KavithaigaL by Rasikas

Post Reply
Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

471

ஒரு குருவின் வாக்குமூலம் !

"சிந்தனை செய்யவிடேன்; சொல்வதைக் கேளென்பேன்.
வந்தெனை சேவித்து விழுந்திட வைத்திடுவேன்.
வடமொழிச் சொற்களில் விடைப்பேன்; மிரட்டுவேன்.
இடம்மாறிச் சென்றுவிட்டால் எம்பிழைப்பு என்னாகும் ?"

ப்ரத்யக்ஷம் பாலா,
20.06.2015.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

வெற்றி

Post by vgovindan »

உலகப்போர் மூண்டபோது ரேஷன் கடைகள் வந்தன, நியாயம்;
உணவுப்பொருள் ஏற்றுமதி செய்யும் இன்று ரேஷன் கடைகளேன்?
மக்களாட்சியின் பெயரால் நம்மை மந்தைகளாக்கி, மடையர்களாக்கி,
மட்டப்பொருட்களை மலிவு விலையில் விறகும் காலமிது;

நாணயமானவன் கையிலிருந்து வரிப்பணத்தைப் பிடுங்கி,
நாணயமற்றவனெல்லாம் ஆட்சி நடத்திப்பிழைக்கும் காலமிது;
'நாமார்க்கும் குடியல்லோம், நமனையஞ்சோம்' என்ற காலம் போய்,
நாமார்க்கும் அடிமைகளாய் நிற்கின்றோமே, என்ன பேதமை!

குடியரசு குடி வினியோகம் செய்திடும் காலம் வந்ததன்றோ!
குடிமக்கள் குடி மக்களாய், மாக்களாய்த் திரிந்திடும் காலம் வந்ததன்றோ!
பீடுநடையோடு பெருமக்களாய் வாழ்ந்திட்ட காலம் மாறி,
பீடைபிடித்து, சிறுமை மிகுந்து, பேதையராகி வாழ்கின்றோமே!

விடிவு காலம் இதற்கில்லையோ, இறைவா எனக் கெஞ்சினோமே;
விடத்தையும் வலிந்துண்டு விண்ணும் மண்ணும் காத்தோனே!
வீரமும் வலிமையும் தந்து விம்மி நிற்கும் நிலை தாராயோ?
வீதியெங்கும் தோரணம் கட்டி வெற்றி நடையிடுவோமோ?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

472

மாற்றம் வரும் !

பெருங்குரு பணித்திடுவார்; பொருள் கூறார்.
தரும்பணியோ பேரசிங்கம்; தரணி எள்ளும்.
பொருளறியாச் சிட்டர்கள் பேதலித்துக் கிடப்பர்.
வரும்கூட்டம் விழிக்கும் ! வரும்நல்ல மாற்றம் !

ப்ரத்யக்ஷம் பாலா,
21.06.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

473

அருள்

சங்கிலித் தெய்வம் தொழு.
சங்கொலிப் பூசை இடு.
பங்கய மாலை அளி.
பொங்கிடும் புனித நாளே !

ப்ரத்யக்ஷம் பாலா,
22.06.2015.

thanjavooran
Posts: 3051
Joined: 03 Feb 2010, 04:44

Re: KavithaigaL by Rasikas

Post by thanjavooran »

[b]திரு ப்ரத்யக்ஷம் பாலா அவர்களே
அருமையான கருத்துக்கள். நல்ல சொல் ஆட்சி. வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
22 06 2015[/b]

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

திரு தஞ்சாவூரான் அவர்களே,

மிக்க நன்றி !

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

474

இயற்கை

மெல்ல வருடும் முல்லைக் கொடிகள் ...
செல்லம் கொஞ்சும் சுகந்த மலர்கள் ...
கிள்ளி மயக்கும் கமுகு மடல்கள் ...
கொள்ளை இன்பம் ! கொள்ளை அழகு !

ப்ரத்யக்ஷம் பாலா,
25.06.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

475

சிவனருள்

எல்லையில்லாத இறைவன் அருளால்
தொல்லை போனது; தெளிவு வந்தது.
சக்கரம் சுற்றிய சங்கடம் போனது !
துக்கம் போனது; துடிப்பும் வந்தது.

