Subramania Bharati

Carnatic composers (other than performing vidwans)
Post Reply
sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

Aadi Param Porule ·
Subramanya Bharathi.

SUHA RAGHUNATHAN
.
https://youtu.be/cSHmI_CcVus?si=HyLVP0UuHkIyuRlZ

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி


What a beautiful rhyming !

வாழ்க நிரந்தரம்
வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே

வானம் அளந்ததனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே


ஏழ்கடல் வைப்பினும்
தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே


எங்கள் தமிழ் மொழி
எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே

சூழ்கலி நீங்க
தமிழ் மொழி ஓங்க
துலங்குக வையகமே

தொல்லை வினைதரு
தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே


வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே

வானம் அறிந்ததனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே.
..
Anuradha Raman.


https://youtu.be/iJQzt8nzCeM?si=0lYAg1wA0G8CIQJg

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

Bombay Jayashri|

Mahakavi Bharathiyar| Bharathi

https://youtu.be/OWIcBeWdDeY?si=J29XcfAS45MQpWHK

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

அங்கமே தளர் வெய்திய காலையும்
அங்கோர் புன்னரி தந்திடு மூனுணாச்
சிங்கமே யென வாழ்தல் சிறப்பெனாச்
செம்மை கூறிநந் தாய்ப் பெருந் தேயத்தைப்
பங்கமே பெறு மிந்நிலை நின்றுயர்
பண்டை மாண்பிடைக் கொண்டினி துய்த்திடும்
வங்கமே யென வந்தனை வாழிநீ
வங்கமே நனி வாழிய வாழிய


கற்பகத் தருப் போலெது கேட்பினும்
கடிது நல்கிடும் பாரத நாட்டினிற்
பொற்புறப் பிறந்தேம். நமக்கோர் விதப்
பொருளு மன்னிய ரீதல் பொறுக்கிலேம்
அற்பர் போலப் பிறர்கர நோக்கியா
மவனி வாழ்தலா காதென நன்கிதை
வற்புறுத்திடத் தோன்றிய தெய்வமே
வங்கமே நனி வாழியவாழிய

பாரதி தமிழ்


கண்ணினீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய்
கவினுறும் பரதப்பெருந் தேவியே
உண்ணிகழ்ந்திடுந் துன்பங் களைதியால்
உன்றன் மைந்தர்கள் மேனெறி யுற்றனர்
பெண்ணி னெஞ்சிற் கிதமென லாவது
பெற்ற பிள்ளைகள் பீடுறவே யன்றோ?
மண்ணிநீ புகழ் மேவிடவாழ்த்திய
வங்கமே நனி வாழிய வாழிய

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

I come to know that the above poem was recited and sung by Subramanya Bharathy in a public meeting in Marina beach organized by patriotic students to felicitate BEPIN CHANDRA PAL, the extremist Congress leader from Bengal.
There was a huge popular revolt by Bengali intellgensia , youth, students and common people, againt the PARTITION OF BENGAL by the scheming Lord Curzon who sowed the seeds of muslim separatism in Bengal..
Bengal once again led India. The Colonial govt had to withdraw but the capital was shifted to Delhi.

15 செப்டெம்பர் 1905 விசுவாவசு ஆவணி 31
Bharathy was 24 then.
From the book by Periyasamy Thooran.

நேற்று மாலை நடந்த கடற்கரைப் பெருங் கூட்டத்தில்
மிஸ்டர் சி. சுப்பிரமணிய பாரதியார் சொல்லியவை.
I am trying to locate a rendition in music.

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

"TOP 50 Songs of Subramania Bharathi |
One Stop Jukebox | பாரதியார் பாடல்கள் |
....
https://youtu.be/2CXAp09ldVU?si=4JOVGila68p3SwpZ.

