Subramania Bharati

Carnatic composers (other than performing vidwans)
sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

31
எத்தனை கோடியின்பம் வைத்தாய்.

NITHYASRI MAHADEVAN
.
https://youtu.be/xo5y6TgM5as?si=5UoYRHGCrvu4aHtw

எத்தனை கோடியின்பம் வைத்தாய் -எங்கள்
இறைவா! இறைவா! இறைவா! (எத்தனை)

சரணங்கள்


1 . சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்குச்
சேருமைம பூதத்து வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபல நல் லழகுகள் சமைத்தாய் (எத்தனை)
.
முக்தியென் றொருநிலை சமைத்தாய் -அங்கு
முழுதினையு முணரு முணர் வமைத்தாய்
பக்தி என்றொரு நிலை வகுத்தாய் எங்கள்
பரமா, பரமா பரமா.
.

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

32
ஆடுவோமே ! பள்ளு பாடுவோமே !.
D.K.PATTAMMAL

MAAND
.
1947
NAAM IRUVAR FILM
https://youtu.be/cdAxFP3S5KY?si=QlyxtdSGzBfk2ypT


ஆடுவோமே ! பள்ளு பாடுவோமே !
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று

ஆடுவோமே!


எங்கும் சுதந்திரம்
என்பதே பேச்சு -- நாம்
எல்லோரும்
சமமென்பது உறுதியாச்சு
சங்குகொண் டேவெற்றி
ஊதுவோமே -- இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து
ஓதுவோமே.

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனைசெய்வோம் -- வீணில்
உண்டுகளித் திருப்போரை
நிந்தனைசெய்வோம்
விழலுக்கு நீர்ப் பாய்ச்சி
மாயமாட்டோம் -- வெறும்
வீணருக்கு உழைத்துடலம்
ஓயமாட்டோம்.

நாமிருக்கும் நாடுநமது
என்பதறிந்தோம் -- இது
நமக்கே உரிமையாம்
என்பதறிந்தோம் -- இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி
அடிமைசெய்யோம் -- பரி
பூரணனுக் கேயடிமை
செய்து வாழ்வோம்.

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

33
Vetri ettu dhikkum etta
DK.PATTAMMAL
sings for Kumaari kamala dance
Naam iruvar

https://youtu.be/nHpU8PvQK8o?si=hg-mBINOOGxKb456

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

34
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்

G.RAMANATHAN
( music director sings the song in his sonorous voice).
Film Nalla thangai
1955
.
https://youtu.be/LrsVpMj_aKA?si=rrsj0N6KtwLhDpKQ.

கூலிமிகக் கேட்பார்
கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால்
வீட்டிலே தங்கிடுவார்;

'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ...5
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;

ஓயாமல் பொய்யுரைப்பார்;
ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு
தனியிடத்தே பேசிடுவார்
உள்வீட்டுச் செய்தியெல்லாம்
ஊரம் பலத்துரைப்பார்;
என்வீட்டில் இல்லையென்றால்
எங்கும் முரசறைவார்; ... 10

சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;

எங்கிருந்தோ வந்தான், '
இடைச்சாதி நான்' என்றான்;
மாடுகன்று மேய்த்திடுவேன்,
மக்களை நான் காத்திடுவேன்
..

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

35

மனதில் உறுதி வேண்டும்

JESUDAS
music..ILAYA RAJA

film SIndhubairavi.
https://youtu.be/8fW35x121og?si=vh_oaKDv2g_HmEBE


மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்படவேண்டும்;
கனவு மெய்ப்படவேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்;

கண் திறந்திட வேண்டும்,
காரியத்தில் உறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண் பயனுற வேண்டும்.
வானமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்!
ஓம்,ஓம், ஓம்.

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

36
தேயிலைத் தோட்டத்திலே

MUSIRI SUBRAMANYA IYER
Chenchurutti
-----
vintage 78 rpm record

https://youtu.be/G2pagXwIBVs?si=vmM0gD1MPSo5naPR


upload by serpentmeagre who specializes in vintage 78 rpm records
-----
தேயிலைத் தோட்டத்திலே
பாரத
சேய்கள் சென்று சென்று
மாய்கொன்றார் அம்மம்மா

ஓயாதே நாள் முழுதும் பல
ஊழியம் செய்து
உடம்பு அலுத்து
தீரா நோயில் வருந்துறாரே

அதை நோக்கியும் சவுக்கடி
தாக்குறார் அம்மம்மா

காசாசைப் பேய் பிடித்த
மட்டி கண்காணிகளால்
சிறு மங்கைகளை
கெட்ட நேசத்திற்கே அழைக்கும்
அந்த நிர்ப்பந்தத்தை
மனம் ஒப்பத் தகுந்ததோ

நல்ல தொழில் இல்லையா
சொந்த நாட்டினிலே
பயிர் போட்டு பிழைப்பது
நல்ல தொழில் இல்லையா

அங்கு சோற்றுக்கும் வற்றுகிறார்
சிப்பி சுண்ணாம்பு அரிசியும்
உண்பதற்கும் பொல்லா
நாற்ற மெடுக்குதையோ
=========================

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

37
TOP 50 Songs of Subramania Bharathi
| One Stop Jukebox |
பாரதியார் பாடல்கள்
===============
https://youtu.be/2CXAp09ldVU?si=uy35mPFKkBAID2tB

--
சுப்ரமணிய பாரதியார் அவர்களின் நினைவாக உங்களுக்காக சூப்பர் ஹிட் 50 பாடல்கள்
(திரைப்படம் மற்றும் தேசப்பற்று பாடல்கள்). பாடல்களை பாடியவர்கள் T.M. சௌந்தரராஜன், S.P.பாலசுப்ரமணியம், K.J. யேசுதாஸ், வாணி ஜெயராம், Dr. சீர்காழி கோவிந்தராஜன் போன்ற மாபெரும் பாடகர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு!

