KavithaigaL by Rasikas
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Vey nice tkb!
Your better half has rendered it very melodiously in Mohanam.
Congratulations..
Your better half has rendered it very melodiously in Mohanam.
Congratulations..
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
அஞ்சிய நடயும்
மஞ்சி இணைத்த இடையும்
கொஞ்சிய மழலையும்
மறுவிட்ட முகமும்..
கருவட்ட விழியும்...
கெஞ்சும் முகமும்..
வஞ்சனை இல்லா பார்வையும்
பஞ்சு அன்ன மேனியும்..
கார் நிற வண்ணமும்
புரளும் முடியும்
கையில் குழலும்
நெஞ்சில் கருணையும்
கண்ணா! பரமா!
உன்னை நெஞ்சில் இருத்தி.....
உருகி உருகி மனம் களித்தேன்...
மஞ்சி இணைத்த இடையும்
கொஞ்சிய மழலையும்
மறுவிட்ட முகமும்..
கருவட்ட விழியும்...
கெஞ்சும் முகமும்..
வஞ்சனை இல்லா பார்வையும்
பஞ்சு அன்ன மேனியும்..
கார் நிற வண்ணமும்
புரளும் முடியும்
கையில் குழலும்
நெஞ்சில் கருணையும்
கண்ணா! பரமா!
உன்னை நெஞ்சில் இருத்தி.....
உருகி உருகி மனம் களித்தேன்...
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas

(This is a shared image from Face Book....)
To day I am happy..
I am not weeping with in me..
The distress has gone..
The heart is light…
Lost its weight..
You know why..
Friend is with me…a happy guy..
Can somebody tell me why..
I cannot use my hands..
And only have impaired legs..
Living like this for long….
But, has a heart as tender as a butterfly
And a mind too as strong as a rock..
Learning to live like this..
Using what are left out….
Do not pity me..
That is what I hate..
As it bites me
Yes…. bites my ego……
I have no regrets…..
Nor have I any complaints..
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
WATER CYCLE.
விண்ணின்று பொழிமழை நீர் தூய்மையின் இலக்கணம்(H2O)
மண்ணுலகடைந்த பின் தான் புகுந்த இடத்திற்கேற்ப
வண்ணம் ஏற்று தன்னை மாற்றி ப் பெருக்கெடுத்து
தண் ஆறாய் ஓடி வழி மாசெலாம் தான் சுமந்தும்
நுண் கலைகள்எனும் அமுதூட்டி மண்ணின் வளம் கூட்டி
மாண்புடன் ஆழி சேர்ந்து தன்னைப் புதுப்பித்து
மீண்டும் விண் அடைகிறது ஆவியாகி-ஆதவன் உதவியால்
பெண்மையே நீயும் அவ்வாறே-உன்ஆதவன் மா தவத்தோன்

- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
VK,
The lines and the pictures sollum kaviyum kadhaiyum---touching.
PB,
Water Cycle, Life cycle,
punar api api api--
appu...
The lines and the pictures sollum kaviyum kadhaiyum---touching.
PB,
Water Cycle, Life cycle,
punar api api api--
appu...
-
- Posts: 726
- Joined: 21 Jan 2007, 21:43
Re: KavithaigaL by Rasikas
While everyone is posting divine, nature and social poems, I think, I am disturbing the stream 
கொடி
---------
அன்பைக் காட்டவென்றே இருக்கும்
ஆயிரம் வார்த்தைகளில்
சொல்லப்போவதில்லை
ஒன்றைக் கூட
என்றேன்.
.
ஆயிரம் தானே அதனாலென்ன
மீதமிருக்கும் லக்ஷமென்று
சிரித்தாய்.
சரி,
நெகிழவைக்கும்
சொல்லொன்றைக் கூட
சொல்லவேபோவதில்லை
சத்தியமென்றேன்.
நெகிழ்த்தியாகி இருக்குமே
மாதங்கள் எட்டேனும்
இறுக்கமாய் ஏதொன்றும்
அணிவதேயில்லையென்றாய்.
புணர்தலின் உச்சம்போல்
மனமற்றுப் போகும்
பதமொன்றும் மறந்தும்
பகரவே போவதில்லை...
மனமொழிந்தே ஆயின
மாதங்கள் ஆறேனும்
ஆன்மாவை அகழ்ந்து விட்டு
பதமென்ன போ
என்றாய்.
என்னென்னவோ சொல்லியும்
எதற்குமே கவலையற்று
எப்படியிருக்கிறாயடி
சிரித்தபடி
என்றேன்.
சுவைத்தலின் இடையே இதழ் விலகாது
நாக்கு தேடியபடி நாலும் பேசி
சரிவுகளில் நிரம்பிச் சங்கமித்தபடி
சத்தியங்கள் செய்யாதே
சரடெனக் கேட்டது
இதுவல்லவென்றாய்.

