுவதை விடுப்போம்.
அரஅர அரிஅரி யென பொழுதைக் கழிப்போம்.
ப்ரத்யக்ஷம் பாலா,
01.04.2015.
அப்பாடா !
வரவர வரிவரியாய் எழுதுவதை விடுப்போம்.
அரஅர அரிஅரி யென பொழுதைக் கழிப்போம்.
ப்ரத்யக்ஷம் பாலா,
01.04.2015.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
"April Fool!", I hear you say 

-
- Posts: 3051
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
சரியாகச் சொன்னீர் ப்ரத்யக்ஷம் பாலா
அரியாவது அரனாவது வர மாட்டானா அருள: இருப்பினும்
அயராமல் எண்ணங்களை எழுத்தினில் வடிப்போம்
உயர்வு தானே வரும்
தஞ்சாவூரான்
09 04 2015
அரியாவது அரனாவது வர மாட்டானா அருள: இருப்பினும்
அயராமல் எண்ணங்களை எழுத்தினில் வடிப்போம்
உயர்வு தானே வரும்
தஞ்சாவூரான்
09 04 2015
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
பெண்ணென்றால் அழகென்றது இதற்கா?
பேறுபெற்றால் பேரழகு குலைந்திடுமென்று,
பேற்றுக்கென்றோர் வாடகை வயிற்றினைத் தேடும் பெண்மை;
தாய்ப்பாலூட்டாது தன்னழகில் தானே மயங்கும் தாய்மை;
தாலாட்டு பாடத்தெரியாத தாய்மை;
இருந்தாலென்ன, இல்லாமலிருந்தாலென்ன?
ஐயகோ! இயற்கையின் இறுதியிதுவோ!
பேற்றுக்கென்றோர் வாடகை வயிற்றினைத் தேடும் பெண்மை;
தாய்ப்பாலூட்டாது தன்னழகில் தானே மயங்கும் தாய்மை;
தாலாட்டு பாடத்தெரியாத தாய்மை;
இருந்தாலென்ன, இல்லாமலிருந்தாலென்ன?
ஐயகோ! இயற்கையின் இறுதியிதுவோ!
-
- Posts: 3051
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
திரு கோவிந்தன்
அருமையான கருத்து எளிமையாக விளக்கியமைக்கு நன்றி.
என் என்மனதில் தோன்றியதை எழுத்தாக்கி உள்ளேன்.
பிழைகள் மலிந்திருக்கும். உங்களுடன் பகிர்ந்து கொள்ள அவா
ஏப்ரல் முதல் நாள் ஏமாறும் அறிவிலிகள்
பின் வரும் நாட்களில் என் செய்வர் பதறாதீர்
யான் பெற்ற இன்பம் எல்லோரும் பெறவேண்டி
தானும் பொய் வதந்தியை பரப்பினால்
தாங்குமா இவ்வுலகம் தெளி
.
தஞ்சாவூரான்
09 04 201
அருமையான கருத்து எளிமையாக விளக்கியமைக்கு நன்றி.
என் என்மனதில் தோன்றியதை எழுத்தாக்கி உள்ளேன்.
பிழைகள் மலிந்திருக்கும். உங்களுடன் பகிர்ந்து கொள்ள அவா
ஏப்ரல் முதல் நாள் ஏமாறும் அறிவிலிகள்
பின் வரும் நாட்களில் என் செய்வர் பதறாதீர்
யான் பெற்ற இன்பம் எல்லோரும் பெறவேண்டி
தானும் பொய் வதந்தியை பரப்பினால்
தாங்குமா இவ்வுலகம் தெளி
.
தஞ்சாவூரான்
09 04 201
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
கண்ணமுது
கண்ணுக்குக் கற்சிலையாய்க் காணப்படினும்
கண்ணுக்குக் கண்ணான அந்தக் கண்ணனுக்கு - திருக்
கண்ணமுதூட்டத் தாயாகத் தானிருப்பேனென,
கண்காணிப்போரற்றுக் கிடக்கும் பெருவிளையிலே,
ஊதியமுமின்றி, ஓய்வூதியமுமின்றி,
ஊண் தனக்கேயில்லாத வேளையிலும்,
ஊழ்வினையெனாதுழைக்கும் உழைப்பே
உண்மையில் சரணாகதியன்றோ, சொல்.
(FB-யில் கண்டது - பெருவிளை கன்னியகுமரி மாவட்டத்தில் உள்ளதெனத் தெரிகின்றது)

- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: பெண்ணென்றால் அழகென்றது இதற்கா?
நல்ல கருத்து அழகான சொல்லாட்சி.vgovindan wrote:பேறுபெற்றால் பேரழகு குலைந்திடுமென்று,
பேற்றுக்கென்றோர் வாடகை வயிற்றினைத் தேடும் பெண்மை;
தாய்ப்பாலூட்டாது தன்னழகில் தானே மயங்கும் தாய்மை;
தாலாட்டு பாடத்தெரியாத தாய்மை;
இருந்தாலென்ன, இல்லாமலிருந்தாலென்ன?
ஐயகோ! இயற்கையின் இறுதியிதுவோ!
அதை தொடர்ந்து ,
தீய விடமென்று அறிந்த பின்னும் கபட
பேயென்றுநன்றே தெரிந்த பின்னும் பவள
வாய் வைத்து மோட்சம் அருளி கரிய
மாயவன் புரிந்த லீலை உலக
தாய்மைக்கே ஓர் மரி யாதை யன்றோ !