50 பாடல்கள்
(திரைப்படம் மற்றும் தேசப்பற்று பாடல்கள்). பாடல்களை பாடியவர்கள் T.M. சௌந்தரராஜன், S.P.பாலசுப்ரமணியம், K.J. யேசுதாஸ், வாணி ஜெயராம், Dr. சீர்காழி கோவிந்தராஜன் போன்ற மாபெரும் பாடகர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு!

Track Details :
CLICK on the timing mentioned below to listen your favorite song.

00:00:01​ - Kaakki Siraginiley
00:02:41​ - Kaatru Veliyidai
00:06:22​ - Sindhunadhiniyin Misai
00:12:38​ - Veenaiyadi Neeyenakku
00:16:32​ - Engiruntho Vanthaan
00:20:37​ - nallathor Veenai
00:24:18​ - Theerththa Karaiyiniley
00:26:56​ - Odi Vilaiyaadu
00:30:38​ - Paarukkulle nalla
00:33:17​ - Endru Thaniyum
00:35:47​ - Bharata Desamenru
00:43:51​ - Thanneer Vitto
00:46:58​ - Neenji Uramumindri
00:50:15​ - Enthaiyum Thaayum
00:54:17​ - Nenjukku Neethi
00:57:05​ - Aaduvome
01:01:35​ - Ethanai Kodi Inban
01:05:36​ - Achchamillai
01:08:35​ - Theeratha Vilaiyaatu Pillai
01:12:47​ - Thaayin Manikodi (1972)
01:15:58​ - Vazhiya Sentamizh
01:16:57​ - Chinnakkuzhandaigal
01:19:37​ - Ninnaiye Rathi Endru
01:24:37​ - Chinnanchiru Kiliye
01:28:55​ - Bhakthiyudaiyaar
01:31:30​ - Olipadaitha Kanninaai
01:34:28​ - Karpaga Vinayaga
01:38:09​ - Pillai Praayathile
01:42:04​ - Yaamarintha Mozhigalile
01:45:58​ - Mangiyathore Nilavinile
01:48:55​ - Thohai Mel Ulavum Kandhan
01:51:05​ - Malarinmevuthiruve
01:55:16​ - Jaya Bherigai Kottada
01:58:37​ - Varuvaai Varuvaai
02:02:03​ - Thikku Theriyaatha
02:07:32​ - Villinaiyotta Puruvam
02:10:41​ - Vande Mataram - Nalirmani Neerum
02:16:39​ - Sentamizh Nadenum Podinile
02:19:57​ - Nallathor Veenaiseithe
02:23:01​ - Senthamizh Naadennum
02:26:33​ - Nenjil Uramumindri
02:30:28​ - Odi Vilayadupara
02:35:25​ - Aaduvome
02:38:42​ - Vellippani Malaiyin - 1985
02:42:05​ - Shakthi Vellathile
02:46:31​ - Payum Olli Nee Enakku
02:51:34​ - Thanneer Vitta Valarthom
02:57:30​ - Kaadhal Kaadhal Kaadhal
03:01:45​ - Manadhil Urudhi Vendum
03:05:14​ - Uyire Ninadhu Perumai

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

Veera Sudhandhiram -
Senjurutti -
K. B. Sundarambal".

.
https://youtu.be/OwWJGWiwG74?si=Ybw6CeBlUQyVU3-N

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா

https://youtu.be/kNBiZYHXLv0?si=QzI0TyB4qQt4CDH9
1
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா
பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா
தண்மை இன்பம் நல் புண்ணியம் சேர்ந்தன
தாயின் பெயரும் சதி என்ற நாமமும்

#2
அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பம் தீர்வது பெண்மையினாலடா
சூரப் பிள்ளைகள் தாய் என்று போற்றுவோம்

#3
வலிமை சேர்ப்பது தாய் முலைப் பாலடா
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலி அழிப்பது பெண்கள் அறமடா
கைகள் கோத்துக் களித்து நின்று ஆடுவோம்

