angu ithannA tEvaiyA? - aam. vallina tha-vukku mun ange oRRu miga vENdum
தனிச் செய்யுட்கள்
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
மன்னிக்கவும்.
இதுவே, அதுவே, இவற்றை அடுத்து வல்லின ஒற்று மிகாது.
இதுவே, அதுவே, இவற்றை அடுத்து வல்லின ஒற்று மிகாது.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
நிலைமொழியின் இடையின ஈற்றெழுதுக்கு விலக்கு?Pratyaksham Bala wrote: ↑21 Sep 2023, 20:37 மன்னிக்கவும்.
இதுவே, அதுவே, இவற்றை அடுத்து வல்லின ஒற்று மிகாது.
நன்னூல் 201 - இடைச்சொல் ஏ ஓ முன் வரின் இயல்பே?
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
குரு எண்பா (gurvashtakam)
based on https://isha.sadhguru.org/in/en/blog/ar ... cs-meaning
உடல்மிக் கழகே மனையுஞ் சிறப்பே
கடலொத் தபேரே மலையொத் தசெல்வம்
மனத்தே பெரியோ னடிக்கஞ் சமில்லை
யெனிலென் னயென்ன வெனிலென் னயென்ன
மனைமக் களாகப் பெருஞ்செல் வமாக
மனைசுற் றமுற்றார் பெருகிப் பரவ
மனத்தே பெரியோ னடிக்கஞ் சமில்லை
யெனிலென் னயென்ன வெனிலென் னயென்ன
மறையா றினங்கம் கலையா வுமாகும்
குறைவில் பொழிப்பா வுரையும் இருக்கும்
மனத்தே பெரியோ னடிக்கஞ் சமில்லை
யெனிலென் னயென்ன வெனிலென் னயென்ன
பிறநா டுதன்னில் பிறந்த விடத்தில்
இருப்பா ருளரோ நடத்தை தனிலே
மனத்தே பெரியோ னடிக்கஞ் சமில்லை
யெனிலென் னயென்ன வெனிலென் னயென்ன
பெருநாட் டுமன்ன ரரச ரவையிற்
றருவா ருயர்வே பெருமை யளவோ
மனத்தே பெரியோ னடிக்கஞ் சமில்லை
யெனிலென் னயென்ன வெனிலென் னயென்ன
பரவிப் பெருகும் திசையெட் டிலுமென்
னுரமே திறமே கொடையின் சிறப்பு
மனத்தே பெரியோ னடிக்கஞ் சமில்லை
யெனிலென் னயென்ன வெனிலென் னயென்ன
உலகப் பிடிப்பு மறுந்தே ஒழியும்
பலசெல் வமீதும் மனைமீ திலாமாம்
மனத்தே பெரியோ னடிக்கஞ் சமில்லை
யெனிலென் னயென்ன வெனிலென் னயென்ன
வனமோ மனையோ யெதுவோ வுறைதல்
மனமோ வுடலோ அறுந்தே குமிச்சை

Last edited by sankark on 29 Sep 2023, 16:05, edited 1 time in total.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
மனையுஞ் சிறப்பே -> மனையா ளெழிலாள்/மனையாள் வனப்பாள் too fits there.
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
தேற்ற ஏகாரத்தை அடுத்து வல்லின ஒற்று மிகாது.
இதுவே போதும்
அதுவே சிறந்தது
அப்போதே தந்தான்
இப்போதே சொல்
நடந்தே சென்றான்
ஓடியே களைத்தான்
இதுவே போதும்
அதுவே சிறந்தது
அப்போதே தந்தான்
இப்போதே சொல்
நடந்தே சென்றான்
ஓடியே களைத்தான்
"நிலைமொழி வருமொழியுடன் புணரும்பொழுது, அவ்விரு சொற்களிலும் எவ்வித எழுத்து மாற்றமும் நிகழாமல் இயல்பாக இருப்பது இயல்பு புணர்ச்சி எனப்படும்."நன்னூல் 201 - இடைச்சொல் ஏ ஓ முன் வரின் இயல்பே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
ஐந்தெழுத்தானுக்கு ஐந்து
தானாய்த் தெரியாதே யறியாதே யலைந்தானேன்
வானாய் வளியானான் ஒளியானான் நடஞ்செய்வான் சுடலையான்
தேனா யவனாவா னடியார்க்கே தெளிநெஞ்சே
ஊனா யுயிரானான் கறைகண்டப் பெருமானே
நீரைக் குளிர்திங்கள் சடைதன்னி லுடையானைப்
பாரை முதலைந்தைப் படைத்தானை யருளாளன்
சேரார் தனைவிட்டுச் சிவன்தாளைப் பிடினெஞ்சே
ஓரா தொருநாளும் பழிநாளே அறியாயோ
காணும் பொருளெல்லா மவன்செய்தான் தெளிந்தேனே
பூணும் கரித்தோலும் மழுபடையு முடையானை
வானி லெரிசுடரைப் படைத்தானை நினைநெஞ்சே
கோனு மவனாவான் விடமுண்டா னிடந்தந்தான்
நாயிற் கடையானேன் விடையானை வுடையானை
தாயிற் சிறந்தானை யுமைபாகன் சடையானை
நோயில் நினையாதே பொழுதெல்லாம் நினைநெஞ்சே
கோயில் வலஞ்செய்துச் சிரமேயான் குவியேனோ
போதத் திரளான்றன் திறமெல்லா மிசையாக்கிப்
பாதம் பணிவாரைப் பணிந்தேத்தி யுரைப்பேனே
வாதம் புரிவாரைப் புறந்தள்ளி நடநெஞ்சே
வேதம் அவனன்றே அவனன்றி யெதுவுண்டே

Last edited by sankark on 25 Oct 2023, 10:54, edited 1 time in total.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
மேலும் இரண்டு
சமயக் குரவர்க்கு உறுவீட்டை யளித்தானை
இமயக் குலப்பெண்ணை இடப்பாக முகந்தானைச்
சமயம் இதுவென்று நொடிதோறும் புகழ்நெஞ்சே
சுமை தகரும்ப ழிதீரும்பொ டியாம்பாவம்
தன்னை யறிந்தார்க்கும் தவமேமு னிவோர்க்கும்மெய்
யென்னே நிலைபெற்றான் சிலைகொண்டு புரஞ்செற்றான்
அன்னே துணைநீயே எனக்கூறி நிலைநெஞ்சே
மின்னே நிகருற்றான் அடைக்கலமு மவனன்றே

Last edited by sankark on 25 Oct 2023, 11:01, edited 1 time in total.