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
அறிவிப்பு :
வரும் தமிழ்ப் புத்தாண்டு நாள் முதல் "வர வர வரி வரியாய் எழுதவதே இங்கு வழக்கமாகி விடுமோ" என்ற ஆதங்கம் மறுபடி தொடரக்கூடும் !!
.
அறிவிப்பு :
வரும் தமிழ்ப் புத்தாண்டு நாள் முதல் "வர வர வரி வரியாய் எழுதவதே இங்கு வழக்கமாகி விடுமோ" என்ற ஆதங்கம் மறுபடி தொடரக்கூடும் !!
.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
மன்னிக்க வேண்டுகிறேன்
பொன் பைரவி அவர்களே, நன்றி,
விடத்தின் விடத்தன்மையாய வைகுந்தன்
விடமுலையுண்டு உண்டமுலையாளுக்கு
வைகுந்தமருளிய பெருமை விளக்கக் கண்டேன் - நன்றி.
என்னை இழந்தபின் தன்னைப் பணயம் வைத்தானா - அன்றி
தன்னை இழந்தபின் என்னைப் பணயம் வைத்தானா - என்ற
பின்னவளின் துகிலது அரக்கனுரியக் கண்ட விடமுலையுண்டோன்,
துகிலது தந்து மானம் காத்த பெருமை அன்று;
துகிலைத் தானேயுரிந்து கொண்டு, பெண்மைத்
தன்னையே காட்சி பொருளாக்கி நிற்கும் அவலம் இன்று;
பெண்மைக்கும் தாய்மைக்கும் இழுக்கு நேர்தல்
பேரழிவின் சின்னங்களெனப் பெரியோர் சொல் - எனப்
பொருமி யுரைத்தச் சொற்கள் மிகையாயின், மன்னிக்க.
விடத்தின் விடத்தன்மையாய வைகுந்தன்
விடமுலையுண்டு உண்டமுலையாளுக்கு
வைகுந்தமருளிய பெருமை விளக்கக் கண்டேன் - நன்றி.
என்னை இழந்தபின் தன்னைப் பணயம் வைத்தானா - அன்றி
தன்னை இழந்தபின் என்னைப் பணயம் வைத்தானா - என்ற
பின்னவளின் துகிலது அரக்கனுரியக் கண்ட விடமுலையுண்டோன்,
துகிலது தந்து மானம் காத்த பெருமை அன்று;
துகிலைத் தானேயுரிந்து கொண்டு, பெண்மைத்
தன்னையே காட்சி பொருளாக்கி நிற்கும் அவலம் இன்று;
பெண்மைக்கும் தாய்மைக்கும் இழுக்கு நேர்தல்
பேரழிவின் சின்னங்களெனப் பெரியோர் சொல் - எனப்
பொருமி யுரைத்தச் சொற்கள் மிகையாயின், மன்னிக்க.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
சேலைக்கின்றோர் வேலையில்லை--
மலை மலையாய் கடைகளில் குவிந்தாலும்--
மாலை pOl aNiயாய், தோளிலே சரிந்து,
கலையழகு போய், கொலையாய்க் காணும்--
வலை போலும், வடிவிழந்தும் பரதவிக்கும்
சேலை--மானம் மறைக்காது எங்கோ சென்ற அ-
-பலை, அனாகரிகத்திற்கு பலியானதே அவள்
நிலை--எல்லாம் catwalk-ஆல் வந்த வினை!
மலை மலையாய் கடைகளில் குவிந்தாலும்--
மாலை pOl aNiயாய், தோளிலே சரிந்து,
கலையழகு போய், கொலையாய்க் காணும்--
வலை போலும், வடிவிழந்தும் பரதவிக்கும்
சேலை--மானம் மறைக்காது எங்கோ சென்ற அ-
-பலை, அனாகரிகத்திற்கு பலியானதே அவள்
நிலை--எல்லாம் catwalk-ஆல் வந்த வினை!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
Ended on the first day of the New Year.
Started again on the first day of the New Year !
அனைவர்க்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !
430
௬ . இவை
அம்பலத்தான் துணை; அரங்கன் துணை;
அம்மன் துணை; ஆதவன் துணை;
தும்பிக்கையான் துணை; தண்டபாணியும் துணை !
எம்மில் எழுந்தருளி எல்லோர்க்கும் அருள்வீரே !
ப்ரத்யக்ஷம் பாலா,
14.04.2015.
.
Ended on the first day of the New Year.
Started again on the first day of the New Year !
அனைவர்க்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !
430
௬ . இவை
அம்பலத்தான் துணை; அரங்கன் துணை;
அம்மன் துணை; ஆதவன் துணை;
தும்பிக்கையான் துணை; தண்டபாணியும் துணை !
எம்மில் எழுந்தருளி எல்லோர்க்கும் அருள்வீரே !
ப்ரத்யக்ஷம் பாலா,
14.04.2015.
.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
வரி வரியாய் எழுதிட வாரண முகத்தோன்
விரிவாய் வரைந்திட விரி சடையோன்--
தெரிந்துரைத்திட திருமகள் துணைவன்
வாக்தேவி, வணிகர் தொழு தேவி, துர்கையுமே--
காக்கும் தெய்வங்களே! பாக்களெமக்கருள்வீர்!
