If you are a venpA buff (in tamil script)

Post Reply
sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

If you are a venpA buff (in tamil script)

Post by sankark »

Please visit and provide feedback for http://www.rasikas.org/forums/viewtopic.php?f=24&t=18328

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

Seems that forum is member only. So for those that are not members but casual browsers, here I go

Recently I started to memorize Abirami Andhadhi - no specific reason - just thought of trying it. Stil only around 20 or so. While at it, I thought of writing some grammatical poems as well and seems venpaa is the easiest one - atleast from grammar perspective. So I set out to write an andhadhi in venpaa. Here you go with the first 10 of my venpaas - hope they are all aligned to the venpaa grammar. Bouquets or bricks? Still have 90 more :)

காப்பு
செய்ய திருவடி அன்னை பெருமையை
துய்ய தமிழினில் யானுமி யற்றவே
கள்ள மிலாதவோர் வேழ முகத்தொரு
வள்ளல் அவனே துணை

முதல் பத்து
மங்கலம் பொங்கியே மண்ணில்நாம் வாழ்ந்திட
சங்கடம் நீங்கியே நம்குலம் ஓங்கிட
எங்குமே தங்கிய இன்னருள் மங்கைதன்
தங்கத் திருத்தாள் சரண் (௧)

சரணடைந்த வர்நற் கதியுறத் தானே
அரணெனநிற் பள்கரும் நீள்குழல் பேதை
திருமுக நன்னகை அம்புயத்தாள் கோதை
கருமலர்க் கண்ணினை ஓர் (௨)

ஓர்மையால் ஓங்குமே உள்ளொளிஅ ருள்கூர்ந்த
பார்வையால் ஓயாதோ சிந்தையுள் ளோட்டம்
அடிமுடி காணவொண்ணா அண்ணா மலையன்
மடிதனில் வீற்றிருந் தாள் (௩)

தாள்தரும் வெற்றியை பேதைமை நீங்கியே
நாள்தொறும் நண்ணியே நன்மைகள் செய்குவீர்
வாள்நெடுங் கண்ணினாள் சேவடிப் பெற்றியை
கோள்களும் கூறுமே கேள் (௪)

கேட்டலும் ஓர்த்தலும் நாவினால் பாடலும்
கோட்டமே சென்றுனைக் காமுறக் காண்டலும்
நின்னருள் இன்றியே ஆகுமோ என்னுயிர்க்
கன்னலே ஏழுலகும் கா (௫)

காத்தலும் ஆக்கலும் இன்றி அழித்தலும்
சேர்த்தலும் பேரருள் மாயம் மறைத்தலும்
செய்பவர் ஐவரைத் தன்னுளே தோற்றிய
மெய்ப்பொருள் தன்னையே காண் (௬)

காண்டலே கண்களுக்கின் பம்திரு மேனி
கேட்டலே காதுக்குப் பேரின்பம் வெண்டா
மரையாள் களிமீதுரக் கூறுமுன்பு கழ்நான்
மறையேற்றும் கற்பகத்தே வே (௭)

ஏரகம்வாழ் கந்தவேளைப் பெற்றதாய வள்நாமம்
தாரகம்கேள் ஏழைநெஞ் சேகமல ஆலயம்வாழ்
தேவியின் மான்மியம் சொல்லவும் கூடுமோநம்
நாவினில் வன்மையுன் டோ (௮)

ஓரிடமுண் டோஅவ ளன்றியே மாந்தரே
சேரிடம றிந்துசேர் வீர்நார ணன்நான்
முகனந்தக் காலனும் போற்றிப் பரவும்
தகதகத் தன்னொளி யாள் (௯)

ஆளுகைக் கேபணிவேன் உன்னையன் றிமற்றோர்
ஆளுகைக் குப்பணியேன் நன்றேஅல் லதன்றே
ஆயினும் செம்பவள வாயினால்நன் மைசொல்லும்
தாயினும் ஆயினசெய் யும் (௰)

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

The second installment..

இரண்டாம் பத்து
செய்யுமே விந்தை பலநூறு அம்புயக்கை
வையமே கூத்தன் இடப்பாக வல்லிதன்
மாயமே நெஞ்சே மனதிலுறு பொய்மைச்
சாயமே நீக்கிடு வாய் (௧௧)

வாயாரச் சொல்லுவோம் ஆனை முகத்தன்
தாயான சுந்தரி குன்றாப் பெருமையை
குஞ்சித சேவடித் தில்லையன் பாதியாம்
வஞ்சியே வாழ்வருள் வாள் (௧௨)

வாளோடு சூலமும் தாங்கிய அந்தரிதன்
மாளாது சொல்லியே வீரமும் தீரமும்
அன்று மகிடனை கூற்றுவன்கை சேர்த்ததோர்
வன்சமர்ப் போர்தொடுத் தாள் (௧௩)

தொடுத்தோம் ஒருமாலை நற்றமிழ்ச் சொல்லால்
அடுத்தோம் அவளடி கோடிநாள் செய்வன்
கதிரவன் போலாங்கே ஓங்கியொளி வீசும்
மதிசூடி ஓர்பாதிக் கே (௧௪)

திக்கெட்டும் கோடிமுப்பத் திமூன்றும் ஓடியே
இக்கட்டு நேருங்கால் சென்றடையும் நாரணன்
பாற்கடல் பாம்பனை யான்தங்கை சாமளை
மேற்கொள்வோம் யாம்பத் தியே (௧௫)

பத்திசெய் வார்க்கில்லை சஞ்சலம் யாவரும்
முத்திசேர் வாரன்றி ஊறுசெய்யும் பொய்ம்மாய
மூவிரண்டுக் காளாகி எண்ணிலடங் காததோர்
தீவினைக் காளாகா ரே (௧௬)

கார்காலம் மாரிதரும் அந்தரியின் பேரருள்கூர்
ஓர்பார்வை ஞாலமெலாம் ஓங்குவிக்கும் ஆரூரில்
வேர்கொண்ட பேரழகி பூங்கணையாள் நல்லருளே
சீர்கொண்ட வாழ்வைத் தரும் (௧௭)