கொடி
---------
அன்பைக் காட்டவென்றே இருக்கும்
ஆயிரம் வார்த்தைகளில்
சொல்லப்போவதில்லை
ஒன்றைக் கூட
என்றேன்.
.
ஆயிரம் தானே அதனாலென்ன
மீதமிருக்கும் லக்ஷமென்று
சிரித்தாய்.
சரி,
நெகிழவைக்கும்
சொல்லொன்றைக் கூட
சொல்லவேபோவதில்லை
சத்தியமென்றேன்.
நெகிழ்த்தியாகி இருக்குமே
மாதங்கள் எட்டேனும்
இறுக்கமாய் ஏதொன்றும்
அணிவதேயில்லையென்றாய்.
புணர்தலின் உச்சம்போல்
மனமற்றுப் போகும்
பதமொன்றும் மறந்தும்
பகரவே போவதில்லை...
மனமொழிந்தே ஆயின
மாதங்கள் ஆறேனும்
ஆன்மாவை அகழ்ந்து விட்டு
பதமென்ன போ
என்றாய்.
என்னென்னவோ சொல்லியும்
எதற்குமே கவலையற்று
எப்படியிருக்கிறாயடி
சிரித்தபடி
என்றேன்.
சுவைத்தலின் இடையே இதழ் விலகாது
நாக்கு தேடியபடி நாலும் பேசி
சரிவுகளில் நிரம்பிச் சங்கமித்தபடி
சத்தியங்கள் செய்யாதே
சரடெனக் கேட்டது
இதுவல்லவென்றாய்.
-
- Posts: 695
- Joined: 04 Feb 2010, 11:14
Re: KavithaigaL by Rasikas
thank you @Pratyaksham Bala @venkatakailasam and yes the points made are well taken and will be implemented! Thank you all for the support extended and encouragement given with all your valuable inputs - you all might have to put up few more songs / imaginations from my mind soooon!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(233)
ஐப்பசி 18-ஆம் பெருக்கு!
கூடிக் குளிக்கவும் கும்மாளம் போடவும்
பாடிக் களிக்கவும் பரிசலில் ஆடவும்
ஆடி பதினெட்டில் ஆற்றில் நீரில்லை!
கூடிய பெருமக்கள் குழாயில் குளித்தனர்!
தேடி வந்த ஸ்ரீரங்கர் குட்டைக்கு சீரளித்தார்! - இனி
ஆடியை விடுத்து ஐப்பசி கொள்வோம்!
ப்ரத்யக்ஷம் பாலா,
02.08.2012.
.
ஐப்பசி 18-ஆம் பெருக்கு!
கூடிக் குளிக்கவும் கும்மாளம் போடவும்
பாடிக் களிக்கவும் பரிசலில் ஆடவும்
ஆடி பதினெட்டில் ஆற்றில் நீரில்லை!
கூடிய பெருமக்கள் குழாயில் குளித்தனர்!
தேடி வந்த ஸ்ரீரங்கர் குட்டைக்கு சீரளித்தார்! - இனி
ஆடியை விடுத்து ஐப்பசி கொள்வோம்!
ப்ரத்யக்ஷம் பாலா,
02.08.2012.
.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas

This is a Shared image from a Face book friend...
காவிரியில் நீர்வற்றிவிட்டது என்று கலங்கினார்....
பெருக்கு எடுத்து ஓடுவதை காணீர்..
வற்றிய உடம்பில் பால் உண்ண விழையும் பிள்ளை....
வற்றிவிட்ட பாலை நெற்றி சுருங்க ஈய விழையும் அன்னை..
நோக்கும் உள்ளங்கள் குமுறி அழும்...
வழியும் நீர் ஆற்றிற் கலந்து பெருக்கு எடுத்து ஓடும்..
கண்களும் வற்றி விடும்...
-
- Posts: 1075
- Joined: 13 Feb 2007, 08:05
Re: KavithaigaL by Rasikas
P.B
அருமையான வரிகள்.நிதர்சனம் நகைப்புக்குரியது இன்றைய தின மலரில் வண்ணப்படங்கள்!!.
தேடி வந்த ஸ்ரீரங்கர் குட்டைக்கு சீரளித்தார்! -
ஒருக் கால் பொன்னியின் பிறந்த வீட்டின் ஸ்ரீரங்க -பட்டினம்[/b] தான் அவர் மனதில் இருந்ததோ ?
V.K
[i]வழி யும் நீர் ஆற்றிற் கலந்து பெருக்கு எடுத்து ஓடும்..
கண்களும் வற்றி விடும்...
பதினெட்டாம் பெருக்கிற்கு கண்ணீர் ஆறா ? அதில் குளிக்க பெண்கள் கூட்டம் !குறை ஒன்றுமில்ல கோவிந்தா----உனக்கு-- என பாடலாம் .

I am in distress..
Unable to know why..
My friend is to be taken to ICU..
They say no activity…
Have to put him on ventilator..
To keep him survive
Often I find him in my thoughts dry and hollow
While my head is on a pillow…
Unable to get the reason…
As to which caused the inactivity….
Causes going dry ..?
Or egos running high…?
Restore the activity in him…
Fast and early...

Image shared from a face book friend..
I thought life was easy and soft..
Sweet and joyful….
Pleasing and simple..
Smooth and melodious….
Oh! What a sight is this??
Can life be hard and painful?.
Bitter and ugly…..
Rough and torturous…..
A child starving..
And a vulture waiting…..
To quench its hunger ……
It is happening in a civilized world..!!
Where People who have plenty to eat….
The bread smoothened by butter..
Will never be haunted by such sights…
Note:
The photographer who took the picture of the starving African child with a vulture waiting for her death later killed himself.
His suicide note said “I am haunted by the vivid memories of killings and corpses and anger and pain, of starving or wounded children … The pain of life overrides the joy tothe point that joy does not exist….
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
சீடையுடன் முருக்கும்
தேன் குழலும் அதிரசமும்
முத்து சரிகையும்...
அவலும் வெல்லமும்
வெண்ணையும் பாலும்
கெட்டி தயிரும்
வெற்றிலை பாக்கு பழங்களும்
கிருஷ்ணா முகுந்தா
மாதவா கேசவா..
பரமா புருஷா..என்று
பாந்தமுடன் படைத்து..
ஆடாது அசங்காது வா கண்ணா...
என்று விழைத்தேனே..
வருவாயா ..என் வினை தீர்க்க...
Pithukuli Murugadas - Aadathu Asangathu vaa Kanna
http://www.youtube.com/watch?v=xwjIC-qQa2U

- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
நண்பர் இருவர் மாறுபட்ட கண்ணோட்டம் உடையவர்
பல்பொருள் அங்காடியில் பணி புரிபவர்
அங்காடிக்கொரு சீமான் வந்தார்
பொருள் பல வாங்கிக்குவித்தார்
விலாசம் ஒன்று தந்தார்,
இளைய சஹோதரன் இவன் எனக்கு
அவன் இல்லத்திற்கு அனுப்புங்கள் என்றார்
முதல் நண்பன் சொன்னான் 'எனக்கில்லையே இத்தகைய சஹோதரன்
மற்றவன் சொன்னான்
நான் இல்லையே இத்தகைய சஹோதரனாய்'
Inspired by the saying 'Do unto others as you would have them do to you', I wrote this.