Track Details :
CLICK on the timing mentioned below to listen your favorite song.

00:00:01 - Kaakki Siraginiley
00:02:41 - Kaatru Veliyidai
00:06:22 - Sindhunadhiniyin Misai
00:12:38 - Veenaiyadi Neeyenakku
00:16:32 - Engiruntho Vanthaan
00:20:37 - nallathor Veenai
00:24:18 - Theerththa Karaiyiniley
00:26:56 - Odi Vilaiyaadu
00:30:38 - Paarukkulle nalla
00:33:17 - Endru Thaniyum
00:35:47 - Bharata Desamenru
00:43:51 - Thanneer Vittom
00:46:58 - Neenji Uramumindri
00:50:15 - Enthaiyum Thaayum
00:54:17 - Nenjukku Neethi
00:57:05 - Aaduvome
01:01:35 - Ethanai Kodi Inban
01:05:36 - Achchamillai
01:08:35 - Theeratha Vilaiyaatu Pillai
01:12:47 - Thaayin Manikodi (1972)
01:15:58 - Vazhiya Sentamizh
01:16:57 - Chinnakkuzhandaigal
01:19:37 - Ninnaiye Rathi Endru
01:24:37 - Chinnanchiru Kiliye
01:28:55 - Bhakthiyudaiyaar
01:31:30 - Olipadaitha Kanninaai
01:34:28 - Karpaga Vinayaga
01:38:09 - Pillai Praayathile
01:42:04 - Yaamarintha Mozhigalile
01:45:58 - Mangiyathore Nilavinile
01:48:55 - Thohai Mel Ulavum Kandhan
01:51:05 - Malarinmevuthiruve
01:55:16 - Jaya Bherigai Kottada
01:58:37 - Varuvaai Varuvaai
02:02:03 - Thikku Theriyaatha
02:07:32 - Villinaiyotta Puruvam
02:10:41 - Vande Mataram - Nalirmani Neerum
02:16:39 - Sentamizh Nadenum Podinile
02:19:57 - Nallathor Veenaiseithe
02:23:01 - Senthamizh Naadennum
02:26:33 - Nenjil Uramumindri
02:30:28 - Odi Vilayadupara
02:35:25 - Aaduvome
02:38:42 - Vellippani Malaiyin - 1985
02:42:05 - Shakthi Vellathile
02:46:31 - Payum Olli Nee Enakku
02:51:34 - Thanneer Vitta Valarthom
02:57:30 - Kaadhal Kaadhal Kaadhal
03:01:45 - Manadhil Urudhi Vendum
03:05:14 - Uyire Ninadhu Perumai
=======

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

38
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
TIRUCCHI LOGANATHAN
Music by G.RAMANATHAN

https://youtu.be/fnxofXrGWjo?si=Cn5rfCbaY2hAvHR2
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

39
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
sung by P.LEELA
---
https://youtu.be/FfAlroh1pbE?si=_mnkwc67T5TRAJzy

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

40
தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
D.K.PATTAMMAL
VINTAGE 78 RPM RECORD

https://www.youtube.com/watch?v=FGLLYfqjbX8

தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
--
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்
உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!
---
செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,
சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர்.

கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்
காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,
பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும்
பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர்.

பூதலம் முற்றிடும் வரையும்-அறப்
போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,
மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்

பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்.

சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க!
****************************************************************************

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

41
Kaatru Veliyidai Kannamma

Kavitha Janardhanan"

https://youtu.be/EoR4wpkPZkM?si=l9KkInW-XnRU7ZZb

காற்று வெளியிடைக் கண்ணம்மா -
நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் -
அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் -
நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் -
பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் -
இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் -
எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே -
இங்கோர்
விண்ணவனாகப் புரியுமே!
இந்தக்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்


நீயெனது இன்னுயிர் கண்ணம்மா!
- எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் -
துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே -
என்றன்
வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே

உயிர்த் தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! -

இந்தக் காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்...

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

42
யாதுமாகி நின்றாய் (காளிப் பாட்டு)

GAYATHRI GIRISH

Chala Naattai?

https://youtu.be/1xdz6s0cthU?si=n83k1tkSph8vvU2c
.
யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;

பூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!-பொறியை விஞ்சி நின்றாய்
.
இன்ப மாகி விட்டாய்-காளி!-என்னு ளேபு குந்தாய்
பின்பு நின்னை யல்லால்-காளி!-பிறிது நானும் உண்டோ?