விரிவாய் வரைந்திட விரி சடையோன்--
தெரிந்துரைத்திட திருமகள் துணைவன்
வாக்தேவி, வணிகர் தொழு தேவி, துர்கையுமே--
காக்கும் தெய்வங்களே! பாக்களெமக்கருள்வீர்!
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
புத்தாண்டுக்கு புது வரவேற்பு !!
மாறா ,உன் கௌசிகன் காலத்து கணைகள்
மாறாமல் இன்றும்அப்படியே வைத்திருக்கின்றாய் !!
கொசு அடிக்க பெரும் கோடாலி எதற்கு ?
முசுக்கட்டை நசுக்க ரோடு ரோலர் எதற்கு ?
இக்காலத்து யுவர்களிடம் விசுவாமித்திரன் தீரமில்லை
மிக்க அறிவாற்றலில் தலை தனியே வளர்ந்ததால்
பணி புரியும் நங்கையர்கள் மேனகை ஆக விரும்பாவிடினும்
கணினியும் கை பேசியும் அவர்களை ஆட்கொண்டு விட்டன
உன் கணைகள் வீச்சில் அவர்கள் உருக்குலைந்து போகிறார்கள்
மென் மலர் இதழ்கள் நசுங்கி கசங்கி வதங்கி ….
நாடெலாம் நிகழும் பெண் கொடுமை ஒழிக்க உன்னையே
நாடலாம் என்று எண்ணியே இவ்வேண்டுகோள்
மன்மதா,புத்தாண்டாய் இன்று மலரும் மன்மதனே
உன்னை வரவேற்பதில் எச்சரிக்கையும் உண்டு காண்
உன் மலர் அம்புகள் வீர்யத்தை குறை
தடுப்பூசி Vaccine தயாரிக்கும் அடிப்படையில் - இல்லையேல்
விடமுண்ட முக்கண்ணனை நாங்கள் வேண்டிட வேண்டி வரும்.

431
புத்தாண்டு போலுண்டோ ?
நகைகள் ! புதுத்துணி ! தித்திப்பு !
கல்லாப்பெட்டிகள் நிரம்பின.
ப்ரத்யக்ஷம் பாலா,
15.04.2015.
புத்தாண்டு போலுண்டோ ?
நகைகள் ! புதுத்துணி ! தித்திப்பு !
கல்லாப்பெட்டிகள் நிரம்பின.
ப்ரத்யக்ஷம் பாலா,
15.04.2015.
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
நகை வாங்கிய நங்கை முகத்தில் புன்னகை
தோழிக்கு பொங்கும் மனப் பகை
பூட்டை உடைப்பவன் புன்முறுவல் பூத்தான்
தெருவில் தாலி அறுப்பவன் குதூகலித்தான்
போலீஸ்காரன்சத விகித கணக்கு போட்டான்
குடுகுடுப்பைக்கரனுக்கும் குஷி
டயபடிஸ் மருந்து தயாரிப்பாளன் மனம் மகிழ்ந்தான்
கவிஞனுக்கு சில வரிகள் எழுத ஒரு சான்ஸ்
ஆக மன்மதன் வருகை அனைவருக்கும் இன்பம்
தோழிக்கு பொங்கும் மனப் பகை
பூட்டை உடைப்பவன் புன்முறுவல் பூத்தான்
தெருவில் தாலி அறுப்பவன் குதூகலித்தான்
போலீஸ்காரன்சத விகித கணக்கு போட்டான்
குடுகுடுப்பைக்கரனுக்கும் குஷி
டயபடிஸ் மருந்து தயாரிப்பாளன் மனம் மகிழ்ந்தான்
கவிஞனுக்கு சில வரிகள் எழுத ஒரு சான்ஸ்
ஆக மன்மதன் வருகை அனைவருக்கும் இன்பம்
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
நாளை
மன்மதன் வருகை யாவர்க்கும் இன்பமே - அடுத்து வருவது
துன்முகி - துர்முகி என்றும் கூறுவர் - எனவே
மன்மத லீலைகள் அளவோடு நிற்குமாயின்
துன்முகி துன்பம் தாராது - கேளீர்
அளவுக்கு மீறி வீரியம் காட்ட நேரின்
விளைவு விபரீதமாகி - சாம்பரணிவோன்
நுதற்கண் திறந்து நீரும் மிஞ்சாமற்போம் - எச்சரிக்கை
(மன்மத லீலைகள் - தவறாகப் பொருள் கொள்ளவேண்டாம்.
தமிழில் ஓர் வழக்கு - நித்ய கண்டம் பூர்ணாயுசு -
உலகம் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கின்றது. அதைத்தான்
லீலைகள் என்று கூறினேன்.)
துன்முகி - துர்முகி என்றும் கூறுவர் - எனவே
மன்மத லீலைகள் அளவோடு நிற்குமாயின்
துன்முகி துன்பம் தாராது - கேளீர்
அளவுக்கு மீறி வீரியம் காட்ட நேரின்
விளைவு விபரீதமாகி - சாம்பரணிவோன்
நுதற்கண் திறந்து நீரும் மிஞ்சாமற்போம் - எச்சரிக்கை
(மன்மத லீலைகள் - தவறாகப் பொருள் கொள்ளவேண்டாம்.