Punarvasu,
A good one from you! I also liked your post about your nephew's remark to his parents and can see how much your father relished telling the story. From the mouth of babes!
Here:
oruvan, sahrudaya sahOdaranAi nAn illaiyE, enRAn...
maTRavanO, nAnillaiyE peTRuk koLbavanAi!--enap pulambinAn...

Last edited by arasi on 09 Aug 2012, 22:51, edited 2 times in total.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Very beautiful elevating idea Punarvasu!
-
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
Thank you, arasi and CML.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Smt. Punarvasu…The same thing you have posted in FB……and I liked it….as I could understand the mind set of individuals…
I am not able to like it here…..as I could not find out the context that it is finding a place in this thread……like arasi or cml…
By this time you may be knowing that I am dull headed still trying to stick to this not so friendly forum..Continuing to share ….
If possible try to enlighten me..or skip…
I am not able to like it here…..as I could not find out the context that it is finding a place in this thread……like arasi or cml…
By this time you may be knowing that I am dull headed still trying to stick to this not so friendly forum..Continuing to share ….
If possible try to enlighten me..or skip…
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
VKailasam,
You add so much richness to this forum. Your sharing of music (even with the 'unfriendly'!) is amazing. And outside the forum--how many people take pleasure in listening to all the music you bring to them! Which reminds me. Even here at Rasikas.org, a miniature world, you may find unfriendliness here and there, but in general, this is a genial place. Another thing. How many countless 'silent ones' browse and appreciate what you post here!
Yes, there have been times when I have felt like saying: let me be a silent member at Rasikas--times when elements 'not so friendly' crop up. Well, we are here as a family of rasikAs, have enough interests in music and more to communicate about--and how can we move away from it that easily?
Anyway, that's my feeling--and believe me, it has not been a path strewn with rose petals for the so-called 'queenie' either!
Besides, we are at a stage in life when we are back in our childhood. Playground tiffs and an occasional bullying are all part of it--but just think of all the friends!
To conclude
, you are very much wanted here, by many of us. Do not forget the silent majority also.
Even among us friends, we do not acknowledge our appreciation in every instant. We just carry on, writing more kavidais. Sometimes, there are instant responses and at other times, we keep writing without a stop as if one person is doing it all! Yes, that explains it. Individuals we are, but we tend to lose our identities at times which is a good thing, because we are after all one as rasikAs.
Enough from me before I get chastised for spouting whatever it is