அன்ப ளித்து விட்டாய்-காளி!-ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-தொல்லை போக்கிவிட்டாய்
.
https://periscope-narada.blogspot.com/2 ... inray.html

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

43

Bharathyar Padalhal
பாரதியார் பாடல்கள்
சுதா ரகுநாதன்"
.
https://youtu.be/48wGgw85HxI?si=ayoPaX8blX7n77hN
.
Bharathyar Padalhal || Sudha Ragunathan || பாரதியார் பாடல்கள் || குரலிசை - சுதா ரகுநாதன்

Om Sakthi Om Sakthi .... ..Nattaii ​
kaaNi Nilam vendjm...... Hamsadhwani : ​
.Muruga Muruga..... .Kharaharapriya
Ujjayani Nithya Kalyani Kalyani ​
Parukkulle Nalla Nadu ..Jonpuri: ​...
Thikkuth Theriyatha Kattil..Behag
:Eththanai Kodi Inbam ..Ahirbhairavi ​
:Villinaiyoththa Puruvam ...Bhairavi
VandheMatharam....Yaman Kalyani
Kakkaich Chirahinile ..Brindavani .. ​
: Yamarindha Mozhihalile :  ​
:    ​

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

44
நல்ல காலம் வருகுது.
.
Nalla Kalam Varukuthu
(நல்ல காலம் வருகுது)
from Movie Puthaiyal -
TMSoundara rajan & P.Suseelaa"

https://youtu.be/x0lmA34lBVc?si=f4b_7QmbUoQByLEY


நல்ல காலம் வருகுது
ஜாதிகள் சேருது
சண்டைகள் தொலையுது.
சொல்லடி
சக்திமகாளி
வேடபுரதாருக்கு
நல்ல குறி சொல்லு..
தரித்திரம் போகுது
செல்வம் வருகுது
படிப்பும் வளருது
பாவம் தொலையுது.
எட்டு லட்சுமியும்
ஏறி வளருது
பயம் தொலையுது
பாவம் தொலையுது

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

45
BHARATHIYAAR SONGS
S SOWMYA
...
https://youtu.be/eiVgddFfpKk?si=Sq2UZuLWxLJoZwxe
.
Songs List:
1. Parukulle Nalla Nadu 00:00​
2. Kani Nilam 4:52​
3. Viduthalai 9:49​
4. Chinnanchiru Kiliyae 12:59​
5. Oy Thilakare 18:56​
6. Kaala Unnai 21:04​
7. Sollavallayo 25:32​
8. Vedi Padum 31:28​
9. Villinaiyottha 35:25​
10. Thedi Unnai 38:51​
11. Bhooloka Kumari 41:41​
12. Tiruvaippanindu 45:06​
13. Munnai Ilangai 47:59​
14. Muruga Muruga 51:05​
15. Veera Sudandiram 53:30​
16. Vazhiya Senthamizh (Vande Mataram) 58:10​

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

46
VIDUTHALAI VIDUTHALAI VIDUTHALAI
T.R.MAHALINGAM( actor and singer)
..
https://youtu.be/GjWjwc9ssag?si=E2PoXW5BQN1WPLr6
.
விடுதலை! விடுதலை! விடுதலை!

பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை!

திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே

ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே - பாரதி

FILM : NAAM IRUVAR
SONG : VIDUTHALAI VIDUTHALAI
SINGER : T.R.MAHALINGAM
MUSIC: R.SUDARSANAM
LYRICS : MAHAKAVI BHARATHI
YEAR : 1947

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

47
விடுதலை! விடுதலை! விடுதலை

D.K.PATTAMMAL.
..A very rare 78 RPM record from the collection of our forumite Shanks.
Mojanam

https://ia902807.us.archive.org/35/item ... Ohanam.mp3

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

47
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே

UNNIKRISHNAN
.
https://youtu.be/vEjnKohKWKo?si=8HVPV27PaljZcj9T
.
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே
.எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
.
மட்டுப் படாதெங்கும்
கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும்
மதுவின் சுவையுண்டு
பெட்டையி னோடின்பம் பேசிக்
களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு.
(விட்டு)
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம்
தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித்
தூங்கிப்பின் வைகறை யாகுமுன்
பாடி விழிப்புற்று. (விட்டு) -

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

48
காக்கை சிறகினிலே -
Kakkai Siraginiley -
Ezhavathu Manithan (1982)"
.
Music. L.Vaidyanathan
JESUDAS

https://youtu.be/m0jdtDX43-M?si=GlzT0ONAu2NPBJR4

1.காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா;

2. பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா -நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா;

3. கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;

4.தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.
--பாரதியார
..

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

49
நின்னையே ரதியென்று

JESUDAS
https://youtu.be/fA0Wm0nMu_A?si=ziwln51CZu5LiBhR

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி– கண்ணம்மா
தன்னையே சகியென்று சரண மெய்தினேன்
(நின்னையே)
சரணங்கள்

1.பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயற்
பின்னையே-நித்ய-கன்னியே,
கண்ணம்மா( நின்னையே)

2.மாரனம் புகலென் மீது வாரி வாரி வீசநீ (2)
கண் பாராயோ-வந்து சேராயோ,
கண்ணம்மா ( நின்னையே)

3.யாவுமே சுகமுனிக்கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
மே வுமேஇங்கு யாவுமே,கண்ணம்மா

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

50
சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா

GAYATHRI

https://www.youtube.com/watch?v=Zhtu6cpNjyc

சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா
வானக்கருமை கொல்லோ

பட்டுக் கருநீலப்புடவை பதித்த நல்வைரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரம்களடி
சோலை மலரொளியோ
உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக்கடல் அலையோ
உந்தன் நெஞ்சில் அலைகளடி

கோலக் குயிலோசை
உனது குரலின் இனிமையடி
வாலைக்குமரியடி கண்ணம்மா…
மருவக்காதல் கொண்டேன் நான்

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

51
Odi Vilayadu Papa

Vedhala Ulagam

https://youtu.be/dULhDICbrYU?si=nrZl3y1bTRpgEqAK

"