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
சிறப்பாக உள்ளது!
கலிவிருத்தம். எதுகை உள்ளது. மோனை அமைந்தால் மேலும் அழகாகும்..
'கறைகண்ட பெருமானே' - ஆஹா!
இரு குறிப்புகள்:-
1)
முதல் வரியின் கடைசியில் உள்ள 'அலைந்தானேன' என்பது விளங்கவில்லை.
2)
'தேமா காய் காய் காய்' என்ற வாய்ப்பாட்டில் அமைக்கும் போது இரண்டாவது வரியின் கடைசியில் உள்ள 'சுடலையான்' என்பது கருவிளமாக உள்ளது. -- சொல்லின் இடையிலே 'ஐ' வரும்போது அது ஒரு மாத்திரையாகவே ஒலிக்கும்.
எனவே, 'சுடலையான்' என்பது 'சுடலைமாடன்' என்று அமைந்தால் 'கருவிளங்காய்' என்று காய்ச்சீராகும்.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
#1 neither self evident nor did I know and roamed around (alaindhaanen) and tie that with தெளிநெஞ்சேPratyaksham Bala wrote: ↑25 Oct 2023, 08:40சிறப்பாக உள்ளது!
கலிவிருத்தம். எதுகை உள்ளது. மோனை அமைந்தால் மேலும் அழகாகும்..
'கறைகண்ட பெருமானே' - ஆஹா!
இரு குறிப்புகள்:-
1)
முதல் வரியின் கடைசியில் உள்ள 'அலைந்தானேன' என்பது விளங்கவில்லை.
2)
'தேமா காய் காய் காய்' என்ற வாய்ப்பாட்டில் அமைக்கும் போது இரண்டாவது வரியின் கடைசியில் உள்ள 'சுடலையான்' என்பது கருவிளமாக உள்ளது. -- சொல்லின் இடையிலே 'ஐ' வரும்போது அது ஒரு மாத்திரையாகவே ஒலிக்கும்.
எனவே, 'சுடலையான்' என்பது 'சுடலைமாடன்' என்று அமைந்தால் 'கருவிளங்காய்' என்று காய்ச்சீராகும்.
#2 one learns something new every day! I was under the impression ai is always a nedil asai. நீங்கள் சொல்வது ஐகாரக் குறுக்கமோ? நடஞ்செய்வான் கொண்டு மாற்றியது
மோனை - அதற்கு இன்னும் சொல்லாளுமை மிக வேண்டும். அவன் அருள்
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
Yes.ஐகாரக் குறுக்கமோ?
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
வெண்ணீ றுதனைப்பூ சிவெள்வரையிற் குடிகொண்டான்
கண்ணீ ருடன்துதிசெய் யடியார்க்குத் துணையானான்
நுண்ண றிவில்லார்க்கு மெளியானே களிநெஞ்சே
தன்னே ரிலாதானேக் கடல்நஞ்சு முகந்தானே
வீடு றுமக்காலம் நமதூதர் நெருங்குங்கால்
பீட ழிசமயத்தே யரனைத்தான் நினைப்பேமோ
நாடொ றுமெண்ணாதே செயலென்னப் பகர்நெஞ்சே
பீடு டையண்ணற் றிருவண்ணா மலையானை
கண்ணீ ருடன்துதிசெய் யடியார்க்குத் துணையானான்
நுண்ண றிவில்லார்க்கு மெளியானே களிநெஞ்சே
தன்னே ரிலாதானேக் கடல்நஞ்சு முகந்தானே
வீடு றுமக்காலம் நமதூதர் நெருங்குங்கால்
பீட ழிசமயத்தே யரனைத்தான் நினைப்பேமோ
நாடொ றுமெண்ணாதே செயலென்னப் பகர்நெஞ்சே
பீடு டையண்ணற் றிருவண்ணா மலையானை
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
இதனுடன் பத்து
மூவி ருபத்துடன்மூன் றுமாயவருட் புகுந்தானைக்
கூவி டுவேன்கண்டீர் அவனருட்செந் தமிழ்கொண்டுத்
தாவி யேப்பற்றல் நமக்குச்செ யலதுநெஞ்சே
பாவி னாற்போற்றிப் பழகுதலி னிமைதானே
மூவி ருபத்துடன்மூன் றுமாயவருட் புகுந்தானைக்
கூவி டுவேன்கண்டீர் அவனருட்செந் தமிழ்கொண்டுத்
தாவி யேப்பற்றல் நமக்குச்செ யலதுநெஞ்சே
பாவி னாற்போற்றிப் பழகுதலி னிமைதானே
Last edited by sankark on 25 Oct 2023, 22:44, edited 1 time in total.
