Msg sent by Sri .isaikavi Ramanan
(கவிப்பேரரசு வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம்விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. “வைகறை மேகங்கள்” காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக் கட்டுரையாக்கியதும் உண்டு.உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார்.
அவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே!
அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை.
ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம்.
கட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது.
ஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து.
அது கண்டிக்கத் தக்கது. நேரடியாக மன்னிப்புக் கேட்பதே உரிய பரிகாரமாகும்.
அதை அச்சிட்ட தினமணி கண்டனத்துக்குரியது. பொய் சொல்வதைக் காட்டிலும், பொய்க்குத் துணைபோதல் இன்னும் அநியாயமானது.
கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கவிதை மூலம் என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்)
மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த
ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே!
நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு
கோரும்வரை நீளும் வழக்கு
இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான்
இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான்
சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல்
சொந்தமாகக் கதைசொல்லல் ஆணவம்தான்
எந்தநாளும் அனுபவங்கள் மொழியிலில்லை
எம்மொழிக்கும் அனுபவங்கள் இருப்பதில்லை
அந்தரங்க நம்பிக்கை அனுபவம்தான்
அதற்குமேலோர் அத்தாட்சி யாதுமில்லை!
மனிதரென நமையுலகம் மதிப்பதெல்லாம்
மாண்புதரும் கவிதையெனும் சக்தியன்றோ?
தனியான மரியாதை தமிழாலன்றோ?
தமிழுக்கு மற்றோர்பேர் தரமேயன்றோ?
இனியென்ன சொன்னாலும் சாக்கே அன்றோ?
இழிவுக்கு மன்னிப்பே ஈடாம் அன்றோ?
மனமறியச் செய்தபிழை மறுக்காதீர்கள்!
மல்லுக்குத் திரைபோட்டு மறைக்காதீர்கள்!
ஆராய்ச்சிக் கட்டுரைக்கோ ஆதாரம் போதவில்லை
அயலார்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி ஆவதில்லை
ஆண்டாளுக் கெவரிடத்தும் அத்தாட்சி தேவையில்லை
அனலில்கை வைக்காதீர்! அதுபேதம் பார்ப்பதில்லை!
ஆராய்ச்சிக் கருத்துத்தான் உம்கருத்தா?
அதையேனும் சொல்கின்ற நேர்மையுண்டா?
அநியாயம் செய்துவிட்டு மழுப்பாதீர்கள்
அறமில்லை! அதுதமிழன் மரபுமில்லை!
இறைவனைநீர் நம்பவில்லை, குறையே இல்லை
இறைவனையாம் நம்புகிறோம் பெருமை இல்லை
எம்முயிரை, எம்தாயை, எமதாண்டாளை
ஏதுபயன் கருதிமன்றில் இழிவு செய்தீர்?
குறையேதான்! வக்கிரம்தான்! கோளாறேதான்!
குற்றத்தை உணர்ந்துகைகள் கூப்பி நிற்பீர்!
கும்பிடுவோர் பாதையிலே குறுக்கிடாதீர்
கொண்டபுகழ் கோதையினால் இழந்திடாதீர்!
Isaikkavi Ramana writes to vairamuthu
-
- Posts: 2182
- Joined: 31 Jan 2017, 20:20
Re: Isaikkavi Ramana writes to vairamuthu
The Tamizh script looks so beautiful! Especially on my Oneplus 5 phone!
Would someone kindly translate and help, please!
Would someone kindly translate and help, please!
-
- Posts: 3633
- Joined: 04 Aug 2011, 13:54
Re: Isaikkavi Ramana writes to vairamuthu
(gist)
The Kavi Perarasu Vairamuthu and I have known each other from college days. To meet often and exchange pleasantries was natural. We have also joined on some good platform. There have been many good poems of his I have enjoyed. I have been reading his poems from Vaikarai Megangal days. I have also written a heart-felt article about some of his poems in a work of his, which I enjoyed deeply. He too called me and thanked me for it.