தருவும் தருநிழலும் நற்சுவை காயும்
தருவடி வேரும்கி ளையும்யா தும்நீ
திருவே குறையறு நல்மலரே என்னைக்
கருவூரில் வாராது சேர் (௧௮)

சேர்வதும் உன்னடியே பாடித் திரிந்துடல்
சோர்வதும் உன்பெயரே கங்கையைத் தாங்கும்
சடையன்றன் காதல்ம டப்பிடியே சேயேன்
தடையேதும் தாளேன் இனி. (௧௯)

இனிப்பது என்நாவிற் குன்பெயரே கண்கள்
பணிப்பது நெஞ்சம் நிறைவது உள்ளம்
களிப்பது உன்னை நினைத்தே உவகை
அளிப்பது உன்பேர ருளே (௨௦)

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

மூன்றாம் பத்து

அருளே புரிவாய் அலகிலா அன்புப்
பெருக்கே நிலம்நீர் எரிவளி மேல்விசும்பை
உள்கரந்த சத்தியமே மெய்ஞான போதமெனும்
கள்கரந்த தாமரை யே (௨௧)

தாமரையும் வெட்கும் உனதடிச் சீர்கண்டே
நான்மறை ஏத்தும் சேவடியாய் சிந்துர
வண்ணப்பெண் ணேஆல காலமுண் டாடுமுக்
கண்ணனுக் காருயி ரே (௨௨)

உயிரளித்தாள் ஐயிரண்டு திங்கள் தரித்திப்
பயிர்வளர்த்தாள் அன்பாய் இமையே நொடிக்காது
தாயே ஒருதாயாய் ஊழ்த்தீ வினைநீங்க
சேயேனை ஈன்றெடுத் தாள் (௨௩)

எடுத்தார் கைப்பிள்ளை யாய்இருக் காதே
அடுத்தாரைக் காக்கும் அவளைப் பிடித்தே
அழுக்காறு இன்னாசொல் கோபமவா நீக்கி
ஒழுக்கத்தே நெஞ்சே நிலை (௨௪)

நிலையன்று வாழ்வு எனத்தேர்ந்து என்றும்
தலைவணங்கி கைகுவித்து ஓர்முகமாய்த் திங்கள்
கலைதரித்த மாயவலை பூத்தாளை உள்ளே
நிலைநிறுத்திக் கொள்மன மே (௨௫)

மனமே கணமும் மறவாதே ஞான
தனமே தருவாள் அருமருந் தானாள்
விடமுண்ட கண்டர்க்கு எஞ்ஞான்றும் நம்மை
புடமிட்டு உய்த்தல் தொழில் (௨௬)

இல்லாமற் செய்வானும் மாலோனும் நற்கலை
வல்லாளின் துணையானும் போற்றியஉன் நீர்பிறந்த
ஆயிரமி தழ்பூதாங் கும்அங்கை கண்டாற்பா
ஆயிரம் பூத்தே வரும் (௨௭)

வரட்டும் கணக்கிலா தொல்லைவந் தால்யான்
மிரள்வனோ அம்மே உனதடித் தூசும்போ
தாதோ அவையாவும் போக்க முறைகள்கேட்
காதோ உறங்குதி யோ (௨௮)

ஓலமிட்ட ழைத்த கரிக்கே அருளிய
ஞாலம் விளங்கச்செய் மாலவன் தங்கையைக்
காலன் வருங்கால் நினையாதே உண்டான
காலம் முதலே நினை. (௨௯)

நினைப்பது என்றொன்று உண்டோ உனைநான்
தினைத்தள வும்மறப்ப தில்லையே என்அம்மே
வண்டார் குழலியுன் புன்னகைக்கே இப்பாரில்
உண்டோ நிகரழ கே (௩௦)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

'kAlan varungAl ninaiyAdE unDAna kAlam mudalE ninai' - (29)

Just fantastic. Reminded me of the 'appOdaikkipOdE Solli vaittEn' line from the divya prabandham.

Sankar, have you already composed the 100 in full, releasing them here in installments? The work involved is enormous I guess. Or you must be one gifted 'Asukavi'! Great going.

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

sridhar, I wrote this about 3 - 4 months ago, took me about 3 weeks to write all the 101 stanzas. Been sleeping on my computer since then. Just releasing them in installments here.

Thought of getting it out in sakthi vikatan or some such with good illustrations - 10 per week/issue. Unfortunately, per editor of a magazine, there is not much takers for tamizh. Tanglish seems to be the "in thing" now.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

அணிந்துரை

சங்கரன் கவிதை மழை பொழிகிறான்
கங்கை நடை மறந்ததை ரசிக்கிறாள்
நங்கையவள் பெருமையை பாடப்பாட
பொங்கு நலம் பெருகும் இப்புவி மாட்டே

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

Thanks cmlover.

Here you go with the 4th installment.

நான்காம் பத்து
அழகன் படிகநி றப்பெம்மான் பத்தி
உழவன் தனையாட்டு விப்பாய் உளதும்
இலதும் கடந்தாய் உயர்ஞானப் பாவாய்
சிலரே அறிவார் உனை (௩௧)

உனையே இகழ்வோம் உனையே புகழ்வோம்
உனையே பழிப்போம் உனையே மதிப்போம்
மதிப்பார் புகழ்வார் தமக்கும் பிறர்க்கும்
கதியாய் அருளே புரி (௩௨)

புரியுமோ அம்மாயம் தாயே எனக்குள்
விரியுமோ தேவரும் வந்தே பகலிரவா
சென்னிக் குனிதரும் சேவடிப் பேரருள்
என்றிவ் வுலகுடைத் தாய் (௩௩)

உலகுடைத் தாய்கை யிலேகூர்சூ லம்பல்
கலமுடைத் தாய்தன் னொளிபடைத் தாய்தீ
விழியாலே தீதறுத்தே யாண்டும் குளிர்தண்
மொழியாலே நன்மைசொல் வாய் (௩௪)