VK, I saw that you 'liked' my kavithai on FB. I get inspired sometimes and write; of course this, I had written long back and I suddenly remembered and posted it there. You and and some others here write so much and that inspires us. Reg, what you do by way of sharing so much music , so many of us are enjoying it. You share it because you enjoy sharing and enjoy others enjoying it. Nothing can compare to that .Pl. continue.It is your nature to give and nothing or nobody can stop it.venkatakailasam wrote:Smt. Punarvasu…The same thing you have posted in FB……and I liked it….as I could understand the mind set of individuals…
I am not able to like it here…..as I could not find out the context that it is finding a place in this thread……like arasi or cml…
By this time you may be knowing that I am dull headed still trying to stick to this not so friendly forum..Continuing to share ….
If possible try to enlighten me..or skip…
I am reminded of a sanskrit subhashitam which says respectability comes from giving and not by collecting. The position of cloud (giver) is high and that of the receiver(ocean) is at the bottom.
As arasi said let us continue to enjoy the pleasure we get by sharing so many things here.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Vkailasam
No need to feel defensive. There is a silent majority who silently appreciate and acquiese. Then there are the "talkative" ones like me and arasi (though arasi leads on that front
). While arasi is always appreciative and assuaging I shoot my mouth and get into trouble! Above all we are a supportive family (all of us!) who pitch in when the need arises. Our Rasika Family is a close-knit family you can count on rain or shine.
This Forum while primarily is 'informational' is also like the 'couch' where clients share their frustrations.
We should let folks let out the steam (harmlessly) rather than try to 'analyze'. Unfortunately it does not happen always which leads to unnecessary altercations and 'members' quitting the Family!
Folks like you, PB (our information wizard) , inimitable Lakshman, VKR (our silent bard), ravi shankar (and of course arasi wearing the different hat!) and many such service providers are the mainstay of this Forum.
THANK YOU
Let your motto be:
என் கடன் பணி செய்து கிடப்பதே!
Remember (as Punarvasu has artistically stated) after all, the Ocean never thanked the Clouds!
No need to feel defensive. There is a silent majority who silently appreciate and acquiese. Then there are the "talkative" ones like me and arasi (though arasi leads on that front

This Forum while primarily is 'informational' is also like the 'couch' where clients share their frustrations.
We should let folks let out the steam (harmlessly) rather than try to 'analyze'. Unfortunately it does not happen always which leads to unnecessary altercations and 'members' quitting the Family!
Folks like you, PB (our information wizard) , inimitable Lakshman, VKR (our silent bard), ravi shankar (and of course arasi wearing the different hat!) and many such service providers are the mainstay of this Forum.
THANK YOU
Let your motto be:
என் கடன் பணி செய்து கிடப்பதே!
Remember (as Punarvasu has artistically stated) after all, the Ocean never thanked the Clouds!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
cmlover:
Thank you very much!
I am deeply humbled by your encouraging comments.
Thank you very much!
I am deeply humbled by your encouraging comments.
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
Thank you arasi, punarvasu and cml…
Arasi..I am not seeking appreciation from x or y or z…..for what I do..I am having enough
People…and also as you say silent viewers…
It is not the question at all..
People flocking to appreciate you with superlative adjectives are not willing to appreciate your composition nor that of Nitin’ rendering… when I posted them recently..
And it pains me to think that since it was a posting by me….members are reluctant ..to post their appreciation in that thread…solitary member was cml….
I am sure it would have caused you embarrassment… :^)
And unwittingly I was the cause for it…
It has happened earlier also…it was when I brought to the notice that you are enjoying your platinum jubilee year…there was absolute silence…..
I seek no appreciation but do not want disrespect to the authors and performers...

Last edited by venkatakailasam on 12 Aug 2012, 05:22, edited 1 time in total.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
Are you kidding?And it pains me to think that since it was a posting by me….members are reluctant ..to post their appreciation in that thread
Truth is always the same whoever states it!
That superb vacaspati must have stolen the hearts of the many silent downloaders...
Do you have a count?
-
- Posts: 1226
- Joined: 05 May 2009, 08:33
Re: KavithaigaL by Rasikas
Dear Venkatakailasam As usual I am late for the party/felicitation. I have thoroughly enjoyed your postings on this forum as well as You Tube--I am not a gifted poet like Arasi,Punarvasu or CM Lover--to be able to express how much you mean to all of us forumites. As Arasi puts it,this forum is patronised by more decent and well-meaning,knowledgeable rasikas than any other musical forums that I have followed-- Your prolific contributions have enriched me personally although I may have been remiss in not acknowledging them from time to time(AArina Kanji Pazham Kanji).
Keep up the good work--your postings cover a wide sweep of this Forum Canvas that dilettentes like me tend to miss !!!
Keep up the good work--your postings cover a wide sweep of this Forum Canvas that dilettentes like me tend to miss !!!
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
cml...
shri..Ramasubramanian M.K...
I have to fulfill your expectations..
shri..Ramasubramanian M.K...
I have to fulfill your expectations..
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
MKR
I miss your fascinating recollections! Awaiting SSI stories yet!
Of course takeyour time...
You are a superb raconteur!I am not a gifted poet like Arasi,Punarvasu or CM Lover
I miss your fascinating recollections! Awaiting SSI stories yet!
Of course takeyour time...
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
No question about that!
nalladOr kadai sollum nammil oruvar--
vAZh nALellAm isaiyil muzhugi
ethanaiyO vallunargaLaik
kETTum, uDan irundum--
athanaiyum kaTRaRindu
avai azhagAip pagirndu
magizhum em (M) KR
nalladOr kadai sollum nammil oruvar--
vAZh nALellAm isaiyil muzhugi
ethanaiyO vallunargaLaik
kETTum, uDan irundum--
athanaiyum kaTRaRindu
avai azhagAip pagirndu
magizhum em (M) KR