#4
பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான்
பேணுமாயில் பிறகு ஒரு தாழ்வு இல்லை
கண்ணைக் காக்கும் இரண்டு இமை போலவே
காதல் இன்பத்தைக் காத்திடுவோமடா

#5
சக்தி என்ற மதுவை உண்போமடா
தாளம்கொட்டித் திசைகள் அதிரவே
ஒத்து இயல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர் வியக்கக் களித்து நின்று ஆடுவோம்

#6
உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா
ஊது கொம்புகள் ஆடு களிகொண்டே

#7
போற்றி தாய் என்று தோள் கொட்டி ஆடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதல்கிளிகட்கே

நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண் இடைப் பெண் ஒருத்தி பணியிலே

#8
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா
போற்றி தாய் என்று பொன் குழல் ஊதடா

காற்றில் ஏறி அவ் விண்ணையும் சாடுவோம்
காதல் பெண்கள் கடைக்கண் பணியிலே

#9
அன்னம் ஊட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்

கன்னத்தே முத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும் பொன் கைகளைப் பாடுவோம்

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

திருவைப் பணிந்து நித்தம்
செம்மைத் தொழில் புரிந்து


Sangeetha kalaaNidhi
Dr.SOWMYA

https://youtu.be/V396MJkYGck?si=jdOw-5XajtnOrpQ2



திருவைப் பணிந்து நித்தம்
.... செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே - கிளியே! -
.... மகிழ்வுற் றிருப்போமடி!

வெற்றி செயலுக் குண்டு
.... விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும் - கிளியே! -
.... கவலைப் படலாகுமோ?
.
துன்ப நினைவுகளும்
.. சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியுமடீ! - கிளியே! -
..அன்புக் கழிவில்லை காண்!

ஞாயிற்றை யெண்ணி யென்றும்
.. நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண் டுலகில் - கிளியே! -
..அழிவின்றி வாழ்வோமடீ!

தூய பெருங்கனலைச்
சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால் - கிளியே!
. நெருங்கித் துயர் வருமோ? .
.
Meaning:
Let us worship “thiru” (Lakshmi) everyday, do creditable work, and then wait for whatever is in store for the events to happen. Let us be happy with the outcome as it occurs.

When we do honest work, it will meet with success. That is what natural law dictates. We learnt that from our experience. Then why worry?

Misery inducing thoughts, fatigue, and fear will be destroyed when love exists. Love does not die.
Thinking about the Sun and training to attain equanimity we can live for thousand years in this world without any problem.

If we worship (with love) Lord SubramaNya who is representative of pure fire, misery will not touch us..
.courtesy
https://periscope-narada.blogspot.com/2 ... 4538857619
.

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

வையம் முழுதும் படைத்தளிக் கின்ற

Vaiyam Muzhuthum –*
Mahakavi” Subramania Bharathiyar

Maharajapuram S.Ganesh Viswanathan

https://share.google/ZuekrV89bEs5UxgXa

வையம் முழுதும் படைத்தளிக்கின்ற
... மஹாசக்தி தன்புகழ் வாழ்த்துகின்றோம்;
செய்யும் வினைகள் அனைத்திலும் வெற்றி
....சேர்ந்திட நல்லருள் செய்கவென்றே!

பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்
.....புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம்;
வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
.....மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே!

வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை
.....மேவிடும் சக்தியை மேவுகின்றோம்;
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை
.....யாங்கள் அறிந்திட வேண்டுமென்றே!

உயிரெனத் தோன்றி உணவுகொண்டேவளர்ந்
.....தோங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்;
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்
......பாலித்து நித்தம் வளர்க்கவென்றே.

சித்தத்திலே நின்று சேர்வதுணரும்
.....சிவசக்தி தன்புகழ் செப்புகின்றோம்;
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
....எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே.

மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்
....வையமிசை நித்தம் பாடுகின்றோம்;
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
.....நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
.....ஓம் சக்தி என்றுரை செய்திடுவோம்;
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார்;சுடர்
.....ஒண்மைகொண்டார்,உயிர் வண்மை கொண்டார்

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

Vande Mataram
Tamizh -
Ranjani - Gayatri|
Subramania Bharatiyar"..
https://youtu.be/UT5idyyWkUY?si=TSsUPHSWoNkRR-2U..

Tonight, on the eve of Subramanya Bharatiyar's birth anniversary, we offer our humble tribute to Mahakavi by presenting his Vande Mataram. A song that has stirred courage, devotion and unity and desha bhakti across generations. Where each word rings with the conviction, emotion and powerful thoughts of this incomparable poet - our beloved Mahakavi!

நளிர் மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும், கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை, வாழிய அன்னை! (வந்தே) 1

தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும், தேமொழிப் பொலியும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே) 2

.....
அறிவும் நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ,

தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ,

ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே. (வந்தே) 4

பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திதழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ! (வந்தே) 5

திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை,
மருவு செய்களின் நற்பயன் மல்குவை,
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை,
பெருகு மின்ப முடையை, குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை, பல்பணி பூண்டனை,
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய் நின் பதங்கள் இறைஞ்சுவோம்! (வந்தே

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

'Paarukkulle
Padmashree
Dr Sirkazhi S Govindarajan"

https://youtu.be/Ax8VUXWjL6Y?si=a_iGs2_MRc33nsrq.
Padmashree' Dr Sirkazhi S Govindarajan is a popular Vidwan with excellent felicity of his voice and this song is from a patriotic Thamizh Movie titled "Kappalottiya Thamizhan".
...
Uploaded by
APKoil N.Saptha gireesan

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

Chinnanchiru Kiliye -
Mahakavi Subramanya Bharati -
S Aishwarya and S Saundarya" .

https://youtu.be/cFlPgUsIiFs?si=1U-AuxCaTY1UDiuw

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

Casually checked up the views..
1,11,000
Amazing. Thanks to so many Sangita kalaanidhis who have taken the immortal poems to the people..
Now, 100 years have gone since he passed away in penury.

53. கரும்புத் தோட்டத்திலே

(ஹரிகாம்போதி ஜன்யம்..ராகம் - ஸைந்தவி தாளம் - திஸ்ரசாப்பு)

பல்லவி

கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே

சரணங்கள்

கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக்
(கரும்புத்தோட்டத்திலே)

பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது
எண்ணம் இரங்காதோ? - அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக்
(கரும்புத்தோட்டத்திலே)

நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ? - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர்
(கரும்புத்தோட்டத்திலே)

நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ? - ஹே
வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி!
(கரும்புத்தோட்டத்திலே)

https://youtu.be/vqKhX3tSlho?si=T2njQvyuZfbsQ1fr.
.
"Karumbu Thottathile" (In the Sugarcane Plantations) is one of the most poignant, socially conscious poems written by the legendary Tamil nationalist poet Mahakavi Subramanya Bharathy.

Madras Musings

Set in the Saindhavi raga and Misra Chapu tala, this deeply moving song was composed by Bharathiyar to expose the horrifying plight, exploitation, and immense suffering of Indian indentured labourers—particularly Tamil women—who were shipped off to the sugar
Meaning & English Translation
The Refrain (Pallavi)
In the sugarcane plantations—Oh! In the sugarcane plantations!


The song vividly describes the extreme physical and emotional suffering of Indian women forced into brutal labor in Fiji, working until their hands and legs wither. Bharathiyar appeals to the divine, questioning why these women must suffer such humiliation and exploitation, comparing their plight to that of oil-press oxen. The lyrics express deep sorrow over the women's longing for their distant homes, their constant weeping, and the loss of their dignity, while calling upon Goddess Kali to intervene and stop this injustice.

.https://youtu.be/r8itifm6cx0?si=Ij5yuFJxSiY6yBze

Here is a reference to Yadhugiri ammaaL
,the first to hear this song, sung by Bharathi himself.