There is no benefit that would accrue to him or harm that will befall him, because of me. So also it is the other way.
His atheism is his problem, his right. I would never comment on it.
But, in the matter of Andal, he has crossed the limit. It is basically uncivilized to interfere in the faith of another. It is a crime to commit it in a premeditated manner.
His mention of research in his article is itself debatable. It is undeniable that he backs that opinion.
In my opinion, to stand on the threshold of Goda in the month of Margazhi that is special for spirituality and Andal and talk in this vein is a great wrong.
It is condemnable. A direct apology is the right atonement.
Dinamani which published it is also to be condemned. More than a falsehood, abetting it is a greater injustice.
I wish to convey to vairamuthu my opinion by a poem.
(I am afraid I should not translate the poem, a beautiful one).

All justification and scholarly dissertation, and sidetracking of the theme to devadasis, glosses over the intended hurt that has been palpable. That is not fairness or neutrality, but ..well, I will stop.
-
- Posts: 5542
- Joined: 05 Jul 2007, 18:17
Re: Isaikkavi Ramana writes to vairamuthu
In his apology he clearly states that he did not intend to denigrate Andal but only further her grandeur. I believe him.
In parts of the actual speech, the admiration & pride he has for Andal is readily palpable. An interesting observation is that there were Tamil women poets before Andal (Auvaiyar & Karaikkal Ammayar), but they had to deny their sexuality. Andal broke that taboo. He refers to her as "tamizhachi", probably the highest accolade in his book.
In a different thread you were very objective & balanced about Thyagaraja. May be the same approach needs to be adopted towards Andal also.

Last edited by sureshvv on 16 Jan 2018, 18:28, edited 3 times in total.
-
- Posts: 3633
- Joined: 04 Aug 2011, 13:54
Re: Isaikkavi Ramana writes to vairamuthu
If he said so, so be it. But, he could have added a direct apology as demanded by Ramanan.
-
- Posts: 3633
- Joined: 04 Aug 2011, 13:54
Re: Isaikkavi Ramana writes to vairamuthu
திரு.வைரமுத்து அவர்களுக்கு, சுகி சிவம் கேள்விகள்.
மரியாதைக் குறிய
ஐயா, சுகி சிவம் அவர்களால் கைப்பட எழுதிய,
"அத்துமீறல் ஓர் அலசல்"
என்ற தலைப்பிட்ட கேள்விகளை நாம் காண்போம்.
1) பரந்த வாசிப்பும், சிறந்த மொழித் திறனும், சொந்த சிந்தனைகளும் உடைய மதிப்புறு மனிதர்
"கவிஞர் வைரமுத்து "
என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், ஆண்டாள் குறித்த கட்டுரையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவரிடம் சில கேள்விகள் எழுப்ப வேண்டி உள்ளது.
2) இன்டியானா பல்கலைக் கழகத்தின் ஆய்வு செய்தியைபதிவிடும் போது -
அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் எழுதாமல் நழுவியது ஏன்?
இது தவறு, அல்லது சரி என்று காரண காரியங்களுடன் எழுத வேண்டியது நேர்மையான இலக்கியவாதியின் கடமை அல்லவா?
அந்த நேர்மை உங்களிடம் இல்லாமல் போனது ஏன்?
3) "கோட்டுக் கால் கட்டிலின் மேல் " என்ற பாசுரத்திற்கு உரைதாரர் விளக்கங்களை
"தீராப் புலமையின் திமீர் காட்டி "
என்று கண்டுபிடிக்க முடிந்த உங்களால்,
பல்கலைக்கழக ஆய்வு மட்டும் தவறு என்று கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்?
4) பலரது பல கால நம்பிக்கைகளுக்குப் பகையாக
( முரணாக அல்ல)
ஒரு செய்தியை எழுதும் போது தக்க ஆதாரங்களையும்,
நிரூபணங்களையும் தந்திருக்க வேண்டும்.