-
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
MKR, clubbing me along with arasi and cml! I am nowhere near them!
Thank you!
Thank you!
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Punarvasu,
You are very near to us
You are very near to us

-
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
arasi,so you are to me! 

-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
...and dear to us too!
-
- Posts: 16873
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Let's put a hold on it now, and wait till Valentine's Day, don't you think?
Meanwhile, Punarvasu has the littlest member of her family--her wee grandchild to feel closest to;)
Meanwhile, Punarvasu has the littlest member of her family--her wee grandchild to feel closest to;)
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
punarvasu...very best wishes for the new arrival....and to all..
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
Re: KavithaigaL by Rasikas
நாலும் தெரியல..
நடப்பும் தெரியல..
நவின்ற சொல்லுக்கு பொருளும் தெரியல..
மதியும் மழுங்கி போச்சு..
எண்ணமும் வறண்டு போச்சு..
கவி எழுதும் நயமும் போச்சு..
சிவாய நம உரைக்கும் திறனும் போச்சு..
நிதியும்..கிருபா நிதியும் சிதைந்து போச்சு...
நடப்பும் தெரியல..
நவின்ற சொல்லுக்கு பொருளும் தெரியல..
மதியும் மழுங்கி போச்சு..
எண்ணமும் வறண்டு போச்சு..
கவி எழுதும் நயமும் போச்சு..
சிவாய நம உரைக்கும் திறனும் போச்சு..
நிதியும்..கிருபா நிதியும் சிதைந்து போச்சு...
-
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
Sh ri VK, thank you .
நாலும் தெரியல நடப்பும் தெரியல
மதியும் மழுங்கிப்போச்சு
எண்ணமும் வறண்டு போச்சு
கவிதைத்திறனும் கலைந்து போச்சு
என்று கவிதையாய் எழுதிய
உமக்கா கற்பனையில் வறட்சி?
இல்லை இல்லை இல்லவே இல்லை.
தொட்டனை த்து ஊறும் மணற்கேணி அது!
நாலும் தெரியல நடப்பும் தெரியல
மதியும் மழுங்கிப்போச்சு
எண்ணமும் வறண்டு போச்சு
கவிதைத்திறனும் கலைந்து போச்சு
என்று கவிதையாய் எழுதிய
உமக்கா கற்பனையில் வறட்சி?
இல்லை இல்லை இல்லவே இல்லை.
தொட்டனை த்து ஊறும் மணற்கேணி அது!
Last edited by PUNARVASU on 13 Aug 2012, 19:14, edited 1 time in total.
-
- Posts: 809
- Joined: 03 Feb 2010, 11:36
Re: KavithaigaL by Rasikas
London Olympics
வெண்கலம் நாலு.சரி! வெள்ளியில் ரெண்டு.பலே!!
தங்கத்தை வெல்லத் தரமிலையோ? எங்கள்
அதிவினய விண்ணப்பம்! ஆட்டத்தில் சேர்ப்பீர்
சதுரங்கம் கோக்கோ கபடி
வெண்கலம் நாலு.சரி! வெள்ளியில் ரெண்டு.பலே!!
தங்கத்தை வெல்லத் தரமிலையோ? எங்கள்
அதிவினய விண்ணப்பம்! ஆட்டத்தில் சேர்ப்பீர்
சதுரங்கம் கோக்கோ கபடி

