Have to get back to the Kannan Kadhai Amudham, but somehow I don't do that. In the meanwhile, just wanted to post the lyrics that I have penned.
பல்லவி
பொன்னம்பல வானரே பொன்னம்பல வானரே உம்மை நான் அம்பலம் செய்வேன் எமக்கிரங்காவிடில்
அனுபல்லவி
தம்பிரான் தோழர்க்காய் தூது நீர் சென்றங்கே மூக்குடைபட்டதை ஊர் முழுதும் உரக்க (ப்)
சரணம்
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதியே நிற்கிறோம் உம்கண்ணில் காணீரோ(க்) குருடோ துர்
போதனைகள் கடந்து ஞானத்தில் நிற்கவே கோரினோம் கேளீரோ(ச்) செவிடோ அன்னைக்
கைகளால் பண்டன்று தொண்டையைப் பிடித்ததால் மூச்சடைப்போ சவமோ அல்ல நீர் சிவமே
Will post others in this thread. Please post your feedback.
My Lyrics - mostly tamil script
-
- Posts: 2451
- Joined: 16 Dec 2008, 09:10
Re: My Lyrics - mostly tamil script
One more
தோடி ராகம் ஆதி தாளம்
பல்லவி
ஆட்கொள வேண்டும்
உடன் ஆட்கொள வேண்டும்
அடிமையெனை உடன் ஆட்கொள வேண்டும்
உனதடிமையெனை உடன் ஆட்கொள வேண்டும்
ஐயனே உனதடிமையெனை உடன் ஆட்கொள வேண்டும்
அனுபல்லவி
நாட்பலவாக |பேதைமைப்| பெருகி|| மூர்க்கமே மிகுந்தேன்| தீர்ப்பதுன்| கடனே ||
மத்யம காலம்
வேகம் கெடுத்து விவேகம் அளித்து| மோகம் அறுத்தென்| தாபம் தொலைத்து|| (ஐயனே)
சரணம்
நீடுலகினில்| நின்னை| யன்றி||நிம்மதி நிலைக்கத்| தாரகம்| வேறுண்டோ||
காடிடமாய்க் கொண்டாய்| காமன்| கதைமுடித்தாய் ||
மத்யம காலம்
முப்புரம் செற்றவா கொற்றவா நற்றவா|
அப்பரின் அப்பனே| அன்னையே அண்டமே||
ஆழ்கடல் ஆழியான் மார்பினில் ஆடிடும்|
தாழ்சடை நாயக| பாழ்ப்பிணி ஓடிட|| (ஐயனே)

Two more
ராகம்: மோஹனம் தாளம்: ஆதி
பல்லவி
கரிமா முகனே கண பதியே| பரிவாய் அருள்வாய்த்| தருணமிதே ||
அனுபல்லவி
விரிமா மலரிணைச் சேவ டியே|சரணம் சரணம்| அருள் நிதியே ||
சரணம் (மத்தியம காலம்)
வேழ முகத்தொரு ஞானமுதல்வ(த்)
தாழும் சடைமுடியான் முதற்செல்வ|
நாள்தொறும் யாவர்க்கும் நன்மையைச் செய்வோய் (க்)|
காலன்வருமுன்னே ஞானம் அளிப்பாய் (க்)
(or)
காலன் வருமுன்னே ஞானமுற்றுய்ய(க்)||
வராளி மிஸ்ர சாபு
பல்லவி
உன் சேவடித் தாமரை தன்னில் என்மனம் நிலைக்கச் செய்வாய்
அனுபல்லவி
கண்ணுதலான் உயிர்ப்பே கயற்கண்ணி
மத்யம காலம்
பரிந்தெனைக்காத்து அறிவெனக்கூட்டி
சரணம்
கற்றிலேன் நான்மறை அம்மே
உற்றிலேன் உயர்ஞானியர் துணை
பெற்றிலேன் உன்னருள் இன்னும்
நற்றவர் மனத்தே நிலைக்கும் (உன்)

ராகம்: மத்தியமாவதி தாளம்: ஆதி
பல்லவி
பனிமலை அரசன்பனிமலையான் மகள் காலைப்பிடி | இனியொரு கவலை| நமக்கேதுக்கடி ||
அனுபல்லவி
மாநிலம் போற்றும் ஆயிரம் பேரைப்படி| நானிலத்தில் இணையுண்டோ| யார் யாரடி ||
மத்தியம காலம்
பைந்தமிழ் பயின்றவள் புகழினைப் பாடி|ஐந்தொழில் செய்வாள்| கருணையை நாடி||
சரணம்
to be completed.

got the madhyama kaalam ready 
சரணம் மத்தியம காலம்
அவளடி பணிவது திருவினைத் தருவது | அவளடி பணிவது|உறுவினைக் களைவது||
குவலய மலரிணைக் கடைவிழி அருள்வது |குவலய மலரடி| வீட்டினில் சேர்ப்பது ||

சரணம் மத்தியம காலம்
அவளடி பணிவது திருவினைத் தருவது | அவளடி பணிவது|உறுவினைக் களைவது||
குவலய மலரிணைக் கடைவிழி அருள்வது |குவலய மலரடி| வீட்டினில் சேர்ப்பது ||
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: My Lyrics - mostly tamil script
கண்ணன் கதையைக் கவினுற நீர் மேலும் பாடுவீரெனக் காத்திருக்கையில், பாடலிசைப்பதில் நாட்டமிப்போதெனத் தெரிந்து கொண்டோம்! கற்பனை செல்லும் வழி நாமும் செல்கிறோம்!
Waiting for more. All good ones. Madhyama kAlam is very appealing. I sang it N. KuRinji and then realize you have sung it in tODi!
One typo in the first song: ponnambala vA'Na'rE.
Waiting for more. All good ones. Madhyama kAlam is very appealing. I sang it N. KuRinji and then realize you have sung it in tODi!
One typo in the first song: ponnambala vA'Na'rE.
-
- Posts: 2451
- Joined: 16 Dec 2008, 09:10
Re: My Lyrics - mostly tamil script
thanks arasi. The rAgams are just my choice. If one were to tune a diff/apt rAgam and do sing, no objectionsarasi wrote:கண்ணன் கதையைக் கவினுற நீர் மேலும் பாடுவீரெனக் காத்திருக்கையில், பாடலிசைப்பதில் நாட்டமிப்போதெனத் தெரிந்து கொண்டோம்! கற்பனை செல்லும் வழி நாமும் செல்கிறோம்!
Waiting for more. All good ones. Madhyama kAlam is very appealing. I sang it N. KuRinji and then realize you have sung it in tODi!
One typo in the first song: ponnambala vA'Na'rE.