தனிச் செய்யுட்கள்

Post Reply
sankark
Posts: 2458
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

Pratyaksham Bala wrote: 30 Apr 2025, 21:41
... if the last feet can be just made into கூவிளங்காய் x 2 as long as its aslo sensible in meaning, it is a great template for venpA
Yes, with the addition of நாள் or காசு in the end to ensure the mandatory வெண்டளை.
(மலர் or பிறப்பு may not be suitable, as it would result in கலித்தளை.)
that's true. my point though was about the last கூவிளங்காய் itself can be just split to கூவிளம் நாள்(காய்), not even காசு, and so no 3rd அசை either. ofcourse iff it makes sense!

Pratyaksham Bala
Posts: 4207
Joined: 21 May 2010, 16:57

Re: தனிச் செய்யுட்கள்

Post by Pratyaksham Bala »

.
Yes. Got it.
You will get இன்னிசை வெண்பா.
Great !

sankark
Posts: 2458
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

வானொடு மண்ணும் யாவும் விரித்தவ னொன்றே யுள்ளான்
மானொடுத் தீயுந் தூக்கி மழுவுமா யாடல் வல்லான்
வானுதல் நல்லாள் ஊக்கி யணங்கினைப் பாதி யாகத்
தானொரு பாகங் கொண்டா னடியவர்க் கென்றுங் காப்பே

அங்கயற் கண்ணி யாளைச் சொக்கனா யேற்றா னன்றே
அங்கையிற் தீயுங் காலுந் தூக்கிய வள்ளல் தானே
கங்கையைத் திங்கள் தன்னைச் செஞ்சடைத் தாங்கி நிற்கு
மங்கையோர் பாதி யாதீ மாமறை யோதுஞ் செம்மல்

பித்தனே என்றா னுக்குத் தூதுதான் சென்றா னன்றே
மத்தயா னையுந் தந்தான் கைலையே யேகு தற்கும்
ஒத்ததும் மிக்கு மில்லான் கண்ணுதற் கால காலன்
முத்தனைப் புந்தி வைத்து வாழ்வெனு மாழி நீந்து

அத்தனே வையா மெய்யா நின்னையே நம்பி நின்றோம்
இத்தர னிக்கே வந்த மன்னுயிர் லெல்லா மென்றும்
பித்தனாய்க் காட்டி லாடும் நஞ்சினைக் கண்டங் கொண்டாய்
முத்தனே மூலா வைந்து பூதமும் ஆக்கிப் போக்கீ

sankark
Posts: 2458
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

எதிலிருந் திதுவரு மெதனுட னிணையுமோ
கதிரென நிலவெனக் ககனமாய் விரிவது
புதிரிது புதிரிதில் உளைபவர் மனிதரே
மதியதன் வலிதனை மிகுமொரு பொருளிதே

விரிந்திடும் சுருங்கிடு மெனமறை மொழியுதே
மரிவதும் வருவதும் பெருமொரு சூழற்சியே
எரிவது மெரிப்பது முயங்குவ தொருபொருள்
பிரிவெனத் தெரிவதை யறிவது மியலுமோ

பிரிவெனத் தெரிவதை யறிபவ ரெவரரோ
பிரிவெனத் தெரிவதை யறிந்தவ ருரைப்பரோ
பிரிவெனத் தெரிவதை யுரைப்பது புரியுமோ
பிரிவெனத் தெரிவது மயக்கமே மயக்கமே
---
குருபர வுனதடி யடைபவர் வினைவலி
தருநிழ லடியினில் வெயிலெனக் குறையுமே
பருவமு மிதுவரோ அரவணை துயிலுவான்
மருகனே கடைவிழி யருளினைப் பொழிகுவாய்

கருவறை முதலொடுத் தழலினில் சுடுவரை
இருபத யிணையிலேப் பிணையுறு வரமதை
கருமுகில் நிறமுடை மதுமுர ரெதிரியின்
மருகனே யருளுவாய் குறமகற் கணவனே
---
பொட்டுவைத்துப் பூமுடித்து நெற்றியிலேச் சுட்டியிட்டு
கொட்டியதோர் நல்மணிகள் கச்சையிலேத் தான்மிளிர
பட்டணிந்து காதணியும் கைவளையுந் தோள்வளையும்
எட்டுதிசை தான்வியக்க கட்டுமடி சாரினிலே