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

52
ஓடி விளையாடு பாப்பா
"Odi Vilaiyadu Paappa

Sirkazhi S. Govindarajan
music- G.RAMANATHAN

Kappalottiya Thamizhan-FILM
---
https://youtu.be/pbyiiasLZ-k?si=W07cedD_i8dqq3p5

=================================
A wonderful poem.
not all the stanzas are sung though
==============
ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
-
சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
-
கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.
-
வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.
-
காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.
--

பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
-
பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
-
துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
-
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.
-
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.
-
வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
-
வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
-
சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
-
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது
வாழும் முறைமையடி பாப்பா.
======

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)
(சரணங்கள்)
-
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்-ஆதி

மூலா வென்றுகதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)
-
ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)*

rendered by SOWMYA

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

53
V.V.Sadagopan_
Villinai_Kavadi Sindhu.
.
https://youtu.be/1cyGitXZaNk?si=ds3baTJHDxHjBS3k

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

54
A Thamizh padam by MahAkavi SubramaNya BArati----சொல்ல வல்லாயோ | Looking through my Periscope.
https://periscope-narada.blogspot.com/2 ... manya.html.

SUDHA RAGUNATHAN
RaagamAlikai
Surutti, vasantha, jayanthsri and kamaaj?
..
https://youtu.be/4BBQhLxVfUc?si=fooiP3S3ABSlWOsT
.

SOWMYA
https://youtu.be/C-3bwfR4mEM?si=uvKcqBJ4JaieWsKG
சொல்ல வல்லாயோ?--கிளியே!
சொல்ல நீ வல்லாயோ?

அனுபல்லவி:
வல்லவேல் முருகன்--தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)

சரணம் 1:
தில்லை யம்பலத்தே நடனம்
செய்யும் அமரர் பிரான்--அவன்
செல்வத் திருமகனை--இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (

.அல்லிக் குளத்தருகே--ஒரு நாள்
அந்திப்பொழுதினிலே--அங்கோர்
முல்லைச் செடியதன்பாற்--செய்தவினை
முற்றும் மறந்திடக் கற்றதென்னேயென்று (சொல்ல)

சரணம் 3:
பாலை வனத்திடையே--தனைக்கைப்
பற்றி நடக்கையிலே--தன் கை
வேலின் மிசையாணை--வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய்வா யென்று


.

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

55
Pāyum Oḷi Nee Enakku
| Mahākavi Bhārathiyār

Kruthi Bhat

https://youtu.be/pc0Z-PY9MRY?si=Is30IZtdO1ZByymY

A few stanzas only.

பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;
தோயும்மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!1

வீணையடி நீ எனக்கு, மேவும்விரல் நானுனக்கு;
பூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு;
காணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வுநிலையே! கண்ணம்மா!

வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!3

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவுகடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே:
கண்ணின்மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!
4

வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசைமதுவே, கனியே, அள்ளுசுவையே! கண்ணம்மா!

5

காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

6
நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!
7

பு{[பாட பேதம்]: ‘பாண்ட மிங்கு நானுனக்கு’
எல்லையில்லை -- கவிமணி
எண்ணமில்லை -- முதற்பதிப்பு
நாடியது -- கவிமணி}

தாரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவ மாய்ச்சமைந்தாய்

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

56
பகைவனுக் கருள்வாய்-

MM DANDAPANI DESIKAR
Kaanada raagam

https://youtu.be/ft-Uygr8_kk?si=wTyt0byvP45AmxpG

நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோமே. பகைநடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றான். (பகைவ).
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே! (பகைவ)

௩)
உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனோமோ?நன்னெஞ்சே! (பகைவ)

௪)
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)

௫)
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ)

௬)
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! (பகைவ)
.
.

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

57
ஓய் திலகரே!

SOWMYA
.

https://youtu.be/X6ixOS2mdqY?si=kyCUiS6NSwq2JGXr

ஓய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ?
செய்வது சரியோ? சொல்லும்

கண்ணிகள்

முன்னறி யாப் புது வழக்கம் நீர்
மூட்டி விட்ட திந்தப் பழக்கம் - இப்போது
எந்நகரிலு மிது முழக்கம் - மிக
இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் (ஓய் திலகரே)

சுதந்திரம் என்கிற பேச்சு - எங்கள்
தொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு - இது
மதம்பிடித் ததுபோலாச்சு - எங்கள்
மனிதர்க் கெல்லாம் வந்த தேச்சு (ஓய் திலகரே)

வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி
வேறெ வர்க்குமது தியாஜ்யம் - சிறு
பிள்ளைக ளுக்கே உபதேசம் - நீர்
பேசிவைத்த தெல்லாம் மோசம் (ஓய் திலக**RSR**






.

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

58


TIRUCHI LOKANATHAN
music by G.RAMANATHAN
.."KAPPALOTTIYA THAMIZHAN (1961)
-Thanneer vitto valarthom-
Tiruchy Loganathan-
G.Ramanathan"

.https://youtu.be/hJnX2BQC9To?si=kgiV5iTWTirGelVi

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ
கண்ணீரால் காத்தோம்
கருக திருவுளமோ..
.
எண்ணமெல்லாம் நெய்யாக
எம் உயிரினுள் வளர்ந்த...அ.அ.அ....
எண்ணமெல்லாம் நெய்யாக
எம் உயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது
மடிய திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்....
.

ஓராயிரம் வருடம்
ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த
மாமணியை தோற்போமோ....

.மாதரையும் மக்களையும்
வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர்
கருத்தழிதல் காணாயோ....
.

தர்மமே வெல்லும் எனும்
சான்றோர் சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள் யாம்
கண்டதெல்லாம் போதாதோ
என் தாய் நீ தந்த
இயற் பொருளெல்லாம் இழந்து
நொந்தார்க்கு நீயின்றி
நோவழிப்பார் யார் உளரோ....

