SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Review the latest concerts you have listened to.
Post Reply
aravindan mudaliar
Posts: 4
Joined: 05 May 2015, 18:34

SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by aravindan mudaliar »

ஏப்ரல் மாதம் 12ஆம் தேதியுடன் தலைவர் சென்னை கச்சேரி முடிய ஏக்கத்துடன் விடை தந்தோம் . மே அமேரிக்காவிற்கு என ஆறுதல் பெற்றோம் , சூன் சுதந்திரமாய் தலைவர் இருக்கட்டுமே என சும்மா இருந்தோம் . சூலை பிற மாநில சுற்றுப்பயணம் என்று தேற்றிக் கொண்டோம் . ஆகஸ்டிலும் சென்னையில் அண்ணல் இசை இல்லாமல் அங்கலாய்த்தோம். செப்டம்பரில் சீதக்களபதி வாரன் சாலை பிள்ளையார் தயை காட்டுவர் என எண்ணி ஏமாற்றம் கொண்ட நாம் கொண்டல் வண்ணனை பாடும் நம் கான மன்னனனை காண கொங்கு நாட்டிற்கு புறப்பட்டோம் . சன்னிதானத்த்தை கேட்க நங்கை நல்லூர் சுவாமிநாதனுடன் கோவையில் கால் பதித்தோம் , கிகானி பள்ளி சரோஜினி நடராஜர் அவை வாசலை அடைந்த நமக்கு அங்கே இன்ப அதிர்ச்சியாய் சஜீஷ் வாரியாரும் , லட்சுமி நரசிம்மரும் காட்சி தந்தனர் , பின்னர் வந்தடைந்த வரதுவும் வெங்கியும் அடடே வாங்கோ என்று வாயார அழைக்க தலைவர் நம்மை இங்கேயும் வந்துட்டியா என்ற ஒரு பார்வை வீசிச் சென்றார் .
ராஜ லட்சுமி நுண்கலை சமூகத்தினரின் அற்புத ஈடுபாட்டால் பளீச்சென்றிருந்தது அரங்கம் மேடையில் இதுவரை நாம் காணாத காட்சி இருபுறமும் தம்பூராக்கள் , வெளிர் நீல பின்புலத்தில் அமைந்த அரங்கில் எப்போதும் போல் தலைவர் வெங்கி வரது வெள்ளைக்கூட்டணியில் திருப்பனித்துரா இராதா கிருஷ்ணர் மற்றும் தம்பூரா இளைஞர் என அனைவரும் வெள்ளுடை வேந்தர்களாக காட்சி தர நீல வானத்தில் மேகங்களாய் அவர்கள் காட்சி தருவது போல் இருந்தது.நம் சங்கீத கலா மேகம் இருக்கையில் அதிலும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கச்சேரி நடந்தால் கானமழைக்கு பஞ்சம் இருக்குமா என்ன நம்மை நெஞ்சை நிறைக்கும் கச்சேரி சரியாக 6.00 மணிக்கு துவங்கியது .
1) முத்துக்கச்சேரியின் முதலில் முகாரி அட தாள வர்ணம் பாடினார் நம் இசை முன்னவர் , திருவொற்றியூர் தியாகராஜரின் மதிவக்ஷி நம்மை கருணை பாவத்தில் மதி மயங்க் செய்தது. முகாரியில் வர்ணம் , தலைவர் என்றாலே புதுமை அல்லாவா இப்படிக் கேட்கத் தான் அனைவருக்கும் அவா , ஆலத்தூர் சகோதரர்கள் நூற்றாண்டு விழாவில் தலைவர் குறிப்பிட்டதை போல் வர்ணம் வார்மஅப் பீஸ் என்பதல்ல புதுமை இப்படி அரிதான வர்ணங்கள் அழகாக அரிதாரம் பூசி அவைக்குத்தருவதே புதுமை. வர்ணத்தை நடுவில் பாடுவது மடமை என நாம் சொல்லவும் வேண்டுமோ.