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
.
கறைகண்ட பெருமான் !
குறிப்புப் பெயரெச்சத்தை அடுத்து வல்லின ஒற்று மிகாது.
குறிப்புப் பெயரெச்சம் = பெயரடை = adjective
உதாரணம் :-
நீண்ட பாதை
குறுகிய சந்து
உயர்ந்த கட்டிடம்
நல்ல பையன்
நல்ல பாம்பு
கறைகண்ட பெருமான் !
குறிப்புப் பெயரெச்சத்தை அடுத்து வல்லின ஒற்று மிகாது.
குறிப்புப் பெயரெச்சம் = பெயரடை = adjective
உதாரணம் :-
நீண்ட பாதை
குறுகிய சந்து
உயர்ந்த கட்டிடம்
நல்ல பையன்
நல்ல பாம்பு
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
நன்றிPratyaksham Bala wrote: ↑25 Oct 2023, 21:05 .
கறைகண்ட பெருமான் !
குறிப்புப் பெயரெச்சத்தை அடுத்து வல்லின ஒற்று மிகாது.
குறிப்புப் பெயரெச்சம் = பெயரடை = adjective
உதாரணம் :-
நீண்ட பாதை
குறுகிய சந்து
உயர்ந்த கட்டிடம்
நல்ல பையன்
நல்ல பாம்பு
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
கறை + கண்ட (கண்டம் பெயர்ச்சொல்/சினைப்பெயர்?) vs கண்ட (காண் வினை) கறைகண்ட என்பது பெயரெச்சமா?
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
on the occasion of kandasashti oru muppaamaalai, to the same sandham as arunagiri's thondi sariya mayire thiruppugazh
நின்னை மனதிற் கொண்டேன் குறமகளின்
நெஞ்சில் நிறையும் அழகே தமிழின்சுவை
கொண்டு கவிதை புனைவேன் அறுமுகத்து - முருகோனே
குன்று தோறும் நிற்பாய் கரிவளர்த்த
மங்கை தனையும் மணமே முடித்தயிறை
உன்னைத் துதிக்க அருள்வாய் கரிவரதன் - மருகோனே
செந்தில் நகரில் உறைவோய் அலைகடலின்
அண்மை அருளுந் திருவே உமையளித்த
பெற்றி மிகுந்த வடிவேல் பிடித்தவுன்னைப் - பணிவேனே
நின்னை மனதிற் கொண்டேன் குறமகளின்
நெஞ்சில் நிறையும் அழகே தமிழின்சுவை
கொண்டு கவிதை புனைவேன் அறுமுகத்து - முருகோனே
குன்று தோறும் நிற்பாய் கரிவளர்த்த
மங்கை தனையும் மணமே முடித்தயிறை
உன்னைத் துதிக்க அருள்வாய் கரிவரதன் - மருகோனே
செந்தில் நகரில் உறைவோய் அலைகடலின்
அண்மை அருளுந் திருவே உமையளித்த
பெற்றி மிகுந்த வடிவேல் பிடித்தவுன்னைப் - பணிவேனே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
அதே சந்தத்தில் அகத்துறைப் பாடல் இரண்டு
கன்னி யழகு கண்டால் மனதிலொரு
துள்ளல் பிறக்கு மவளே இளையனுக்கு
கண்ணின் அசைவில் பகர்வாள் உளக்கிடக்கை - எழிலாளே
காதல் பெருக மனமே தவிக்கவொரு
தொல்லை நில்லாப் பொழுதே ரதிபதியும்
எய்யும் கணைகள் நமையே வருத்துவதும்(ஞ்) - சரிதானோ
கன்னி யழகு கண்டால் மனதிலொரு
துள்ளல் பிறக்கு மவளே இளையனுக்கு
கண்ணின் அசைவில் பகர்வாள் உளக்கிடக்கை - எழிலாளே
காதல் பெருக மனமே தவிக்கவொரு
தொல்லை நில்லாப் பொழுதே ரதிபதியும்
எய்யும் கணைகள் நமையே வருத்துவதும்(ஞ்) - சரிதானோ
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
மேலும் மூன்று சேர்த்து ஷடாக்ஷரனுக்கு அறுபாமாலைsankark wrote: ↑18 Nov 2023, 19:18 on the occasion of kandasashti oru muppaamaalai, to the same sandham as arunagiri's thondi sariya mayire thiruppugazh
நின்னை மனதிற் கொண்டேன் குறமகளின்
நெஞ்சில் நிறையும் அழகே தமிழின்சுவை
கொண்டு கவிதை புனைவேன் அறுமுகத்து - முருகோனே
குன்று தோறும் நிற்பாய் கரிவளர்த்த