வெட்டுவிழி மையெழுதி தோழியருஞ் சூழ்ந்திடவே
மட்டிலாத நாணமுடன் புன்னகையுந் தான்கலந்து
வட்டமிடும் கண்மலர மெய்மலர வந்தனளே
கொட்டுமழ குக்கழகாய் பெண்மகளும் பந்தரிலே

நான்மலர லங்கலோடவ் வாண்மகனின் கைப்பிடித்த
வான்தவழும் மீன்நிகர்த்தப் பெண்ணவளின் ஒண்கழுத்தில்
நான்மறைமு ழங்குநேரம் நல்லவரு மாசிகூறத்
தான்திருத்தா லிச்சரட்டைப் பூட்டினனே நீடுவாழ

sankark
Posts: 2458
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

விண்ணுளோர்க் கோமா னாலே கல்லென யாகி னாளைத்
தன்னிரு பாத தூளி கொண்டவன் பெண்ணா யாக்கி
மண்ணுளோர் மற்றோர் போற்ற அப்பெரும் யாகம் காக்கப்
பெண்ணுரு வானாற் பாவித் தாடகைத் தன்னை மாய்த்தான்

பெண்ணென வந்தச் செய்யா ளங்கொரு மாடம் நின்றாள்
கண்ணொடு நோக்கி னானே கோசலை யாவி யாங்கே
உண்கணின் காந்தத் தாலே தன்மனம் விட்டா னையன்
கண்ணது மூட வில்லை யானதே மிக்கத் தொல்லை

ஆர்கொலோ என்னுள் வந்தா ளென்றவன் தூக்கம் கெட்டான்
கார்முகில் கூட்டத் துள்ளே வந்ததோர் மின்னற் போலே
வார்சிலை புருவத் தாளை மிக்கவும் வொக்க யாரும்
பார்தனி லுண்டோ யென்று மிஃதறந் தானோ யென்றும்

அங்கவள் மிக்கத் தானே சிந்தையே சிதறிப் போனாள்
பொங்கிடும் எண்ணம் எல்லாம் கண்டவன் யாரோ வென்று
மங்கையின் ஆசை யன்னான் வில்லினை வென்று தன்றன்
மங்கல மோங்க வேண்டு மென்றரோ வேகங் கொள்ளும்

கண்ணுத லையன் வில்லைக் கொண்டனன் கையிற் றானே
விண்டதேக் கண்டார் தோளின் வன்மையே கண்டா ரன்றே
வண்ணமாய்க் கொண்டான் கையைக் காரிகை நெஞ்சங் கனிய
யண்ணலு மொன்றேக் கொண்டான் தன்மனை யாய்த்தான் மாதோ

ஊர்மிளை தன்னைக் கொண்டா னிளையவ னிலக்கு வனேயாங்
கோர்மகள் மாண்ட வியைத்தான் பரதனும் மணமேக் கொண்டான்
நேர்படத் துணையா கத்தான் சுருதகீர்த் தியையொ ருதம்பி
பேர்பட யேற்றா னோங்கு மங்கலந் ததும்பிப் பொங்க

தாதையி னாணைக் கொண்டான் காட்டினி லேகி னானே
மாதையுங் கூட்டிப் போனான் தம்பியோ டண்ணற் கேளீர்
வாதையேக் கொண்டான் மற்றோர் தம்பியும் வெம்பி னானே
பாதையே நீயே என்றுத் தேடியே கானில் வந்தான்

added 2 more in between; and added 1 more - the penultimate in the list

sankark
Posts: 2458
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

தன்நரை கண்ட யோத்தி மன்னனு மெண்ணங் கொண்டான்
இன்னுயிர் மூத்தான் தன்னை மன்னனா யாக்க லாமே
தன்னலம் வேண்டு வாரொ டாலசித் துச்செய் புக்கான்
பொன்னகர் மக்கட் கெல்லாம் சொல்லவே யாணை யிட்டான்