2) அடுத்து திருப்பனித்துரா இராதா கிருஷ்ணரின் கதகளி மோகினியாட்ட கலைஞர் போன்ற முகஅலங்காரத்தைக் கண்டாரோ என்னவே தலைவர் மோகனத்தை கையிலெடுத்தால் மறவகே தயா மோகனாங்க நா பை எனும் கர்பபுரிவாசரின் கிருதியை பாட அவை மோகனத்தில் மையல் கொண்டது .தலைவரின் மோகனம் கோயம்புத்தூரிலிருந்து 150 கிலோ மீட்டர் அப்பால் இருக்கு மோகனூர் வரை பயணித்தது வரதுவும் தலைவரோடு மோகனத்தில் பயணிக்க மேன்மை பொருந்திய மோகனம் நம்மை மகிழ்வித்தது.
3) கமலமனோகரி ஆலாபனை என்று தலைவர் ஆரம்பித்தவுடன் போட்டுடைத்தார் லட்சுமி நரசிம்மர் , தலைவரால் விரிவாக கமல மனோகரி கோவையில் கொலுகொண்டாள் , வரதுவும் வயலினால் கமல மனோகரிக்கு வருடித்தந்தார் , நெய்வேலியார் ஓரு குரும்புன்னகை தலைவர் பால் வீச , நாம் கண்டு கொண்டோம் பாட்டை , லட்சுமி நரசிம்மர் எழுந்தருளிய சபையில் தலைவர் நரசிம்முடு உதயின்சனு வை உத்வேகமாய் துவங்க நம் தலையாட்டி சித்தர் நெய்வேலியார் கரங்கள் இரண்டும் இறக்கை கட்டி பறந்தது மத்தளத்தில் , நாம் கடந்த பருவத்தில் இருமுறை கேட்டு ரசித்த நரசிம்மவதாரத்தை கொங்கு நாட்டோர் வாயைப் பிளந்து கேட்டனர் , மைசூர் சதாசிவ ராவின் இப்பாடலை கேட்கையில் அவையில் இருந்த எந்த மாமா மாமிக்கும் கண் கூட இமைக்கவில்லை நம் இமயத்தின் இசை அப்படி .
4) தலைவர் இன்னமும் அம்சத்வனி நன்னுவிடச்சி விடவில்லை போலும் ரீதகௌளையில் தியாகராஜரின் நன்னு விடச்சி தலைவர் பாட நரசிம்மாவதாரத்தை தொடர்ந்து ராமவதாரம் அரங்கேறியது அவை இன்பத்தில் ஏறியது . பாடலை தரும் முறையில் தலைவருக்கு நிகர் தலைவரே என்பதை மீண்டும் ஒருமுறை தலைவர் நிரூபித்தார்..
5) அடுத்த ஆலாபனையாக கனகாங்கியைத் தலைவர் அறிவித்து துவக்கினார் , 72 மேளகர்தாவில் முதல் ராகமான கனகாங்கியை தலைவர் முதல்தரமாய் வழங்க வரது முனைந்து வாசித்தார் நாம் எண்ணியபடி உள்ளம் உருகி உருகி அன்பர் வெள்ளம் ஆகாதோ பரமா என்னும் சுத்தானந்த பாரதியின் பாடலை சுத்த தங்கமாய் தலைவர் தர கல்யாண் நகையெல்லாம் நமக்கெதற்கு , தலைவர் பாட பாட கோவையே உருகியது.
6) அடுத்து தலைவரின் முத்திரை பதித்த கல்யாணி ஆலாபனை களமாடி நம்மை உற்சாகக் கரையில் நிறுத்தியது , அலை அலையாய் தலைவர் இசை நம்மை கிறங்கச் செய்ய இன்று வழமையாய் பாடும் பாடல் இடம் பெறாது என நம் உள்ளம் சொல்ல , இடையே வரதுவின் வயலின் கல்யாணியில் களிநடனமாட வானமாமலை ஜியரின் மத்திம்தேஹி வரமங்கே சுபா மாம பாடல் வரம் போல் தலைவர் தர சிரம் தாழ்த்தி பெற்றுக் கொண்டோம் இந்த பெரும்பொக்கிஷத்தை , கல்யாணி ரகத்திற்குரிய பொலிவை நம் பொன்னம்பலாத்தார் தருவதே தனி ருசி , சும்மாவா சொன்னார்கள் கல்யாணியை இராகங்களின் ராணி என்று . கல்யாணியை தலைவர் ஒரு பிடி பிடிக்க நெய்வேலியாரும் ஓப்பனை மிக்க இராதாகிருஷ்ணரும் தனியில் கோயமுத்தூரை மிரளச் செய்தனர் , வாசிப்பு என்றால் அது நெய்வேலி வாசிப்புத்தான் என்பதை நிரூபணம் செய்தார் , கடத்தில் காந்தர்வன் போல் காட்சி தந்த இராதாகிருஷ்ணர் சரிக்கு சரி வாசிக்க அதி அற்புதமாய் அரங்கேறியது தனி , கோவை ரசிகர்கள் யாவரும் உட்கார்ந்து தனி கேட்ட அழகே தனி.