மங்கை தனையும் மணமே முடித்தயிறை
உன்னைத் துதிக்க அருள்வாய் கரிவரதன் - மருகோனே
செந்தில் நகரில் உறைவோய் அலைகடலின்
அண்மை அருளுந் திருவே உமையளித்த
பெற்றி மிகுந்த வடிவேல் பிடித்தவுன்னைப் - பணிவேனே
தனிமை இனிமை யெனவே மனமுகந்து
பழனி அருளும் குருவே உனைப்பணியும்
திறமை எனக்கும் தருவாய் மயில்நடனே - அருளாளா
இனிது யினிது யெனவே மகிழ்ந்துவுனை
பெரிதும் சிறிதும் பலவே கவிபொழிய
வரமும் தருவாய் எழிலார்க் குறமகளின் - மணவாளா
கருணை பொழியு முகமே மனதிருக்க
அருளிச் செயலும் நினதே சிவகுருவே
எருமை வருஞ்ச மயமே நினைப்பெனோப் - பெருமாளே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
கன்னங் குழிய சிரிப்பாள் இருகண்ணும்
நன்கு விரிப்பாள் அழகாய் இருபுருவம்
வில்லை ஒத்த அழகே மனமயங்கி - அலைந்தேனே
தன்னந் தனிந்து நிற்பேன் அதுபொழுதும்
என்னில் அவளை வைப்பேன் கனியமுது
தன்னை ஒத்த குணமே உடையவளை - மறவேனே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
இந்தச் சந்தம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது இதுவரை (ear worm)
அகத்துறையில் மேலும் இரண்டு
அன்பு மிகவும் உடையாள் கடைவிழியில்
அன்பைச் சொரியும் ஒயிலாள் திருவுமவள்
எண்ணும் பொழுது மனத்தே அடிமனதில் - இனிப்பாளே
கண்கள் இருப்ப தெதற்கோ தரணிதனில்
உண்டோ அவட்கும் ஈடே கணப்பொழுதும்
எண்ண மறக்க வொட்டா துயிர்தனிலே - கலந்தாளே
அகத்துறையில் மேலும் இரண்டு
அன்பு மிகவும் உடையாள் கடைவிழியில்
அன்பைச் சொரியும் ஒயிலாள் திருவுமவள்
எண்ணும் பொழுது மனத்தே அடிமனதில் - இனிப்பாளே
கண்கள் இருப்ப தெதற்கோ தரணிதனில்
உண்டோ அவட்கும் ஈடே கணப்பொழுதும்
எண்ண மறக்க வொட்டா துயிர்தனிலே - கலந்தாளே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
என்றோ அருளைப் பொழிவாய்ப் பெருமழையாய்
அன்றே அடைவேன் நலமே அதுவரையில்
நின்று மிகவுஞ் சோர்வேன் மனமிகவே - சலிவேனோ
கன்றின் குரலைக் கேட்டே பசுவுமிக
அன்பு சுரக்க மிகவே அணைத்திடுமே
என்னைப் பரிந்து தாயே அணைப்பதுவும் - அடையேனோ
நன்கு மனதில் நிற்பாய் திருவுருவே
என்பும் உருகும் அன்பே உளமொழுக
என்றும் தருவாய் நீயே கணப்பொழுதும் - மறவாதே
அன்றே அடைவேன் நலமே அதுவரையில்
நின்று மிகவுஞ் சோர்வேன் மனமிகவே - சலிவேனோ
கன்றின் குரலைக் கேட்டே பசுவுமிக
அன்பு சுரக்க மிகவே அணைத்திடுமே
என்னைப் பரிந்து தாயே அணைப்பதுவும் - அடையேனோ
நன்கு மனதில் நிற்பாய் திருவுருவே
என்பும் உருகும் அன்பே உளமொழுக
என்றும் தருவாய் நீயே கணப்பொழுதும் - மறவாதே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
inspiration https://youtu.be/sGsIDFi9YnY?t=2817
உனக்கென நானு மெனக்கென நீயுந் தனக்கொரு நேரில் முருகோனே தனக்கி ணையின் றியானாயே
பிணக்குக ளேது வனக்குற மாது மருவிடு மாறு முகத்தோனே
தனத்தன தான தனத்தன தான எனநித மாடுஞ் சிவனாரின்
வனப்புடை மைந்த குருவடி வாகித் திருச்செவி நீயு முரைத்தாயே
தினந்தினந் தோறும் தினந்தினந் தோறும் எனையுன தாக்கி யடியேனே
மனதுறு வெப்பங் கொடியவை நீங்கி நினதிரு பாத மடையேனோ

Last edited by sankark on 28 Dec 2023, 12:31, edited 1 time in total.
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
.
