KavithaigaL by Rasikas

Post Reply
Pratyaksham Bala
Posts: 4242
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

597
வெற்றி வாகை
(கலித்தாழிசை)

கட்டுப்பெட்டி என்று சொல்லி
கொட்டிக் குட்டிச் சாடினார்கள்.

கூட்டை விட்டு ஓடிப்போனேன்,
பட்டி தொட்டி சுற்றிவந்தேன்;
மூட்டை முடிச்சு தூக்கிப்பார்த்தேன்,
மேட்டு வீட்டு வேலைசெய்தேன்.

தட்டுமுட்டு சாமான் விற்றேன்,
புட்டுசுட்டு விற்று வந்தேன்;
ஆட்டுக்குட்டி மேய்த்து வந்தேன்,
மாட்டைக் கட்டி மாரடித்தேன்.

சொட்டுச்சொட்டா துட்டு சேர்த்து
குட்டி வீட்டைக் கட்டி விட்டேன் !

ப்ரத்யக்ஷம் பாலா,
01.06.2006

Pratyaksham Bala
Posts: 4242
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

598
பிறவி
(வெண்டுறை)

பதுமையாய் இராதே எழு;
புதுமையாய் இனிதே உழு.
மத மாச்சரியம் விடு;
நித மாச்சரியம் கொடு.
துன்ப வினைகளைத் தடு;
அன்பு விதைகளை நடு.
மனமொன்றி தினம்தொழு !

ப்ரத்யக்ஷம் பாலா
19.11.2013

Pratyaksham Bala
Posts: 4242
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

600
சித்தி விநாயகா
(கலித்தாழிசை)

சித்தி விநாயகா ! சற்றே குதித்தாடு !

அன்னை வியந்து மகிழ்ந்து குலுங்கிட
ஆடல் அரசனும் ஆர்த்து முழங்கிட
நந்தி மருண்டிட அரவு எழுந்தாட
பக்தர் கூட்டம் பரவசம் பொங்கிட

சித்தி விநாயகா ! நீ சற்றே குதித்தாடு !

ப்ரத்யக்ஷம் பாலா
04.01.2011

Pratyaksham Bala
Posts: 4242
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

022
சுடர் மனம்
(கலிவிருத்தம்)

சமயத்தில் இடர்வரும் சற்றுநாம் துடித்திடுவோம்.
சமயத்தை கைவிட்டால் சங்கடம் தீர்ந்திடுமோ ?
இடம்மாறித் தொழுதிடவே இன்னலும் பறந்திடுமோ ?
சுடர்மனம் கொண்டுவிட்டால் இடரெலாம் ஓடுமன்றோ !

ப்ரத்யக்ஷம்பாலா,
31.03.2003.

Pratyaksham Bala
Posts: 4242
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

154
விவசாயி
(வெண்டுறை)

குளம் நிரம்புது குட்டை தளும்புது -- எங்கள்
​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ குலம் உயருது பாருங்களேன் !
களம் நிறையுது கதிர் குவியுது -- எங்கள்
​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ கனவு மெய்க்குது பாருங்களேன் !
உளம் களிக்குது உடல் சிலிர்க்குது -- நாங்கள்
​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ உணர்ச்சி பொங்கப் பாடுகிறோம் !
வளம் கொழிக்குது வாழ்க்கை இனிக்குது
​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ விக்ன விநாயகா வாழ்த்துகிறோம் !

ப்ரத்யக்ஷம் பாலா
04.08.2011

Pratyaksham Bala
Posts: 4242
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

018
திருவருள்
(வஞ்சித்துறை)

கண்ணன் திருமாலன்
கந்தன் கதிர்வேலன்
எண்ண வருவானே
என்னை அருள்வானே !

ப்ரத்யக்ஷம் பாலா,
11.04.2003.

Pratyaksham Bala
Posts: 4242
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

169
ஒளிமயம் இனியே!
(கலித்தாழிசை)

நாடெங்கும் பக்திக்குப் புத்துயிர் வந்திருக்கு!
வீடெங்கும் மணியோசை தினம்தோறும் கேட்குதையா !

புத்தாக்கக் கோயில்களில் கூட்டம்அலை மோதுதையா!
பத்தாறு பூண்டுவரும் பக்தரும் பலருண்டு.
சத்தமாகப் பாடிவரும் கூட்டமும் சிலவுண்டு.
மத்தாப்பு கொளுத்தியே மகிழ்வோரும் சிலருண்டு.

பக்தி பெருகுது; பணத்துக்கும் குறைவில்லை.
சக்தி கூடுது; சங்கடங்கள் தீருது; ஒளிமயம் இனியே!

ப்ரத்யக்ஷம் பாலா,
20.04.2012

Pratyaksham Bala
Posts: 4242
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

100
ஒளிமிக்க எதிர்காலம்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)

எத்தனையோ உளநல் வழிகள்
​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ பொன்னான நற்பெயர் கொள்ள.
உத்திகள் பற்பல உண்டு;
​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ உணர்ந்து செயல்பட வேண்டும்.
நித்தமும் சிந்தித்தல் நன்று;
​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ நீடித்த நம்பிக்கை வேண்டும்.
எத்திசையும் நம்புகழ் மணக்க –
​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ நாம் ஏற்றம் அடைந்திடுவோம்!

ப்ரத்யக்ஷம்பாலா,
02.06.2006.

Pratyaksham Bala
Posts: 4242
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

142
கண்ணன்
(வெண்டுறை)

எண்ணைக் காப்பிட்டு இளநீரில் குளிப்பாட்டி
வண்ணப் பட்டுடுத்தி விந்தைமணி பலபூட்டி
சின்னக் கண்ணனுக்குச் சிங்காரப் பூச்சூட்டி
தின்னப் பழங்களொடு தித்திப்பும் கைகாட்டி
திருவேதம் சேர்ந்தோத தீபவொளிமிளிர - கண்ணனின்
கண்ணழகில் உளம்நிறைந்து போனதையா!

ப்ரத்யக்ஷம் பாலா,
24.06.2011,

Pratyaksham Bala
Posts: 4242
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

211
வெற்றி வேந்தன்!
(ஆசிரியத்துறை)

தில்லை பூங்கொத்து ஒத்த திரிசடை விரிந்தாட
சொல்ல வொண்ணா விடமுடை அரவு நெளிந்தாட
எல்லை யில்லா அம்பலத்திலவன் அசைந்தாடுவான்
முல்லைவன நாதன் கருகாவூர் குடிகொண்ட அழகன்!

ப்ரத்யக்ஷம் பாலா,
10.07.2012.

Pratyaksham Bala
Posts: 4242
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

014
ஈசன்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அவன்ஒளி உண்டு அனைவரின் உள்ளே!
அதன்ஒளி உணர்ந்து அதனுடன் இணைவோம்!
அனைவரும் அவனென அறிந்ததை அடுத்தும்
அடுக்குமோ இடையிலே அன்னிய அலைகளே ?

ப்ரத்யக்ஷம் பாலா,
10.4.2003.

Pratyaksham Bala
Posts: 4242
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

294
எதிர்கொள் !
(கலிவிருத்தம்)

மிரட்டும் மாடா? மடக்கி அடக்கலாம் !
திருகும் நோயா? துரத்த வழியுண்டு !
வரட்டும் பார்க்கலாம், பயந்து நடுங்காதே !
விரட்டத் தெரிந்தோரை வம்பு என்செயும் ?

ப்ரத்யக்ஷம் பாலா,
03.12.2013.

Post Reply