தமிழில் ஓர் வழக்கு - நித்ய கண்டம் பூர்ணாயுசு -
உலகம் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கின்றது. அதைத்தான்
லீலைகள் என்று கூறினேன்.)
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
இன்முகன் சண்முகனை நினைந்தால்
துன்முகியும் துன்பம் தருவளோ?
அளவு மீறியந்த அரனை நினைந்தால்
களவென அவன் களியில் திளைப்போமே!
மனமதின் பாங்கு மட்டும் இந்த
மன்மத ஆண்டிலும், அந்த இறைத்-
தன்மை தெரிந்து நடந்தால்-- நாமும்
தன்னை மறந்திடுவோம், உய்வோமே...
துன்முகியும் துன்பம் தருவளோ?
அளவு மீறியந்த அரனை நினைந்தால்
களவென அவன் களியில் திளைப்போமே!
மனமதின் பாங்கு மட்டும் இந்த
மன்மத ஆண்டிலும், அந்த இறைத்-
தன்மை தெரிந்து நடந்தால்-- நாமும்
தன்னை மறந்திடுவோம், உய்வோமே...
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
முன்னோட்டம்
கடைத் தெருவுக்குப் போனால் - நாலு
கடை ஏறி இறங்கி நல்ல பொருள் வாங்கலாம்;
நகைக் கடையிலே நகையை அணிந்து பார்க்கலாம்;
துணிக் கடையிலே உடையை அணிந்து பார்க்கலாம்;
ஓட்டலிலே ருசி பார்த்துவிட்டு உண்ணலாம் - எந்தப்
படம் போகலாமென ட்ரெய்லர் பார்த்து முடிவெடுக்கலாம் - ஆனால்
பெண்ணை ஆணும், ஆணைப் பெண்ணும் தெரிந்தெடுப்பது,
பெண் பார்த்தலோடு நின்றால் பரவாயில்லையே;
பெண்ணை ஆணும், ஆணைப் பெண்ணும்
ருசி பார்த்துவிட்டுத் தெரிந்தெடுக்கும் வழக்கம்,
கேள்விப்பட்டதில்லையே - ஆனால் இன்று நடக்கின்றதே;
லிவ்-இன் என்று பெயராம் - சேர்ந்து வாழலாம் - ஆனால்
பந்தமேதுமில்லை - விவாகரத்துத் தொல்லையில்லை;
பெண் கருவுற்றால் ஆணுக்குப் பொறுப்பில்லை;
மேலே எழுதிக்கொண்டே போகலாம்;
போதுமிந்தப் புலம்பல் - நீ சாதிக்கப்போவதொன்றுமில்லை;
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை; என்னைச் சொல்லிக் குற்றமில்லை;
காலம் செய்த கோலமடி; கடவுள் செய்த குற்றமடி.
எங்கோ பழைய பாடலொன்று ஒலிக்கின்றது.
கண்ணோரம் ஈரமா? - தடவிப் பார்த்துக் கொள்கின்றேன்.

432
உலகு
நற்கல்லைக் கடைந்தெடுத்து கடவுளுரு காண்பான் ;
பெற்றவனாய் அகமகிழ்ந்து பெருமையும் கொள்வான்.
உற்றயிடம் சேர்த்தபின் உலகதைப் பணியும்போது
சற்றும் தொடயியலான் செதுக்கியோனவனே எனினும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
16.04.2015.
உலகு
நற்கல்லைக் கடைந்தெடுத்து கடவுளுரு காண்பான் ;
பெற்றவனாய் அகமகிழ்ந்து பெருமையும் கொள்வான்.
உற்றயிடம் சேர்த்தபின் உலகதைப் பணியும்போது
சற்றும் தொடயியலான் செதுக்கியோனவனே எனினும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
16.04.2015.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
செதுக்கியபொழுதே தொட்டுவிட்டானே, அருள் பெற்று விட்டானே--
குதப்புவதும், அவனைக் காணும் வழி இதே எனக் கூறுபவர் இருக்க?
உளியே அவனொளியை வெளிக்கொணரும் பூசைப் பொருளாய்
எளியேனென்றான், ஒரு கணத்திலவன் புன்னகை கண்டான்
குதப்புவதும், அவனைக் காணும் வழி இதே எனக் கூறுபவர் இருக்க?
உளியே அவனொளியை வெளிக்கொணரும் பூசைப் பொருளாய்
எளியேனென்றான், ஒரு கணத்திலவன் புன்னகை கண்டான்

-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
433
யதார்த்தம்
காட்டாற்றில் வெள்ளம்.
தடுக்க எழுந்தது ஒரு பேரணை.
முளைத்தது ஒரு கோயிலும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
17.04.2015.
யதார்த்தம்
காட்டாற்றில் வெள்ளம்.
தடுக்க எழுந்தது ஒரு பேரணை.
முளைத்தது ஒரு கோயிலும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
17.04.2015.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
434
ஓரூர் கதை
ஊருக்குள் பெண்களெலாம் ஒருவனையே சுற்றிவந்து
ஊர்சிரிக்க உளம் பரந்து ஓடியாடிக் களித்திருக்க
ஊரின் இளம் காளைகள் உளம்கசந்து கடுகடுத்து
ஊர்துறந்து இணைதேடி ஒன்றுகூடிப் பரந்தனரே !