தனக்கி ணையின் றியானாயே --> தனக்கிணை யின்றி யானாயே
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
உனக்கென நானு மெனக்கென நீயுந் தனக்கிணை யின்றி யானாயே
பிணக்குக ளேது வனக்குற மாது மருவிடு மாறு முகத்தோனே
தனத்தன தான தனத்தன தான எனநித மாடுஞ் சிவனாரின்
வனப்புடை மைந்த குருவடி வாகித் திருச்செவி நீயு முரைத்தாயே
(குறள் வெண்செந்துறை)
தினந்தினந் தோறும் தினந்தினந் தோறும் எனையுன தாக்கி யடியேனே
மனதுறு வெப்பங் கொடியவை நீங்கி நினதிரு பாத மடையேனோ
தனக்கி ணையின் றியானாயே --> தனக்கிணை யின்றி யானாயே
(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
உனக்கென நானு மெனக்கென நீயுந் தனக்கிணை யின்றி யானாயே
பிணக்குக ளேது வனக்குற மாது மருவிடு மாறு முகத்தோனே
தனத்தன தான தனத்தன தான எனநித மாடுஞ் சிவனாரின்
வனப்புடை மைந்த குருவடி வாகித் திருச்செவி நீயு முரைத்தாயே
(குறள் வெண்செந்துறை)
தினந்தினந் தோறும் தினந்தினந் தோறும் எனையுன தாக்கி யடியேனே
மனதுறு வெப்பங் கொடியவை நீங்கி நினதிரு பாத மடையேனோ
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
Pratyaksham Bala wrote: ↑28 Dec 2023, 10:37 .

கலித் தாழிசை!sankark wrote: ↑21 Nov 2023, 12:49 என்றோ அருளைப் பொழிவாய்ப் பெருமழையாய்
அன்றே அடைவேன் நலமே அதுவரையில்
நின்று மிகவுஞ் சோர்வேன் மனமிகவே - சலிவேனோ
கன்றின் குரலைக் கேட்டே பசுவுமிக
அன்பு சுரக்க மிகவே அணைத்திடுமே
என்னைப் பரிந்து தாயே அணைப்பதுவும் - அடையேனோ
நன்கு மனதில் நிற்பாய் திருவுருவே
என்பும் உருகும் அன்பே உளமொழுக
என்றும் தருவாய் நீயே கணப்பொழுதும் - மறவாதே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
தேறா தொழிவனோ யானேயா னேகாதல்
கூறா திருந்தாற் றகுமோ தகுமோவுன்
பேரே இனிக்கும் முறுவல் மயக்குமென்
பேரே மறந்தே னரோ
கூறா திருந்தாற் றகுமோ தகுமோவுன்
பேரே இனிக்கும் முறுவல் மயக்குமென்
பேரே மறந்தே னரோ
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
அருள்விழி சுருள்குழல் இருதனந் தனிலே
பெருமணி புரண்டிடு அழகுடை எழிலே
யொருமுறைத் திருமுகம் பருகிய எனக்கிவ்
வொருபிற வியேபோ துமே
idhu enna paa/paavinaththil porundhum?
பெருமணி புரண்டிடு அழகுடை எழிலே
யொருமுறைத் திருமுகம் பருகிய எனக்கிவ்
வொருபிற வியேபோ துமே
idhu enna paa/paavinaththil porundhum?
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
இது வெண்டுறை !
வெண்டுறையில் --
1) மூன்று முதல் ஏழு அடிகள் இருக்கலாம். -- இதில் நான்கு உள்ளன !
2) தொடக்கத்தில் உள்ள அடிகள் சிலவற்றில் ஒரே அளவு சீர்களும், பிறகு வரும் அடிகளில் குறைந்த அளவு சீர்களும் இருக்கும். -- இதில் முதல் மூன்று வரிகளில் நான்கு சீர்களும், அடுத்த வரியில் மூன்று சீர்களும் உள்ளன !
3) எல்லா வரிகளிலும் ஒரே எதுகை இருத்தல் அழகு. -- இதில் அடி எதுகை சிறப்பாக அமைந்து உள்ளது !
ஆகவே, இது வெண்டுறை .
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
thanks! much appreciate your feedbacks & inputs.Pratyaksham Bala wrote: ↑05 Jan 2024, 18:42இது வெண்டுறை !
வெண்டுறையில் --
1) மூன்று முதல் ஏழு அடிகள் இருக்கலாம். -- இதில் நான்கு உள்ளன !
2) தொடக்கத்தில் உள்ள அடிகள் சிலவற்றில் ஒரே அளவு சீர்களும், பிறகு வரும் அடிகளில் குறைந்த அளவு சீர்களும் இருக்கும். -- இதில் முதல் மூன்று வரிகளில் நான்கு சீர்களும், அடுத்த வரியில் மூன்று சீர்களும் உள்ளன !
3) எல்லா வரிகளிலும் ஒரே எதுகை இருத்தல் அழகு. -- இதில் அடி எதுகை சிறப்பாக அமைந்து உள்ளது !
ஆகவே, இது வெண்டுறை .
அருள்விழி சுருள்குழல் இருதனந் தனிலே
பெருமணி புரண்டிடு அழகுடை எழிலே
யொருமுறைத் திருமுகம் பருகிய எனக்கிவ்
வொருபிற வியேபோ துமேயான்
கருமுகில் பொழிமழை பருகிய நிலனே
ஒரு அடி சேர்த்தது சிறிது மாற்றியது - ஆசிரியத் தளை மிகுந்து வெண்டளையும் பயின்று ஈற்றயலடி முச்சீராய் ஏகாரம் பெற்று முடிவது - நேரிசை ஆசிரியப்பா?