மேலோர்கள் வெஞ்சிறையில்
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில்
நோவதுவும் காண்கிலையோ....
மேலோர்கள்
.

எண்ணற்ற நல்லோர்
இதயம் புழுங்கி
இரு கண்ணற்ற சேய் போல்
கலங்குவதும் காண்கிலையோ...

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

50
Muruga Muruga
- Bharathiyar Songs
S.Sowmya
Nattakurinji Ragam

https://youtu.be/2iPiX7DTx8A?si=m_lo9O4xyvqQS2ir

rajeshnat
Posts: 10115
Joined: 03 Feb 2010, 08:04

Re: Subramania Bharati

Post by rajeshnat »

@sam
It is unfortunate that you have decided to put one song per post(told you may be a year back). You are only into this forum 3 to 4 years back.

If you look prior to your entry we crystallize as prose and distill and make post where it is centered on distilled content.

What you are doing by indicating one song per post is nothing but whatsapp forward This forum is not created for you to put every song in one one post. YOu have made 58 posts ,do you intend to cover another 800 like this . I suggest you have a blog of all these one one post and put one post with a link to your blog in this site.

Just imagine in 10 years back no one can wade through your post and get distilled content which was the norm till 3 years back. STOP

@Srkris admin i am escalating to you

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

@rajeshnat
Yes. Point taken.
This particular thread was dormant for so many years. I felt that giving audio for the songs and lyrics will be useful to learners . Anyway, I have run out of suitable audio clips. So, no more here.
..
But, I am pleasantly surprised that the response from viewers to these posts has been terrific. I monitor the response by number of views.
It was 26,800 on 26.3.2025
It is 32,080 now at 6pm today..28.3.2025.
So 6000 views in just 2 days.
Perhaps, it fulfils a need?
I leave it to your judgement.
Threads with lot of views, generally have a music link and in the case of composers, lyrics too. They dont seem to care much for disseection of lyrics or anything else. The forum will do well in giving more links to good music and lyrics . Thank you.
.............
............
To viewers
.
My sincere and profound apologies to viewers who cannot read Thamizh script. Karnatik website will give English transliteration for most of the songs here. Sometimes, English translation also is given.
Contributed by Sri.Lakshman Ragde
For example
Song: cinnanjiru kiLiyE - Click to listen (Sowmya R)!

cinnan siru kiLiyE
raagam: raagamaalika
taaLam: roopakam
Composer: Subrahmanya Bhaaratiyaar
Language: Tamil.
https://www.karnatik.com/c1493.shtml

For readers who want detailed discussion of most tamil songs, they can find them in the website

Looking through my Periscope
https://periscope-narada.blogspot.com/

He gives the lyrics in tamil script, introductory passage in English and Tamil, english transliteration, english translation and links to the rendition by standard vocalists. Very valuable site for tamil songs.
.



.

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

The number of views
On 19.3.2025 was 22,669
On 19.3.2025 ,, 23,638
24.3.2025 ,, 26,712
.
Quoting
@arasi
03 Dec 2006, 21:51

girishs,
What matters is that bhArathi's songs are sung--though in different rAgAs--by various performers and are kept alive. The younger members of the forum showing interest in his poetry is itself a healthy sign. May the vara kavi's work flourish...

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

@rajeshnat
Sir, The response continues to be very encouraging. So, in deference to enthusistic viewers, let me add a few more great poems and songs in this thread.
The posts are crisp, just a link to audio and the lyrics. So, permit me.
..
51
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே.

From the film Bhaarathy
Year 2000
Producer was the famous scientist and writer 'SUJATHA'.
Music direction was by ILAYARAJA.
S

https://youtu.be/ayNMeHOM6oc?si=yzug6SkN7-EHqWmK.
.Sung by Harish Ragavendra

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம் சொற்பனந் தானோ?-
பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே,கேட்பதுவே
,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
நீங்களெல்லாம் கானலின் நீரோ?-
வெறுங் காட்சிப் பிழைதானோ?

போன தெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?
-இந்த ஞாலமும் பொய்தானோ

கால மென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-
அங்குக் குணங்களும் பொய்களோ

சோலையிலே மரங்க ளெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-
இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?

வீண்படு பொய்யிலே-
நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம்
காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-
இந்தக் காட்சி நித்தியமாம்
.

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

52
தீர்த்தக் கரையினிலே-
தெற்கு மூலையில் செண்பகத் தோ...”
.
BOMBAY JAYASREE

https://youtu.be/Y7GN11t9I7w?si=v7bUoJU6zT3CtUaz
.

தீர்த்தக் கரையினிலே -- தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் -- வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் -- அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம் -- உன்னைப்போலவே
பாவை தெரியு தடீ!.
மேனி கொதிக்கு தடீ! -- தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் -- இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! -- இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் -- பிரி வென்பதோர்
நரகத் துழலுவதோ?


Introduction, tamizh lyrics, transliteration, translatiin, commentary and audio cloips links by many are given at

.https://periscope-narada.blogspot.com/2 ... inile.html
.
MLVasanthakumari,
TRMahalingam
SPBalasubramanyam..music by Jlayaraja.
..