ப்ரத்யக்ஷம் பாலா,
26.06.2015.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

476

சிவமே அறியும் !

சங்கொலித்து சக்கரம் சிலிர்க்கத் தட்டி
அங்கமெடுத்து உயர் அக்னிக்களிப்பது
விடுத்த உயிர்க்கொரு விரகம் தருமோ ?
சுடரொளி த் தெய்வம் சிவமே அறியும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
27.06.2015.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

நெசவாளி

Post by vgovindan »

தலையில் கட்டினால் பாகை, தோளிலிட்டால் துண்டு,
இடுப்பில் கட்டினால் வேட்டி, துணியொன்றுதானே?
கிருஸ்துவனுக்கு இயேசு, முஸ்லீமுக்கு அல்லா,
இந்துவுக்கு கிருஷ்ணன், ராமன் - இறையொன்றுதானே?

பாவாகிலும் ஊடையாகிலும் இழையொன்றுதானே?
சாயமேற்றினாலும், ஏற்றாவிடினும், இழை இழைதானே?
நூற்றால் இழை, நூற்காவிடின் பஞ்சு, இழையும் பஞ்சுதானே?
தோலாடையை நெய்த இழையெதுவோ, பஞ்செதுவோ?

ஓரமின்றி, ஒட்டுமின்றி தோலாடை நெய்தவனாரோ?
என்பை, சதையை, குருதியை திணித்துப்பின் நெய்தானா?
தோற்பை நெய்தபின்னர் அவற்றைத் திணித்தானா?
உயிரூட்டி, உள்ளமூட்டி, அறிவூட்டி, ஆற்றலூட்டினானே!

தாவரத்தினூடும், ஊர்வன, பறப்பன, மாக்களினூடும்,
ஆறறிவு மக்களினூடும் இருக்கும் உயிரொன்றுதானே?
அசைவன, அசையாதவற்றினூடும் இசைவொன்றுதானே?
ஆயிரம் அண்டங்களை அந்தரத்தில் நிலைக்கச் செய்தானே!

நொடியும் தப்பாது கோள்களை சுழலச்செய்தானே!
நோன்பு நோற்று புண்ணியம் தேடிக்கொண்டாலும்,
பொழுதெல்லாம் பாழாக்கிப் பாவியாகவே வாழ்ந்தாலும்,
இருவரிலும் சமமாக நிலைத்திருக்கும் பொருளதுதானே?

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

அற்புதம், கோவிந்தன் :)

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

477

திருவருள்

மோசக்கரம் பற்றி மோசம் போனாயோ ?
நேசக்கரம் பற்று; நாதனடி போற்று !
திரிசங்கு நிலையோ தவிக்கும் தவிப்பு ?
திருச்சிவன் பற்று; திருவருள் கிட்டும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
28.06.2015.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

தேட்டம்

Post by vgovindan »

மலர் மலர்ந்த செய்தி தேன்வண்டின் காதுக்கேயெட்டும்;
பழம் கனிந்த செய்தி அணிலின் காதுக்கேயெட்டும்;
இனிப்பு உள்ள செய்தி எறும்பின் காதுக்கேயெட்டும்;

இதயம் கனிந்த செய்தி இறைவனுக்கேயெட்டும்;
இதயத்தைக் கனியவைத்துக் காத்திருப்போம்;
இவரையும் அவரையும் தேடியலைய வேண்டுமாயென்ன?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

478

மறுவுலகு
(ஓர் ஆன்மாவின் அனுபவம்)

ஏதேதோ சொன்னார்களே ?
எதையுமே காணோமே ?
பாலுமில்லை, தேனுமில்லை;
ஐயகோ ! போதித்தது எதுவும் இல்லை !

பூமியே அழகு !
வாழ்வே இனிமை !
திரும்புவது எப்போதோ ?
இவ்விடம் நினைவிலிருக்குமோ ?

ப்ரத்யக்ஷம் பாலா,
01.07.2015.

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

சாதல்...
அதன் பின்னும்
மோதலா? :o :)

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

இது வேறு !