சொல்வாளுன் ஏற்றம்வெண் டாமரை யாள்மனதிற்
கொள்வாளுன் தோற்றம்செந் தாமரை யாள்தே
மதுரத் தமிழோசைத் தூங்கா நகர்தென்
மதுரை கயற்கண் ணியே (௩௫)

கண்ணே மணியே நறுந்தேனே நல்முத்தே
வண்ணப் பசும்பொன்னே வெண்ணி லவேஎன
பெண்ணாய்ப் பிறந்துயென் கொஞ்சல்கேட் காயோநீ
விண்மண் பரவிநின் றாய் (௩௬)

நின்றும் கிடந்தும் நினைப்பது உன்னையே
பொன்றாப் பொலிவு கொண்டாய் அருள்பரவு
கற்பகமே மோகமறு இக்கணமே தானாதி
சிற்பரமே நற்கதியே தா (௩௭)

தாவாமல் நில்மனமே அத்தருணம் ஆட்கொள்வாள்
பூவாமல் பூத்ததொரு கஞ்சமலர்ச் செங்கையில்
கரும்புச் சிலைதாங்கும் சுந்தரியை ஓர்ந்தே
விரும்பி யவீடுற லாம் (௩௮)

உற்றோம் அறம்பொருள் இன்பமும் வீடும்யாம்
பெற்றோம் நிலையான மெய்யுணர்வு பட்டன்
அன்றோர்நாள் பாடிய பூம்பாவாய் நீகுணம்
ஒன்றோடி ரண்டுமி லாய் (௩௯)

இலதோ உளதோ எனநெஞ்சே சோராதே
இலதும் உளதும் அனைத்தும் கடந்தாள்
பிறவா வரம்தரு வாளிடம்கேட் பாயோ
இறவா தொருநிலை யே (௪௦)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

அணிந்துரை (continues)

நிலையாக நிற்பதுஊம் அவள் ஒன்றே
அலை பாயும் மனத்தை அடக்கிவிடு
வெண்பாவில் அவள் பெருமைதனை பாடும்
நண்பா! உனக்கு நிகர் நீயே..

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

The 5th installment..

ஐந்தாம் பத்து
நிலைகொண்டாள் அன்பர்நெஞ் சத்தே கருப்புச்
சிலைகொண்டாள் கார்கருங் கூந்தல்மேல் ஓர்பிறை
கொண்டாள்ஐம் பூக்கணை கொண்டாள் ஒருநாள்மண்
உண்டான்அன் புத்தங்கை யாள் (௪௧)

தங்கையாள் தாளே அடைந்தேன் கதிவேறு
இங்கியாண் காணேன் உலகெலாம் தன்னுளே
பூத்தாள் ஒருபட்டன் ஆவியைத் தன்தோட்டால்
காத்தாள் எனக்காளா வாள் (௪௨)

ஆனாள் நமக்கொரு தாயாய் அருமருந்
தானாள் கறைகண்ட கூத்தற்கு தன்இடக்
கால்மடக்கி மற்றொருகால் கீழ்வைத் தருளாலே
மேல்கீழ் உலகாள் பவள் (௪௩)

ஆள்வதும் ஆட்படுவ தும்அவளே செல்வப்பெண்
கேள்வன் ஒருநான் முகன்மற்றும் மூவறொரு
பீடமாய்க் கொண்டமர்ந் தாள்கணத் தேபல
வேடமாய் மாயம்செய் வாள் (௪௪)


செய்வாள் கணத்தே மூவுலகும் பின்னதனைக்
கொய்வாள் ஒருவிளை யாட்டே எவர்க்கே
மலம்படாத நன்னெறி யுண்டோ அவர்க்கே
புலப்படாத தெல்லாம் படும் (௪௫)

பட்டோம் பலபாடு இப்பாரில் ஆயினும்
கெட்டோம் எனஇல்லா மல்தாய் மிசைமனம்
விட்டோம் பகலிரவா நண்ணியே பாவமெலாம்
சுட்டோம் விதியும்செற் றோம் (௪௬)

ஓமெனச் சொல்லிநாம் ஓர்வதும் சேர்வதும்
காமனைச் செற்றவோர் முக்கண் முதல்வனை
உள்ளிருந் தாட்டிடும் உன்னையே வண்டுமொய்
கள்ளுறை பூங்கூந் தலாய் (௪௭)

ஆய்ந்தோம் அறிவின்பாற் பட்டுநாளெல் லாம்உளம்
ஓய்ந்தோம் விடையின்றி பின்னுன்பால் எம்மனம்
தோய்ந்தோம் மறைநான்கும் போற்றும் உமையே
சாய்ந்தோம் மலர்ப்பொன்ன டிக்கு (௪௮)

பொன்னடி யேசேர்வோம் தாமரையை வென்றதோர்
உன்னடி யேகொள்வோம் வேலேந்தும் பிள்ளையைப்
பெற்றாளே நல்லார்க்கு உற்றாளே பொங்கருள்
வற்றாளே செற்றோம் செருக்கு (௪௯)

செருக்காய்த் திரிந்ததோர் பண்டனை மாய்த்து
உருக்குலைத் தாய்மகி டன்உயிர் போக்குவித்தாய்
பொல்லாப் பிழைபொறுப் பாய்அடி யார்எமக்கு
வல்லாளே நீயே பரி (௫௦)

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

Here you go with the 6th installment

ஆறாம் பத்து
பரிவாய் எடுத்திருகை ஏந்தியே அன்பைச்
சொரிவாய் உளம்களிப் பாய்உகந்தா லிப்பாய்
எனக்கனா கண்டிருந்தேன் அம்மே அருள்வாய்
எனக்கென இங்கிருந் தேன் (௫௧)

இருந்தேன் உனையடுத்தே இவ்வுலகில் உண்டோ
கருங்குழல் கன்னியே உன்னிணை யும்நிகர்
ஓர்மருந்தும் மாமறை ஏற்றும் மடந்தையே
மாமருந்தே என்குறை தீர் (௫௨)