ப்ரத்யக்ஷம் பாலா,
18.04.2015.

435
வருவான் !
கருத்தில் திரைசூடி குமைந்து கிடக்காதே !
கருத்த திரை கிழி ! பொன்னுலகு தெரியும் !
கந்தா ! கருணா ! எனக் கதறு ! விளித்திரு !
வந்தே அருள்வான் ! வரும்வரை காத்திரு !
ப்ரத்யக்ஷம் பாலா,
19.04.2015.

436
இறைவன் துணை
அறுசுவை உண்டியும் விடமாய் மாறலாம்.
சிறுவனின் கூத்தும் சிரசைத் தாக்கலாம்.
வெறுப்பானும் தலை அறுக்க முயலலாம்.
இறைவன் துணையொடு எதையும் தடுக்கலாம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
20.04.2015.
இறைவன் துணை
அறுசுவை உண்டியும் விடமாய் மாறலாம்.
சிறுவனின் கூத்தும் சிரசைத் தாக்கலாம்.
வெறுப்பானும் தலை அறுக்க முயலலாம்.
இறைவன் துணையொடு எதையும் தடுக்கலாம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
20.04.2015.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
437
உழைப்பின் சிறப்பு
ஒருதொழில் செய் உவகை பிறக்கும்.
இருதொழில் செய் இல்லம் தழைக்கும்.
உருதொழில் செய் உலகம் சிறக்கும்.
குருதொழில் செய் குவலயம் போற்றும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
21.04.2015.
உழைப்பின் சிறப்பு
ஒருதொழில் செய் உவகை பிறக்கும்.
இருதொழில் செய் இல்லம் தழைக்கும்.
உருதொழில் செய் உலகம் சிறக்கும்.
குருதொழில் செய் குவலயம் போற்றும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
21.04.2015.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
இளவேனில்
இளவேனிற் காலம் வந்ததென்று பூக்களுக்கு யார் சொன்னது?
இளமை வந்ததென்று விலங்குகளுக்கு யார் சொன்னது?
பிறந்தாய் நீயென குழவிக்கு யார் சொன்னது?
சொல்லித் தெரியாது - சொல்லாமல் விளங்கும்;
சொன்னதால் நான் யாரென்று என்னைக் கேட்டேன் - விடை
சொல்வதற்கு ஆருமில்லை விளங்காது நின்றேன்;
பகுத்தறிவென்று வாதங்கள் செய்திடும் பகுத்தறிவாளரே! - உமது
பகுத்தறிவு வந்ததெங்ஙனமென அறிந்திடுவீரோ?
பகுப்பதற்கு முழுமையொன்றிருந்தாலன்றோ பகுக்கவியலும்?
முழுமையினை முழுமையே உணருமோ?
முழுமை தன்னைத் தானேயறிந்திடவே பகுந்ததென்பர்;
முழுமையை பகுதி உணர்தலே பகுத்தறிவன்றோ?
முழுமையை பகுதி உணர்ந்தபின் பகுத்தறிவேது?
முழுமையே எஞ்சி நின்றது என்றைக்கும்.
pUrNamadaH, pUrNamidaM
pUrNasya pUrNamudacyatE
pUrNasya pUrNamAdAya pUrNamEva avaSishyatE
OM SantiH SantiH SantiH

438
காசேதான் வேண்டுமையா !
வாயிலில் செருப்புவைக்க வெட்டிடு இரண்டு ரூபாய்.
கோயிலின் உள்ளேசெல்ல கவுண்டரில் ஐந்து ரூபாய்;
வரிசையில் கடவுள் காண வழங்கிடு பத்து ரூபாய்.
எரிதீபத் தட்டில் போட எடுத்திடு பாக்கி ரூபாய் !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.04.2015.
காசேதான் வேண்டுமையா !
வாயிலில் செருப்புவைக்க வெட்டிடு இரண்டு ரூபாய்.
கோயிலின் உள்ளேசெல்ல கவுண்டரில் ஐந்து ரூபாய்;
வரிசையில் கடவுள் காண வழங்கிடு பத்து ரூபாய்.
எரிதீபத் தட்டில் போட எடுத்திடு பாக்கி ரூபாய் !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.04.2015.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
என்புக்கூடு

என்புக்கூடிரண்டு காணீர்;
அன்புக்கு இலக்கணம் கூறக் காணீர்;
இன்பமே கண்டிராத வாழ்வைக் காணீர்;
துன்பத்தைத் துன்பமென்றுணராமை காணீர்;
மனிதனின் கொடுமைகளுக்கு இலக்கானோர் காணீர்;
மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும்,
நாட்டின் பெயராலும், மொழியின் பெயராலும்,
நாளும் நடந்துவரும் போரில் நலிந்தோரைக் காணீர்;
இதற்கோர் விடிவு காலம் இல்லையோ, இறைவா?
இதுவும் உன் லீலையென்று நான் ஒதுக்கவோ?
இவர் கண்ணீரைத் துடைப்பதற்கோர் வழியில்லையோ?
இன்னும் நீ மனமிரங்காதிருப்பதும் முறையோ?