479

தொல்லை

இல்லாத பொருளை இழந்ததாய்க் கூறலாம் !
வெல்லாத கலையை வெறுப்பதாய்க் கூறலாம் !
பொல்லாத தலைவனைப் புகழ்ந்து தொலைக்கலாம் !
செல்லாத காசுக்குச் செய்வதென்ன இறையே ?

ப்ரத்யக்ஷம் பாலா,
03.07.2015

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

pollAda thalaivanaip pugazndu tholaikkalAm

Very good line :)

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

arasi:
Thanks !

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

480

முருகனருள்

சொல்லத் தெரியவில்லை; சொக்கிக் கிடக்கின்றேன்.
முல்லை வன வாசத்தில் மனம் கிரங்கியதோ ?
மெல்ல ஆடும் மயிலில் முருகன் சிரிக்கின்றான் !
கொல்ல வரும் சூரனின் கொட்டம் அழிக்கின்றான் !

ப்ரத்யக்ஷம் பாலா,
09.07.2015

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

பிறவிப்பயன்

Post by vgovindan »

ஆடிய ஆட்டமெல்லாம் அடங்கிடப்போமோ?
ஓடிய ஓட்டமெல்லாம் ஒடுங்கிடப்போமோ?
செய்திட்ட வினைகள் முடிந்திடப்போமோ?
செயல் மாண்டு சும்மா இருந்திடப்போமோ?

சித்தவெளி மன்றாடு சேவடி பற்றிடப்போமோ?
நித்தம் குன்றா இறையருள் பெற்றிடப்போமோ?
பிறவிக் கடல் கரைதனைக் கண்டிடப்போமோ?
பிறவிப் பயன் பெற்றிங்கு உய்ந்திடப்போமோ?

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

மாய்ந்த பின் உய்ந்திடுவோமோ?
சாய்ந்த பின் அவன் சாந்நித்யமோ?
வாழ்ந்த‌ பின் காண்பதவன் பாதமோ?
பாய்ந்தெதையுமிங்கு பேணா விடில்?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

481

பக்தி

கல்லொன்று தேர்ந்தெடுத்து
நல்லதோர் பெயரளித்து
சந்தனம் குங்குமம் இட்டு
கந்தநற் பூக்கள் சூட்டி
பாடிப் பணிந்திருப்போம் !
தேடிச் சுவர்க்கம் வரும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
10.07.2015

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

482

துணை

சாத்தானும் வேதம் ஓதும் - யார்
செத்தாலும் குதித்து ஆடும் - எரியும்
கொள்ளியில் எண்ணெய் ஊற்றும்
வெள்ளமாய்க் கண்ணீர் வடிக்கும்.

இடமுண்டு எல்லோர்க்கும் இவ்வுலகில்
விடமுண்ட இறையே துணை !

ப்ரத்யக்ஷம் பாலா,
11.07.2015

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

483

கண்ணா, ஜாக்கிரதை !

கார் குறுக்கே வரும்.
தார் உருகி ஓடும்.
ஓர் பள்ளம் இருக்கும்.
பார்த்துத் தடம் பதி !

ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2015

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

காத்திருப்பேனே, களிக்கும் கோகுலாட்டமி வரையிலே!
பார்த்திருப்பேனே, மகளிர் மாக்கோலப் பதம் வரைந்தே
கார்முகில் வண்ணா, என அழைத்தெனைப் போற்றியே
வாய் நிறையத் தீஞ்சுவைப் பண்டம் தரும் வரையிலே :)

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

484

ஆசிரம அடிமை

ஏடு கொண்டு பாடி ஏங்கியது போதாதா ?
ஆடு மந்தையென ஆடியது போதாதா ?
கேடு கெட்டுக் கூடி கனவுலகு காண்பதேன் ?
தேடு, திரி, திறனறி, தத்துவம் புரியும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
13.07.2015

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

கூறாதீர் RIP

Post by vgovindan »

இறந்தால் நற்கதி கிடைக்குமா கிடைக்காதா என்பதல்ல கேள்வி;
இன்று எங்ஙனம் பயனுள்ளதாக வாழ்ந்தோம் என்பதுதான் கேள்வி;
அறவழி நின்று அறங்காத்தலே ஆண்டவனின் தொழுகை;
அன்றாடம் உலகம் பயனுற வாழ்ந்தவனிடம் காலனுக்கு என்ன வேலை?