தீராத விளையாட்டே நானிலமும் உன்னடி
சேராதி ருப்பனோ யானிங்கு என்அகந்தை
தீர்த்தே நிலையான இன்பமுற உன்னுள்ளே
சேர்த்தே அறுப்பாய் பிறப்பு (௫௩)

பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் உன்னடி சேர்ந்தார்
சிறப்பொக்க ஏதுண்டு அன்னாய் அடியார்
பிறவிக் கடல்நீந்த நாவாய் எனவே
துறவா திருந்தா தரி (௫௪)

ஆதரிப்பர் ஆருளர் நீயன்றி இப்புவியில்
நீதரும்இன் பம்யார் தருவார் உயர்ஞானப்
போதமருள் ஓர்குருவே மாமணியே உள்மனத்து
மோதலறக் கேளாய் முறை (௫௫)

முறையோ உனக்கழகோ நான்மறை ஊற்றே
குறையோ எனதென்று கேளாமல் நிற்கின்றாய்
சேயேன் பிழைசெய்தால் ஈன்றெடுத்த என்னுயிர்த்
தாயே உனதே பொறுப்பு (௫௬)

பொறுத்தோம் இதுவரைபா ராமுகம் இன்னும்
பொறுப்போம் எனஇருக்கா தேதரு ணம்இதுவே
வெண்பிறை சூடும்அம் மையே எமக்கொரு
தண்பிறை ஆவாய் இனி (௫௭)

இனிது இனிதென்று உன்பெயர் சொல்லக்
கனிந்தி டுமேஉள்ளம் காலம் கடக்காமல்
ஓடிவந்துன் னையடைந்து பேரருள் சேரவே
கூடிவந்த தோர்த்திரு நாள் (௫௮)

திருநாளே சாலத் தவறாது எண்ணிவரும்
ஒருநாளும் சிந்தூரம் தாங்கியவ கிட்டாளை
தன்னடித் தூசுகொண்டு பார்படைத்தா ளைஓங்கு
பொன்னடி யாளை புகழ் (௫௯)

புகழுண்டு பொன்னடிக்கே யாவர்க்கும் என்றும்
புகலுண்டு குன்றாத சீர்கொண்டாள் தாளில்
நிகரற் றஅருளுடைத் தாள்ஓர்வாழ் நாளில்
பகரரும் பேர்படைத் தாள் (௬௦)

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

The 7th installment

ஏழாம் பத்து
படைத்தலும் ஆங்கே நிலையுறுத்த லும்பார்
உடைத்தலும் செய்வர் ஒருமூவர் சேவடித்
தூளிகொண்டே தேர்வாய் இதுநெஞ்சே உள்ளத்தே
காளியவள் ஒன்ற இரு (௬௧)

இருப்பது பொய்மாயம் என்றுணர்ந்து நெஞ்சில்
விருப்பும் வெறுப்பும் விலக்கி அவளை
கருப்புச் சிலைகொண்ட கோலத்தில் வைத்தே
திருப்பாதம் சேர்தல் கடன் (௬௨)

கடன்தீர்க்க இப்பிறப்பு என்றுணர்ந்து நாமே
உடனண் டுவோம்அவளை ஊழியில் தன்னாலே
உண்டான அத்தனையும் உள்சேர்ப்பாள் பாவியை
வண்டாலே போக்கிவைத் தாள் (௬௩)

வைத்தாளே அச்சிவனை தன்வலத்தே தன்னையே
தைத்தாளே அன்பர்தம் நெஞ்சில் நுடங்காது
கைத்தலத்தே பூஅள்ளி நாளும் தொழுவோமே
மைத்தடங்கண் பேரெழில்தன் னை (௬௪)

தன்னை அறிந்திங்கு இன்பமுற என்றுமே
மின்னை நிகர்த்ததோர் பேரொளியாள் கண்பார்வை
அள்ளிக் கொடுக்குமே இன்னருளை உண்டவட்கே
வெள்ள மெனப்பெருகும் தேசு (௬௫)

தேசுடை என்தாயை நீநினையா மல்ஒரு
காசுடை மானிடனாய் வாழாதே பூமியில்
ஆறறிவு கொண்டே பிறந்தோர்க்கு மெய்ஞானப்
பேரறிவு சேர்தல் சிறப்பு (௬௬)

சிறப்பு ஒருநாவால் சொல்லமா ளாதோர்
பிறப்பில் முடியாது பொன்னடித் தாமரையைப்
போற்றுதல் நான்முகனும் ஓர்யுகத் தின்முடிவில்
போற்றியே ஓய்ந்தி டுவான் (௬௭)

ஓய்ந்ததே அன்பர்க் கருள்செய்தே உன்செங்கை
பாய்ந்ததே உன்பார்வை தம்மடியார் பால்வணங்கிச்
சாய்ந்ததே எம்சென்னி உன்னடித்தா ளில்கருகி
மாய்ந்ததே பொய்மாயை யே (௬௮)

பொய்மாயம் செய்வாள்காண் பால்தந்த பெம்மாட்டி
மெய்ஞானம் தந்தாள் மழலைக்கு அன்றோர்நாள்
நாலிரண்டோ டொன்றும் ஆவரண மாக்கொள்வாள்
மாலயனைத் தான்செய் தவள் (௬௯)

தவள நிறமொருத் தாமரைப்பூ வாழ்செம்
பவள நிறவாய்க் கலைமகள் மீட்டுமோர்
வீணைநீ உள்பிறக்கும் நாதம்நீ தாயேஉன்
ஆணையே மீறலுண் டோ (௭௦)

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

8th ten, here it is

எட்டாம் பத்து
உண்டென்றும் யாவர்க்கும் உய்வு நறுமணத்
தண்பூங்க னைதாங்கி அன்பர்க்கு எஞ்ஞான்றும்
வாழ்வருளும் மாதொருத்தி தாள்சேர என்றுமே
தாழ்வறியாச் சீர்பெறு வார் (௭௧)

பெற்றாள் ஒருதும்பிக் கையான் பிறகாங்கே
உற்றாள் முருகான முத்தமிழ்த் தேவை
சரிநிகர் இல்லாள் தனக்கு அவளோர்
கரித்தோல் உடுத்தான் துணை (௭௨)