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
பாராதே நீபோனா லாமாமோ பாவாய்நான்
நீராடும் நேரத்தில் நின்னினைப்பாய் - ஓராயோ
எப்போதும் முப்போதும் தாளேனே செப்பாயோகூறாயோ
இப்போதே காதல் மொழி
நீராடும் நேரத்தில் நின்னினைப்பாய் - ஓராயோ
எப்போதும் முப்போதும் தாளேனே செப்பாயோகூறாயோ
இப்போதே காதல் மொழி
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
sankark wrote: ↑05 Jan 2024, 20:04
அருள்விழி சுருள்குழல் இருதனந் தனிலே
பெருமணி புரண்டிடு அழகுடை எழிலே
யொருமுறைத் திருமுகம் பருகிய எனக்கிவ்
வொருபிற வியேபோ துமேயான்
கருமுகில் பொழிமழை பருகிய நிலனே
ஒரு அடி சேர்த்தது சிறிது மாற்றியது - ஆசிரியத் தளை மிகுந்து வெண்டளையும் பயின்று ஈற்றயலடி முச்சீராய் ஏகாரம் பெற்று முடிவது - நேரிசை ஆசிரியப்பா?
நேரிசை ஆசிரியப்பா :-
1) குறைந்தது மூன்றடிகள் இருக்க வேண்டும்
2) அடிகளில் நான்கு சீர்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
3) ஆரம்பம் மற்றும் கடைசி அடிகள் தவிர மற்றவை குறைந்த அளவு சீர்களைக் கொண்டிருக்கலாம்.
4) அதிகமாக இயற்சீர்கள் இருக்க வேண்டும்.
5) ஆசிரியத்தளை அதிகம் இருக்க வேண்டும்.
6) கடைசி அசை ஏ, ஓ, ஈ, ஆய், ஐ, என் என்று இருக்க வேண்டும்.
7) கடைசி அடிக்கு முந்தைய அடி மட்டும் குறைந்து வந்தால் அது நேரிசை ஆசிரியப்பா எனப்படும்.
தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் இக் கவிதை நேரிசை ஆசிரியப்பா.
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
அழுதிடு மொருசிசு அவள்கரம் கொடுத்தனர்
மெழுகென உருகினள் அழுதனள் மகிழ்வொடு
தழுவினள் முகர்ந்தனள் பசிக்கென கொடுத்தனள்
எழுதிட மொழியிலை எளிதிலை மனநிலை
குழிந்திடு கண்ணமே குறுகுறு வெனவிழி
சுழிந்திடு கருமுடி நகைத்திடு வதரமும்
அழகிய குழவியே விழியினில் விழுந்திட
தழுவவே துடிக்குமே மனமிக மலருமே
மெழுகென உருகினள் அழுதனள் மகிழ்வொடு
தழுவினள் முகர்ந்தனள் பசிக்கென கொடுத்தனள்
எழுதிட மொழியிலை எளிதிலை மனநிலை
குழிந்திடு கண்ணமே குறுகுறு வெனவிழி
சுழிந்திடு கருமுடி நகைத்திடு வதரமும்
அழகிய குழவியே விழியினில் விழுந்திட
தழுவவே துடிக்குமே மனமிக மலருமே
-
- Posts: 4203
- Joined: 21 May 2010, 16:57
Re: தனிச் செய்யுட்கள்
நான்கு சீர்; நான்கு அடி.
சந்த ஒழுங்கு உள்ளது. அனைத்தும் கருவிளம் !
எதுகை உள்ளது.
இது கலிவிருத்தம்.
இதுவும் நான்கு சீர்; நான்கு அடி.
சந்த ஒழுங்கு - அனைத்தும் விளம்.
எதுகை உள்ளது.
இதுவும் கலிவிருத்தம்.
குறிப்பு:
'கண்ணமே'? 'கன்னமே' அல்லவா ?
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
தண்ணார் மதிசூடும் மாதேவ நின்கழல்
விண்ணோர் பணிந்தேத்திப் போற்றுவர் - கண்மூன்றாய்
என்னைப் பொருட்டாக்கி எந்தலை மேல்வைப்பாய்
நின்னைச் சரணடைந்தேன் யான்
விண்ணோர் பணிந்தேத்திப் போற்றுவர் - கண்மூன்றாய்
என்னைப் பொருட்டாக்கி எந்தலை மேல்வைப்பாய்
நின்னைச் சரணடைந்தேன் யான்
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
காரூர் புனலுற்ற கங்கைக் கரைதன்னில்
தேரூர் புகழுற்ற வாரூர் தனிலும்மே
மங்கை யொருபாகம் கொண்டப் பரனேநீ
எங்கட் கருளாயோ தான்
both inspired by opening phrases of 2 paa's from sundarar's first ever padhigam - piththaa pirasoodi
தேரூர் புகழுற்ற வாரூர் தனிலும்மே
மங்கை யொருபாகம் கொண்டப் பரனேநீ
எங்கட் கருளாயோ தான்
