Pratyaksham Bala wrote: ↑28 Apr 2025, 07:46
.
அருமை !
கலி விருத்தம்
கூவிளங்காய் !
வார்கழலைத் தூக்கியாடு நாயகனே நீறுபூசி
பார்முதலாய் பூதமைந்தும் நின்விருப்ப மொன்றினாலே
ஏர்சிறக்க சீர்சிறக்கு மானிடரை
யுய்த்திடவே
தேர்சிறந்த ஊரிலேயும் வந்தனையோ நல்விடங்கா !
நன்றி!
some more
காலகால னாகியன்று காலனைநீ எத்தினாய்
ஆலகால முண்டதாலே நீலகண்ட னாகினாய்
ஆலமரங் கீழதாகி நால்வருக்குக் கூறினாய்
ஞாலமிதை நீள்விரித்து பின்சுருக்கு மாதியே
பாலருந்தி நின்புகழைப் பாடிசென்ற காழியன்
வாளறுத்து தன்மகவை ஊட்டுசிறுத் தொண்டரும்
நீலகண்டர் நாவரையன் சுந்தரனும் போலவே
ஆலவாயிற் சொக்கனேநீ ஆக்கிடுவாய் எங்களை
காதலாகி உள்கசிந்த காழியூரன் தீந்தமிழை
ஓதலாகும் ஓதலாகும் எப்பொழுதும் நாவினிக்க
வாதவூரன் வாசகத்தை கேட்டவர்க்கு நெஞ்சுருகும்
போதமேகுந் தோணியாகு மே
ஊனெனாகி யாட்டுவிக்கு முயிரெனாகி யாவுமாகி
தேனுடைத்த பூத்தொடுத்து நான்துதிக்கு தேவுமாகி
நானெனும்பொய் போக்குவிக்கு மாதியாகி யந்தமாகும்
வாணெடுங்கண் மாதுபாதி கொண்டவனின் தாள்புகலே
உந்திமலர் தானுதித்த நான்மறையின் வித்தகனும்
குந்திமகற் காகதூது சென்றவனும் தேடினரேச்
செந்தழலைக் கையெடுத்த தேவனவன் தாள்முடியும்
அந்திவண்ண னீசனவன் சித்தமின்றி யாகுவதோ
----------------
திங்களணித் தூயவனும் மாலவனும் மூவருமே
சங்கமொத்த நற்கழுத்து நாயகிக்கு ஓரிருக்கை
இங்கிதையுந் தானுணரார் செய்வதுவுஞ் சொல்வதென்னே
தங்களுக்குள் ஏசிபேசி வாழ்விதையுந் தான்தொலைப்பார்
-----------------------
secular themes
தூக்கலாக நற்புளியும் வத்தலுடன் தாளிதமும்
சேர்க்கவாகும் காயமோடு சுண்டவைத்த அக்குழம்பு
ஏக்கமின்றி அன்னமோடு சேர்த்துநன்றா யுண்டிடவே
நாக்குமிகத் தான்மகிழும் பொய்யிலையே மெய்யுரைத்தேன்
சிக்கெடுத்துப் பின்னலிட்டுப் பூமுடித்த கார்குழலாள்
தக்கதொரு நேரமதில் கண்ணசைவால் தானுணர்த்த
அக்கணமே ஆண்மகனின் நெஞ்சுவிம்மிப் போகுமென்றும்
மிக்கவாகும் கட்டுமீறி ஒத்தபேருங் காதலாமே
தண்ணிலவும் வெள்ளலையின் கீதமுமே நற்றுணையாய்க்
கொண்டுசெல்லு நேரமதில் வட்டமிடும் நெஞ்சலைகள்
எண்ணமெலாம் தான்விலக ஓரமைதித் திண்ணமாக
வண்ணமாக வந்துகவ்வும் அச்சுவையும் நற்சுவையே
கொண்டவனைக் கொண்டவளும் கொண்டவளைக் கொண்டவனும்
எண்டிசையும் ஈடிலாத செல்வமென்று நம்பிவிட்டால்
வண்டுமொய்க்கும் வாசமலர் வாழ்வதாகும் செப்பினாற்பின்
விண்டுரைக்க யேதுமில்லை யே