துணையாக் கொளலாகும் மெய்யுணர் விக்கும்
இணையிலாச் சேவடி எந்நாளும் வந்தாங்கே
நீங்கவே முத்தியளி காசியில் ஆட்சிசெய்கண்
தூங்கவே மூடா தவள் (௭௩)

அவளேஆம் என்தாய்தந் தைசுற்றம் நட்பும்
அவளேஆம் என்மனை மக்கள் அடியவன்
நெஞ்சாரப் பாடுவதும் காதாரக் கேட்பதுவும்
கஞ்சீவ ரத்தாள் பெயர் (௭௪)

பெயராயி ரம்சொல்லி வந்தாலும் இன்றாலும்
உயரவே செய்விப்பாள் நம்மைப் பிறந்தாலே
முத்தியளி நற்றிருவா ரூர்தலத்தே ஆண்டாண்டாய்
பத்தியாய் செய்வாள் தவம் (௭௫)

தவமே செயலாகும் செய்யா தவர்ஓர்
சவமே உணர்வாய் மடநெஞ்சே யாரோ
பலப்பல வாய்சமைந்தா ளோஅவளை என்றும்
கலங்காது உள்ளிருத் தி (௭௬)

இருத்து மனத்தேஎன் தாயைதிண் ணம்என்
கருத்து இதுவே அகண்டஇவ் வண்டத்துள்
கார்குழல் பேரருள் நீள்விழி கொண்டாற்கு
ஆருளர் ஓரினை யே (௭௭)

இணையே திருவடி மென்மலர் என்றும்
துணையே குறையாத ஊழ்வினை தீர்க்கும்
கணையே அருட்பார்வை யானுனக்கு என்றும்
பிணையே நீயோ எனக்கு (௭௮)

எனக்கென்ன நீயிருக்க ஓர்கவலை தாயே
உனக்கேயான் ஆட்பட்டேன் நாளும் தொழுவேன்
சிறுவனுக்காய் காலனை உதைத்த மலர்த்தாள்
நறுமலர்த்தூ பம்தீபம் கொண்டு (௭௯)

கொண்டோம் உனையே மனத்தே உனையன்றி
அண்டோம் பிறிதொன்று காலாலன் ஓர்பாதி
கொண்டாய் திருமயிலை மேவும்நற் கற்பக
முண்டகக் கண்ணியேமா யே (௮௦)

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

I think you meant
உற்றாள் முருகான முத்தமிழ்த் தேவை >> உற்றாள் முருகான முத்தமிழ்த் தேவனை
or
உற்றாள் முருகான முத்தமிழ்ச் சேயை

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

cmlover, no I meant தேவை (I remembered one prabandam/thEvAram where there is a phrase like தேவு மற்றறியேன் and used that தேவு).

9th 10

ஒன்பதாம் பத்து
மாயம் அறுத்தெம்மை மீள்விப்பாய் உள்கரந்த
சாயம் வெளுத்தெம்மை வாழ்விப்பாய் உள்ளத்து
ஓயாத ஓட்டம் அடங்கி உனதடியில்
தோயாதோ பார்படைத் தாய் (௮௧)

படைப்பாய் பலதேவு ஐம்பூதம் பின்னர்
உடைப்பாய் அவையாவும் ஊழியில் நீயே
கடைத்தேற ஓர்வழி யார்க்கும் கடுகி
சடையன்றன் பங்கே அருள் (௮௨)

அருளும் விழியும் கருப்புச் சிலையும்
சுருளும் குழலும் அபயக் கரமும்
வரமருள் கையும் உடையாய் மறையும்
சிரமதில் சிந்தூ ரமே (௮௩)

சிந்தூரச் செய்ய திருமலர்ப் பாதத்தை
நிந்திக்க வோசெய்வோம் தீந்தேன் அடுத்ததோர்
நற்றமிழால் சூட்டினோம் பாமாலை புந்தியால்
பற்றினோம் சேவடி யே (௮௪)

அடிஅளவாய் மூன்றும் ஒருசிந் தடியும்
கடிஅழகாய் கொண்டதே வெண்பா அதனால்
வடிவழகாள் வானுதலாள் தன்பெருமை கூற
படிப்படியாய் விண்ணே கலாம் (௮௫)

ஏகினோம் உன்னருளால் நற்கதிக்கே என்றுமே
ஏங்கினோம் பொன்னடிக்கே பொன்றாப் பொலிவு
உனக்கேயல் லாதுவே றார்க்கும் உளதோ
தனக்கேயோர் ஒப்புமில் லாய் (௮௬)

இல்லாயோ உள்ளாயோ என்றறிய யாரிங்கு
வல்லாரோ காணேன் ஒருசேயின் பாலதன்
தாயன்பு தானாய்ச் சொரியுமா றெம்பாலுன்
தாயன்பு தானாய் வரும் (௮௭)

வருமென்று தானாய் இருப்பனோ கட்டிக்
கரும்பொன்று கையருகில் தானிருக்க யாருமே
விட்டுத்தான் போவரோ காதல் பெருகியே
சட்டென்று சேர்ந்தேன் உனை (௮௮)

உனைப்பயந்த தாராழ் கடல்நீள் விசும்பு
தனைப்பயந்த மாயே உவமைக்கோர் காளிதாசன்
என்றுலகு போற்ற விளையாடி வைத்தாயே
தொன்றுலகில் கொள்எம்மை யே (௮௯)

எம்மைப் பிணித்ததோர் ஊழ்வினை தீர்த்தோமே
அம்மை அருள்கொண்டு எந்நாளும் உட்பட்டோம்
மூவாசைக் கேஎன இன்றியுனக் காட்பட்டோம்
சேர்வாரை மீட்டளிப் பாய் (௯௦)

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

sankark wrote:cmlover, no I meant தேவை (I remembered one prabandam/thEvAram where there is a phrase like தேவு மற்றறியேன் and used that தேவு).
Madhurakavi Azhwar uses the expression in kaNNI nuN ciruttAmbu, to express his devotion to nammAzhwar:
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
போயினேன் அவன் பொன்னடி மெய்ம்-மையே
தேவு மற்றறியேன் தென்குருகூர் நகர் நம்பி
பாவின் இன்னிசை பாடித்திரிவனே

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

agreed. My Lifco dictionary also says
தேவு = தெய்வம்

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

Here is the 10th and final installment..