both inspired by opening phrases of 2 paa's from sundarar's first ever padhigam - piththaa pirasoodi
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
ஓரா தொருநாளும் வீணேத னக்குத்தான்
பேரா யிரம்படைத் தாள்தனை - வாராதே
நல்லூழ் நலிவுறா தேகஞ் சமலர்க்கால்
எல்கிழிக் குமேயதை யோர்
எல் - இருள்
பேரா யிரம்படைத் தாள்தனை - வாராதே
நல்லூழ் நலிவுறா தேகஞ் சமலர்க்கால்
எல்கிழிக் குமேயதை யோர்
எல் - இருள்
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
வாய்திறவான் வார்த்தை சொலானால் மரத்தடியான்
தேய்பிறை தான்தரித்தா னெம்மீசன் - பேய்வாழும்
காட்டகத்தே தானிருப்பான் நால்வர்க்குந் தானுரைத்து
வீட்டகம் நல்கினா னே/னவன்
அஞ்ஞானம் தன்னை யழித்துப் புகலாமல்
மெய்ஞானம் தன்னை யுணர்விப்பான் தன்னைநீ
எஞ்ஞான்றும் சேர்வாய்ப் புகல்
தேய்பிறை தான்தரித்தா னெம்மீசன் - பேய்வாழும்
காட்டகத்தே தானிருப்பான் நால்வர்க்குந் தானுரைத்து
வீட்டகம் நல்கினா னே/னவன்
அஞ்ஞானம் தன்னை யழித்துப் புகலாமல்
மெய்ஞானம் தன்னை யுணர்விப்பான் தன்னைநீ
எஞ்ஞான்றும் சேர்வாய்ப் புகல்
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
தமிழே அழகே மலைத்தேனே தொன்மை
அமிழ்தே அமிழ்ந்தே னுனில்
தனித்தோ விருப்ப னிவன்செந் தமிழும்
இனிக்க வுடனிருக் க
பாவிசைத் தேன்சீர் தளைத்துத் தமிழேயென்
ஆவியு ருக்கினா யே
அமிழ்தே அமிழ்ந்தே னுனில்
தனித்தோ விருப்ப னிவன்செந் தமிழும்
இனிக்க வுடனிருக் க
பாவிசைத் தேன்சீர் தளைத்துத் தமிழேயென்
ஆவியு ருக்கினா யே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
தன்னைத் தருவாள் மனத்துட் கரந்தகாதல்
தன்னைப் புரியா திருப்பானை - யென்சொல்வேன்
மண்ணாய்ப் பிறந்திருந்தா லுண்டாமே நன்மையிம்
மண்டா யிருப்பானால் என்?
தன்னைப் புரியா திருப்பானை - யென்சொல்வேன்
மண்ணாய்ப் பிறந்திருந்தா லுண்டாமே நன்மையிம்
மண்டா யிருப்பானால் என்?
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
எந்தை எனதம்மை யென்றே உழண்டிருப்பக்
கந்தையுங் கூடவா ராதையோ - விந்தையே
உள்ளஞ் செயலிழந் துப்போ குமுன்னைய
உள்ளுவீ ரெம்முமையை யே (௧)
ஏகம்பன் பெண்ணாளைத் தக்கன் புதல்வியைத்
தேகம் நலிவடையு முன்தொழு - தேகுவீர்
கண்பஞ் சடையும்மே கேளாச் செவியாமே
விண்ணேகு நாளும் வர (௨)
வரவேண்டுந் தாயே மனத்துள்வந் தேநீ
தரவேண்டு மொன்று வரமே - மறவா
திருக்கும் நிலையே யதுவல்லா லில்லை
கருவி லிருக்கும் பொழுது (௩)
பொழுதுநீ யேயதன் போக்கும்நீ யன்றே
எழுத்தும் எழுதுவோ னும்நீ - யழுக்கு
மனத்தில் நிலைக்க விடாத வரமே
யெனக்குத் தருவா யுடன் (௪)
உடன்பிறந்தே கொல்லு மவையாவு மென்மேல்
விடமுண்ட கண்ட னிடமே - படராமற்
காப்பா யிதுவொன்றே வேண்டும் பிறிதேதுங்
காப்பாய் வருமாமோ யென் (௫)
கந்தையுங் கூடவா ராதையோ - விந்தையே
உள்ளஞ் செயலிழந் துப்போ குமுன்னைய
உள்ளுவீ ரெம்முமையை யே (௧)
ஏகம்பன் பெண்ணாளைத் தக்கன் புதல்வியைத்
தேகம் நலிவடையு முன்தொழு - தேகுவீர்
கண்பஞ் சடையும்மே கேளாச் செவியாமே
விண்ணேகு நாளும் வர (௨)
வரவேண்டுந் தாயே மனத்துள்வந் தேநீ
தரவேண்டு மொன்று வரமே - மறவா
திருக்கும் நிலையே யதுவல்லா லில்லை
கருவி லிருக்கும் பொழுது (௩)
பொழுதுநீ யேயதன் போக்கும்நீ யன்றே
எழுத்தும் எழுதுவோ னும்நீ - யழுக்கு
மனத்தில் நிலைக்க விடாத வரமே
யெனக்குத் தருவா யுடன் (௪)
உடன்பிறந்தே கொல்லு மவையாவு மென்மேல்
விடமுண்ட கண்ட னிடமே - படராமற்
காப்பா யிதுவொன்றே வேண்டும் பிறிதேதுங்
காப்பாய் வருமாமோ யென் (௫)