அன்னதோர் செய்தி கேட்டு மந்தரை கோப மோங்கிச்
சென்றனள் மாற்றத் தானே வஞ்சமே நெஞ்சிற் பொங்க
மன்னனின் காதற் கிழவி கேகயர் பெண்ணை யுந்தன்
பொன்னினை வார்த்தற் போலே சொல்லினால் மாற்றி னாளே

பாழ்மகள் கூனிப் பேசக் கேகயர் கோதை கெட்டுத்
தாழ்விலாக் கோவி டத்தில் அன்பையு மப்பால் வைத்து
வாழ்கிலே னிராமன் காடு புக்கியே பரத னாளும்
வீழ்வையோச் சொல்லில் நிற்கா தென்வர மிரண்டு மென்றாள்

பெற்றதோர் செல்வம் யாவும் விட்டத கன்ற தாகி
நிற்பவன் போலே கேட்டுத் தசரதன் துன்பப் பட்டான்
உற்றவ ளன்றுப் போரில் வெற்றியில் பக்கம் நின்றாள்
மற்றவர் செய்ய மாட்டா மாபழி சேரச் செய்தாள்

sankark
Posts: 2458
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

சொல்லதா லில்லை நன்மை யென்றவ னுணர்ந்து சொன்னான்
அல்லைநீ என்றன் தாரம் கூற்றமே யானா யேநீ
கல்லெனும் நெஞ்சத் தாள்நீ பெற்றவன் பிள்ளை யில்லை
செல்கிறேன் விட்டுத் தானே சாபமும் பெற்றே னன்றே

கானகம் நீயு மேக யென்மகன் நாட்டை யாளக்
வானகம் புக்கி னாரே நல்வர மீந்தென் னையன்
ஆனதால் சீதை கேள்வ செல்லுவா யாணை யேற்று
போனது போன தன்றே பின்னரே மீள்வா யென்றாள்

sankark
Posts: 2458
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

உற்றவர் நல்லார் நட்பு தன்னுடை சுற்ற மென்றே
கற்றவர் எண்ணா ரென்று மஃதெலாம் விட்டுப் போகும்
பற்றறுத் தேக வேண்டும் நாடொறு மன்பாய் வாழ்ந்து
முற்றுமிம் மெய்மை கண்டார் வற்றிய சொல்லா யானார்

sankark
Posts: 2458
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

அலைகடற் பாம்பணை மாதவத் தேவேச்
சிலைதனைத் தூக்கிய பூமகற் கோவேக்
கலைதனைச் சூடிய நாயகன் நீயே
உலைவினை நீக்கிடுவா யே

கரமுர ரிருவரும் முடிந்திடப் புரிந்தாய்
தரணியின் மகள்தனை சிலையொடித் தடைந்தாய்ப்
புரமெரி பரமனை மனமுகந் தவனே
வரமரு ளடியவர் பதமலர்த் தொழவே



வாசமலர் மாலையெடுத் தாண்டவர்க்குச் சூட்டிநாளும்
பாசமொடுப் பைங்கிளியாற் றந்தனளேத்‌ தந்தனளே
மாசிலாத மங்கையவள் யாத்தளித்தப் பாவெடுத்துத்
தேசுடையான் தன்னையேத் து

கண்ணெடுத்துப் பாரெனையும் செங்கமல நீள்விழியால்
எண்ணிலாது பெற்றனனே பூமியிலே பல்பிறப்பும்
உண்ணிலாவு வெங்கவலை நீக்கியெனைத் தூக்கிடுவாய்
வெண்ணிலாவைச் சூடியநீ நின்னுளேதான் கொண்டிடுவாய்

வந்தனைகள் கோடிகோடி வாழ்த்தொலிகள் மேலுமாக
சிந்தனையில் முப்பொழுதுங் குஞ்சிதனைச் சேர்ந்தவரும்
முந்திசொன்ன பாவைதனை அம்மலையான் பாதமதில்
சிந்திசிந்தி என்புருகப் பாடடியார் தாற்றொழுக