பத்தாம் பத்து
அளிப்பாய் அருளும் பொருளும் சிவத்தின்
களிப்பே மலர்க்கணை வல்லான் விழித்தீயால்
மாய்ந்தும் உயிரானான் நின்னருளால் காதல்சீர்
தோய்ந்த மலர்க்கண் ணியே (௯௧)

கண்ணிருப்ப துன்படைப்பைக் கண்டுவக்க வேநீல
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆதார மெய்ப்பொருளே
ஊனுடைத்த மானிடர் ஓர்ந்தறியாப் பேரொளியே
தேனுடைத்த நன்ம லரே (௯௨)

மலர்மிசை நீநிறைந்த னைஎன் மனத்து
உலர்வரியாக் காதல் பெருவாழி யேஉன்
நகைக்கே மயங்கிப் பொருதாது போவார்
பகைக்கே உருவா னவர் (௯௩)

அவர்க்கே விளங்கும் உனதருமை யாவர்
தவம்செய் துகளங்கம் அற்றார் மனமயக்கம்
செற்றார் பெறற்கரிய ஞானமே கைவரப்
பெற்றார் நசையறவே விட்டு (௯௪)

விட்டான் தனதுயிரைத் தென்னிலங்கைக் கோமானே
பட்டான் படாதபாடு ஓராசை யால்மதி
கெட்டுப் பிறகுன்னை அண்டாதா சையற
கட்டிப் பிடிப்பாய் எமை (௯௫)

ஐயைந்தும் மேலிரண்டும் ஆயவற்றின் நாயகனைக்
கையைந்தான் கோட்டுருவில் சூடினாளை ஓராது
வேறெவரை ஓர்வதுவோ பாடுவதோ பேசுவதோ
பேறெதுவோ சொல்ம னமே (௯௬)

மனமே மலர்த்தா ளினையே துணையே
தினமே தொழுவாய் கடைநாளில் யாக்கை
பழுதுபட்டு சிந்தை சிதையுமுன்னே உள்ளம்
உழுதுபட உண்டே நலம் (௯௭)

நலமேக் கெடுதி படநயவேன் ஆளப்
பலவான செல்வம் தருணத்தே வந்து
தருவாய் நிலையான மெய்யறிவு ஆன
உருவாய் சமைந்தநீ யே (௯௮)

நீயே நிகரான வள்உனக்கு அண்டிய
நாயேன் தனையாண்டு கொள்ளே உயர்ஞான
நூலே படித்தறியேன் ஆயினும் உன்மலர்க்
காலே பிடித்திருப் பேன் (௯௯)

இருப்பேன் படிக்கல்லாய் உன்கோவில் முன்னே
விருப்பும் வெறுப்பும் கடந்தாய் நடமாடும்
தெய்வம் இருந்தமா காஞ்சிநகர் வாழருட்
தெய்வமே செய்மங் கலம் (௱)

Thats it! Enjoy :)

Thanks sridhar for digging up that from kaNNI nuN ciruttAmbu.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

இரசிகர்கள் வாழ்த்த இமையவரும் துதிபாடும்
அரசியவள் அன்னை அபிராமி அருள்சொரிய
கன்னல்சுவை தீந்தமிழில் கவியேறு சங்கரரே
இன்னும்பல நூற்றுப்பா செயும்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Very nice! Yes, some more please..
வாழ்த்து
நற்றமிழில் அன்னைக்கு வெண் பாமாலை சூட்டி
பற்றறுத் துய்ய வழி செய்தனை - நூற்றந்தாதி நெய்த
நும் பணிக்கிரங்கி நூற்றினுமேல் வாழ்வளிக்க
நம் தாயை போற்றுவோம் யாம்.

arasi
Posts: 16800
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff

Post by arasi »

Sankark,
What a creation!
I am amazed...

CML and Sridhar,
Wish I could sing praise of these verses in verse as you both did.
Waiting for Punarvasu and Ganeshkant to join in.
I'm sure Ravi is taken by these lines as well.
Hope Rajani will chime in too.
Last edited by arasi on 10 Jan 2012, 11:01, edited 1 time in total.

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: If you are a venpA buff

Post by PUNARVASU »

sankark, amazing! I need more time to go thro each and everyone of your verses and enjoy. Great work.
arasi I am really at a loss for words; CML and Sridhar_rang found theirs!
It is a question of one('s) verse inspiring other! Bonanza for thamizh lovers!

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

thanks sridhar, cml, arasi & punarvasu.

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

A pdf version of the entire andhAdhi is available @ http://dl.dropbox.com/u/6372521/ThiruAnnaiThudhi.pdf for sometime.

Thanks to VK for hosting this.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Very nice and informative as formatted in the PDF document. I now wish some vidwan to render them in melodious
(100 ragas or at least 10).
(Ganeshkant! Give it a try. I have lost my voice :( )
தேமா புளிமாங்காய் தேர்ந்து குழைத்தெடுத்து (சங்கர்)
மாமா சமைத்தளித்த அந்தாதி- சுவை கூட்ட
கருவிளம் கூவிளம் காய் கூட்டிக் கறி பெய்த
அருமைதனை ர(ரு)சிப்போம் யாம்.
:D
Punarvasu
Await yours.. No hurry.

mahavishnu
Posts: 3341
Joined: 02 Feb 2010, 21:56

Re: If you are a venpA buff

Post by mahavishnu »

sankark, very impressive. hats off to you!

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: If you are a venpA buff

Post by rshankar »

Sankar - From what little I got, I can say it is enviably amazing!
arasi wrote:I'm sure Ravi is taken by these lines as well.
A bit beyond my ken (you know why!:grin:)

vasanthakokilam
Posts: 10956
Joined: 03 Feb 2010, 00:01

Re: If you are a venpA buff

Post by vasanthakokilam »

Ravi, you can feed it to Arun's transliteration tool (http://arunk.freepgs.com/cmtranslit/editor.php) and see what comes out.