கலாம் போன்றோருக்கு RIP கூறாதீர்;
காலங்காலத்திற்கும் அவர்போன்றோர் தேவை;
கலாம்கள் பல்லாயிரம் உதிக்கட்டும் இங்கு.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: KavithaigaL by Rasikas

Post by Ponbhairavi »

இருக்கலாம் இருப்பினும் சிறக்கலாம்.

எளிய இல்லில் பிறக்கலாம்
ஏழை சுற்றத்திருக்கலாம்
அரசுப்பள்ளியிலும் படிக்கலாம்
இல்லறமும் துறக்கலாம்

நேர்மையும் நற்பண்பும் உண்டாகில்

அக்கினிச்சிறகுகள் முளைக்கலாம்
விண் விசும்பப் பறக்கலாம்
பார் போற்றச்சிறக்கலாம்
காலம் வென்றமரரும் ஆகலாம்.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

புகழுடம்பு

Post by vgovindan »

பத்துத் தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்த பணப்பேய்களே!
நித்தம் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தும் அரசியல் வாதிகளே!
உங்கள் பணமும் அதிகாரமும் உடலை விட்டு ஏகும்போது,
எங்கு போகுமென்று ஒரு கணம் யோசித்துப் பார்த்ததுண்டா?

உங்களுக்கென்று வாழாது ஒரு கணம் மக்களுக்காக வாழந்து பாரும்;
உங்களுக்குள் இயக்கமாயுள்ள இறைவனை ஒரு நொடி நினைத்துப் பாரும்;
உங்கள் நாட்டிலே பிறந்து, உங்களுடனே படித்து, உங்களுடனே வளர்ந்து,
உங்கள் நாட்டு முதல் குடிமகனாகின அப்துல் கலாமிடம் உள்ளதென்ன?

குடியரசுத் தலைவராக மாளிகையில் நுழைந்த போது இரண்டு பெட்டி;
குடியரசுத் தலைவர் பதவியினின்று இறங்கிய போதும் இரண்டு பெட்டி;
நாட்டு மக்களின் உள்ளத்திலே நீங்காத இடம் பிடித்தாரே!
இவ்வளவு தானய்யா ஒரு மனிதனுக்குத் தேவையானது;

புகழுடம்பென்று தமிழில் கூறுவர்; அவ்வுடம்பை ஏந்தி நிற்கும்
புகழுக்குப் புகழளித்த நல்லவர் ஒருவர் உறங்குகிறார், இன்று;
புகழ், பணத்தினாலோ அதிகாரத்தினாலோ வருவதல்ல;
புகழ் மணக்க ஒரு நொடி வாழந்தாலும் போதும், நூறாண்டெதற்கு?

arasi
Posts: 16873
Joined: 22 Jun 2006, 09:30

Re: KavithaigaL by Rasikas

Post by arasi »

புகழுடம்பெய்தினார், புகழ் வேண்டாதவர்
இகழ்விலுமாட்சி புரிவேன் என்பவர் நடுவே--

காளான்களுக்கிடையே, கருமமே கண்ணாயினார்
மாளா அன்புடனே வென்றார், நம் அகம் புகுந்தார்

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

கண்ணோட்டம்

இராவணனுக்கு ஈமக்கடன் இராமன் செய்தான்;
இவ்வுடல் களங்கமறியாது - உயிருக்கும் களங்கமில்லை;
இடையிலுள்ள ஆணவம் தன்னாட்சி நடத்திட்டால்,
இவையிரண்டுமே துணை போகத்தானே வேண்டும்?