திங்களிலே மார்கழிநா னென்றுசொன்ன கண்ணனுக்குக்
கொங்கையிளம் பாவையரும் காதலுடன் நோன்பெடுத்தே
அங்குமிங்கு மெங்குமாகி நீர்நெருப்பு காற்றுமாகி
மங்கைதனை மார்புகொண்ட பங்கயனைச் சேர்ந்தனரே

sankark
Posts: 2458
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

ஒரு மனிதன்....
எந்தக் குறையும் இல்லை அவனுக்கு. ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை. சிரமப்பட்டான்... அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள். "பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு... அங்கே ஒரு பெரியவர் இருக்கார்... போய்ப் பாருங்கள்".

ஆசிரமத்துக்குப் போனான்... பெரியவரைப் பார்த்தான். "ஐயா.... மனசுலே நிம்மதி இல்லே... படுத்தா தூங்க முடியலே".

அவர் நிமிர்ந்து பார்த்தார். "தம்பி... உன் நிலைமை எனக்குப் புரியுது... இப்படி வந்து உட்கார்". பிறகு அவர் சொன்னார்: "உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது. தெரிந்தால் உன் நிம்மதி போயிடும்"..

"அது எப்படிங்க?"

"சொல்றேன்.. அது மட்டுமல்ல.. மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்"..

"ஐயா நீங்க சொல்றது எனக்கு புரியலே"..

"புரியவைக்கிறேன்.... அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு". வயிறு நிறையச் சாப்பிட்டான். பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, இதில் படுத்துக்கொள் என்றார். படுத்துக் கொண்டான்.. பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்... கதை இதுதான்:

ரயில் புறப்படப் போகிறது... அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான் அவன் தலையில் ஒரு மூட்டை.. ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான். ரயில் புறப்பட்டது. தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை... எதிரே இருந்தவர் கேட்கிறார்: "ஏம்ப்பா.. எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே? இறக்கி வையேன்".

அவன் சொல்கிறான்: "வேணாங்க.. ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும், என் சுமையை நான் சுமந்துக்குவேன்''.

பெரியவர் கதையை முடித்தார். படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.
"ஏன் சிரிக்கிறே?"..

"பைத்தியக்காரனா இருக்கானே. ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா? அது அவனுக்கு தெரியவில்லையே யார் அவன்?" இயல்பாக கேட்டான்.

"நீதான்.."

"என்ன சொல்றீங்க?".

பெரியவர் சொன்னார் "வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் மாதிரிதான்... பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள்
நிம்மதியாக வாழமுடியாது.
தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்"..

அவனுக்கு தனது குறை மெல்ல புரிய ஆரம்பித்தது... சுகமாக தூக்கம் வந்தது. தூங்க ஆரம்பித்து விட்டான்... கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார். "எழுந்திரு" என்றார் எழுந்தான்..

"அந்த தலையணையைத் தூக்கு" என்றார். தூக்கினான்... அடுத்த கணம்"ஆ"வென்று
அலறினான். தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது.

"ஐயா.. என்ன இது?"

"உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு... அப்படி இருந்தும் நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்"...

"அது ... அது எனக்குத் தெரியாது"...

"பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது... அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்"..

அவன் புறப்பட்டான்,, "நன்றி பெரியவரே... நான் போய் வருகிறேன்"..

"நிம்மதி எங்கே இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாயா?"

"புரிந்து கொண்டேன்.. என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது. அறிவின் வெளிச்சத்தால் அதைக் தேடிக் கண்டு பிடித்த விட்டேன் ஐயா"...

