Hello
Can someone please give me word to word meaning please.
https://venkatakavi.org/composition/manruladum-paraman
Thank you very much!!
P
manṛuḷāḍum paraman tanda mahan enṛāl
kunṛutōrum āḍādō aḍiyār kuṛaiyellām teerādō
AP
ninṛoru kāl tookki neelamayilin mēlē
neelakkuṛamānai shatṛē aṇaindāṛ pōlē
tonṛu maṇanda dēva shelviyai orukālē
shumandāḍinālum amarndē irukkavēṇum
MK
tuḷḷu vaḍivēloḍu āḍuvadulahaḷanda māyanum maruhanum
aḷḷipparuhiḍa mooviru mukhamum āṛena ōḍiḍum aruḷum
sholli paruhiḍa tamizhtandu tōya aruḷtandu uhandu
aruḷ ninaindu aḍiyavar pāḍavum āḍārō
C
āḍalenṛa oru arangalaikkenna āḍi āḍum iraivan tillaiyilē
pāḍal enṛavuḍan parindē aruḷavarum paraman muruhan engaḷ ellaiyilē
vēḍanumāhi vandu vēnkaiyumāhi ninṛu virumbi oru mānai koḷḷaiyilē
shooḍum kadamba malar shooḍi shooḍi maṇanda tooya aruḷ ninaindu shollaiyilē
MK
tuḷḷu vaḍivēloḍu āḍuvadulahaḷanda māyanum maruhanum
aḷḷipparuhiḍa mooviru mukhamum ārena ōḍiḍum aruḷum
sholli paruhiḍa tamizhtandu tōya aruḷtandu uhandu
aruḷ ninaindu aḍiyavar pāḍavum āḍārō
In Tamil
ப
மன்றுளாடும் பரமன் தந்த மகன் என்றால்
குன்றுதோறும் ஆடாதோ அடியார்
குறையெல்லாம் தீராதோ
அப
நின்றொரு கால் தூக்கி நீலமயிலின் மேலே
நீலக்குறமானை சற்றே அணைந்தாற் போலே
தொன்று மணந்த தேவ செல்வியை ஒருகாலே
சுமந்தாடினாலும் அமர்ந்தே இருக்கவேணும்
மகா
துள்ளு வடிவேலொடு ஆடுவதுலகளந்த மாயனும் மருகனும்
அள்ளிப்பருகிடமூவிருமுகமும் ஆறென ஓடிடும் அருளும்
சொல்லிப் பருகிட தமிழ்தந்து தோய அருள்தந்து உகந்து
அருள் நினைந்து அடியவர் பாடவும் ஆடாரோ
ச
ஆடலென்ற ஒரு அரங்கலைக்கென்ன ஆடி ஆடும் இறைவன் தில்லையிலே
பாடல் என்றவுடன் பரிந்தே அருளவரும் பரமன் முருகன் எங்கள் எல்லையிலே
வேடனுமாகி வந்து வேங்கையுமாகி நின்று விரும்பி ஒரு மானைக் கொள்ளையிலே
சூடும் கதம்ப மலர் சூடி சூடி மணந்த தூய அருள் நினைந்து சொல்லையிலே
மகா
துள்ளு வடிவேலொடு ஆடுவதுலகளந்த மாயனும் மருகனும்
அள்ளிப்பருகிட மூவிருமுகமும் ஆறென ஓடிடும் அருளும்
சொல்லிப் பருகிட தமிழ்தந்து தோய அருள்தந்து உகந்து
அருள் நினைந்து அடியவர் பாடவும் ஆடாரோ