Nambi and NAchiyAr
-
- Posts: 3633
- Joined: 04 Aug 2011, 13:54
Nambi and NAchiyAr
A friend wants to know how the words 'Nambi' and NAchiyAr' originated.
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nambi and NAchiyAr
Nambi--pUrNA, the complete one as a teacher and person, complete with dayA and kshamA (kindness and forgiveness). The consort of the goddess (nAchiyAr) at nAchiyAr kOyil.
Wish Krishna (skrmech) were here to give a beautiful explanation. He hardly posts now...

- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: Nambi and NAchiyAr
This is just my theory, I am not knowledgeable at all on the subject of origin /etymology of Tamil words.
The suffix 'pi' is used to denote a younger male person.
tampi = tan + pi = one's own younger brother
umpi / umbi = your younger brother (Andal, addressing Balarama in tiruppavai says: umbiyum neeyum urangaelOr empAavAi)
Similarly the suffix 'tai' to denote father is used in words like tantai, entai (our father), etc.
So, Nambi as a combination of "nam + pi" would have stood for an endearing young fellow whom everybody would have loved to treat as a younger brother. The Lord of Tirukkurungudi earned the sobriquet of Nambi after he appeared as a young boy who assisted Ramanuja in his daily religious duties, including helping the seer wear his 12 tiruman (nAmam) marks.
Coming to nAcciyAr, taking its simpler form nAcci could have come about as a combination of nam + Acci . The 'Ar' suffix after nAcci adds extra respectability.
Acci means a respectable or elderly lady. "nam Acci" would have stood for someone whom everyone respected / bowed to.

Sridhar,
An excellent post! Why did I not think of you! Then again, you do not post as much these days...

- Posts: 4201
- Joined: 21 May 2010, 16:57
Re: Nambi and NAchiyAr
.
(1) 'நம்பி' என்ற சொல் இறைவனைக் குறிக்கும்.
சுந்தரர் இயற்றிய தேவாரத்தில் காணப்படும் “நம்பி” எனும் திருப்பதிகம் இதோ :-
1 மெய்யை முற்றப் பொடிப் பூசி ஒர் நம்பி, வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி,
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி, கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி,
செய்ய நம்பி, சிறு செஞ்சடை நம்பி, திரிபுரம் தீ எழச் செற்றது ஓர் வில்லால்
எய்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
உரை
2 திங்கள் நம்பி, முடிமேல்; அடியார் பால் சிறந்த நம்பி; பிறந்த உயிர்க்கு எல்லாம்
அம் கண் நம்பி; அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி; குமரன் முதல்-தேவர்-
தங்கள் நம்பி; தவத்துக்கு ஒரு நம்பி; “தாதை” என்று உன் சரண் பணிந்து ஏத்தும்
எங்கள் நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
உரை
3 வருந்த அன்று மதயானை உரித்த வழக்கு நம்பி, முழக்கும் கடல் நஞ்சம்
அருந்தும் நம்பி, அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி, பொருளால் வரு நட்டம்
புரிந்த நம்பி, புரிநூல் உடை நம்பி, பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி
இருந்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
உரை
4 ஊறும் நம்பி அமுதா; உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி; தெரியும் மறை அங்கம்,
கூறும் நம்பி, முனிவர்க்கு; அருங்கூற்றைக் குமைத்த நம்பி; குமையாப் புலன் ஐந்தும்
சீறும் நம்பி; திரு வெள்ளடை நம்பி; செங்கண் வெள்ளைச் செழுங் கோட்டு எருது என்றும்
ஏறும் நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
உரை
5 “குற்ற நம்பி, குறுகார் எயில் மூன்றை, குலைத்த நம்பி, சிலையா வரை கையில்
பற்றும் நம்பி, பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி” எனப் பாடுதல் அல்லால்
மற்று நம்பி! உனக்கு என் செய வல்லேன்? மதியிலேன் படு வெந்துயர் எல்லாம்
எற்றும் நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
உரை
6 அரித்த நம்பி, அடி கை தொழுவார் நோய்; ஆண்ட நம்பி, முன்னை; ஈண்டு உலகங்கள்
தெரித்த நம்பி; ஒரு சே உடை நம்பி; சில்பலிக்கு என்று அகம் தோறும் மெய் வேடம்
தரித்த நம்பி; சமயங்களின் நம்பி; தக்கன் தன் வேள்வி புக்கு அன்று இமையோரை
இரித்த நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
உரை
7 பின்னை நம்பும் புயத்தான் நெடுமாலும் பிரமனும் என்று இவர் நாடியும் காணா
உன்னை நம்பி! ஒருவர்க்கு எய்தல் ஆமே, உலகு நம்பி உரை செய்யுமது அல்லால்?
முன்னை நம்பி; பின்னும் வார் சடை நம்பி; முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது
என்னை? நம்பி! எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
உரை
8 சொல்லை நம்பி; பொருள் ஆய் நின்ற நம்பி; தோற்றம், ஈறு, முதல், ஆகிய நம்பி;
வல்லை நம்பி, அடியார்க்கு அருள் செய்ய; வருந்தி நம்பி உனக்கு ஆட்செய கில்லார்
அல்லல் நம்பி! படுகின்றது என்? நாடி அணங்கு ஒருபாகம் வைத்து, எண் கணம் போற்ற,
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
உரை
9 “காண்டும், நம்பி கழல் சேவடி” என்றும் கலந்து உனைக் காதலித்து ஆட் செய்கிற்பாரை
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி; குரு மாப் பிறை பாம்பைத்
தீண்டும் நம்பி; சென்னியில் கன்னி தங்கத் திருத்தும் நம்பி; பொய்ச் சமண் பொருள் ஆகி
ஈண்டும் நம்பி; இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
உரை
10 கரக்கும் நம்பி, கசியாதவர் தம்மை; கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம்
பெருக்கும் நம்பி; பெருகக் கருத்தா.
(2) 'செல்லப் பிள்ளை' என்ற பொருளுடனும் 'நம்பி' எனும் சொல் வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக திருத்தக்க தேவர் இயற்றிய சீவகசிந்தாமணியில் உள்ள ஒரு பாடலைக் காணலாம் :-
நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்தத்
தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய்த் துயர் தீர்த்த வாறும்
கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்த வாறும்
வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்ற வாறும்
(3) 'சான்றோன்' என்ற பொருளிலும் 'நம்பி' எனும் சொல் பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
(4) 'நம்பி' என்ற பெயரை உடையோர் பலர் இருந்துள்ளனர். உதாரணமாக, சைவத் திருமுறைகளை வகுத்த 'நம்பியாண்டார் நம்பி' என்பவரைக் குறிப்பிடலாம்.