இறப்பது யாராகிலும் தாய் கண்ணீர் வடிப்பாள்;
இறந்தவனைக் கொன்றவன் இறைவனேயாகலாம்;
இறைவனும் கண்ணீர் வடிப்பான் - தாயின் கண்ணீர்;
இறைவன் அனைவருக்கும் தாயுமானவனன்றோ?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

IIRC, it was Vibhishana who performed the last rites of Ravana, though he did hesitate intially.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

pb,
You are right. However. please see Sloka 25 (Yuddha Kanda Chapter 109) - Sri Rama's words - ममाप्येष यथा तव - He is as good as mine, as yours - are worth noting. SrI Rama accepted vibhIshaNa as His brother. By this statement, Ravana also becomes His brother. All brothers participate in obsequies.

http://www.valmikiramayan.net/utf8/yudd ... _frame.htm

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

Yes, ममाप्येष यथा तव, of course.

But, Rama did not participate in the final rites; he did not even attend the funeral!
After the funeral, Vibhishana went and met him in the City.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

Re: KavithaigaL by Rasikas

Post by vgovindan »

pb,
Rama was not in any way obliged to have opinions about obsequies of Ravana. But the very fact that he felt obliged and persuaded Vibheeshana - one who is duty bound to perform obsequies and who was rather unwilling to do them - is the essence. It is the adherence to dharma (righteous conduct) even towards his slain enemy - is the essence. Insistence of the fact that the body is not to be condemned for the acts of ego - is the essence.

As in the case of sins, it is not the action that matters - but the thoughts. One might not actually commit a sinful act, but if he contemplated one - it is as good as committed - that is the dharma in essence. The same is true of meritorious acts also.

My words might be a little exaggeration - that's all. I do not want to defend my position more - I am aware it is factually wrong.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

கொடியது

Post by vgovindan »

https://www.facebook.com/natgeotv.india ... =1&theater

கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்
கொடிது கொடிது நாகமும், தேளும்
கொடிது கொடிது புலியும், கரடியும்
கொடிது கொடிது கொலை, கொள்ளை,
கொடிது கொடிது சூது, வஞ்சனை
கொடிய கொலையும், கொள்ளையும், சூதும், வஞ்சனையும் கொண்டு
கொடுமை அறியா மாக்களைக் கொடிதெனும் மனிதனின் ஆணவம்
கொடிதினும் கொடிது.

அவ்வையார் மன்னிப்பாராக.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

கொடை

Post by vgovindan »

கொடையாளி நானென்று கருவம் கொள்ளாதே;
கொடையாளி இறைவன் ஒருவனே என்றைக்கும்;
அனைவருக்கும் பகிர்ந்தளித்தானே அவன்;
அனைவரும் தமது பங்கினை மட்டும் பெற்றிருந்தால்,

பெற வேண்டுவோர் இங்கு ஏனிருப்பர்?
பெறுவோரில் சிறுபான்மையோர் மட்டும்,
பெரும்பான்மையோரின் பங்கினை,
பெருங்கொள்ளையடித்துச் சென்றனரே;

மற்றவர் பங்கினைக் கொள்ளையடித்து - இன்று
மற்றவருக்குக் கொடை நீ தருவதா? - வெட்கம்!
பகல் கொள்ளையிதனில் வலியோர் அனைவரும்
பங்காளியாகி, குற்றத்தைப் பொதுவுடைமையாக்கினரே;

குற்றமுண்டு இங்கு - குற்றவாளி யாருமில்லை;
குற்றவாளியைக் குற்றவாளியெனக் கூறத் துணியும்
குற்றமற்றோர் பல்லாயிரமுண்டு - ஆயினும்,
குற்றமற்றோர் அனைவருமே வலிமையற்றோர்;

குற்றவாளியும் காவலனும் கலந்துவிடின்,
குற்றமேது, நீதியேது, நேர்மையேது - கூறுவீர்;
குற்றங்களைந்திட, குற்றமற்றோரைக் காத்திட,
பெற்றம் மேய்த்தவனளித்த உறுதியும் பொய்யோ - அறியேன்.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

மனிதக் கடவுள்

Post by vgovindan »

நாயையும் பூனையையும் செல்லமாக வளர்ப்போரே!
நீவிர் உணர்வீரோ, உங்கள் செல்லப்பிள்ளைகளுக்கு
கருப்பை நீக்கப்பட்டுள்ளது - காயடிக்கப்பட்டுள்ளதென?

