Appar Thevaaram - Transliteration and meaning please

Place to go if you want to ask someone identify raga, tala, composer etc or ask for sāhitya (lyrics) or notations or translations.
Post Reply
Carnaticworldmusic
Posts: 67
Joined: 18 Feb 2023, 02:05

Appar Thevaaram - Transliteration and meaning please

Post by Carnaticworldmusic »

need for below Appar Thevaaram to be Transliterated correctly in english and meaning please
on the Lord of Kadambanthurai (Siva sthalam)
1
முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்

அற்றம் தீர்க்கும் அறிவிலள் ஆகிலும்

கற்றைச் செஞ்சடையான் கடம்பந்துறை

பெற்றம் ஊர்தி என்றாள் எங்கள் பேதையே

2
தனகு இருந்ததோர் தன்மையர் ஆகிலும்

முனகு தீரத் தொழுது எழுமின்களோ

கனகப் புன்சடையான் கடம்பந்துறை

நினைய வல்லவர் நீள்விசும்பு ஆள்வரே

3
ஆரியம் தமிழோடு இசை ஆனவன்

கூரிய குணத்தார் குறி நின்றவன்

காரிகை உடையான் கடம்பந்துறை

சீரியல் பத்தர் சென்று அடைமின்களே
4
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை

வண்ண நன் மலரான் பல தேவரும்

கண்ணனும் அறியான் கடம்பந்துறை

நண்ண நம் வினையாயின நாசமே

5

மறை கொண்ட அம்மனத்தானை மனத்துளே

நிறை கொண்ட அந்நெஞ்சின் உள்ளுற வைம்மினோ

கறைகண்டன் உறையும் கடம்பந்துறை

சிறை கொண்ட அவ்வினை தீரத் தொழுமினே

6
நங்கை பாகம் வைத்த நறுஞ்சோதியை

பங்கம் இன்றிப் பணிந்து எழுமின்களோ

கங்கைச் செஞ்சடையான் கடம்பந்துறை

அங்கம் ஓதி அரன் உறைகின்றதே

7
அரிய நான்மறை ஆறங்கமாய் ஐந்து

புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்

கரிய கண்டத்தினான் கடம்பந்துறை

உரியவாறு நினை மட நெஞ்சமே

8
பூமென் கோதை உமை ஒரு பாகனை

ஓமம் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தால்

காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை

நாமம் ஏத்த நம் தீவினை நாசமே

9
பார் அணங்கி வணங்கிப் பணி செய

நாரணன் பிரமன் அறியாததோர்

காரணன் கடம்பந்துறை மேவிய

ஆரணங்கு ஒரு பால் உடை மைந்தனே
10
நூலால் நன்றா நினைமின்கள் நோய் கெடப்

பால் ஆனைந்து ஆடும் பரமனார்

காலால் ஊன்று உகந்தான் கடம்பந்துறை

மேலாம் நாம் செய்த வல்வினை வீடுமே

Carnaticworldmusic
Posts: 67
Joined: 18 Feb 2023, 02:05

Re: Appar Thevaaram - Transliteration and meaning please

Post by Carnaticworldmusic »

need transliteration please like the three I have heard and tried to do below
1
Muttrilaa mulayaal ival aaghilum
attrran theerkkum arivilall aaghilum
kattrai senjadaiyaan kadambanthurai pettra moorthi endraal engal pedhaye
3
aaryian tamizhodu-isai aanavan
kooriya gunaththaarkku kuri nindravan
kaarigai udaiyaan kadambanthurai
Seeriya Bhakthar Sendradaimeengaley
4
panninin mozhi kettkkum paramaney
vannanan malaraan pala devarum
kannanum ariyaan kadambanthurai
nanna namm vinaiyaayina naasamey

Carnaticworldmusic
Posts: 67
Joined: 18 Feb 2023, 02:05

Re: Appar Thevaaram - Transliteration and meaning please

Post by Carnaticworldmusic »

please provide transliteration in english for the others first , thank you

Carnaticworldmusic
Posts: 67
Joined: 18 Feb 2023, 02:05

Re: Appar Thevaaram - Transliteration and meaning please

Post by Carnaticworldmusic »

can get meaning for select verses after the transliteration is available

Rajani
Posts: 1248
Joined: 04 Feb 2010, 19:52

Re: Appar Thevaaram - Transliteration and meaning please

Post by Rajani »

Please scroll down this page to see transliteration and translation options

https://thevaaram.org/thirumurai_1/song ... D%E0%AE%95

Post Reply