எங்குங் கொள்ளையடித்துப் பொருள் சேர்த்து,
கங்குல் பகலென்றறியாது கும்மாளம் ஓர் சாரார் போட - கிழிந்த
கோடியுடுக்கவுமில்லாது பெரும்பாலோர் அழுது நிற்க,
தேடித் தேடிக் காணாதுன்னை, நம்பிக்கை நான் இழக்கவோ?
தருமம் குலையும்போதெல்லாம்,
தவறாது நான் வருவேனென நீ சொன்னது பொய்யோ?
அதருமமே ஆட்சி நடத்தும் அவலம் போதுமய்யா, போதும்;
அநீதி அழிந்திட, அமைதி தழைத்திட, சடுதியில் வாராய், என்மேலாணை.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Govindan,
A moving poem.
துன்பத்தைத் துன்பமென்றுணராமை காணீர்...that one line is precious enough...
A moving poem.
துன்பத்தைத் துன்பமென்றுணராமை காணீர்...that one line is precious enough...
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
439
போட்டி
தோல்வியில் கலங்காதீர்; துவண்டு கிடக்காதீர் !
தோல்வியைக் கொண்டீரா ? தந்துள்ளீர் வெற்றியை !
வெற்றியும் தோல்வியும் வட்டமிட்டே வருமையா.
சற்றே பொறுத்திடுவீர்; வாகைசூடும் வாய்ப்புவரும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
23.04.2015.

440
இரண்டாம் உலகப்போர்
(1939 to 1945)
பெருமரத்தின் கிளைகளிலே பெரும் குரங்குக் கூட்டங்கள்.
ஒருகிளையின் குரங்கெல்லாம் அதுவேதான் உலகென்றன.
அக்கிளை முறிந்தபோதும் அவையதை விடவேயில்லை.
அக்கினி எறும்புக்கூட்டம் அக்கதையை முடித்தது.
ப்ரத்யக்ஷம் பாலா,
24.04.2015.

Last edited by Pratyaksham Bala on 24 Apr 2015, 20:55, edited 1 time in total.
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
பெரு மரத்தின் ஒரு விதை விழுந்தது
சிறு முளையாய்க் கிளம்பிச் செடியானது
விரி கிளைகளோடு மரமுமாகி நின்றது
வரி வரியாய்க் குரங்குகள் வந்தமர்ந்திடவே--
வந்தன அவை மந்தி மந்தியாகவே--அ-
-மர்ந்தன அவை போல் விரிந்த அவற்றில்--
மந்திரமிதிலென்ன? வாரிசுகளே யாமன்றோ?
எந்தை தந்தை முந்தையர் இடமிதறியீரோ?
குரங்கினின்றும் பிறந்தவன் மனிதன் என்கிறீர்--
நீங்கள் வரை குல மரப் படங்களையெல்லாம்
எங்கனம் மறந்திடுவீரோ? எங்கு பார்த்தாலும்
தங்களின மரக் கிளைகள் விழைந்திருப்பீரே--
எங்கள் குலத்தினரே!

கவனிக்க.
விரிவான தலைப்பு இப்போது #440-ல் கொடுக்கப்பட்டுள்ளது !
விரிவான தலைப்பு இப்போது #440-ல் கொடுக்கப்பட்டுள்ளது !
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
மனித குலத்தின் ஒரு கிளையையே வெட்டித் தள்ளுவதில், இவ்வுலகையே அழிக்க முனைந்த பெரும் போர் பற்றிய நல்லதோர் கவிதை உமது...
நீர் விளக்குவதற்கு முன், உம் கவிதை மற்றோர் விதமாக என்னைத் தாக்கியது. அவ்வளவே. நானும் விளக்கம் தர வேண்டும். ச ந்ததியர் பலரும் .ஃபாமிலி ட்ரீ என அலையும் போது, எந்த அளவு முன்னோர்கள் ஊர்களுக்கு நாம் சென்றிருக்கிறோம் என்ற வினாவே என் கவிதைக்குக் காரணமானது...
நீர் விளக்குவதற்கு முன், உம் கவிதை மற்றோர் விதமாக என்னைத் தாக்கியது. அவ்வளவே. நானும் விளக்கம் தர வேண்டும். ச ந்ததியர் பலரும் .ஃபாமிலி ட்ரீ என அலையும் போது, எந்த அளவு முன்னோர்கள் ஊர்களுக்கு நாம் சென்றிருக்கிறோம் என்ற வினாவே என் கவிதைக்குக் காரணமானது...
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
.
முளைத்தது ஒரு புது நகர்.
ஒவ்வொரு குடிக்கும் கிடைத்ததோர் வீடு.
கடவுளுக்கும் ஒன்று !
.
முளைத்தது ஒரு புது நகர்.
ஒவ்வொரு குடிக்கும் கிடைத்ததோர் வீடு.
கடவுளுக்கும் ஒன்று !
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
442
கஞ்சா அடிமையின்
மனைவியின் கதறல்
கண் திறந்து கிணற்றில் குதிப்பதும் அறிவோ ?
புண்படும் முன்னே தடுப்பதும் தவறோ ?
தன் நிலை அறியாது தவிப்பதும் ஏனோ ?
என் மனம் கசிந்து அழுவதும் வீணோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
26.04.2015.
கஞ்சா அடிமையின்
மனைவியின் கதறல்
கண் திறந்து கிணற்றில் குதிப்பதும் அறிவோ ?