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

53

Vedi Padum
- Bharathiyar Songs

S.Sowmya

https://youtu.be/tiIKywbioAo?si=iydkX0pJ9VpZ4AKL.
ெடிபடு மண்டத் திடி பல தாளம் போட- வெறும்
வெளியிலி ரத்தக் களியொடு பூதம் பாடப்- பாட்டின்
அடிபடுபொருளின் அடிபடும் ஒலியில் கூடக்
களித் தாடுங்காளீ, சாமுண்டீ! கங்காளீ!
அன்னை! அன்னை! ஆடும் கூத்தை
நாடச்செய்தாய் என்னை!

2

ஐந்துறுபூதம் சிந்திப்போய் ஒன்றாகப்- பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப்போக- அங்கே
முந்துறும் ஒளியில் சிந்தைநழுவும் வேகத்தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடும் கூத்தை
நாடச்செய்தாய் என்னை!

3

பாழாம் வெளியும் பதறிப்போய் மெய்குலையச்- சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய- அங்கே
ஊழாம் பேய்தான்ஓஹோஹோவென்றலைய- வெறித்து
உறுமித் திரிவாய் செருவெங்கூத்தேபுரிவாய்!
அன்னை! அன்னை! ஆடும் கூத்தை
நாடச்செய்தாய் என்னை!

4

சக்திப்பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்- சட்டச்
சடசட சட்டென்றுடைபடுதாளம் கொட்டி- அங்கே
எத்திக்கினிலும் நின்விழியனல் போய் எட்டித்- தானே
எரியும் கோலம் கண்டே சாகும் காலம்
அன்னை! அன்னை! ஆடும் கூத்தை
நாடச்செய்தாய் என்னை!

5
காலத்தொடு நிர்மூலம் படும் மூவுலகும்- அங்கே
கடவுள் மோனத்தொளியே தனியாய் இலகும்- சிவன்
கோலம் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்- கையைக்
கொஞ்சித் தொடுவாய்ஆனந்தக் கூத்திடுவாய்!
அன்னை! அன்னை! ஆடும் கூத்தை
நாடச்செய்தாய் என்னை!

English Translation (Remitha Satheesh)
https://alakananda.wordpress.com...​

I
The resounding rhythm of the exploding universe – In the void,
The elements shriek in gleeful bloodlust,
Joined by the Damaru’s beat of annihilation– and there in its midst
You dance, Kali, Chamundi, Kankali!
Mother Oh Mother, you made me seek
Your dance of destiny!
II
The five elements fuse to become one
And the one blends into you, the pure energy
And there, rising in the blazing light, at the slipping speed of thought
You step out in your eternal dance, showering fire!
Mother Oh Mother, you made me seek
Your dance of destiny!
III
Burns the vast ether, burning its soul along– Energy
Striving to move, finds its pathways lost-
The Demon of Destiny wanders aimless in mayhem, - and there
You stride, midst the abstract, reveling in the chaos!
Mother Oh Mother, you made me seek
Your dance of destiny!
IV
Energy, fiend like, makes rhythm thumping heads to heads;
In that pulsating tempo of crushing heads,
The fire of your eyes pours forth into all directions
And there dies Time, beholding itself burning into oblivion
Mother Oh Mother, you made me seek
Your dance of destiny!
V
Time and Universe cease to exist- Only
The tranquil light from His penance persists – Shiva
At His sight, the fiery embers of your wrath melt away
You reach out in a gentle caress and burst into a glorious dance of union!
Mother Oh Mother, you made me seek
Your dance of destiny!

"

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

54
சந்திரன்
Chandrakauns raagam

SUDHA RAGHUNATHAN

https://youtu.be/arf-T8RweP8?si=CuUwIMuIqZAaIBJ7
.
சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்
சரணம் என்று புகுந்துகொண்டேன்
இந்திரியங்களை வென்றுவிட்டேன்
எனது என் ஆசையைக் கொன்றுவிட்டேன்.

பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னாள்
பக்திசெய்து பிழைக்கச் சொன்னாள்
துயர் இலாது எனைச் செய்துவிட்டாள்
துன்பம் என்பதைக் கொய்துவிட்டாள்..

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்
வான்கண் உள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சில் களியைச் செய்தாள்

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

54
கேளடா மானிடவா!

RAJ KJMAR BHARATHY
Granrson of poet Bharathy and a classical music v8calist

https://youtu.be/RNJ1ZH1w4_g?si=XCpFOzODEGTQhmo0

Film Bharathy ( year 2000)
Music Ilayaraja

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை

ஏழைகள் யாருமில்லை
செல்வம் ஏறியோர் என்றுமில்லை
வாழ்வினில் தாழ்வென்றும் இல்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா.

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றத பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓர் தரம் என்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?.

சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்.
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்
மண்ணுக் குள்ளே சிலமூடர்
நல்ல மாதரறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்
வையம் பேதைமை யற்றிடுங் காணீர்

கேளடா மானிடவா!
எம்மில் கீழோர் மேலோர் இல்லை.

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

55
Muruga Muruga

Sudha Ragunathan

https://youtu.be/Cb01xgpVdD0?si=sRPERYCgr0dPPJ43

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

56
Chinnanchiru kiLiye
M.L.VASANTHAKUMARI

Music by Subbaraman
Film. MANAMAGAL

https://youtu.be/kkogug1WIr0?si=QpHkCHaS91kVLKHh

What are the 7 raagams in this song?

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

57
வாழ்க நீ எம்மான்
மகாத்மா காந்தி பஞ்சகம்.