7)சஞ்சய் குஷியாய் இருக்கிறார் என்றால் தப்பாமல் இடம் பெறும் இராகம் பேகடா , தந்த்தர்குகம் நீ வந்த்தர்க்கும் எனும் பாபவிநாச முதலியாரின் பத வர்ணப் பாடல் பண்பாட நாம் பேகடாவில் அகமகிழ்ந்தோம் , நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் அப்படி வேறொரு புண்ணியவான் பாடிய பேகடாவை கேட்டுவிட்டு தலைவரை கேட்கும் போது நிழலை உணர்ந்தோம் (கோவை மக்களே அடுத்த சில நாட்களில் நீங்கள் வெயிலை உணராமல் இருக்க விழைக்கிறேன் ) தலைவர் போம் போம் என்னும் போதெல்லாம் அவர் கண்களில் ஒரு குறும்பு புன்னைகை கட்டாயம் இடம் பெறும் நேற்று சற்று அதிகமாகவே இடம்பெற்றது.
8)அடுத்த நம் பாடல் மனோகரன் தேவமனோகரி இராகம் தானம் பல்லவியைத் துவக்கினார் , தேவமனோகரியை இப்படி தெவிட்ட தெவிட்ட பாட யாரால் முடியும் , அரிதாக இடம் பெறும் இந்த ராகத்தை அதிஅற்புதமாய் தலைவர் பாட வரதுவும் விஸ்தாரமாய் வாசித்தளிக்க தலைவர் தானத்தில் தேவமனோகரியை தேன்மதுர மனோகரி ஆக்கினார் . தலைவர் தானத்திற்கு ஈடு கொடுப்பதென்றால் சாதாரண காரியமில்லை வரதுவும் வளைத்து வளைத்து வாசிக்க தானம் முடிந்தேறியது பல்லவி என்னவென்று அருமையான தருணம் நோக்கி நாம் காத்திருக்க யாரோ என் இருக்கையில் ஏறுவது போல் நாம் உணர ஓர் உருவம் என் தோள் மீதேறி என் தலை மீது உட்கார்ந்து என் கழுத்தை பிடித்து நெறிக்க ஆரம்பித்தது நாம் உடனே அலைபேசியில் காமிராவை இயக்கி செல்பியில் பார்ததால் நம் பொல்லாத கோபால கிருஷ்ண பாரதி தான் நம்மை இம்சித்துக் கொண்டிருந்தார் , என்னை விடுமைய்யா என்று நாம் மன்றாட எம் பாடலை அவரைப் பாடச் சொல் என்று கர்ஜித்தார் நந்தனார் நாயகர் நாம் பரிதாபமாய் தலைவரை பார்க்க தலைவர் வசீகரப் புன்னகை வீசி யாருக்குத்தான் தெரியும், அவர் மகிமை அம்பல நாடகமாடிய பெருமை என்னும் பல்லவியைப் பாடி என்னை காத்தருளினார் , ஒருவழியாய் கோபாலகிருஷ்ணர் தலைவர் பாட ஓய்யாரமாய் கேட்டது அவை , தானத்தை 6 நிமிடங்களில் முடித்ததால் சற்று ஏமாற்ற நிலையிருந்த நமக்கு அடுத்த 20 நிமிடங்கள் சொல்லில் அடக்க இயலா இன்பம் தந்தார் தலைவர் ராகமாலிகையில் , சரோஜினி நடராஜர் அரங்க மாளிகையில் தலைவரின் ராகமாலிகை படையெடுப்பு அரங்கையே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது , தலைவர் பாட பாட அதை வரது வாசிப்பதற்கு முன் நம் அருகில் அமரந்திருந்த லட்சுமி நரசிம்மர் நமக்கு வாசித்தார் வரிசையாக பஹுதாரி ஹிந்தோளம் சஹானா வரளி