Last edited by sridhar_ranga on 13 Aug 2012, 20:33, edited 1 time in total.
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
வென்றவர்கள் வென்றுவிட்டார் வெற்றிக்கு மகிழ்ச்சியடி
வெல்பவர்கள் வெல்லவில்லை வேதனையடி
வெறும் வார்த்தை வீரமில்லை வீண் பேச்சடி
வெல்வதற்க்கு காலம் வரும் வகை செய்வோம் (இனியேனும்)
வெல்பவர்கள் வெல்லவில்லை வேதனையடி
வெறும் வார்த்தை வீரமில்லை வீண் பேச்சடி
வெல்வதற்க்கு காலம் வரும் வகை செய்வோம் (இனியேனும்)
-
- Posts: 11498
- Joined: 02 Feb 2010, 22:36
Re: KavithaigaL by Rasikas
இம்மெனும் முன்னே இருநூறும் முந்நூறும்
அம்மென்றால் ஆயிரம்தான் ஆகாதோ - சும்மா
இருந்தால் இருப்பார் பொழிந்தால் கவி(இசை)
அருவி வேங்கடமும் கைலாசமும் மூழ்கத்தான்!
அம்மென்றால் ஆயிரம்தான் ஆகாதோ - சும்மா
இருந்தால் இருப்பார் பொழிந்தால் கவி(இசை)
அருவி வேங்கடமும் கைலாசமும் மூழ்கத்தான்!
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(234)
உண்ணாழிகை* உரு
கல்லில் உன்னைக் கண்டேன்;
............கருத்தில் மின்னக் கண்டேன்!
வில்லில் வீரம் கண்டேன்;
............விழியில் ஈரம் கண்டேன்!
அல்லல் கரையக் கண்டேன்;
............அரவம்* மறையக் கண்டேன்!
சொல்லில் மறையைக் கண்டேன்;
............சுவையில் நிறைவைக் கண்டேன்!
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
*உண்ணாழிகை = கர்ப்பக் கிருகம்
*அரவம் = ஆசை
uNNAzhigai* uru
kallil unnaik kaNDEn;
.........karuttil minnak kaNDEn!
villil vIram kaNDEn;
.........vizhiyil Iram kaNDEn!
allal karaiyak kaNDEn;
.........aravam* maRaiyak kaNDEn!
shollil maRaiyaik kaNDEn;
.........shuvaiyil niRaivaik kaNDEn!
Pratyaksham Bala, 14.08.2012
*uNNAzhigai = garbhagraham
*aravam = desire
.
உண்ணாழிகை* உரு
கல்லில் உன்னைக் கண்டேன்;
............கருத்தில் மின்னக் கண்டேன்!
வில்லில் வீரம் கண்டேன்;
............விழியில் ஈரம் கண்டேன்!
அல்லல் கரையக் கண்டேன்;
............அரவம்* மறையக் கண்டேன்!
சொல்லில் மறையைக் கண்டேன்;
............சுவையில் நிறைவைக் கண்டேன்!
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
*உண்ணாழிகை = கர்ப்பக் கிருகம்
*அரவம் = ஆசை
uNNAzhigai* uru
kallil unnaik kaNDEn;
.........karuttil minnak kaNDEn!
villil vIram kaNDEn;
.........vizhiyil Iram kaNDEn!
allal karaiyak kaNDEn;
.........aravam* maRaiyak kaNDEn!
shollil maRaiyaik kaNDEn;
.........shuvaiyil niRaivaik kaNDEn!
Pratyaksham Bala, 14.08.2012
*uNNAzhigai = garbhagraham
*aravam = desire
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(235)
கேள்வி!
எட்டி இருந்து 'ஐயகோ' என்றால்
ஏழ்மை பறந்திடுமா?
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
கேள்வி!
எட்டி இருந்து 'ஐயகோ' என்றால்
ஏழ்மை பறந்திடுமா?
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(236)
விதிவசம்
'தேனே' என்றான். கொட்டினாள்!
'மானே' என்றான். முட்டினாள்!
'மயிலே' என்றான். பாடினாள்!
'பூவே' என்றான். உதிர்ந்தாள்!
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
.
விதிவசம்
'தேனே' என்றான். கொட்டினாள்!
'மானே' என்றான். முட்டினாள்!
'மயிலே' என்றான். பாடினாள்!
'பூவே' என்றான். உதிர்ந்தாள்!
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(237)
இப்படியும் சிலர் 1
ஓசியில் கிடைத்த சோறு உப்பு போதாதென்பார் - பின்
கண்டதைப் போட்டுக் கிண்டி இதுவே அமிர்தமென்பார்.