For the first verse, it did this.

seyya tiruvaDi annai perumaiyai
tuyya tamizhinil yAnumi yaTRavE
kaLLa milAdavOr vEzha mugattoru
vaLLal avanE tuNai

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

thanks mahavishnu (not just vishnu, mahavishnu is it?) & rshankar.

vk - thanks for intro to that transliteration tool. Will come quite handy when I need it. Thanks be to arunk for hosting it.

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

Dear All: New member here, so far silent, not really musically endowed, in this just for listening/reading.
Pleasantly surprised to see there is a Venba thread going on.
Nice Andhadhi on Ambal by Sri. Sankar. Very difficult metre to write in Thamizh is Venba. More stringent தளை, எதுகை, மோனை rules compared to other metres like அகவற்பா or ஆசிரியப் பா etc.
He is truly blessed.
The meter he has used is 'innisai venba' / இன்னிசை வெண்பா (vs. the other kind 'nerisai venba' / நேரிசை வெண்பா).
Here is my vazhthu'p paa in nerisai venba metre:

மங்கலம்.என் றும்.அருளும் மாயத்தாய் மாதரசி
சங்கரர்பாச் சங்கிலியின் சத்தானாள் ~ சங்கீதத்
தேன்மாந்தும் அன்பரின் சிந்தனையைச் சீராக்க
அந்தாதி அற்றாள் அவள்.

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: If you are a venpA buff

Post by PUNARVASU »

msm, Nice one. Truly, one inspiring other! I am so happy to see this 'chain reaction'. This is what the forum does. Bringing out the best in each one of us. Otherwise, many of these gems might not have come out.

kaumaaram
Posts: 380
Joined: 14 Oct 2005, 17:38

Re: If you are a venpA buff

Post by kaumaaram »

All of those who have responded to this thread with their own "Kavi" are blessed indeed.
The composer of this Andhadi is a great soul.
May I request Shankar to compose a nice venpa on my Lord Shanmukha?

arasi
Posts: 16800
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff

Post by arasi »

msm,
Welcome to Rasikas.org !
andAdi aTra avaLaip pADum tiRanuDai ummaiyum vAzhthi varavERkinROm!

sankark
Posts: 2344
Joined: 16 Dec 2008, 09:10

Re: If you are a venpA buff

Post by sankark »

msm, that nerisai venpA is great. Inspired me to write a nErisai for kaumaaram's wish..

முக்கண் முதல்வன் விழித்தீயில் தோன்றிய
செக்கச் சிவந்த அறுமுகத்தான் - சிக்கலிலே
தக்கன்சேய் கையால்கூர் வேல்பெற்றே சூரனை
திக்கெட்டும் ஆர்ப்பவென் றான்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

பலே பலே
தாய்க்குப் பின் சேய்..
Do continue Sankar, you are on a roll!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Warm welcome msm
மங்கலம்.என்றும்.அருளும் மாயத்தாய் மாதரசி
சங்கரர்பால் அந்தாதி செயப் பெற்றாள் - சங்கீதத்
தேன்மாந்தும் (msm)அன்பரின் சிந்தனைச் சீர்பெற்று
அந்தாதி அற்றாள் அவள்.
Do contribute more for our pleasure...

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

”யாமிருக்க----ஏன்பயம்”----என்றவனை----ஏத்தகிலத்
தீமிதிப்போர்----தேகம்----தழல்படுமோ----*----தாமிளகி
ஆய்ந்தே----சரணடைவார்----ஆன்மா----சரவணனில்
ஓய்ந்தே----ஒழிந்திடு----மே.

--- இது நேரிசை வெண்பா

அரசி----புனர்வசு----அன்பாய்----அரவணைக்க
சிரசில்----பனிக்கட்டி----சீயெம்லவ்----சிந்தருள
சரளமாய்ச்----சரவெடிபோல்----சங்கர்தம்----சந்தத்தில்
”குறமகள்----கோ”பாட்டு----கௌமாரர்----கோரிக்கை!

-- இது நிலைமண்டில ஆசிரியப்பா (என்று எண்ணுகிறேன்)
(4 சீர்s per line; all types of சீர்s except கனிச்சீர், any தளை combination is ok (unlike Venba), எதுகை for pair of lines or all 4 lines, மோனை for 1st & 3rd சீர் in every line, last சீர் (ஈற்றுச்சீர்) should end with ஏ or ஓ or இ or அய் etc.)

Note: adding dash (-) character instead of 'space' character between சீர்s to prevent சீர்s from getting joined

arasi
Posts: 16800
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff

Post by arasi »

Super ASukavitvam!

kavidai attanaiyum toDuttiDa,
aran SiramadaninRum pozhi
gangaiyena,enRumE punaivAr pA,
paridi nAraNarE*--nal maNam kamazh
kaviyAm pUkkaL ivarilum malarndiDa,
niRaivAith thoDuttaLippArE!

*CML
Last edited by arasi on 13 Jan 2012, 13:33, edited 1 time in total.

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

sridhar_rang wrote: இரசிகர்கள் வாழ்த்த இமையவரும் துதிபாடும்
அரசியவள் அன்னை அபிராமி அருள்சொரிய
கன்னல்சுவை தீந்தமிழில் கவியேறு சங்கரரே
இன்னும்பல நூற்றுப்பா செயும்
I realized the above verse does not conform to venbA grammar, after going through the long forgotten rules now....I can imagine the 'pulavars' here wincing on seeing this "தளை தட்டும்" venbA. So here is a revised version that follows the grammar.