ஆனந்த பைரவி பிலஹரி ஆபேரி அடாணா நீலம்பரி ரஞ்சனி சிந்து பைரவி என கேட்போர் மூச்சிரைக்க பாடினார் தலைவர் வரது வயலின் ஒரு வழியானது அப்ப்பப்பா ராக மாலிகை என்ற பெயருக்கு எப்படி அழகு சேர்க்கிறார் தலைவர் சங்கீதகலாநிதி என்பதற்கும் இதற்கு மேல் சான்று வேண்டுமா என்ன , தலைமுறை தலைமுறையாய் இனி இந்த தேவமனோகரி ராகம் தானம் பல்லவி ராக மாலிகையை கோவை பேசும் என்பதில் ஜயமில்லை .
9)ராகமாலிகையின் கடைசி ராகமான சிந்து பைரவியை கையிலெடுத்து மாவூர் வளம் பெருக வந்த காளி அன்னேயே தலைவர் பாட நாம் அன்னை அருள் நிரம்பப் பெற்றோம் , ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரின் இந்த பேரானந்துப்பாடலை தலைவர் அருமையா் அவைக்குத் தந்தார்.
10) தலைவர் குஷியாய் உள்ளார் என்பதில் அடையாளமான அடுத்த ராகம் கமாஸ் , மீண்டும் பதவர்ணம் என்னமோ வகையாய் வருகுது மானே கணம் கிருஷ்ணையரின் மனம் குதூகலிக்க செய்யும் பாடலை தலைவர் பாட அவையின்ர மானினமாகி துள்ளி குதித்தனர் . அவையை விட்டு நகர இருந்தவரும் நின்றபடி கேட்டு மகிழ்ந்தனர் தலைவரின் கமாசை.
11) நடராஜர் பெயரைக் கொண்ட அவையில் விருத்தம் இல்லாமலா அதிலும் தலைவர் பாடியது நடராசப் பத்து சிறுமணவூர் முனுசாமி முதலியார் அவர்களின் பாடலான மானாட மழுவாட விருத்தம் நம்மை கைலாயத்திற்கு இட்டுச்சென்றது , அதிலும் தலைவர் நாட்டியப் பெண்களாட எனும்போது நம் இதயத்தையே வாசிப்பது போல் இருந்தது.ராகமாலிகை அணிவகுப்பு இதிலும் மாயாஜஸலம் நிகழ்த்தியது , காம்போதி பந்துவரளி சாமா சாவேரி நாட்டுக் குறிச்சி காபி என தலைவர் சக்கை போடு போட்டார் .
12) காப்பியில் முடித்த்தும் நாம் ஈசன் அன்பர்க்கு என அனுமானிக்க தலைவரின் பாபநாசம் சிவனின் ஈசன் அன்பர் புகழை அவைக்கு அருமையாய் பாடி வழங்க நாம் தலைவர் இசை கேட்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று உணர்ந்தோம்.
13) சுருட்டியில் ஊனின் மேய ஆவி நீர் திவ்ய பிரபந்த திருச்சந்த விருத்தம் திவ்யமாய் தலைவர் பாடினார் இல்லை தலைவரின் தெய்வீக இசையில் நம்மை சுருட்டினார்.
14) பவமான சுதுடு சவுராட்டிரத்தில் பாட மணி 9.10க்கை காட்டியது சென்னை வெயில் கண்முன்னே வந்து வாட்டியது.நம் அரங்கனை சந்தித்து கைகுலுக்கி சாமிதாநனும் நானும் அரங்கின் வெளியே வந்தால் கோவை மாநகரின் சாரல் மழை நம்மை உற்சாகப்படுத்தியது.
நாம் பயணித்த பலநூறு மைல்கள் பயனுள்ளதாய் அமைந்திட்ட மகிழ்ச்சிக்கு ஈடேது . செப்டம்பர் மாத இறுதிக்கு இன்னும் பல நாளிருப்பதால் நம்பிக்கையோடு சென்னை நோக்கி பீடுநடை போட்டாம் நாம் . எல்லாம் அவன் செயல் என்றே கலங்காதிரு மட நெஞ்சே என நம் முன்னே பாடிக் கொண்டே மகிச்ழ்சியோடு துள்ளல் நடை போட்டார் கோபாலகிருஷஃண பாரதி.