புண்படும் முன்னே தடுப்பதும் தவறோ ?
தன் நிலை அறியாது தவிப்பதும் ஏனோ ?
என் மனம் கசிந்து அழுவதும் வீணோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
26.04.2015.
Last edited by Pratyaksham Bala on 26 Apr 2015, 13:21, edited 1 time in total.
-
- Posts: 3051
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
'முளைத்தது ஒரு புது நகர்.
ஒவ்வொரு குடிக்கும் கிடைத்ததோர் வீடு.
கடவுளுக்கும் ஒன்று !'
என்பாவம் நான் செய்தேன்
என புலம்பியது கொடிக் கம்பு
தஞ்சாவூரான்
26 04 2015
'
ஒவ்வொரு குடிக்கும் கிடைத்ததோர் வீடு.
கடவுளுக்கும் ஒன்று !'
என்பாவம் நான் செய்தேன்
என புலம்பியது கொடிக் கம்பு
தஞ்சாவூரான்
26 04 2015
'
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
இயற்கையின் சீற்றம்
வீடில்லாதவனுக்கு வீடு கிடைத்தது ஓரிடம் - இருந்த
வீடும் தரைமட்டமானது இன்னோரிடம்;
பேறில்லாதவனுக்கு பேறு கிடைத்தது ஓரிடம் - இருந்த
பேறும் புதைந்து போனது இன்னோரிடம்;
இயற்கையின் விளையாட்டா? சீற்றமா? - அன்றி
இயற்கையின் இயல்பறியாது,
இயற்கையோடு விளையாடும் மனித
இனத்திற்கு, இன்னுமோர் எச்சரிக்கையா?
வீடும் தரைமட்டமானது இன்னோரிடம்;
பேறில்லாதவனுக்கு பேறு கிடைத்தது ஓரிடம் - இருந்த
பேறும் புதைந்து போனது இன்னோரிடம்;
இயற்கையின் விளையாட்டா? சீற்றமா? - அன்றி
இயற்கையின் இயல்பறியாது,
இயற்கையோடு விளையாடும் மனித
இனத்திற்கு, இன்னுமோர் எச்சரிக்கையா?
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
எல்லாம் அவன் செயல்
என் வீடு, என் நாடு, என் இனம், என் மொழி,
என் மதம், என் இறைவனென,
'என்னை' முதலில் வைத்திடும் உலகோரே!
என்ன ஊர், என்ன நாடு, என்ன இனம், என்ன மொழி,
என்ன மதம் இறைவனுக்கென்றறிவீரோ?
எந்நாட்டவற்கும் இறைவனன்றோ அவன்?
என்றும் அழிவில்லா மங்களமுடைத்தமையால் சிவமன்றோ?
எங்கும் பரந்து, நிறைந்தமையால் விஷ்ணுவன்றோ?
எவ்வுருவுமில்லா, அருவமுமில்லா அனைத்துருவானவனன்றோ?
பட்டையும் நாமமுமிட்டு,
பல்வேறு ஆடையணிகலன்களிட்டு, ப்ராண்டாக்கி (brand)
முட்டிக்கொள்ளும் மடமையென்னே!
பெற்றவளற்றவனாகிலும் - அனைத்தையும் தான்
பெற்று, தானே பேணி, தானே அழித்து,
தாயாகி, தந்தையாகி, மகவாகி
தன்னந்தனியாக நிலைத்திருக்கும் அநாதையை,
அவன் என்பதா? அவளென்பதா? அஃதென்பதா?
அனைத்து ஒலிகளும், அனைத்து மொழிகளும்,
அனைத்து பூதங்களும், அனைத்து தத்துவங்களுமான
அவன் போற்றியும், அவன் சொல்லும், செயலுமன்றோ!
என் செயல் இதில் இம்மியளவும் இல்லையே;
எல்லாம் அவன் செயல்.
யாதும் ஊரே, யாவரும் கேளிர்.

என்ன நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் பிரெஞ்சு கவிஞர் VOLTAIRE.நில நடுக்கம் பற்றி இவர் எழுதியுள்ள கவிதையின் தமிழாக்கம் Critics and Rasikas எனும் பகுதியில் வெளியாகியிருக்கிரது.
என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் பிரெஞ்சு கவிஞர் VOLTAIRE.நில நடுக்கம் பற்றி இவர் எழுதியுள்ள கவிதையின் தமிழாக்கம் Critics and Rasikas எனும் பகுதியில் வெளியாகியிருக்கிரது.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
443
இப்படியும் ஓர்
ஆசிரம அமைப்பாளர்
வேலையற்ற ஒருவருக்கு வேடமிட்டு போற்றுவார்;
மாலையிட்டு மிரட்டிவைத்து மந்திரியாய் மாறுவார் !
மேலைநாட்டில் கூட்டம் போட்டு மந்தைகளைக் கூட்டுவார்;
காலைமுதல் மாலைவரை கட்டுகட்டாய் ஈட்டுவார் !
ப்ரத்யக்ஷம் பாலா,
16.04.2012.
இப்படியும் ஓர்
ஆசிரம அமைப்பாளர்
வேலையற்ற ஒருவருக்கு வேடமிட்டு போற்றுவார்;
மாலையிட்டு மிரட்டிவைத்து மந்திரியாய் மாறுவார் !