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
சிவனுமெனமாலுமென ஒருபொருளை யிருபொருளாய்க் கருதுபவர்தேறுவது முடியாது
சிவனுளத்தில்மாலிருக்க அரியுளத்தில் நடஞ்சிவனார் புரிவதுவும்மாப்பொருளின் விளையாட்டு
நதிமதியுஞ்சூடினவன் துளபமதை யணிந்தவனும் ஒருவனெனத் தேர்ந்தவர்க்கு கிடையாது
மதிமயக்கமோர்கலக்கம் கழிவிரக்கம் சலனமெனும் பலவிடைஞ்சல் வாழ்வதனில் அறியாயோ
ரதிபதியைச்சாடியவன் ரதிபதியின் தாதையிவன் (தோற்றியவன்) ஒருவரெனும் தேற்றமது தெளிவாகி
விதிவசத்தால்பிறந்தி றந்துவறுமை சிறுமைஎனபலவும் வருவதனை ஓர்ந்துமனந் தளராதே
--------
தினைப்புனத்தில் ஆனைமுகன் உதவிசெய்யக் குறமகளை அணைத்தவெழில் வேலவனே வரவேண்டும்
நினைத்தெனது ஊனுருகி உயிருருகி இன்பமுறும் நிலையதனை நீஎமக்குத் தரவேண்டும்
பனைவரையின் தோளுடையாய் அருள்விழிகள் பன்னிரண்டால் பெருங்கருனை மாமழையைப் பொழிவாயே
அனுதினமும் போற்றியுன்னை இகபரத்தில் இன்பமுறப் புரிவதுவும் மால்மருக கடனேயாம்
கயமகளின் பாதமலர் தினம்வருடும் அழகாநீ அறுபடையில் யார்குறித்து அமர்ந்தாயோ
செயமகளின் நாதனவன் மனமயக்கு முருகாநீத் திருவருளை மோசமின்றித் தருவாயே
புயம்பலதால் நீயருள இருகரத்தால் நான்பெறவும் இதுவினிது தாண்டவனின் புதல்வோனே
மயக்கமறு நேரமிது கலக்கமறு காலமிது சரணமுன்றன் தாமரை( மாமலர்)போல் அடியாமே

கருவிலுயி ராகிவர இரண்டுமெட்டுந் திங்களவள் உடல்பலவாய்ப் பாடுபட்ட தறியாது
உருக்கொடுத்தத் தாயவளை மனஞ்சலிக்க வைப்பதுவும் மனிதருக்கு கேடதனைத் தருமாமே
மகவுதனை யீன்றதிலே மனங்குளிர்ந்து புளகமுற்று முலைகொடுத்த பாலருந்தி வளர்வோர்க்குத்
தகவுவவள் ஊனுருகி எனதுமக்கள் எனதுசெல்வம் எனமகிழ்வு ஆவதிலே யுளதாமே
உருக்கொடுத்தத் தாயவளை மனஞ்சலிக்க வைப்பதுவும் மனிதருக்கு கேடதனைத் தருமாமே
மகவுதனை யீன்றதிலே மனங்குளிர்ந்து புளகமுற்று முலைகொடுத்த பாலருந்தி வளர்வோர்க்குத்
தகவுவவள் ஊனுருகி எனதுமக்கள் எனதுசெல்வம் எனமகிழ்வு ஆவதிலே யுளதாமே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
எனக்கு னிருதாள் அளித்து அருள்செய்
தனக்கு வமையில் முருகா - வனக்குறத்தி
கொஞ்சி மருவும் அழகா அசுரரெனும்
பஞ்சு தனக்குத்தீ யே
தனக்கு வமையில் முருகா - வனக்குறத்தி
கொஞ்சி மருவும் அழகா அசுரரெனும்
பஞ்சு தனக்குத்தீ யே
-
- Posts: 2446
- Joined: 16 Dec 2008, 09:10
Re: தனிச் செய்யுட்கள்
வரம ருளும்மாதவத்தோய் நினதுபதம் சேர்ந்தவர்க்கு கணப்பொழுதும் தாள்மறக்க முடியாது
குருவெ னவும்நீயிருக்க திருவருளும் கூடிவந்து எமக்கொருநாள் வீடுகிட்டும் மறவேனே
தருண மதில்நீஎனக்கு உனதுகணஞ் சேரவைப்பாய் குறமகளின் நாதவண்ண மயிலாடி
புருவ மதுநீநெறிக்க எரிந்தொழியும பாவமெல்லாம் கயமகளின் ஆசையுற்ற முருகேசா
மரக தமுமாடகத்தில் நவமணியைத் தான்பதித்த ஒருவயிர ஆயுதத்து மருகாநின்
கருவி ழியின்பார்வைகொண்டு அனுதினமும் யாவருக்கும் அருளமுது வாரிவிட்டு விளையாடு
திரும களின்கேள்வனுக்கு வுடன்பிறந்தாள் வேல்கொடுக்கக் கொடியவனைக் கூறுசெய்த குமரேச
இருப தமும்நானினைக்க வரமயிலில் ஆடிவந்து தருணமதில் தூக்கிவிட்டு அருள்வாயே
எனது மனஞ்சேவடிக்கு அடிபணிந்து தோய்ந்திருக்க அருளுவது சேவலுக்குச் செயலாகும்
உனது புகழ்பாடிநின்று பலப்பலவும் பாவியற்றி பரப்பிடுதல் நீகொடுத்த தமிழாலே
பசியொ ழியபால்கொடுத்த நடனமருள் நாயகர்க்கு இடதுபுறம் தானுடைத்த சிவகாமி
வசிய முறுதானவர்க்கு மரணபயம் தான்கொடுக்கும் முருகபெரு வேலையொன்றைப் புரியேனோ