keerthi
Posts: 1309
Joined: 12 Oct 2008, 14:10

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by keerthi »

The mukhAri varnam 'madirAkSi' is an absolutely wonderful piece, and is nearly extinct. I am very happy that Sanjay is revitalising this (and other such) precious compositions. It is a real uphill task to memorise the longer ettugaDa swarams.

However, I find his super-fast 1 kalai version of NarasimhuDu forgettable. For a song that is already cluttered with sAhitya, this express-speed treatment is avoidable. But that must be his pAThAntaram. I wish he would try it in the cauka [2 kaLai] treatment it deserves.

hnbhagavan
Posts: 1664
Joined: 21 Jun 2008, 22:06

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by hnbhagavan »

Dear Rasikas,

This forum is read by people from other than Chennai also.may i request all postings should be in English or translation should be provided.

kvchellappa
Posts: 3636
Joined: 04 Aug 2011, 13:54

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by kvchellappa »

This concert has been uploaded by Prakashrao Narayanan
https://www.youtube.com/watch?v=HYirRBFqu2E

harimau
Posts: 1819
Joined: 06 Feb 2007, 21:43

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by harimau »

keerthi wrote: .......I find his super-fast 1 kalai version of NarasimhuDu forgettable. For a song that is already cluttered with sAhitya, this express-speed treatment is avoidable. But that must be his pAThAntaram. I wish he would try it in the cauka [2 kaLai] treatment it deserves.
On the other hand, it saves him the trouble of figuring out how to get 'dugu dugu' into the song! :lol:

kvchellappa
Posts: 3636
Joined: 04 Aug 2011, 13:54

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by kvchellappa »

In another song 'du' has come (Narasimhudu). Hamsa pakshi takes milk and there are those who prefer water.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by arasi »

kA 'gu'hA the other?

How many remember the cry 'balIn chaDu guDu'--as in kabaDi kabaDi? Harimau's chants about the artiste makes me think about it, and his 'tup tup's, of a firing squad :lol: :(

Keerthi,
Yes, in both kAlams will be nice to hear, the first to bring out the beauty of the song, and the second to describe the haste with which narasimhA comes :)

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by rshankar »

hnbhagavan wrote:Dear Rasikas,

This forum is read by people from other than Chennai also.may i request all postings should be in English or translation should be provided.
Hear hear!!

kvchellappa
Posts: 3636
Joined: 04 Aug 2011, 13:54

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by kvchellappa »

There is a separate detailed review in English by arvenky. The concert link also is above for one to have a first hand experience.

hnbhagavan
Posts: 1664
Joined: 21 Jun 2008, 22:06

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by hnbhagavan »

thank u ,chellappa

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by arasi »

Bhagavan,
Aravind M is a new member at Rasikas.org and has written a review in english too.
About translating him: his writing has its own tamizh flavor which is tough to translate.

Ravi,
It's like trying to translate say,Manohara! I would then wonder. Should we ask Shakespeare? He wrote the original (Hamlet), after all :)

I savor AM's reviews for their uniqueness, of course!

bhaskaran19
Posts: 80
Joined: 23 Sep 2013, 13:39

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by bhaskaran19 »

hnbhagavan wrote:Dear Rasikas,

This forum is read by people from other than Chennai also.may i request all postings should be in English or translation should be provided.
Yes absolutely - in fact at Global level.

kvchellappa
Posts: 3636
Joined: 04 Aug 2011, 13:54

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by kvchellappa »

I would have attempted one, but two factors weighed against. A beautiful, critical review by arvenky appeared already. The second reason is what arasi has said, AM writes in a style in Tamizh which it is difficult to bring about in my prosaic style.

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by rshankar »

MODS: can you please merge this with the other thread that has the review in English?

Jigyaasa
Posts: 592
Joined: 16 May 2006, 14:04

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by Jigyaasa »

I copied the text into Google Translate. The English translation is worth reading :P and there's an option to listen to the translation which is even better! :mrgreen:

mahavishnu
Posts: 3341
Joined: 02 Feb 2010, 21:56

Re: SANJAY SUBRAMANYAN @ RAJALAKSHMI FINE ARTS SOCIETY CONCERT COIMBATORE

Post by mahavishnu »

Jigyaasa: Excellent suggestion ;)

Post Reply