மேலைநாட்டில் கூட்டம் போட்டு மந்தைகளைக் கூட்டுவார்;
காலைமுதல் மாலைவரை கட்டுகட்டாய் ஈட்டுவார் !
ப்ரத்யக்ஷம் பாலா,
16.04.2012.
-
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
அடுத்தவன்
அடுத்தவன் வீடு எரிந்தபோது, நான் சும்மாயிருந்தேன் - எரிவது
அடுத்தவன் வீடென, அடுத்து எரியப்போவது என் வீடெனத் தெரிந்திருந்தால்,
அடுத்தவன் வீடு எரியும்போதே, அணைக்க உதவியிருப்பேனே - புலம்பல்.
பிணத்தைச் சுமந்து செல்வோன், நன்றி சொன்னான் கடவுளுக்கு - தான்
பிணமல்லவென, அடுத்த நாள், அவன் மரித்தபோது கடவுள் வருவாரோ - அவன்
பிணத்தைச் சுமக்க?
நேற்று கேதார்நாத்தை வெள்ளம் மூழ்கடித்தது;
இன்று நேபாளத்தில் நிலநடுக்கம் ஊர்களைத் தரைமட்டமாக்கியது;
எது நடந்தாலும் நம்மூரிலில்லையென ஓர் நிம்மதி.
என் வீட்டில் குப்பையிருக்கலாகாது - வெளியே பெருக்கித்தள்ளு;
என் குடியிருப்பில் குப்பை கூடாது - அடுத்த ஊரில் கொட்டு;
என் ஊரும், அடுத்தவனுக்கு, அடுத்த ஊரே - நினைவுண்டோ?
மனிதனென்ன, விலங்கென்ன, பறவைகளென்ன, நீர்வாழ்வனவென்ன,
மரம், செடி, கொடிகளென்ன, ஒற்றை செல் பிராணிகளென்ன,
உலகனைத்தும் ஒரு டீயென்யே என உணர்வுண்டோ?
அந்த டீயென்யேக்குள் இயக்கமாய்த் திகழ்வதென்ன?
இந்தப் பகுதி கால், இந்தப் பகுதி கை, அந்தப் பகுதி இதயமென,
ஏதோ, ப்ரொக்ராம் செய்யப்பட்ட, ஸெண்ட்ரல் ப்ராஸஸ்ஸிங் யூனிட் போன்று,
கணக்குத் தவறாது நடக்கும் விந்தையென்ன? - இந்த
கணிப்பொறியின் ப்ரொக்ராம்மர் யாரென வியந்ததுண்டோ?
கடவுளெனக் கூறுங்கள், இயற்கையெனுங்கள் - எல்லாம் வெறும் பெயரே.
இயக்கமெனும் அடிப்படையில், நம்முடைய 'நான்' உணர்வு ஒன்றன்றோ?
இதைத் தெரிந்துகொள்ளுமுன்வரைதான், என் மதம், என் நாடு என்ற எண்ணமெல்லாம்;
தெரிந்தபின், மறைந்துபோகும் இந்த ஆங்காரம்; எஞ்சி நிற்கும் அஃதொன்றே.
வாரீர், அதனை இன்று கண்டுகொள்வோம்,
வஞ்சனை, சூதுகளினின்று விலகிடுவோம்;
வேற்றுமையற்ற ஒற்றுமையில் நிலைப்போம்; - ததாஸ்து.

Govindan
அருமை.
என் ஊரும் அடுத்தவனுக்கு அடுத்த ஊரே = நல்ல சொல்லாட்சி
"கணக்கு தவறாது நடக்கும் விந்தை என்ன "= கணக்கு தவறினால் தாங்காது இவ் வுலகம் இல்லை இல்லை . இவ்வுலகமே இருக்காது.சற்றே தடுமாறினாலேயே அனைத்தும் நிலை குலைந்து போகிறதே !
அருமை.
என் ஊரும் அடுத்தவனுக்கு அடுத்த ஊரே = நல்ல சொல்லாட்சி
"கணக்கு தவறாது நடக்கும் விந்தை என்ன "= கணக்கு தவறினால் தாங்காது இவ் வுலகம் இல்லை இல்லை . இவ்வுலகமே இருக்காது.சற்றே தடுமாறினாலேயே அனைத்தும் நிலை குலைந்து போகிறதே !
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
கோவிந்தரே...
இதயம் தொடும் உம் சொற்கள்...
ஆழ உழுது அறிவுப் பயிர் வளர்க்கிறீர்--
பாழாகிப் போகும் உலக இயல்புகளின்
நாடி பார்க்கிறீர், உலகோர் நாடகமாடுவதையும்
சாடி, பலதும் நாடும் கூத்தையும் தான்--
நால்வரில் நல்ல எண்ணமிருந்தால்--அது
கால்வாயாய் ஓடி, நதியாய்ப் பிரவகிக்க--
பால் மணம் மாறாப் பிள்ளகள் என இருந்திட--
சால் மிகு மனம் வேண்டுமே, செய்கையுமே!
'தான்' எனும் எண்ணமொடு திமிர் கொண்டலைந்து
வான் கோழி நடை பயிலும் மண்ணுலகத்தோருக்கு
வான் ஏது பெய்யும், கோள்களென்ன கூறும்? இம-
--வான் மகளும் மணாளனும் ஆடிக்களைப்பது கண்டே?