Rarely we publish Cinema Review in this column. For a Change, I have reviewed Drishyam 3... It is only one-off case
இந்த “SequeL” என்று சொல்லக்கூடிய படங்கள் எனக்கு கொஞ்சம் ஒத்துக் கொள்வதில்லை. அதுவும் நம்மூர் படங்கள். உதாரணமாக. பொன்னியின் செல்வன்... புத்தகம் படித்தவர்கள், கதையை ரசித்தவர்களுக்குத் தெரியும்.. இதில் பார்ட் இரண்டு வேறு.
அதே போலதான், இந்த துரந்தர், - ஒரு கசாப்பு கடைக்குள் நுழைந்த அனுபவம். வெட்டு குத்து, இதில் பார்ட் இரண்டு வேறு.
இப்போது சர்தார் இரண்டு - என்ற கொடுமையான படம்....
ஆனால் இங்கிலீஷ் படங்கள் சில பார்ட் இரண்டு, ஒன்றைவிட மிகவும் அம்சமாக இருந்தது. ஒன்று. The Terminator, இரண்டாவது Die Hard II, முதல் பாகத்தில் பட்டையைக் கிளப்பிய Raiders of the Lost Ark. அடுத்த பாகம் ஓகே வாக இருந்தாலும்.... இப்படி சில
ஆனால், த்ருஷ்யம் கொஞ்சம் ஒத்துக்கொள்ளும் படியாக இருந்தது. அதற்க்கு ஜீது ஜோசப் ன் கதைக் களமும், மோகன் லால் என்று ஒரு அசுர நடிகன் இருந்த்தால். மோகன் லால் பலமே அவர் கண்கள் தான். அது பல உணர்ச்சிகளை பேசும்.
த்ருஷ்யம் இரண்டு – பாக்கும்போது. முக்கியமாக, அந்த எலும்புக்க் கூடை மாற்றும் காட்சி வரும்போது எனக்குத் தெரியும். மூன்றாம் பாகம் வரும் என்று. ஏனெனில் எ.கூ யார் மாற்றினார்கள் என்று மார்ச்சுவரி யில் விசாரித்தால் தெரிந்து விடும் ... என்ற சிம்பிள் லாஜிக்...
அனால் ஹிந்தி யோ, தெலுங்கோ தமிழோ பார்க்கவில்லை. ஏனெனில், மோகன் லாலின் உணர்சிகளை யாரும், ஏன் கமல் முதற்கொண்டு காட்ட முடியாது. கதை அதேதான் என்பதால் சுவாரஸ்யம் கம்மி.
த்ருஷ்யம் 3 – மலையாளம் பார்த்த பிறகு தான் உணர்ந்தேன். எண்டா போனோம் என்று. இடைவேளைக்குப் பிறகு “சர சர” என்று சீன்ஸ் போனாலும். ஒரு பிடிப்பு இல்லாத கதையாக இருந்தது. முக்கியமாக, மோகன் லால். தன் குடும்பத்தைக் காப்பதற்காக, தன் பெண்ணின் கையையே வெட்டுவது - ரொம்ப சினிமாடிக் ஆக இருந்தது. ஜீது சொதப்பிட்டரே என்று தோன்றியது.
த்ருஷ்யம் – 3 – hindi - அதே கதையை காப்பி அடிக்காமல், புதியதாக யோசித்து, வேறு ஒரு கதையில் பயணிக்கிறது என்று கேள்விப்பட்டபோது, “பரவா இல்லையே, ஹிந்திகாரன் கூட யோசிக்கிறானே !! என்று தோன்றியது.
அஜய் தேவகன் ஒரு பெரிய நடிகர் என்று ஒப்புக் கொள்ளமாட்டேன். சில நாட்கள் முன்பு மறைந்த நானா படேகர் ஒருவர்தான் நான் பார்த்த ஹிந்தி சினிமாவின் ஒரே சிவாஜி.
தேவகனின் அரை கண் வேறு மூடியே இருக்கும். அவர் அப்படி ஒன்னும் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தாக நினவு இல்லை.
வேறு கதை என்னவாக இருக்கும் என்று யோசித்து, ரெவியு வேறு கொஞ்சம் கலந்து கட்டி இருந்ததால், போய் பார்த்தேன்.
அசந்து போனேன்.
படத்தை செதுக்கி இருந்தார்கள். மலையாளத்தில் சொதப்பிய எல்லா பாகத்தையும் தவிர்த்து. லாஜிக் ஓட்டை இல்லாமல், நம்பும்படியாக இருந்தது மோகன் லாலுக்கு சரியான வில்லன் யாரும் இல்லை. அனால் இங்கே புது Crime Branch SP போலீஸ் ஆபிசர், வக்கீலாக பிரகாஷ் ராஜ். இந்த இருவரும் அஜய் தேவகனுக்கு “தண்ணி” காட்டுகிறார்கள். கடைசி 10 நிமிடத்தில், அஜய் தன்னுடைய “பக்கா ப்ளான்” ,மூலம் சரி கட்டி குடும்பத்தை காப்பாற்றுகிறார்...
இதில் இரண்டாவது பாகத்தில், கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் எடுத்த எலும்புக் கூடு, மாற்றப்பட்டு விட்டு விட்டது என்று தெரிந்தபோதிலும், அந்த மண்ணில் DNA இருக்க்குமே என்று போலீஸ் சொல்லும்போது, :அட பரவயில்லையே” என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். கடைசி வரை, கதையை மிக அற்புதமாக நகர்த்தி இருந்தார்கள்.
முதல் பாகத்தில் போலீஸ் காரராக வருவாரே, அஜய் தேவகனால் அவருக்கு வேலை போகுமே -அவரையும் “பழி வாங்க” படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். (மலையாளம் போலவே)
எந்த எலும்புக் கூட்டை மாற்றினார்களோ, அந்த கல்லறையை தோண்டிப் பார்க்கவேண்டும் என்று பிரகாஷ் ராஜ், “அவர் பாணியில்” வாதாட, அது கூடாது என்று எதிர் தரப்பு, ஒரு மதத்தின் உரிமை மீறல் என்று பேச, நீதிபதி, அந்தக் கல்லறையைத் தோண்ட உத்திரவு போடுகிறார். நமக்கு மூச்சு நின்றுவிடுகிறது..... அருமையான சீன்கள் ....
ஒரு தடவை அவசியம் பார்க்கலாம்.... கமுக்கமாக, அஜய் தேவகன் ட்விஸ்ட் கொடுக்கும்போது, அந்தக் குடும்பம் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது – அல்லவா !!! அதுதான் படத்தின் வெற்றி.
சிகரெட் பிடித்தால் கான்சர் வரும் என்று படத்திற்கு முன் வாய் வீங்கிய ஒரு patient ஐ காட்டுகிறார்கள். அனால் படம் முழுவது அந்த SP சிகரட் பிடித்துக் கொண்டே இருக்கிறார். அதை பார்த்த எனக்கே மூச்சு முட்டுகிறது . SP கொஞ்சம் முடி வெட்டிக் கொண்டு இருந்திருக்கலாம்......