(238)
கற்றதில் இருப்பு
கற்றதிலே மறந்தது போக
மற்றதிலே கசந்தது களைய
வெறுப்பென்று விட்டது தவிர
இருப்பதிலும் விலக்க வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
.
கற்றதில் இருப்பு
கற்றதிலே மறந்தது போக
மற்றதிலே கசந்தது களைய
வெறுப்பென்று விட்டது தவிர
இருப்பதிலும் விலக்க வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(239)
கேள்வி!
கோபத்தில் குதிப்பதனால்
குவலயம் கருகிடுமா?
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
.
கேள்வி!
கோபத்தில் குதிப்பதனால்
குவலயம் கருகிடுமா?
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(240)
செயல்
தர்மத்தில் மகிழ்ச்சி கண்டால் - நீ
செய்வது உனக்காக - செய்யும்
கர்மத்தில் மகிழ்ச்சி கண்டால் - நீ
இன்னும் சிகரத்தை எட்டவில்லை.
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
.
செயல்
தர்மத்தில் மகிழ்ச்சி கண்டால் - நீ
செய்வது உனக்காக - செய்யும்
கர்மத்தில் மகிழ்ச்சி கண்டால் - நீ
இன்னும் சிகரத்தை எட்டவில்லை.
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(241)
அவரவர் நிலை
பிறவா வரம் வேண்டி துறவிகள் துதிக்கும்போது
இறவா வரம் வேண்டி ஏகமாய்த் துடிப்போருமுண்டு.
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012
.
அவரவர் நிலை
பிறவா வரம் வேண்டி துறவிகள் துதிக்கும்போது
இறவா வரம் வேண்டி ஏகமாய்த் துடிப்போருமுண்டு.
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012
.
Last edited by Pratyaksham Bala on 14 Aug 2012, 17:34, edited 1 time in total.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(242)
இப்படியும் சிலர்
கைவசம் காசிருந்தும் கனவிலும் தர்மம் செய்யார் - எனினும்
இலவசம் அளிக்காதோர் இங்கே இருந்திடலாமோ என்பார்!
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
.
இப்படியும் சிலர்
கைவசம் காசிருந்தும் கனவிலும் தர்மம் செய்யார் - எனினும்
இலவசம் அளிக்காதோர் இங்கே இருந்திடலாமோ என்பார்!
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
.
-
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
(243)
கேள்வி
திருடியதைப் பகிர்ந்தளித்தால்
பாபம் தீர்ந்திடுமா?
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
.
கேள்வி
திருடியதைப் பகிர்ந்தளித்தால்
பாபம் தீர்ந்திடுமா?
ப்ரத்யக்ஷம் பாலா,
14.08.2012.
.