'நாயன்' என்றால் இறைவன் / தலைவன் என்று பொருள்.
இறை அடியார் 'நாயன்மார்' என்று அறியப்படுவர்.
'நாயன்' என்ற சொல்லின் பெண்பாற்பெயர் 'நாய்ச்சி' ஆகும்.
'நாய்ச்சி' என்ற சொல் இறைவி / தலைவி / அரசி / துணைவி என பல பொருள்படும்.
'நாய்ச்சி' என்பது 'நாச்சி' என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.
'நாயனாய்ச்சியார்' எனும் அரிய சொல்லுக்கு 'சிவனும் உமையும்' என்று பொருள்.
இறைவி :-
'நாய்ச்சி அம்மன்' / 'நாச்சி அம்மன்' கோயில், சிவகங்கை, வத்தலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், பழனி, போன்ற பல இடங்களில் அமைந்துள்ளதை காணலாம்.
அரசி :-
வேலு நாச்சியார், மங்களேஸ்வரி நாச்சியார், மதுராந்தகி நாச்சியார், வெள்ளச்சி நாச்சியார் என்று பல அரச குல மங்கையர் இருந்துள்ளனர்.
துணைவி :-
பரவை நாச்சியார், வள்ளி நாச்சியார், சங்கிலி நாச்சியார் என்ற பெயர்கள் பலரும் அறிந்ததே.

Thanks a lot. What a rich source of information and learned comments! A byproduct is I am happy to know that Arasi is also Nacchiyar!
-
- Posts: 16872
- Joined: 22 Jun 2006, 09:30
Re: Nambi and NAchiyAr
நாச்சியாரோ அரசியாரோ?
பேச்சிலே இராணியுமோ!
வீட்டிலென்னவோ பாரும், நானும்
ஒட்டு மொத்தம் பணிப் பெண்ணே!
பட்டுடுத்தியணி புனைந்து-பகைவரையும்
வெட்டி முறிக்குமவர் போலாவேனோ?
PB,
As ever, you add so much to it all, and in your mercurial way too. Thanks
பேச்சிலே இராணியுமோ!
வீட்டிலென்னவோ பாரும், நானும்
ஒட்டு மொத்தம் பணிப் பெண்ணே!
பட்டுடுத்தியணி புனைந்து-பகைவரையும்
வெட்டி முறிக்குமவர் போலாவேனோ?

PB,
As ever, you add so much to it all, and in your mercurial way too. Thanks

-
- Posts: 3633
- Joined: 04 Aug 2011, 13:54
Re: Nambi and NAchiyAr
உமக்குப் பகைவர் ஆருமிலர். வெட்டிமுறிக்கும் வேலையும் இல்லை!