GAYATHRI GIRISH.
.
GAYATHRI GIRISH (MCA,) is a traditional carnatic music vocalist, trained under Madurai Seshagopalan.
She is a reciepient of many awards. She has given recent concerts in Cleveland Thyagaraja ArAdhanai music festival.
Besides concert performances, she is carrying out many music projects to take literary and devotional works, especially in Thamizh to general public..
For Bharathiyar poems project, she is guided by Rajkumar Bhararhi, great grandson of Subramanya Bharathi.

https://youtu.be/NrN3quIkn0w?si=BbUithbpHMyG-YiK.
.
வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரததேசம்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க.
.
அடிமை வாழ்வு அகன்று இ நாட்டார் விடுதலை ஆர்ந்து செல்வம்
குடிமையில் உயர்வு கல்வி ஞானமும் கூடி ஓங்கிப்
படி மிசைத் தலைமை எய்தும்படிக்கு ஒரு சூழ்ச்சி செய்தாய்
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய் புவிக்குள்ளே முதன்மையுற்றாய்..
.
கொடிய வெம் நாகபாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கோ
இடி மின்னல் தாங்கும் குடை செய்தான் என்கோ என் சொலிப் புகழ்வது
இங்கு உனையே
விடிவிலாத் துன்பம் செயும் பராதீன வெம் பிணி அகற்றிடும் வண்ணம்
படி மிசைப் புதிதாச் சாலவும் எளிதாம்படிக்கு ஒரு சூழ்ச்சி நீ படைத்தாய்.
.
தன் உயிர் போலே தனக்கு அழிவு எண்ணும் பிறன் உயிர்தன்னையும்
கணித்தல்
மன் உயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்று உணர்தல்
இன்ன மெய்ஞ்ஞானத் துணிவினை மற்று ஆங்கு இழிபடு போர் கொலை தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியலதனில் பிணைத்திடத் துணிந்தனை பெருமான்
.

.பெரும் கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய் அதனிலும் திறன் பெரிது உடைத்தாம்
அரும் கலைவாணர் மெய்த் தொண்டர்தங்கள் அற வழி என்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன் சேர் ஒத்துழையாமை நெறியினால் இந்தியாவிற்கு
வரும் கதி கண்டு பகைத் தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே.

....
Aside.
"Cleveland Thyagaraja Festival 2024 |
Vid Gayathri Girish & Team"
https://youtu.be/6_OG1-4qwD4?si=7xnxdIIapazlm4-P
.
Last edited by sam on 31 Mar 2025, 12:55, edited 2 times in total.

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

58
முன்னை இலங்கை அரக்கர் அழிய.
atANA

Sangitha kalAnidhi
Dr.SOWMYA.

https://youtu.be/cSAYIdBl3M8?si=8bezSEWUXiHrI6Ei

A breath-taking masterpiece
of poetry. All the stanzas are given..
Special thanks to Dr.Sowmya for renderung.
1
முன்னை இலங்கை அரக்கர் அழிய
........முடித்த வில் யாருடை வில் ? எங்கள்
அன்னை பயங்கரி பாரததேவி நல்
.......ஆரிய ராணியின் வில்
.
2
இந்திரசித்தன் இரண்டு துண்டாக
........எடுத்த வில் யாருடை வில் ? எங்கள்
மந்திரத் தெய்வம் பாரதராணி
.......வயிரவி தன்னுடை வில்.

3
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
........உலகு இன்பக் கேணி என்றே ...மிக
நன்று பல் வேதம் வரைந்த கை பாரத
........நாயகிதன் திருக்கை.


4
சித்தமயம் இவ் உலகம் உறுதி நம்
... சித்தத்தில் ஓங்கிவிட்டால் துன்பம்....
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல்
........ஆரிய ராணியின் சொல்.

5
சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்
........தட்டி விளையாடி நன்று
உகந்ததோர் பிள்ளை முன் பாரதராணி
........ஒளியுறப் பெற்ற பிள்ளை.

6
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
........கல் ஒத்த தோள் எவர் தோள்? எம்மை
ஆண்டு அருள்செய்பவள் பெற்று வளர்ப்பவள்
........ஆரியர் தேவியின் தோள்

...
7
சாகும் பொழுதில் இரு செவிக் குண்டலம்
........தந்தது எவர் கொடைக் கை? சுவைப்
பாகு மொழியில் புலவர்கள் போற்றிடும்
........பாரதராணியின் கை


8
போர்க்களத்தே பரஞான மெய்க் கீதை
........புகன்றது எவருடை வாய் ? பகை
தீர்க்கத் திறம் தரு பேரினள் பாரத
.......தேவி மலர் திருவாய்
.
9
தந்தை இனி துறந்தான் அரசாட்சியும்
........தையலர்தம் உறவும் இனி
இந்த உலகில் விரும்புகிலேன் என்றது
........எம் அனை செய்த உள்ளம்.

10
அன்பு சிவம் உலகத் துயர் யாவையும்
........அன்பினில் போகும் என்றே இங்கு
முன்பு மொழிந்து உலகு ஆண்டதோர் புத்தன்
........மொழி எங்கள் அன்னை மொழி.

11
மிதிலை எரிந்திட வேதப் பொருளை
........வினவும் சனகன் மதி தன்
மதியினில் கொண்டதை நின்று முடிப்பது
......வல்ல நம் அன்னை மதி
.

12
தெய்வீகச் சாகுந்தலம் எனும் நாடகம்
......செய்தது எவர் கவிதை? அயன்
.செய்வது அனைத்தின் குறிப்பு உணர் பாரத
......தேவி அருள் கவிதை
Last edited by sam on 31 Mar 2025, 15:02, edited 1 time in total.

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

59
மாலைப் பொழுதில் ஒரு மேடை மிசையே.

SANGEETHA KALAANIDHI
BOMBAY JAYASREE.

https://youtu.be/1PNEnfwAg70?si=HUowIVhtFyfXMmPE.
.