மேம்போக்காக மேற்கோள் எவ்வாறு ஆதாரமாக - நிரூபணமாக ஆக முடியும்?
ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில்,
அவ்வாறு வாழ்ந்து காலம் கழித்தாள்
என்பதற்கு என்ன சான்றுகளை சேகரத்தீர்கள்?
5) பக்தி இலக்கியம் பற்றி ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்புடன் எழுதிக் கொண்டிருக்கும் நீங்கள்,
பகுத்தறிவு நண்பர்கள்
கண்டனம் களில் இருந்து தப்ப,
அவர்களை திருப்திபடுத்த
இப்படி யொரு சாமர்த்தியத்தைக் கையாண்டீர்களா?
6) சமண - பவுத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறான துய்ப்புன் கதவுகளைத் திறந்து விட்ட அக்கால மதநெறிகளின் குறியீடு -ஆண்டாள் என்கிறீர்கள்.
இது பிழை.
சமண - பவுத்த மதங்களால்
வாழ்க்கை இருக்கமானதும்
பக்தி இயக்கங்கள்,
அதனை தளர்த்த முயன்றதும் வரலாற்று உண்மை அறிவேன்.
ஆனால் துய்ப்பு நெறி சமயத்தின் செய்தி அன்று.
நுட்பமான வேறுபாடு தெரிய வேண்டும்.
உலகியல் துய்ப்பினும் பரம்பொருள் துய்ப்பே மேலானது என்கிற அணுகுமுறையே ஆண்டாளின் செய்தி.
" இற்றைப் பறைகொள்வான்
அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட் செய்வோம்
மற்றை நம் நாமங்கள் மாற்று "
என்கிறாள் ஆண்டாள்.
மற்றை நம் காமங்கள் மாற்று என்பது உலகியல் துய்ப்புக்கு எதிராக நிலைப்பாடு அல்லவா.
உண்மையில் ஆண்டாளின் தமிழ்,
"கடவுளை காதலிக்கும்
அச்சமற்ற அழகியல் உணர்விக் உச்சபட்ச வெளிப்பாடு. "
ஆன்மாவின் அனுபவத்தை சாரீரத்தின் சுகமாகவும் சொல்ல முயன்ற முயற்சி.
கடினமானதாக கண்டறியப்பட்ட கடவுள்
தத்துவத்தை,
கலவி,
காமம்,
காதல் என்கிற விசயத்தை,
சுகநிலையில்
பேச முடியும் என்று நிரூபித்த
கவிதாயினியின் சாதனை அது.
முக்தி என்று
சூன்ம விடுதலை பேசிய ஒரு சமயத்தின் முழுச் சுதந்திரம் வெளிப்படுத்திய தமிழ் கோதைத் தமிழ்.
ஆண்டாள் தமிழ் பதிமூன்று நூற்றாண்டுகளைக் கடந்தும் உயிர் வாழ்கிறது.
ஆனால், அடுத்த நூற்றாண்டு வரை உங்கள் கவிதைகள்
தாக்குப் பிடித்தால், அதுவே பெரிய விஷயம் என்பது புரிய வேண்டாமா?
7) அர்ச்சாவ தாரத்தோடு
எழும்பும் சதையுமுடைய பெண் எவ்வாறு
கலக்க முடியும் என்று அறிவு கேள்வி எழும்புமானால்,
இறைபணியிலும், கோயில் பணியிலும் காலம் கழித்து கரைந்து கலந்த திலகவதியார் போல,
ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் வாழ்ந்திருக்க கூடும் என்று எழுதி இருந்தால் சமய உலகம்
இவ்வளவு கொதிப்படைந்து இருக்காது.
8) உங்கள் வார்த்தை தேர்வில்,
வன்மம்,
குரூரம்,
மெல்லிய வஞ்சகம்
வெளிப்படுவதாகவே பக்தர்கள் வருந்துகிறார்கள்.