இரசிகர்கள் வாழ்த்த இமையவரும் ஏத்தும்
அரசியவள் அன்னை அபிராமி ஆசிதர
கன்னல்போல் தீந்தமிழில் காமமுறு சங்கரனே
இன்னுமோர் நூற்றுப்பா செய்

Thanks Sankar/MSM for rekindling my interest in yAppilakkanam. I do feel sad to lose some of the ideas in the grammatically wrong version (praising the poet as 'kaviyERu', addressing in plural as 'SankararE' and requesting many more works (innum pala) instead of just one more (innum oru), etc. Makes one all the more awestruck by the works of a kamban or an abirami bhattar when we realize the brilliance of their verses which pack such beauty in spite of the strict constraints imposed by prosody.

arasi
Posts: 16800
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff

Post by arasi »

sridhar,
Great! You know what you are doing ;)

Think of us folks who write in their folksy way, knowing nothing of the rules which produces such impressive poetry!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

I am very much like arasi. I have totally forgotten any 'yaapilakkaNam' that I studied eons ago and what I write comes naturally to me just like Arasi who is a uttama vaggeyakara to whom the lyrics come lock-stock and barrel (raga,tala and melody) inspirationally.It is foolish to request her for notations and grammar for her songs which are finished productions delivered through competent vidwans like Sumitra/Neela akin to taking apart a functional Rolls Royce to find what makes it tick! So let us not be deterred/scared by grammar but enjoy the spontaneous creations - a skill that is inhereent in all of us.

I do miss our aashu kavi PB and ponbhairavi here and sincerely hope they will join us too...

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

Fully agree with that, CML. The grammar matters far less than the content. Arasi, didn't Bharati say -
சுவை புதிது நயம் புதிது வளம் புதிது சொற் புதிது சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை about the new age verse. Your kritis and verses are full of சுவை, நயம் & வளம் and they never fail to sparkle (சோதிமிக்கவை)

arasi
Posts: 16800
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff

Post by arasi »

MAS...
Miga atIta Strength
Mutual Admiration Society
Which exceeds old tamizh kavis
Who sang praises of their subjects--

All this here, is about ourselves??

Class, back to veNbAs :(

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: If you are a venpA buff

Post by Ponbhairavi »

தானே புயலுக்கு தப்பியோர்௦ மூலையில்
தேமேன் எனக் கிடக்கும் என்னைப்போய் சி எம் எல்
வா மேன் என வம்புக்கு இழுக்கின்றார் இது தகுமோ?*
யாமேன் வருவது இங்கு ?

தெள்ளுதமிழ் முள்ளுதமிழ் உள்ளேயும் புகுந்து
கள்ளமிலா உள்ளத்தான் படிக்கிறேன் களிக்கிறேன்
குள்ளன் எனக்கு எட்டாத பிறவற்றுள்
வள்ளுவர் பின் நிற்பேன் ஒளிந்து

கல்லாதவரும் நனி நல்லார்- கற்றார்முன்
சொல்லாதிருக்கப் பெறின்


தேமேன் என =colloquial for தெய்வமே என
இது தகுமோ , இது முறையோ இது தருமந்தானோ=ஊத்துக்காட்டார்

msm
Posts: 84
Joined: 12 Nov 2011, 02:23

Re: If you are a venpA buff

Post by msm »

ஆஹாஹா ! எல்லா கவிதைகளும் super... ; Sankar, Sridhar, CML, arasi, Ponbhairavi - there are lots of creative and enjoying & easy minds here. Great to see all your paa's. Very enjoyable.

மரபுப்பா vs. புதுப்பா (or புதுக்கவிதை) is an eternal discussion. One thing, if I remember correct, is: the basis for grammar / யாப்பிலக்கணம் was nothing but proper/structured sound or செப்பலோசை. Someone who knows this can clarify further.

Therefore, grammar was merely a means rather than the goal. Perhaps when strict grammarians became autocratic and imposing, the rebels came up with புதுக்கவிதை....

So, I think we should just go on presenting what comes to us naturally - regardless of grammar - and enjoy/learn from each other's works and go forward....

Here is one venba, but this time a tiny kuRaL veNba, on swamiyE saranam aiyyappaa; incidentally, also referring to Sridhar & Sankar's dabbling with 'paa's:

திருவணியன்* சங்கரனைச் சேர்ந்தொருப்பா செய்தான்
அருமருந்தே அஃதையப் பா.

* திருவணியன் is Sridharan or Vishnu

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

கவிதை ரசனையை விட கவிதை ரசனை சிறந்தது
(ரசனை = composition/appreciation)
சங்கீத ரசிகர்கள் இன்றி சங்கீத வித்வான்கள் ஏன்?

Warm welcome Ponbhairavi!
தானேக்கு தப்பித்து தானே மாட்டிக்கொண்டீர் எம்மிடம்

அனைத்து அன்பர்களுக்கும் advance பொங்கல் வாழ்த்துக்கள்.
தமிழ் மணம் கமழ தமிழன்னைக்கு தமிழாரம் சூட்டுவீர்...

arasi
Posts: 16800
Joined: 22 Jun 2006, 09:30

Re: If you are a venpA buff

Post by arasi »

eTTu dikkilum paravi vAzhum india annaiyin arum SEigaLAm
rasigar kuzhAmukku--pongalO SankarAnthiyO, peyar EdAyinum--
pongalO pongal! pongum mangaLam engum tanguga!

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக தங்குக
பொங்கல் மணம் எங்கும் கமழ்க கமழ்க
சங்கரன் கவிதை என்றும் வளர்க வளர்க
எங்கள் ரஸிகர் குழாம் என்றும் வாழ்க வாழ்க..

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: If you are a venpA buff

Post by sridhar_ranga »

பாலுள பாத்திரம் பொங்கு மேலோ
- - பசுநெய் பச்சரிசியும் சேரு மேலோ
நாலுகை வெல்லமும் ஏலமும் பச்சைக்
- - கருப் பூரமும் மணம் கமழுமேலோ
மேலுள சூரியன் மிக மகிழ்ந்தே
- - மேதினி மீதருள் பொழியு மேலோ
சூலுள பயிர்தரு விளை நிலங்கள்
- - செழிக்கும் இப்பொங்கல் பொங்கல்பொங் கலோ

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: If you are a venpA buff

Post by cmlover »

Beautiful, Sridhar!
ततास्तु।

Post Reply