மாலைப் பொழுதில் ஒரு மேடை மிசையே
வானையும் கடலினையும் நோக்கி இருந்தேன்
மூலைக் கடலினை அவ் வான வளையம்
முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி
நேரம் கழிவதிலும் நினைப்பு இன்றியே
சாலப் பலபல நல் பகற்கனவில்
தன்னை மறந்து அலயம்தன்னில் இருந்தேன்

ஆங்கு அப்பொழுதில் என் பின்புறத்திலே
ஆள் வந்து நின்று எனது கண் மறைக்கவே
பாங்கினில் கை இரண்டும் தீண்டி அறிந்தேன்
பட்டுடை வீசு கமழ்தன்னில் அறிந்தேன்
ஓங்கி வரும் உவகை ஊற்றில் அறிந்தேன்
ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டில் அறிந்தேன்
வாங்கி விடடி கையை ஏடி கண்ணம்மா
மாயம் எவரிடத்தில் என்று மொழிந்தேன்.
.
சிரித்த ஒலியில் அவள் கை விலக்கியே
திருமித் தழுவி என்ன செய்தி சொல் என்றேன்

நெரித்த திரைக் கடலில் என்ன கண்டிட்டாய்
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன?
பேசுதி என்றாள்.
.
நெரித்த திரைக் கடலில் நின் முகம் கண்டேன்
நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின் முகம் கண்டேன்
சின்னக் குமிழிகளில் நின் முகம் கண்டேன்
பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்றது உன் முகம் அன்றிப் பிறிது ஒன்றில்லை
சிரித்த ஒலியினிலுள் கை விலக்கியே
திருமித் தழுவி அதில் நின் முகம் கண்டேன்

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

To rasikas of BharathY..
Thank you for your great interest.

Immense gratitude to sangitha kalAnidhis like Sudha Ragunathan, Dr.Sowmya, Bombay Jayasree, Bombay sisters (Saroja and Lalitha), Maharajapuram Santhanam and
other great vocalists like Jesudas, Rajkumar Bharathy, Gayathri Girish, Nithyasri Mahadevan and ILAYATAJA who have rendered these immortal songs
and spread them among people far and
wide in musical form,.
Doyens of earler era , like Smt. DKP, MSS and Ncv stand out as beacons.
.
It is fervently wished that RaGA sisters take up a few more devotional songs, set them to tune and do their share.

The great epic Panchaali sabadam so rich in poetry, piety and spirit still awaits deserving treatment in stage by vocalists.
With only minimum orchestration.

We can find authentic lines of Subramanya Bharathi
In the following site in thamizh script.
.
https://sangampedia.net/barathiyar-kavi ... daradaivu/.


1.தேசீய கீதங்கள்

2.தோத்திரப் பாடல்கள்
(பக்திப் பாடல்கள்)
3.வேதாந்தப் பாடல்கள்
(ஞானப் பாடல்கள்)
4.பல்வகைப் பாடல்கள்
5.தனிப் பாடல்கள்
6.சுயசரிதை
7.கண்ணன் பாட்டு
8.பாஞ்சாலி சபதம்
9.குயில் பாட்டு
10.வசன கவிதை
11.பிற்சேர்க்கை(புதிய பாடல்கள்).
Maintained by
முனைவர் ப.பாண்டியராஜா..
M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)
Thank you Sirs.

.
Last edited by sam on 31 Mar 2025, 16:48, edited 2 times in total.

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

60.
செய்யும் தொழில்
NITHYASRI MAHADEVAN

https://youtu.be/OYL-xxF2NWI?si=Ad28KnnGcTAcoEw_

செய்யும் தொழில் உன் தொழிலே காண்
சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்
வையம் தனையும் வெளியினையும்
வானத்தையும் முன் படைத்தவனே
ஐயா நான்முகப் பிரமா
யானை முகனே வாணிதனை
கையால் அணைத்துக் காப்பவனே
கமலாசனத்துக் கற்பகமே

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

61
Bharathiar Songs
Nithyasree Mahadevan.
.
https://youtu.be/nXWyzj2q8pI?si=jwFFrzhGurptJRfv
.
00:08​ -- -- Seiyum Thozhile
02:10​ -- -- Theeratha Vilayattu
08:01​ -- -- Om Sakthi
12:13​ -- -- Nalladhor Veenai
18:12​ -- -- Thoondir Puzhuvinai
24:10​ -- -- Muruga
28:39​ -- -- Vellai Thamarai
33:19​ -- -- Varuvai Varuvai
38:31​ -- -- Asai Mugham
44:32​ -- -- Villinai
48:04​ -- -- Chinnanchiru Kiliye
52:41​ -- -- Nenjil Uramumindri

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »


sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

BHARATHIYAR SONGS
MAHARAJAPURAM SANTHANAM
...
https://youtu.be/0NFw43ZgizA?si=Cdpgd63h2Pgpm4ia
.
Songs List:
1. Vellai Kamalathile 00:00​
2. Mogathai 06:58​
3. Suttum Vizhi 12:44​
4. Ayiram Deivangal 17:45​
5. Chinnanchiru Kiliye 23:02​
6. Asai Mugam 29:09​
7. Nenjil Uram 34:52​
8. Vellai Thamarai 40:09​

sam
Posts: 969
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

Ayiram Deivangal.
62

Maharajapuram Santhanam

https://youtu.be/oi-nZIRdQoU?si=MXll5s4bXRtFWagA

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?
.
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.

.போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே-உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.

Post Reply