குருதி, இறைச்சி என்ற சொற்களில் எந்தப் பிழையும் இல்லையென்றாலும்
"உழினை உருக்கி " என்ற மணிவாசகரையும்
"தசையினைத் தீ கடினும் " என்கிற பாரதியையும் நீங்கள் ஒரு முறை கூர்ந்து கவனிப்பது அவசியம்.
சமய உலகிற்கென்று மர4 இருக்கிறது.
நீங்கள் நாத்திகராக அறியப்பட்டவர்.
அப்படி இருக்க
காயப்படுத்தும் வார்த்தைகளில் கவனம் காட்ட தவறியது ஏன்?
9) வைணவ குடும்பங்களில் ஒவ்வொரு பெற்றோரும் தம் மக்களை ஆண்டாளாக பாவித்து |
ஆண்டாள் கொண்டை போட்டு,
மாப்பிள்ளையை
ரங்கமன்னராக்கி மணமுடித்து கொடுப்பதே வழக்கம்.
பெற்ற தகப்பன் பெரியாழ்வாராவது அந்த ஒரு கணம் .... ஒரே கணம்
அந்த அழகான கனவை
அசிங்கமான பதிவால் கலைத்து
என்ன நன்மை பெறுகிறீர்கள்?
10) சாதிக் கட்டுமானம் காரணமாக
ஆண்டாளை
சமூகம் நிராகரிப்பு செய்திருக்கலாம் என்பது
அபத்தமானக் கற்பனை.
வீட்டுக்குள் வரவேற்கத சமூகம்
கோயிலுக்குள் குடியேற்றி
கொண்டாடி இருக்குமா என்ன?
கடவுளையே மணப்பேன்
என்கிற ஆண்டாள்
பெரிதினும் பெரிது கேள் என்கிற பாரதியின் முன்னோடி.
சமூக நிராகரிப்பு என்ற வார்த்தைகளால் அவளது உச்சபட்ச உயரத்தைக் கொச்சைப்படுத்த வேண்டுமா என்ன?
நிவேதனம் கூட
நூறு அண்டா வெண்ணெய்,
நூறு அண்டா சர்க்கரை பொங்கல் என்று
பெரிதினும் பெரிது குறித்துப் பேசிய பெண் பிள்ளை,
உள்ளூர் மாப்பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு
வைகுந்த வாசிக்கு
வாழ்க்கைப் பட நினைத்ததே
ஆண்டாளின் தனிச்சிறப்பு .
11) கட்டுரை முழுவதும் ஆண்டாளை வெளிப்படுத்தும் அக்கறையை விட
உங்கள் பரந்த புலமையை வெளிப்படுத்தும் வேகமே வெளிப்படுகிறது.
நாத்திகராக இருப்பது உங்கள் சௌகர்யம்.
ஆனால்,
அதற்காக ஆண்டாளிடமிருந்து
கடவுளை கழித்த பிறகு என்று கட்டுரையை முடித்திருக்க வேண்டாமே.
இறை நிலையை ஆண்டாளிடம் இருந்து அழிக்க முடியாது.
அழித்தப் பின் ஆண்டாள்
அங்கே இருக்க முடியாது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா வாங்கி வந்து
பால்கோவாவை எறிந்து விட்டு
பிளாஸ்டிக் பையைச் சேகரிக்கும் முயற்சியை
பைத்தியக்காரத்தனம்
என்று சொல்லாமல்
பாராட்டவா முடியும்?
நாத்திகர்களை
திருப்தி செய்ய
ஆத்திகர்களை
வலிக்கச் செய்வது
விவேகமா கவிஞரே?
12) அத்துமீறலில் இத்தனை
அத்துமீறலா?

Vairamuthu's Fake Reference Exposed: Video by Dr. AMR Kannan, New York
https://www.youtube.com/watch?v=I5jEWY_ ... e=youtu.be
https://www.youtube.com/watch?v=I5jEWY_ ... e=youtu.be