குதிரைகளைப் பந்தயத்தில் ஓடவிட்டு அனுபவிப்போரே!
குதிரையின் காலொடிந்து போனால், கதியென்ன அறிவீரோ?
சுட்டுக் கொல்லப்படும் அன்றேல் கசாப்புக் கடைக்குப் போகும்;

கோழிப் பண்ணையின் முட்டைகள் பொரிக்க மாட்டா;
கோழி வளர்ப்பு, இறைச்சிக்கும் முட்டைக்குமென்றே;

நாய்க்கும், பூனைக்கும், குதிரைக்கும், கோழிக்கும்
இயற்கை இனச்சேர்க்கை இல்லை - மனிதன் விதிப்படியே;

கொடுமைகள் இத்தனை செய்திடும் மனித இனமே! - இக்
கொடுமைகள் உமது இனத்திற்கு நேர ஒப்புவீரோ?
கைகாலொடிந்தால் உமது பிள்ளைகளுக்கு,
கசாப்புக்கடைக்கு அனுப்புவீரோ? சுட்டுக் கொல்வீரோ?

இருபத்தி நாலு மணி நேரமும் இனச்சேர்க்கைக்கு
இச்சை கொள்ளும் மனித இனமே! - மற்ற இனங்களின்
இனச்சேர்க்கை, அவர்தம் வாழ்நாள் முழுதும் மறுத்தீரே;

மரம், செடிகொடிகளையும், மிருகங்களையும்
வழிபடும் நாடிது - இந்நாட்டிலா இந்த அவலம்?
கேட்பாரில்லையோ, இறைவா? நீயும் செவிடோ, குருடோ?

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

485

பிறவி

எடுப்பார் கையில் இருந்தது போதும்;
படுத்துப் பதுங்கி பணிந்தது போதும்.
தொடுத்திடு பாணம் ! தடைகளை உடை !
தடுப்பதைத் தகர் ! தரணியை வெல் !

ப்ரத்யக்ஷம் பாலா,
13.08.2015

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

486

விரக்தி

வலுவு குறையுது; வயிறு ஒடுங்குது.
எலும்பு வலிக்குது; எண்ணம் இடருது.
அலுத்துச் சலிக்குது; அனைத்தும் கசக்குது.
இலவு காத்தது எப்போ பிரியுமோ ?

ப்ரத்யக்ஷம் பாலா,
15.08.2015

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

487

மறு ஜன்மம்

நடந்தது எல்லாம் நினைவில் நிற்குமோ ?
கொடுத்தது எல்லாம் கணக்கில் இருக்குமோ ?
விடுத்தது எல்லாம் திரும்ப ஒட்டுமோ ? -- சரி,
அடுத்தது உண்டோ ? ஆருக்குத் தெரியும் ? !

ப்ரத்யக்ஷம் பாலா,
16.08.2015

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

488

வண்ணம்

ஒருவண்ணம் போனால் கால் சண்டை போகும்;
இருவண்ணம் போனால் அரைகுறையும் போகும்.
மூவண்ணம் கொண்டால் முக்காலும் இனிக்கும் !
நாவண்ணம் கொண்டு நாதனைப் போற்றிடு !

ப்ரத்யக்ஷம் பாலா,
17.08.2015

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

நீதி

Post by vgovindan »

வெடிகுண்டு வைத்துப் படுகொலைகள் செய்தவனை
வெஞ்சிறையிலடைப்பதா தூக்கிலிடுவதாயென்று
நீதிமன்றங்களில் சட்டவாதம் செய்திடும் அறிஞரே!

நோய்வாய்ப்பட்டதென பறவையினங்களை
நூறாயிரக் கணக்கில் நொடிப்போதில் கொன்று
இனக்கொலை செய்திட எந்தச் சட்டம் கூறுதய்யா?

நீதி மனிதனுக்கு மட்டுமா, நெஞ்சைத்தொட்டுக் கூறுவீர்.

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

489

ஒருவன் உண்டு

பிச்சையெடுத்துப் பிழைப்போர்க்கு ஒருவன் உண்டு.
இச்சைகொண்டு அலைவோர்க்கு ஒருவன் உண்டு.
கச்சைகட்டிப் புரள்வோர்க்கு ஒருவன் உண்டு.
மிச்சமுள்ள பேர்களுக்கும் ஒருவன் உண்டு !