Received this in WA and tried to versify into அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

தூக்கமும் கெட்டுத் தானே
துவண்டதோர் கொழுநன் தன்னையாங்கே
ஆக்கமாய்ப் போக்கி னாளே
கிழத்தியுந் தனதன் பைச்செலுத்தி/பாற்பெரியார்
ஏக்கமாய் சொல்லைக் கேட்டு
விளம்பினார்க் கேளா யென்றுசொன்னார்
ஊக்கமா யெல்லாந் கொண்டே
அறிவதால் நன்மை யில்லையில்லை

சொன்னதைக் கேட்டான் பொருளும்
விளங்கவே யில்லை யென்றான்
இன்னமும் சொல்வேன் முதலில்
உண்டுவா யென்றே செய்தார்
உண்டவன் தன்னை யாங்கே
உறங்கவே வைத்தா ரம்மா
விண்டுதா னுரைத்தார் மாதோ
விந்தையாய்க் கதையு மொன்று

ஆங்கொரு பயணி கேளாய்த்
தன்மடி மேலோர் மூட்டைத்
தாங்கியே பயணித் தானே
தன்சுமை தானே தூக்கித்
தாங்குவே னெனவுஞ் சொன்னான்
வண்டியில் சுமையே றாமல்
வீங்கியே நகைத்தான் கேட்டு
நம்கதை மாந்தன் தானே


ஏனதோ நகைப்பா யென்றுக்
கேட்கவுஞ் சொன்னான் மாந்தன்
வீணனோ பயணி யாரோத்
தாங்குதல் மடமை யன்றோ
காணரோ நீயுந் தானே
மடமையைத் தாங்கு கின்றாய்
வீணதா யென்ற யெண்ணம்
பலவுமா யோர்ந்தே நிற்பாய்

தன்குறை தன்னைக் கண்டுத்
தெளிந்தவன் தூங்கிப் போனான்
தன்னிறை நோக்கிப் போனான்
துஞ்சினாற் போலே தூங்கி
இன்முகத் தோடே தூக்கம்
கலைந்த வன்தன் றனுக்குப்
பின்னொரு நாகம் காட்டத்
தூக்கியேப் போட்ட தன்றே

பக்கலில் நாகம் பையத்
தூங்கினா யன்றே நீயும்
இக்கதை போலத் தானே
அறிவன அறிதல் வேண்டும்
தக்கதாய்ச் சொன்னீ ரையே
என்னுளே தேடித் தானே
தக்கதைக் கொள்வேன் தள்ளிச்
செல்வதை விட்டுச் செல்வேன்

sankark
Posts: 2458
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

அகைப்பா னபாரெல்லாங் கண்டு பலருந்
திகைப்பா டடைந்தாரே யிவ்வுள தெல்லாம்
வகைப்பா டுகொண்டதெவ் வாறோசொல் லொன்றே
உகைப்பாகித் தான்வந்த தோ

தோற்றுவித்தக் காரணனைப் பூரணனாய்க் கைலையுறைக்
கூற்றவர்க்குக் கூற்றனென் றார்

ஆர்க்குஞ் சிலம்பொலியும் நட்டமரின் நாதமு
மீர்க்குமே மாந்த ருளமீசன் வெண்ணீற்றான்
போர்த்தான் புலித்தோலைத் தாங்கினான் மான்மழுவைத்
தீர்த்தான் வினையா வுமே

sankark
Posts: 2458
Joined: 16 Dec 2008, 09:10

Re: தனிச் செய்யுட்கள்

Post by sankark »

வாதவூரன் வன்றொன்டன் நாவரையன் காழியனுந்
தாதையினைத் தான்றொழுதுப் பாப்பலவும் யாத்தனரேக்
காதலொடுக் கண்ணிரண்டும் நீர்மலியப் பாடிடுவாம்
வாதமறு மைந்தெழுத்தி னால்

சேவடியைத் தூக்கியதோ ராடவல்ல நாயகனைப்
பால்வடியும் வாயதனாற் பாலகனும் பாடினனே
தேமதுரச் செந்தமிழிற் போற்றியவன் பெற்றிசொல்லக்
காமமறுங் காதலாகு மே

மார்கழியாந் திங்களிதி லாதிரையாம் மின்மினியில்
ஓர்ந்திடுவா மைந்தெழுத்து பெண்சரியா யானவனைச்
சேர்ந்திடுவாம் முப்புரங்கள் செற்றவனின் பாதமலர்ச்
சார்வதுவே வுய்யநல்வ ழி

Post Reply