@arasi madam may like this


...

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

OLi Tharuvadhu Yaadhu
- Nasikabhushani
Valam Varum Bharati EP18 |
Gayathri Girish"
.
https://youtu.be/r7jV3jlwH3Q?si=5qVLBqY4lU184Yq5
.
A rare song in prose-poetry
On SUN God.
This week on Valam Varum Bharati, we present a unique composition of Mahakavi Subramania Bharathi written on the Sun and its primordial role in sustaining all life in the universe. Set to tune in raga Nasikabhushani by Dr. Rajkumar Bharathi, this composition also follows a special lyrical format called "Vachana Kavidhai".

https://bharathipayilagam.blogspot.com/ ... 2.html?m=1

ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது?
வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது?
மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது?
உயிர் எவன் தருகின்றான்?
புகழ் எவன் தருகின்றான்? புகழ் எவனுக் குரியது?
அறிவு எதுபோல் சுடரும்?
அறிவுத் தெய்வத்தின் கோயில் எது?
ஞாயிறு,
அது நன்று.

2
நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி,
மின்னல், இரத்தினம், கனல், தீக்கொழுந்து –
இவை யெல்லாம் நினது நிகழ்ச்சி.
கண் நினது வீடு.
புகழ், வீரம் – இவை நினது லீலை.
அறிவு நின் குறி; அறிவின் குறி நீ.
நீ சுடுகின்றாய், வாழ்க நீ காட்டுகின்றாய், வாழ்க –
உயிர் தருகின்றாய், உடல் தருகின்றாய்
வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்,
நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க!

3

வைகறையின் செம்மை இனிது.
மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க.

உஷையை நாங்கள் தொழுகின்றோம்.
அவள் திரு.
அவள் விழிப்புத் தருகின்றாள், தெளிவு தருகின்றாள்.
உயிர் தருகின்றாள், ஊக்கந் தருகின்றாள்.
அழகு தருகின்றாள், கவிதை தருகின்றாள்.
அவள் அமுதம்.
அவள் இறப்ப தில்லை.
வலிமையுடன் கலக்கின்றாள்.
வலிமைதான் அழகுடன் கலக்கும்.
இனிமை மிகவும் பெரியது.

வட மேருவிலே பலவாகத் தொடர்ந்து வருவாள்.
வானடியைச் சூழ நகைத்துத் திரிவாள்.
அவளுடைய நகைப்புகள் வாழ்க!

தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள்,
அன்பு மிகுதியால்
ஒன்று பலவினும் இனிதன்றோ?
வைகறை நன்று. அதனை வாழ்த்து கின்றோம்.
.

sam
Posts: 1328
Joined: 04 Mar 2020, 20:25

Re: Subramania Bharati

Post by sam »

சந்திரமதி

Pachai Kuzhandhaiyadi -
Bharathiyar Song
by
Kalakadu Ambujam"
..
https://youtu.be/OgT3sG3Asuo?si=8zxRKfH5U4r9jt-H
பச்சைக் குழந்தை யடி!-கண்ணிற்
.. பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது!;-என்தன்
.. இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே-நல்ல
............நாகமணி யுள்ளதென்பார்;
துச்சப்படு நெஞ்சி லே-நின்தன்
............சோதி வளரு தடீ!

பேச்சுக் கிடமே தடி!-நீ
.........பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி!-என்தன்
........ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த-வெள்ள
.......நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,
தீச்சுடரை வென்ற வொளி-கொண்ட
........தேவி!நினை விழந்தேனடி!

நீலக் கடலினிலே-நின்தன்
........நீண்ட குழல் தோன்றுதடி!
கோல மதியினி லே-நின்தன்
........குளிர்ந்த முகங் காணுதடி!
ஞால வெளியினி லே-நின்தன்
.........ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே-நின்தன்
........காதல் விளங்குதடி! (பச்சைக் குழந்தை யடி!)

Post Reply