ப்ரத்யக்ஷம் பாலா,
18.08.2015

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

490

தினக்கூலியின் கதறல்

வேலையில்லை, கூலியில்லை, வயிற்றுக்கு ஒன்றுமில்லை.
காலையிலே கோயில்பக்கம் கையேந்தி தலைகுனிந்தேன்.
சோலையிலே செடியருகே சருகுபோல கிடக்கின்றேன்.
கோலமயில் வேலவனே ! நான் கதறுவது கேட்கலையோ ?

ப்ரத்யக்ஷம் பாலா,
19.08.2015

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

491

விடுதளை

விடு சங்கினை; வீரம் வந்திடும் !
இடு ஆக்கினை; இடர் ஓடிடும் !
கொடும் சக்கரம் களைத்தோடிடும்;
படும் பாடெலாம் பறந்தோடிடும் !

ப்ரத்யக்ஷம் பாலா,
21.08.2015



சங்கு = தைரியமின்மை, துடிப்பின்மை, தயக்கம்
கொடும் சக்கரம் = சுற்றிவரும் கொடிய கிரகதசைகள்
Last edited by Pratyaksham Bala on 22 Aug 2015, 09:32, edited 1 time in total.

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

நாராசம்

Post by vgovindan »

கற்பனைத் திறன் குறைந்து போனதோ, இறைவா!
கண்களுக்கு இமைகள் படைக்கத்தெரிந்த உனக்கு,
காதுகளுக்கு மூடி வைக்க மறந்து போனதேனய்யா?
காதுக்கு நாராசமானவற்றையும் கேட்கவேணுமோ?

கிடைத்தற்கரிய மானுடப் பிறவி உவந்தளித்தாய்;
கிடைக்காத உன் திருவடிப்பற்றில் நாட்டம் தந்தாய்;
கேட்கத்தகுந்தவற்றைத் தெரிந்தெடுக்க விழைய,
கேட்கத்தகாதவையும் சேர்ந்தொலிக்குதே, அந்தோ!

உகந்தவற்றையே நான் காணும் கருணை செய்வாய்;
உகந்தவற்றையே நான் கேட்கும் உள்ளம் தாராய்;
என் உவகையிதனை அளித்திடற்கியலாதாகில்,
எனதிரு காதுகளைச் செவிடாக்கி வரமருளாயோ?

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

மந்திரம்

Post by vgovindan »

பூனையின் மியாவும், பசுவின் ம்மாவும்,
யானையின் பிளிறலும், நாயின் குரைப்பும்
உள்ளியங்கும் இறைவனை அழைக்கும் மந்திரங்களே

வடமொழியில் அழைத்தாலும், தமிழில் அழைத்தாலும்
ஆங்கிலத்தி்ல் அழைத்தாலும், அரபு மொழியிலழைத்தாலும்
உள்ளியங்கும் இறைவனை அழைக்கும் சொற்கள் மந்திரங்களே

தனக்கென பெயரொன்றில்லா சனாதன தருமத்திற்கு
வடமொழியென்றும், தமிழென்றும், தெலுங்கென்றும்
பேதங்களேதுமில்லையென்பதுண்மை, நன்குணர்ந்திடுவீரே

vgovindan
Posts: 1951
Joined: 07 Nov 2010, 20:01

தொடர்கதை

Post by vgovindan »

Deleted

Pratyaksham Bala
Posts: 4206
Joined: 21 May 2010, 16:57

Re: KavithaigaL by Rasikas

Post by Pratyaksham Bala »

492

அதி தீவிர பக்தர் !
(பழம் கதை)

ஐயே ! மெத்த கடினம்.

கல்லான பொருளெடுத்து
பொள்ளாத உருபணிந்து
பாடுவார்;
அவர் ஆடுவார் !
தாளம் போடுவார் !

கொள்ளாத பக்தர்களை,
வெல்லாத பக்தர்களைத்
தேடுவார்;
ஒருபாடு சாடுவார் !
கூப்பாடு போடுவார் !

ஐயே, மெத்த கடினம் !

ப்ரத்யக்ஷம் பாலா,
14.09.2015

Post Reply